சென்ற பொருள் மீளும், சென்ற காலம் மீளாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 26 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொருள் முயற்சியில் முனைந்த வணிகர் ஒருவர் மதுரையில் பெரிய கடை ஒன்று வைத் திருந்தார்.நாட்டுப்புறத்துச் செல்வர் ஒருவர் அவர் கடையில் வந்து ஒரு பொருளை வாங்க எண்ணி விலை கேட்டார். கடை வழக்கப்படி பையன் அதன் கண்டிப்பான விலை ஒரு வெள்ளி என்று முதலி லேயே கூறிவிட்டான். வாதாடியே கொடுக்கல் வாங்கல் செய்து பழகிய செல்வர் இரண்டு நாழிகை பையனுடன் வாதாடியும் மறுவிலை பெறா மையால் வணிகரிடமே நேரில் வந்தார். வணி கர் அப்போது தம் கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வேலையை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவரிடம், ‘தங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றார். 

செல்வர்: இப்பொருளின் விலை ஒரு வெள்ளி யென்று இரண்டு நாழிகையாக உங்கள் பையன் சாதிக்கிறான். இதைக் குறைத்துக் கொடுக்கக் கூடாதா? 

வணிகர் : இப்போது இதன் விலை ஒன்றரை வெள்ளி. 

செல்வர்: என்ன ஐயா, பையன் கூறியதை விடக் கூடுதல் கூறுகிறீரே? 

வணிகர் : ஆம்; எங்கள் பொருளுக்கு ஒரே விலைதான். ஆனால் நீங்கள் பையனை நெடு நேரம் பேச வைத்துவிட்டீர்கள். அதற்காக அரை வெள்ளி தரவேண்டும். என்னையும் பேச வைத்தால், இன்னும் அரை வெள்ளி சேர்த்து இரண்டு வெள்ளி தரவேண்டும். 

செல்வர்: ஏன் ஐயா ! பேசுவதற்குக் கூடவா பணம்? 

வணிகர் : ஐயா, நீங்கள் முயன்று பொருள் ஈட்டியவர்கள் அல்லர்போல்தோன்றுகிறது. பொருள் செலவானால் வரும்; நேரம் செலவானால் வருவதில்லை.உம் நேரத்துடன் எங்கள் விலையேறிய நேரத்தை இனியும் வீணாக்கவேண்டாம் 

செல்வர் தம் பிழையறிந்து இரண்டு வெள் ளியே தந்து அப்பொருளை வாங்கினார். 

ஆனால் அவர் கொடுத்த அதிகப்படி வெள் ளிக்கு அவர் அரியதொரு படிப்பினை பெற்றார். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *