காதல் தேரினிலே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 15,177 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-16

பதினாறு நாள் காரியம் முடிந்ததும்…பெட்டியுடன் கிளம்பிய அவந்திகாவை புகுந்த வீடு அதிர்ச்சியுடன் பார்த்தது. 

பரமேஷ்வர் திடுக்கிட்டு அருகில் வந்தான். 

“எங்கேம்மா கிளம்பறே?” 

“நம்ம வீட்டுக்குண்ணா!” 

சந்திரமதி மருமகளின் கையை கெட்டியாகப் பற்றி கொண்டாள்.

“என்ன அவந்திகா பேசுறே? இதுதான் நம்ம வீடு. இனி இது உன் வீடும்மா.. உள்ளே போம்மா” 

“ஸாரிம்மா… என்னால இங்கே முடியலே.” 

“எதையாவது பேசி என் மனசை மேலும் புண்படுத்திடாதே அவந்திகா. கல்யாண வீட்டை, கருமாதி வீடா மாத்திட்டுப் போய்ட்டான் என் பிள்ளை! உன் வாழ்க்கைய யாழாக்கிட்டேனேன்னு ஏற்கனவே குற்ற உணர்ச்சியிலே மருகிட்டிருக்கேம்மா. 

கன்னிகா மாதிரி நீயும் எனக்கு ஒரே பொண்ணுதான். இப்ப நான் எதையும் சொல்லக் கூடாது. ஆனாலும் சொல்றேன். இன்னும வாழவே ஆரம்பிக்காத உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய ஏற்படுத்தி உன்னை சீரும் சிறப்புமா வாழவச்சுப் பார்க்கணும்னு இந்த தாய் மனசு ஆசைப்படுது.” 

“நீங்க என் மேலே இந்தளவுக்கு பாசமா இருக்கிறதே எனக்கு ஆறுதலா இருக்கு. என்னை தயவுப் பண்ணி நீங்க புரிஞ்சிக்கணும். இந்த வீடு என்னை சங்கடப்படுத்துது. அப்பப்ப தான் உங்களை வந்து பார்த்துப்பேன். இப்ப என்னை போக அனுமதிக்கணும்.” 

அதுநாள் வரை மருமகளிடம் ஒரு வார்த்தையும் பேசியிராத ரங்கராஜன் தளர்வாய் அவள் முன் வந்து நின்றார். 

“அம்மா…இந்தக் கல்யாணம் நடந்திருக்கக் கூடாது. சில விஷயங்களை மூடி மறைச்சு உன்னை பலிகடாவா ஆக்கிட்டோம். அதுவே எந்நேரமும் உறுத்திக்கிட்டிருக்கு. நீ இப்படி ஒரேயடியா எங்களை ஒதுக்கிட்டு கிளம்பினா… அது எங்களை தண்டிக்கற மாதிரி தானே?” 

“ஐயோ.. அப்படி பெல்லாம் இல்லே மாமா! 

எந்த பெத்தவங்களும் தன் பிள்ளைக்கு ஒரு வாழ்க்கை அமையணும்ங்கிறதுக்காக, சில உண்மைகளையோ, கசப்புகளையோ மறைச்சு கல்யாணம் பண்ணத்தான் பார்ப்பாங்க. 

எனக்கு யார்மேலயும் கோபமில். உங்க பிள்ளை உட்பட! எங்க வீட்ல கொஞ்ச நாள் இருக்கணும்னு தோணுது…ப்ளீஸ் மாமா!”

ரங்கராஜன் மனைவியை பார்த்தார். கண்களால் சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். பிறகு…. 

“சரிம்மா… நீ சொல்றதும் நியாயம்தான். ஆனா கொஞ்ச நாள்தான்… அப்புறம் இங்கே வந்துடணும்.”

“ம்” என்றாள் தலைகவிழ்த்து.

“மாப்பிள்ளே….உங்க தங்கச்சி அங்கே தனியா இருக்க வேண்டாம். நீங்க அவகூட போய் துணைக்கு இருங்க. அதுவரைக்கும் கனிகா இங்கேயே இருக்கட்டும். என்ன சந்திரா நான் சொல்றது?” 

“ஆமாங்க…மாப்பிள்ளையும் போகட்டும். பாரும்மா அவந்தி… ரொம்ப நாள் அங்கேயே இருந்துடாதே… சீக்கிரம் வரப்பாரு!” 

“ம்!”

தங்கையுடன் இருப்பது அந்த  சூழ்நிலையில் இருவருக்குமே ஆறுதல் தரும் என்பதை உணர்ந்த பரமேஷ்வர் எதுவும் பேசாமல் அவளுடன் புறப்பட்டுச் சென்றான்.

இயல்பாய் இருப்பதை போல் தன்னைக்காட்டி கொள்ள பெரிதும் முயற்சிக்கிறாள் என்பதை எளிதில் உணர்ந்து கொண்டான் பரமேஷ்வர். 

ஆபீஸிற்கு லீவுப் போட்டு விட்டு தங்கையுடனே இருந்தான். 

“அண்ணா…. உனக்கு பிடிச்ச சேமியா புலாவ் பண்ணியிருக்கேன்… உட்காரு…” 

”அதெல்லாம் அப்புறம் சாப்பிட்டுக்கலாம். இப்படி உட்காரு அவந்தி”

அமர்ந்தாள். 

“என்னாலதானே உனக்கு இப்படி?” 

“இப்ப என்னாகிப்போச்சு? நான் அதே பழைய அவந்திகாவாதானே இருக்கேன். போன தலைமுறையா இருந்தாலும் சித்தார்த்தோட அம்மாவும், அப்பாவும் நான் பூவையும், பொட்டையும் இழக்க கூடாதுன்னு உறுதியா இருந்து எனக்கு எந்த சங்கடத்தையும் தரலியே… அப்புறம் என்னண்ணா?” 

“எனக்கு சமாதானம் சொல்றியா?” 

“பிளீஸ்ண்ணா… நான் பழசு எதையும் நினைச்சுப் பார்க்க விரும்பலே.. நான் உங்ககிட்டே பேச வந்தது வேற..” 

“சொல்லு” 

“நான் மறுபடியும் வேலைக்குப் போகணும்னு நினைக்கிறேன்.” 

“என்ன அவந்தி சொல்றே!” நெற்றி சுருங்கியது. 

“ஆமாண்ணா… அதுக்கு நீங்கதான் ஏற்பாடு பண்ணனும்”

“புரிஞ்சிதான் பேசறியா? உனக்கென்ன தலை எழுத்து? தவிர, உன் மாமனாரும், மாமியாரும் நீ வேலைக்கு போறதை அனுமதிக்க மாட்டாங்க.” 

“அவங்க அனுமதி எனக்கு அவசியமில்லேண்ணா” 

“அ..வ..ந்…தி…” 

“…?!”

“ஏன் இப்படி பேசறே? அவங்க நல்லவங்க. நான் என்ன நினைச்சேனோ.. அதைத்தான் அவங்களும் யோசிச்சிருக்காங்க, கண்டிப்பா உனக்கொரு நல்ல வாழ்க்கைய…” 

“அண்ணா பிளீஸ்…” 

“….?!”

“எனக்கும் அவங்க மேல மரியாதை இருக்கு. மத்தபடி எந்த சம்பந்தமும் இல்லே!” 

“அ..வ..ந்..தி?!” 

“அண்ணா… நான் எப்பவும் உன் தங்கச்சியாதான் இருக்க ஆசைப்படறேன். எனக்காக… எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்ங்கறதுக்காக நீ செய்த தியாகம் எப்பேர்பட்டது?” 

“அ..அவந்தி… உ..உனக்கு?!” 

“எல்லாமே தெரியும். ஏண்ணா இப்படி?கூடப பிறந்தவளுக்காக கடன்படலாம். அவ ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்கலாம். பிடிச்ச இடங்களுக்கு அழைச்சிட்டுப் போய் சந்தோஷப்படுத்தலாம். இதுதான் லிமிட். ஆனா, நீ… உன் சந்தகிக்கே முற்றுப்புள்ளி வச்சுட்டியேண்ணா! எதுக்காக? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல வேணாமா?” 

“இ… இதெல்லாம் பெரிய தியாகமா? ரெண்டு குழந்தைய தத்து எடுத்துக்கிட்டாப் போச்சு. ஆனா, உன் வாழ்க்கை ஒரே நாள்ல…”

அதற்கு மேல் தாங்க முடியாமல் அழுது விட்டான். 

“அழாதேண்ணா, எனக்காக நீ ரொம்பவே அழுதுட்டே! நம்ம வீட்டுக்கு வந்த இந்த ஒரு வாரத்துல நானும் கவனிச்சுட்டுதாள் இருக்கேன், போதும்ண்ணா நீ அழுதது. உனக்காக… நீ என் மேல வச்சிருக்கிற பாசத்துக்கா நீ விருப்பப்பட்டபடி வாழப் போறேன்.” 

“நிஜயாவா சொல்றே?? சட்டெனமுகம் மலர்ந்தது. 

“ரொம்ப கற்பனை பண்ணிக்காதே! நான் நல்லா யோசிக்க ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். ஆனா தயவு பண்ணி அதுக்கு இப்ப முட்டுக்கட்டைபோடக்கூடாது”

“…?!” 

“நான் மேற்கொண்டு படிக்கப் போறேன்.”

“படிக்கப் போறியா?” 

“ஆமாண்ணா! என் இழப்புகளை படிப்பு மூலமா மறக்கப் போகிறேன்.” 

“அதுக்கு நான் உடனடியா வேடீஸ் ஹாஸ்டல்ல சேரணும்”

“என்ன அவத்திகா.. இப்படியொரு குண்டை தூக்கிப் போடறே? நான் அனுமதிக்க மாட்டேன். நான் இருக்கப்ப…நீ எதுக்கு…?” 

“இல்லேண்ணா… அண்ணி ரொம்ப நல்லவங்க. அவங்க மனசிலேயும் ஏகப்பட்ட ஆசை இருக்கும். அதை என்னால புரிஞ்சிக்க முடியும். நான் இடையிலே எதுக்கு? தவிர, எனக்கும் தனிமை தேவைப்படுது. புரிஞ்சிக்கண்ணா. இன்னொரு முக்கியமான விஷயம். சித்தார்த்தோட மனைவிங்கற உரிமைக்காக, அவங்க சொத்திலயோ, வீட்டிலேயோ எனக்கு எந்த உரிமையும் வேண்டாம்.” 

”அவந்திகா… நீ இப்படியெல்லாம்….” 

“புரிஞ்சிக்கண்ணா. நான் எல்லாத்தையும் மறக்க நினைக்கிறேன். அதை நினைவுப்படுத்தற எதுவும் எனக்கு வேண்டாம்.” 

ஒரு பெண்ணுக்கு கடைசிவரை துணை நிற்கிற படிப்பும், உழைப்பும், சுயபலமும் தான் எனக்கிப்ப அவசியம். அதுக்காக எனக்கு நீங்க துணையா இருந்தாப் போதும்ண்ணா!” 

அவளின் தீவிரத்திற்கு முன் எதுவுமே செய்ய இயலாத பரமேஷ்வர் பெருமூச்சுடன் தங்கையின் தலையை தடவிக் கொடுத்தான்..சம்மதமாக! 

மாமனாரும். மாமியாரும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல்… விமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்றாள் அவந்திகா. 

தபாலில் பட்ட மேற்படிப்பு படித்தாள். 

வேலைக்கு போய் வந்த நேரம் போக கம்பியூட்டர் சம்பந்தப்பட்ட அத்தனை கோர்ஸையும் படித்தாள். 

அத்தியாயம்-17

காலம்மிகவேகமாக தன் பணியை செய்ய.. ஏழு வருடங்கள் கடந்து சென்றன.

கார் சிக்னலில் நின்றது. கெளசிக் கிரீன் சிக்னலுக்காக காத்திருந்தான். 

“டாடி… ரொம்ப லேட்டாயிடுச்சு… மிஸ் திட்டுவாங்க… காரை எடுங்க டாடி…” ஆறு வயது தர்ஷிணி அவசரப்படுத்தினாள்.

“இரும்மா… சிக்னல் விழட்டும்.” 

“இன்னைக்கும் மிஸ் திட்டப்போறாங்க. உங்களாலதான் யூ ஆர் லேஸி டாடி… உங்கிட்டே ஸ்பீடே இல்லே!” 

“ஸாரிடா…. இதோ போய்டலாம்” என்றவனுக்கு மனசு வலித்தது. சின்னப்பெண். தந்தையை சோம்பேறி என்கிறாள். அவளை குறை சொல்ல முடியாது. பெரியவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றிதானே சின்னப் பாதங்கள் அடியொற்றி நடக்கின்றனர். நிரஞ்சனா அவனை மதித்தால்தானே? 

தான் பணக்கார வீட்டுப் பெண் என்ற மமதை அவளிடம் அதிகமாகவே இருந்தது. கூட்டுக் குடும்பம். சேர்ந்து தொழில் பார்த்ததால் பணமழை கொட்டியது. கல்யாணமான புதிதில் கிடைத்த மரியாதை… விரைவில் தேய்ந்து கட்டெறும்பானது, 

வீட்டோடு மாப்பிள்ளை என்பது முன்பே முடிவான பேச்சு, வேறு வழியின்றி அவனின் அம்மா தனிமையில் வசித்தாள். அவள் வற்புறுத்தி மணமுடித்து வைத்த சம்பத்தம்தானே? குடும்பத் தொழிலை பார்ப்பதற்கு அரசு உத்யோகம் இடைஞ்சல், தவிர சம்பளமாய் கிடைக்கும் சில ஆயிரங்கள் கவுரவக் குறைச்சல் என பிரெய்ன் வாஷ் பண்ணி, கொஞ்சி கெஞ்சி கணவனை வி.ஆர்.எஸ். வாங்க வைத்து விட்டாள். 

நிரஞ்சனாவின்அழகு, நுனிதாக்கு ஆங்கிலம், கார், படாடோபம், ஹனிமுன், பாக்கெட்டில் புரண்ட பணம், மனைவி சொல்லை வேதமாக மதிக்க வைந்தது. 

நிரஞ்சனா உண்டான போது அப்படித் தாங்கினான். அந்த நேரத்தில் காமாட்சிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே…. அம்மாவை பார்க்க ஓடினான். 

அதிக காய்ச்சல், வாந்தி என வாடிப் போயிருந்த அம்மாவை மூன்று நாட்கள் பக்கத்திலேயே இருந்து பார்த்தது கொலை குற்றமாக விட்டது மாமியார் வீட்டுக்கு. 

“என் பொண்ணு வாந்தி, மயக்கம்னு முடியாம கிடக்கறப்ப… உங்கம்மா கூடவே இருக்க மனசாட்சி எப்படி இடம் கொடுத்துச்சு மாப்பிள்ளே!” என்று கேட்டாள் மாமியார். 

“இல்லே. அத்தே அம்மா அங்கே தனியா ரொம்ப முடியாம்..” 

“யார் அப்படி தனியா இருக்கச் சொன்னரு? கப்பல் மாதிரி வீடு இருக்கு. ஒரு மூலையில வந்து இருந்துக்க வேண்டியது தானே? யார் வேண்டாம்ன சொன்னா? கவுரவம் பாருங்க மாப்பிள்ளே… எனக்கு என் பொண்ணு முக்கியம்… அவ கண்ல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் என் நெஞ்சு வெடிச்சிடும் சொல்லிட்டேன்.” மாமியார் கௌசல்யா சொன்னது கெஞ்சலாக தெரியவில்லை. மிரட்டல் போல இருந்தது. 

நிரஞ்சனா ஒரு படி மேலேபோய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவன் சட்டையையே கிழித்து ‘அதெப்படி என்னை விட்டு போகலாம் என்று?’ 

வேறு வழியின்றி தன்னைத் தானே சமாதானப்படுத்தி கொண்டான். 

அம்மாவை அந்த வீடு ஒரு பொருட்டாகவே நினைக்காததால்..அவர்களுக்கு தெரியாமல் போய் பார்த்து வந்தான்.

அந்த வீட்டு ஆண்களுடன் ஒட்டி உறவாடுவதே சிரமமாய் இருக்க… தொழிலில் எப்படி கவளம் செலுத்த முடியும்? சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் ஏளனம் செய்தே திருத்தினார்கள். ஆனாலும் கௌசிக் பக்கம் தவறுகள் அதிகரிக்கவே.. அவன் மீதான மரியாதை குறைய ஆரம்பித்தது. 

நைஸாய் அவனை தனிமைப் படுத்தினர். வீட்டுப் பொறுப்பை அவன் தலையில் கட்டி, நாளடைவில் மளிகை சாமான், கரண்ட்பில், டெலிபோன் பில், பிளம்பர் பொட்டு பொசுக்கு வேலையெல்லாம் அவன் மேற்பார்வையில் வந்தமர்ந்தது. அதற்கான சம்பளமாக ஒரு தொகை மாதம் மாதம் அவன் கைக்கு வந்தது. அது அவன் அரசுப் பணியில் வாங்கின சம்பளத்தில் பாதிக்கூட இல்வை. 

நிரஞ்சனாவில் பேச்சிலும் நடவடிக்கையிலும் ஏகமாற்றம். இரண்டாவது பெண் திரிஷா பிறந்த பிறகு முதல் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பள்ளிக்கு அழைத்துச்சென்று அழைத்து வருவதும் அவன் தான். 

எதற்கெடுத்தாலும் கணவன் மீது எரிந்து விழுந்தாள். 

“தர்ஷினிக்கு இன்னைக்கு மேத்ஸ் டெஸ்ட்டாம். இதை நேத்தே கவனிச்சு சொல்லி குடுத்திருக்க வேண்டாமா? எதை தான் உருப்படியா செஞ்சிருக்கீங்க? பிஸின்ஸையும் ஒழுங்கா பார்க்கத் தெரியலே. 

உங்களால என் வீட்டில் எனக்கே மரியாதை இல்லாம போச்சு.சே… ஒவ்வொருத்தனும் எங்ளோ பிரில்லியண்ட்டா இருக்கான்? நீங்க ஏன் இப்படி இருக்கிங்க? வளத்தைப் பாருங்க… தொப்பை விழுந்து அசிங்கமா…வீட்லேயே ஜிம் இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சி எக்சர்சைஸ் பண்றதுக்கு உடம்பு வணங்க மாட்டேங்குது… லேஸி… லேஸி… ஒரு பிரச்சனை என்றால்… எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து திட்டுவாள் நிரஞ்சனா. 

அத்தனையும் தர்ஷினி எதிரிலேயே? 

நிரஞ்சனாவின் குணம் கொண்டே அவளும் வளர்ந்தாள்.

சலிப்புத்தட்டியது வாழ்க்கை. நிரஞ்சனா எதிர்த்து ஒரு வார்த்தை பேசி விடமுடியாது. அவ்வளவுதான் அந்த வீட்டு உறுப்பினர்களில் கரங்களில் இவன் சிலிடல்லவா பறிபோகும்! 

நாளாக, ஆக மனைவியின் வாயில் சம்பாதிக்க வக்கற்றவன் என்ற ரீதியில் வார்த்தைகள் வந்து விழுந்தன. 

கௌசிக் இப்போதெல்லாம் நிறைய யோசித்தான். தர்ஷினியை பள்ளியில் விட்டுவிட்டு, காரை தன்னிச்சையாக கடற்கரை நோக்கி செலுத்தினான். 

இப்போதெல்லாம் அவன் மன உளைச்சாலை தனிப்பது அந்த இடம்தான், 

காரணம்… கடற்கரைகாற்று அல்ல! 

அவனும் அவந்திகாகவும் வந்தமளும்… அதே இடத்தில் அமரும் போது… வேதனையும், நிம்மதியும் ஒரு சேர ஆட்கொள்ளும். 

அவந்திகாவை ஒதுக்கியது எப்பேர்பட்ட அறிவீலித்தனம்?

மகன் பணக்காரனாகி விடுவான் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்த அம்மா இன்று தனிமையில் வசிக்கிறாள். 

நல்ல சாப்பாடுதான். ஆனால் உடம்பில் ஒட்டவில்லை. எந்த ஒரு ஆணுக்கும் திருமணத்தில் எதிர்பார்ப்பு என்ற வகையில் முதலிடம் வகிப்பது, ‘என்னை புரிந்து. என் அம்மாவை தன் அம்மாவாக பார்த்துக் கொள்வது தானே?’ எதுவுமே நடக்க வில்லையே. பல்லைப் பிடுங்கின பாம்பல்லவா அவன்? 

தன் செலவிற்கு கூட அவர்களை அல்லவா எதிர்பார்க்க வேண்டியிருக்கு? 

‘நோ…. கூடாது.. பொறுத்தது போதும். சொந்தமாப் எனக்குத் தெரிந்த தொழிலை தானே தனியாய் தொடங்கியாக வேண்டும். என் வீட்டில் என் அம்மாவோடுதான் இனி இருப்பேன், நிரஞ்சனா என் வீட்டில் வந்து வாழ வேண்டும். வராவிட்டால் போகட்டும். நான் ஏன் அவர்களுக்கு பயப்பட வேண்டும்?’ 

என் தங்கை சொன்னது எத்தனை உண்மை? வாழ்க்கையை கமர்ஷியலாக மட்டுமே பார்த்தான். வினைவு இன்று செல்லாக்காசாகி விட்டேன். நிரஞ்சனா அன்பாக இரண்டு வார்த்தை பேசமாட்டாளா என்று ஏங்குகிறேனே! ஏன்? 

வாழ்க்கை நேசத்தாலும் உணர்வுகளாலும், கட்டுண்டு கிடப்பதாலா? 

எப்படி யோசிக்காமல் முடிவெடுத்தேன்? பாவம் அவந்திகா! என் மீது அளவுக் கடந்த பாசம் வைத்திருந்தாளே! எவ்வளவு நாசூக்காய், மனசாட்சியின்றி அவளை என் வாழ்க்கையிலிருந்து நீக்கினேன்? 

அதன் பிறகு அவந்திகா என்ன ஆனாள்? 

திருமணமாகி இருக்குமா? என்னைப் போல் அவளும் இங்கு வருவாளா? 

காதலிக்கும் போது அவள் சொன்னது நினைவிற்கு வந்தது. 

‘கௌசிக்…நமக்கு கல்யாணமாதி, குழந்தை, குடும்பனு ஆகி, தாத்தா பாட்டினு வயசான பிறகும் நாம எப்பவும் உட்கார்ந்து பேசற இந்த பீச்சுக்கு வர்றதை நிறுத்தவேக் கூடாது” என்றாள் காதலாய். 

‘அவந்தி.. நீ வேறு நான் வேறாகிப் போனாலும் நீ சொன்ன மாதிரியே நான் இங்கே வந்துக் கொண்டிருக்கிறேன். ஏன்னா… என் காதல் இங்கே நான் புதைந்திருக்கிறது. நீயும் இங்கே வருவியா?!’ 

ஏதேதோ கேள்விகள், நினைவுகள்… அவனை அலை கழித்தன.

அவன் சென்ற பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவந்திகா வந்தாள். 

அதே இடத்தில் அமர்ந்தாள். 

மனசு எரிந்தது. வைராக்கியம் கூடியது. 

அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றமும், தோல்வியும் அவளை பட்டை தீட்டிக் கொண்டு இருக்கிறது. 

அத்தியாயம்-18

“மாலினி டைமாய்டுச்சு கிளம்பலாமா?” சேலையின் மடிப்பை சரிப்பண்ணியபடி அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டாள் அவந்திகா. 

“நானும் ரெடி.. லன்ச் பேகை கார்ல வச்சுட்டு வந்துடறேன்.” 

“சவுந்தர்யாவுக்கு லன்ச் குடுக்க மறக்கலியே….” 

“அதெல்லாம் இல்லே… குடுத்து அனுப்பிட்டேன். “

“சவுந்தர்யாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர வேற ஆட்டோவை ஏற்பாடு பண்ணாலும் இவன் சரியில்லே… துணி மூட்டையை அடுக்கி வச்ச மாதிரி ஏகப்பட்ட குழந்தைகளை ஏத்திக்கிட்டப் போறான். அதுவும் வேகமா ஓட்டிட்டுப் போறான்.” 

“நீ சொல்றது சரிதான் அவந்திகா. அட.. வாங்க. வாங்கண்ணா, வாங்கண்ணி, அவந்தி… சீக்கிரம் வா. யார் வந்திருக்காங்கன்னுயாரு…” 

அவந்திகா ஹேண்ட பேகை மாட்டிக் கொண்டு வெளியில் வத்தவள், “அண்ணா” என்றாள், உற்சாகமாக. 

பரமேஷ்வரும், கனிகாவும், நான்கு வயது அம்சவர்தனை கையில் பிடித்தபடி நின்றிருந்தனர். 

பரமேஷ்வர் தங்கையையே உற்றுப் பார்த்தான். முன்பிருந்த அவந்திகாவிற்கும், இப்போதிருந்த அவந்திகாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தது. 

புத்திசாலித்தனமும், தன்னம்பிக்கையும் மிளிர்ந்த முகம். சின்னதாய் பொட்டு, மெலிதான லிப்ஸ்டிக் தீற்றல், தளர்வாய் மின்னவிட்டு, ஜரிகை பார்டரிட்ட காட்டன் சேலை கட்டியிருந்தாள். 

இன்று அவந்திகா சாதாரண பெண் இல்லை. பன்னாட்டு வங்கியில் உயர் அதிகாரி. 

“வாங்கண்ணி…ஹாய்..குட்டிப்பையா…எப்படிருக்கே?”

“நல்லாருக்கேன் அத்தை!” 

“குட்..என்னண்ணா நின்னுக்கிட்டே இருக்கீங்க….உக்காருங்க…” 

“இல்லேம்மா…கனிகாவோட அத்தைக்கு உடம்பு  சரியில்லைன்னு பார்க்க வந்தோம். ரெண்ட தெரு தள்ளித்தான் வீடு. சரி, நீ ஆபிஸிக்கு கிளம்பறதுக்குள்ளே உன்னையும் பார்த்துட்டு போய்டலாம்னு தான் வந்தோம்” 

“அரக்க பரக்க கிளம்பறதுக்கு எதுக்கு வரணும்?” 

“கோவிச்சுக்காதே அவந்தி! நீயும் பிஸியா இருக்கோ தானே? சரி விடு.. இருக்கிற சில நிமிஷங்கள்லேயும் சண்டை போடணுமா? நீ எப்படிம்மா இருக்கே மாலினி?”

“நிம்மதியா இருக்கேண்ணா… இருங்க காபி எடுத்துட்டு வர்றேன்” 

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்மா.. கமிங் சண்டே காலைலேயே வந்துடறேன். முணு வேளையும் இங்கே நான் சாப்பிடறோம்….சரியா?” 

“ம்” என்று இருவருமே புன்னகைத்தனர். 

“அம்சவர்தன் ஒண்ணுமே போமாட்டேங்கிறான்…என்னாச்சுடா உனக்கு?” 

“இன்னைக்கு இங்கே அழைச்சிட்டு வந்துட்டதால ஸ்கூலுக்கு அனுப்பலே…. அந்த கோபம் மிஸ் திட்டுவாங்களாம்.” 

“அட்டா.. என் செல்லக்குட்டிக்கு படிப்பு மேல இவ்வளவு அக்கறையா? வெரிகுட் டாடிய அப்புறமா நான் அடிக்கறேன் சரியா?” 

“சரி… அத்தை” 

“கிளம்பறோம்மா… சண்டே வந்திடறோம்.” 

அதுவரை எதுவும் பேசாமலிந்த கனிகா அவந்திகாவின் அருகில் வந்தாள். 

அவள் கையைப் பற்றினாள். 

“உன்னைப் பார்க்க… பார்க்க இதயத்தை ரம்பத்தால அறுக்கிற மாதிரி இருக்கு அவந்திகா. என் அண்ணன் இறந்துப்போன வலி கூட மறந்துப் போச்சு, ஆனா, உன்னை இப்படிப் பார்க்கறப்ப தாங்கலே” கண்கள் துளிர்த்தன. 

“எனக்கென்ன அண்ணி… நான் நல்லாதானே இருக்கேன்.”

“படிப்பும், பணமும் தான் வாழ்க்கையா? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?”

பதில் கூறாமல் சிரித்தாள். 

“என்னாலதானே? மனக்கு கல்யாணம் நடக்கறதுக்கு மூல காரணமே நான் தானே? எதுக்கும் உதவாத காகித மலரா நான் இருக்…” 

சட்டென அவள் வாயைப் பொத்தினாள். 

“பிளீஸ்… உங்களை நீங்களே ஏன் குறைச்சுப் பேசறீங்க அண்ணி?அம்சுவர்தனை ஆர்பனேஜ்லேர்ந்து தத்தெடுத்து அன்பைக் கொட்டி வளர்க்கறீங்களே! இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்? எது நடக்கணுமோ அது நடந்தது. எது நடக்க வேண்டியதோ அது நடந்துட்டு இருக்கு…” 

“அப்ப… நாள் சொன்னது?”

“அதுக்கு என்கிட்ட பதில் இல்லே… கிளம்பலாம் நேரமாச்சு…”

அதற்கு மேல் அந்தப் பேச்சைத் தொடர விரும்பவில்லை.

கனிகா கணவனுடன் வாசல் நோக்கிச் சென்றாள். 


“வா.. கௌசிக்… சொன்னதெல்லாம் கொண்டு வந்தியா?” என்றார் பேங்க் மேனேஜர் வாசுதேவன்.

“கொண்டு வந்திருக்கேன் சார்… லோன் கிடைச்சிடுமா?”

“சொல்லி இருக்கேன். என்மேல தனி மரியாதை வச்சிருக்காங்க. தப்பான ஆளுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்னு நல்லாத் தெரியும். நீ தொடங்கப்போற பிஸினஸ் பத்திய டீடெய்ல் வச்சிருக்கே இல்லே?” 

“இருக்கு சார்!” என்றவனுக்குள் கொஞ்சம் உதைப்பாகதான் இருந்தது. 

மனதால் அடிபட்டு, அசிங்கப்பட்டு, பின் சொந்தமாய் தொழில் துவங்க முடிவெடுத்து வங்கியில் லோன் எதிர்பார்க்கிறான். உயர் அதிகாரி மனது வைத்தால் முடியும். அவனை அறிந்த மேனேஜர் உயர் அதிகாரியிடம் அவனைப் பற்றி சொல்லி வைத்திருந்தார். இவனிடமும் அவளைப் பற்றி கூறியிருந்தார். 

கண்டிப்பானவள், இளம் வயதிலேயே தன் திறமை மூலம் உயர் பதவியில் அமர்ந்தவள். திருமணமான ஒரே நாளில் விதவையானவள். 

மேலும் அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் கௌசிக் அழைக்கப்பட்டான். 

“கௌசிக் புறப்படு.. தேவைப்படற விஷயங்களை மட்டும் பேசு” என்றார் வாகதேவன். 

“ஓக்கே சார்… மேடம் காபின் எங்கே இருக்கு?” 

“மாடியிலே செகன்ட் ரூம், ஒரு நிமிஷம் இரு. மாலினி இங்கே வாம்மா… சாருக்கு மேடம் ரூமை காட்டு!” சொல்லிவிட்டு நகர்ந்தாள். 

சரிசதியில் இயங்கிக் கொண்டிருந்த அப்பெண் இவர்களை நோக்கி வர,கௌசிக் அதிர்ந்தான். 

‘இவளா? இவளெங்கே இங்கே?”

அவளும் இவனைப் பார்த்து விழிகளை அகல மலர்த்தினாள்.

“நீங்களா?” 

“நீங்களா?” 

அவளைப் பார்க்கவே மனம் சஞ்சலப்பட்டது. கேசவ் அவளை டைவர்ஸ் பண்ணிவிட்டு வேறொரு விதவைப் பெண்ணை மணந்து வசதியாய் சந்தோஷமாய் இருக்கிறான். குழந்தை சவுந்தர்யாவின் எதிர்காலத்திற்கு என ஒரு தொகையை தர கேசவ் முன் வந்த போது மாலினி புறக்கணித்து விட்டாள். 

“‘என் வாழ்க்கையை வித்து அதில் கிடைத்த பணம் என் மகளுக்கு வேண்டாம். அவளை வளர்க்க என் உடம்பிற்கு தெம்பிருக்கு” என்று மகளோடு போனவளை… இப்போது தான் பார்க்கிறான். 

“நீங்க இங்கே எப்படி மாலினி?” 

“மேடம் கொடுத்த வாழ்வு இது! அவங்கதான் மேற்கொண்டு என்னை படிக்க வச்சு… இங்கே.அட்டெண்டர் வேலையும் வாங்கிக் கொடுத்தாங்க. என் மகளையும் படிக்க வைக்கிறாங்க. இருக்க நிழலும் கொடுத்திருக்காங்க.” 

“ஓ…அவ்ளோ நல்லவங்களா இந்த மேடம்?” ஆச்சர்யமாய் கேட்டான். 

“என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? என்னை மட்டுமில்லே.. என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பல பேருக்கு இதே மாதிரி உதவிகள் செஞ்சுக்கிட்டிருக்காங்க…. நீங்க எப்படி இங்கே?” சொன்னான்.

“கண்டிப்பா கிடைக்கும் சார்… நம்பிக்கையோட போங்க…” 

“தாங்க்ஸ் மாலினி” 

“இதோ இந்த ரூம் தான்!” 

நிலைவாசல் முகப்பில், ஆனந்தி என்ற பெயரும் அவள் படித்து வாங்கிய பட்டங்களும், பொறுப்பு வகிக்கும் பதவியும் பொறிக்கப்பட்ட பித்தளை போர்டு பளிச் சென்றிருந்தது?.

கதவை விரலால் இருமுறை டொக்கினான். 

“யெஸ். கம்மின்.” 

கவுசிக் உள்ளே சென்றான். 

“யூ ஸெட் ரைட் நவ். பட், ஐ டோன்ட் பிலீங் திஸ். ஓக்கே… ஐ கால் யூ லேட்டர்” போனை வைத்து விட்டு ரோலிங் சேரில் திரும்பியவள் வந்தனை பார்த்து அதிர்ந்தான். 

கவுசிக் அவளை விட அதிகமாய் திடுக்கிட்டான். 

“கவுசிக்?”

“அவந்திகா!” 

ஆனந்தி என்ற உயர் அதிகாரியாய் அவந்திகாவை சந்திப்போம் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்களில்லை. 

இப்போது தான் நினைவிற்கு வந்தது. அவந்திகாவின் ஜாதகப் பெயர் ஆனந்தி! வீட்டில் செல்லமாய் அழைப்பது அவந்திகா. 

‘எல்லாம் சரி. இங்கே… இத்தனை பெரிய போஸ்ட்டில் இவள் எப்படி? சரளமான ஆங்கிலம். எல்லாவற்றிக்கும் மேலாக திருமணமான ஒரே நாளில் விதவை? அவந்திகாவிற்கா இப்படியொரு நிலைமை?’ 

“சிட் டவுன்!” 

“தாங்க்ஸ் அவந்தி…” 

“என்ன விஷயமாய்…” தன் கசப்புகளை மறைக்க வெகுவாய் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. 

“லோன் விஷயமாய்.. இதில் எல்லா டீடெய்லும் இருக்கிறது” என்று ஒரு பைலை நீட்டினான். 

“ஓ.. வாசுதேவன் சார் சொன்ன நபர் நீங்கதானா?”

அவர் கவுசிக்கின் பர்சனல் வைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்தார். 

அதெல்லாம் நினைவிற்கு வந்தபோது சிரிப்புதான் வந்தது.

“உன்னை இங்கே எதிர்பார்க்கவில்லை.” 

“ம்..நானுந்தான்!” 

“உன்னைப் பற்றி எந்த தகவலும் எனக்குத் தெரியாது. இங்கே கூட ஆனந்தி மேடம் ஒரே நாளில் விதலையானவங்கன்னு சொன்னப்ப அது நீயா இருப்பேன்னு நினைச்சிக்கூட பார்க்கலே… எப்படி. எப்படி அவந்தி?” 

“பிளீஸ்,.. எல்லாத்தையும் மறக்கணும்னு கஷ்டப்பட்டு, மறந்து, அதோட பயனா… இதோ இந்த சீட்ல உட்கார்ந்திருக்கேன். எதையும் கேட்டு டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். பார்த்து வந்த வேலையை விட்டுட்டு ஏன் பிஸினஸ் பண்ணனும் நினைக்கறிங்க?” 

“உனக்கு பண்ணின துரோகத்துக்கு நான் நிறைய அனுபவிச்சிட்டேன் அவந்தி. வாழ்க்கையை தப்பான கோணத்துல பார்த்ததால, இல்லேயில்லே… போதிக்கப்பட்டதால.. கல்யாண விஷயத்துல தப்பான முடிவெடுத்தேன், அதனால நான் ரொம்ப அசிங்கப்பட்டுட்டேன்…” என்றபடி சுருக்கமாய் தன் வாழ்க்கையைப் பற்றி க் கூறினான். 

அவனை பரிதாபமாய் பார்த்தான், “ஆனா, இப்ப என்னோட உறுத்தல் எல்லாம் உன் வாழ்க்கை என்னாலதானே இப்படியாச்சுங்கறதுதான்”. 

“இல்லை மிஸ்டர் கவுசிக். காதலால கிடைச்ச தோல்வியால நான் ஒண்ணும் மூலைல முடங்கி உட்கார்ந்துடலியே, என்னை ஒரு உயரத்துக்கு கொண்டு வந்து, நாலு பேருக்கு உதவுற கபாஸிட்டிய கொடுத்தது ஒரு வகையில் நீங்களும் ஒரு காரணம்.” 

“…?!”

“அதனால நான் உங்களுக்கு தாங்கஸ்தான் சொல்லணும்.”

“என் மேல் உனக்கு இன்னும் கோபமிருக்கு…” 

“இல்லேன்னு பொய் சொல்ல விரும்பலே. அதுக்காக பழசையெல்லாம் மனசுல வச்சு உங்க அப்ளிகேஷனை ரிஜக்ட் பண்ணிடுவேன்னு நினைச்சிடாதீங்க. எல்லாமே சரியாயிருக்கு. உங்க லோன் சாங்ஷன் ஆகிடும்.” 

“எனக்கு இப்ப அது பெரிசில்லே, நீ ஏன் மறு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது அவத்திகா?” 

சில கணங்கள்கண்மூடித் திறந்தவள் சிரித்தாள்.

“கல்யாணம்ங்கறது என்ன? சிறந்த தம்பதியா வாழணுங்கறதுக்காக உருவாக்கப்பட்ட சம்பிரதாயம் தானே? உலகத்திலேயே சிறந்த தம்பதி யார் தெரியுமா?” 

“…?!”

“சிரிப்பும், அழுகையும் கலந்த அந்த தருணம் தான், அப்படி ரெண்டுமே சந்திக்கறது அரிது. அப்படியொரு அழகான தருணத்தை எல்லா ஆண்களாலும் தந்துட முடியாது. ஆனா, அப்படியொரு தருணம் என் வாழ்க்கையிலேயும் வந்தது. 

வசதியான மனைவிக்காக காதலியை ஒதுக்கிய காதலுனும், காதலிக்காக மனைவியை விட்டு இறந்துப் போன கணவனும் என் கண்கள்ல அழகையை மட்டும் தான் பரிசா தந்தாங்க. ஆனா, கூடப்பிறந்த தங்கைக்காக வம்சத்தையே இழந்த அருமையான அண்ணனை பார்த்தவள் நான். இனி, புதிதாய் வேறு ஆணையும் என் வாழ்க்கையில் சந்திக்க விரும்ப வில்லை. ஒரு பெண்ணுக்கு திருமணத்தை விட படிப்பும். தன்னம்பிக்கையும் தான் ரொம்பு முக்கியம். அது என்னைக்கும் அவளை கைவிடாது. அம்போன்னு விட்டுட்டு ஓடியும் போகாது” 

துளிர்த்த கண்ணீருடன் அவளையே பார்த்த கவுசிக், “எல்லாருக்கும் ஒளி தர்ற தீபமா இருக்கே… ஆனா உன் வாழ்ககை.?” 

“தீபம்… அது உட்கார்ந்து இருக்கிற அடிப்புறத்திற்கு ஒளிதராது கவுசிக், மத்தவளுக்கு ஒளி தர்றவளா இருக்கேனேன்னு மனசுக்குள்ளே ஒரு நிம்மதி இருக்கு அது போகும்… ஓக்கே… உங்களுக்கு ஒதுக்கின நேரம் முடிஞ்சுப் போச்சு.. உங்க லோன் சாங்ஷன் ஆகிடும்…” 

“தாங்க்ஸ் அவந்தி..” என்று எழுந்தான். “கால் மி மேடம், ஆனந்தி மேடம்! உங்களைப் பொறுத்தவரை அவந்திகா செத்துப் போய்ட்டா… புறப்படுங்க” என்றாள் சலனமின்றி. 

இதயத்தில் கனத்தை சுமந்தபடி வெளியேறினான் கவுசிக். 

ஆனால், அவனின் முதுகை தவிப்புடன் பார்த்தாள் அவந்திகா. வாய் கூறும் அத்தனையும் இதயம் நினைப்பதில்லை. அவள் இதயத்தில் முளைத்த காதல் செடி பூக்க வில்லையே தவிர, அழியவில்லையே! 

கண்கள் தளும்பின. ஏனென்று தான் அவளுக்கேப் புரியவில்லை. வாழ்க்கை உணர்வுளால் நெய்யப்பட்ட உடை அல்லவா? 

(முற்றும்)

– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *