ஒரு தவறு செய்தால்
 கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்
 கதைத்தொகுப்பு: 
                                    கிரைம் 
 கதைப்பதிவு: December 29, 2024
 பார்வையிட்டோர்: 24,435  
                                    விக்னேஷிடம் நான் வேலைக்கு போறேன் என கூறிவிட்டு செல்கிறாள் மேகா. விக்னேஷ் ஜிம்மில் கோச்சாக சேர்ந்து உள்ளான், அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவன் வீட்டு வேலையை செய்ய ஆரம்பித்தான். மேகா வேலையை முடித்து வீடு திரும்புவதற்குள் சமைத்து விட்டான். மேகா வந்ததும் இருவரும் சாப்பிட்டனர். தம்பி மேல் நிறைய பாசம் அவளுக்கு தூங்கும்பொழுது அவனது தலையை தடவிக் கொடுத்துவிட்டு தூங்கச் செல்கிறாள். இப்படியாக இனிமையாக நாட்கள் நகர போன் கால் மேகாக்கு வருகிறது. விக்னேஷ் தற்கொலை பண்ணிக்கிட்டான் நீ வீட்டுக்கு வா என பக்கத்து வீட்டு அக்கா தகவல் கொடுக்க துடித்து விட்டாள் மேகா.

விக்னேஷின் சடலத்தை பார்த்து கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறாள் மேகா. ஏன் செத்தான் எதுக்கு செத்தான் என அவளுக்கு தெரியவில்லை. போலீஸ் வந்து மேகாவிடம் விசாரிக்கின்றனர். சார் எனக்கு எதுவும் தெரியாது ஜிம்க்கு ரெடி ஆகி சந்தோசமாதான் போனான். இப்போ இப்படி இருக்கான். அந்த ஜிம்ல போய் விசாரிங்க சார் என சொல்ல, ஆனாலும் எனக்கு உங்கமேல தான் சந்தேகமா இருக்கு என போலீஸ்காரர் சொல்ல அக்கம் பக்கம் இருக்கவங்க சார் கேஸ இவ பக்கம் திருப்பமா கொஞ்சம் உண்மைய கண்டுபுடிங்க என சொல்ல அவர் அங்கிருந்து கோவமா செல்கிறார். துணை ஆய்வாளர் சத்யா சொல்கிறான் சார் இதுக்கு பின்னாடி வேற எதோ விஷயம் இருக்கும் போல சார் அவங்கள பாத்த கொலை பண்றவங்க மாதிரிலாம் தெரியல சார் என கூறுகிறான்.
நீ பேசாம இரு இந்த கேஸ நான் முடிக்குறேன். நீ வண்டில ஏறு என இன்ஸ்பெக்டர் வண்டிய எடுக்க சொல்ல, சத்யாக்கு சந்தேகம் இன்ஸ்பெக்டர் மணி மேல ஏற்படுகிறது. சத்யா மேல் அதிகாரியான விக்ரமிடம் விஷயத்தை தெரிவிக்க நீ ரகசியமா மணிய கண்காணி கையும் களவுமா பிடிக்கலாம். அதேநேரம் புகார் குடுக்க மேகா ஸ்டேஷனக்கு வருகிறாள் . சத்யா தெளிவா எழுதி புகாரை பதிவு பண்ணிட்டான். ஜிம்க்கு விசாரிக்க சத்யா விக்ரம் ரெண்டு பேரும் போறாங்க. என்ன நடந்துச்சுன்னு அங்க சேர்ந்து இருக்கும் நபர்களை விசாரிக்க சார் அவரு எங்களோட கோச் நாங்களாம் போனதுக்கு அப்பறம் தான் அவரு போவாரு இந்த ஜிம் ஓட ஓனர் அப்பறம் விக்னேஷ் ரெண்டு பேரும் தான் இருப்பாங்க. ஓனர் யாரு அவருதான் என ராமசந்திரன் என பெயர் பலகை உள்ள அறையை காட்ட இருவரும் செல்கின்றனர்.
சார் அவனுக்கு வேலை காலை ஆறு மணியில் இருந்து ஒன்பது மணி வரைக்கும் சாயங்காலம் ஆறு மணியில் இருந்து பத்து மணி வரைக்கும் தான். காலையில் ஆறு மணிக்கு அன்னைக்கு வேலைக்கு வந்தான். கொஞ்சம் மனசு சரியில்லாத மாறி தான் இருந்தான். என்ன நினைச்சான்னு தெரியல டாய்லெட் போனவன் அங்க இருந்த கண்ணாடில முட்டி அங்க இருந்த தீ அணைப்பானை எடுத்து தலையில அடுத்து கொண்டான். அது எப்படி உங்களுக்கு தெரியும், நான் தான் சார் சடலத்தை பாத்து போலீஸ்க்கு தகவல் கொடுத்தேன். சரி எத்தனை மணிக்கு போனான், சார் அதை தெளிவா அன்னைக்கே சொல்லிட்டேனே, இன்னைக்கும் சொல்லலாம் தப்பு இல்ல சொல்லுங்க என விக்ரம் சொல்கிறான்.
ஒன்பதே கால் இருக்கும் சார் அவனுக்கு ஒன்பது மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று சொன்னிர்கள் கால்மணி நேரம் என்ன செய்தான். பசங்க யூஸ் பண்ண அந்த பொருள்களை சரியா எடுத்து வச்சுட்டு போகணும் அதே மாறி அன்னைக்கும் எடுத்து வச்சுட்டு இருந்தான்.
அப்பறம் என்ன நினைச்சானோ தெரியல சார் இப்படி பண்ணிக்கிட்டான். நீங்க வாட்ச்மேன் கிட்ட கூட கேட்டு பாருங்க என சொல்ல அவனும் அதையே ஒப்பிக்கிறான். விக்ரமக்கு சந்தேகம் அதிகமாக ஆனது எங்களை கேட்காமல் ஊரை விட்டு போக கூடாது, என சொல்லிவிட்டு புறப்படுகின்றனர்.
சார் இதலாம் நம்புறமாறியா இருக்கு என சத்யா கேக்க இல்ல தான் என்ன பண்ண நமக்கு ஆதாரம் வேணுமே என சொல்லிட்டு நீ மணிய கண்காணிக்கிறத தொடர்ந்து செய் என சொல்லிட்டு ஸ்டேஷனை அடைந்தனர். மேகா என்ன ஆச்சு சார் எதாவது தெரிஞ்சதா என கேட்டாள். மேடம் நீங்க இங்கலாம் வராதீங்க உங்க மேல கேஸ் எப்படி போடலாம்ன்னு காரணம் தேடுறான் நீங்களா வந்து மாட்டிகாம வீட்டுல இருங்க நாங்கள் விசாரணை செய்துகொண்டு இருக்கிறோம். கண்டிப்பா உங்களுக்கு உண்மை தெரியவரும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க என விக்ரம் சொல்ல மேகாவும் அமைதியாக செல்கிறாள்.
அன்று இரவு மணி தனது பைக்கை எடுத்துக்கொண்டு எங்கோ செல்கிறான் அவனை தொடர்ந்து சத்யாவும் செல்கிறான். விக்ரமிற்கு தகவல் கொடுத்துவிட்டான். விக்ரமும் அவ்விடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறான். மணி யாருக்கோ காத்திருக்கிறான், சத்யாவும் அதை போனில் வீடியோ எடுக்கிறான். யாரிடமோ பணம் வாங்குகிறான். யார் என பார்த்தால் ஜிம் ஓனர் விக்ரமும் அங்கு வர வசமாக இருவரும் மாட்டிக்கொள்கின்றனர்.
ஸ்டேஷனக்கு அழைத்து சென்று ராமசந்திரனிடம் விசாரணை செய்கிறான் விக்ரம். பெண்கள் உடை மாற்றும் அறையில் கண்காணிப்பு கேமரா வைத்து அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதார்தமாக அங்கு வந்த விக்னேஷ் அதை பார்த்து விட்டான். எவ்வளோ தடுத்தும் என் பேச்சை கேக்காமல் போலீஸில் சொல்கிறேன் என்றான். வேறுவழியின்றி நான் தான் கொலை செய்தேன் அதை மறைக்க மணி சாரும் பத்து இலட்சம் கேட்டார். ஐந்து லட்சம் முன்பே கொடுத்துவிட்டேன் மீதி பணத்தை கொடுக்க வரும் பொழுது உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்கிறான். கோர்ட்டில் நிறுத்த ராமசந்திரனின் ஜிம் சீல் வைக்க படுகிறது. மணியின் வேலை பறிக்கபடுகிறது. இருவருக்கும் தண்டனை கிடைத்தது. மேகா கண்ணீருடன் இருவருக்கும் நன்றி சொல்கிறாள்….