ஓநாய் உபதேசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 154 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓநாய்களுக்கும், நாய்களுக்கும் சண்டை ஆரம் பித்தது. நாய்களின் கூட்டத்தைப் பார்த்து, ஓநாய்கள் பயந்து போயின. ஓநாய்கள் எல்லாம் கூடி ஆலோசித்து ஒரு ஓநாயை வேவு பார்க்கும்படி அனுப்பினது. வேவு பார்த்துவிட்டு வந்த ஓநாய் மற்ற ஓநாய்களிடம் சொன்னது-

‘நாய்கள் மிகவும் ஏராளம். சத்தம் போட்டுக் குலைக்கிறதே தவிர கடிக்கிறதேயில்லை. “குலைக்கிற நாய் கடிக்காது” என்பது பழமொழி. நாய்கள் ஒன்றுக் கொன்று ‘வள், வள்’ என்று குலைத்துக்கொள்ளுகிறது. வரிசையாய் நிற்கிற நாய்கள் ஒன்றையொன்று பக்கத் தில் நிற்கிற நாயைப் பார்த்து உருமிக் குலைக்கிறது.

நாய்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை. ஒன்றோ டொன்று எதிர்த்துச் சண்டை போடுகிறமாதிரி உறுமி உறுமிக் குலைக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. நாய் கள் ஒன்றையொன்று பகைக்கின்றன. எனவே நாம் நாய்களுக்குப் பயப்படவேண்டியதில்லை’ என்று வேவு பார்த்துவிட்டு வந்த ஓநாய் சொல்லவே, நாய்களோடு சண்டையிட்டு வெற்றியடைந்தன.

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.

“இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது” [சங்கீதம் 133:1]

“பிரிவினைகளில்லாமல் ஏக மனதுள்ளவர்களாய் இருக்க வேண்டும்” [கொரித்தியர் 1:10]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *