கைகாட்டி மரங்கள்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 186
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாற்பத்தெட்டு மாகாணங்கள் கொண்ட அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் “லிங்கன் இராஜ பாதை” என்ற பெரும் பாதை ஐக்கிய மாகாணம் முழு வதையுமே இணைக்கிறது, சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய நிறங்களில் ஆங்காங்கே கைகாட்டி மரங்கள் நிற்கின்றன. பிரயாணிகள் அந்த அடையாளங்களைக் கவனித்துச் செல்லவேண்டும்.
‘இவ்வழி நடவாதேயுங்கள் எனச் சிவப்புக் கை காட்டி மரம் எச்சரிப்புக் கொடுக்கின்றது.
‘ஜாக்கிரதையாய் நடவுங்கள்’ என நீல நிறக்கை காட்டி மரம் எடுத்து இயம்புகின்றது.
‘பயமில்லாது போங்கள்’ என வெள்ளைக் கை காட்டி மரம் நம்மைச் செம்மையான பாதையில் வழி நடத்துகின்றது.
இதனை நம்முடைய ஆன்ம நெறி வாழ்க்கைக்கு ஒப்பிடுவோம்.
உலகமாகிய இராஜ பாதையில் பல பாதைகள் பிரிந்து செல்கின்றன.
நமக்குக் கைகாட்டி மரம் எது? திருமறைதான். இதிலும் பலவண்ணக் குறிப்புகளுண்டு.
சிவப்பு அடையாளமானது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என எச்சரிப்புக் கொடுக்கின்றது. நீல நிறமானது, ‘நீதியின் பாதையில் நடவுங்கள்’ என நீட்டி முழக்குகின்றது. வெள்ளை நிற அடையாள மானது, ‘சத்தியத்தைக் கடைப்பிடித்து நடவுங்கள்’ என வழிநடத்துகின்றது.
நாம் அடையாளங்களைப் பார்த்து நடக்கிறோமா?
“வழி இதுவே, இதிலே, நடவுங்கன்” [ஏசாயா 30:21]
“இவ்விதமாக நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்துகிற உபாத்தியாய் இருந்தது.” [கலாத்தியர் 3:24]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
