சாமி பூ கொடுத்தது!
நம்பிக்கை தானே வாழ்க்கை?! பொண்ணு பார்த்தாலும் மாப்பிள்ளைபார்த்தாலும் சில சமயங்களில் நம்ம பதிலை, நாம நேரடியாகச் சொல்ல முடியாத சிக்கல்களில் சிக்கிக் கொள்வோம். மாப்பிள்ளை வீட்டாரோ பொண்ணு வீட்டாரோ ரொம்ப வேண்டியவங்களாப் போயிட்டா எப்படி இல்லைனு சொல்றதுன்னு தெரியாத அப்போ.. ‘சாமீட்ட பூக் கேட்டுச் சொல்றோம்!’னு பழியைச் சாமி பேர்ல போட்டறது சிலரின் வழக்கம்.
சாமிதான் ஆபத்பாந்தவனாச்சே?! இல்லையங்கறதுக்கு ஒரு வழி, ‘சாரி! சாமி பூ கொடுக்கலைனு!’ சொல்றதுதான். அன்றைக்கு அந்த மலைக்குச் சாமி கும்பிடப்போனான் சாமிநாதன்.
கூட்டம் இல்லை.! பூசாரி மட்டும்தான்! நீண்ட ‘கியூ’ வரிசை இல்லை. நேரடியாக முருகனின் முகம்பார்த்து வேண்டினான். தீபாராதனைத் தட்டு வைக்கும் நீள டேபிளில் இரண்டு பெரிய சில்வர் தட்டுகள். ஒன்றில் வெள்ளை ரோஜாக்கள் மற்றொன்றில் சிவப்பி ரோஜாக்கள். யாரோ பூஜைக்காகத் தன் வீட்டில் பூத்ததைக் கொடுத்திருக்கவேண்டும்.
சாமி, தானாவா பூ கொடுக்குது?! நாம கொடுத்ததைத் தானே திருப்பிக் கொடுக்குது?!
இப்ப சாமிநாதன் எதுக்கு சாமீட்ட பூ கேக்கப்போனான்னு சொல்லணுமில்லே?! ஆங்க்! அது வேறொன்னுமில்லை. காலைல வாட்ஸாப்பில் ஒரு மெசேஸ் எதோ ஒரு புண்ணியவான் எதோ ஒரு மூடில் அனுப்பினது சாமிநாதனை சாமி கோயில் நோக்கிப் பூ கேட்க அனுப்பி வைத்தது.
என்ன வாட்ஸாப் என்றா கேட்கிறீர்கள்?
‘கடலில் மூழ்கினால்… செத்துப் போவதும் முத்து கிடைப்பதும் அவனவன் விதி!’ என்று ஒரு மெசேஜ். எவன் கேட்டான் இவன் கிட்ட
காலை வணக்கம் அனுப்பறானாம் இப்படி?! அந்த மெசேஜில் முத்து முன்னாடி வந்து செத்து பின்னாடி வந்திருந்தா தப்பில்லை., செத்து முன்னாடி வர் செத்துப் போக முடிவெடுத்தான்.
தான் இருப்பதா? செத்துப்போவதா? குழப்பத்தில் பூ கேட்ட, கோயில் போகலாம் தானே? போனான் சாமி நாதன்.
இதுக்கெல்லாமா போவாங்கன்னு நீங்க நெனைக்கலாம். ஒரு ஜோடியை இணைக்கத்தான்னு இல்லை. ஜோடியாய் ஒண்ணு இருக்கணுமான்னு கேட்கவும் போலாம்கறது அவன் கருத்து.
பூஜை முடிந்து தட்டில் பத்து ரூபாவா போட்டு விபூதிக்குக் கையேந்த பூசாரி வெறும் விபூதி வழங்கினார்.
அவரிடம், ‘ஒரு பூ கிடைக்குமா? வண்டில வைக்க?!’ என்றான். ‘சாமி தானே கொடுக்காதபோது, கேட்டுத்தானே பெறணும்?!’ பூ கேட்கத்தானே போயிருக்கான்.
அவர் ‘ஒருநிமிஷம்!’ என்றார்….
காத்திருந்தான். அதற்குள் ஆயிரம் சிந்தனைகள்.. வெள்ளை நல்லதா? சிவப்பு கிடைச்சா நல்லதா? பொதுவா வெள்ளை சாமி சம்மதத்துக்கு அறிகுறிம்பாங்க! ஆனா, அதே சமயம் அம்மன் கோயிலா இருந்தா சிவப்பு சம்மதம்பாங்க சிலர். வெள்ளை இல்லைங்கற அடையாளம் இப்படி ஆயிரமாயிரம் சிந்தனைகள் ஆழ்மனதில் அலையடித்தன.
பூசாரி வந்தார், கையில் சாமிக்குச் சார்ந்தியிருந்த ஒரு மாலையை எடுத்துக் கொண்டு…
‘ஒற்றைப் பூ கேட்டவனுக்கு ஒரு மாலை பரிசு!’ உள்ளம் குரிந்தது. பூ கேட்டவனுக்கு மாலையே தந்துவிட்டது சாமி!. மகிழ்ச்சியாய்த் திரும்ப வேண்டியதுதானே?!! மனசு மாறுபடியும் முரண்டு பிடித்தது. கைகளில் பூசாரி கொடுத்தது ‘ரோஸ் கலர்’ அரளி மாலை. இது எதன் அடையாளம்.
சாமியே ஒற்றைப் பூ கேட்டவனுக்கு ஒரு சரமாலை கொடுத்தாலும் திருப்தி இல்லாதவன் திருந்தப்போவதில்லைதானே?
ஆதீத நம்பிக்கையும் அதீத சந்தேகமும் எவரொருவருக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வைக்கப் போவதில்லை.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 2,826
