சூழலுக்கேற்ற ஜெபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 9,776 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெகேமியா அர்தசஷ்டா அரசனின் பானபாத்திரக்காரன். ஒருபோதும் துக்கமுகமாயிராத அவன் அன்று மன்னன் முன் வாடின முகமாயிருந்தான்.

“நீ துக்க முகமாயிருக்கக் காரணம் என்ன? நீ கேட்கிற காரியம் என்ன?” என்று ராஜா கேட்டார். அப்பொழுது நெகேமியா பரலோகத்தின் கடவுளை நோக்கி பிரார்த்தனை பண்ணி அரசன் தனக்குச் செய்ய வேண்டிய காரியத்துக்காக விண்ணப்பம் செய்தான. (நெகே 2:1-5)

நெகேமியா, மன்னன் முன் நிற்கையில் முழங்கா லூன்றி நீண்டதொரு வேண்டுதலை ஏறெடுத்திருக்க மாட்டார். மனதிற்குள் இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லி சுருக்க ஜெபம் செய்திருப்பார். எந்த வேளையிலும், எந்த இடத்திலும் நம் மனதிற்குள் சுருக்க ஜெபம் செய்யலாமே!

மூடிப்பிரசங்கியார் லண்டன் பட்டணத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டமொன்றில் பிறிதொரு குருவானவரை ஆரம்ப ஜெபம் செய்யக் கேட்டார். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் முகவுரை ஜெபத்தை முடித்தபாடில்லை, அநேகர் பொறுமையிழந்து தொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே நழுவ ஆரம்பித்தார்கள்.

மூடி பார்த்தார் – முகவுரைக்கு முற்றுப்புள்ளியே இல்லை. திடீரென்று மிகவும் சப்தமிட்டு இன்ன நம்பர் ஞானப்பாட்டைப் பாடுவோம் என்று சொன்னது தான் – வெளியே சென்ற அனைவரும் திரும்ப வந்தனர். முடிவில்லாத ஜெபத்திற்கு முடிவுரை ஏற்பட்டது.

சூழ்நிலைக்கேற்ற முறையில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

“கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (சாமுவேலின் சின்ன ஜெபம்) [சாமுவேல் 3:9]

“கடவுளே, பாவியாகிய எனக்கு இரங்கியருளும்” (ஆயக்காரனின் அழகு ஜெபம்) [லூக்கா 18:13]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *