கள்ளன் சிக்கினான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 123 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் அரசனுடைய அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று களவு போய் விட்டது. அரண்மனையில் ஐம்பது அறுபது வேலைக்காரர்கள் இருந்தனர். எல்லோரையும் நன்கு உசாவியும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இறுதியில் அமைச்சன் கள்ளனைப் பிடிக்க ஒரு சூழ்ச்சியைக் கண்டு பிடித்தான். மாலையில் எல்லா வேலைக்காரர்களையும் அழைத்தான். ஒரு முழ நீளம் உள்ள கழி ஒன்றை எல்லோருடைய கையி லும் கொடுத்து அவர்களைப் பார்த்து, “எல்லோ ரும் இக்கழியைக் காலையில் என்னிடம் கொண்டு வாருங்கள். மோதிரத்தைக் களவு செய்தவனு டைய கழி ஓரங்குலம் அதிகமாக வளரும்படி மந் திரஞ் செய்திருக்கிறேன்; காலையில் எல்லாக் கழி களையும் சரிபார்த்துக் கள்ளனைப் பிடித்து விடுகி றேன்” என்று சொன்னான். 

வேலைக்காரர்கள் எல்லோரும் கழியைப் பெற் றுக்கொண்டு சென்றார்கள். மோதிரத்தைக் களவு செய்தவனுக்கு மட்டும் உறக்கமே பிடிக்கவில்லை. மந்திர சக்தியினால் தடி வளர்ந்து காலையில் நம் மைப் பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது; இத்தொல்லையிலிருந்து தப்புவதற்கு ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டுமென்று இரவெல்லாம் எண்ண மிட்டுக் கொண்டிருந்தான். 

வைரமோதிரக்கள்ளன் மனத்தில் இரவே ஒரு சூழ்ச்சி தோன்றியது. காலையில் எழுந்தவுடன் வேறொன்றும் எண்ணாமல் தன்னுடைய கழியை எடுத்து ஓர் அங்குலத்தைக் குறைத்துவிட்டு அமைச்சனிடங் கொண்டு சென்றான். அமைச்சன் எல்லோருடைய கழியையும் வாங்கிச் சரிபார்த்துக் கொண்டே யிருந்தான். கள்ளன் கழியை அளந்து பார்த்தபோது ஓர் அங்குலம் குறைவாக இருந்தது. அமைச்சன் கள்ளனைப் பிடித்து நன்கு உதைக்கச் செய்தான். கள்ளன் உண்மையை ஒப்புக் கொண்டான். சரியான தண்டனை கிடைத்தது. 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *