கவலை வேண்டாம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 198
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கவலைகள் பெரும்பாலும் மனோ கற்பனையால் உண்டாகிறதே தவிர வேறொன்றுமில்லை. இறகு மூட்டையைச் சுமக்கிறவன் ஈயமூட்டையைச் சுமக்கிறதாக நினைத்துக்கொள்கிறான். காரணமில்லாமல் கூனிக்குறுகுகிறான்.
ஒருவன் எதிர்காலத்தை நினைத்து நொந்து வெந்தபோது புத்திமான் ஒருவன் சொன்னான்; ‘எதிர் காலத்தில் என்ன நேரிடு.மோ வென்பது எனக்குத் தெரியாது; ஆனால் எதிர்காலத்து விவகாரங்களை நடத்துகிறவர் இன்னாரென்பது எனக்கு நன்றாகத் தெரியும்’, என்றான்.
மேரி என்ற ஒரு அம்மாள் அடிக்கடி ‘ஆண்டவரே என்னை க்கொள்ளும், வாழ்வதைவிடச் சாவது நல்லது’, என்று சொல்லுவாள். ஒரு நாள் அவள் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீ ரென்று சங்கார தூதன் தோன்றி ‘மேரி, புறப்படு போகலாம்’ என்றான். உடனே மேரி பயந்து நடுங்கி ‘மேரியின் வீடு இது அல்ல, அடுத்த தெருவிலிருக்கிறது.’ என்று கூறிப்படாரென்று கதவை அடைத்துத் தாளிட்டாளாம்.
சாகவும் பயம்; சஞ்சலத்தை விட்டு விலகவும் பயம், புத்தகத்தைக் கடனுக்கு வாங்குகிறவன் புத்தி விருத்தியடையலாம். பணத்தைக் கடனுக்கு வாங்கு கிறவன் கூட அதை மணமான காரியங்களில் உபயோகிக்கலாம். ஆனால் கவலையைக் கடனுக்கு வாங்குகிறவன் தனக்கே கேட்டை உண்டாக்குகிறான்.
ஏசபேல் எலியாவைக் கொன்றுவிடத் துரத்தினாள் அவன் தப்பியோடி ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு ‘போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்’, என்றான்.
ஆண்டவர் எலியாவுக்கு ஆகாரங் கொடுத்துத் தேற்றினார், அதன் பலத்தால் நாற்பது நாள் நடந்து ஒரு கெபியில்போய் ஒளிந்துகொண்டான். பெருங் காற்று, பூமியதிர்ச்சி, அக்கினி இவைகளுக்கெல்லாம் பின்பு மெல்லிய சத்தத்தில் ஆண்டவர் இருந்தார்.
ஒரு துன்மார்க்கப் பெண்ணால் எலியாவின் ஊழியம் முடிவடையாதபடி கடவுள் காத்துக் கொண்டார். நான் நலிந்து சாகட்டும் என்ற எலியாவுக்கு ‘நீ இன்னும் இரண்டுபேரை ராஜாக்களாக அபிஷேகம் பண்ணவேண்டுமே’ என்றார்.
“உங்கள் தட்டு முட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்” ஆதியாகமம் [45:20]
“நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன்” [கொரிந்தியர் 7:32]
திருமொழிகள்
தேனைப்போன்று தித்திப்பாகவும் இருந்து விடாதே. வேப்ப எண்ணெய் போன்று கசப்பாகவும் இருந்துவிடாதே! ஏனெனில் முன்னதைப் போலிருந் தால் எல்லோரும் உன்னை இனிக்க இனிக்கப் பேசி ஏமாற்றி விடுவார்கள். பின்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை வெறுத்து விடுவார்கள். ஆகை யால் பகுத்தறிவை உபயோகித்து விவேகமாய் நடந்து கொள்.
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
