காலத்தின் அருமை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 157
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிரபு வெல்லிங்டன் பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரை லண்டன் பட்டணத்துப் பாலம் ஒன்றில் மாலை ஐந்து மணிக்குச் சந்திக்கும்படி சொல்லியிருந் தார், அவர் ஐந்து நிமிடங்கள் தாமதித்து வந்தார்.
‘ஐந்து நிமிடங்கள் பிந்திவிட்டேன், தயவு செய்து மன்னியுங்கள்,’ என்றார் உறுப்பினர். ‘மன்னிக்கிறது கிடக்கட்டும், ஐந்து நிமிடங்கள் பிந்தினால் உவாட்டர்லு யுத்தத்தில் தோற்றுப்போயிருப்பானே,’ என்றார். அடுத்த வாரம் ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று மாலை ஐந்து மணிக்கு இவ்விடத்திலேயே சந்திப்போம் என்று இருவரும் ஏற்பாடு செய்துகொண்டனர், அவ்வாறே அந்தப்பிரமுகர் 5 நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டார். வெல்லிங்டன் சரியாய் ஐந்து மணிக்கே வந்தார். ‘இன்று ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வந்து காத்திருக்கிறேன்’ என்று பெருமையாகச் சொன்னார் பார்லிமெண்ட் அங்கத்தினர்.
வெல்லிங்டன் என்ன சொன்னார் தெரியுமா?
ஐந்து நிமிடங்களை வீணாகக் கழித்துவிட்டீரே,’ என்று கடிந்து கொண்டார்.
காலத்தை ஆதாயப்படுத்துங்கள். நன்மை செய்யக் கூடிய நல்ல தருணங்களை இழந்துவிடாதேயுங்கள். ஏனெனில் திரும்ப வராத மூன்று காரியங்களுண்டு: பேசின வார்த்தை, எய்த அம்பு, இழந்துவிட்ட நல்ல தருணம்.
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” (பிரசங்கி 3:1]
ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்”. [கொலோசெயர் 4:5]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
