சுவைத்துப் பார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 164 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடவுளை மறுதலிக்கும் அவன் சிறந்த மேடைப் பிரசங்கி. ‘கடவுள் இல்லை. பிழைப்புக்காக உண்டாக் கிக் கொண்ட கட்டுக்கதை’ என்று சாதூரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பேச் சுத்திறன் கண்டு மக்கள் திரள்திரளாகக் கூடினர்.

கடைசியாகக், “கடவுளுமில்லை, கத்தரிக்காயு மில்லை; யாராவது கேள்வி கேட்க விரும்பினால் மேடைக்கு வரலாம்’ என்றான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் – குணப்பட்டு கிறிஸ்தவனாயிருந் தான். அவன் மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப்பையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து தோலை மெதுவாக உரித்தான்.

‘கேள்வியைக் கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே?’ என்று கோபங்கொண்டான் நாத்திகன்.

பழத்தை உரித்தவன் ரஸித்துத்தின்று கொண்டே, “பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்’ என்று சொல்லியவாறு சுளை சுளையாகச் சுவைத்துத் தின்றான்.

பின்பு நாத்திகனைப் பார்த்து ‘பழம் நன்றாய் இருக்கிறதா?’ என்று கேட்டான்.

“பைத்தியக்காரனே நான் தின்று பார்க்காமல் எப்படிச் சொல்லமுடியும்?” என்றான் கடவுள் மறுப் பாளன்.

“கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால்தானே உனக்குத் தெரியும். பின் ஏன் கடவுள் இல்லை என்று உளறுகிறாய்” என்றான்.

ஒரே கைதட்டல், ஆரவாரம். நாத்திகன் நாணிப் போனான்.

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”. [சங்கீதம் 34:8]

“தேவனுக்குப் பயந்திருங்கள்” [1 பேதுரு 2:17]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *