ஐம்பது ரூபா இலாபமே




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தொழிற்சாலையின் தலைவர் மிகுந்த கண் டிப்புள்ளவராக இருந்தார். அவர் தமது நேரத் தைச் சிறிதும் வீண் போக்குவதே இல்லை. பத்தி ரிகைக்குச் செய்தி யனுப்புவோர் முதலானவர்களை அவர் பார்ப்பதே இல்லை.
ஒருநாள் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் தம்மைச் சிறிது நேரம் பார்த்துப் பேசவேண்டும் என்று செய்தியனுப்பினார். அதற்குத் தொழிற் சாலைத் தலைவர் தாம் யாரையுமே பார்ப்பது இல்லை யென்றும் அப்படிக் கட்டாயமாகப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்னின் ஐந்து நிமிட நேரம்மட்டும் பார்க்கலாமென்றும் அதன் பொருட்டு ரூபா ஐம் பது தரவேண்டும் என்றுஞ் செய்தியனுப்பினார்.
பத்திரிகைச் செய்தியாளர் (நிருபர்) ரூபா ஐம் பது தந்து ஐந்து நிமிட நேரம் பேச விருப்பம் என்றும் மறுமொழி யனுப்பினார். தொழிற்சாலைத் தலை வர் அதற்கு நாளும் மணியுங் குறிப்பிட்டுத் தெரி யப்படுத்தினார்.
குறிப்பிட்ட நாளில் பத்திரிகையாளர் தொழிற் சாலைத் தலைவரைப் பார்த்தார். அவர் கேட்டிருந்த படி ரூபாய் ஐம்பதையுங் கொடுத்துவிட்டு ஒன்றுக் கும் பயனற்ற வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண் டிருந்தார். ஐந்து நிமிடமானதும் தொழிற்சாலைத் தலைவர், பத்திரிகையாளரைப் பார்த்து, “நீர் ரூபா ஐம்பதை இழந்துவிட்டீர் போலிருக்கிறதே” என்றார்
இதனைக் கேட்ட பத்திரிகையாளர், “அப்படி யன்று, ஐம்பது ரூபா இலாபமே,” என்று கூறினார். தொழிற்சாலைத் தலைவர், அஃதெப்படி இலா பம் ?” என்று கேட்கப் பத்திரிகையாளர், “நானும் என் நண்பர் ஒருவரும் பந்தயம் போட்டோம்; அவர் தங்களைப் பார்க்கவே முடியாதென்றும் அப் படிப் பார்த்துவிட்டால் தாம் ரூபா நூறு தருவதாக வும் உறுதி மொழி கூறினார்; நானோ தங்களைப் பார்க்க முயன்று வெற்றி யடைந்தேன்; தங்கட்குக் கொடுத்த ரூபா ஐம்பது போகப் பாக்கி ரூபா ஐம்பதும் இலாபமே” என்று கூறினார்.
இதனைக் கேட்ட தொழிற்சாலைத் தலைவர், ‘அப்படியா செய்தி ? ” என்று சொல்லி மூக் கின் மேலே விரலை வைத்தார்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.