கதையாசிரியர்: வீ.பக்கிரிசாமி
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறப்புக் கதை
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 76
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2026ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தூரி விழா நெருங்குகிறது என்றால் இந்த ஊரின் சுத்து வட்டாரத்தில் உள்ள மக்கள் மட்டுமல்ல, வெளிமாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா என்று உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். இன்றிரவு சந்தனக்கூடு ஊர்வலம்.

இராவுத்தரப்பாவின் சந்தனக் கூடு பார்ப்பதற் கென்றே சென்னையிலிருந்து ஆயிஷாவின் உறவினர்கள் வந்திருக்கின்றனர்.

“இன்னிக்கி ராத்திரி கூடு பாக்கப் போவனும்னு தெரியுமுள்ள, டிரைவர் செல்லப்பாவ சாயங் காலத்துக்கே வரச் சொல்லுங்க’ ஆயிஷாவின் குரல் அந்த வீட்டின் உள் முற்றத்திலிருந்து வந்தது. முன் தின்னையில் இன்றைய நாளிதழை அலசிக் கொண்டிருந்த இப்ராஹிம் ‘சரி சரி, தெரியும், கண்டிப்பா சொல்லிப்புடறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் தினப்பத்திரிக்கைகுள் மூழ்கினார்.

கடற்கரைக்கு மிக அருகில் உள்ள இப்ராஹிம் வீடு குதூகலமாகக் காணப்பட்டது. சென்னையி லிருந்து வந்திருக்கும் உறவினரின் குழந்தை களுடன் இப்ராஹிம் மகள்களும் சேர்ந்து வீட்டு வாசலுக்குமுன் உள்ள மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் விளையாட்டுச் சத்தத்துடன் அங்கு திரியும் சேவல்களின் அழைப்புச் சத்தமும் கலந்து அந்த காலை நேரத்தை உயிர்ப்படையச் செய்திருந்தது. சிறிது தூரத்தில் உள்ள வங்கக் கடலின் அலை அவ்வப்போது பொதேர்னு என்று கரையில் வந்து விழுந்தெழுந்து செல்வது போன்ற ஓசையை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பிக் கொண்டிருந்தது. தென்னை மரங்களின் ஓலைகள் காற்றில் உரசிக்கொண்டிருந்தன. இந்த வீட்டின் மேல் மாடியில் இருந்த புறாக்கள் குர் குர்ர்… என்ற புலம்பலுடன் சிறகுகளை அடித்து இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருந்தன.

வீட்டின் முன் அறையில் இப்ராஹிமின் அம்மா கமீலா கையில் தஸ்பமணியுடன் தன்மனதை ஒரு நிலைப்படுத்தி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உலகத்தில் ஐக்கியமானார். அந்த அறையின் ஒரு மூலையில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சி மெக்காவில் உள்ள புனித காபாவைச் சுற்றி மக்கள் வலம் வந்து கொண்டிருப்பதை நேரலை யாக காண்பித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட எண்பது வயதைத் தாண்டிய கமீலாவுக்கு இந்த அறையும் அதன் ரம்மியமான சூழலும் ஒரு அதீத உணர்வை ஏற்படுத்தும். பல வருடங் களுக்கு முன்னர் தானும் அங்கு நேரடியாக சென்றனுபவித்த இறை உணர்வை ஒவ்வொரு கணமும் நினைவூட்டும். அந்த உணர்வு எல்லாம் வல்ல இறைவனுக்கு மிகவும் அருகில் இருப் பதைப் போன்ற உணர்வு, அதை அனுபவித்த வர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் கமீலா பாட்டியும் ஒருவர்.

கமீலாவின் அறையை ஒட்டியுள்ள முற்றத்தில் கொய்யா மரங்களும் மாதுளை மரங்களும் சில தென்னை மரங்களும் இணைந்து குடை பிடித்து, ஏறி வரும் சூரியனின் உக்கிரத்தைக் குறைப்பதற்கு தயாராகுவதுபோலத் தோன்றியது.பெரிய கான்கிரீட் வீட்டின் இந்த அறை மட்டும் எல்லாவிதத்திலும் வேறுபட்டதாக இருந் தது. பழைய ஓட்டு வீட்டை இடித்து புதிதாகக் கட்டும்போது இந்த அறைக்கு மட்டும் முன்பிருந்ததுபோல மண் சுவர்களை எழுப்பி னார்கள். இப்ராஹிம் அம்மா கமீலாவுக்கு பழைய மண் சுவர்களையும் இந்த மரங்களையும் இழக்க மனம் வரவில்லை. எனவே பழைய அமைப்பு கெடாமல் நிழல் தந்த மரங்களும் பாதிக்கப் படாமல் புது வீட்டைக் கட்டினார்கள். கோடை காலத்தில் மற்ற அறைகளை ஆக்கிரமிக்கும் வெப்பம், அனலின் திமிர் இங்கு பலிக்காது. இப்ராஹிமுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பெரியவள் காருண்ணிஷா பன்னிரண்டாம் வகுப்பும் சிறியவள் கதீஜா எட்டாம் வகுப்பும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்கும் குழந்தைகளுள் அடங்குவர்.

இப்ராஹிம் மனைவி ஆயிஷாவும் சென்னையி லிருந்து வந்திருக்கும் அவளது தங்கையும் கோவிந்தன் கொண்டுவந்து கொடுத்த ஆட்டுக் கறியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சென்னையிலிருந்து வந்த குழந்தைகளுக்கு பக்கத்து ஊரில் உள்ள கண்மாயில் நீச்சலடித்துக் குளிக்க வேண்டும் என்பது ஆசை. அதன்படி நேற்று இரவே காருண்ணிஷாவின் அப்பாவிடம் சொல்லி விட்டார்கள். ‘நீங்க கண்மாயில் குளிக் கிறதுக்கு எனக்கு ஆட்சேபனை இல்ல, ஆனா நீச்சலடிக்கிறோமுனு ஆழத்துக்கு போயி சேத்துகீத்துல மாட்டிக்கக் கூடாதுங்கிறதுதான் என்னோட பயம்’ என்று தன் அச்சத்தை வெளிப் படுத்தினார். சிறிய யோசனைக்குப் பின் குழந்தை களின் ஆசையையும் பாதுகாப்பையும் கருதி தானே அனைவரையும் கண்மாய்க்கு அழைத்துச் செல்வதாக கூறியதும் குழந்தைகள் ?… என்று சத்தம் போட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். உடனே தங்களுக்கு வேண்டிய மாற்றுத் துணிகள், சோப்பு சவுக்காரம் என்று அவரவர்கள் பைகளில் எடுத்து வைத்துவிட்டனர். கண்மாய்க்கு போக வேண்டும் என்றால் கிட்டத் தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் வயல் வெளியில் வரப்புகளில் குடியானவர்களின் குடியிருப்புகளைக் கடந்து செல்ல வேண்டும். அதுவே ஒரு வித்தியாசமான உலகத்தில் பிரவேசித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கண்மாய்க்குச் செல்லும் வழியில் உள்ள கிராமத் தில் வசிக்கும் மாரியப்பனின் மகள் மாலதியும் காருண்ணிஷாவும் ஒரே வகுப்புத் தோழிகள். போகும் வழியில் மாலதியையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது இவர்களது திட்டம்.

சென்னையிலிருந்து வந்த குழந்தைகளுக்கு ஊருக்கு செல்வது என்றால் கந்தூரி பார்ப்பது மட்டும் அல்லாமல் அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வதும், நொங்கு சுவைப்பதும், கண்மாயில் குளிப்பதும், அதில் தங்கள் துப்பட்டாவைக் கொண்டு மீன் பிடித்து விளையாடுவதும் ஒரு கூடுதல் ஆனந்தம்.

‘கொழந்தைகள பத்திரமா பாத்துக்குங்க’ என்று கணவனிடமும் ‘ரொம்ப ஆழத்துல போயி குளிக்காதிங்க புள்ளைங்களா’ என்று குழந்தை களிடமும் அம்மா சொல்லி அனுப்பியதோடு அன்று செய்திருந்த இடியாப்பத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து கொடுத்தனுப்பினாள் வயதான மாரியப்பனின் அம்மாவுக்காக.

குழந்தைகள் அனைவரும் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் வீட்டை நோக்கி வந்த பஷீர் மாமாவைப் பார்த்த குழந்தைகள் தங்களின் துப்பட்டாவை இழுத்து முகத்தை மூடியபடி ‘அஸ்லாம் அலைக்கும் மாமா’ என்று ஏக குரலில் கூறிவிட்டு இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாருதி வேனில் ஏறினர்.

வண்டியை எடுக்க ஆயத்தமாகிக் கொண் டிருந்த இப்ராஹிமைப் பார்த்த பஷீர், ‘என்ன காக்கா, பொம்பளப் புள்ளங்களைக் கூட்டிக்கிட்டு ரொம்ப தூரம் போரீக போல’ என்றார்.

ஆமா, சென்னையிலேருந்து விருந்தாளி வந்திருக்காக. கிராமத்த சுத்திக் காட்டுனா தானே அவுகளுக்கு அரிசி காய்கறியெல்லாம் பூமியி லேருந்து வெளையுதுன்னு தெரியும். இல்லேன்னா பெப்ஸி கொக்கோ கோலா மாதிரி ஏதோ தொழிற் சாலையிலேருந்து தயார் பன்றாங்கன்னு நெனைச் சுக்குவாக’ என்று பேசிக்கொண்டே காரை அந்த சிறிய சந்தில் மெயின்ரோடு பக்கமாக திருப் பினார். ‘நீங்க அம்மாவை பாத்துட்டு தேனீர் குடிச்சுட்டு போங்க’ என்றவர் திரும்பி பஷீரைப் பார்த்து ‘வேணும்னா உங்க மக பாத்திமாவை யும் கூட்டிக்கிட்டு போவட்டுமா’ என்று சொல்லி முடிப்பதற்குள், பஷீர் ‘நம்ம வீட்டு பொம்பளைங்க வீட்ட விட்டு வெளியே போக மாட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன’ என்று சொல்லி முடிப்பதற்குள் உர்ர்…. என்று பாய்ந்து சென்ற காரை பார்த்துவிட்டு உள்ளே சென்றார் பஷீர்.

பஷீர் மாமா என்றால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு தனி மரியாதை உண்டு. ஏனென்றால் காருண்ணிஷாவின் பாட்டி கமீலா இவரை மதிப்புடன் நடத்தினார். இருந்தாலும் பஷீர் மாமாவின் வார்த்தைகளும் அவர் சொல்லிய விதமும் காருண்ணிஷாவுக்கு எரிச்ச லூட்டியது.

பஷீர் மாமாவை பார்க்கும்போதெல்லாம் காருண்ணிஷாவுக்கு சற்று பயமும் கோபமும் தன்னையறியாமலே கொதித்தெழுவதுபோலத் தோன்றும். அவரது மகள் பாத்திமாவும் இவளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பாத்திமா எட்டாம் வகுப்பு படிக்கும்போது பூப்பெய்திவிட்டாள் என்ற செய்தி வந்தது. அதற்குப் பின் அவளை அதிகம் வெளியில் கண்டதில்லை. பள்ளிகூடத் திற்கும் அனுப்பவில்லை. படிப்பு, விளையாட்டு எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பஷீர் மாமா. இப்போது அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன எனக் கேள்விப்பட்டதும் அவர் மீதிருந்த கோபம் ஒரு வெறுப்பாக உரு வெடுத்து. எப்படியாவது பாத்திமாவை சந்தித்து இவையெல்லாம் அவள் சம்மதத்துடன்தான் நடக்கின்றனவா என்று அறியவேண்டும் எனத் தோன்றியது காருண்ணிஷாவுக்கு.

பஷீர் மாமா வடக்கிலிருந்து ஏதோ வியாபாரத்திற்காக இங்கு வந்தவர். இந்த ஊர் பெண்னை நிக்காஹ் செய்தபின் இங்கேயே தங்கிவிட்டார். புதிதாக துவக்கப்பட்ட மதரீதியான இயக்கத்தில் சேர்ந்து அதையே தனது முழு நேர ‘தொழிலாகவும்’ ஆக்கிக் கொண்டார். அடிக்கடி ஏதோ வேலையாக சௌதி அரேபியா, இந்தோனேசியா என்று பறந்துகொண்டே இருப் பார். இவரது ஆடம்பர வாழ்க்கைக்கு எப்படி அல்லா படியளக்கிறார் என்பது இந்த ஊருக்கு ஒரு புதிராகவே இருந்தது.

சிறிது காலமாகவே பஷீர் மாமா காருண் ணிஷாவின் பாட்டி கமீலாவை அடிக்கடி காண வருவதுண்டு. இவர் இஸ்லாத்தைப் பற்றியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மகிமையைப் பற்றியும் பேசுவதை இவளது பாட்டி உன்னிப் பாக கேட்ப்பாள். தனது வெளிநாட்டு பயணங் கள் பற்றியும் மத சம்பந்தமாக மற்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் பாட்டிக்கு சொல்லுவார்.

கமீலாவின் குடும்பம் இந்த ஊரில் காலங் காலமாக வாழ்ந்துவரும் குடும்பங்களில் ஒன்று. ஊரில் ஏதும் பிரச்சினைகள் என்றால் இவர்களிடம் பஞ்சாயத்துக்கு வருவார்கள். மிகவும் நேர்மை யானவர்கள் என்பதால் இந்த ஊரில் இவர்களுக் கென்று தனி மரியாதை உண்டு. கமீலாவின் கணவர் இறந்த பிறகு கமீலாவின் யோசனையை கேட்கத் தொடங்கினார்.

பஷீர் மாமாவின் கொள்கையும் கோட்பாடும் ஊர் நடப்புக்கு மாறாக இருந்ததை உணர முடிந்தது. ஒருநாள் அந்தப்பகுதியில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி பாடிக்கொண்டு வந்த பக்கீர்களை அடித்துத் துரத்தியது பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. மற்றவர்கள் கேட்ட போது ‘இது போன்ற வழக்கம் இஸ்லாத்தில் இல்லை, இது நமது கொள்கைக்கு மாறானது என்று வாதிட்டார் பஷீர் மாமா.

தர்காவுக்கு செல்வதும், அங்கு இறந்தவர் களுக்கு மரியாதை செலுத்துவதும் இஸ்லாமுக்கு எதிரான செயல், அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று பயமுறுத் தினார்.

அதுமட்டுமா! ‘என்னைப் பாருங்க, நான் என் வீட்டுப் பெண்களை வெளியே அனுப்புவதே கிடையாது. அப்படியே போக வேண்டிய கட்டாயம் வந்தால் ஒரு ஆண் துணையாவது இல்லாம அனுப்ப மாட்டேன் ‘என்று பிதற்று வதைப் பார்த்திருக்கிறாள் காருண்ணிஷா.

அடிக்கடி பஷீர் மாமா தன் பாட்டியையும் பெற்றோர்களையும் சந்திக்க வரும்போதெல்லாம் இவளது உள்ளத்தில் மேலோங்கும் பயம் எல்லாம் எங்கே தன்னையும் பாத்திமா போலவே படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்திற்கு தயாராகச் சொல்வார்களோ என்பதுதான்.

அந்த ஊரில் உள்ள ராவுத்தரப்பாவின் தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. அவரிடம் சென்றால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை அந்த சுத்துவட்டாரத்து மக்கள் மட்டுமல்லாது வெகுதூரத்திலிருந்தும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு வருவதும் நிவர்த்திக்க டன் செய்வதும் தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் நம்பிக்கை. பதினான்கு நாட்கள் நடைபெறும் கந்தூரியின் கடைசி நாள் நடக்கும் சந்தனக்கூடு மிகவும் பிரசித்தி பெற்றது.

பஷீர் மாமாவும் அவர் சார்ந்திருக்கும் இயக்க மும் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை, அது எல்லாம் வல்ல இறைவனுக்கு எதிரானது இது போன்ற வழக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் பரப்பி வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரிக்கு வரும் மக்களின் கூட்டம் முன்பிருந்ததைவிட அதிக அளவில் அலைமோதுவதைக் காணும்போது இதுபோன்ற திடீரென இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் செவிசாய்க்க மாட் டார்கள் என்பதை பறைசாட்டுவதாக இருக்கிறது.

பல வருடங்களாக தன் பாட்டி கந்தூரிக்கு வருவதை நிறுத்திவிட்டாள் என்பதை நினைக்கும் போது பஷீர் மாமாவின் தாக்கம் சிறிது சிறிதாக தன் பாட்டியை ஆக்கிரமிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்ப்பட்டது. அவர்தான் அந்த அரபிக் சானலை போடச் சொன்னார். எந்நேரமும் அரபி டெலிவிஷனில் வரும் புனித காபாவின் நேரடி காட்சிகளை காணும்போது கமீலா பாட்டி மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. இதுவரை பெண்கள் வெளியே செல்லும் போது வெள்ளை சேலை உடுத்தி அதையே இழுத்து முகத்தை மூடும் வழக்கத்தை மாற்றி ஹிஜாபை அணியுமாறு அறிவுறுத்தினார் பஷீர் மாமா. பாட்டி அதையும் ஏற்றுக்கொண்டார். எனவே, எப்போது தன் பாட்டி இங்கே போகாதே அங்கே போகாதே என்று கட்டளையிடுவாளோ என்ற பயம் அவளது ஆழ்மனதில் எட்டிப்பார்த்தது.

குறிப்பாக அவளது பயம் தன் படிப்பு தொட ருமா என்பது பற்றியதுதான். மற்ற பெண்களைப் போல தானும் படித்து ஒரு டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருப்பவருக்கு இந்த நிலை தன் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாக எந்நேரமும் பயமுறுத்துக் கொண்டிருதது.

தன் பாட்டியின் மனப்போக்கை அறிவதற்காக ஒருநாள் தயக்கத்துடன் ‘அத்தம்மா, நான் படிச்சு என்னவாக ஆவனுமுன்னு நீங்க எதிர்பாக்குறிங்க’ என்று பேச்சுக்கொடுத்தபோது, பாட்டி சிறிது நேரம் தனது கையிலிருந்த தபஸ்மணியை விரல்களால் நகர்த்துவதை நிறுத்திவிட்டு மௌனத்துடன் தன் பேத்தியைப் பார்த்தாள். அந்த அறையில் இருந்த தொலைக்காட்சி புனித காபாவை சுற்றி மக்கள் திரள் திரளாக வளம் வருவதை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒரு ரம்மியமான இறை உணர்வை ஏற்படுத்தியது. பாட்டி நிமிர்ந்து பார்த்தாள், ‘என்னவா ஆவனுமின்னா கேட்டே?, வாழ்கையில நீ என்ன வேனுமானாலும் ஆவலாம். எல்லாத்துக்கும் மேல நீ ஒரு நல்ல மனுஷியா ஆவணும். இந்த குடும்பத்தோட மானத்தையும் மரியாதையும் காப்பாற்றனும், அதுதான் எங்களுக்கு பெருமை.’

தன் பாட்டியின் வார்த்தைகளின் உட் பொருளை அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. ஏதோ சூட்சுமம் இருக்கிறது, தன்னை பள்ளியிலிருந்து நிறுத்தத்தான் இப்படி கூறு கிறாள் என்று தனக்குள்ளே ஏற்படும் எண்ண அலைகளை அத்தம்மாவிடம் எப்படி தெரிவிப்பது என்று தவித்தாள். தன் அம்மாவிடம் தன் மன உளைச்சலை தெரிவித்தபோது ‘நீ எதுக்கு தேவையில்லாம கவலப்படுரே, அந்தம்மா என்ன சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்லுவாக பேசாம உன் வேலையைப்பாரு’ என்று அவளை ஆசுவாசப் படுத்தினாள். காருண்ணிஷாவுக்குத் தெரியும் தன் அம்மாவையும் இப்படித்தான் சாக்கு போக்கு சொல்லி எட்டாம் வகுப்புக்குப் பிறகு அவளது படிப்பை நிறுத்திவிட்டார்கள். ஆனால் இவளது அம்மாவின் காலத்தில் இப்போது இருக்கும் வாழ்க்கை வசதிகள் இல்லை, போக்கு வரத்து இல்லை, பெண்களுக்கென்று அருகாமை யில் தனிக் கல்லூரிகள் இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது, பெண்களை வெகுதூரத் துக்குக் கூட தனியாக அனுப்பி படிக்க வைக்கும் பெற்றோர்களும் இப்போது இருக்கின்றனர்.

கிராமத்தில் உள்ள கண்மாய்க்குக் குளிக்க சென்ற குழுந்தைகள் நல்லபடியாக திரும்ப வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டு காருண்ணிஷாவின் அம்மா தன் தங்கையுடன் சமையல் வேலையை முடித்து தன் மாமியாருக்கு நேரத்தில் சாப்பாடு பரிமாறினாள். சற்று ஓய்வெடுக்கலாம் என்று உட்கார்ந்தபோது சந்து முனையில் வண்டியைத் திருப்பும்போது தன் கணவன் வழக்கமாக அடிக்கும் ஹாரன் ஒலி கேட்டு எழுந்து வந்து வீட்டின் முன் கேட்டை திறந்தாள்.

பஷீர் மாமா வந்து போனதிலிருந்து தன் மாமி சிறிது எரிச்சலுடனும் கோபத்துடனும் இருப்பதைக் கண்டாள். சாப்பாடு கொடுக்கும் போது காரணம் கேட்கலாமா என்று நினைத்தவள், கோபம் தணிந்ததுவுடன் தன் மாமியே நடந்ததைச் கூறுவாள் என்பது இவளுக்கு நன்றாகவே தெரியும். தன் மாமி மதியம் தொழுகையை முடித்து விட்டு சாப்பிடுவாள், சிறிது உறக்கத்துக்குப்பின் நான்கு மணியளவில் எழுந்திருப்பாள்.

இன்று எழுந்த உடனேயே தன் மகன் இப்ராஹிமை கூப்பிட்டாள். ஏதோ சொல்லப் போகிறாள் என்பதை உணர்ந்த ஆயிஷா, கண் மாயில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை சாப்பிடச் சொல்லிவிட்டு தன் கணவனைத் தொடர்ந்தாள். ‘இனிமேல் அந்தக் கவதிப்பயல நம்ம வீட்டுக்குள்ள வுடக்கூடாது. எங்கெருந்தோ வந்த கொலகாரப்பய’.

திகைப்புடன் என்ன நடந்தது என்று செய்கை யால் தன் மனைவியை கேட்டார் இப்ராஹிம். பின்னர் தன் அம்மாவைப் பார்த்து என்ன உம்மா, என்ன நடந்துச்சு, யாரப் பத்தி பேசுரே’. அவன் பேசி முடிப்பதற்குள் ‘ அவந்தான், பசீர் பய, கொஞ்சம் இடம் குடுத்தா கெடைக்கி பத்தாடு வேணும்னு கேக்கற நரி மாதிரி எங்கிட்ட என்னென்னமோ சொல்றான்….

நம்ம புள்ளங்களப் பத்தி தேவையில்லாம பேசுறான். இப்பிடி வளக்கணும் அப்பிடி வளக் கணும்னு எனக்கே பாடம் சொல்லித் தர்றான்…..

அவன் பொண்ணோட படிப்ப நிறுத்துனது மாதிரி நம்ம கொழந்தங்களையும் நிறுத்த சொல்றான்; எல்லாத்துக்கும் மேல இன்னிக்கி நடக்கப்போற கந்தூரிக்கி போவக் கூடாதாம்….

அவன் யாரு, எங்கேருந்து வந்தான்னு எனக்குத் தெரியும். இன்னிக்கி வெள்ளையும் சொள்ளையுமா உடுப்பும் செருப்பும் போட்டு நடக்க ஆரம்பிச்சதும் மத்தவங்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லி தர்ரானாம். அவனைப் பாத்தா சாத்தான்தான் என் கண்ணுக்கு தெரியறான்.’

அத்தம்மா குரல் உயர்த்திப் பேசுவதைக் கேட்ட காருண்ணிஷா தன் சாப்பாட்டு தட்டுடன் அவள் அறையை நோக்கி விரைந்தாள். மற்ற குழந்தைகளும் அவளை பின் தொடர்ந்தனர்.

‘…என் கொழந்தகளப் பத்தி எனக்குத் தெரியாதா…’

சாப்பாட்டு தட்டுடன் வந்த காருண்ணிஷா அத்தம்மாவின் கண்ணில் பட்டாள்.

‘ஏ காரு, இங்க வாடி என் கண்ணு, நீ நல்லா படிக்கணும், ஊரு உலகத்துல உள்ள படிச்ச பொம்பளங்கள்ல நீயும் ஒருத்தியா இருக்கணும். ஒனக்கு எதுவரைக்கும் படிக்க முடியுமோ படி….. நான் இருக்கேன்’.

காருண்ணிஷா தன் பாட்டி இப்படி கோபமடைந்து ஒரு நாளும் பார்த்ததில்லை.

‘பள்ளிக்கொடம் போகும்போது எவனாவது கிண்டல் பண்றான் கேலி செய்ரான்னு தெரிச்சுதுன்னா எங்கிட்ட சொல்லு, நானே அவன அறுத்து போட்டுடுறேன்….’

‘போங்க குட்டிங்களா, போயி ரெடியாவுங்க, நானும் வர்றேன் கந்தூரிக்கி’.

காருண்ணிஷா இப்போது ஒரு புதிய நம்பிக்கையை தன் கண் முன்னே கண்டாள். தூரத்தில் சாயங்கால தொழுகைக்காக பாங்கு ஒலி கேட்டது.

– தளம், ஜன-மார்ச் 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *