கண்டுபுடி கண்டுபுடிடா… கண்ணாளா… கண்டபடி கண்டுபுடிடா!





அந்த பாஸஞ்சர் டிரெயின் மெதுவாக மிக மெதுவாக பிளாட்பாரத்தை அடைந்தது. அவன் மெல்ல மெல்ல நொண்டியபடியே அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியின் தனிப்பகுதியில் மெல்ல ஏற அவனுக்கு உதவினாள் உடன் வந்தவள். ஏற முடியாதபடி கால்களில் பாண்டேஜ் மாவுக்கட்டுகள் அவன் இரு கால்கள் சுற்றிலும் கட்டப்பட்டடிருந்தது.

எந்த பாத்ரூமில் வழுக்கி விழுந்தானோ தெரியவில்லை.. நொண்டி நொண்டு ஏறியவன் அமர்ந்தான். அடுத்த ரயில் நிறுத்தம் கொஞ்சம் பெரியது. அனேகமாக எதோ ஊர் ஜங்க்ஷன் போலிருந்தது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலர் வரிசையாக அந்த மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்குள் அவதி அவதியாய் ஏறுவதும் இறங்கும் போது சிரித்தபடியே சிலாகிப்பாய் இறங்குவதையும் பார்த்தார் அந்த அதிகாரி.
அடுத்த நிறுத்தத்தில் கட்டுப் போட்டவனோடு இறங்கினார். அவனை அந்தப் பெண்ணோடு அழைத்துக் கொண்டு ஸ்டேஷனிலிருக்கும் ரயில்வே காவல் நிலையம் கொண்டு போனார்.
மூவரும் உள்ளே நுழைந்ததும் அந்த நிலைய அதிகாரி என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்துப்பார்வையாலேயே கேட்க,
‘சார்! ரொம்பநாளா.. காலேஜ் பசஞ்சகளுக்கு கஞ்சா சப்ளை செய்வது யாருன்னு தேடிட்டிருந்தோமே இன்னைக்குக் கையும் களவுமா கண்டு பிடிச்சிட்டேன்.’ என்றார்.
‘என்ன சொல்றீங்க?’ என்று கேட்க. நிமிர்ந்து நோக்க….!
உடல்முழுக்க மாவுக் கட்டுப் போட்டிருந்தவன் பாண்டேஜை குனிந்து சரசரவென உரித்து உருவ, உதிர்ந்து விழுந்தன உடலில் கட்டுக்குள் பொதிந்து வைத்திருந்தகஞ்சா பொட்டலங்கள்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |