காக்கா… கடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 60 
 
 

அன்றைய தினத்தை அபிலாஷால் அவ்வளவு எளிதாய் மறந்து விட முடியாது. அவன் அம்மா அகிலாவின் அடாவடித்தனமா? இல்லை ஆழந்த அன்பின் வெளிப்பாடா தெரியவில்ல., வீட்டில் ஒரு பிரளயமே வெடித்து வீடு ரெண்டு பட்டுவிட்டது.

பீடிகை ஒன்றுமல்ல இது! ஒரு நல்ல பழக்கத்தைக் குழந்தைக்குள் விதைப்பது அவளது குறிக்கோள். குறிக்கோள் என்னவோ நல்லதுதான் அதை, விதைக்கச் செய்ய அவள் கையாண்ட விதம்தான் வேதனையை உண்டு பண்ணிவிட்டது.

அகிலாவுக்கு ஒரு ஆசை! அவள்தான் அபிலாஷின் அம்மாவாச்சே?! அந்த ஆசை ஒண்ணும் அபிலாசை கிடையாது. அது அன்பின் வெளிப்பாடுதான். ஸ்கூலில், எல்லாப்பிள்ளைகளும் தங்களுக்கான பொருட்களைத் தங்கள் சக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு பரவசப்படுகையில் அபிலாஷுக்கு மட்டும் அந்த குணம் ஏனோ ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போய்விட்டதே என்பது, பெரிய ஆதங்கமாய் அமைந்தது அவளுக்கு!.

அவள் அடிக்கடி அபிலாஷிடம் சொல்வாள்…

“அபிலாஷ்! இதோ பாரு உன் பிரண்ட்ஸெல்லாம் எப்படி எல்லாத்தையும் பிரண்ட்ஸோடு ‘ஷேர் பண்ணிக்கறாங்க?! உனக்கு மட்டும் ஏண்டா அந்த குணமே இல்லாம போய்விட்டது?!” இப்படி அடிக்கடித் திட்டுவாள் ஆனாலும், அபிலாஷ் அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்? பாவம் அது!

‘ஷேரிங்க்’ ஒரு நல்ல ஹாபிட்தான்… பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்.. பங்கித்தின்றால் பசியாறும்!!’ எல்லாம் எழுத்தில் சரி..!! இயல்பில்???

ஓருநாள், இந்த ஷேரிங்க் ஹாபிட்டை ஆழமாக விதைத்துவிடும் எண்ணத்தில் ஒன்றைச் செய்தாள் அகிலா.. அன்றைக்கு அபிலாஷுக்காக அவன் அப்பா கடையிலிருந்து இரண்டு ஸ்வீட்டுகளை வாங்கி வந்திருந்தார். ஒன்று, ஒரு ‘குளோப் ஜாமுன்’ அது, எதுக்குன்னா எங்கயோ ஒரு கல்யாண வீட்டுக்கு அவனையும் கூட்டிப் முன்போயிருக்கிறார்கள். அங்கே சாப்பிடுகையில் எல்லாருக்கும் குளோப்ஜாமுன் இருந்திருக்கிறது. இவன் வரிசை வரும்போது தீர்ந்துபோய்விட, கல்யாண வீட்டார் கைவிரித்து விட்டார்கள்!. அந்தத் தோல்வி, அவன் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதைப் பார்த்த அவன் அப்பா திரும்பி வரும் வழியிலேயே ‘ஏ..டூ..பி.’யில் ஒரு குளோப்ஜாமுன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். குழந்தை மனசொடைஞ்சுப் போயிடக் கூடாதேங்கற மனிதாபிமானம். அந்த ஸ்வீட்டோடு ரெண்டாவதாக, ஒரு ‘காஸ்டிலியான சாக்லேட்!’. இரண்டையும் அவன் முன் வைத்து, ‘உனக்கு எது வேணுமோ எடுத்துக்கோ!’ என்றதும்,. அவன் எல்லாப் பிள்ளைகளையும் போல சாக்லேட்டைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தான்.

அப்போ ஆரம்பமாச்சது பிரச்சனை!. அருகில் வந்து உட்கார்ந்த அகிலா… சும்மா இருக்காம “எல்லாருக்கும் ஷேர் பண்ணிச் சாப்பிடு”ன்னு போதனை செய்ய ஆரம்பித்தாள்!. Inculgatting good habit is good culture., ஆனால், அதை எங்கே வைத்து, எப்படிப் பதிய வைக்கிறோம் குழந்தியகள் மனதில், என்பதில்தான் கொஞ்சம் பெரியவர்கள் எச்சரிக்கையாய் இருக்கணும்!. Child psychologyனு ஒண்ணு இருக்கே?!

அபிலாஷ் ஆவர்வமாய் சாக்லெட் ராப்பரை உரித்து, நுனிப்பல்லால் கடிக்கையில் “ஷேர் பண்ணு அபிலேஷ்!”னாள் அகிலா! ஷேர் பண்ணுன்னு சொன்னது தப்பில்லை., அதற்கான, வழி முறைதான் தப்பு. ‘அம்மாவுக்குக் கொடுன்னு சொல்லி, டபக்குனு அதை அவள் அவன் கியிலிருந்து பிடிங்கிக் கடிக்கப் போக, அவன் அதிர்ந்து மறுத்து கையை இழுக்க , அவன் அழுது அரற்ற, ரெண்டுபேருக்கும் இல்லாமல் அந்த எச்சில் சாக்லெட் தரையில் விழுந்தது! அது ரெண்டு பேருக்கும் இல்லாம போனதுதான் மிச்சம்.

அகிலாவின் கணவன் சப்தம் போட்டார் அவளை,

“இத பாரு அகி… உன் எண்ணமெல்லாம் ரொம்ப சரி! ஆனால், ‘சைல்டு சைக்காலஜி’யை நீ சரியப் புரிஞ்ச்சுக்கணும்! மொதல்ல..! குழந்தைகளுக்குக் கட்டாயப் படுத்தி எதையும் வரவழைக்க முடியாது! தெரிஞ்சுக்கோ! அப்படிக் கட்டாயப்படுத்தினா, அது வராமலே கூடப் போயிடும்!

நல்லா யோசி!. இருந்த இரண்டு ஸ்வீட்டில் அவன் விரும்பித் தேர்வு செய்தது எதை??? ‘சாக்லேட்டை..!’ நீ, அவனிடம் அதை, உனக்கும் ஷேர் பண்ணுன்னு அவன் கிட்ட அதைக் கேட்டு வாங்கி இருக்கணும்! மாறா, டபக்குனு கைலயிருந்து பிடுங்கலாமா?! பிடுங்கினா.. அதுவே, அவன் மனசை பெரிசா பாதிச்சிடும். அது, மட்டுமில்ல, அது கீழ விழுந்ததும் இன்னும் குழந்தை மனசொடைஞ்சு போயிட்டான். நீ, அப்படிச் செஞ்சிருக்காம அம்மாவுக்கும் ‘ஒரு காக்கா கடி!’ கொடுன்னு தண்மையா கொஞ்சம் கனிவாக் கேட்டிருந்தா ஒருவேளை குழந்தை விரும்பிக் கொடுத்திருக்கும் இல்லையா? அதுதான் பங்கித்தின்னும் பண்பை விதைக்கும் முறை!

குழந்தைகளுக்கு மருந்து மாத்திரையை பொடிசெய்து தேனில் கலந்து கொடுப்பது மாதிரி. மாத்திரைதான் கொடுக்கறோம்., அதைக் தேனில் ஏன் கலக்கிறோம் யோசி.

எந்த நல்ல பழக்கமும் கட்டாயத்தில் வராது! கனிவில்தான் வரும்!” என்று அவர் உறுதியாய்ச் சொல்ல, நாமதான் தப்புப் பண்ணீட்டோம் போலிருக்கு.,? என்ற உறுத்தலுக்கு உள்ளானாள் அகிலா!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *