உந்தன் நிழலாய் நானடி தோழி…

0
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 190
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-36

அத்தியாயம் – 31

நா சாருவப்பாக்கணும் என்றாள் ரேவதி.குரலில் உறுதி தெரிந்தது.

வெடிகுண்டைக் கொளுத்தி மடியில் வீசியதைப்போல் அதிர்ந்தான் முரளி.

வியர்த்துப் போனான்.

எ..எ..என்ன சொல்ற ரேவதி..

என்றான்..குரல் நடுங்கியது..

நா சாருவப் பாக்கணும்னே.

எ ஃப்ரெண்ட பாக்கணும்..

எ சாருவப் பாக்கணும்.

ரேவதி வேண்டா..ஒ.. ஒ ஃப்ரெண்ட பாக்கற தைரியமோ தகுதியோ எனக்கில்ல..

ஓ..சாரு இப்ப எ ஃப்ரெண்டா மட்டும் ஆயிட்டால்ல?.. ஒ..ஃப்ரெண்டங்கிறேள்..

சாரு ஒங்க முன்னாள் காதலிங்கிறத மறந்துட்டேள்.. அப்பிடித்தானே?

இதயத்துலேந்து அவளப் பத்தின நெனைப்ப யெல்லாம் சொரண்டி யெடுத்து தூக்கியெறிஞ்சி

ஹார்ட்ட சுத்தப்படுத் தின்ட்டேள்.. அப்பிடித்தானே?

அப்பறம் ஏ டைரீல..

ஒங்கள நெனைக்கத் தெரிஞ்ச மனசுக்கு ஒங்கள மறக்கத் தெரீல சாரு ன்னு எழுதினேள்?

ரேவதி நீ கேக்கற கேள்விக் கெல்லாம் எங்கிட்ட பதிலில்ல..பதில் சொல்ல முடீல..

முடிஞ்சுபோன கதைய மறுபடியும் தொடங்க வேண்டாம் ரேவதி.

எது முடிஞ்சுபோன கத?..

சாருவோட நட்பு எ உயிர் இருக்குறவர முடிஞ்சு போகாது.அப்பறமும் தொடரும்.நா சாருவ பாக்கணும்.

புடிவாதம் புடிக்காத ரேவதி.

அவங்கள சந்திக்கிற தைரியம் எனக்கில்ல..

நீங்க சந்திக்க வேண்டாம்.

எ சாருவ நா பாக்கறேன்.

பாக்கணும்.

அவகிட்ட என்ன கொண்டு விட்டுடுங்கோ போதும். ஒங்க ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கணுமா வேண்டாமாங் கிறது காலத்தோட விருப்பம்.

ரேவதி..நீ இப்ப இருக்குற நெலமேல பம்பாய்மாரியான தூர தேசத்துக்குலாம் டிராவல் பண்ணமுடியாது.

டெலிவரி டைம் நெருங்கிட்ட இந்த நேரத்துல அவ்வளவு தூரம் பயணிக்கிறது ரொம்ப ரிஸ்க்.வெஷப்பரிக்ஷ வேண்டா..வழீலயே எதாவது ப்ரர்ச்சன ஏற்படலாம்.

டெலிவரீலாம் முடிஞ்சு அப்பறமா யோஜிக்கலாம்..

வீணா அலட்டிக்காத ரேவதி..

மொதல்ல சாப்புடு..நா ஹோட்டல்ல போயி சாப்பாடு வாங்கிண்டு வரே.

முடியாது..சாருவப்பாக்க ணும்.அதுவும் இன்னிக்கே கிளம்பணும்..

ரேவதி பைத்தியம் மாரி பேசாத.. கிட்டத்துல ப்ரசவத்துக்கான தேதிய வெச்சுண்டு பம்பாய் போணும்..அதுவும்  இன்னிக்கேங்கற..என்ன வெளையாட்டு இது?

ஒனக்கும் கொழந்தைக்கும் நல்லதில்ல தூரப்பயணம்.

அவன் சொல்லச்சொல்ல அவளின் பிடிவாதம் அதிகமானது.

நீங்கமட்டும் இன்னிக்குக் கிளம்பல ஒரு சொட்டு தண்ணிகூட குடிக்க மாட்டேன்.சாப்ட மாட்டேன்.

நானும் கொழந்தையும் எப்டியோ போறோம்.

ரேவதியிடம் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லை. தோற்றுப்போனான் முரளி.

விதி விளையாட நினைக்கும் போது அதைத்தடுக்க யாரால் முடியும்?

சரி பம்பாய் போக ராத்திரி ஃப்ளைட்டுக்கு ஏற்பாடு செய்யறேன்.மொதல்ல சாப்பாடு வாங்கிண்டு வரே சாப்புடு.ஹோட்டலில் சாப்பாடு வாங்க கிளம்பியவனை..

மொதல்ல பம்பாய்க்கு நிச்சயமா இன்னிக்குக் கிளம்பலாம்னு ப்ராமிஸ் பண்ணுங்கோ..அப்றம் சாப்பாடு வாங்கலாம்.

கடைசி நேரத்தில் கேன்சலான இரண்டு டிக்கெட்டுக்களை ஏஜெட்டிடம் ஒன்றுக்கு இரண்டுபங்கு பணம் கொடுத்து வாங்கினன் முரளி.

டிக்கெட் வாங்கியாகிவிட்டது என்று தெரிந்ததுமே.. முரளியின் டைரியையும்..

சாருவும் முரளியுமிருக்கும் போட்டோக்களையும் ஓர் கவரில் எடுத்துவைத்து..

அதில் ஆன்புத்தோழி சாருவுக்கு என்று தொடங்கி..

மனதிலுள்ளதையெல்லாம் எழுதிக் கொட்டித்தீர்த்து கடிதமொன்றை எழுதி..

டைரியின் உள்ளே வைக்காமல் டைரியின் அட்டைமேல் வைத்து.. கவருக்குள் வைத்து கவரை ஒட்டி..க்ராஸ்பாடி பேக்குக்குள் வைத்து இடது தோளில் மாட்டி வலது பக்க இடுப்பில் படியவைத்துக் கொண்டாள் ரேவதி.

ஃப்ளைட் ஏறியாகிவிட்டது.

அருகருகே அமர்ந்திருந் தாலும் முரளியும் ரேவதியும் ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை.

இப்படித்தான் முரளியின் மனது கலங்கிப் போயிருந் தது என்று வர்ணிக்க.. வார்த்தைகளைத் தேடினால் நிச்சயம் கிடைக்காது.

ரேவதி அப்படியே மனதால் உறைந்து போயிருந்தாள்.

ஃப்ளைட்டில் சிலையாய் அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

ஜன்னலோரம் நாற்காலி யொன்றில் அமர்ந்து வானத்தை வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாரு.

கடந்த ஆறுமாசத்துல  என்னல்லாம் நடந்து போச்சு?

ஏ என்ன விதி இப்படி வெரட்றது? நா அப்படி ஒரு பாவியா?

என்ன வாழ்க்கை இது?

நா அன்பு வெக்கிற யாரையும் என்னோடு இருக்க வைக்காமல் அவாள எங்கிட்டேந்து பிரிச்சு சந்தோஷப்படறுதுல பாழும் விதிக்கு அப்பிடியென்ன ஆச?

நா பொறந்தவொடனேயே எங்கிட்டேந்து அம்மாவப் பிரிச்சு..அப்பாவோட பாசம் கிடைக்காம வெச்சு..

என் உயிர்த்தோழி ரேவிட்டேந்து என்னப் பிரிச்சு..

பொய்யான காதல நெஜம்னு  நம்பி உண்மையான காதல அந்தப்பாவிமீது வெக்க வெச்சு..ஏமாந்துபோக வெச்சு..

தங்களுக்குப் பொறக்காத பொண்ணான என்ன தாங்களே பெத்தாப்ல.. பெத்த பொண்ணா நெனச்சு..பொய்யில்லாத உண்மையான பாசத்த எம்மேல கொட்டி வளர்த்து என்னப் படிக்கவெச்சு ஆளாக்கி..

புகழ்பெற்ற மருத்துவரா என்ன உருவாக்கி அழகுபார்த்த.. என்னப் பார்த்துப் பார்த்துப்  பெருமைபட்ட என் லோச்சு அம்மாவையும்..தியாகு அப்பாவையும் பாழும் விதியே..

சாதாரண ஜொரமா வந்து எந்த சிகிச்சைக்கும் அடங்காம ஒரே வாரத்துல எ லோச்சு அம்மாவ கொண்டு போன..

அப்பிடியும் ஓ வெறி அடங்கல..அதே ஜொரத்தால எ தியாகு அப்பாவயும் வாயில போட்டுண்டயே பாழும் விதியே..

என்ன மட்டும் ஏ விட்டு வெச்ருக்க? நா இன்னும் எதயெல்லாம் சந்திக்கணும்?இன்னும் என்ன துன்பம் எனக்கு பாக்கியிருக்கு நா அனுபவிக்க?

எனக்குக் கல்யாணம் பண்ணிப்பாக்கணும்னு ஆசப்பட்ட அவா ஆசய நிராசயாக போகவெச்ச பாவி நா..

தலதொட்டு தோள்தடவி ஆறுதல் சொல்லக்கூட ஒறவுன்னு யாருமில்லாத அனாதையா..

நா ஏ இருக்கே இன்னும் உயிரோட?..

யாருக்கு என்ன பாவம் செஞ்சே..பாழும்விதியே நீ என்ன ஆட்டிப்படைக்க?

கைகளுக்குள் முகம்புதைத்து அழுதாள் சாரு.

லோச்சு அம்மாவும் தியாகு அப்பாவும் அடுத்தடுத்துப் போய்விட..

பைத்தியம் பிடித்தவள்போல் ஆகிவிட்ட சாருவை சீனியர் டாக்டர்களான சுஜிதாவும்.. தீபிகாவும்தான் ஆறுதல் படுத்தி இயல்புக்குக் கொண்டு வந்தார்கள்.

லோச்சு அம்மாவோடும் தியாகு அப்பாவோடும் இருந்தவீட்டில் அவர்கள் இல்லாமல் இருக்க முடியாது போக..

வேறு பகுதிக்கு வீடுபார்த்து வந்து விட்டாள் சாரு.

ஆனாலும் டாக்டர் சுஜிதா டாக்டர் தீபிகாவை விட்டுப் பிரியவில்லை.அவர்களோடுஅவர்களின் மருத்துவமனை யில்தான்தான் பணியாற்றி வந்தாள் வந்தாள்.

சாருலதா..நீங்க வீட்லயே அடஞ்சு கெடக்காதிங்க.. அதுவே ஒங்க வேதனைய அதிகப்படுத்தும். நீங்க ஒரு டாக்டர்.. ஒங்ளுக்கு சொல்ல வேண்டாம்.ஹாஸ்பிடலுக்குவாங்க.. பணியில மனச செலுத்துங்க..அதுதா கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்..என டாக்டர் சுஜிதாவும்..டாக்டர் தீபிகாவும் மாற்றிமாற்றி போன் செய்ய..

கடந்த ஒருவாராமாய்த்தான் ஹாஸ்பிடல் செல்ல ஆரம்பித்திருந்தாள் சாரு.

ப்ச்..கிளம்பணும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு நாற்காலியிலி ருந்து எழுந்தாள்.

ஃப்ளைட்டிலிருந்து இறங்கி யாயிற்று.

ரொம்பவும் அசதியாய் இருந்தது ரேவதிக்கு.

ஃப்ளைட்டின் முன் புற இருக்கைகளுக்கும் பின்புற இருக்கைகளுக்கும் இடையே இடைவெளி அதிகமிருக்காது என்ற காரணத்தால் ரேவதியால் கால்களை வசதியாய் வைத்துக்கொள்ள முடிய வில்லை.

ஏற்கனவே வீங்கி சுரந்து போயிருந்த கால்கள்.. இப்போது வாழைமரத்தின் அடிபாகம் போல் மேலும் சுரந்துகிடந்தன.ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியவில்ல.

உட்கார்ந்தே இருந்ததால் முதுகும் இடுப்பும் வலித்தன.

வெறும் வயிறு சப்தமிட்டது.

பசியாலோ என்னவோ வயிற்றில் குழந்தை கைகாலை நீட்டியது.

ரேவதி பாத்ரூம் போணுமா?

பயணநேரம் முழுவதும் பேசாமலிருந்த முரளி கேட்டான்.

ம்..என்றாள் ரேவதி.

பாத்ரூம்போய்வருவதற்குள் தவித்துப்போனாள் ரேவதி.

ரேவதி ஒ சாரு இருக்குற பம்பாய்ல இப்ப நீ இருக்க..என்றது மனது.

ஆமா..எ சாருவுக்கு உரிமையானவர அவள்ட்ட ஒப்படைக்கணும்.

என்ன பேத்தலிது?..நீ முரளிய சாருகிட்ட..இந்தா ஒம் முரளினு சொல்லி முரளி கையபப்புடிச்சி சாருகைல குடுப்ப..ஒடனே..ஹை எ முரளீன்னு முரளிகையப் புடிச்சிப்பாளா சாரு? 

அவுளுக்கும் மானம் ரோஷம் கிடையாதா என்ன?

பேத்தல நிறுத்து.. என்றது மனம்.

எத நாம.. நம்பிக்கையோட நடக்கும்னு நெனைக்கிறமோ அது நடக்கும்..

ஆன்றோர் வாக்கு.. சான்றோர் வாக்கு..சினிமா வசனம்..இதெல்லாம் கேக்க நன்னாருக்கும்..பேச நன்னாருக்கும்..அதுபோல நடக்கும்னு எதிர்பாக்கக் கூடாது.

நடக்கும்..தீர்மானமாய்ச் சொன்னாள் மனதிடம்.

ரேவதி இப்பவும் சொல்றேன்..ஓ ஃப்ரெண்ட பாக்கவேண்டாம்..திரும்ப ஊருக்குப் போயிடலாம்..

ப்ளீஸ் சொன்னபேச்ச கேளு ரேவதி..கெஞ்சினான் முரளி.

ஏ..சாருவ பாக்க பயமாருக்கா?குத்தமுள்ள நெஞ்சு.. அப்டிதா பயப்படும்.

சோர்ந்துபோனான் முரளி.

அய்யோ..சாருவ எப்பிடிப் பாப்பே..பொண்டாட்டியோட போய் எப்பிடி நிப்பே? அதுவும் வயத்துப்புள்காரியா இருக்கற பொண்டாட்டி யோட..மனம் முழுவதும் வேதனை நிரம்பியது.

தலைக்குமேல வெள்ளம் போயாச்சு..சாண்..மொழம்லா போட்டுப்பாத்து எதுவும்  நடக்கப்போறதில்ல..

சாரூ..மன்னிச்சிடுங்க சாரு..

தாத்தாட்ட பேசவேண்டியத தைரியமா பேசத் தவறியதால..அதுக்கான நேரம் அமையாததால..

நடக்க வேண்டாததெல்லாம் நடந்துபோச்சு..நா ஒங்கள மனசறிஞ்சு..வேணும்னே ஏமாத்தல..நா திட்டமிட்டுலா ஒங்குளுக்கு துரோகம்லா பண்ணல..

நா சூழ்நிலைக் கைதியாயிட்டே சாரு..

விதி வெளயாடின வெளையாட்டு இது..

மனசுக்குள்ள நா அழறது யார் காதுலயும் விழாது சாரு..

ரேவதி..எதாவது சாப்டு..தோ பக்கத்துல இருக்கற ரெஸ்ட்டாரென்டுக்குனா போவமா?

வேண்டா..

வேண்டாம்னா என்ன அர்த்தம்?நீ ரேவதிங்கிற தனியொருத்தியில்ல.. எம்மேல இருக்கற வெறுப்புல கொழந்தைய பட்னி போடாத ரேவதி.

ரெஸ்ட்டாரென்டில் லைட்டாய் சாப்பிட்டார்கள்.

சாருவாம் தெரியுமா?அட்ரஸ் தெரியுமா?

ம்..

கார் அமர்த்திக்கொண்டு..

இருவருமே பின் இருக்கை யில் அமர்ந்தார்கள்.

கார் டிரைவரிடம் முகவரி சொன்னான்.

மணி ஏழர ஆகுது..இந்த அட்ரஸுக்குப்போக எத்தன மணி நேரமாகும்?

இப்பமணி ஏழரயா?எட்டரைக்குள்ள போயிடலாம்.

சரளமாய் டிரைவருடன் ஹிந்தியில் பேசும் முரளியை பார்த்தாள் ரேவதி.

சாருவும் ஹிந்தீல பேசுவாள்ள..என்று தோன்றியது.

கார் வேகமெடுத்தது.

சாருவீட்டில்.. தான் ரேவதி யோடு போய் நிற்கும்போது என்ன நடக்குமென்று நினைத்து நினைத்து பயந்தான் முரளி.

சாரு.. அவன் போகும் முகவரியில் இல்லை யென்பதை அவனெப்படி அறிவான்?

ரேவதி ரொம்பவும் களைத்துப் போயிருந்தாள்.

சீட்டின் தலைப்பகுதியில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள்.ஒரே மாதிரி ஐந்து நிமிடம்கூட உட்கார விடவில்லை வயிற்றுச்சுமை.

உடலை ஏதோ செய்தது. வயிற்றுக்குள் ஏதோ கட்ட விழ்வது போல் இருந்தது.

கார் கடுமையான டிராபிக் கில் நீந்திச் சென்று கொண்டிருந்தது.

லேண்ட்லைன் போன் கிணுகிணுத்தது.

போனை எடுத்துக்காதில் வைத்தாள் சாரு.

ஓ..சுஜிம்மா லீவா..தீபிகா மேடம் வந்துருக்காங்க.. ஆனா அவங்களுக்கு  ஃபீவர்.. ஓகே..ஓகே..தோ..

கிளம்பிட்டே..வந்துர்ரே..

மணிபார்த்தாள்.ஏழு அம்பது.

ஹாஸ்பிடலில் கார் நுழைந்தபோது மணி எட்டுபத்து.

டாக்டர் தீபிகாவின் அறையை எட்டிப்பார்த்து குட்மார்னிங் சொல்லி… ஃபீவர் பத்தி விஜாரித்தாள்.. 

குட்மார்னிங் சொன்ன நர்சுகளுக்கு பதில் வணக்கம் வைத்தாள்..

பொதுமருத்துவர் குமாருக் குத் தானே குட்மார்னிங் சொன்னாள்.

தன் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.கேஸ் ரிஜிஸ்டரைப்புரட்டினாள். இன்று டெலிவரி கேஸ் ஒன்றுமில்லை..செக்கப் மட்டும்தான் என நினைத் தாள்.

ரேவதி சாதாரணமா இருக்கியா?தன் மனப்போராட்டத்தை மறைத்துக்கொண்டு ரேவதியிடம் கேட்டான் முரளி.

அனீசியாய் இருந்தாலும் அவனிடம் அதைச்சொல்ல மனமில்லை ரேவதிக்கு..

ரொம்ப இவர டார்ச்சர் பண்றமோ?இவர் தாத்தா படுத்தின அவசரத்தால இவரால மனசுல இருக்கறத சொல்லமுடியாம போச்சோ..

மூஞ்சியே நன்னால்ல.. பயந்தாப்ல தெரியறார்.

பாவமில்ல..

தவிப்பாய் இருந்தது ரேவதிக்கு.

மெல்ல அவன் கை தொட்டாள்.பயப்படறேளா?

அவன் கண்களில் நீர் திரையிட்டது.

ரேவதியின் இதமா..சாருவை நினைத்தா..சுய பச்சா தாபமா? எதனால் அவன் கண்களில் கண்ணீர்?

ரேவதி..என்றான்..மெல்ல அவள் கையை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டான்.ஜுர நேரத்தில் அம்மா மடியைத்தேடும் குழந்தைபோல..

படக் சடக்..ப்ரேக் வேலை செய்யாமல் அடம்பிடித்தது.

கார் கொஞ்சமாய் கட்டுப்பாட்டை இழந்தது போல் தாறுமாறாய் நகர்ந்தது.டிரைவர் பயந்து போனார்.

எதிரே கனரகவாகனம் கனகச்சிதமாய்.. தவறேதுமில்லாமல் அதுபாட்டுக்கு தேமேனென்று வந்து கொண்டிருந்தது..

காரின் கட்டுப்பாடு டிரைவரின் கைமீறிப் போனது..

டமார்..கார் கனரக வாகனத்தின்மீது முரட்டு வேகத்தில் மோதியது.

ஜன்னல் கண்ணாடி தூளாகி ரேவதியின் பின்னந் தலையில் குத்தி இறங்கியது..முகத்தில் சின்னச்சின்ன பீஸ்கள் குத்தி நின்றன.கதவு திறந்து கொண்டது.

வெளியில் சாலையில் வந்து விழுந்தாள் ரேவதி.விழுந்த வேகத்தில் பனிக்குடம் உடைந்து வெண்மைத் திரவம் சாலையில் பரவியது.

மூர்ச்சையானாள் ரேவதி.

இடப்புற ஜன்னலும் திறந்து கொண்டாதால் முரளி வெளியே வீசப்பட்டு சென்டர்மீடியனில் தலை மோதி கீழேவிழுந்தான்.

டிரைவர் ஸ்டியரிங்கில் குப்புற.. உயிரின்றி சாய்ந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து. மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து வெறும் இருபதே அடியிலிருந்தது சாரு பணியாற்றும்..லைஃப் கேர் மெடர்னிடி ஹாஸ்பிடல்.

அத்தியாயம் – 32

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து.

மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

போக்கு வரத்து நின்று போனது.

போலீஸ் வந்து குவிந்தது.

சாலைவிபத்தில் சிக்கிய வர்ளை சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனைக்குதான் கொண்டு செல்ல வேண்டு மென்பது விதியென்றாலும் நிறைமாத கர்பிணிகளுக்கு விதித் தளர்வு உண்டென்பதால்..

விபத்து நடந்த இடத்தின் அருகிலேயே இருந்த அந்தத் தனியார் மகப்பேறு மருத்துவ மனைக்கு உடனடியாய் கொண்டு செல்லப்பட்டாள் ரேவதி. 

ஆம்புலன்ஸ் வந்து முரளியை.. கொஞ்சம் அதிக  தொலைவிலிருக்கும் அரசுமருத்த மனைக்குக் கொண்டு சென்றது.

டிரைவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்கும்..

தத்தளமாய் நசுங்கிப்போன கார் போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

டாக்டர் முந்தாநாள் டெலிவரியான ஆறாம் நம்பர் ரூம் ஸ்வெட்லானா முதுகுவலி தாங்கலன்னு நைட் முழுக்க பொலம்பிக் கிட்டே இருந்தாங்க..

தன்னிடம் சொல்லிக் கொண்டிருந்த நர்சுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் சாரு.

டாக்டர்..டாக்டர்..நம்ம ஹாஸ்பிடல் வாசல்ல ஆக்ஸிடென்ட் நடந்துபோச்சு.

ஆக்ஸிடென்ட்ல அடிபட்ட ப்ரெக்னென்ட் லேடிய ஆபத்தான நெலேல தூக்கிட்டு வந்துருக்காங்க..

ரொம்ப சீரியஸான நெலம..

கண்ணாடிகுத்தி தல.. மொகத்துலேந்து ப்ளட் அதிகமா வெளியேறுது..

பனிக்கொடம் ஒடஞ்சு..

டாக்டர் டாக்டர் சீக்கிரம் வாங்க..இரண்டு நர்சுகள் சாருவிடம் வந்து விஷயதைச்சொல்லிப் பரபரத்தார்கள்.

போலீஸார் வந்து நின்றனர்.

டாக்டர் குமார்ட்ட சொல்லியாச்சா?..அந்த லேடி தலேலயும் மொகத்துலயும் குத்திருக்குற கண்ணாடிய எடுக்கணும்.. ப்ளீடிங்க நிறுத்தணும்..டாக்டர் தீபிகா மேடத்துட்ட சொல்லிட்டீங் களா?க்விக்..க்விக்..

அந்தலேடிய லேபர் ரூமுக்கு கொண்டு போயாச்சா?..

கேள்விகளை அடுக்கிக் கொண்டே..லேபர்வார்டை நோக்கி வேகமாக விரைந்தாள் சாரு.

லேபர்ரூம்..நர்சுகளும்.. ஹெல்பர்களுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தது.

டாக்டர் குமார்.. மயக்கத்தி லிருந்த ரேவதியின் தலையில் செருகியிருந்த கண்ணாடியை வெளியே எடுக்க தீவிரமாய் முயன்று கொண்டிருந்தார்.தலை என்பதால் ஏகமாய் ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.

அவருக்கு உதவியாய் இரண்டு நர்சுகளும் ஹெல்ப்பர்களும்..

டெலிவரி பார்க்க டாக்டர் தீபிகாவும்..சாருவும்..நர்சு களுமாய் லேபர்ரூம் அல்லோலகல்லோலப் பட்டது.

பனிக்குடம் ஒடஞ்சு தண்ணீல்லாம் வெளி யேறிட்டதால கொழந்தய சுத்தி தண்ணியே இல்ல..

இது கொழந்த உயிருக்கு ரொம்ப ஆபத்து..

ப்ளீடிங்வேற ரொம்ப அதிகமா ஆகுது.. க்விக்..க்விக்..கொழந்தைய சிஸர் பண்ணி வெளியே எடுக்கணும்..லேடிவேற அடிபட்டதால மயக்கமா இருக்காங்க..ரொம்ப க்ரிடிகல் ஸ்டேஜ்..

சாருலதா.. லேடி வயித்து லேந்து கொழந்தைய எடுங்க..பேபி ஒடம்புல அசைவு இருக்கு சீக்கிரம்.. பக்கத்தில் நின்ற டாக்டர் தீபிகா சொல்ல அவசர கதியில் இயங்கினாள் சாரு.

ரேவதியின் முகத்திலும் தலையிலும் சிகிச்சையளித் தவாறு பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார் டாக்டர் குமார்.

ஒரே நேரத்தில் இரண்டு குழுக்கள் ரேவதியையும் குழந்தையையும் காப்பாற்ற அவசரகதியில் இயங்கிக் கொண்டிருந்தன.

டெலிவரி பார்ப்பவர்கள் ரேவதியின் முகத்தைப் பார்க்கவில்லை..

ரேவதியின் தலை.. மற்றும் முகத்துக்கு சிகிச்சை அளிக்கும் குழு சிஸேரியன் நடக்கும் பக்கம் திரும்ப வில்லை.

அவரவர் கடமையில் கண்ணாய்யிருந்தனர்.

இரண்டு உயிர்களையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே இருந்தது அனைவரிடமும்.

உறையணிந்திருந்த கைகளினால் மெல்லக் குழந்தையை வெளியே எடுத்தாள் சாரு.

புது சூழ்நிலையும்.. வெளிக் காற்றும்..தாயின் வயிற்று இருட்டு இல்லா நிலையும் குழந்தையை வீரிடவைத்தது.

கத்தித் தீர்த்தது அந்தப் பெண் குழந்தை.

பெண்குழந்தையென்றால் பிறந்தநொடி..வெளியுலகில் பிரவேசித்த நொடி யாரோ முதுகில் ரெண்டு அடி வைத்தாற்போல்.. தொடை யில் கிள்ளினாற்போல் வரா..வராவென்று கத்தி ஊரைக்கூட்டும். 

ஆனால் ஆண் குழந்தை யென்றால் சன்னமான குரலில் குவா.. குவா என்று கத்துவதோடு சரி.. அழுகை யை நிறுத்தி விடும் என்று கிராமங்களில் சொல்வ துண்டு..அதனை நிஜமாக்குவது போல்..

வீரிட்டது அந்தப்பெண் குழந்தை..

பெண்குழந்தை என்பதை உறுதிப்படுத்திக் கொண் டாள் சாரு.

மெல்லக் குழந்தையின் முகத்தருகே முகத்தைக் கொண்டு சென்று வெல்கம் பேபி என்றாள்.

பக்கத்திலிருந்த நர்ஸிடம் குழந்தையைக் கொடுத்து விட்டுத் திரும்பியபோது..

ஓ மைகாட்..முடிஞ்சு போச்சு என்றபடி ரேவதியின் தலையிலிருந்து கைகளை எடுத்தார் டாக்டர் குமார்.

சட்டென அனைவரின் பார்வையும் ரேவதியின் முகத்தில் நிலைத்தது.

சாருவின் பார்வை ரேவதியின் முகத்தைத் தொட்ட நொடி..அவள் கண்கள் சுருங்கின.

என்னது ரேவிமாரியே இருக்காங்க இவுங்க.. நினைத்தவளின் கால்கள் தாமாகவே ரேவதியின் அருகில் சென்றன.பார்வை ரேவதியின் முகத்தில் குவிந்தது.

எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? உயிர்த் தோழியின் முகம் மறந்து விடுமா என்ன?உடல் வளர வளர உடலில் மாற்றம் ஏற்பட்டாலும் அடையாளம் தெரியாத அளவு மாற்றம் ஏற்பட்டுவிடுமா என்ன?

நெஞ்சில் பதிந்த முகம் நினைவிலிருந்து நீங்கிவிடுமா என்ன?

ரேவதியின் முகத்தில் குவிந்த பார்வை அவள் ரேவதிதான் என்று எண்ண வைத்தது.

ரேவதியின் இடது காதினை ஒட்டினாற்போலிருந்த பழுப்புநிறத்தில் புள்ளி யாய்த் தெரிந்த மச்சம்.. சாருவின் எண்ணத்தை ஊர்ஜிதப் படுத்தியது.

இது..இது..எ..ரேவிதா..ரேவிதா..

தானொரு மருத்துவர் என்பதையும் மறந்து ரேவீ என்று கத்தினாள் சாரு.

சாருவின் கத்தலில் அந்த லேபர்  வார்டே குலுங்கியது.

ரேவதியின் முகத்தோடு முகம்வைத்துக் கதறும் சாருவை தேற்றும் வழிதெரியாது தவித்தனர் 

மருத்துவமனை டாக்டர்களும் நர்ஸ்களும்..சிப்பந்திகளும்.

போலீஸார் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

ரேவதி நிறைய போட்டோக் கள் எடுக்கப் பட்டாள்.

ரேவதிக்கு டெலிவரி பார்த்ததாக மூத்த மருத்துவர்  என்பதால் டாக்டர் தீபிகாவும்..

அடிபட்ட காயங்களுக்கு சிகிச்சை தந்ததாக டாக்டர் குமாரும் ஃபாரங்களில் கையெழுத்திட்டனர்.

ரேவதியின் உடல் முரளி சேர்க்கப்பட்டிருந்த அதே அரசு மருத்துவமனைக்கு

போஸ்ட்மார்ட்டத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டது.

கதறினாள் சாரு.

பாவம்தான் முரளி தன் மனைவி.. தான் கிடக்கும் இதே மருத்துவமனையில் மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டி ருப்பதையறியாமல் நினைவின்றிக் கிடந்தான்.

முரளியின் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் நினைவு எப்போது திரும்புமென்று தெரியா தென்று அரசு மருத்துவர்கள் போலீஸ்க்கு ரிப்போட் கொடுத்தாகிவிட்டது.

மார்ச்சுவரியிலிருக்கும் டெட்பாடிக்கு உரிமை கோரி மூன்று நாட்களுக்குள்ளோ.. மிஞ்சிப்போனால் பத்து நாட்களுக்குள்ளோ..யாரும் வரவில்லையென்றால் அரசே உடலை அடக்கம் செய்துவிடுமென்பதால்..

கடைசி பத்தாம் நாளில்.. உரிமை கோரி எழுதிக் கொடுத்து விட்டுத் தன்னுயிர்த்தோழிக்கு சாருவே இறுதிச்சடங்கு செய்தாள்.

கார்டிரைவரின் தவறுதான் விபத்து நடக்கக் காரணமென்று வழக்கு மூடப்பட்டது.

ரேவதியின் ஸ்லிங்பேக் சாருவிடம் ஒப்படைக்கப் பட்டது.

ஆனால் அது திறந்து பார்க்கப் படாமலேயே பீரோவுக்குள் ஐக்கிய மானதும் பாழும் விதியின் வேலைதானோ?

ரேவதியின்  இறந்த உடல் மருத்தவமனையில் போலீஸாரால் போட்டோ எடுக்கப்பட்டபோது..அவர்க ளிடமிருந்து புகைப்பட மொன்றை கேட்டுவாங்கி..

சிறந்த புகைப்படக்கலை ஞரால் சீர்படுத்தப்பட்டு.. ரேவதி உயிரோடு இருந்தால் எப்படி இருப்பாளோ அப்படி தத்ரூபமாய் இருப்பதான புகைப்படமொன்றை தனது அறையில் மாட்டிவைத்தாள் சாரு.

நடப்பது எதுவும் தெரியாமல் நினைவின்றி மருத்துவ மனையில் கிடந்தான் முரளி.

தன் தோழியின் உடலைப் பெற்றுக்கொள்ளச்சென்ற போதுகூட சாருவுக்கு அதே மருத்துவ மனையில் முரளி கிடப்பது தெரியாது போனது விதியின் விளையாட்டு தானோ? 

விதி இப்படிக்கூட விளையாடுமா என்ன?

சாருவின் பெண்குழந்தை அரசின் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு மூன்று மாதமாகிவிட்டது..

யாரும் உரிமைகோரி வரவில்லை என்பதை அறிந்தாள் சாரு.

மாட்டே..மாட்டே..எ ரேவியோட கொழந்தைய அனாதயா விடமாட்டே..இனிமேலும் ரேவியோட கொழந்த காப்பகத்துல இருக்கக் கூடாது.

நா ரேவியோட கொழந்தைய சட்டபூர்வமா தத்தெடுத்து.. எங்கொழந்தையா வளப்பேன்.

நினைத்ததை முடித்தாள் சாரு..

தன்னுயிர்த்தோழியின் உயிரில் உதித்த அந்தப் பெண்குழந்தைக்குப் பவித்ரா என்று பெயர் வைத்து தன் உயிரினும் மேலாய் சீராட்டி வளர்த்தாள்.

என்னமாதிரியே.. பொறக்கும்போதே அம்மாவப் பிரிஞ்சிட்டயேடி செல்லம் என்று குழந்தையை அணைத்து அணைத்து அவ்வப்போது அழுதாள்.

ரேவதி பம்பாய்க்கு கல்யாணமாகி வந்துருப்பா போலருக்கு..அவ பம்பாய் வந்தது எனக்குத் தெரியாது..

நா டாக்டரா இருப்பேன்னு அவுளுக்கும் தெரிஞ்சிருக் காது..தானாய் சொல்லிக் கொள்வாள் சாரு.

ரேவி புருஷ ஆக்சிடெண்ட்ல அடிபட்டு கவர்மெண்ட் ஹாஸ்பிடல்லதா இருக்கிறதா போலீஸ்ல தெரிவிச்சாங்க..ஆனாலும் நா போய்ப்பாக்கல..

அவர் நல்லபடியா பொழச்சு வந்து கொழந்தைய கேட்டா?

நினைக்கும்போதே நெஞ்சு கலங்கிப்போறது..ரேவி புருஷ நல்லாகட்டும்..ஆனா கொழந்தைய கேட்டா?..

செல்லம்.. ஓ அப்பாவந்து ஒன்னக் குடுக்கச்சொல்லி கேட்டா.. ஒன்னக் குடுக்கணும் தானே?

அப்ப நீ ..சாரும்மாவ விட்டுட்டு ஒ அப்பாககூட போய்டுவியா?பவித்ரா குட்டியை நெஞ்சோடு அணைத்து அழுவாள்.

மூன்றுமாதம் கழித்து ஓர்நாள் கண்விழித்தான் முரளி.

போலீஸ் முரளியை விசாரித்தது..

அவனின் மனைவி விபத்தில் இறந்துவிட்டதாகவும்..குழந்தையும் வயிற்றிலேயே இறந்து விட்டதாகவும் தவறான தகவல் தரபட்டு..

அவன்விபத்தில் சிக்கியபோது அவனின் பேன்ட் பாக்கெட்டிலிருந்த பர்ஸ் அவனிடம் ஒப்படைக்க பட்டது.

விட்டால் போதுமென்று கேஸைக் கைவிட்டு ஒதுங்கிக்கொண்டது காவல்துறை.

ரேவதி..ரேவதி என்று புலம்பியவாறு பைத்தியம் போல் பம்பாயின் தெருக்களில் அலைந்தான் முரளி.. கிடைத்த பஸ்ஸி லெல்லாம் ஏறி இறங்கினான்..எங்கெங்கோ சுற்றினான்.மாயவரமோ..

மெட்ராஸோ எங்கும் திரும்பிச்செல்லப் பிடிக்கவில்லை.

ஒருவழியாய் பம்பாயின் தாராவி பகுதி அவனை வவேற்று அணைத்துக் கொண்டது.

தாராவி..பம்பாயின் குடிசைப்பகுதி.ஏழைகளின் இருப்பிடம்.ஆன்றாடம்காய்ச்சிகளின் அடைக்கலப் பகுதி.

ஸ்லம் ஏரியா.. நல்லிதயங் களின் வாழ்விடம்.

அப்பகுதி ஏழைகளோடு ஒன்றிப்போனான் முரளி.

கையில் மருத்தவச் சான்றிதழ் இல்லாமலேயே அக்குடிசைவாழ் மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான்.

அப்பகுதி மக்களுக்குப் பிடித்துப்போனவன் ஆனான்.

மொழிப்பிரர்ச்சனை இல்லாததால்..அம்மக்க ளோடு ஒருவனாய் ஆகிப் போனான்.

மருத்துவம் படித்ததற்கான சர்டிஃபிகேட்டுகள் இல்லாமல் வைத்தியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் எனத்தோன்றியதால் மெட்ராஸ் சென்று சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு நான்கே நாட்களில் தாராவி திரும்பினான்.

ஏழைமக்களிடம் வைத்தியம் பார்க்க ஒருரூபாய் மட்டுமே ஃபீஸ் வாங்கினான்.

தேர்தலில் நின்றால் ஜெயிக் குமளவுக்கு அப்பகுதி மக்கள் முரளியைக் கொண்டாடினார் கள்.

அவன் குன்றிலிட்ட விளக்காய் இல்லாமல் குடத்தில் வைத்த விளக்காய் வெளியுலகிற்குத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அடக்கமாகவே இருந்தான்.

ஆனாலும் எளிய மக்கள் அவர்கள் வேலை செய்யப் போகுமிடத்திலெல்லாம்..

எங்க டாக்டரு..எங்க டாக்டரு  என்று பெருமையோடு சொல்லிச்சொல்லி அவனைப் பற்றிப் பலரும் அறியச்செய்திருந்தார்கள் என்பது உண்மை. 

முரளி சாருவையும் மனைவி ரேவதியையும்..ரேவதியின் வயிற்றில்  வளர்ந்த தன் குழந்தையையும் நினைத்து நினைத்து மருகாத நாளில்ல.

அவர்களின் நினைவை மறக்கமுடியாமல் தவித்தான்.

சாருவுக்கு நா செஞ்சது துரோகந்தானோ? அந்த துரோகந்தா பாவமா மாறி என்ன இந்த நெலைக்கு ஆளாக்கி அனாதையா நிக்க வெச்சிருக்கோ? என்று நினைத்து நினைத்து மனதுக்குள் புலம்பி அழுதான்.

பாவம்தான் முரளி..

தனக்குப் பெண்குழந்தை பிறந்ததும்.. அக்குழந்தை சாருவிடம் வளர்வதும்.. அவனுக்குத் தெரியாமல் போனதும் எவ்வளவு கொடுமை?

காலம்தான் எவ்வளவு வேகமாக அனைத்தையும் கடந்து செல்கிறது?

இப்போது முரளி ஐம்பதாறு வயதிலும்..சாரு ஐம்பத்தி ரெண்டு வயதிலும்..பவித்ரா இருபத்திநான்கு வயதிலும் நிற்கிறார்கள்.

இனியாவது விதி இவர்களை ஒன்று சேர்க்குமா? இல்லை வேட்கை தீராது விளையாடிப் பார்க்குமா?

விதியோ.. காலமோ எதுவோ இனிமேற்கொண்டு இவர்களை என்ன செய்யக் காத்திருக்கிறது? 

அத்தியாயம் – 33

சாந்தாக்ரூஸ் விமான நிலையம்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களை வரவேற்க நின்றிருந்த கூட்டத்திவ் ஒருவராய் பவித்ராவின் வருகைக்காகக் காத்து நின்றார் டிரைவர் சுந்தரம். 

டிராலியில் பெட்டிகளையும் பேக்குகளையும் வைத்துத் தள்ளிக்கொண்டே வரும்போது டிராலிகள் ஏற்படுத்தும்  சப்தமும்..

நடந்து வருபவர்களின் ஷுக்கள்  தரையில் உரசி அதனால் ஏற்படும் சப்தமும்..உறவுகளையும்.. தோழமைகளையும் கண்டவுடன் ஆர்ப்பரிக்கும் சொந்தங்களின் குரல்களின் சப்தமுமாய் அந்த இடமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜீன்ஸ் பேண்ட்டும் டிஷர்ட்டும் அணிந்த தேவதையாய் தனது பெட்டியையும் பேக்கையும் டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தாள் பவித்ரா.

கண்கள் அங்குமிங்கும் யாரையோ தேடின.

பாப்பா அம்மாவத் தேடுறாங்க போலருக்கு.. ஆனா அம்மா வல்ல..என்று நினைத்தவராய் கும்பலாய் நின்ற கூட்டத்தை சிரமப்பட்டு விலக்கிக் கொண்டு பவித்ராவின் கண்ணில் படுமாறு வந்து நின்று கொண்டார்.

அப்போது.. ஹாய் பேபி என்றபடி பவித்ராவின் பின்னால் ஒரு இளைஞன் வந்து நிற்பது தெரிந்தது.

சடக்கெனத்திரும்பினாள் பவித்ரா.

ஹாய் ஆகாஷ்..

பவீ.. என்றபடி பவித்ராவின் முகம்பார்த்துப் புன்னகைத் தவன் மெல்ல அவளை அணைத்து விடுவித்தான்..

ஓ..என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் டிரைவர் சுந்தரம்.

அம்மா ஆசஆசயா காத்ருப்பாங்க..நா போகட்டுமா ஆகாஷ்..

நா மட்டும்?நானும்தா ஆசையோ ஆசயா காத்திருக்கேன்.சிரித்தான் இளைஞன்.

இனிமே இங்கதானே இருப்பே..நாளைக்குக்கூட பாக்கலாம்..ஓகே?

ஓகே ஸ்வீட்டி.. பை.. கிளம்புங்க..எப்பிடிப் போவீங்க?நான்னா..?

நோ..தேங்ஸ் ஆகாஷ்.. கார் வந்திருக்கும்..

அதோ எங்க டிரைவர் அங்கிள்..நா வரே..பை..

சொல்லிவிட்டு தன்னை நோக்கிவரும் பவித்ராவை வியப்போடு பார்த்தார் சுந்தரம்.

அப்ப அந்த பையன பாக்கறதுக்கு முன்னாடியே என்னப் பாத்துட்டாங்களா?

பாப்பா..என்ன தோன்றி யதோ தலையை அசைத்துக் கொண்டார்.

ஹாய் அங்கிள்..

பாப்பா..

காரில் ஏறி அமர்ந்தாள் பவித்ரா.

டாக்டரம்மா..சமையல்காரம்மாவின் அழைப்பு காதில் விழாதவராய் அசையாமல் அமர்ந்திருந்தார் சாருலதா.

டாக்டரம்மா..கொஞ்சம் சப்தமாய் அழைத்தார் சமையல்காரம்மா..

ஹும்.. என்றபடி சட்டென நினைவுகளிலிருந்து மீண்டு சமையல்காரம்மாவை நிமிர்ந்து பார்த்தார் சாருலதா.

எல்லா பண்ணிட்டேன். எல்லாத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிள்ள வெச்சுட்டேன்.நா கிளம்பவா?

சரிமாமி.. நீங்க கெளம்புங்கோ..

நாளைக்கு வரணுமா வேண்டாமா?

வேணும்னா நானே ஃபோன் பண்றேனே?

அப்டியானா சரி.. கொழந் தேட்ட நா விஜாரிச்சேன்னு சொல்லுங்கோ..எ ஆசிர் வாதம் கொழந்தைக்கு..

நிச்சயமா சொல்றேன்..

கையெடுத்து கும்பிட்டார் சாருலதா.

எவ்வளவு பெரிய டாக்டர்.. கொஞ்சங்கூட கர்வம் கெடயாது..நல்ல மனசு.. மனதிற்குள் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார் சமையல்காரம்மா.

ஃப்ளைட் கரெக்ட் நேரத்துக்கு வந்திருக்குமா?டிரைவருக்குனா ஃபோன் பண்ணினா கேப்பமா?

ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வந்திடுச்சுங் கம்மா..இன்னும் கால்மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவோம்..

ரேவீ..ரேவீ..பவி இன்னும் காமணி நேரத்துல வந்துடுவாடி ரேவி..நம்ம கொழந்த வராடி..ரேவதியின் போட்டோவுக்கு முன் போய் நின்றார் சாருலதா.

நிமிடத்துக்கு ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தார்.

வாசலை வாசலைப் பார்த்துப் பார்த்து மீண்டன கண்கள்.

வாசலில் கார்வந்து நிற்பதுதெரிந்தது.

கார்க்கதவைத் திறந்துமூடும் ஓசை..

அம்மா..சாரும்மா..கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தாள் பவி.

பவி செல்லம்..பவி கண்ணூ..

சாருலதாவின் விரிந்த இருகைகளுக்குள்..

அம்மா..சாரும்மா..கத்திக்கொண்டே ஒரே தாவாய்த் தாவி நுழைந்து சாருவைக்  கட்டிக் கொண்டாள் பவி.

பவிக்கண்ணு வா வா..கையைப்பிடித்து இழுக்காத குறையாக தன் அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார் சாருலதா.

அம்மா எங்கம்மா அழச்சுண்டுபோறேள்..ஒங்க உள்ள என்னருக்கு?..

பவி ரேவிம்மாவ பாக்க வேண்டா? மருத்துவப்படிப்ப  நல்லபடியா முடிச்சிட்டு எத்தன வருஷங் கழிச்சி வெளிநாட்டுலேந்து திரும்பி வந்ருக்க?

ரேவிம்மாவப்  பாத்து வந்துட்டேம்மான்னு சொல்ல வேண்டா?

அம்மா..கத்தினாள் பவி.

என்னம்மா நீங்க.. எப்பப் பாரு இந்த போட்டோக்கு நேரா அழச்சிண்டு வந்து நிறுத்தி  இவங்கள கும்புடு.. நமஸ்காரம் பண்ணுன்றீங்க..

ஒங்க ஃப்ரெண்ட..ஒங்க ரெண்டு பேரோட ஃப்ரெண் ஷிப்ப மதிக்கிறே..ஆனா அதுக்காக ஆன்னா ஊன்னா இவங்க போட்டோக்கு நேர அழச்சு அழசுண்டு வந்து நமஸ்காரம் பண்ணச் சொல்றது நல்லால்லம்மா..

நா எதுக்கு நமஸ்காரம் பண்ணனும்..நல்லபடியா படிச்சுமுடிச்சிட்டு வந்துட்டே ரேவிம்மானு சொல்லணும்?

எனக்கு நீங்க அம்மாவா?

இவங்கம்மாவா?

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேந்து நானும் பாக்கறே.. எதுக்கெடுத் தாலும் இவங்க முன்னாடி  என்ன அழச்சு அழச்சுண்டு வந்து நிக்க வேண்டிது..

பர்த் டே நமஸ்காரம் பண்ணு..

தீபாவளி நமஸ்காரம் பண்ணு..புதுட்ரெஸ் போட்டுண்ருக்கில்ல அதுனால நமஸ்காரம் பண்ணு..எக்ஸாமுக்குப் போறீல்ல நமஸ்காரம் பண்ணிட்டுப்போ..எக்ஸாம்ல பாஸ் பண்ணதுக்கு நமஸ்காரம் பண்ணுனு..

சொல்லிண்டு..

ஒங்க ஃப்ரெண்டுக்கு நா ஏ நமஸ்காரம் பண்ணனும்?..

பெரியவங்க அவங்க.. அதுக்காக அவங்களநா மதிக்கிறே..ஒங்க ஃப்ரெண்டு அதுனால மரியாத வெக்கிறே.. அதுக்காக எப்பவும் அவங்க போட்டோ முன்னாடில்லாம் விழுந்து நமஸ்காரம் பண்ண புடிக்கில..வற்புறுத்தாதிங்க அம்மா..ப்ளீஸ்..

முன்னாடி சின்னப் புள்ளையா இருந்தே நீங்க சொல்லும் போதெல்லாம் நமஸ்காராம் பண்ணினே..

இனிமேலா மாட்டே..

பவித்ரா பேசுவதைக்கேட்டு விக்கித்துப்போனார் சாருலதா.

பவி..நா ஒனக்கு யாரு?

அம்மா..இதென்ன கேள்விம்மா..

ஒனக்கு எம்மேல பாசம் உண்டுல்ல?

என்னாச்சும்மா உங்குளுக்கு?

பாசம் நேசமம் அன்பு மரியாத எல்லா நெறைய நெறையா உண்டு..எங்கயாவது அம்மாமேல பொண்ணுக்கு இதெல்லா இல்லாம போகுமான்ன?

நீ சொல்றது நிஜம்னா..நீ எம்மேல வெச்சிருக்குற எல்லாத்தியும் ரேவிம்மா மேலயும் நீ வெக்கணும்.

அடகடவுளே..சாரும்மா கையால நல்ல சாப்பாடா சாப்டலாம்னு வந்த எனக்கு..

ஏ இந்த சோதன?பசி காத அடைக்குது..சிரித்தாள் பவி.

தோ..ஒங்க ஃப்ரெண்ட கையெடுத்துக்கும்புட்டுட்டே..

இனிமேலாவது சாப்பாடு கிடைக்குமா?

பவி வந்து அரமணிநேரம் ஆகிடுத்து..பசிக்காது அவுளுக்கு? ஏ தோணாம போச்சு?தவித்துப்போனார் சாருலதா.

ஸாரி பவிக்கண்ணு.. காபி..டீ..ஜூஸ் என்ன கண்ணு குடிக்கிற?

மணி ரெண்டர..இப்பபோய் காபியா டீயா ஜூஸாங் கறேள்..என்னாச்சும்மா ஒங்குளுக்கு?சிரித்தாள்.

நேரக்க சாப்பாடுதா.. அவ்ளாம் பசி..கைகளை விரித்து அளவு காட்டினாள்.

ஆசைஆசையாய் ருசித்து ரசித்து சாப்பிடும் பவியை மகிழ்ச்சியோடு பார்த்தார் சாரு.

அம்மா ஒரு கட்டுகட்டிட் டேனா?

போறுமே..ரெண்டு கையயும்விரிச்சு இவ்ளாம் பசினு சொன்னாப்ப சமச்சுவெச்சிருக்குறது போதுமான்னு கவலப்பட்டுப் பேட்டே..ரெண்டு கரண்டி சாப்டவா இத்தன அலட்டல்?

சிரித்தார் சாரு..

சிரித்தாள் பவி.

சாப்பாடு முடிந்துவிட்டது.

சாருமடியில் படுத்தாள் பவி..

எ சாரும்மா என்று சொல்லிச் சொல்லிக்  கொஞ்சினாள்.. கன்னத்தில் முத்தமிட்டாள்….

இருவரும் மணிக்கணக்காய் பேசினார்கள்.

அம்மா..

சொல்லு பவிக்கண்ணு..

நா ஒடனே மருத்துவத் தொழில் பண்ணணுமா?

டாக்டரா எந்த ஹாஸ்பிடல்லயாவது சேரணுமா?

நா அப்பிடி சொல்லலியே..

ஆனா வேற என்ன பண்றதா உத்தேசம்?

மெடிகல் ஃபீல்டுல கொஞ்சநாள் ஃப்ரீலான்ஸரா இருக்கணும்னு ஆசயா ருக்கு..நிறைய மருத்துவ கட்டுர எழுதலா..  ஒரு மொழிலேந்து இனொரு மொழிக்கு கட்டுரைங்கள மொழி பெயர்க்கலா.. கோடிங் பண்ணலா.. 

முக்கியமா அனுபவம் வாய்ந்த டாக்டர்கள.. மருத்துவ ஆராய்ச்சியாளர் கள பேட்டிகாணலா..

கொஞ்சநாள் அந்த வழீல போய்ப்பாக்கணும்னு ஆசயா இருக்கு..

வருமானமு கெடைக்கும்.

அதுக்கென்ன பவி..நீ விரும்பின பணியச் செய்..

ஸ்டெதஸ்கோப்பும்..ப்ரிஸ் கிரிப்ஷணும்தா டாக்டரருக் கான அடையாளமா? இந்த வேலைக்கும் மருத்துவப் படிப்பு தேவ..ஒம் படிப்ப நீ விரும்பின துறைல உபயோகிச்சுக்கோ..

ஆனா ஃப்ரீலான்ஸர் வேல ஆன்லைன் வேலதானே?வீட்ல இருந்தே செய்ய லாம்ல?..

கரெக்ட்..நா ஒரு மெடிகல் மேகஸீன்ல..பத்ரிகைல வேல செய்லாம்னு பாக்கறே..

அமெரிக்கால இருக்கும் போதே நம்ம இந்திய மருத்துவப் பத்திரிக்கைக்கு அப்ளை பண்ணிருந்தேன்.

அந்த பாத்திரிகையும் என்ன ஓகே பாண்ணிடுச்சு.

நா ஜாயின் செய்ய விரும்புற மருத்துவ சஞ்சிகைல வெளீலயும் சில வேலைகள செய்ய அனுப்புவாங்க..

மருத்துவ ஆராய்ச்சியாளர்ங் கள சந்திக்க..மருந்து தயாரிக்கிற கம்பெனிங் களுக்கு நேர்ல போய் பாக்க..

குறிப்பிட்ட மருத்துவ ஃபீல்டுல சிறந்து விளங்கும் டாக்டர்கள பேட்டிகாண..

தன்னார்வமா பீஸ் வாங்காம ஆதரவற்றோர்க்கு மருத்துவ சிகிச்ச தர்ர மருத்துவர்க பேட்டி காண..

இந்த மருத்துவ பத்திரிக்க நிறுவனம் அனுப்புது.. கிடைத்த தகவல்கள கட்டுரையா எழுதணும்.

அதுக்காகவே இந்த மருத்துவ இதழ்ல ஜாயின் பண்ணிருக்கேம்மா..

நீங்க அனுமதிச்சா போரேன்..

வேண்டாம்னா போகல..

கொஞ்ச நாள்தா..சரி வல்லேன்னா விட்டுடுவேன்.

நல்ல சிந்தன பவி.புடிச்சத செய்யி..ஆல்தி பெஸ்ட் என்று  தயக்கமேதுமின்றி சம்மதித்தார் சாருலதா.

அம்மான்னா அம்மாதா சாருவைக் கொஞ்சினாள் பவி.

மறுநாள் காலை மணி ஓன்பது.

தன் அறையைவிட்டு வெளியே வந்தாள் பவி.

சுடிதாரில் ப்ரெஷ்ஷாய் இருந்தாள்.

ஹாஸ்பிடலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சாரு..குட்மார்னிங் பவிச்செல்லம்..என்ன இவ்ள சீக்கிரமா எழுந்து குளிச்சு..

எங்கியோ கிளம்புறாப்ல..

குட்மார்னிங்மா..நீங்க இன்னிக்கு ஹாஸ்பிடல் போணுமா?ஆத்லதா இருப்பேள்னு..

போவேண்டாம்னுதா நெனச்சே..ஃபோன் வந்துது.

ரெண்டு டெலிவரி கேஸா..

அதா கிளம்புறே.. வந்துடுவே சீக்கிரமா..

நேத்துதானே நீ வந்த..ரெஸ்ட் எடுக்காம எங்கியோ கிளம்புற?

இல்ல சாரும்மா..நேத்து நா மெடிகல் ஃப்ரீலான்ஸரா வேலபாக்க விரும்புறே..

யுயெஸ்ல இருக்கும்போதே இந்திய மெடிகல் பத்திரிக ஒன்னுக்கு அப்ளை பண்ணிருந்தே..

அதுல என்ன ஓகே பண்ணிட்டாங்க.அந்த மருத்துவ பத்திரிகல ஜாயின் பண்ணிருக்கேன்னு சொன்னேல்ல..

அந்த பத்திரிக்க நிறுவனம்.. இன்னிக்கு டாக்டர் ஒருதர பேட்டிகாண என்ன அனுப்புது.

அதுபத்தி மெயில் அனுப்பிருக்கு.. அந்த பத்திரிகைக்கான எ மொதல் வேல இது..போகட்டுமா சாரும்மா?

ஓ..காட் ப்ளஸ் யூ பவி செல்லம்..வாழ்த்துக்கள்..

மனசுக்குப்புடிச்ச ஜாபா அமையட்டும்..போய்ட்டு வா..

அம்மான்னா அம்மாதா..எ

செல்ல அம்மா.. சாரு லதாவைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள் பவி.

வா செல்லம்  டிபன் சாப்டுவம்..

சமயல்கார அம்மாவக் காணும்?நீங்களேவா டிபன் செஞ்சேள்மா?

இட்லி சட்னி செய்ய எத்தன நாழியாகும்?வா..சாப்டு வோம்.

சாய்ந்து சாய்ந்து நடந்து கிச்சனுக்குச்செல்லும் சாரும்மாவை பெருமை யோடு பார்த்தாள் பவி.

அம்மா எவ்ள பெரிய டாக்டர்..

ஆனா கொஞ்சங்கூட பந்தா இல்லாம..

அம்மா இட்லி அப்டியே பூமாரி சாஃப்ட்டா..தொட்டுக்க  கறுப்பு எள்ளு போட்டு அரச்ச மொளகா பொடிக்கும் நல்லெண்ணைக்கும்.. சூப்பர்மா..

கடவுளே.. வெறும் இட்லிக்கும் சட்னிக்கும்.. மொளகா பொடிக்கும் இத்தன விதரண பேச்சா?சாப்டரது என்னவோ மூணு இட்லி..சிரித்தார் சாருலதா.

அம்மா..இப்பதா தோண்றது..

நா  வெள்ள எப்பிடிப்போறது?

கார்லயா ஆட்டோவயா?

ஏ.. ஸ்கூட்டீலதா..

என்னம்மா அந்த பக்கா பழசுலாயா?ஸ்டார்ட்டே ஆகாதே?

ம்..அதக்கூட யோசிக்காத இருப்பேனா என்ன?எ பவிக் கண்ணுக்கு புது ஸ்கூட்டி ரெடியா வாசல்ல காத்துண்ருக்கு..

அம்மா..என்னம்மா?நெஜமாவா?..கீம்மா.. பரபரத்தாள் பவி.

கீ..ரேவிம்மா ஸ்டேண்டுல இருக்கு..எடுத்துக்கோ.. தோ..நானும் வரே..

அம்மா..ஆரம்பிச்சாச்சா?

ஏ..சாமி அலமாரீல வெக்க மாட்டேளா?சாரும்மா போட்டோ ஸ்டேண்ட்லதா வெக்கணுமா?

சாமிண்ட வெச்சுதா ரேவிட்ட வெச்சுருக்கே..

ரேவாதியின் போட்டோ எதிரில் நின்றார்கள் இருவரும்.

நீ எந்த காரியத்துக்காகப் போறியோ அது ஒ விருப்பப்படி நல்லதாவே ஒனக்கு அமையணும்..சாவிய எடுத்துக்கோ..

நீங்களே எடுத்து ஒங்க கையாலமே குடுங்கோ சாரும்மா..

கையில் சாவியை எடுத்தார் சாருலதா..

ரேவி.. நம்ம கொழந்த நல்ல காரியத்துக் காக வெளீல போறா..புது வண்டீல..

ஆசிர்வாதம் பண்ணி அனுப்பு..மனதிற்குள் நினைத்தபடி..சாவியை  பவித்ராவின் கையில் வைத்தார்.

ரேவிம்மாவ கும்புட்டுக்கோ பவி..

க்கும்..விடமாட்டேளே..ரேவதியின் போட்டோவை கையெடுத்துக் கும்பிட்டாள் பவித்ரா.

இருவருமாய் வாசலுக்கு வந்தார்கள்.

பூப்போட்ட டிசைனில் வண்டி மீது போர்த்தப்பட்டிருந்த கவரை நீக்கினாள் பவி.

பளிச்சென்ற கலரோடு வெகு அழகாய் நின்றிருந்தது அந்தப் புத்தம் புதிய ஸ்கூட்டி.

ஹையா..சூப்பர்மா..தேங்ஸ்மா..சாருலதாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சட்டெனக்குனிந்து கால்களைத் தொட்டு கும்பிட்டாள்.

ஏய்..ஏய்..பவி வாசல்லல்லாம் நமஸ்காரம் பண்ணக்கூடாது.

ஆகாது.

அட போங்கம்மா..நீங்க மெத்தப்படிச்ச டாக்டர்னனு மறந்துபேடாதீங்கம்மா..பஞ்சாங்கம் மாரி பேசிண்டு..

பாக்கவேண்டியத பாக்கணும் பவி..

அதுசரி..புதுவண்டில்ல.. கோவில்ல குருக்கள்ட் டையோ பூசாரிட்டயோ குடுத்து சாவிய சாமிகால்ல

வெச்சு வாங்கியாச்சா..

எலுமிச்சம் பழத்த வீல் அடீல வெச்சு நசுக்கியாச்சா..

பூ வெச்சு தூப தீபம்லா காட்டியாச்சா?

கேட்டுவிட்டுச் சிரித்தாள் பவி.

என்ன பஞ்சாங்கம்ன.. இப்டீல்லாம் கேக்கற நீ என்ன?சிரித்தார் சாருலதா.

ஹே..மடக்கிட்டாங்களாமா

என்ன..சாரும்மா மொகத்துல என்னவொரு வெற்றிக் களிப்பு?சிரித்தாள் பவி.

ஓகேம்மா..வரே..ஃபோன் பண்றே..அப்பப்ப..பைமா..

பத்ரம் செல்லம்..நானும் கிளம்பறேன்..

பவி புதுவண்டியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு ஏறி

அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள்.

காரில் ஏறி அமர்ந்தார் சாருலதா.

வண்டியும் காரும் கேட்டைத் தாண்டி வெளியேறி வெவ்வேறு திசையில் பிரிந்து  வேகமெடுத்தன.

புதுவண்டி… புது இலக்கு..

புத்தம்புது சிந்தனைகளோடு மனம் பரபரக்க வண்டியின் வேகத்தைக் கூட்டினாள் பவி..

தான் சந்திக்கப்போகும் அனுபவங்களை அறியாதவளாய்.

– தொடரும்…

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண்...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *