ஒரு சொட்டுக் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 1,436 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாடசாலை ஆரம்ப மணி அடித்தோய்ந்தது. ஆசி ரியர் கந்தசாமி வியர்க்க விறுவிறுக்க நடந்துவந்து வகுப்பினுள்ளே நுழைந்தார். “ஏ, எங்கே சுற்றித்திரி கிறீர்கள்? மணி அடித்தது காதில் விழவில்லையா?” என்று அவர் போட்ட சத்தம் அங்குமிங்கும் சித றுண்டு திரிந்த பையர்கள் காதில் இடியோசையாக வந்துவிழ, அவர்களின் கும்மாளம்மெல்ல அடங்கி யது. அடுத்த நிமிடம் ஆளாளாய் ஓடிவந்து “சித் திரப்பாவையின் அத்தகவடங்கி’ வகுப்பிலே உட்கார்ந்து கொண்டார்கள். 

“எங்கே, பத்தாம் வாய்பாடு, பாடமாக்கச் சொன்னேனே, பாடமாக்கியவர்கள் கை உயர்த்துங்கள்!” 

“உம்………..” 

ஒரு கைகூட எழும்பவில்லை. ‘பாடமாக்குங்கள். பாடமாக்கிச் சொல்லாமல் இன்றைக்கு விடமாட்டேன்” என்ற கட்டளையைப் போட்டுவிட்டுக் கந்தசாமி, ஒரு முறை நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘மூ ஒன்று மூன்று மூவிரண்டு ஆறு’ – மூன்றாம்வாய்பாட்டினை நீட்டி முழக்கி அசைபோட்டுப் படிக்க ஆரம்பித்தனர் மாணவர். கந்தசாமி தனது உப்புச்சப்பற்ற வாழ்க்கைப் போக்கின் விசித்திரத் தன்மைகளை எண்ணிப் பார்ப் பதில் தன்னை மறந்து, தானிருக்கும் சூழ்நிலையை மறந்து சொக்கிப்போய்க் கிடந்தார். 

கந்தசாமி இப்பொழுது தனது ஆசிரியசேவைக் காலத்தில் பத்து ஆண்டுகளைக் கழித்து விட்டார். ஆனால், இந்தப்பத்து ஆண்டுகளில் அவரடைந்த அனு பவங்களோ மிகப்பல. வாழ்வின் இன்பதுன்பங்களை யெல்லாம் பெருமளவுக்கு அவர் அனுபவித்துவிட்டார். இப்பொழுது வாழ்க்கை அவருக்கு ஒருமாதிரி இருந் தது. வேதாந்திகள் சொல்கிற ‘தாமரையிலை மேல் தண்ணீர்போல’ வாழ்கிற தன்மைக்குக் கந்தசாமி இப் பொழுது ஆளாகிவிட்டார். காலை எழுந்ததும் அவச ரமவசரமாகக்காரியாதிகளை முடித்துக்கொள்வார். ஏதோ கிடைத்ததை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு வசு நிலையத்தை நோக்கிஓடுவார். அப்பப்பா,என்ன வேதனை அங்கே? கந்தசாமியின் அவசரத்திற்கேற்கவா அங்கே வசு விடுகிறார்கள்? ஒன்று, இரண்டு, மூன்று வசுக் களில் அவருக்கு இடம் கிடையாது. 

புத்தகமேட்டினை அணைத்தபடி ஒயிலாக நடந்து வந்து வசுவுக்குக் காத்துக்கொண்டிருக்கும் வனிதா மணிகளைக் கண்டால் மாத்திரம் ஏனோ இந்த வசு அனுப்புபவர்களுக்கு இதயம் பாகாக உருகிவிடுகிறது! ஆனால், கந்தசாமியைப் பொறுத்தவரையில் அவர்கள் இதயந்தான் இரும்பாகக் கெட்டிபட்டுப் போய்விடு கிறதே! ஏதோ ஒருவகையாக இந்தச் சங்கடங்களுக் கெல்லாம் தவறிக் கந்தசாமி வசு வண்டியிலேறிவிட் டாரென்றால் பின்னர் அவரை எந்தப் பிரம்மாவும் அசைக்கமுடியாது! 

“வாத்தியாரே, எனக்கு எல்லாம் பாடமாகிவிட்டது!” 

கந்தசாமி கனவு நிலையிலிருந்து திடுக்கிட்டு விழித்தார். 

“ஓ! எல்லாரும் பன்னிரண்டாம் வாய்ப்பாட்டைப் பாடமாக்குங்கள்!” தொடர்ந்து அவர் எண்ணக்கட லில் மூழ்கினார். 

பத்து வருடங்களுக்குமுன்னே…… கந்தசாமி அப் பொழுதுதான் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலிருந்து வெளியேறியிருந்தார். அவர் மனதில் எழுந்த கற்ப னைக் கோட்டைகளுக்கோ ஓரளவில்லை. சாகாத சிரஞ் சீவித் தன்மைபெற்று அவை நனவுலகிற் காட்சியளிக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். இரண்டு வரு டங்கள் இந்தக் கற்பனை இன்பத்திலேயே வேகமா கக் கழிந்தன. 

மூன்றாவது வருடத்திலே கந்தசாமிக்குத் திருமணம் நிகழ்ந்தது. பருவதம் கத்தசாமியின் தரும பத்தினி யாக வாய்த்தபோது கந்தசாமி தான் கண்ட கனவெல்லாம் நனவாகிவிட்டதென இதயப் பூரிப்படைந் தார். ஆனால் என்ன ஏமாற்றம். மேட்டு நிலத்திலும் ஒரு காலத்தில் வெள்ளம் வரத்தான்செய்கிறது. ஆனால் அங்கே வெள்ளம் நிலைத்து நெடுங்காலம் நின்று கொண்டிருப்பதில்லை. கந்தசாமியின் வாழ்வும் இந்த நிலையைத்தான் பிரதிபலித்தது. ஆசையும் நேசமும் நிறைத்து அவர் வாழ்விலே இன்பமழை சொரிந்த பருவதம் தாலிகட்டிய ஆறாம் மாதத்திலேயே கந்தசா மியைத் தனியனாக விட்டுப் போய்விட்டாள். ஒண்டிக் கட்டையான கந்தசாமிக்கு இந்த உலகத் திலேயே ஒருவகையான விரக்தி ஏற்பட்டுவிட்டது. அவரைப் பெற்றுவளர்த்துப் பெரியவனாக்கிய விதவைத் தாயும் கந்தசாமிக்குக் கலியாணமான இரண் டாம் மாதத்திலேயே எவருக்கும் சொல்லிக்கொள்ளா மல் திடீரென்று எமனுலகுக்குப் பிரசாவுரிமை பெற்றுக் கொண்டாள். இதனால் இப்போது கந்தசாமி ஒரு தனி மனிதர். ஊரெல்லாம் என் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியல், சமூகசேவைத்தத்து வார்த்தம் பேசிக்கொண்டு பிறர் புகழைப் பங்குபோடு வதிலோ, பெரிய மனிதனாக நடிப்பதிலோ கந்தசா மிக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. அதனால் அவர் இந்த உலகிலே தனக்கென ஒருவருமில்லாத தனியராகிவிட் டார். தானுண்டு, தன்பாடுண்டு என்று சீவிக்கத் தொடங்கினார். வாழ்க்கை அவருக்கு முடியாத ஒரு பிரயாணமாக, தீராத ஒருகவலையாகப்பட்டது.

”வாத்தியாரே, நான் உமாவாசகத்திற்குக் காசு தந்தேனே, வாங்கிக் கொண்டு வந்தீர்களா?” 

“உம்… நாளைக்குக் கேள்!’ 

உமாவாசகம் கேட்ட சிறுபெண் பின்னர் ஒன்றும் பேசவில்லை. ஒன்று, இரண்டு எனப்பாடங்கள் முடிவதை அறிவித்துக்கொண்டு மணி ஒலித்துக்கொண்டிருந்தது…

நேரம் இரண்டு மணி. பாடசாலை விடும் மணி யும் அடித்துவிட்டது. கந்தசாமி கதிரையில் கிடந்த தனது அங்கவஸ்திரத்தை எடுத்து உதறித் தோளிற் போட்டுக்கொண்டார். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டார். தேய்ந்து, தேய்ந்து இற்றுப்போய்க் கந் தலான செருப்பைக் காலிற் கொழுவிக்கொண்டார். கந்தசாமி இப்பொழுது பாடசாலையிலிருந்து வசு வைப் பிடிக்க நடந்துகொண்டிருக்கிறார். அவர் மனம் அலுத்துவிட்டது. ஒருநாளா, இரண்டுநாளா இந்தப் பாடு? காலை எழுந்ததும் அவசரமாக வசுவைப் பிடிக்க வேண்டும். வசுவை விட்டிறங்கியதும் பின் ஒரு மைல் தூரம் நடக்கவேண்டும். பின்னேரமும் இதே நிகழ்ச்சிதான். ஒரு தமிழ் ஆசிரியனாக இருப்பதற் காகவா இந்தப்பாடு! 

என்ன அநியாயம்! இந்த வசுவண்டிக்குத்தான் மூளையில்லையென்றால் அதை ஓட்டுகிற ‘சாரதி’ களுக்குமா மூளையில்லாமற் போய்விட்டது? பத்து யார் தூரமிருக்காது கந்தசாமி வசுவைப்பிடிக்க. பாவி சாரதி விட்டுவிட்டுப் போய்விட்டானே! கந்தசாமியின் உள்ளம் உலையாய்க் கனன்றது. பசி குடலைப் பிடுங் கியது. சுற்றுமுற்றும் பார்த்தார். அடுத்த வசு வர இன்னும் முக்கால் மணி நேரம் செல்லுமே! 

பசி அகோரத்திலே உலகமே இருண்டுவிட்டதாகப் பட்டது அவர் கண்களுக்கு. எதிரே இருந்த தேநீர்க் கடைக்குள் புகுந்தார். கடைக்காரன் இலையைப் போட் டுச் சாதம் பரிமாறினான். கந்தசாமி ஒருபிடி சோற்றை எடுத்து ‘அவுக்’ கென்று விழுங்கினார். கண்கள் பிதுங்கின. அவர் கழுத்தை யாரோ பிடித்து நெரிப்பது போன்ற வேதனை உணர்ச்சி, பக்கத்திலிருந்த பாத்திரத்தை எடுத்துத் தண்ணீரைத் தொண்டைக்குழிக்குள் விட்டு நனைத்துக்கொண்டார். கந்தசாமியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் தெறித்துச் சாப்பாட்டு இலையில் விழுந்து சங்கமமாகியது. அவரது மதிய போசனமும் ஆரம்பமாகியது. 

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *