எய்யப்படும் அம்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 2,855 
 
 

அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை. “அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள். “எடியே! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும், நீ பார்ர்வைகள் வேற மாதிரி இருக்கிறது அல்லவா, திட்டி, புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு..”என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ”அன்பு இருக்கும் “என்று இழுக்க , “அதில்லையடி , நாம ஒரே பட்ஜ் !. நமக்குள் ஒரு சமநிலை இருக்கும். உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம், அதனால் குழப்பமடைகிறாய்.

நல்ல வேலை, வாழ்க்கைக்கு…அத்திவாரம். அதன் மேலே தானரி கனவுகள் வரையிறது நடக்கிறது. இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி. வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம்.. உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது.கிடைக்க மாட்டாய் எனத் தெரியும். எனவே வெறித்துப் பார்க்கிறான்.. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி” என்கிறார்.

அம்மா, ‘தாயே, நீ என்னென்னவோ எல்லாம் பேசுகிறாயே “‘ கத்தினாள்.” நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணுறே “என்க. சிரிக்கிறார். “எடியே, அவனும் எனக்குப் பிள்ளை தான்ரி. தம்பி இல்லையா, விளங்கிக் கொள்றது ஒன்றும் கஸ்டமில்லை. வயசு வித்தியாச வாட்டம்”. அம்மா பேசுறது ஒன்றும் புரியவில்லை ,. எரிச்சலுடன் “அப்ப, அவன் கனவிலே நான் நடனம் செய்கிறேனா?” என்று கேட்க. ”சரியாய் சொல்லி விட்டாய்” என்று பெலத்து சிரிக்கிறார்..

அவளுக்கு திடுக்கென்றது. திரைப்படக்கதையாக் கதைக்க ”என்னம்மா ! இதெல்லாம்..”என்று சிணுங்கினாள். ” உன்னிடம் இருக்கிற திறமை, நடனம் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. அவனுள் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது.. அவளுக்கு நோக்கும் தெரியாது. உன்னிடம் ஏதாவது பேசினனா ? இருக்கமாட்டான்.. நீ சிறுமி என்பது அவனுக்கு புரியும் . “. ” நான் சிறுமியா, எட்டாம் வகுப்பு படிக்கிறேன்” என்று சொல்ல, முந்தி இங்கே படிக்கிற போதும் பார்த்திருப்பான். நகரப்பள்ளிக்கு…விலகிய பிறகு கற்பனை பறக்கிறது போல.”என்று மடக்கி னார். யோசித்துப் பார்த்தாள். ‘ முந்தி என்னைப் பார்த்தானா? ‘ தெரியவில்லை. அந்த பள்ளிக்கூடத்திலே புதிதாய் சேர்ந்து குட்டிப்பத்மினியாய் நடனம் ஆடிய ஒரே பொண்ணு அவள் ஒருத்தி தான். அம்மாவிற்கு நடனம் வரவில்லை என்ற குறை. பிறந்தவுடனேயே தை, தை… என…பழக்க தொடங்கி விட்டார். அப்ப அவள் குழந்தை. அம்மா அதையே குறிப்பிட்டார். “நீ இப்ப, அழகாய் இருக்கிறேயாயடி “. ‘ பெண்ணாகி விட்டால்… முறைத்து, முறைத்துப் பார்ப்பினமோ ?’ கோபமும் வருகிறது.

“உன் அப்பாவைப் பார் ! போக்கற்றவர்..என்ற ஆத்திரம் எனக்கு இருக்கிறது. கல்யாணம் கட்டியே 15 வருசம் கடந்து போய் விட்டிருக்கிறது .. இந்த ஆம்பிளையங்க இப்படி தான் குறுக்கு மறுக்கா முடிவெடுக்கிறாங்கள்.. நினைச்சபடி தங்களுக்குள்ளே… முடிவெடுத்துக் கொள்ளுவாங்க. இவனும் . அப்படி எடுத்திருக்கலாம் “. “அம்மா, உன்ர அரசியல் தலையைச் சுத்துது”என்று சொல்ல சிரிக்கிறார்., குரல் தணிய “ஆம்பிளையங்களை அரசியல் பாதிக்கிறதடி “என்கிறார். “அதுக்கும் என்னைப் பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம் “என்று சினக்க “இவங்களுக்கு இதிலே வாழ்வே இல்லையடி .. தப்பிப் பிழைத்து வாழ வேண்டும். என்ற வேதம் தெரியாதடி. கிடைத்ததை இழந்து விடவேக் கூடாதடி . நாம் ஒன்றுக்கு தடவை யோசிப்போம். இதுகள் யோசிப்பதில்லை” என்கிறார். “நீ, உன்ர புருசனின் பிரச்சனையை ஏன் இதுக்குள்ள இழுக்கிறாய்” என்று சொல்ல மேலும் சிரிக்கிறார்.

“இங்கே, கல்வியை ‘இலவசக்கல்வி ‘ என்று சொல்கினம் . கல்வித்தரப்படுத்தலுக்குப் பிறகு, உண்மையில், வடக்கு, கிழக்கில் அப்படி இருக்கவில்லை.. நீ வரும் வருசம் நகரத்திற்கு உயர்க்கல்வி படிக்க போற போது நான் உனக்கு டியூசனுக்கு (பணம்) அழவேண்டி இருக்கும். உயர் வகுப்புக்கல்வி இலவசம் இல்லையடி.

சட்டரீதியாக ஊழல்களை கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள். ஏன் இங்க வந்து புகுத்த வேண்டும்?. . நம்ம காலத்தில் இப்படிஒரு குழப்பம் நிலவவே இல்லை. படிப்பது, குழம்பினாலும்..’ டியூசனுக்கு போக வில்லை‘ டியூசன் ஒன்று இருக்கிறது தெரியாது., பழையதிண்ணைப்பள்ளி முறை கட்டணத்துடன் புதிய டியூசன் முறையாக உயிர் பெற்றிருக்கிறது. எங்கட காலத்தில், இருக்கிற படிப்பே போதும் அல்லது ஏதாவது புதிதாகப் படித்தும் வேலை எடுக்கலாமடி. வேலையில் சேர்ந்த பிறகும் கூட உள்ளேயே படித்து, படித்து மேலுக்கும் வரலாம் . என்பதால் யாரும் படிக்கிறதென்று அதிகம் காலத்தையும், காசையும் வீணாக்குவதில்லை. காதல், கல்யாணம், குழந்தை…என வாழ்வும் சுகமாக அமைந்து இருந்தது. சாதியமும் கூட வாழ்கிறது என்று கொஞ்சப்பேர் விமர்சனம் வைக்க த்தான் செய்தார்கள்.

ஒவ்வொரு சாதியத்திலும் பங்காளிச்சண்டை இருந்தாலும் உள் மோதல்கள் குறைவடி. ஒருவிதத்தில், சாதியம் சொந்தக்காரர்காரர்கள் போன்றது. மற்றது அயல்வீட்டினர் போன்றது. சமயமும் சாதியத்தை வலியுறுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அது வரலாற்றையே கூறி நிற்கிறது. காந்தி, கூறிய நல்லிணக்கம், அகிம்ஷைக் கருத்துக்களை யெல்லாம் எங்கே இருந்து பொறுக்கினார். இந்த சமயத்திலே இருந்து தானே. முற்போக்காக இருக்க வேண்டியது சாதியமில்லை மனிதர்கள் தாம். ஜனநாயக உரிமைகளை மதிக்கப்பட வேண்டும் என்றே அங்கேயும் வலியுறுத்தப்படுகிறது. ஒருபுறம் அரசியல் அமைப்புச்சட்டம் போன்ற ஒரு பைல், மற்றொருபுறம்… அமுலாக்க கள்ளங்கள். இரண்டையும் நம்மால் திருத்திவிட முடியாதா? என்ன! எல்லோருமே ஜனநாயக உரிமைகள் நிலவ ‘ சுய அரசியல் அதிகாரம் ‘ கையில் இருக்க வேண்டும் என்பதையே தணிவாகவும், கோபமாகவும், வன்முறையிலும் சொல்லிப் பார்க்கிறார்கள்.கேட்பவர் தான் இல்லர். காந்தி, ”சுயராஜ்யம், கிராம ராஜ்யம், ராமராஜ்யம் “என அதை அழகியலுடன் கூறினார்.

காந்தியை தோல்ஸ்டோய் பட்டை தீட்டினார்….என்பதை …. ஒப்புக் கொள்ளலாம். உள்ளே அமைதி நிலவினால்..அடுத்தடுத்த படிகளில் தெளிவாகவும்… துணிவாகவும் காலை வைக்கலாம் ‘என்று வழிகாட்டிச் சென்றிருக்கிறார். வன்முறையென்பது எமக்கு ஏற்படுற கோபம் போன்றது. நிதானமிழக்கச் செய்து விடுகிறது. அதனுள்ளே தலைகீழாக கருத்துககள் பதிந்து விட்டால் வெளிய…வரவே முடியாது. இங்கே விடுதலையில் ஒன்றிணையாததிற்கு உள்ளே இருக்கிற குழப்பங்கள் பெரிதும் காரணம் என்று தோன்றுகிறது. ஒன்றையொன்று வெல்வதில் குழப்பங்களில் போய் சிக்குப்பட்டு விட்டன. ஏன் போட்டி வேண்டும். படிக்கிற உங்களுக்கே போட்டி பொறாமை வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. தனித்தன்மையை, மற்றவர்களை மதிக்க வேண்டுமென்பதற்காக வலியுறுத்தப்படுகிறது. அங்கே, அப்படி ஒருஆசிரியர் இல்லை. நன்மை விளையிறதுக்கு ஆசிரிய அமைப்புகளை கட்டாயம் கட்டிக் கொள்ள வேண்டும். எல்லாத்திலேயும் பட்டுத் தெளியிறது தான் துரதிஷ்டவசமாக இருக்கிறது. அதற்கிடையில் வல்லூறுகளும், வஞ்சக அரசியல்களும் புகுந்து சூழலை மோசமாக்கியும் விடவும் பார்கின்றன. பெடியள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் விடுற சிறு தவறும் புதைகுழியையே ஏற்படுத்துகிறது. அதை மனதில் ஏற்றி விட்டால்..விடுதலை நிச்சியம் ஒருநாள் கிடைக்கும். இல்லாவிட்டால் நிலமெல்லாம் கால் வைக்க அஞ்சுமளவிற்கு போய் விடும். அவளுக்கு, அம்மா பேசுற ஜனநாயக உரிமைகள் ஓரளவு புரியிற வயசு தான்.

இங்க, வேலைகளையே பொறி போல நிச்சியம், நிரந்தரம் என்பறில்லாமல் எல்லாமுமே அழிக்கப்பட்டுப் போகிறது. நீ பள்ளிக்குப் போகுறாய். சிங்களப்பகுதிகளில் வருகிற தினசரிகளிலே டியூற்றரிகள் பற்றிய விளம்பரம்… வருகிறதா ?, விளம்பரங்கள் அத்தனையும். வடக்கு, கிழக்கிலே தான் வருகின்றன ‘பொன்ட்,….’ என்று இங்க எத்தனை … எத்தனை!..

அவர்கள் டியூசனுக்கு போக மாட்டினம். தமிழர்களை தான் பிடித்து எல்லாத்திலேயும் தள்ளுவினம், இங்கே நிலங்களையும் பிடித்துக் கொண்டு கடைசியில் கடலிலும் தள்ளி விட கங்கணம் கட்டி நிற்கினம். இங்கே, தரப்படுத்தல்ச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு. வரலாற்று புரன்டு விட்டது. புதிய பிரச்சனைகள் பல எழுந்து விட்டன , சிவக்குமார் மருத்துவப்பிரிவில் படித்தவன், சத்தியசீலன் பல்கலைக்கழ மாணவர் சங்கத்தின் தலைவர். ‘ சமூகத்தின்; கல்விக்கு விடியலை ஏற்படுத்த முதலில் ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டார்கள். பல்கலைக்கழகத்திலிருந்துதான் போராடமே கிளம்பியது. ஜனநாயக ஆட்சியாகவும் மாகாண ( த்தின் கையில் கல்வி உரிமைகளும்) ) ஆட்சி முறையாகவும் இருந்திருந்தால் இந்தப் போராட்டங்களே தேவையில்லையடி . அவரவர் படிப்பு,வேலை, வாழ்வு என போய் கொண்டு இருப்பர். கலவரத்தின் மூலம் வேறு பொருளாதாரத்தை நாசம் படுத்தினர். அதன் மூலம் நம் ஆற்றல்களை நாசப்படுத்துகினார்கள்.” அம்மா பேசிக் கொண்டே போகிறார்.

கலைநிகழ்ச்சிகளும் குறுக்கீடுகள் இல்லாமல். இயல்பா வளர விட வேண்டுமடி. உன் காலில் சதங்கையைக் கட்டி விட ஏன் ஆசைப்பட்டேன்?. பள்ளி முறையில் பெண்களுக்கு உடற்பயிற்சிகள் ஒழுங்காக இல்லை. கராட்டி போல …ஆனால், இது. கவிநயம் மிகுந்தது. உன்ரபாட்டி எனக்கு பழக்கணும் என்று ஆசைப்பட்டா.நிறை வேறவில்லை. உங்கப்பா முற்போக்கானவரி.ஆனால் கொஞ்சம் புத்தி மந்தம். ( சிரிக்கிறார்) என்னை ஆடக் கூடாது என்று சொல்லவில்லை . சிறு வயதிலே, அயலில் பழக்கிறவர் யாருமிருக்கவில்லை. எனக்கு அமையவில்லை. உனக்கு அமைந்திருக்கிறதடி “. என்கிறார்.. ஒருதரம், அம்மா ஆடியிருயிருந்தால்…’ கற்பனையில் நினைக்கிறாள்.. ‘ என்ற அம்மா எனக்கு எப்பவும் அழகி தான் ‘.

” இதெல்லாம் நம்ம அரசுக்கு அமைச்சுக்களுக்கு புரிய மாட்டாதரி. கிராமம், நகரம் என்ற வேறுபாடு வேற இருக்கிறது. அரசியல்வாதிகள் வேற உலகத்திலே சஞ்சரிக்கிற அசுரர்கள். மக்களுக்கு உரிமைகளை அளித்து தேவர்களாக மாற மாட்டார்கள். . எத்தனை தரம் யாழ்ப்பாணத்தை எரித்து நம் மகிழ்ச்சியை அழித்திருக்கிறார்கள் தெரியுமா. வதைகளாக எத்தனை ஆண்டுகளாக (இனச்) கலவரங்களைப் புரிந்து நம்மை ….அழ வைத்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மக்களில் மேல் கைவைப்பதற்கும், கொல்லுறதுக்கும் யார் உரிமைகள் எல்லாம் கொடுத்தது ?, இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டங்களை வைத்திருக்கிற வரையில் நம்முடைய பகிரங்க எதிரிகள் தாம். அவர்களின் சட்ட ங்கள் நம் அனைவரையும் ‘பயங்கரவாதிகள் ‘ என்றே கூறுகிறது. வடமாநில பாதாளக்குழுவின்( முன்னைய சண்டியர்) கையில் ஆட்சியை கொடுத்தது மாதிரியான காட்டாட்சி தானே மேடையேற்றி வருகிறார்கள். இவர்களின் நீதிவிசாரிப்புகள்….தலைகீழாகவே கிடக்கின்றன ?. சர்வதேச விசாரணைகள்…அது வேற ஒரு கேலிக்கூத்து. பாலாஸ்தீனர்களை எல்லாம் கொன்று குவிக்கிறவையிடம் இரஞ்சுவது சாயம் இழந்தது. உள்ளூரில் நடக்க​ வைக்க​ ஒரு தகுதி வேணும். அது இவர்களிடம் இல்லை. விடுதலைப் பெற்ற தெற்கு ஆபிரிக்கா…போன்ற வர்களின் சிலரின் முன்னிலையில் நடைபெற வேண்டும். இவர்கள் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இந்தியாவும் கூட காந்திநாடு தான். அவரின் கொள்கைகள் இன்னமும் அங்கே வாழத் தான் செய்கின்றன.

வறண்ட குரலில் ” கடவுள் தான் காபாற்ற​ இனி இறங்கி வர வேண்டும் “கையை சாமியறையை நோக்கி காட்டுகிறார்.

சிங்கள அலுப்புகள் நினைப்பது போல இங்குள்ள எல்லாரும் கழுகு குழுவில் இருப்பவரில்லை, அதன் மேல் நம்பிக்கையும் வைத்திருப்பவரில்லை. இந்தபவியே… தாமரைட ஆள்.

“சட்டரீதியாக தாம் வேற சமூகம் என கூறுகினம். தாங்கள்’ புது ச் சாதி ‘ என்கினம். வடபகுதி சாதிபேதங்களை சமன் செய்வது மாதிரி அதுவும் சமன் செய்யவே…வேண்டும். இங்கே யாரும் கடவுளின் மனிதர்கள் கிடையாது. தமிழர் பிரதேசத்திற்குள்ளே . முழுதாகவே , இனப்பிசாசுகள் நுழைந்து விட்டன. அபாயமும் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது. அவனை பெரிசுப்படுத்தாதே, நீ ஆடுறதையும் படிக்கிறதைப் பார்.. இங்கே. எங்களுக்கு எந்த வகைக் கல்வியாக இருந்தாலும் கட்டாயம் கல்வி தேவையடி. “. அதிலும் நைந்து போன நம்பிக்கைகளை எங்கேயோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டே கிடக்கின்றன. அலை அடித்து ஒய்ந்தது போல இருந்தது. கனகவல்லிக்கு ஏண்டா அவனைப்பற்றி சொன்னோம் என்று ஆகி விட்டது.

அவளுக்கு அம்மா தான் குரு.., எல்லாமும் !, ..அவரிடமே வந்து அறிந்த வற்றையும் கொட் டா விட்டால் தூக்கம் வராது.; சின்னதிலிருந்து நிலாவைக் காட்டி… சோற்றுக்கவளம் தீத்தி விட்டதுமில்லை,, பலதையும் புரிய வைத்தும் வருகிறவர். முதல் ஆசிரியர். அது சரி ! அப்பா, ஏன் ஸ்ரைக் பண்ணினார் ?. அம்மா கூறினார். “ஸ்ரைக் பண்ணினது தப்பில்லையடி, சிங்களவரோடு சேர்ந்து… ஈடுபட்டாரே. அது தான் பிடிக்கவில்லை. அது, எப்பவுமே பொறிக்கிடங்குகள் கிடக்கிற​ பகுதி. ஒன்றாய் வேலை செய்தவர்களே தனிமனித​ பொறாமை, காழ்ப்புக்குணங்களினால் பலரை காட்டிக் கொடுத்து வெட்டிக் கொல்ல காரணமாக​ இருந்திருக்கிறார்கள். இப்படி தெரியாத பச்சைக் குழந்தையாய் இருக்கிறாரே, அது தான்றி கோபம் “என்கிறார். நீர்கொழும்பில் இருக்கிற போதுஅப்பாவின் நண்பரான நிமால் அங்கிள், மடியில் வைத்துக் கொண்டு.” லல்லு நாங்கள் எல்லாம் இருக்கிறோம். பயம் தேவையில்லை..”என்பார் லல்லு அவளின் வீட்டுப் பெயர்.. குட்டிப்பிள்ளையான அவள் மீது அவருக்கும் பாசம் அதிகம். அம்மாவிற்கு பதில் சொல்லுறது மாதிரி தைரியம் கூறுவார். அவருடைய சிட்டு மாலினி அவளுடைய பெஸ்ட் பிரென்ட். இருவரும் சேர்ந்து விட்டால் மகிழ்ச்சி பிடிபடாது.. மாலினி இப்ப என்ன செய்கிறாளோ? நண்பர்களின் பேச்சைக் கேட்டு பெரிதாக நடைபெற்ற ‘ அனைத்து அரச ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் ‘ அப்பரும் ஈடுபட்டார்.

அரசு சரியாயே பழிவாங்கி விட்டது. ஆமதுருமார் சமரசம் பேசினர். ‘மன்னிப்புக்கடிதம் ‘ கொடுத்தால் திரும்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் ‘ முடிவாகியது. அப்பா ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தார். சிங்களம்.. என்று அவருடைய ஒபிஸ் கூறியது. பொறி பறந்தது. தமிழர் எல்லோரும் தமிழிலே எழுதிக் கொடுத்தார்கள். சிங்களம் என..திரும்ப, திரும்ப கூறினார்கள். சிங்களம் பேசமட்டும் தெரியும்.எழுதத் தெரியாது “என்று சொல்ல. “நண்பர்களிடம் எழுதி வாங்கி வா “என்றார்கள். முதல் தடவையாய் அப்பா “இங்கே தமிழும் ஒபிசல் லாங்கியூஸ் இல்லை யா “என்றார். “இல்லை சிங்களம் மட்டும் தான் “பதில் வந்தது. கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்தெறிந்து விட்ட….. அப்பாவிற்கு பென்சனுமில்லை, ஒன்றுமில்லை. ஆனால், வாழ்க்கை ஒன்று இருக்கிறதல்லவா. “மச்சான் சிங்களத்தில் எழுதித் தாரோம். முதலில் வேலையில் சேருங்கள் பிறகு அரசியலைப் பார்ப்போம் ”என்றார்கள். எங்களுக்காக பேசினாலும் , சப்போர்ட் பண்ணினாலும் சிங்கள நண்பர்கள் வேலிக்கு அப்பாலேயே நின்று விட்டார்கள். அவர்கள் தமிழரின் ஜனநாயக உரிமைகளுக்காக​, கொள்கைகளுக்காக​ ஒன்றும் செய்ய முடியாதவர்கள். ஒருவேளை நாக்கை சுழற்றி, சுழற்றி பேசுவதால் கொள்கைகளும் அவர்களுக்கு சரிவர புரியாமலும் கூட இருக்கலாம். விறாப்புடன் யாழ்ப்பாணம் வந்ர்கள்

சிங்கள இளைஞர்கள் பலர் இனக்கலவரம் நடைபெறுவதை விரும்பவில்லை.என்றாலும் ஜனநாயக உரிமைகள் தமிழருக்கு அளிக்கப்படுவதையும் விரும்பவில்லை. பிறகு, என்ன கோலமாக்கள் தாம். வடக்கு கிழக்கு இணைப்பையும் அறுத்தும் என்னவோ… …கூத்தும் அரங்கேற்றியும் விட்டிருக்கிறார்கள். அவர்களின் இந்திய எதிர்ப்புக்குப் பின்னால் மலையகத்திற்கு எதிரான குரூர முகமும் ஒளிந்திருக்கிறது.
இந்தியா கச்சைத்தீவைக் கொடுக்கப்பட்டதால் மலையகத்திற்கு ‘ பிரஜைகள் என்ற உரிமை’ கொடுக்கப்பட்டிருக்கிறதே அன்றி உண்மையில் மாறுமுகம் வேற​ . மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஈழத்தமிழரையே வேற சாதி என நினைக்கிற சாதி இவர்களை எப்படி தூக்கி நிறுத்தும் ? இந்திய மீனவர் பிரச்சனை உண்மையிலே ஈழத்தமிழரின் மேல் உள்ள கறலை வெறுப்பை பிரதிபலிக்கிறதொன்று. அதை தமிழ் மீனவரின் பின்னால் ஒளிந்திருந்து கச்சிதமாகத்…தொடர்கிறது . மக்களிடமே விட்டு ‘ ஈழத்தமிழர்களோடு பேசி தீர்வுக்கு வர விடுங்கள். அது சாதனையையே நிகழ்த்தி விடும். பழமையிலேயே கிடக்கிறார்கள்.

தனிநாடு கேட்பவர்கள் மக்கள் மட்டுமில்லை. தமிழ் அகிம்ஸைவாதத் தலைவர்(கள்) செல்வா, வரைபு,இனிமேல் செல்லாது. கண்ட​ பிறகு, தமிழர்க்கு தனிநாடு தான் ஒரே சொய்ஸ் ”என முழங்கிய பிறகு ஒவ்வொரு தமிழருமே…’தனி நாடு பற்றி பேசலாம் ‘, பேச உரிமையும் கிடக்கிறது. இந்தச்சிக்கல் சிங்களவர் தனிநாடு கேட்ட பிறகே ஏற்பட்டது. ஆமாம் !, முதலில் தனிநாடு கேட்டவர்கள் சிங்களவர் தாம் ‘ அதைப் பற்றி அநாகரிக தர்மபாலா பிரலாபித்த போது தான் அங்கே, ” முழு ‘ஈழமும் அவர்களுடைய நாடு ‘ என்ற பையித்தியக்காரமாக உளறத் தொடங்கினார்கள். கதாநாயகத் தலைவர்கள் அடுத்தடுத்தபடிகளில் காலை வைக்கவே கூசவில்லை. ‘ 24மணிநேரத்தில் சிங்களம் ஆட்சிமொழி ‘. ‘ தனிநாடு கேட்பது குற்றம் ‘ என்ற 6வது சட்டம் தொடர்ச்சியாக அரசியலமைப்புச் சட்டங்கள் எல்லாம் ஏற்படுகின்றன​. தொடர்ச்சியான கலவரங்கலவரங்கள், புதைகுழிகள்…தீர்வை நோக்கிச் செல்லாத வெட்டிப்பேச்சுக்கள், பூனைகளுக்கு யாரும் மணி கட்டாத​ சூழல்கள் கொண்டாட்டங்கள், எலிகளுக்கோ வேதனைவியல் ‘என்ற நிலமை, ‘எதையுமே குருக்கள் செய்தால் பாவமில்லை ‘ என்பது போல அவர் மதக்குருக்கள் கூறினால் குற்றமற்று போய் விடுகின்றன . இன்றிருக்கும்…, சிங்கள நட்புமுகங்கள் நாளை குருகள் பாடம் செய்யும் போது மாறிப் போய் விடவே போகின்றன.

இன்று பாலாஸ்தீனக்குழந்தைகளின் எலும்புகள் தெரியிற மாதிரியே சொல்லவண்ணா வாதனைப்பட்டு கடந்து வந்த யூதர்களின்….இளைஞர்கள், அந்த முன்னைய வரலாறை இஸ்ரேல் என்ற நாட்டிற்காக கல்நெஞ்சத்துடன் அதே குற்றங்களை…. கதாநாயக முகத்துடன் செய்து கொண்டிருக்கிறார்கள் ‘….ஏன், நாளை ஈழத்திலும் நடக்காது ?. இன்றைய ( ஊழலற்ற ) அரசு நடைபெறாது என்று கூறினாலும் ( இந்தளவு பேசத் தொடங்கியிருக்கிறார்களே… அதற்குப் பாராட்டுக்கள் ! ) நாளை நடைபெறும் என்றே வரலாறு எழுதும் என​ அச்சமாகவே இருக்கிறது

ஒரு நாட்டிலுள்ள​ விவசாயிகளும், மீனவரும் தராசு தட்டில் இருபுறமும் ஒரே நிறையில் இருப்பவர்கள். இரண்டும் பெரும் துறைகள். மக்கள் கையில் அதிகாரமும், இவற்றில் ​ சுதந்திரமும், சுயாதீனமும் இருந்து விட்டால்…திறமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் ஆகி விடுவார்கள். உறுதியான​ தூண்களின் மீது எழும் கட்டடம் காலகாலமும் நிமிந்து நிற்கும். கலவரத்தின் போது நிர்வாணமாக​ இருந்த​ பெடியனும், சூழ​ கூப்பாடும், கூத்தும் போட்டுக் கொண்டு நின்ற​ சக​ பெடியள்களும் உள்ள​ கறுப்பு வெள்ளைப் புகைப்பபடம் ஈழத்தின் கறுப்பு அடையாளமாக​ போய் விட்டிருக்கிறது. அதில், இதன் வரலாறு முழுதுமே எழுதப்பட்டுக் கிடக்கிறது. நாட்டிற்கு ‘ நிலமும், கடலும் முக்கியம் ‘ என்பது புரியும் எனப்படவில்லை. தமிழ் அடையாளம் கொண்ட​ எல்லோரும் இந்த​ இந்த​ நிலமைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசு, ஊர்காவல் பிரிவை ஏற்படுத்தி தன்னோடு சேர்த்து…முஸ்லிமை தமிழரிடமிருந்து விலத்தி வைக்க பார்க்கிறது. விலகலை மேலும் பெரிதாக்கி திரிசங்கு நிலையை அதில் ஏற்படுத்துகிறது. அவர்களிடம் தமிழுக்கான பங்களிப்புகள் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்குமாக​ இருந்த​, இருக்கிற​ போதிலும் அஸ்ரப் போன்ற​ தலைவர்கள் இல்லாதிருக்கும் நிலமை சிக்கலை ஏற்படுத்துகிறது.

தமிழ்மீனவர் எல்லா விதத்தாலேயும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுதந்திரமான நிதிகளை கையாளும் உரிமைகள் இல்லை. எனவே அத்திவாரமற்ற​ கடல். எனவே பாதிப்புகளிலிருந்து வெளியேற​ வழியில்லை. முஸ்லிம், தமிழ்க்கொளுவல்கள் தந்திரமாக தொடரப்பட்டு வருகிறது. களவாக படைமுகாமிற்கு வரவழைத்து, சிங்கள மீனவர்களிளோடு கல்முனையையும் இறக்கி வடபகுதிக்கடலில் மீன் பிடிக்க விடுதல் மோதல்களையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்திய மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் என்ற​ ஒரு குழு கூட​ இறக்கி ‘காயப்படுத்தி சேதமுற வைக்கப் படுகிறது. முந்தி, யாழ்ப்பாணத்தில் கிரீஸ் மனிதர்களின் நடமாட்டம்…,, போதைப்பொருள் , மதுவகைகளை அதிகளவில் பரப்பி பழக்கப்படுத்ததி விடப்பட்டது, யப்பானிய களைவிதைகளை மேலேயிருந்து இடிபட்ட வீடுவளவுகளில் கொட்ட பட்ட…து,கிழக்குப்பகுதி தமிழ்க்கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்றி, சிலவற்றில் முஸ்லிம்களையும் குடியேற்றி விடுதல் எல்லாமே திட்டமிட்டு நடைபெறுபவை. பாலஸ்தீனத்தில் பரீசிலித்த முறைகளை இந்நாட்டிலும் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது, கைக்கட்டிக் கொண்டு பார்ப்பதை என்னவென்பது ?. நிலைமாறா உலகில், ‘ நடக்கும் ‘ என்ற​ கனவில் வாழும் எம்சாதி,….வாழ்வதில்லை நீதி !

மக்களுக்கு முழுமையாகவே கிராமத்தை, நகரை, கடலை ஆளும் உரிமைகள் ​ அளிக்கப்படுதல்​ வேண்டும். ‘ ஜனநாயக​ மறுப்பே…’ ஊழல் எனப்படுகிறது. மறுப்பு ஒவ்வொன்றுக்கும் விலை…ஏறி இறங்கிறது. ‘ இலாபம் ‘ என்பதே ஊழலின் கிழந்தைப்பருவமோ ?..எனத்தோன்றுகிறது. பவி கிறுக்கனாகவே சிந்திக்கிறான்.

இன்னுருபுறம் ,’ ஊழலற்ற​..’ என பறை சாற்றுகிற. வாய்ப்பந்தல்கள், பம்மாத்துக்கள் ஒன்ற்கும் இந்த வெட்கம் கெட்ட உலகம் நாணப்படுவதில்லை. ஜே. ஆரையும், மகிந்தாவையும் மேடையில் விட்டுப் பாருங்களன்…முழங்கித் தள்ளுவார்கள். அன்று, ஜே ஆர் யப்பானுக்காக நியாயம் பேசினார். அன்று ( JVP )க்காக வழக்கு மன்றிலில் நியாயம் பேசிய மற்றவர். இன்று தமிழரை வென்று விட்டதாக நிலத்தில் மண்ணை முத்தமிடுகிற இரத்தம் முகத்தில் வழியிற​ காட்டேரியர்களாக​ நிற்கிறார்கள். ‘ தனிநாடு’ இஸ்ரேலைப் போல் அநியாயங்களின் மேல் கட்ட விளைகிறது. அதை காப்பாற்ற அவர்களுக்கே தெரிந்த அடக்குமுறை அரசியலமைப்புச் சட்டங்கள். உச்சநிலைக்கு போய் விடுறதை பார்க்கிற​ தந்தை செல்வா தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைக்கிறார். அவரது கொள்கை சமஷ்டி , கட்சி சமஷ்டிக்கட்சி. உண்மையாகவே சமஷ்டியைத் தான் விரும்புகிறார். அந்த படிகளில் இருந்து தான் ‘ நாம் எல்லாரும் சகோதரர்களே ‘ ஏற்படுகிறது.

ஜனநாயக வரையறைக்குள் வராத​ உறவு நிலைப்பதில்லை. பிரான்சு நாடு பிரெஞ்சுப்புரட்சியை நடத்தியயோடு எல்லாத்தையும் முடிடித்து விட்டார்கள்.. புரட்சியை நடத்தியவர்களை புரட்சிக்காரர்களே போட்டுத் தள்ளியும் விட்டார்கள். புரட்சி வலி மிகுந்தது தான். ஜேர்மனி, ரவைகளை சேமிக்கவே விசவாயுவைப் பயன்படுத்தியது, பிரான்சு கில்லட்கத்தியைப் பயன்படுத்தியது( மருத்துவர் சத்திரச்சிகிச்சை செய்ற கத்தியை பிரமாண்டமாக செய்த – கழுத்து வெட்டும் கத்தி ). பிரிட்டன் பழைய கயிற்று முறையை பயன்படுத்தியது. பிரான்ஸில் பீரங்கி வாயிலில் கட்டி வைத்து வெடிக்கிற முறையையும் முன்னர் இருந்தது, ஈழவரசும்,விடுதலைக்குழுவும் விடுதலை கேட்ட இளைஞர்களை…சுட்டே கொன்றது. ஊழலுக்குள் விழுந்தால் நரகம் தான்.

பழைய காலம், நவீனம் வேண்டாம்…. இயல்பாகவே சாதாரண மனிதர்களாக இருப்போமே !.

ஈழம், எப்பவும் பிரிட்டன் கூறுவதையே செய்து வருகிற நாடு. இனப்படுகொலையையும் அனுமதி பெற்றே நிகழ்த்தி இருக்கிறது.

அடிமைத்தனத்திலிருந்து இந்த ஜென்மங்களை கழற்றுவது கஸ்டம் தான். ‘ நவீன அடிமை ‘. ஏன் சமாதானச்சபைகள் செயலிழக்கின்ற​ன என்பது புரிகிறதா ?. ஏன் மற்றயவையைத் திட்டவில்லை?,..எல்லாமுமே ஒன்றுக்குள்ள ஒன்று இருக்கிற​ ஒரே களிசரைக்கூட்டம் தான். பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் ‘ ஐஆ எ ‘ தலைவர்களிடம் தான் இந்தப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க கொண்டு செல்ல​ வேண்டும்.

இனக்கலவரத்தை வெறுக்கிறவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் தாம். உறுதியான நிலைப்பாட்டை காலத்தில் எடுக்காது விடுவதால்… இரத்தம் வடிந்தபடியே சீரழிவுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. JVPகிளர்ச்சியில் ஈடுபடுகிற போதுகளிலும் தமிழர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. தற்போது ‘ புதியவர்களாக காட்டிக் கொள்கிற போதும் குழப்பங்களை. தெளிவுபடுத்தப்படுவதில்லை. ஏன் ?. ‘ கள்ளங்கள்…??, அவை சந்தேங்களை வளர்க்கத்தானே செய்யும் !. படைத்தரப்பை நாயகர்களாக​ வழிபடுகிறார்கள். தவறினால் அவர்களது ஆட்சி ஏற்பட்டு விடும் என்கிற​ பயம். கழுகிலும் தலைவர் வழிபாடு, நிறையக் கொலைகளையே நிகழ்த்தியது. இந்த​ வழிபாடும் கொலைகளுக்கே வழி திறக்கும். இன்று

அடிப்படையில் கிராமங்களே நகரங்களை விட​ சிறிதளவாவது சுதந்திரங்களை அனுபவிப்பவை. படிப்பறிவு, செயலூக்கம் அற்றவர்களாக​ இருக்கிறார்கள். கிராமத்தில் இவர்களுக்கு நெல்வயல் சிறிது இருந்ததால் தப்பிப்பிழைக்கிறார்கள், சமாளித்து வருகிறார்கள். பலரிற்கு… இந்த நிலை இருக்கவில்லை. சொந்த வீடே இல்லாதவர்கள் இருக்கிறார்கள் . நகரத்தில் வீடு வாங்கிறதை விட​ கிராமத்திற்குச் வாங்குங்கள். நசிஞ்சு,கிசிஞ்சாவது வாழ​ முடியும். வெளியில் இருப்பவர்கள் அவர்களின் குறைகளை நீக்க​ இறங்கி வழிகாட்டினால் அவர்களும் வாழ்வார்கள், நகரத்தவர்களும் தப்பிப்பிழைக்கலாம்.

கனகவல்லி , நிலம் அவசியமானது என்பதை வாழ்விலே பார்க்கிறாளே. அப்பா, ”ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை என்று”விவசாயியாய் தோள் தட்டுகிறார். அவருடைய அரசுவேலை போனது, போனது தான். இனி அதைப்பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை. பதுமைப்பயிர்ச் செய்தால் நிலமும் தப்பும். , இவர்களுடைய ஒரே இலட்சியமாக, எம்மைபிள்ளைகளை படிக்க வைப்பதே… இருக்கிறது. அவளுக்கு ஆட்டம் வாரது மாதிரி ‘படிப்பு’ இல்லை. படிக்கிறதில் நெருக்குதல் இருக்கக் கூடாது. . எப்படி கடக்க போகிறாளோ என்று பயமாகவும் இருக்கிறது.. ஒன்றை சொல்லுவாள் அதற்காக எந்த விடுதலைக் குழுலும் போய்ச் சேரவும் மாட்டாள்.

பலர் வீட்டில் அந்த இழை மிகவும் மெல்லியக்கோடாக இருக்கிறது.

காலம் ஓடி, காட்சி மாறித் தள்ளியது . இப்ப நகரப்பள்ளிக்கு போய் வருகிறாள். அவளுக்கு அரசியல் புரியவில்லை தான். ஒருவேளை, கால் வைக்காத வரையில் அந்த புரிதல் இருக்கப் போவதில்லையோ ? ‘விவசாயமும், கடல்த்தொழிலும் தேசிய பொருளாதாரத் துறைகள் ‘ வடக்கு, கிழக்கில் என்ன​ ஈழம் முழுதிலுமே கட்டாய பயிற்சிப்பள்ளிப்பாடங்களாக​ ஏன் இன்னமும் சேர்க்கப்படவில்லை. . சாதிப் பிரச்சனை….அது, இது என்று பேசி குளிர் காய நிறையப்பேர் இருக்கவே செய்வார்கள். இந்திய சிந்தனையரான ராஜாஜி, சிக்கனமாக​… பொருளாதார மேம்பாட்டிற்காகவே ‘ குலக்கல்வி முறையை’ அறிவித்து விமர்சனங்கள், கிமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார். அதையே எளிதான, உறுதியான தீர்வாவே கடைசி வரை கூறி நின்றார். ‘ சமூகச்சிக்கல் ‘ ஒரு பிரச்சனை அதை மக்களே கடந்தேயாக வேண்டும் என்றார். வடக்கு, கிழக்கில் முன்னர் படகுக்கட்டுமானமெல்லாம் இருந்தன​. பிழையான​ அரசியல் நகர்வுகளால்…அழித்து தள்ளி விட்டிருக்கிறார்கள். குற்றம் பார்க்கில் சுற்றமில்லை. எனவே, மக்களை, மீள​ கட்டி,…. எழுப்பவே சுதந்திரமாக​ விட​​ வேண்டும் ! .

எல்லா தொழில்களுமே சமத் தன்மை கொண்டவை தாம் . அவற்றுக்கு துறைமுகங்கள், போக்குவரத்து நிலையங்கள் எல்லாமே மக்களுடைமை ஆக்கல் வேண்டும். ஒன்றுமே செய்யாது அதிலே படைமுகாமை கொண்டு போய் நிறுவுவது, காலுக்குள்ளே, கையிக்குள்ளே ஓட விடுவது எல்லாமே குழறுபடிகள் தாம். ஒபீஸ் வேலைகளுக்கு போறவர்கள் போகட்டும். தடைகளை நீக்கினால் வாய்ப்புக்கள் பெருகும் . மக்கள், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாது பயன்படுத்திக் கொள்வர். படைத்தரப்பினரின் அதிகாரங்களும் கட்டாயம் குறைக்கப் படவே வேண்டும். அவர்களால் …கணக்கில் வராது கடலில் கொட்டப்பட்ட தமிழரின் உயிர்களின் தொகை கலவரங்களில் இறந்தவர்களின் தொகையை விட அதிகம். மறைக்கப்பட்டு வருகிறது.

எப்பவும் நாட்டின் கதாநாயகர்கள் அனத்து ஈழ​ மக்களும் தாம் !

ஒப்பந்தம் எழுதவே தகுதியற்ற ஒரு நாடாகவே ஈழம் தன்னை நிரூபித்து வந்திருகிறது.இஸ்ரேலைப் போல பாலாஸ்தீன சாம்பலை ஏற்படுத்தி சமன்படுத்தி…அதன் மேலேயே…., இங்கேயும் கூட சவக்குழிகளை சமன் செய்து அதன் மேலே தான் தோட்டங்களை வைக்க விரும்புகிறார்களா ?. அதைச் செய்ய அவர்களுக்கு நிறைய, நிறைய பயங்கரச் சட்டங்கள் வேண்டும் .இந்த அரசுக்கு துணையாக பிறநாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரிசை கட்டி நிற்கின. ஒரு ஈழத்தலைவர் கூறினார். “தமிழர்கள் சாகிறது, சிங்களவர்களுக்கு மிக சந்தோஷம் அளிக்கிற தாம் “. பாசிசம் தொடர விட்டுக் கொண்டிருக்கிறார்களே. செயற்கை அழிவு போட்டி போடுகிறது. சிறிய நாடுகளில், அரைவாசி தூதரகங்களை மூடி துரத்தி விட்டால் தப்பிப்பிழைத்து விடும் போலவே இருக்கிறது.

பெடியளின் பேச்சை கேட்டு “புத்தியில் புரிய வைக்கும் வேலை ஏனடி? “என்று அடிக்கடி கும்மியும் அரசியல் பேசி உசுப்பேற்றியும் வருகிறாள். . சொந்தம். நம் மொழியிலே எழுதி, பேசி அரச விவகாரங்களுடன் தொடர்பு கொள்ளகிறது . மரியாதைக் கொடு… ‘ அப்பாவைப் போலில்லாது, அம்மா நியாயத்தைத் அளந்து பேசுகிறவராக​ இருக்கிறார். எப்படி பேசினால் என்ன​ ?, கடைசி வரை ஈழவரசை எதிர்க்க வேண்டும் ?, கையை மடக்கி பார்த்தாள். அவளுக்கு புஜம் பொங்கவே இல்லை. போதியதிலை ?. கறுப்புஜூலை ஆயுத போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளியதிலிருந்து விடுபட​ வழியுமில்லை. பெடியள்களுக்கு. “உங்க சகவாசம் வேண்டவே வேண்டாம். வடக்கு, கிழக்கை எம்நகரங்களாக​ கட்டி எழுப்புவோமே ‘’ அந்த கனவை நோக்கி சிந்தனை தீவிரமாக நடை போடுகிறது. போராட்டமோ, காடுகள் எரிகிறது போல, சுனாமி போல நீண்ட ​ சவாலாகவே கிடக்கிறது.

வழக்கம் போல​ பஸ்சிலிருந்து இறங்கிய போது இருள் கவிந்து விட்டது.முன்னால் பவியும்,ராமைய்யாவும் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். இருவருக்கும் தெரியாமல் சத்தமில்லாது சிறிது தூரத்தில் அவளும், கும்மியும் நடந்து வந்தார்கள். இப்ப இவர்களுக்கு இருளைக் குறித்து பயருக்கவில்லை, வீரிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்க பாவமாக​ இருக்கிறது . “அரசு அழித்தொழிக்கப்படுவீர் என உச்சமாக பயமுறுத்தி வருகிறது. வெளி அலுப்புகளுக்கு மார்க்சிசம் என்றால் பீத்தல்பயம். எனவே அதிகமாக கொண்டு வந்து கொட்டித் தள்ளுகிறார்கள். மன்னிப்போம் தட்டு ஓட்டை, கந்தல்கள் நிறைந்தவையாகி விட்டது .

எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று எம்மை முழுமையாகவே​ கொன்றொழிக்கப் பார்க்கிறார்கள். நாம் பயப்படாதவர்கள் என்பதை காட்டியே ஆக வேண்டும். ”. பவியின் பேச்சு அவளை ஆச்சரிய படுத்தவில்லை. “மாகாணவரசு இயங்கினாலும் வெளி விவகாரக்கொள்கையை மீற உரிமை கிடையாது தெரியுமோ ? ” என்று ராமைய்யா சிரித்தார்.

கனகவல்லிக்கு அவனின் வெறித்தப்பார்வையால் ஏற்பட்ட சேதத்தை மீறி கனிவும் எட்டிப் பார்க்கிறது. இருபாலருக்கு இடையில் பொது மையங்களும்​ இருக்கவே செய்கின்றன. சந்தியை அடைந்த போது தரப்புகள் வேறாகப் பிரிந்து சென்றன.

ஒரு காலம்

பவி புதிதாக சேர்ந்த போது. கறுவல், ஒல்லி,வாடல் என்று அவனுக்குத் தெரியாமல் அழைக்கப்பட்டான். கரன் கிராமப்பொறுப்பாளர். அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு திரியும் சந்தரை பாரதி வாசிகசாலை தான் காக்கிறது என்ற சந்தேகம் கரனுக்கு இருந்தது. கிராமம் பெரிது தான் .ஆனால் அந்த குட்டிப்பகுதியில் தலைமறவாக இருக்கிறான் என்றால்… யாரோ உதவி செய்கிறவர் இருக்கிறார்கள். அயலில் நிற்கிறான் என்ற செய்தியை தோழர் ஒருவர் தெரிவிக்க அதிரடியாக அவர்கள் குழு..அங்கே வந்து இறங்கியது. சந்தர் அங்கே இல்லை. ”அவனை ஒளித்து வைத்திருந்து விளையாட்டா காட்டுரீர்கள் “என்று வாசிகசாலை டுயூப் லைட்டை உடைத்து எச்சரித்துப் போட்டு வந்தார்கள். பவியின் வகுப்புத்தோழன் வாசிகசாலை த்தலைவர். ‘எங்கே போறார்கள் ?’என்று இழுபட்டு வந்தவனுக்கு அந்தரமாகி விட்டது. ”கரன், லைட்டை உடைத்திருக்க வேண்டியதில்லை ‘ யே ‘ என்று காரணத்தை யும் கூறி சொன்னான் . “இனிமேல் தாக்குதல் நடத்தவில்லை, சரி வா”என்றான்.அவன் பேச்சையும் கரன் சிறிது கேட்பவன்.

சந்தர், பாலைப்பகுதியில் மாடி வீட்டு க்குடும்பத்திடம் வேலைக்கு வந்த மேற்குக்கிராமத்து சிறு பெண்ணிடம் தொடர்பு கொண்டு, வயிற்றில் வளர வைத்து விட்டான். ஒதுங்கி கொள்கிறான். அவள் பிரச்சனையை தோழர் மூலம் தெரியப்படுத்தி இருந்தாள். அவனைப் பிடித்து இவர்கள் தலையிடாமல் அ தே வாசிகசாலையில் வைத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த பெண்ணுக்கு உதவியாக நின்று , தீர்ப்பையும் நிறைவேற்ற உதவியாக நிற்பார்கள். சந்தர்.சுழித்து, சுழித்துக் கொண்டு திரிகிறான்.

முந்தி, மேற்குப்பகுதியிலே பழைய சண்டியர் ஒருவர்கத்தியால் குத்திப் போட்டு தலைமறைவாகி விட்டிருந்தார்.. இவர்களுடைய பெரிய தலைவரிடம் தெரியப்படுத்த,. ‘சண்டியர்’ தீவிரமுடையவர். அயல் பொறுப்பாளரிடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது. அங்கே இருந்து ஒரு குழு மரப்பலகைதுவக்கை சாக்கால் சுற்றிக் கொண்டு இரவில் போய் இறங்கியது. சொந்தபந்தம் சூழ இருந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவனுடைய தம்பியைப் பிடித்து… முகாமிற்கு கொண்டு சென்று 3ம் நாள் வைத்து விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான்.

பிறகு, அங்கே விழிப்புக்குழுவொன்றைக் கட்டி தம்பியை யே தலைவராக நியமித்து, விழிப்புக்குழு கட்டப்பட்டது.. அங்கே இந்தப்பிரச்சனை எடுக்கப்பட்டு நீண்ட நேரம் விவாதித்தார்கள். கரனும், பவியும் கூட்டத்தில் இருந்தார்கள். அவ்விடத்து தோழர்கள் பக்கபலம். சாமம் வரைநீடித்தது. முடிந்த பிறகு இவர்களுக்கு தம்பி வீட்டிலே இருந்து தேனீர் வந்தது.. தேவாமிர்தமாக இருந்தது. குத்து வாங்கியவரின்,மருத்துவ மனைக்கு சென்ற கார்ச்செலவு எல்லாம் கொடுத்து ஓரளவு சமாதானமாகிப் போயினர்.
தனி இருவராக…யாருமேயற்ற நிலவு ஒளியில் இருள்ச் சத்தங்களுடன் சைக்கிளில் திரும்புற போது பவிக்கு அச்சம் ஏற்பட்டது. கோழி ஒன்று கூவ..கரன் ”சாமக்கோழி கூவுறு “என்றான். அதுவரையில் அவன் கேட்டதில்லை. கேட்க பயம் கலைவது போல இருந்தது. இருந்தால்ப் போல் இவர்களுக்குப் பின்னால் ஒளியை வீசியபடி வாகனம் ஒன்று வந்தது. இவர்களுக்கருகில் பிரேக் பிடித்து நின்றது. உள்ளே ஆயுதத்துடன் இருப்பது தெரிந்தது. ”தாமரை இயக்கம் ”என்று கரன் பதில் அளித்தான். “சரி போங்கள் ”என…சென்று விட்டது. “முல்லை இயக்கம் “என்றான் கரன். இரவில், ‘கள்ளர்களோ ? ‘ என்ற சந்தேகத்தில்… இப்படி நிறுத்திக் கேட்பது வழக்கம். அது சென்று மறைந்து விட இவர்களுடைய நிலவுப்பயணம் தொடர்ந்தது. முல்லை இயக்கம் தான் முதல் முதலில் வாகனத்தில்…ஒரிஜினல் ஆயுதங்களுடன் திரிந்த குழு. ஒரு தடவை நினைத்துப் பாருங்கள். குழுமோதல் இல்லாதிருந்திருந்தால்… இரவு ராட்சியம் குழுக்களின் கைகளிலே இருந்தது. கள்ளர், அரசின் புலன் ஆட்கள் நடமாட முடியாத காவல் நிலவும். ஒன்றயொன்று…பிரச்சனைப்படாது விலகிச் செல்லும். இது பெடியளுக்கு பெரும் பலத்தையும் அளித்துக் கொண்டிருக்கும். இவர்கள் கை வைத்தால் தாக்குதல்க்குழு வரும். இச்சூழலில் சண்டியர் எவருமே…ஓடி ஒளிந்து தலைமறைவாகி கிடந்தனர். ஓரிரண்டு சம்பவமே நிகழ்ந்தன. உதவி என்று கேட்டால், அல்லது உணர்ந்தும் மற்றயவை… கைகொடுக்கும். கரன் போன்ற தோழர்கள் அச்சமின்றி திரிவதற்கு இச்சூழலே காரணம். இது 85 …வரையில் இருந்தது.

பெடியளின் கால் படாத யாழ்ப்பாண மண்ணே கிடையாது என திரிந்தார்கள். மூலைமுடக்கு,குச்சொழுங்கை, மணற்காடு எல்லாம் அத்துப்படி. தெரிந்திருந்ததால் எங்கையும் நிலையெடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தவும் கூடியதாக இருந்தன. வட பகுதியில் அனைத்து படைத்ததரப்பின் நில நடமாட்டமும் இல்லை , முகாமிலிருந்து அடிப்பது, வான் தாக்குதல்கள் மட்டுமே அச்சமயத்தில் எதிர் கொண்டார்கள்.

இப்படி நிறைய தடவைகள் பவி கரனுடன் இழுபட்டான்

எல்லாக்குழுக்களுமே தாமரையிடமே சமூகப்பிரச்சனைகளை கைகாட்டி விட்டு விட்டார்கள். தாமரையின் தாக்குதல்க்குழு பெரும் சண்டியர் பலரை போட்டுத் தள்ளி வடமாநிலத்தையே மக்களுக்கு அச்சமற்ற இடமாக ஆக்கி விட்டிருந்தது. இழுபடுறது அவர்களுக்கும் ஒரு துணிச்சலையும் ஏற்படுத்தியது. தாமரை பல விழிப்புக்குழுக்கள் இவர்களிடம் வராமலே நல்லமாதிரி இயங்கின. ஏதும் பிரச்சனை என்றால் இவர்களின் மேல் தலைமையிடம் நேரிலே சென்று ஆலோசிக்கிற து கூட ஏற்பட்டது. அவ்விடத்தில் நீதியான பெரியவர் யாருமிருந்தால் அவரிடம் பாரப்படுத்தி தீர்வுகள் கண்டன. தூரத்திற்கு சைக்கிள் உழக்கி வர வேண்டி இருக்கவில்லை.ஒரு வலையமைப்பு. கட்டப்பட்டிருந்தது. இவர்களுக்கு போதிய உடல்வலு கிடையாது. ஆனால், எந்த இடத்திலும், நேரத்திலும் தோழர் நிற்பார். விடுதலைக்குழுச்சண்டை ஏற்பட்ட பிறகும் இவர்கள்..பின் நிற்கவில்லை. அந்த ஓர்மம். ஓர் தர்மம். அதை இழந்து விடவே கூடாது. உடலை வலுவாக்கிறதையும் கலையாகவும் கற்றுக் கொண்டாக வேண்டும்.

நம்மவர்களிடம் நிலவும் உடல்வலி குறைவை சமப்படுத்தவும் வேண்டும். சிலம்பு. கிலம்பு… என​ ஏராளமாக​ இருக்கவே செய்கிறது. ஒரு கிராமத்திற்கு தெரிந்தது மற்றதுக்கு தெரியாது. கற்றறிய வேண்டும்.இவர்கள் குறைத்தாலும் மக்களிடம் சண்டியர்களும் ‘ குறையவில்லை . “திருப்பி அடிப்போம்”கதையைப் பரப்பி விடுவர். ஆனால், கைவைக்கப் சிறிதளவு பயம். பெடியள் கைவைப்பவரை சாம்பி விடும் . ஆற்றிலே அடித்தால் குளத்திலே நிச்சியம் அடி விழும் என்ற பயம் நிலவத் தான் செய்கிறது. பலம் சேதப்பட்டு விட்டது .

கழுகு, மற்றதை விட​ தனியே பறக்க ஆசைப்பட்டது.எல்லாற்றையும் விட மேவி எழவும் விளைந்தது. அது தான் பிரச்சனையாகி போனது.

அதன் சகோதர மோதல்களால் அநியாயமாக தோழர்கள் மாண்டு போனார்கள். உட்கொலையும் சகோதரக்கொலைகளும் போட்டி போட்டு நடந்தன​. ஆனால், இரண்டுமே ஒன்று தான். கிடந்த பிளவு மேலும் விரிசலுக்குள்ளாகிப் போனது தான் மிச்சம். கழுகு ‘ஒட்டுக்குழு, ஒட்டுக்குழு’ என்றதையே சதா உச்சாடனம் செய்தது. கோயாபல்ஸின் தந்திரம் . பள்ளிப்பாடங்களை மனனம் செய்வது போல மயக்கமூட்டலை ஏற்படுத்துதல். துரோகக்குழு என்ற​ படிவு ஏற்பட்டுப் போய் விடும். பிறகு, துரோகியை கொல்றது தர்மம் என்ற​ நியாயம் பிறந்து விடும்.

இன்று ​பிறப்பவர்களுக்கு குழுக்களின் வரைகோடுகள் தெரியாமலே கழுகே மட்டுமே ஒரு ‘தலைமைக்குழுவாக’ தெரியத் தொடங்கியது. எனவே, அனேகர் ஒரு விதப்பார்வையில் சிக்கிப் போய் விடுகிறார்கள்.

ஈழவரசுக்கு கள்ளம் புரிய​, பறைய நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. புதைகுழிகளை ‘நாம் செய்யவே இல்லை’ என கூச்சமில்லாமல் மறுக்கின்றன. இனமுகத்தை வைத்துக் கொண்டு துணிச்சலாகத் தொடர்கின்றன். முஸ்லிம்களுக்கு கிராமங்களையும் வழங்கி தம் ஒட்டுப் பிரிவாக்கிக் கொள்கிறதும் நிகழ்கிறது. ஒன்றுடன் ஒட்டியது மற்றதுடன் ஒட்டாது. ஒரே கல்லில் பல மாங்காய்கள். இன்று, ஒட்டாத​ ஒட்டு மரங்கள் நிறைய,…தமிழர்களின் ஒற்றுமையை அது வெகுவாக பாதிக்கிறது, சந்தேகப்பட்சிகள் அதிகமாக பறக்கின்றன.

இவற்றுக்குப் ​ பின்னால் ஒளிந்தும் பல சுதந்திரங்களை அடித்து நொறுக்கின்றன​. போராட்டம் நெருப்பாறா ஓடுகிறது. வரைபு வலுவிழந்து போகிறது. விடுதலைக்கு வேண்டிய​ ஒரு பெரிய கட்டமைப்பை கட்டிக் கொள்ள வேண்டிய வேலை கட்டப்படாமலே கிடக்கிறது. முதலில், நிகழும் உட் கொலைகள் நிறுத்தப்பட்டாலே… ஓரளவுக்கு மூச்சு விட, சிந்திக்கவாவது நேரம் கிடைக்கும். கழுகு அதற்கு இடமளிக்காது. ஈழத்தைப் போல​ கழுகும் ஒன்றின் பேச்சைக் கேட்கிறதோ? என்ற​ சந்தேகமும் பிறக்கவே செய்கிறது.

சாதியம்

மேலும் இருவரும் இருளில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். என்ன தம்பி சொல்கிறாய் ? நீங்க, அனைத்து தோழர்களுமே சாதியம் பார்க்கிறதில்லை . சரி விடுதலைப் போராட்டம் தோற்றுப் போய் விட்டால் எதிரி, பிரித்தாளும் கொள்கையுடையது , சாதியத்திற்கு உயிரூட்ட தயங்க மாட்டாது . எல்லாமே மீள வந்து விடுமே, அவர்களுக்கு இருக்கிற பெரிய ஆயுதம் , பயன்படுத்தாமல் விட​ மாட்டார்கள். அப்ப​ என்ன செய்யப் போறீர்கள் ? “. “தெரியலையண்ணே. விடுதலைக் கிடைத்து, சட்டங்களால் சமப்படுத்தி, தோழர்கள் மூலமாக​ எல்லாத் தொழில்களிலும் காலை வைக்கிற போது , அவர்கள் பிள்ளைகள் , ஒரு சுமூக நிலைக்கு வந்து விடும் என்று​ நம்புறோம், அது இப்ப நிகழாமலே போய் விடுமோ என பயமாக இருக்கிறதண்ணை “என்றான். அவருக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

நாம் கட்டாயம் வெல்ல வேண்டும். தொடக்கத்திலிருந்தே நம் தோழர்களை சுட்டுத் தள்ள தொடங்கி விட்டினம். விடுதலைப் போராட்டத்தை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதே…தற்போதைய பெரிய தலையிடியாய் கிடக்கிறதண்ணை”. அடைத்த குரலில் சொல்கிறான். ராமைய்யா பதில் சொலுல்வார் ?. அதைக் கேட்க இருவரும் ஆவலுடன் இருந்தார்கள். இவர்கள் காகிதம் தயாரித்தல், இயற்கைவாயுவை ஏற்படுத்தி பயன்படுத்துதல், காளான் விவசாயம், மரம் நடுகை (குறைவாக நடந்தன) போன்றவற்றில் ஈடுபடுதல்….போன்றவை இறங்கி இராத துறைகளாகவும் இருந்தன. காடுவளர்த்தல் இயற்கையை காப்பாற்றுவதில் முக்கியமானது. அவசியம் தெரியாதவர்கள் அழித்து தான் வருகிறார்கள். இவற்றிலும் தோழர்களை பழ​க்க வேண்டும். இந்த இலட்சிய நெருப்பு இவர்களுள் எரிகிறது.

ஒருவேளை இந்த போராட்டம் தோல்வியடைந்தால்.. எழுத்தை ஆயுதமாக தூக்கி போராட வேண்டியிருக்கும். எழுத்துக்கள், எழுத்துக்கள். அவற்றிற்க்கு வலிமை பெற சுய காகித உற்பத்தி அவசியம். ஆயுதங்களிற்க்கு பிறர் கையை நம்பி ஏமாந்தது போல புத்தகங்கள் தடைப்படக்கூடாது. பிரிட்டீஸ் கல்வி முறையில் சிக்கிக் கிடக்கும் நம்மவர்களிற்கு வாசிப்புப்பழக்கம் பூஜ்யம் தட்டிப் போய்க் கிட​க்கிறது. கால்வாசி கூட நகராத முள்ளை…இப்படித் தான் கருதவேண்டிக் கிடக்கிறதை. அரைவாசிக்கு மேலே ஏற்றுகிற ​ போதே தேறி விட்டதாகி விடுகிறது, மூன்றில் இரண்டு பகுதியை தொடுகிற போது வெற்றியாக​ கூறப்படும். வாசிப்புபழக்கத்தை ஏற்படுத்துவதும் ஒரு வேலை, போராட்டம் தான்.

நாம் வாசிப்பிலும் தேறினால் தான் விடுதலையை அறிய​ முடியும். மண்ணில் சுதந்திரமாக​ வாழ முடியும். தென்னைத் தும்புகள் எடுத்து தும்புத்தடி, கிணற்றுக் கயிறுகள் தயாரிக்கிறது, பனை, தென்னையோலைத் தயாரிப்புகள், வெல்லம் தயாரிப்பு…என கொஞ்சம் நடந்து கொண்டு தானிருக்கின்றன. குழு மோதல்களால் வேகம் பெற முடியவில்லை. உள்ளே, வெளிய என நிலவுற பிரச்சனைகள் எதிர் நோக்க​….மாநாடு, பின்மாநாடு..என வைக்கவும் செய்கிறது. கேள்விக்குறியாகி இருந்தாலும் சீர்படுகிற வேலைகள் நதை பெறுகிறது. விரய நாட்களும் கூடுகின்றன​.

படை போடும் குண்டுகளால் மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் அழிக்கப்பபடுகின்றன. மகளிர் மரநடுகையை செய்து மீள்விக்க போராடுகிறது. இது எலிக்கு குஞ்சம் கட்டுறது போன்றிருக்கிறது. வேலை. சிறுக என்றாலும் நடைபெறுகிறது நற்குறி தானே!.

இன்று, உத்தமர். கறை படியாதவர், நீதி விசாரணை செய்பவர் என்று எருமே இலர் என​ மயக்கம் காட்டுகிறது.

இயக்கம் இல்லாமலே செய்யக் கூடிய​வைகளும் இருக்கின்றன​. வாய்க்கால்கள்..கால்வாய்கள் இவற்றையெல்லாம் நீர் நிறைய வைத்து, கண்ணுக்கு குளிர்ச்சியாக்கி மீள​ சீரமைப்பது பெரிய வேலையும் கிடையாது. மக்கள், வீடுகளில் கிடக்கிற தேவையற்றக் கற்களை, வாய்க்கால், கால்வாய், குளக்க்கரையில் கொண்டு வந்துகொட்டி விட்டால்…வாசிகசாலைப் பெடியள்கள் அவற்றை நிரவி விடுவர். அவற்றில் மீன்களை விட்டு வளர்த்து வத்தை, படகுகளில் ஓடி மீன் பிடிக்கிறது எழுந்தும் விட்டால்…அடுத்தடுத்தப் படிகளிலும் கட்டாயம் கால் வைத்து விடவும் வேண்டும்..சில முக்கிய பகுதிகளிலே மாத்திரமே நகரப்புறங்களிலே, சீமேந்து கட்டுடன் வேண்டிய தேவை இருக்கின்றன. பொறியிலாளர் நேரிலே நிற்க கதவு தடுப்புகள் கட்டுமானங்கள் நடைபெற​ வேண்டும்அரசும், அரச அமைப்புகளும் முறையற்ற ஆட்சியும் பாழ் படுத்துவதை மீள​ உயிர் பெற​ வைக்க​ முடியும். இப்படி குழுக்ளின் குறுகிய பொற்காலத்தில் (84 – 85களில் ) திட்டமிட்டவை, சிந்தித்தவை அனேகம். ‘ ஓடக்கரை ‘ இடமும், ஒழுங்கையும் கூட சங்கரத்தை சங்கானை வீதியில் வ்ழுக்கியாற்றுக்கு அயலில் இப்பவும் காண இருக்கிறது. குளங்களில் சிறு வள்ளங்களை செழுத்தி மீன்களை தாராளமாக​ பிடிக்கலாம் என்றெல்லாம் விரியும் பார்வைகள். கலாச்சாரங்கள், பண்பாடுகள் , பாரம்பரியங்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பவி சொல்ல​ ”தம்பி, உவையெல்லாம் கனவில் தான் நடக்கும் . நடைமுறையில் காணஇயலாது”என்று ராமைய்யா சொல்கிறார். பின்னால் வந்த​ இருவரும் சிரிக்கிறார்கள்.

அச்சமயம் அனைத்துப் படைத்தரப்புமே வடபகுதியில் செயலிழந்து போயிருந்தன. அவற்றின் உள்ளே உள்ளே நிகழ்ந்த சிற்சில​ சூடுகளே பெரிய தலைவலியைக் கொடுத்தன​. நம்பிக்கைகளுடன் நிலைத்து நிற்க திட்டங்கள் நிறைவேறுகின்றனவோ இல்லையோ தீட்டுவது முக்கியமாகவும்​, விரிவாக​ இருந்தன . பண்டமாறுட னும் இயங்குற மக்கள் கடைகள் கட்டிக் கொள்றதிலும் ஈடுபட்டிருந்தார்கள். வடிவம் எடுத்து விட்டால், சைக்கிள், மாட்டுவண்டிகளே போக்குவரத்துக்கு போதுமானவை. அரைவாசிச் செலவுகள் மாயமாகி விடும். சுங்கம் கடந்த அரசுகளைக் கண்டது தமிழர் மரபு.

சத்தம் கேட்டு பவி திரும்பிப் பார்க்கிறான். இப்ப அவன் பார்வையில் வெறிப்பு இருக்கவில்லை. இவள் பார்வையிலும் வெறுப்பு இல்லை. ஒட்டுக் கேட்கிறீர்களா? என்ற சிறு சிரிப்பே ஒட்டி இருந்தது. பாசறை வகுப்புகளில் ஆய்வு ரீதியாக பாடம் நடத்துவது உங்களுக்கெங்கே தெரியும் ‘ என்று அவன் புருவங்கள் ஏறுகிறது. அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. ‘ இவன் இன்னமும் வகுப்புக்கு போறதை நிறுத்தவில்லையா? ஆயுதத்தை தூக்கிக் கொண்டு திரிவான் என நினைத்தேன்”என்று தோழியிடம் மெதுவாக கூறினாள். அவன்குழு ஆதரவாளன். அவள் வீட்டிற்கு அவளின்அண்ணனை சந்திக்க​ அடிக்கடி வாரவன். ” கேட்டு வந்து சொல்லட்டா? “என்று சினேகிதி கூறிச் சிரிக்க, ”வாயை மூடிக் கொண்டு வாடி”என்று விட்டு இவள் விடு, விடுவென்று நடந்தாள். தோழியிடம் அவன் சொல்வது கேட்டது. வீட்டிலே வந்து “அம்மா இன்று பவியைப் பார்த்தேன். வித்தியாசமான​… ஆளாக இருக்கிறான். எங்களைப் பார்த்து கெதியிலே வீட்ட போய்ச் சேருங்கள், தேடப்போகினம்’ என்கிறான்”என்றாள். அவனுக்கு ஏதும் ஆபத்து சூழ்கிறதோ…என்று அவருக்கு தோன்றியது.

ஒரு அவ்ரோ விமானத்தின் இரைச்சல் தூரத்தே கேட்டது. அயலில் ஒரு கிராமத்தில் அது ஈரானியத் தயாரிப்பான பீப்பாய்க் குண்டை மிதக்க விட்டு, விட்டுப் போகலாம். அது கிரீஸ் அடைக்கப்பட்ட பீப்பாய்.. ஒருமுறை கீழே விழுந்து ஒரு மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. நிலத்தில் விழுந்து ஏற்படுற சிதறலில் … எல்லாமே காட்டுத் தீ போலபரவி எரியும்.மெதுவாக​ பீப்பாய் மிதந்து வார போது மக்கள் மரங்களில் மறை எடுத்து விடுவார்கள். ஆட்களின் உடம்பில் தெளிபட்டிருந்தாலும் எரியும் என்கிறார்கள். கவனம் வேண்டும். அரபு முஸ்லிம்களும் ஈழத்தமிழருக்கு எதிரிகள் இல்லை. ஆனால், நாடு, நாட்டுக்கு உதவுற என்ற முறையில் அது உதவுறது. அதைத் தொடர்ந்து கிபீரீன் ஒலி. போர் ஜெட் விமானம். வானில் எட்டு எழுதிப் போட்டு எவு(எரி)கணையை வீசி விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. இதிலிருந்தும் முகாமிலிருந்து எறியப்படும் குண்டுகளிலிருந்து தப்பவே பதுங்குகுழிகள் பரவலாக கட்டப்பட்டன. ஒரியக்கம், ஓருமுறை நிலத்திற்கு மேலேயேயும் மணல்மூட்டை வைத்து அறைகளைக் கட்டியது. விரைவான நகர்வு வேண்டும். வயசானவர் பெண்கள், பிள்ளைகுட்டிகளை இழுத்துக் கொண்டு கீழே செல்ல…நேரம் ஓடி விடும். அறைக்கட்டுவது …வெகு சிரமமாக​ இருக்க​, அது..கை விடப்பட்டு விட்டது. காலம் எத்தனையைக் கடந்திருக்கிறது.

ஒருமுறை, கழுகு மோதலில் ஒரு குழுவைச் சேர்ந்த தோழர்களை தொகையாக சுட்டுக்கொன்றதில் வடபகுதியே உறைந்து போய் நின்றது. விடுதலைக் கிடைக்க​ முதலே போராளி அழிப்புக்கள் உயிர் பறிப்பு மலிவாக நடைபெறுகிறது. ஈழவரசு எறிகணை வீச்சை நிறுத்தவில்லை.

“எஞ்சியவர்கள் சரணடையிற பட்சத்தில் மன்னிப்பு வழங்கப்படும் ‘என ஒலிபரப்பிய போது. சில பெற்றோர்… தம்பிள்ளைகளை கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினர், ஏஜெஞ்சிகளின் காலிலே கையிலே விழுந்து கையோடு கொழும்பிற்கு விரட்டினர். எங்கையிருந்தாலும் உயிரோட இருந்தால் போதும். என்ற பரபரப்பு பரவி இருந்தது. ஏஜெஞ்சி ஆட்களும் ஈர இதயத்துடன்…உதவினர். எங்குமே கழுகுத்தோழர்களின் திமிரான​ திரியல்கள். மற்றயவை நோக்கியும் அம்புகள்…குறி வைக்கப்பட்டிருந்தது தெரியாமலா இருக்கும் . பவித் தோழர்களிலும் பலர் கொழும்பிற்கு விலகினர். கனகவல்லியின் பெற்றோர் இவன் மட்டும் ஏன் போகாதிருக்கிறான்?” என பேசிக் கொண்டனர். இவளுக்கும் பயமாக இருந்தது.

ஒரு நாள் ராமைய்யாவுடன் நடந்து சென்று கொண்டிருந்த பவியை இருவர் மறித்தார்கள். பலரும் காணாமல் போய்க் கொண்டேயிருக்கின்றனர். விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட இவனும் உதிர்ந்து விட்டதாக கதைக்க படுகிறது. போய் சேர்ந்து விட்டான்… செய்திகள் அவளை வலிக்கச் செய்கின்றன. நகரத்தில் வங்கிக்கொள்ளை, சூடுகள், குண்டுவெடிப்புக்கள், தீடீரென உயிரிழக்கும் மனிதர்… மத்தியிலும் பள்ளிக்கூடமும் போய், டியூசன் வகுப்புகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறாள். எய்யப்படும் எல்லா அம்புகளும் ஏகத்திற்கு வலுவிழந்து போய் விட்டன. எங்கோ எய்யிற அம்பு எங்கோ போய் தைக்கிறது போல போராட்டமும் தடமிழந்து பொலிவிழந்து போய் விட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *