வாசுகி நடேசன்

 

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் “சங்க இலக்கியங்களில் மருதத்திணையின் சமூக ஒழுக்க இலக்கிய நியமங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமது முது தத்துவமானிப் (M.Phil)பட்டத்தையும் கல்வியியல் துறையில் M.Ed பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

மருதத்திணை, உரைநடைத் தெளிவு(இவரது தந்தையுடன் இணைந்து எழுதியது) ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.

இவர் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இங்கு பணியாற்றியபோது நாடகங்கள் எழுதித்தயாரித்து மேடை ஏற்றியதுடன் கல்லுரி கலையேட்டின் தமிழ் பிரிவுக்கும் பொறுப்பாளராகக் கடைமையாற்றியுள்ளார்.இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் கலையேடுகளிலும் பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

இவர் திருமணத்தின் பின் இத்தாலி ஜெனோவா மானிலத்தில் வாழ்ந்து வருகிறார்.

ஈமெயில்: nadesanv020@gmail.com

கதைகள்: http://www.sirukathaigal.com/tag/வாசுகி-நடேசன்/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *