கந்தப்பன் காளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 234 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஜல் ஜல்’ என்று சலங்கை சப்தம் கேட்டால், கந்தப்பனின் ஒற்றை மாட்டு வண்டி வருகிறது என்று உடனே சொல்லி விடலாம். 

கந்தப்பனுக்கு அவனது காளை மாட்டின் மீது உயிர் என்று சொல்லலாம். காளை மாட்டின் மீது அவனுக்கு அபரிமிதமான காதல் இருந்தது. தினம் காலையில் பலபலவெனப் பொழுது விடியும் சமயம் கந்தப்பன் வண்டியைப் பூட்டிக் கொண்டு பூந்தோட்டம் ஸ்டேஷனுக்குப் போய் விடுவான். 

அவனுக்கு அந்த ஒற்றை மாட்டு வண்டியால்தான் பிழைப்பு. போட்மெயில் ரயிலில் காலை ஏழு மணிக்கும், பாசஞ்சரில் ஆறு மணிக்கும் வந்து அந்த ஸ்டேஷனில் இறங்கும் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் தொழிலைத் தான் அவன் செய்தான் என்றாலும், அவனைப் போல கௌரவமாகத் தொழிலை நடத்துபவர் அந்த வட்டாரத்திலேயே இல்லை எனலாம். 

“வீரா! ட்ர்… ட்ரியோ” என்று கூறிவிட்டால் போது. கந்தப்பனின் அந்தப் பரிபாஷையைக் கேட்டுப் புரிந்து கொண்டது போல் ‘வீரன்’ பறப்பான். ‘ஜல் ஜல்’ என்னும் சதங்கை சப்தம், ‘கணீர் கணீர்’ என்று ஆடும் கழுத்திலுள்ள மணியோசை, ‘கடபுட’ என்று ஓடும் வண்டியோசைக்குத் தாளமிடுவது போலிருக்கும். 

அதுவும் புதுப்பட்டிக்குப் போகும் பாதையில் – பஞ்சாயத்துப் போர்டார் அப்பொழுதுதான் பெரிய மனது வைத்துப் போட்டிருந்த சாலையில் – வண்டி போகும்போது, இளஞ் சூரியனின் காலைக் கதிர்கள், அடர்ந்து இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்களின் இடுக்குகளின் வழியாய் மெல்லிய தங்க ரேகைகளைப் பரப்பிச் சூழ்நிலை இன்பத்தைக் கொடுக்கும்போது, யார்தான் கந்தப்பனின் வண்டியில் ஏறிச் சவாரி செய்யாமலிருப்பார்கள்? 

“பெரியகுளம் போகணும், என்ன கேக்கிறே?” என்று அவர்கள் கூலி பேச ஆரம்பித்தால், “சாமி! இந்த வாயில்லா ஜீவன், நான், என் பெண் ஜாதி வயிறு கழுவ என்ன தேவையோ அதைப் பார்த்து உங்க இஷ்டம் போல் கொடுங்க” என்று கூறிவிடுவான் கந்தப்பன். 


விளையாட்டுப் போலிருக்கிறது. அது நடந்து இன்றைக்கு நாலு அருஷங்களாகிவிட்டன. புஞ்சைப்பட்டியில் அந்த வருஷம் மஞ்சு நாட்டு நடக்கப் போகிறது என்ற பேச்சு ஒரு மாதத்துக்கு முன்னமேயே இங்கும் எழுந்துவிட்டது. 

இந்த வருஷம் மஞ்சு விரட்டுக்குக் கிராமத்துக் காளைகள் எல்லாம் நலந்து கொள்ளப் போவதாகப் பேச்சு இருந்தது. புதிதாக ஊருக்கு அந்திருந்த சிங்காரவேலு முதலியார் அப்பொழுதுதான் வாங்கியிருந்த நாளையைப் பற்றி பிரமாதமாகப் புகழ்ந்து பேசினார். அதுவும் ஓங்கோல் நாளை. கம்பீரமாக நாலரை அடி உயரமிருக்கும். அதன் இரு கொம்புகளும் வளர்ந்து கூர்மையாகச் சிறந்த தற்காப்பு ஆயுதமாகத் தொற்றமளித்தன. அடர்ந்த மயிருடைய வாலும், புஷ்டியான உடலும் பார்ப்போரைச் சிறிது நடுங்கும்படியே செய்தன. முதலியார் இதற்கு முன்பு மஞ்சு விரட்டைப் பார்த்ததில்லை. மகள் கண்ணம்மாவும் சிறிது நிலபுலன்களும்தான் அவருக்கு ஆஸ்தி. போன யுத்தம் ஆரம்பிக்கும் முன்னமேயே சிங்கப்பூரிலிருந்து சிறிதளவு சொத்துடன், தன் ஒரே மகள் தண்ணம்மாவுடன்கிளம்பி வந்தவர்அவர். ஊர்நாட்டாண்மைக்காரரிடம், “”அந்த முரட்டு மாட்டை எவராலும் பிடித்து அடக்க முடியாது; நிச்சயம். அப்படி யாராவது பிடித்துவிட்டால் அப்படிப்பட்டவன் பெரும் னாகத்தானிருக்க வேண்டும். அவனுக்கு அந்த மாட்டையே தந்து விடுகிறேன்” என்றார். 


தாரை, தப்பட்டைகள் முழங்க மாடுகள் தொழுவத்திலிருந்து அவிழ்ந்து விடப்பட்டன. 

உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த கந்தப்பன், அந்த மாட்டைப் பிடிக்கத் திட்டமிட்டான். அந்தக் காளை துள்ளிக் குதித்து சட்டென்று அடங்கும் சமயமாக அதன் வாலைப் போய் டக்கென்று பிடித்துக் கொண்டான். அது துள்ளிக் குதித்தது. சுற்றிச் சுற்றித் திரும்பியது. அதன் கண்களில் கோபக் கனல் பறந்தது. வேடிக்கை பார்க்க வந்த மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். திடீரென அதன் முதுகின் மேல் தாவிக் குதித்து அதன் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டு விட்டான். இதைக் காளை எ எதிர்பார்க்கவேயில்லை. சட்டென்று நின்றுவிட்டது. வாயில்லாவிடினும் அதற்கு அறிவு இல்லையா, என்ன? 

பூமாலை மேல் பூமாலை விழுந்தது கந்தப்பனுக்கு. சிங்காரவேலு இதற்கு முன்பு கந்தப்பனைக் கண்டதில்லை. காளையை வெற்றி வீரன் போல் கை பிடித்து வணக்கம் செய்த கந்தப்பனை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார். அவன் ஆகிருதியும், வீரமும், குணமும், அழகும் அவர் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. 

வெற்றியை மணந்த கந்தப்பனுக்குப் பேஷான காளை கிடைத்தது மல்லாமல், சிங்காரவேலு முதலியாரின் மகளும் கிடைத்தாள் என்று கூற வேண்டுமா? 


நாள்கள் ஓடிச் சென்றன. கண்ணம்மாளும் கந்தப்பனும் நடத்தும் இலட்சிய வாழ்க்கை ஊர் மக்களையே பெரிதும் கொண்டாடும்படித் செய்தது.சிங்காரவேலு முதலியார் திடீரென்று ஒருநாள் மாரடைப்பால் இறக்கவே, வீட்டின் பாரம் முழுவதும் கந்தப்பன் மேல் விழுந்தது. 

எந்தத் தொழிலும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒற்றை மாட்டு வண்டி செய்து, காளையைக் கட்டி ‘ஜாம் ஜாம்’ என்று ஓட்டுவதில்தான் அவன் மனம் ஈடுபட்டது. கந்தப்பனிடம் தோற்றுப் போன கால எஜமானனுக்கு அடங்கி ஒடுங்கி தன் பிரியம் முழுவதையும் அவனிடம் வைத்திருந்தது. தனக்குத் துணையாக இருக்கும் கண்ணம்மாளும், வாழ் வைக்கும் காளையும்தான் இரு கண்கள் என்று எல்லாரிடமும் பெருமையாகச் சொல்வான் கந்தப்பன். 

அந்த வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் சொல்லப் போனால் கொஞ்சம் காசுள்ளவருக்கெல்லாம் கந்தப்பன் காளை மீது கண். “கந்தா! காைைள பேஷான காளை. அது இருக்கிற இடத்தில் இருக்கணும். அதற்குச் சரியானபடி தீனி போடணும். உனக்குக் கட்டுமா பேசாமல் எனக்குக் கொடுத்து விடு” என்று எவ்வளவோ பேர் கேட்டார்கள். கந்தப்பனா விற்பான்? 

“எனக்கு உண்ண உணவிருக்கிறதோ இல்லையோ… வீரனுக்கு வைக்கோல் – தவிடு – பருத்திக் கொட்டை வாங்காத நாளே கிடையாதோ அதற்கு மிஞ்சித்தான் எனக்கு” என்று கூறுவான் கந்தப்பன். 

கந்தப்பனின் வீடு ஓலைக் கூரையானாலும் பெரிய வீடுதான் வைக்கோல் போருக்குப் பக்கத்தில் வீரன் கட்டப்பட்டிருந்தது திடீரென அன்று அடுப்புத் தீ, அருகிலிருந்த வைக்கோல் போரில் பிடித்துக்கொண்டது. இதைக்கவனியாது வேலை மும்முரத்திலிருந்தளர் கந்தப்பன் தம்பதி. சட்டெனக் கூரை முழுவது ஒரு கணத்தில் பரவிய தீயைக் கண்டு அலறிப் புடைத்து வெளியே ஓடிவந்தனர். கந்தப்பன் உடனே ‘வீரனை’ நினைத்துக் கொண்டான். ‘சடசட’வென வெடித்து எரியும் அத்தீயோசையிலும், ‘அம்மா’வென அலறும் அந்தக் காளையின் அபய ஒலி கந்தப்பனின் இதயத்தை உலுக்கியது. 

கந்தப்பன் தீயினுள் பாய்ந்தான். ‘கந்தப்பா… கந்தப்பா…’ என்று ஏகக் நக்குரல். குடிசையின் முற்றத்தில் ஏகப்புகை. கண்ணே தெரியவில்லை. நாடிக்கு விநாடி தீ அதிகமாகிக் கொண்டே வந்து விட்டது. கந்தப்பன் தளையின் இருப்பிடத்தைப் பிடித்து விட்டான். அப்பொழுதிருந்த வகத்தில் பலமாகத் தும்பை இழுத்தறுத்து, காளையையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான். 

வெளியே வந்து சுருண்டு விழுந்தவன்தான். காளையின் கொம்புகள் பரிந்து கொண்டிருந்தன. பல இடங்கள் வெந்து விட்டன; அதனால் சிற்க முடியவில்லை; கீழே சாய்ந்து விட்டது. 

இரு வண்டிகள் கந்தப்பனையும், காளையையும் சுமந்து, பக்கத்து னர் ஆஸ்பத்திரிக்குச் சென்றன. நினைவு வந்த பிறகு ‘வீரா… வீரா’ என்றே முனகிக் கொண்டிருந்தான் கந்தப்பன். 

தீக்காயங்கள் ஒருவிதமாகக் குணமாகிக் கந்தப்பன் பிழைத்துக் கொண்டான். வீரன் மட்டும் இறந்துவிட்டது. 

பிழைத்து எழுந்த கந்தப்பன், செய்தி கேட்டுச் சித்தம் கலங்கி விட்டான். காளை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று ஏதேதோ புலம்பினான். 

சில நாள்களில் காலை வேளையில் ஒற்றை மாட்டு வண்டியைத் நானே இழுத்துச் செல்லுவான். ‘வீரா… ட்ர்… டிரியோ…’ என்று சாட்டையால் தன்னையடித்துக் கொள்வான். 


இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரைப் பக்கத்திலே, உட்கார்ந்து கொண்டு கந்தப்பன் புதுப்பாட்டு ஒன்றைப் பாடுகிறான். அதுதான் அவன் இதயத்துக்கு இன்பத்தையளிக்கிறது போலும். 

‘மாலையோ மங்குதடா!
மருக்கொழுந்தும் வாடிடுமே 
சாலையோ தொலைவிலையே வீரா
சடுதியாய் எடு ஓட்டம்!’ 

– 1949

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *