உந்தன் நிழலாய் நானடி தோழி…
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 21-33
அத்தியாயம் – 28

ரேவதி முரளியின் திடீர் மாற்றத்தை நம்பமுடியாமல் தவித்தாள்.
எப்பிடி எப்பிடி எப்பிடி இப்பிடியோர் மாற்றம் ஒரே ராத்திரீல?
முரளியின் அந்த மாற்றம் ரேவதியின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
சந்தோஷம் அவள் மனம் முழுவதும் பொங்கி வழிந்தது.
முரளி ரேவதிக்கு மனைவிக்கான முழு அந்தஸ்த்தையும் வழங்கினான்தான்.
ஆனாலும் சாருவை மறக்க முடியாமல் தவித்தான் என்பது நிஜம்.
சாரு நா ஒங்ககிட்ட சொல்லிட்டுவந்தபடி எதையும் செய்ய முடியாம ஆகிடுத்துசாரு.
நா சூழ்நிலக் கைதியா யிட்டேன்.தாத்தாவோட கடைசி ஆசய நிறைவேத்தற நெருக்கடியும்..கடமையும் என்ன கட்டிப்போட்டுடுத்து சாரு..
இல்ல இல்ல.. சாரு சாருன்னு அவுங்க பேர நா உச்சரிக்கிற தகுதி எனக்குக் கிடையாது.
நா துரோகி..என்ன நம்பின பொண்ண காதல்கிற பேர்ல ஆசைய வளத்து ஏமாத்தின பாவி நா.
எப்டீல்லாம் அவங்ககிட்ட நம்பிக்கைய வளத்துட்டு வந்தேன்.தாத்தாவப்பாத்துட்டு வரும்போது நம்ம விஷயத்த தாத்தாட்ட சொல்லி அவரோட சம்மதத்த வாங்கிண்டு வருவே..
நீங்கதா எ உயிர்..எ வாழ்க்க..
அப்டீன்னு என்னவெல்லாம் சொல்லி அவங்க மனசுல ஆசைய வளத்தே..காதல விதைத்தே..
ரெண்டு வருஷாமாச்சு..நா பம்பாயவிட்டு..அவங்கள விட்டு வந்து.
என்னப்பத்தி எதையும் அறியமுடியாத என்ன பாடுபடுவாங்க அவங்க?..பாவி நா..
என்ன மன்னிச்சிடுங்கனு கேக்கக்கூட அருகத இல்லாதவ நா..
நா இனிமே அவங்க மொகத்துலயே முழிக்க முடியாது..அவங்கள பாக்கற தகுதியே எனக்குக் கிடையாது..
எனக்குக் கல்யாணமா யிடுத்துனு தெரிஞ்சா அவங்க என்ன பாடுபடு வாங்க..என்னப்பத்தி எவ்வளவு கேவலமா நெனப்பாங்க?அவங்க நெனைக்கறது என்ன?நா கேவலம்தா..கேவலமானவன்தா..
சாருவை நினைத்து நினைத்து மனதுக்குள் அழுவதும்..சாருவிடம் மனதால் மன்னிப்புக் கேட்பதும்..தோன்றிய அனைத்தையும் டைரியில் எழுதிவைப்பதும் வாடிக்கை யாயிற்று.
எழுதியதைத் தானே படித்துப்பார்த்து படித்துப் பார்த்து சப்தமின்றி அழுவதும் தொடர்கதை யாயிற்று.
கணவர் தினமும் டைரி எழுதுவது தெரிந்தாலும் அதுபற்றி முரளியுடம் எதுவும் விளையாட்டாய்க்கூட கேட்டதில்லை ரேவதி.
சிலபேருக்கு தினசரி டைரி எழுதும் பழக்கமுண்டு என்று தெரியுமென்பதால் அதுபற்றி அதிகம் நினைக்க வில்லை அவள்.
ஆனாலும் முரளி ஒருமுறைகூட டைரியை மேஜைமீதோ..கப்போர்டிலோ வைத்ததில்லை.
தனது பீரோவிவ் வைத்து பூட்டி சாவியைக்கூட தனது கைபேக்கில் வைத்திருப்பான்.
தப்பித்தவறி யாராவது அந்த டைரியைப் பிரித்து ஒரேஒருபக்கம் பார்த்தால் கூட சாருவை நினைத்து அவன் அழுதழுது எழுதியிருக்கும் கவிதையும் மன்னிப்புக்கேட்டுக் கெஞ்சியிருக்கும் வாசகங்களும் நெஞ்சை உருக்கும்.
ரேவதி..நா சொன்னேன்ல ப்ரைவேட் ஹாஸ்பிடல் ஒன்னுல மேஜர் ஆபரேஷன் ஒன்னு இருக்கு..அந்த ஆபரேஷன மூணுடாக்டர்ங்க செய்யறாங்க..அந்த மூணு பேர்ல நானும் ஒருத்தன்னு..
என்ன வரமுடியுமானு கேட்டாங்க நானும் வரேன்னே.. அதா கிளம்பிண்ருக்கேன்.. போய்டுவரேன் சரியா?
வரத்துக்கு நாழியாகுமா?
ஆமா..எனக்காக சாப்டா மல்லா காத்துண்ருக்காத.. வயித்துப் புள்ளக்காரி நீ..
ஒம்பது மாசமாயிடுத்து.. டெலிவரி டேட்டு நெருங்கிடுச்சி..தனியா விட்டுட்டுப்போறது கஷ்ட்டமாதா இருக்கு..
ஆனாலும் ஆபரேஷன்ல கலந்துகிறத தவிற்க முடியல..அதா போக வேண்டிருக்கு..ஜாக்ரதயா இருக்கயா?
ஆபரேஷன் முடிஞ்சதும் போன் பண்றே..ஒடனேவே கிளம்பி வந்துர்றே..
தயவு செஞ்சு ஒழுங்கா சாப்புடு..மாத்ரமருந்த மறக்காம எடுத்துக்கோ..
ஓடி வந்துடுவே..சரியா?கவலையோடு ரேவதியிடம் சொன்னான் முரளி.
ஆனாலும் டாக்டரா இருந்துண்டு இவ்வளவு கவல படக்கூடாது.. சிரித்தாள் ரேவதி.
ம்..டாக்டரு மனுஷந்தானே..
இதுமாரி நேரத்துலல்லா டாக்டருக்கும் தா ஒரு மருத்துவர்ங்கிறது மறந்துடும். சிரித்தான்.
போன் அழைத்தது. பேசினான்.குரலில் அவசரம் தெரிந்தது.
ரேவதி ஹாஸ்பிடல்லேந்து போன்.ஒடனே வரச் சொல்றாங்க..நா கிளம்ப றேன்.பாத்துக்கோ..
நீ நார்மலாதானே இருக்க?..
ஆமா..நா சாதாரணமாதா இருக்கே..கவலப்படாம போய்ட்டுவாங்கோ.. டெலிவரி டேட்டு நாளைக்கேவா என்ன?இன்னும் நாளிருக்கு..
தைரியம் சொன்னாள் ரேவதி.
வரே..பத்ரம்..சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்று தன்னிடமிருந்த சாவியால் வாசல் கதவின் தொட்டிப்பூட்டை வெளியில் பூட்டிக்கொண்டு சென்றான் முரளி.
சாதாரணமாய் வாசல் கதவின் தொட்டிப் பூட்டுக்கு ரெண்டு சாவிகள் இருப்பதுண்டு. வெளியில் செல்பவர்கள் தன்னிடம் இருக்கும் சாவியால் கதவை வெளியில் பூட்டிச் செல்லலாம்.
அதே போலவே உள்ளே இருப்பவர் உள்ளேயிருந்து மற்றொரு சாவியால் கதவைத்திறக்கலாம்.பெரும்பாலும் பெரும்பாலான வீடுகளிலும் இந்த வசதி இருப்பதுண்டு.
அப்படித்தான் தன்னிடமி ருந்த சாவியால் வாச கதவைப் பூட்டிக் கொண்டு சென்றான் முரளி.
சாதாரணமாய் இருப்பதாக முரளியிடம் சொன்னாளே யொழிய.. அடிவயிறு அப்பப்போ வலிக்கதான் செய்தது ரேவதிக்கு. இடுப்பும் சில சமயம் வலித்தது.
அம்மா..அப்பா..பொறக்கப்போற பேரனையோ பேத்தியயோ பாக்க நீங்க ரெண்டுபேரும் இல்லையே..
இந்த நேரத்துல ஒரு பொண்ணுக்கு அம்மாவோட அருகாமதானே தேவப்படும்.
அது எனக்கு கெடைக்காம போயிடுத்தே..அம்மா..அப்பா வாய்விட்டுப் புலம்பினாள்.
புடவைத்தலைப்பால் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
பளிச்சென்று இடுப்பின் பள்ளத்தில் ஓர்முறை வலித்து நின்றது.
சண்டிவலி..கொழந்த கொஞ்சமா கீழ எறங்கும் போது இப்பிடித்தா வலிக் கும்பாள்ள நம்மூர்ல மாமில்லா..நினைத்துக் கொண்டாள்.
தானாய்.. சோம்பை கருக்க வறுத்து தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி நெய்விட்டுக் குடித்தாள்.சாதம் வடித்த கஞ்சியில் ஒரு கல் உப்புப்போட்டு நெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக்குடித்தாள்.
கால் வீக்கம் கொறையணும்னா புள்ளத்தாச்சி பொண்ணுங்க நெறைய ஒன்னுக்குப் போணும்.அதுக்கு பார்லி கஞ்சி வெச்சுக்குடிக்கணும்..
சின்ன வயதில் மாமிகளின் பேச்சு மனதில் பதிந்திருந் ததால் பார்லி கஞ்சி வைத்து தெளியவைத்து அந்தத் தண்ணியைக்குடித்தாள்.
கணவன் டாக்டரென்றாலும் கிராமத்து வழக்கத்தைக் கைவிடவில்லை.
குளிக்கும் முன் விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவி இதமான சூட்டில் வெந்நீர் ஊற்றிக் குளித்தாள்.
வயிற்றில் குழந்தை அவ்வப்போது சோம்பல் முறிக்கும் போதெல்லாம் காலால் உதைப்பது இதமாய் இருந்தது.அந்த இதத்தை ரசித்தாள்.தாய்மைதான் எத்தனை அழகானது?
இப்பிடிக்கூட எ வாழ்க்கை மாறும்னு நா நெனைக்கவே இல்ல.. என்று நினைத்து நினைத்து மகிழ்ந்தாள் ரேவதி.
தன்னுயிர்த்தோழி சாருவிடம் தன் வயிற்றில் குழந்தையின் சின்னச்சின்ன அசைவுக ளைக்கூட சொல்லிச்சொல்லி மகிழ்வாள்.
சாரு இவர் இப்பல்லா எங்கிட்ட எவ்வளவு அன்பா இருக்கார் தெரியுமா?
அன்னிக்கு விடியகாலம்பர என்ன மேஜிக் நடந்துதோ தெரீலடி..அதுலேந்து எங்கிட்ட ரொம்ப ப்ரியமா மாறிட்டார்டி.
அதா இப்ப நா வயத்த சாச்சிண்டு நிக்கறே..எதிரில் தோழி சாரு நிற்பதுபோல் எண்ணிச் சொல்லிச் சிரித்தாள்.
அதுசரி..அங்க எப்பிடி? நீ எப்பிடீடி இருக்க?
சாருவிடம் மானசீகமாய்க் கேட்டவளுக்கு மனதில் கவலை எட்டிப்பார்த்தது.
சாரு யாராத்துக்கோ கொழந்த பாத்துக்கதானே பம்பாய் போனா?வருஷம் பதினெட்டாருதே?அவ இப்ப எந்த நெலேல இருப்பா?
தினம் தினம் அவகிட்ட மனசால பேசறோம்தா.. ஆனா அவ எப்பிடி இருக்கா..
அவ வாழ்க்க எப்பிடி அமஞ்சிருக்கு ஒன்னும் தெரியலயே..எ சாரு நன்னா இருக்கணும்..கடவுளே..
மனம் கவலைப்பட்டது.
சேரில் அமர்ந்திருந்தவள் எழுந்திருக்க முயன்றாள்.
சுரந்துபோயிருந்த கால்களை தரையில் ஊன்றி எழுந்திருப்பது கொஞ்சம் சிரமாக இருந்தது.
கால்கள் பேறு காலத்தில் சுரந்து நிற்பது இயற்கை யென்பதால் வீங்கிப் போயிருந்தன.
முகம்கூட கொஞ்சம் அதைப்பாய்த் தெரிந்தது.
அழகுகூடியிருந்தது.
பின்புறம் அகன்றிருந்தது. வயிறும் கொஞ்சம் பெரிதாய்த்தான் இருந்தது. அழகாய்.. தளதளவென்று தாய்மையின் பூரிப்பிலிருந்தாள் ரேவதி.
வயறு குடுக்கமாரி சின்னதா இருந்தா ஆம்பளக் கொழந்த..இப்டீல்லாம் இருந்தா பொண்ணு கொழந்தன்னு நம்மூர்ல மாமில்லாம் பேசிப்பால்ல..
எந்தொப்பேல குட்டிச் செல்லம் இருக்காளா?மெல்ல வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டாள் ரேவதி.
அந்த சமயம் குழந்தை சோம்பல் முறித்ததோ என்னவோ அடிவயிறு பக்கவாட்டில் நீண்டு இயல்புக்கு வந்தது.
அடப்பொல்லாது அம்மாவ ஒதக்கிறியா?செல்லமாய் கொஞ்சினாள் வயிற்றுக் குழந்தையை. எஞ்செல்லம் என்றாள்.
ஹால்லயே கொஞ்சம்.. ஒரு பத்து நிமிஷமாவது நடப்போம்.நடந்தா நல்லது தானே..நினைத்தவளாய் சேரிலிருந்து எழுந்தவள்
மணிபார்த்தாள்.
மணி ஒம்போது அம்பது. பத்துமணிவர நடக்கலாம் என்று நினைத்தவளாய் ஹாலுக்குள்ளேயே நடந்தாள்.
நடக்கும்போது போது டேபிளிலிருந்த காபிகுடித்த டம்ளர் டபரா கண்ணில் பட்டது.
நடந்து முடிச்சதும் டவராடம்ளார அலம்பி வெச்சுட்டு சித்தநாழி படுக்கணும் என்று நினைத்தவளாய் நடந்தவள்..
மணிபார்த்தபோது நேரம் பத்து பத்தாகியிருந்தது.
போதும் நடந்தது என்று நினைத்தவளாய் டேபிளிலிருந்த டபரா டம்ளரைக் கையிலெடுத்தாள்.
இது நாங்குடிச்சது..இவர் குடிச்ச டவராடம்ளார்?.. இவருக்கு பெட்ரூம்க்குப் போய்னா காபி குடுத்தே..
அங்கன்னா இருக்கும்?இங்க தேடினா?
பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.
சீலிங் ஃபேன் ஓடிக் கொண்டி ருந்தது.டேபிளில் முரளி காபி குடித்த டபரா டம்ளர் இருந்தது.
பாரே..வெள்ள போற அவரத்துல ஃபேனக்கூட அணைக்காம..சிரித்துக் கொண்டாள்.
கண்கள் திறந்து கிடக்கும் பீரோவிடம் சென்றன.
என்னதிது?பீரோ விரியத் தொறந்து கெடக்கு..ரெண்டு கதவும் தொறந்து கெடக்கு.. சாவி தொங்கருது..
இப்டீல்லாம் ஃபேன அணைக்காம..பீரோவ சாத்திப்பூட்டாம போமாட் டாரே..அப்பிடியோரு அவசரம்..
அடி வயிறு நீண்டது. குட்டிச்செல்லம் சித்தநாழி சும்மாரு..ஒ அப்பா ஃபேன அணைக்காம.. பீரோவ சாத்தாம..அவசர அவசரமா ஆபரேஷனிருக்குனு ஓடிட்டார்.இதெல்லாம் நாந்தானே செய்யணும்?
குட்டிம்மா முழுச்சிண்டாச்சா?
பசிக்குதா செல்லத்துக்கு?
கேட்டுக்கொண்டே பீரோவின் கதவைச்சாத்திப் பூட்டினாள். சாவி பீரோலயே தொங்கட் டும் என்று நினைத்துத் திரும்பியவளின் பார்வை.. கதவுபோடாத கப்போர்டின் மேல்தட்டின் விளிம்பில் முக்கால்வாசி வெளியே நீண்டிருந்த முரளியின் அந்த டைரி கண்ணில் பட்டது.
ப்ச்..டைரிய எப்பிடி வெச்சுட்டுப்போயிருக்கார் பாரு..முக்காவாசி வெளீல நீட்டிண்ருக்கு..கீழ விழுந்து தொலைக்கப்போறுது..
கீழவிழுந்தா அதுனால ஒண்ணுமில்ல..டைரிதானே..க்ளாஸ் சாமானில்லையே தூள்தூளா ஒடஞ்சுபோக..
இருந்தாலும் உள்பக்கமா தள்ளி வெப்போம்..என நினைத்தாவாறு கொஞ்சம் வலது கையைத்தூக்கி டைரியைத் தொட்டு கப்போர்டின் உள்ளே தள்ள முயன்றபோது..
காத்திருந்த விதி தன் வேலையைச் செய்தது.
டைரி உள்ளே நகராமல் கீழே தரையில் விழுந்தது.
விழுந்த வேகத்தில் டைரிக்குள்ளிருந்து பூட்ஹவுஸில் முரளியும் சாரும் எடுத்துக்கொண்ட இரண்டு ஃபோட்டோக்களும்
வெளியே வந்து ஃபேன் காற்றில் தரையில் குப்புற விழுந்தன.
அட..என்ன இது?டைரிக்குள்ள தாத்தா போட்டோவ வெச்சுண்டு தினந்தினம் எடுத்துப் பாப்பார் போலருக்கு..நல்ல தாத்தா..நல்ல பேரன்..
சிரித்தபடி சொல்லிக் கொண்டே தரையில் அருகருகே குப்புற விழுந்து கிடந்த ஃபோட்டோக்களை மெதுவாய்க் குனிந்து எடுத்தாள்.
என்னது போட்டோ பின்னாடி என்னமோ எழுதிருக்கு..
போட்டோக்களைக் கையி லெடுத்து நிமிர்ந்தவளின் பார்வையில்..
நானும் -என் ஜீவனும்..
நான்: முரளிகிருஷ்ணா..
என் ஜீவன்: சாருலதா.
என்று எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் விழ..
அத்தியாயம் – 29
கை நடுங்கியது..பார்வை மீண்டும் போட்டோவின் பின்புறத்தில் எழுதப்பட்டி ருந்த எழுத்துக்களில் நிலைத்தது.
நானும் என் ஜீவனும்..
நான்: முரளிகிருஷ்ணா..
என்ஜீவன்: சாருலதா.
கைநடுக்கம் உடல் முழுதும் பரவியது.
கையிலிருந்த போட்டோக்கள் இரும்பு குண்டுகளாய் கனத்தன.
போட்டோக்களைத் திருப்பிப் பார்க்கவே பயமாய் இருந்தது.
அடிவயிற்றிலிருந்து இழுத்து கொண்டுவந்து நுரையீரல் ஒரு பெருமூச்சை வெளியேற்றியது நாசிவழியே.
வயிறு மேலேயேறி கீழே இறங்கியது.
கண்களைமூடிக்கொண்டாள் ரேவதி.
கண்களைத் திறந்து புகைப்படத்தைப் பார்க்கத் துணிவின்றி துவண்டு போனது மனம்.
ஆனாலும் முரளி.. என்ஜீவன் சாருலதா என்று குறிப்பிட்டிருந்தது தன் தோழி சாருலதாவாய் இருக்குமோ என்ற சந்தேகம் துளியும் வரவில்லை ரேவதிக்கு.
வேண்டா..வேண்டா..பாக்க வேண்டா..இவர் எந்தப் பொண்ணையோ விரும்பிருக்கார்.அந்தப் பொண்ணும் இவர விரும்பிருக்கா..ரெண்டு பேருமா எடுத்துண்ட போட்டோ இது..
அந்தப்பொண்ணு பேர் சாருலதா..
என் ஜீவன் சாருலதான்னு இவர் எழுதிருக்கணும்னா..
எந்த அளவுக்கு அந்தப் பொண்ண இவர் உயிருக்குயிரா நேசிச்சிருக்கணும்.
அய்யோ..அப்ப..அப்ப..இவர் தாத்தாவோட. வற்புறுத்த லால..தன்னோட காதல கைவிட்டு..எங்கழுத்துல தாலிகட்டிருக்கார்.
கடவுளே..என்ன கொடுமயிது? ஒரு பொண்ண உயிருக்குயிரா காதலிச்சிட்டு இன்னூரு பொண்ணுக்குத் தாலிகட்டணும்னா..
அப்ப அந்தப் பொண்ணோட கதி?..
யாரந்த பொண்ணு?எந்தப்பொண்ணு இருக்க வேண்டிய எடத்துல நா இருக்கே?
எந்தப்பொண்ணோட காதலனான இவர நா அவாள்டேந்து பிரிச்சே?..
அன்பால எணஞ்ச ரெண்டு இதயங்கள பிரிச்ச பாவியா நா?..
அய்யோ..மனம் அலறியது..
கால்கள் நிற்கமுடியாமல் நடுங்கித் தள்ளாடின.
பின்னாலேயே கால்கள் ரேவதியைத் நாலடி தள்ளிக்கொண்டே வந்தன.வயிற்றுச்சுமை குலுங்கியது.தொப்பென்றுத் தரையில் உட்கார்ந்தாள் ரேவதி.போட்டோக்கள் மடியில் விழுந்தன.
நல்லவேளையாக இரு கைகளையும் பின்னால் தரையில் ஊன்றிக் கொண்டாள். மூச்சிரைத்தது.
வேகவேகமாக வெளியேறிய மூச்சால் தோள்கள் மேலும் கீழும் அசைந்தன.
நாக்கு வரண்டு போயிற்று.
இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
குனிந்து உட்காரத் தோன்றியது.
பின்னால் ஊன்றியிருந்த இருகைகளையும் எடுத்து உடலின் இருபக்கமும் வைத்து ஊன்றி மெல்லக் குனிந்தாள்.
பார்வை மடியில் வீழ்ந்தது.
மடியில் விழுந்திருந்த போட்டோக்கள்.. நிமிர்ந்து போட்டோக்களிலிருந்த உருவங்களைக் காட்டியபடி விழுந்திருந்தன.
ரேவதியின் பார்வை முதலில் முரளிமீது விழுந்து சட்டென அவனருகில் நிற்கும் சாருவின் மீது நிலைத்தது.
அப்படியே அதிர்ந்து போனாள் ரேவதி.
போட்டோவை மடியிலிருந்த கையிலெடுத்தாள்.
முரளியும் சாருவும் பூட்ஹவுஸில் பார்க்கில் எதிரெதிரே அரையடி இடைவெளிவிட்டு நின்றபடி
ஒருவரையொருவர் கண்ணோடு கண் காதலோடு பார்த்துக்கொள்ளும் புகைப்படம்.
முரளியைச் சாரு கண்களில் காதலும் இதழ்களில் புன்னகையுமாய் நெகிழ்ச்சியோடு பார்த்தபடி..
அவளை ஏகத்துக்கும் காதலோடு பார்க்கும் முரளி.
சாரூ..கத்திவிட்டாள் ரேவதி..
இது எ சாரு..எ சாருதா..எ சாருதா..சாரு நீயா..நீயா..
இவரோட காதலி நீயா..
கதறினாள் ரேவதி.
பத்துவயதுவரைப்பார்த்துப்பார்த்துப் பழகிய முகம்..காலம் உடலில் மாற்றங்களை உண்டாக்கி னாலும் மனதில் பதிந்த தோழியின் முகம் மறந்துவிடுமா என்ன?
உயிருக்குயிரான ஸ்னேகம்..நட்பு தோழமை..
காலம் பிரித்துவைக்கலாம் உருவங்களை..மனதின் நினைவுகளை?
இதயம் துடிப்பை நிறுத்தும் வரை நிஜமான நட்பும் உண்மைக் காதலும் மனதால் மறக்கப்படுவதில்லை. எதற்கும் யார்க்கும் மறக்கடிக்கும் அந்த சக்தியில்லை.
சாரூ..சாரூ..
இவரோட ஜீவனா.. எந்தோழி நீ இருப்பேன்னு நா நெனைக்கலயே..
சாரூ..நானே ஒ காதலுக்குத் தடையா வந்துட்டேனேடி..
ஓ வாழ்க்கைய தெரியாம லேயே தட்டிப் பறிச்சுட்டே னேடி..
நீ இருக்கவேண்டிய எடத்துல நா இருக்கேனேடி சாரு..நா என்ன செய்வேண்டி சாரு..
அய்யோ..எனக்கு ஏ இந்த நெலம?எ சாருவோட வாழ்க்கையே பாலைவன மாக்கிட்ட பாவி நா..
சாரு இது நீ வாழ வேண்டிய வாழ்க்க..
இவரால நா சொமக்கிற இந்தக்கொழந்தய நீ சொமக்க வேண்டியவ..
இவர் ஒன்னோட முரளி கிருஷ்ணா.. விதி ஒன்னோட முரளிய என்னோட முரளியா ஆக்கிடுத்து..
எ சாருவோட ஆசய தரமட்டமாக்கி அதுல மாளிக கட்டி நா வாழவேண்டா..
மாட்டே மாட்டே..என் சாருவும் முரளியும் பிரிஞ்சிருக்க நா விடமாட்டே..என் சாருவோட இவர சேத்துவெப்பே..
இவர் சாருவுக்கு உரியவர்.. சாரு இவரோட ஜீவன்.
படிப்பே படிப்பே.. பொறத்தியார் டைரிய அது புருஷனுதே ஆனாலும் படிக்கிறது தப்புனா அந்தத் தப்ப நா செய்வே..
இவரோட டைரிய நா படிப்பே..அது எ தோழீயோட எ சாருவோட சம்மந்தப்பட்டது.
படித்தாள் படிக்கப்படிக்க அழுதாள்..கதறினாள்.
சாரூ..டைரிய படிக்கவே முடியலடி..இவர நீ நேசிச்ச அளவும் இவர் ஒன்ன நேசிச்ச அளவும்..நா பாவி நா பாவி..
குறுக்க வந்தவ நா..
இவர் எனக்கு தாலிகட்றதுக்கு முன்னாடி கடசியா ஒன்ன சந்திச்சப்ப..
எ தாத்தாட்ட நம்ம விஷயத்தசொல்லி சம்மதம் வாங்கிண்டு வரேன்னு சொல்லிட்டு வந்ததா டைரீல எழுதிருக்கார்.லெட்டர் போடறதா சொல்லிருக்கார்..
ஒன்னோட.. ஓ எம்பிபிஎஸ் ரிசல்ட் பாக்க காலேஜ் போகணும்னு எழுதிருக்கார்.
ஒவ்வொரு பக்கமு ஒன்னப்பாத்தி ஆசஆசயா கவித எழுதிருக்கார்.
எல்லா எ கழுத்துல தாலிகட்டின நாளோட முடிஞ்சிபோச்சு..
அன்னிலேந்து டைரில அழுதழுது ஒனக்கு ஒன்னொன்ணையும் எழுதிருக்கார்..ஒங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கேட்டு..
அழுதிருக்கார்.
ஒங்கள நெனைக்கத் தெரிந்த மனசுக்கு..ஒங்கள மறக்கத்தெரீல சாருனு..
எழுதிருக்கார்.
சாருனு கூப்டற உரிமய இழந்துட்டேன்னு எழுதிருக்கார்.
இனிமேல் கண்ணீரே இல்லையென்ற அளவுக்கு அழுதாள் ரேவதி.
அழுதழுது கண்கள் எரிந்தன.தீடீரென உடல் மிகவும் பலவீனப்பட்டது போல் ஓய்ந்து போனது.
உட்கார்ந்திருந்த இடத்திலேயே படுத்தாள்.
தூக்கமா மயக்கமா தெரியாத நிலைக்குப் போனாள் ரேவதி.
என்னது ரேவதி போனயே எடுக்கல?மூணுதடவ பண்ணிப்பாத்துட்டே..எடுக்கவேல்ல..பயந்து போனான் முரளி.
ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிதுனு சொல்லணும்.. என்ன பண்ணிட்ருக்கனு கேக்கணும்னு பாத்தா போனே எடுக்கல..
வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.
அடுத்த அரைமணிநேரத்தில் வீட்டுக்கதவருகே வந்து நின்றான்.
கதவைத்தட்டினான்.ரேவதி வந்து கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்து.
உள்ளிருந்து ரேவதியின் குரலும் வரவில்லை.. அவளும் வரவில்லை.
பயத்தோடு சாவியால் கதவைத்திறந்து கொண்டு ரேவதி ரேவதி என்று அழைத்துக்கொண்டு உள்ளே ஓடினான்.
வீடு அமைதியாய் இருந்தது.
பெட்ரூமில் லைட் எரிவது தெரிந்தது.
ரேவதீ..கத்திக்கொண்டே பெட்ரூமுக்கு ஓடினான்.
ரேவதி தரையில் கிடப்பதும்..
தனது டைரி அவளருகே பக்கம் பிரித்த நிலையில் கிடப்பதும்..தானும் சாருவும் இருக்கும் போட்டோக்கள் அவளின் தரையில் சரிந்திருந்த புடவையருகே இருப்பதும் கண்களில் பட விக்கித்துப்போய் நின்றான் முரளி.
அத்தியாயம் – 30
ரேவதி தரையில் கிடப்பதும்..
அவளருகே டைரியும் போட்டோக்களும் இருப்பதும் கண்ணில் பட..
நொடி நேரத்தில் அவனை அதிர வைத்தன அவை.
நிலமையின் தீவிரம் புரிந்து போயிற்று.
ரேவதீ..கத்திக்கொண்டே ரேவதி அருகில் ஓடினான்.
நாடிபிடித்துப் பார்த்தான்.
கடவுளே.. மயக்கமாகினா கிடக்கிறா ரேவதி.
கிச்சனுக்கு ஓடி தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான்.
எத்தன்நாழியா மயக்கமா இருக்கான்னு தெரீலயே..
இவுளுக்கோ கொழந் தைக்கோ எதாவது ஆயிடுத்துன்னா? டாக்டர் என்றாலும் பயம் நெஞ்சைக் கவ்வியது.
டைரியும் போட்டோக்களும் மேலும் பயத்தைக் கூடுதலாக்கின.
அய்யோ..ரேவதி போட்டோபத்தியும் டைரிபத்தியும் கேள்விகேட்டடா?
இதயப்பிரதேசம் மொத்தமாய்க் கலங்கிப் போயிற்று.
ரேவதியருகே அமர்ந்து கொண்டான். முகத்தருகே குனிந்து ரேவதி..ரேவதி என்று அழைத்தான். கன்னத்தில் மிருதுவாய் மெதுவாய்த் தட்டினான்.
மெள்ளக் கண்விழித்தாள் ரேவதி.
அவள் மிகவும் களைப்பாய் இருப்பது புரிந்தது முரளிக்கு.
தோ..வரேன்.கிச்சனுக்கு ஓடினான்.திரும்பிவந்தவனின் கையில் டம்ளரில் சூடாய் ஹார்லிக்ஸ்.
ரேவதியின் அருகே அமர்ந்தான்.ரேவதி ஹார்லிக்ஸ்..பதமா ஆத்திண்டு வந்ருக்கேன்.
வாயத்தொற..நானே தரேன்.ரொம்ப டயர்டா இருக்க..
வேண்டா..ஒருக்களித்துப் படுத்தாள் அவனுக்கு எதிர்ப்புறமாய்.
ரேவதி..இந்த நெலமேல நீ இவ்வளவு டயர்டா இருக்கக்கூடாது.ஒனக்கும் கொழந்தைக்கும் நல்லதில்ல..ஆ காட்டு ரேவதி..
இப்டீல்லாம் ப்ரக்னன்ஸி பொம்னாட்டிக்கு மயக்கம் வரக்கூடாது.நல்லவேள நா வந்தே.. இல்லாட்ட நீபாட்டுக்கு மயங்கிக் கெடந்தீன்னா?ம்..இந்தா ஹார்லிக்ஸ குடி..
வேண்டா..
ஏ..வேண்டா?
இந்த டைரிக்கும் போட்டோசுக்குமான வெவரத்த சொல்லிட்டு ஹார்லிக்ஸ குடுங்கோ..
ரேவதி..
மெள்ள எழுந்து அமர்ந்து கொண்டாள் ரேவதி.
ரேவதி மொதல்ல இதக்குடி..
அப்பறம் நீ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றே..கெஞ்சுவதுபோல் சொன்னான் முரளி.
இல்ல..மொதல்ல பதில்..
அமைதியாய் இருந்தான் முரளி.
அவனும் சாருலதாவும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்தபடி நிற்கும் போட்டோ.
அவனிடம் நீட்டினாள்.இந்தப் பொண்ணுதானே ஒங்க ஜீவன்?
போட்டோவிலிருக்கும் சாருவைத்தொட்டுக்காட்டினாள்.
அமைதியாய் இருந்தான் முரளி.
பேரு சாருலதா..ஊர்..அப்பா பேர்.. சித்தி பேர்..அம்மா இந்தப் பொண்ணு பொறந்ததுமே செத்துப் போய்ட்டா..
இந்தப் பொண்ணோட இடது கால் வலதுகாலவிட..
பம்பாய்க்கு ஒத்தராத்துக்குப் பத்துவயசுல அவாத்துக்கு.. ஒடம்புமுடியாத கொழந்தை யப் பாத்துக்க வந்தா இந்தப்பொண்ணு.. எல்லாம் சரியா சொல்றேனா?
ரேவதீ..கத்திவிட்டான் முரளி.
இதையெல்லாம் நீங்க ஒங்க டைரீல எழுதல..அதுனால அதப்படிச்சிட்டு நா சொல்றேன்னு சொல்ல முடியாது.
நீங்க.. நா ஒங்க மாயவரத்தச் சேந்த பொண்ணுனுதானே நெனச்சிண்ருக்கேள் இதுவர..
நீங்க என்னப்பத்தி கேட்டதுமில்ல..நா நானா ஒங்ககிட்ட எதுவும் சொன்னதுமில்ல..
நானும் சாருலதாவும் ஒரே ஊரு..ஒரேதெரு..அடுத்தடுத்த வீடு..ஒரே ஸ்கூல்.. ஒரே க்ளாஸ்..
அவுளும் நானும் உயிருக் குயிரான தோழிகள்.அவ இல்லாம நா இல்ல..நா இல்லாம அவ இல்ல.. ஏ..இன்னும் சொல்லப் போனா..அவதா நா..நாந்தா அவ..
பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொள்ள முயன்று தோற்றாள் ரேவதி.
அவ என் சாரு..பத்துவயசுவர ஓடிப்புடிச்சு வெளையாடி..
ஒன்னா பழகி..
விதி எங்களப் பிரிச்சிடிச்சி.. நானும் அவுளும் பிரிஞ்சி கிட்டத்தட்ட பதினெட்டு வருஷமாகப் போறது.
விதி எங்க உருவத்தப் பிரிக்கலாம்..ஆனா அதால எங்க நட்ப மனசுலேந்து பிரிக்க முடியாது.
காதல் எப்பிடி புனித மானதோ ..நட்பும் அதே அளவு புனிதமானதுதா..
காதலாவது கல்யாணத்த எதிர்பாக்கும்..வேற தேவைகள எதிர்பார்க்கும்.. வம்ச விருத்திய எதிர் பார்க்கும்..
ஆனா நட்பு எதையுமே எதிர்பாக்காது.அப்படி எதையும் எதிர்பார்த்துப் பழகறதுக்குப்பேரு நட்பு இல்ல..அது பொய்யான நட்பு.
உண்ம நட்பு உயிரையும் தரும்.
அப்படியான ஸ்னேகம் எனக்கும் சாருவுக்குமானது.
அவ எ உயிருக்கு சமம்.
நானும் அவுளுக்கு அப்பிடித்தான்.
அதிகமா சொல்றாப்ல இருக்கும்.எங்க நட்ப யாருக்கும் நிரூபிக்கத் தேவயில்ல..
பிரிஞ்சு பதினெட்டு வருஷமானாலும் அவள நா மறக்கல..அவளாலும் என்ன மறந்திருக்கமுடியாது.மறக்கமாட்டா..
அந்த எ சாருவ..எ அன்புத் தோழி சாருவ நீங்களும்.. ஒங்கள அவுளும் விரும்பியிருக்கீங்க..
எ உயிர்த்தோழிய விரும்பின நீங்க எங்கழுத்துல தாலி கட்டினது நீங்க அவுளுக்கு செஞ்ச துரோகம்.
தன்னோட காதல வீட்டுல சொல்ல பயந்து காதலிய கைவிடுறது கோழத்தனம்.
சாகப்போற தாத்தாவுக்காக வாழவேண்டிய காதல சாகடிக்கிறது என்ன நியாயம்?
எ பெத்தவாள கார்மோதி சாகடிச்ச ஒங்கப்பாவால குடும்பத்துக்கு ஏழுதலமொறைக்கு சாபம் சுத்தும்.. பாவம் சேரும்னு.. அதுக்குப் பிராயச்சித்தமா ஒங்கள எங்கழுத்துல தாலிகட்டச்சொல்லி ஒங்க தாத்தா வற்புறுத்தினப்ப..அத மறுக்கமுடியாம நீங்களும் எங்கழுத்துல தாலி கட்டினேள்.
அப்ப.. ஒரு பொண்ண காதலிக்கிறதா சொல்லிப் பழகிட்டு..கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்குறுதி குடுத்துட்டு..அந்தப்பொண்ணு மனசுல ஆசயையும்.. நம்பிக்கையையும் வளத்துட்டு..
தாத்தா சொன்னார் அவர் கடசி ஆசய நிறைவேத் தணும்..சாபம் போக்கணும்.. பிராயசித்தம் பண்ண ணும்னு எங்கழுத்துல தாலிகட்டினது மூலம்.. காதலிச்ச அந்தப்பொண்ண ஏமாத்தினதுக்கு..கைவிட்டத்துக்கு என்ன பிராயசித்தம் பண்ணப் போறேள்?
முகத்தில் அறைவாங்கியது போல் உணர்ந்தான் முரளி.
எனக்கு விரும்பி தாலி கட்டினேளோ..விரும்பாம கட்டினேளோ..ஒங்குளுக்குனு ஒரு குடுமம்பம் உருவா யிடுத்து..ஒங்குளுக்குனு ஒரு கொழந்தையும் கெடச்சாச்சு.
ஆனா சாரு..காதல் தோல்வி விரக்தில..ஒங்கள மறக்க முடியாத தவிப்பில..வேற ஒருவனோட வாழறது நரகம்னு நெனச்சு.. கல்யாணாமே பண்ணிக் காத தனி மரமா நின்னுட்டா?..
சாரு அப்பிடித் தனிமரமா வாழறத்துக்குக் காரணமா நீங்கதானே ஆவீங்க?அந்த பாவத்த எங்ககொண்டு தீப்பீங்க?..என்ன பிராயச் சித்தம் பண்ணுவீங்க?
சாருவ மறந்துட்டீங்களா?இதயத்துலேந்து எடுத்து எறிஞ்சிட்டீங்காளா அவ நினைவ..முடிஞ்சுதா ஒங்களால..முடியுமா அப்பிடிச்செய்ய?
ரெண்டுநாள் முன்னாடிகூட டைரீல எழுதிருக்கேள்..
ஒங்கள நெனைக்கத் தெரிஞ்ச மனசுக்கு.. ஒங்கள மறக்கத்தெரீல சாரு ன்னு..
இதுக்கு என்ன அர்த்தம்?
அப்பிடித்தானே சாருவுக்கும் ஒங்கள மறக்கமுடியாது.
நா வந்து ஒங்களண்ட வாழ்க்க குடுங்கோன்னு கேட்டேனா?
வாழ்க்க பிச்சபோடுங் கோன்னு கையேந்தினேனா?
என்னப்பெத்தவாள ஒங்க அப்பாதா காரேத்தி கொன்னார்.. அதுக்குப் பிராயச்சித்தமா எங் கழுத்துல தாலியகட்டி பொண்டாட்டியாக்கிக்கோங்கோன்னு கெஞ்சினேனா?
ஒங்க தாத்தா சொன்னா?
நா ஒரு பொண்ண விரும்பறேன்னு தைரியமா சொல்லாத நீங்க ஏ ஒரு பொண்ண லவ் பண்ணேள்?
நீங்க தாலிகட்டமாட்டேன்னு சொன்னா நா ஆத்துல கொளத்துல விழுந்து செத்துடுவேனா.. இல்ல ஒங்க காலப்புடிச்சி கெஞ்சுவேனா?
எ சாருவோட வாழ்க்கேல அவ சந்தோஷத்துல..அவ நம்பிக்கேல.. மண்ணள்ளிப் போட்டுட்டேளே?
எ சாருவோட ஏமாத்தத்த என்னால தாங்கமுடியல..
அவ அழுதா நா அழுவே..அவ சிரிச்சா நா சிரிப்பே..
அவளுக்குக் கிடைக்காத இந்த. வாழ்க்க எனக்கு வேண்டாம்..
இப்ப நா வாழர வாழ்க்க அவ வாழவேண்டிய வாழ்க்க..
அவ வாழ்க்கைய நா தட்டிப் பறிச்சிட்டதா நெனைக்கிறே..
அவுளுக்கு உரிமையாக வேண்டிய நீங்க ஒங்க தாத்தா போட்ட தப்புக் கணக்கால எனக்கானவரா ஆகிட்டேள்.
நீங்க எ சாருவோட முரளியாதா இருக்கணும்.
எ சாரு விரும்பினவர் நீங்க..நீங்க விரும்பினவ எ சாரு..
ரெண்டுபேரும் ஒத்தர ஒத்தர் எந்த அளவுக்கு நேசிச்சிருக் கேள்னு இந்த ரெண்டு போட்டோவப் பாத்தாலே தெரியறது.
எ சாரு விரும்பின ஒங்களோட இனிமே நா வாழற ஒவ்வொரு நொடியும் எனக்கு.. எனக்கு..வேண்டா..
அந்த வார்த்தைய யூஸ் பண்ணவிரும்பல..
ஒரு பொண்ண விரும்பிட்டு இன்னொரு பொண்ணோட வாழ்ந்தா அந்த வாழ்க்க நெஜமான சந்தோஷத்தக் குடுக்காது.மனசொப்பி வாழற வாழ்க்கையா இருக்காது..ஏத்துண்ட கடமய செய்யிர சடங்கா சம்பிரதாயமாதா இருக்கும். அது போலியான வாழ்க்க..
மொதல் காதல யாராலும் மறக்க முடியாது. மறந்துட்டேன்னு சொன்னா அது வடிக்கட்டின பொய்.
ரேவதி பேசப்பேச..அவளின் பேச்சுக்குப் பதில் சொல்ல முடியாமல்..சொல்லும் திராணியற்று அமர்ந்திருந் தான் முரளி.
பதிலே சொல்லமுடியாத பேச்சு..பதிலே இல்லாத கேள்விகள்.
ஹார்லிக்ஸ் ஆறிப்போய்க் கிடந்தது.
அதிகமான பேச்சு.. அதிகமான உணர்ச்சி வெளிப்பாடு.. மிகுந்த ஆயாசத்தோடு கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டாள் ரேவதி.
வயிற்றில் குழந்தை புரண்டது..கொஞ்சமாய் இறங்கியது.இடுப்புப் பள்ளம் பளீரென்று வலித்தது.
அம்மா என்றாள் ரேவதி மெதுவாய்.வாய் கசந்தது.
ரேவதி..மெல்ல அழைத்தான் முரளி..
நா சாருவப்பாக்கணும்.. என்றாள் ரேவதி.குரலில் உறுதி தெரிந்தது.
வெடிகுண்டைக்கொளுத்தி மடியில் வீசியதைப்போல் அதிர்ந்தான் முரளி.
– தொடரும்…
November 23, 2026