கற்புக்கரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 197 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழும்பு மாநகர் – அப்பப்பா…! சொல்லவே முடியாது. மோட்டார் வண்டிகளும், பஸ் வண்டிகளும் றிக்சோ வண்டிகளும், பைசிக்கிள் வண்டிகளும் இடை வெளிவிடாது சங்கிலிக் கோர்வை போல் ஓடிக்கொண் டிருக்கும். வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீ ரென ஏதாவது ‘அக்சிடென்ற்’ ஏற்பட்டுவிட்டால் போதும் எல்லா வண்டிகளும் அந்தந்த இடத்திலேயே நின்றுவிடும். திரும்பவும் அ  ைவ” ஓடுவதென்றால் குறைந்தது அரை மணித்தியாலமாவது எடுக்கும். ‘அக்சிடென்ற்’ நடைபெற்றால் மாத்திரமல்ல, யாராவது ‘றோங்சையிற்’ரால் ஓடினாலும் இப்படித்தான் நிகழும். ஏன்?…….. சந்திகளிலே நிற்கும் பொலிஸ்காரர் ஏதா வது ஒரு வண்டியை நிறுத்திவிட்டாலும் இப்படித்தான் நிகழும்.

பிரயாணிகளின் நன்மையைக் கருதித்தான் அந்த நகரத்தின் எல்லாச் சந்திகளிலும் ‘ஓட்டமெற்றிக் லயிற்’ பொருத்தியிருக்கிறார்கள். பிரயாணிகள் ஒருவித ‘அக்சி டென்ருக்கும்’ பலியாகாமல் தங்கள் தங்கள் சையிற் ரால் போவதற்கு அந்த ‘ஓட்டமெற்றிக் லயிட்டுகள்’ பெரிதும் உதவி செய்கின்றன.

அந்த நகரத்திலே பஸ்ஸில் பிரயாணம் செய்வ தென்றாலும் நரகவேதனையாகத்தான் இருக்கும். அங்கே ஒவ்வொரு ‘கோல்ரிங் பிளேஸ்’சிலும் நூறு நூற்றியைம் பது பேராகுதல் ‘போலினிலே’ நின்றுகொண்டுதான் இருப்பார்கள். வேலைவிடும் நேரம்-அதாவது நாலு மணியென்றால்… அங்கே படும் நரகவேதனையைப் பற்றி ஒரு முறை லாவது அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

சுமார் நாலு மணியிருக்கும். மதியழகனும் அவனது மனைவி மான்குட்டியும் அந்த நகரத்தின் நடைபாதை யால் நடந்துகொண்டிருந்தனர். இளங்குடும்பம் என்றால் சொல்லவா வேண்டும்? அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் கதைத்துச் சிரித்துக் கொண்டு சென்றனர்.

அப்போது……..

“ஹலோ! மிஸ்ரர் மதியழகன், தியேட்டருக்குத் தானே? வருகிறீர்களா?”-மதியழகன் திடுக்கிட்டுத் திரும் பினான். தனது மனைவியுடன் தியேட்டருக்குச் சென்று கொண்டிருந்த சேக்ர்தான் கேட்டான்.

சேகர்தான் அவனது கொழும்புச் சினேகிதன். முதன் முதலில் மதியழகன் கொழும்புக்கு வந்தபோது சேகருடன் தான் தங்கினான். ஒரு வருடமாக ஒரே அறையில் இருவரும் காலத்தைக் கழித்தவர்கள். அன்று எதிர்பாராத விதமாகச் சினேகிதமானவர்கள் இன்றும் சினே னகிதர்களாகவே இருக்கிறார்கள்.

“இல்லை சேகர், நாங்கள் நடராசாவிலேயே போய் விடுகிறோம்.”

“ஏன்?”

“எனது மிஸ்ஸிஸ்சுக்கு இந்த இடமெல்லாம் காட்டவேணும்”

“ஓல்றையிற் நான் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே காரை ‘ஸ்ராட்’ பண்ணினான் சேகர். கார் காலி றோட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

“பார்த்தாயா என் சினேகிதனை?”

“பார்க்கவில்லையே!”

“பார்க்கவில்லையா?”

“ஏன்?”

“அவன் பெரியவன்”

“என்னத்திலை பெரியவர்’

“பல்கலைக் கழகத்திலே பேராசிரியராக இருக்கிறான். அவன்ரை மாடிவீட்டை அண்ணார்ந்து பார்த் தாலே தலை முறிந்துவிடும். அவன்ரை காரைப் பார்த்தனியே? என்ன சோக்கான கார். குணம் என்றால் ‘தங்கம்’ என்றுதான் சொல்லவேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களைக் காரில் வரச் சொல்லுவானா?”

“அப்படியானவர் ஏன் உந்தப் பெண்ணைக் கட்டினார்”

“அவனைப் பார்க்க முன்னமே பெண்ணைப் பாத்து விட்டியே? ஏன்? அந்தப் பெண்ணுக்கு என்ன குறை. முன் சீற்றிலேதானே கொண்டுபோகிறான்”

“பார்த்தால் கரிமூஞ்சி மாதிரிக் கிடக்குது”

“அவனுக்கு அழகான பெண்களைப் பிடிக்காது”

“ஏன்”

“அதைப்பற்றிச் சொல்வதென்றால் நீண்ட நேரமெடுக்கும்”

“பரவாயில்லைச் சொல்லுங்கத்தான்”

“அவன் அன்றொருநாள் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றினான். அப்போது அவனது உள்ளக்கோட்டைக்குள் அழகிய மாணவி ஒருத்தி புகுந்தாள். அவளை அவன் அடைய விரும்பினான். அதனால் அவன் பதவியே பறி போனது”…… என்று கதையை இழுத்துக்கொண்டே போனான் மதியழகன்.

பதவி பறிபோனது என்றதும் அவளுக்குத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பழைய சிந்தனைகள் சேகரின் காருக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தன.

***

சேகர் யாழ்ப்பாணத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறு வயதிலிருந்தே கல்வி கற்பதில் மிகுந்த ஆவலுடையவராய் விளங்கினார். அவரது திறமையைக் கண்ட பாடசாலை ஆசிரியர்கள் மேற் படிப்புவரை படிப்பிக்கும்படி அவரது தந்தையாரிடம் சொன்னார்கள். தந்தையார் தன்னுடைய கஷ்டத்தை எடுத்துச் சொன்னார்.

“என்ன கஷ்டப்பட்டும் உமது மகனைப் படிப்பித்தீ ரானால் பின்னடிக்குக் கஷ்டம் ஏற்படாது”

“என்ன மாஸ்ரர் செய்கிறது. எனக்கோ பொம் பிளைப்பிள்ளையளுன்ரை கஷ்டம் அதிகமாக இருக்குது. ஒன்று இரண்டெண்டாலும் பரவாயில்லை. ஐஞ்சு பொம்பிளைப் பிள்ளையளை வைச்சுக்கொண்டு என்ன செய்கிறது? அதுவும் இந்தக் காலத்திலை சீதணம் எண்டால் இருவத்தைஞ்சு முப்பதினாயிரமெண்டு கேக்கினம்”

“எப்படியெண்டா யென்ன உன்ரை மேனைப் படிப் பிச்சியெண்டா அவன் உளைச்சுக்குடுத்து விடுவான்”

“என்னவோ தெண்டிச்சுப் பாக்கிறம்” என்று கூறி விட்டுப் போன கந்தையர் இரண்டு மாதங்களின் பின் இறந்துவிட்டார்.

கந்தையா இறந்ததும் சேகரின் குடும்பம் இருந்த நிலையிலும் கீழ்நிலை அடைந்தது. சகரையும் ஐந்து பெண்பிள்ளைகளையும் வளர்க்கமுடியாது சேகரின் தாய் பொன்னம்மா கஷ்டப்பட்டாள்.

பிள்ளைகளை வளர்க்கவேண்டுமென்ற ஆசையால் சேகரின் தாய் அப்பம் சுட்டு விற்கும் தொழிலை ஆரம் பித்தாள். கடவுளின் கருணையினாலோ என்னவோ அவளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. அந்த வரு வாயைக் கொண்டு மகனை வளர்த்துப் படிப்பித்தாள்.

‘ஏழை’ என்ற மனதுடன் வளர்ந்த சேகர், கவன மாகப் படிக்கத் தொடங்கினான். இரவு பகலாகப் படித் தான். பரீட்சைகளில் முதலாவதாகத் திகழ்ந்தான். அவனின் திறமையைக் கண்ட ஊரவர்கள் அவனை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்க்கும்படி சொன்னார்கள்.

யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த சேகர், ஒரே முறையில் முதலாம் பிரிவில் பீ. ஏ. பரீட்சையில் சித்தி யடைந்தான். அவனின் அறிவுத் திறமையைக் கேள்வி யுற்ற கல்லூரி மனேச்சர்கள் அவனைப் பேராசிரியராய் வரும்படி அழைத்தனர். அவனுக்குப் பண்டத்தரிப்பு மகளிர் கலாசாலையில் பேராசிரியர் பதவி கிடைத்தது.

***

பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்ட சேகர், முதன் முதலாக அக்கலாசாலைக்குப் போனார். போன தும் அவருக்கு வரவேற்பு விழாவும் அறிமுக விழாவும் நடைபெற்றது. அந்த அறிமுகவிழா முடிந்ததும் சேகர் எஸ்.எஸ்.ஸி. வகுப்புக்குப் போனார். அங்கே போன தும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்ந்தனர். சேகருக்கு இதுதான் முதல்முறை என்ற தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அவர் அந்த வகுப்பு மாணவிகள் ஒவ்வொருவரையும் எழுப் பிப் பெயரைக் கேட்டார். மான்குட்டியின் முறை வந்ததும் மான்குட்டி எழும்பினாள்.

”உங்களுக்கு என்ன பெயர்?”

“…”

“ம் …… உங்களைத்தான் – உங்களுக்கு என்ன பெயர்?’

“மான்குட்டி”

”என்ன! மான்குட்டியா?”

‘ஆமா”

எல்லோரும் சிரித்தனர். மான்குட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது. ‘வெட்கம் மாத்திரமல்ல, ஆத்திரமும் வந்துவிட்டது. ஆத்திரத்தை அடக்கமுடியாது தவித் தாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் முத்துக் கள் பொல, பொலவென்று மார்பகங்களில் விழுந்து தெறித்தன்.

“மான்குட்டி! எவ்வளவு அழகான பெயர்”

“ம்…”

“உங்கள் அழகைக் கண்டுதான் உங்களுக்கு மான்குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உங்கள் விழிகள் மான்குட்டியையே வென்றுவிடும்”

“ஏன் என்னைப்பற்றிப் புகழுகிறீர்கள்”?

“புகழவில்லை. உண்மையைத்தான் சொல்லுகிறேன். பொய்யானால் உங்கள் சகோதரிகளைக் கேட்டுப்பாருங்கள்” என்று சேகர் கூறியதும், மற்றைய மாணவிகள் விழுந்து விழுந்து சிரிப்பதற்கும் கலாசாலை மணியடிப் பதற்கும் சரியாக இருந்தது.

***

மணியடித்ததும் சேகர் கலாசாலை ‘ஒவ்வீஸ்’சுக்குள் போய்விட்டார். மாணவிகள் எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்டனர். சிலர் மோட்டார் வண்டிகளிலும் வேறு சிலர் பஸ் வண்டிகளிலும் இன்னும் சிலர் நடந்தும் சென்றனர்.

‘மான்குட்டி’ பணக்காரக் குடும்பத்திலே பிறந்தவள். அவள் ஒவ்வொரு நாளும் மோட்டார் வண்டியிலேயே வருவாள். அவளது ரிலே உள்ள ஏழைப்பிள்ளைக ளும் அவள் வரும் மோட்டார் வண்டியிலேயே வரு வார்கள். அந்த மோட்டார் வண்டிக்கு ஏழை – பணக் காரர் தெரியவே தெரியாது. யார் மாதம் மாதம் காசு கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் அந்த மோட்டார் வண்டியிலே போகலாம்.

அந்த மோட்டார் வண்டியின் ‘றைவர்’ ஸ்ரீபதி மிகவும் நல்லவன். அவனை நம்பி அந்த ஊரவர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை எந்த இடத்துக்கும் விடுவார்கள். அவனும் அந்தப் பிள்ளைகள் எல்லோரை யும் தன் சொந்தச் சகோதரிகள் போலவே பாவித்து வந்தான்.

பாடசாலை மணியடித்ததும் மான்குட்டியும் சினே கிதிகளும் ஒன்றாகச் சேர்ந்து வந்து காரில் ஏறிக் கொண்டனர். கார் பறந்து சென்று கொண்டிருந்தது.

“என்னடி மான்குட்டி, எங்கண்டை பேராசிரியர் உன்னை வர்ணித்துக்கொண்டு போறார்?”

“…”

“அவளுந்தை அழகைத்தான் அவருக்குப் பிடிச் சுட்டுது. நாங்கள் என்ன, பெரிய அழகிகளே?”

“எடியே! மான்குட்டி உன்ரை அழகைப் பிரயோ கித்து அவரை மாத்திரம் ‘இவர்’ ஆக்கிப் போடதையடி

“என்ன சொல்லுறாய்! அவரை இவர் ஆக்கப் போறேனா? இதுதானா நீங்கள் படிக்கிற படிப்பு. அந்த மாஸ்ரர் என்னைப் பார்த்துச் சொன்னதை வைச்சுக் கொண்டு ஏதோ கதை அளக்கிறியள்!”

“ஏன் உன்னை, மாத்திரம் புளுகவேணும்?’

“அதுக்கு அவரைப் போய்க் கேளேன்”

“அவரை என்னடி கேக்கிறது? அவரை நீயே மயக்கிவிட்டாய்.” இப்படியே அவளது சினேகிதிகள் எல்லோரும் காருக்குள்ளே இருந்துகொண்டு கேலி செய்யத் தொடங்கினர். கேலியின் விளைவு அவளைச் சிந்திக்கீ வைத்தது.

***

மான்குட்டி பணக்காரக் குடும்பத்திலே பிறந்தாலும் பண்புள்ளவள். அவளுக்குக் காதல் என்பதே என்ன வென்று தெரியாது. அவள் ஒருவரையும் காதலித்ததே கிடையாது. அவ்வளவுக்கு அவள் கிணற்றுத் தவளை போலவே இருந்து வந்தாள்.

ஒரு நாள் –

வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சேகர் ஒவ்வொரு மாணவிகளதும் கட்டுரைகளை வாங்கித் திருத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரதும் கொப்பி யிலே திருத்தவேண்டிய இடங்களுக்குக் கீறு மாத்திரமே போட்டுவிடுவார். ஆனால், மான்குட்டியின் கொப்பி யிலே திருத்தவேண்டிய இடத்துக்குத் திருத்தியேவிடு வார். அவளிலே அவருக்கு அவ்வளவு அக்கறை. அன்றும் அவளது கொப்பியை வாங்கித் திருத்தினார்.

திருத்தம் செய்யும்போது அவளை அருகில் கூப்பிட்டுத் திருத்தம் செய்யும் முறைகளை விளக்கிக் காட்டினார். அவளைக் கூப்பிட்டதும் மாணவிகள் எல்லோரும் பேராசிரியரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

சேகர் அவளை அருகில் நிற்கவிட்டுத் திருத்திக் காட்டினார். அவளும், அவர் தனக்காகத்தான் பாடு படுகிறார் என்று நினைத்து அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

சேகர் ஒரு பேப்பரை எடுத்து அதில் “நான் உங் களைக் காதலிக்கிறேன். உங்களைக் கல்யாணம் செய்ய மனப்பூர்வமாக விரும்புகிறேன். உங்கள் அழகு என்னைக் கவர்ந்துவிட்டது. தயவு செய்து உங்கள் விருப்பத்தை எழுதுங்கள். நீங்கள் விரும்பாவிடில் நான் எழுதியதை மறந்து என்னைச் சகோதர ஆசிரி யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று எழுதி அவளது கொப்பிக்குள் வைத்துக் கொடுத்தார்; அவளுக்குக் கை கால்களெல்லாம் பயத்தினால் உதறத் தொடங்கின. மற்றவர்களுக்கும் தெரியப்போகிறதே என்று நினைத் துக் கொப்பியை மூடிவிட்டுத் தனது ஆசனத்தில் அமர்ந்தாள்.

சேகர் அவளது கொப்பிக்குள் வைத்துக் கொடுத்த கடிதத்தை மாணவிகள் கண்டும் காணாதது போல் பார்த்துக்கொண்டிருந்தனர். மான்குட்டி ஆசனத்தில் அமர்ந்ததும் மாணவிகள் கொப்பியைத் தரும்படி கேட்டனர். உடனே மான்குட்டிக்கு விளங்கிவிட்டது. எல்லோருக்கும் தெரியப்போகிறதே, தெரிந்தால் தன் னைத்தானே எல்லோரும் ஏசுவார்கள் என்று நினைத் துக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய்க் கலாசாலைத் தலைவியிடம் கொடுத்தாள்.

***

கலாசாலைத் தலைவியின் வேண்டுகோட்படி பேராசி ரியர் சேகர் ‘ஒவ்வீஸ்’சுக்குள் போனார். அவர் போகும் போது அவரது இருதயம் வேகமாகத் துடித்துக் கொண்டு இருந்தது.

“மாஸ்ரர்! நீங்கள் ஒரு நல்லவர் என்று நினைத்துத் தான் உங்களை இந்த மகளிர் கலாசாலைக்கு பேராசிரி யராக நியமித்தார்கள். ஆனால், நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள்.”

“ரீச்சர்! நான் என்ன துரோகம் செய்தேன்? உண்மையில் அவளை நான் மனப்பூர்வமாகக் காதலிக் கிறேன். அவள்தான் என் இதயக்கோட்டையுள் இடம் பெற்றுவிட்டாள். நான் எழுதிய கடிதத்தில் ஏதாவது பிழைகள் இருக்கின்றனவா?”

“நீங்கள் எழுதியது உங்களுக்குச் சரியாக இருக்க லாம். ஆனால் கலாசாலையிலே பேராசிரியராக இருந்து கொண்டு படிப்பிக்கும் மாணவியைக் காதலிப்பது தவறானது”

“சட்டம் அப்படி இருக்கிறதா?”

“சட்டம் இல்லாமல் இருக்கலாம். இப்படியான நடத்தையுள்ள ஒருவரைப் பேராசிரியராக வைத்திருப்பது எங்கள் கலாசாலைக்கே அவமானம்”

“அப்படியென்றால்………’

“இன்றோடு உங்கள் பதவியை நீக்குகிறேன்”

***

சேகரின் காதல் பேராசிரியர் பதவியையே நீக்கி விட்டது. சேகர் பதவியைத் துறந்ததும் அவருக்கு ஊரிலே இருக்க விருப்பமில்லை. உடனே கொழும்புக் குப் போனார். முன்பு வரும்படி அழைத்த கலாசாலைகள் எல்லாம் அவரின் நடத்தைக் குறைவைக் கேள்வி யுற்று வேண்டாமென வெறுத்தன.

சேகரின் விவேகத்தையும் அறிவின் திறமையையும் கேள்வியுற்ற கொழும்புக் கதீட்ரல் கலாசாலை முகாமை யாளர் அவரைப் பேராசிரியராக நியமித்தார். சேகர் அக்கலாசாலை மாணவரின் நன்மைக்காக ஓயாது சேவை செய்தார். அவரின் சேவையினால் மாணவர்கள் அதிக சித்தியைப் பெற்றுக் கலாசாலையின் புகழை நிலைநாட்டினர்.

சேகரின் புகழ் கொழும்பு முழுவதும் பரவியது. சேகருக்குக் கொழும்பிலே ரியூசன்’ அதிகமாகக் கிடைத்தது. அவர் பெறும் சம்பளத்திலும் பார்க்க இருமடங்கு சம்பளம் ரியூசன் சொல்லிக் கொடுப்பதில் கிடைத்தது.

சேகர் தனது விடாமுயற்சியால் அதிக பணத்தைச் சம்பாதித்து தனது சகோதரிகள் எல்லோரையும் ஒவ் வொருவராகக் கரை சேர்த்து வைத்தார்.

ஊரவர்கள் எல்லோரும் சேகரின் + சாதனையைப் போற்றிப் புகழ்ந்தனர். அவ்வூரவர்கள் எல்லோரும்’ சேகருக்குப் பெண் கொடுக்க முன் வந்தனர். சேக ருக்கு ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் என்று சீதணம் ஏறிக்கொண்டே போனது.

சேகரின் புகழ் ஏறிக்கொண்டு போய்ப் பல்கலைக் கழகப் பேராசிரியராக ஆக்கியது. சேகர் பல்கலைக்கழகப் பேராசிரியரானார்.

***

“மான்குட்டி! என்ன ஒரேயடியாக எதையோ சிந் தித்துக்கொண்டு வருகிறாய்?” என்று தியாகன் கேட்டதும் மான்குட்டி சிந்தனையில் இருந்து விடுபட்டாள். இருந்தும் அவர் யார்? என்பதை அறிந்துவிடவேண் டும் என்ற ஆசை. அவளது உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.

“அத்தான் ! அதோ! அந்தக் காரில் போகும் தங்கள் நண்பரின் பெயரென்ன?”

“ஓ! அதைச்சொல்ல மறந்து விட்டேனா ? அவன் பெயர் சேகர்.”

“என்ன! அவரா இவர்?” ஆச்சரியத்துடன் கேட்டாள் மான்குட்டி.

“உனக்கு அவனைத் தெரியுமா?”

“அத்தான்! அவரது பதவியை நீக்கிய பாவி நான்தானத்தான்.”

“அப்படியர்?”

“அப்படியானால், என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“கற்புக்கர்சி’ என்றுதான் நினைக்கிறேன்.”

– பங்குனி 1965, கலைவாணி.

– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.

நா.க.தங்கரத்தினம் சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *