சமயோஜித புத்திக்காரி – ஒரு பக்க கதை
 கதையாசிரியர்: ச.முருகேஸ்வரி
 கதையாசிரியர்: ச.முருகேஸ்வரி கதை வகை: ஒரு பக்கக் கதை
 கதை வகை: ஒரு பக்கக் கதை                                             கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம்
 கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம்  கதைப்பதிவு: January 29, 2023
 கதைப்பதிவு: January 29, 2023 பார்வையிட்டோர்: 5,516
 பார்வையிட்டோர்: 5,516  
                                    தாமரையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்று வருவதாக தரகரிடமிருந்து காமாட்சிக்கு தகவல் வந்தது.
அதோடு பிள்ளை வீட்டில் பரம்பரையாக ஒரு பழக்கம் இருப்பதைப் பற்றியும் அவர் சொன்னார்.
தங்கள் வீட்டிற்கு வாழ வரப்போகும் பெண்ணின் கைமணத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ருசிப்பார்த்த பின்பே மற்ற பேச்சுகளை ஆரம்பிப்பார்கள் என்று தரகர் சொல்லியிருந்தார்.
‘ஏய் பூங்கோதை இன்னைக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வராங்க சந்தைக்குப் போய் மீனு வாங்கிட்டு வாடி’.
பூங்கோதைக்கும் காமாட்சியின் மகள் தாமரைக்கும் ஒரே வயதுதான். பூங்கோதைக்கு தாய் தகப்பன் என்று யாரும் கிடையாது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் காமாட்சியின் வீட்டில்தான் வேலைக்காரியாக இருக்கிறாள். அங்க இங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்காதடி என்றவள் பூங்கோதையின் கையில் பணத்தையும், கைப்பையையும் கொடுத்தாள்.
தாமரை மணக்க மணக்க மீன்குழம்பு செய்து மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்துப்படைத்தாள்.
மாப்பிள்ளை மீன்குழம்பு சாப்பாட்டை ஒருபிடிப் பிடித்துக் கொண்டிருந்த போது மீன் முள் மாப்பிள்ளையின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.
எத்தனையோ பேர் முயன்றும் மாப்பிள்ளைப் பையனின்; தொண்டையில் சிக்கிய முள்ளை அகற்ற முடியவில்லை. அப்போது பூங்கோதை ஒருப்பிடி சோற்றை எடுத்து மாப்பிள்ளையின் வாயில் திணித்தாள். அப்படியே முழுங்கிருங்க, மீன் முள் கண்டிப்பா உள்ளே போயிடும்.
என்ன ஆச்சரியம்! தொண்டையில் சிக்கியிருந்த முள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போனது.
மறுநாள் தாமரையை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பூங்கோதையின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.
ஆபத்து நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டதால் வேலைக்காரியான பூங்கோதை பெரிய பணக்கார வீட்டிற்கு மருமகளானால்.
 
                     
                       
                      