காதலால் அழிக்கப்பட்ட வைரஸ்





COVID-19 வைரஸான நான் என் வாழ்க்கையின் கடைசி சில மணி நேரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு மனித உடம்பில் நான் ஏறா விட்டால் என் சகாப்தம் முடிந்து விடும்.

நான் இப்போது சிக்கிக் கொண்டிருப்பது ஒரு அபார்ட்மெண்ட் அடித்தளத்தில் இருக்கும் லிஃப்டில். அதிலிருக்கும் புஷ் பட்டன் #12 இன் மேற்பரப்பில் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். மற்ற பட்டன்களில் இருந்த எனது நண்பர்கள் அனைவரும் ஒரு மனித சவாரி கிடைத்து உயிர் பிழைத்துக் கொண்டார்கள். ஆனால் எனக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் இல்லை. நாள் முழுவதும் யாருமே 12ம் நம்பர் பட்டனை அழுத்தவில்லை.
ஒரு இனிய சப்தத்துடன் லிஃப்டின் கதவு திறக்க, 12வது மாடியில் வசிக்கும் விஜய்குமார் தனது காதலியுடன் சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே நுழைகிறார். உயிர் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது ஆள்காட்டி விரலை என்னை நோக்கி கொண்டு வருகிறார். எனக்கும் அவர் விரலுக்கும் ஒரு சென்டிமீட்டர் இடைவெளி தான் இருக்கும். திடீரென்று அந்தரத்தில் நின்று விட்ட அவர் விரல் மெதுவே கீழிறங்கி பட்டன் #11ஐ அழுத்துகிறது. அடச் சே!
அப்போது தான் அவரது காதலி 11வது மாடியில் வசிக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
காதல் ஜோடிகளை நான் மிகுதியாக வெறுக்கிறேன்.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |