சகாப்த யுகத்தில் ஒரு சாந்தி தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,234 
 
 

அப்புவின் அந்தியேஷ்டி நாளைக்கு வருகிறது. மாது என்கிற, மாது சிரோண்மணியின் தம்பியே பெரிய எடுப்பு எடுத்து இதை நிகழ்த்துகிறான். அவன் ஒரு கணித மேதையாக பிரகாசிக்க, வேண்டியவன், விதி சறுக்கியதால், அது நிகழாமல் அவன் இப்போது ஒரு சாதாரண வாத்தி தான். அதனாலென்ன. அவர்கள் அப்பு கூட ஆசிரியர் தொழிலுக்கு வந்து, ஓர் ஆசிரிய திலகமாக, ஒளிர்ந்து பிரகாசித்தவர்.

வேலையை வைத்து ஆளைக் கணிப்பது தவறு, அதை விட, வெறும் மேனி அழகைப் பார்த்து கும்பிடு போடுவது, அதை விட மடமை. அப்படித்தான் உலகப் போக்கு. இந்த மடமையைக் கொளுத்த, புதிதாய் ஒரு யுக புருஷன் தான், பிறக்க வேண்டும்.

மாதுவின் தம்பி அப்படி வரக் கூடிய ஓர் மேன்னிலை மனிதப் பிறவி தான். அவனை பார்த்தாலே, கம்பீரமான, ஓர் ஆதர்ஸ் புருஷனையே தரிசிப்பது போல, மெய் சிலிர்க்கும். எவர்க்கும் தீங்கு செய்ய நினைக்காத அபூர்வ மனிதப் பிறவி. அவன் பெயர் சரவணன். நாளை சமையல் செய்வதற்காக, அரிசி காய்கறிகள் முதர் கொண்டு, அவன் வாங்கிக் குவித்த பொருட்களே, மலை போலக் குவிந்து கிடந்தன. நல்ல வேட்டை தான், ஏழைகளுக்கு அன்னதானம் கூட செய்யலாம். ஏனென்றால் கடைசியாக அப்பு படிப்பித்த கல்லூரியிலிருந்து நிறைய ஆசிரியர்கள் மாணவர்கள் வரக் கூடும் என்று கருதியே இந்த ஏற்பாடு.

மரணத்தைக் கண்ணால் கண்ட பின்னும் புத்தி வெளுக்காத மனிதர்களானதே இந்த சமூகமும் அதன் நடத்தைக் கோளாறுகளும். மனிதாபிமான சிந்தனைகள், காசு கொடுத்தாலும் வராது. அப்பேர்ப்பட்ட அன்பு இல்லாமற் போன ஆழ்ந்த இருப்பிலேயே, மனிதம் அழுந்திக் கிடக்க மாது அரிவாள் அமர்ந்திருக்கிற நேரம்.

திடீரென்று புயல் வீசினாற் போல் ஒரு சம்பவம். இப்படி பூதமே வெளிப்பட்டு வருமென்று, அங்கு யாருமே, எதிர்பார்த்திருக்கவில்லை . வந்தது பூதமல்ல, மாமி தான். அப்புவின் ஒரே மலட்டுத் தங்கை. வந்த முதற்காரியமாக அவள் ஆற்றியது இறைபணியல்ல, கொடு வினை. கொடியோர் நிலை என்றும் இப்படித் தான் அன்பு வழிபாடு என்பதும் ஆன்மீக ஞானமென்பதும் இல்லாமற் போன சூனிய வெறித்து இருள் உலகம் தான் அவர்களுடையது. ஆம் மாமியும் அப்படித்த் தான் இருந்தாள், அதிலும் அண்ணன் பிள்ளைகளென்றால் பெரிய இளக்காரம்.

பாரதியை இந்த நிலையில் கண்டதும், மாமி எரிச்சல் மேலோங்க தோள்களைக் குலுக்கி சின்னக்காவின் பார்த்த பார்வை நெருப்பிலேயே அவள் அப்படியே பொசுங்கிப் போயிருந்தாலும் அவள் கவலை படவா போகிறாள். பற்றி எரியும் உலகமே அவள் குளிர் காயும் இடம். எவ்வளவு மோசமான மன நிலை இது.

பெரியண்ணாவுக்கும் அது புரிந்தது. ஏற்கெனவே, காடு வெறித்து[ப் போன கதை தான் பாரதிக்கு. இதற்கு மேலேயும் கல்லெறிய மாமி யார்? பூதம் தான் என்றால், புறப்பட வேண்டியது தான் தர்ம யுத்தத்திற்கு, அதைப் பார்த்து விட்ட அண்ணனின் முகத்திலோ, எரிமலை தான் வெடித்தது. படித்தது வேதமேயென்றால், உண்மையில் இது தெய்வ குற்றம் தான் கொடூரம் வெறித்த இந்தக் காட்டிலே, பற்றி எரியும் நெருப்பை அணைத்தே தீர வேண்டுமென்ற, தார்மீக சினம் மேலோங்க, திடீரென்று குரலை உயர்த்தி அண்ணா சொன்னார்.

மாதுவும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிர்ருந்தாள், உன்னதமான ஒரு வேத வாஜ்கியமே காதில் விழுந்தாற் போல அவர் குரல் கேட்டது, அவர் சொன்னார்.

“மாமி! அம்மா இதுகளை என்ரை தங்கச்சிமாரை நோகாமல் பெத்து வளர்க்கேலை ரோசாப் பூ மாதிரி வளத்தவ தெரியுமோ உங்களூக்கு?” அதைக் கேட்டு விட்டு, மாமி சும்மா இருப்பாளா? மனிதம் மரித்து, விட்ட, சூனிய இருப்பிலே தலைக் கனம் கொண்டு பேசும் வாயாலேயே ஆளை விழுங்கும் பூதம் இப்போது அண்ணன் சொன்னதைக் கேட்டு, இன்னும் பெரும் பூதமாக விரிந்து, அழுகையும் ஆத்திரமுமாக, அவள் குரல் வெடித்தது.

“நீங்கள் என்னைப் பாக்க வேண்டாம், நான் செத்தாலும் வர வேண்டாம். எனக்கென்ன வந்தது? எப்படியாவது அழிஞ்சு போங்கே”. அவள் போய் விட்டாள். அதன் பிறகு நடந்தது ஒரு புதுக் கதை, புரிந்து கொள்ள வேண்டிய வேதம் அழிக்க தெரிந்தவனுக்கு. ஆம், இந்த மாமிக்கு கழுத்தில் விழுந்தது பூமாலையல்ல ஆக்கத் தெரிந்தவனே அன்பு வழிபாடு செய்து, எல்லா உயிர்களயும் பேதம் தெரியாமல் வாழ வைப்பவனே கடவுளாகிறான். மாமியின் நிலையோ, வெகு பரிதாபம். அவள் கடைசிக் காலம், கையறூந்த நிலையில் ஆதரிப்பார் அன்பு செய்வார் யாருமின்றி நடுத்தெருவுக்கு வந்து அனாதையாக, அவள் செத்து மாண்டது, வெறும் புதினமல்ல, வேதம் தான் என்பதை புரிய வைக்கவே இந்தக் கதையும் கதை மையமும்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *