குதிரையின் கடமை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 167
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இங்கிலாந்து தேசத்தில் ரயில், மோட்டார் போன்ற துரிதவாகனங்கள் ஏற்படு முன்பு, குதிரை வண்டிகள்தான் உபயோகத்திலிருந்தன. வண்டிகளுக் குப் பின்னால் கதவு இருக்கும். வண்டி மேட்டில் ஏறும் போது இழுக்கச் சிரமப்படும். பின் கதவைத் திறந்து திரும்ப அடைக்கும்பொழுது வண்டிக்காரன் பலமாக அடைப்பானாம்.
மேட்டில் வண்டி போய்க்கொண்டிருக்கையில் அடிக்கடி திறக்கிறதும் அடைக்கிறதுமாயிருந்ததால், ‘ஏனப்பா வீணாக வண்டிக் கதவைத திறக்கிறதும் அடைக்கிறதுமாக இருக்கிறாயே, ஏன்’ என்று ஒரு பிரயாணி வெறுப்போடு கேட்டார். அதற்கு அவன் சொன்னான்:
“ மேட்டில் வண்டி ஏறும்போது குதிரை திணறு கிறது. அப்போது கதவைத் திறந்து, சற்று நேரம் அடைக்கும்பொழுது, கழித்து பெலமாகக் கதவை “யாரோ ஒருவர் இறங்கிவிட்டார், பாரம் குறைவாயிருக்கும் என்றெண்ணி வண்டியை வேகமாய் இழுத்துக்கொண்டு போகிறது. மேட்டில் ஏறும் போதெல்லாம் கதவைத் திறக்கிறதும் அடைக்கிறது மாயிருப்பதற்குக் காரணம் இதுதான்” எனச் சொல்லி முடித்தான்.
“தன்இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.” [புலம்பல் 3:27]
“அவனவன் தன் தன் பாரத்தைச் சுமப்பானே” [கலாத்தியர் 6:5]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
