சின்னம்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூலோகத்திலிருந்து வரும் மனிதக் குரல்களைக் கேட்பதற்காகக் கர்த் தர் தமது காதைக் கூர்மையாக வைத்திருந்தார்.
அப்பொழுது, அவருக்குச் சினம் ஊட்டும் வகையிலே சாத்தான் சிரித்தான். ஊழி இரைச்சலாக அட்ட திக்கும் ஒலித்தது.
கர்த்தர் முறுவலித்தார்.
சாத்தான் அவர் முன் தோன்றினான்.
”கர்த்தரே! நீர் ஏன் உமது சாயலில் மனிதரைப் படைத்தீர்?”
“எம்மைச் சேவிக்க…”
“கீழே குனிந்து பாருங்கள். நீங் கள் படைத்த மனிதப் புழுக்கள் பசியுடன் துடிப்பதை… ஞானப் பழத்தைச் சாப்பிட்டதினாலே அவனுக்குப் பசியுணர்ச்சி ஏற்பட்டதாக யான் அறியேன்.”
“மனிதனுக்கு என்னுடைய ஞாபக சக்தியை யாம் படைக்க வில்லை.”
“அதற்காக…?”
“பசி வேளையிலாவது கர்த்தரின் ஞாபகம் ஏற்படுமல்லவா?”
மீண்டுஞ் சாத்தான் சிரிக்கத் தொடங்கினான்.
”சாத்தானே! என் பின்னாலே போ!” எனக் கண்டித்தார். சாத்தான் பின்னால் மறைந்தான்.
மௌனம் நிலவியது. அதனை ஊடுருவிக்கொண்டு, மனிதனின் மெல்லிய குரல் அவர் செவிகளில் விழுந்தன.
‘பரமண்டலங்களிலேயுள்ள எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக! அன்றன் றுள்ள எங்களப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்…’
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.