பொன் சுந்தரராசு

 

எழுத்தாளரைப் பற்றிய விவரங்கள்

தமிழ் நாட்டில் 1947ஆம் ஆண்டு பிறந்து சிங்கப்பூர் வந்த பொன். சுந்தரராசு, வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, பின்னர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியில் தமது படிப்பைத் தொடர்ந்தார். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, தமிழாசிரியர் பணியில் சேர்ந்து முதன்மை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே தொலைக் கல்வி வழி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். தற்போது தேசியக் கல்விக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

1973 முதல் சிறுகதைகள் எழுதி வரும் இவர் 30 வானொலி நாடகங்கள், 40 தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றையும் சுமார் 20க்கு மேற்பட்ட சிறுவர் கதைகளையும் நாடகங்களையும் வானொலிக்கு எழுதியுள்ளார்.

மிகுந்த சமூகப் பொறுப்போடும் இலக்கிய மேம்பாடு கருதியும் சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதிலும் தமிழ்மொழி, தமிழிலக்கியப் போட்டிகளுக்கு நடுவராய்ப் பொறுப்பு வகிப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்

மாணவர் மணி மன்றம், அம்புலி மாமா, பாலமித்ரா, மர்ம நாவல்கள், சமூக நாவல்கள், சரித்திர நாவல்கள் படித்ததன் தாக்கத்தால் நாடகத்தில் நடித்திருக்கிறார்.

அந்த அனுபவத்தின் வாயிலாக வேலைக்காரன் வேலாயுதம், எமதர்மராஜன் தர்பார் முதலிய நாடகங்களை எழுதி நண்பர்களை நடிக்க வைத்து மேடையேற்றியிருக்கிறார்.

சிறுகதை நாடகப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு வென்றுள்ளார்.

Esplanade எனப்படும் கடலோரக் கலையரங்கம், தனது 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் கலை, இலக்கியத் துறைக்குப் பங்காற்றியவர்களைத் தொகுத்து Tribute எனும் ஒரு சிறப்புக் கையேட்டை வெளியிட்டது. ஒரு கண்காட்சியும் நடத்திச் சிறப்புச் செய்தது.

அத்தொகுப்பில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

தொழில்
ஆசிரியர். அத்துடன், சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பகுதி நேர செய்தி வாசிப்பாளர்.

இலக்கியப் பணி

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் பங்களிப்பு அளித்துவரும் இவரின் கன்னியாக்கம் வேலைக்காரன் வேலாயுதன் எனும் தலைப்பில் 1963ல் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 40 சிறுகதைகளையும், 50 வானொலி, தொலைக்காட்சி நாடகங்களையும், 7 ஆய்வுக் கட்டுரைகளையும், 20 வானொலிச் சிறுவர் கதைகளையும் திருமுகன் எனும் புனைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் பல ஆக்கங்கள் வானொலி, தொலைக்காட்சிக்களில் ஒலி ஒளிபரப்பானதுடன், சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைளில் பிரசுரமாகியுமுள்ளன. மேலும் இவர் சிங்கப்பூர்த் தமிழ் மொழி – தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு ஆகிய அரங்குகளில் தமிழ் இலக்கியம், தமிழ்மொழி கற்றல் – கற்பித்தல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வகித்த பதவிகள்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அரசாங்கத்தின் மக்கள் கழக மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் வெளியிடும் தமிழாசிரியர் குரல் எனும் இதழின் (1992 – 1996) பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுதிவெளியிட்டுள்ள நூல்கள்:

  1. என்னதான் செய்வது , சிறுகதை – 1981
  2. புதிய அலைகள் – சிறுகதை – 1984
  3. பொன் சுந்தரராசுவின் சிறுகதைகள் – 2006 (முன் இரண்டு நூல்களின் தொகுப்பு -இரண்டாம் பதிப்பு)
  4. பொன் சுந்தரராசுவின் சிறுகதைகள் – 2011 (மூன்றாம் பதிப்பு)
  5. உதயத்தை நோக்கி – நாடகத் தொகுப்பு – 1990
  6. பொன் சுந்தரராசு படைப்புக்கள் – வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், பல்துறைக் கட்டுரைகளின் தொகுப்பு

பெற்றபரிசுகள் / விருதுகள்

  1.  ‘பாவேந்தர் விருது’ – சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் – 2016
  2. சிங்கப்பூர் முன்னோடிகள் விருது – Appreciation Award For Pioneers, MCCY – 2015
  3. ஊக்கமூட்டும் நல்லாசிரியர் விருது – சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் – 2013.
  4. ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ – சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் – 2013
  5. ஏ.என். மெய்தீன் விருது – சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் – 2013
  6. தமிழவேள் விருது – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – 2013
  7. கலைச் செம்மல் விருது – இந்தியக் கலைஞர் சங்கம்
  8. தொலைக்காட்சி நாடகப் போட்டியில் ‘ஒரே முறை’ எனும் நாடகத்திற்கான முதல் பரிசு (1970)
  9. என்னதான் செய்வது எனும் சிறுதைக்கான தமிழ்நேசனின் பவுன் பரிசு (1973)
  10. சிங்கப்பூரின் சிறுவர் சிறுகதைப் போட்டியில் வென்றது யார்? எனும் சிறுகதைக்கான முதல் பரிசு
  11. சிங்கப்பூரின் தேசியச் சிறுகதைப் போட்டியில் பிரிவு எனும் கதைக்கான இரண்டாம் பரிசு

அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:

  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – செயலவை உறுப்பினர் – 1977 – 1979 / 1983 – 1985
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – செயலாளர் – 1979 – 1983
  • சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் – துணைத் தலைவர், உதவித் தலைவர், செயலவை உறுப்பினர் – 1991 – 2013 1991 – 2013
  • சிண்டா துணைப்பாட நிலையம் – தலைமையாசிரியர் -2000 – 2010
  • மக்கள் கழகம் – மேலாண்மைக் குழு உறுப்பினர் – 1999 – 2002
  • உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் – தலைவர் – 2016 முதல் தலைமையாசிரியர் 2000 – 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *