செய்யாமற் செய்த உதவிக்கு…

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 5,165 
 
 

அவன்,  தன் மகள் வீட்டுக்கு ஒரு விசேஷத்திற்காகப் போனான். அப்போது அங்கு அந்த ஊரில் நடந்த திருமணத்திற்கு மொய் வைக்கக்கூட கையில் காசில்லாத கஷ்டம்.

கல்யாணத்திற்குப் போயே ஆகவேண்டும்! மனைவி வழி சொந்தம் என்பதால் போகாவிட்டால் மரியாதை இருக்காது.

தந்தை தவிப்பது மகளுக்குத் தெரிந்தது. தாயிடம் போன முறை நீங்கள் தவறவிட்டபணம் என்று சொல்லி ஒரு மூவாயிரம் தந்தாள்!

வீடு திரும்பியதும், மனைவி அவனை வைதாள்…!

‘பொறுப்பில்லாம செலவு செய்யறீங்க…! தவறி வேற பணத்தை வச்ச இடம் தெரியாம வச்சுட்டு வந்துடறீங்க!! இப்ப மகள் மட்டும் தரலைனா…?!

அவள் கேள்வி கேட்க..,  

மனசுக்குள் அவன் சொல்லிக் கொண்டான்.

‘தவறவிட்டிருந்தா போன தடவை ஊர் திரும்பினதுமே சொல்லியிருப்பா மகள். அப்பச் செய்யாமல்… தான் பணமாக் கொடுத்தா எங்கே வாங்காம விட்டுடவோமோன்னு சொல்லி மகள் கெட்டிக்காரத்தனமா… தவறிட்டுப்போன பணமாத் தந்திருக்கா..!’

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானமும் ஆற்றலரிதுதானே?

நல்ல தாய் தந்தை ஏவ நானிது செய்யப்பெற்றேன் என்று தந்திரீப்பாளோ?!

கடவளுக்கே வெளிச்சம்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *