சாப்பாட்டு இலை! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,641 
 
 

பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள்.

பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில் தட்டில் பாலு எடுத்து வைத்தான்.

வாசு ரகசியமாக பாக்கெட்டில் கை விட்டான்.

“என்னடா செய்யறே’ என்று பாலு கேட்டுக் கொண்டிருக்கும் போதே, சாப்பிட்ட இலையின் அடியில் பத்து ரூபாய் நோட்டொன்றை வைத்தான் வாசு.

“இது என்னடா வேலை?’

“எல்லாரும் ஓட்டலில் சாப்பிட்ட பிறகு சர்வருக்கு “டிப்ஸ்’ கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆனால், நாம் சாப்பிட்ட எச்சில் இலையை எடுக்கும் “க்ளீன் பாய்’க்கு எதுவும் கொடுப்பதில்லை. அதனால், நான் எப்போதுமே சாப்பிட்டு முடித்ததும் இப்படி இலைக்கு அடியில் யாருக்கும் தெரியாம “டிப்ஸ்’ வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் நீ அதைப் பார்த்து விட்டாய்’

“ம்… இதுவும் நல்லாத்தான் இருக்கு’ என்றான் பாலு.

– மார்ச் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *