சந்திர மண்ணில் சபேதா





சபேதா சந்திர மண்டலத்தைக் கண்டவுடன், டோரியனை நச்சரிக்க ஆரம்பித்தாள். “அங்கே நிறுத்தலாமா அப்பா? ப்ளீஸ் அப்பா, ப்ளீஸ்.”
APX1289 என்னும் கிரகத்தில் வசிக்கும் டோரியன் இரண்டு மாத விடுமுறையை கழிக்க தன் ஐந்து வயது மகள் சபேதாவுடன் சூரிய குடும்பத்திற்கு வந்திருந்தார். பத்து நாட்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் இறங்கியதோடு சரி. அதற்கப்புறம் விண்கலத்தை எங்கும் நிறுத்தவில்லை. சபேதா போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். பாவம் அவள். எவ்வளவு நேரம் தான் முடிவில்லாத விண்வெளியை ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருப்பாள்?

சபேதாவின் வேண்டுகோளுக்கு இணங்கி டோரியன் சந்திர மண்ணில் கவனமாக விண்கலத்தை இறக்கினார். வெளியே எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு, விண்கலத்தின் கதவைத் திறந்தார். சபேதா ஒரு பெரிய சிவப்பு பந்துடன் குதித்து இறங்கினாள். தன் முன்னே பரந்து கிடக்கும் சந்திரனின் மேற்பரப்பில் பந்தை தூக்கி வீசினாள்.
புவிஈர்ப்பு விசை மிகக்குறைவாக உள்ள நிலவு மண்ணில் மிகுதியாகத் துள்ளிய பந்து, வெகு தூரம் சென்று, நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடங்களின் நடுவில் விழுந்து, அவற்றை நிரந்தரமாக அழித்தது.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |