கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,552 
 
 

பொண்ணு பார்க்கப்போன மொக்கச்சாமி நிலையாகிவிட்டது… ரயிலுக்குள் விண்டோ சீட்டில் உட்கார்ந்திருந்த அவர்கள் நிலையும்.

என்ன விண்டோ சீட்டா இருந்து என்ன பிரயோஜனம்?!

“மாயண்ணே வந்திருக்காக!., மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காக!.,மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! … ‘வாம்மா.. மின்ன(ல்)ள்னு’ சொல்ல, சரக்குனு ஓடி மறையற பொண்ணாட்டம் கடந்தது மறைந்தன வழிநெடுக மஞ்சள் ஸ்டேஷன் போர்டுகள்!.

‘மாப்பிள்ளை, நீ பார்த்தயாடா?…’ ஒருத்தருக்கொருத்தர் கேட்க,

ரயில்ல இருந்த ஒருத்தர் கூட என்ன ஸ்டேஷன்னு பார்த்தேன்னு சொல்ல முடியாத வேகத்தில் ஒவ்வொரு ஸ்டேஷனும் ஓடி மறைந்தன..

பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட இந்த ஸ்டேஷனுக்கு அடுத்து எறங்குங்கன்னு போன்ல சொன்னாங்க…!

இறங்க வேண்டிய ஸ்டேஷன் நியாபகம் இருக்கு! ஓடி மறையற ஸ்டேஷன் தான் என்னன்னு ஒண்ணு கூட புரியலை.!

அதற்குள் அழைத்துப் போக வந்தவர் அஞ்சாறு தடவை போன் பண்ணீட்டார்.. ’எங்க வந்திருக்கீங்க? எங்க வந்திருக்கீங்கன்னு கேட்டு?’

தெரியலைனு சொல்ல முடியலை…! ‘ஸ்டேஷன் பேர்’ தெரியலைனு சொல்றதை படிக்கத் தெரியலைனு நெனைச்சுட்டா? யாரோ பூசிய ‘தார்பூச்சூ’ ஹிந்தியையும், இங்கிலீசையும் மட்டுமல்ல.. அந்த மாப்பிள்ளையின் எதிர்காலத்தையும் கரியாக்கித் தகர்த்துவிட்டது!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *