உங்களுக்குத்தான் சொந்தம்
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 215
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுந்தரம் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு புதினப் பத்திரிகை வாசிப்பதில் கவனம் செலுத்தினார். அவரின் கண்களுக்குப் புதினப் பத்திரிகையின் எழுத் துக்கள் அவ்வளவு நன்றாகத் தெரியவில்லை. அதனால் மடியுக்குள் இருந்ந மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொரு எழுத்துக்களாக அவ தானித்து வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது –
“இந்தாருங்கள், பிள்ளைக்கு வயதும் முப்பதுக்கு மேலாகி விட்டது. இன்னும் வீட்டோடு வைத்துக் கட்டிக் காத்துக்கொண்டு இருக்கப் போறீங்களே ?”- சுந்தரம் இருந்த இடத்துக்கு வந்துகொண்டே சொன் னாள் கண்மணி.
“ஏன் இப்ப அவசரப்படுகிறாய்? அவன் மணி உத்தியோகமாகட்டுக்கேன்”
“அவர் உத்தியோகம் ஆகும்வரை வீட்டோடை வைச்சுக்கொண்டு இருக்கப்போறியளே?”
“பின்னை என்னப்பா செய்யச் சொல்லுறியள்?”
“இந்தக் காலத்திலை பீ. ஏ. படித்தாலும் இடமெடுக்கிறது கஷ்டமாம். மனேச்சரைப் பிடிச்சுக் கிடிச்சுக் கேட்டுப்பாருங்கோவன்”
“மனேச்சரைப் பிடிச்சாப்போலை என்ன ? மனேச்சருக்கு இரண்டாயிரம் குடுத்தாத்தான் சரிவரும்.”
“அதுக்கென்ன, இரண்டாயிர மெண்டாயென்ன குடுத்துச் சேத்து விடுங்கோவன்”
“அப்பிடியெண்டா மணியையும் தகப்பனையும் வரச்சொல்லி, சொல்லி அனுப்பு”.
“ஆரிட்டைச் சொல்லி அனுப்பிறது?”
“நீ போய்ச் சொல்லிப்போட்டு வாவன்” என்றார் சுந்தரம், சுந்தரம் சொன்னதும் மகளுக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்ற ஆவலால் போட்ட வெற்றிலையையும் துப்பிவிட்டு, அடுக்கு அடுக்காக அடுக்கிவைத்திருந்த சேலைகளில் ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு முப்பது வயதுக் கன்னிப் பெண்ணைப் போலக் காரிலே ஏறினாள் கண்மணி.
கண்மணி காரிலே ஏறியதும் கார் காற்றாகப் பறந்து சென்று கந்தவனம் வீட்டுப் படலையில் நின்றது.
படலையடியில் கார் நின்ற சத்தம் கேட்டு ஓடி வந்தார் கந்தவனம்.
“அண்ணை, உங்களையும் மணியையும் ஒருக்கா வந்து விட்டுப் போகட்டாம்”
“ஏன் பிள்ளை? ஏதாவது அவசியமான காரியமே?”
“உங்கண்டை மகன்ரை விஷயமாகத்தான் கதைக்கவாம்”
“அவன்தானே பிள்ளை பெரிய பிழையாகக்கிடக்கு இந்தியாவுக்குப் போக வேணுமெண்டு பிடியாய்ப் பிடிச்சான். ஏதோ அங்கினை இங்கினை எண்டு மாறிச் சாறி இந்தியாவுக்கு விட்டுப் படிப்பிச்சன். இந்தியா விலை இருந்து வந்து நாலு வருசமாச்சுது. இன்னும் தான்……”
“அதுக்குத்தான் மனேச்சரிட்டைக் கூட்டிக் கொண்டு போகப்போறாராம்.”
“ஐயோ பிள்ளை உந்த வேலை மாத்திரம் எனக்கு வேண்டாம். படிப்பிச்ச காசு இன்னும் குடுத்து முடியவில்லை. அதுக்குள்ளை மனேச்சருக்கும் குடுக்க நான் ஆரிட்டைப்போறது?”
“நீங்கள் வாருங்கோவன் எல்லாத்தையும் வீட்டிலை கதைப்பம்”
“இஞ்சார், பிள்ளைக்குக் கோப்பி கொண்டு வந்து குடணை”
“இப்பதான் அண்ணை கோப்பி குடிச்சுவிட்டு வாறன்”
“நீங்கள் எங்களிட்டைக் குடிக்கிறியளே?”
“பின்னைக் கொண்டுவாருங்கோ” என்றதும் அவசர அவசரமாக ஓடிப்போய்க் கோப்பியைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் பூமணி.
கண்மணி கோப்பியைக் குடித்து விட்டு எழும்புவ தற்கும் மணி ஊரைச் சுற்றி விட்டு வீட்டுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
“அண்ணை மருமேனும் வந்து விட்டார். வாருங்கோவன் கையோடை காரிலை போவம்” என்றாள் கண்மணி. கண்மணியின் விருப்பத்திற்கு இணங்கக் கந்தவனமும் மணியும் காரிலே சென்றனர்.
கார் கண்மணியின் வீட்டுக்குள் சென்றதும் “வள்வள்” என்று அல்சேசன் நாய் குரைக்கத்தொடங்கியது.
“ஜோன்! சத்தம் போடாமை நில். அம்மாதான் வர்றா” என்றார் சுந்தரம். சுந்தரம் சொன்னதும் ஜோன் வாலை ஒருக்கால் ஆட்டிவிட்டு ஓடிப்போய்த் தன் இருப் பிடத்தில் இருந்தது.
கந்தவனமும் மணியும் காரிலிருந்து இறங்கிக் கண்மணிக்குப் பின்னே சென்றனர்.
“வாங்க வாங்க உங்களைத்தான் தேடிக்கொண்டு இரூந்தனான்” என்று சொல்லிக் கதிரைகளைக் காட்டினார் சுந்தரம்.
சுந்தரத்தின் சைகைகளைக் கண்ட கந்தவனமும் மணியும் கதிரையில் அமர்ந்தனர். கண்மணியும் அருகில் இருந்த கதிரையில் இருந்தாள்.
“என்ன கதைக்காமல் இருக்கிறியள். விஷயத்தைக் கதையுங்கோவன்?” என்றாள் கண்மணி. கண்மணி கூறியதும் சுந்தரம் பேசத்தொடங்கினார்.
“மச்சான் உங்களோடை ஒரு முக்கியமான விஷயம் கதைக்க வேணும்.”
“அதுக்காகத்தானே வந்திருக்கிறன். நல்லாக் கதையுங்கோ.”
“பிள்ளைக்கு முப்பது வயதாச்சு, நெடுக வைச்சுக் கொண்டு இருக்கமுடியாது. அதுதான்…”
“அதுக்கு என்ன செய்யச் சொல்லுறியள்? மணிக்கு உத்தியோகம் கிடைச்ச பிறகுதான் கலியாணம் செய்யிறது.”
“அதுக்காகத்தான் மனேச்சரோடை கதைக்கலா மெண்டு நினைக்கிறன்.”
“காசுக்கு ஆரிட்டை போறது?”
“அது நானெல்லே குடுக்கிறன். நீங்கள் வாருங்கோ” என்று சொல்லிக் கந்தவனத்தையும் மணியையும் மனேசரிடம் கூட்டிக்கொண்டு போனார் சுந்தரம்.
சுந்தரம் மனேச்சருக்கு இரண்டாயிரம் ரூபா கட்டி யதும் மணிக்கு ஆசிரியர் உத்தியோகம் கிடைத்தது. மணிக்கு ஆசிரியர் உத்தியோகம் கிடைத்ததும் மணிக்கும் சுந்தரிக்கும் வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. சுந்தரம் அவ்வூரிலே “பணக்காரச் சீமான்” என்ற பட்டத்தைப் பெற்றவர். அவர் சின்ன வயதிலேயே சிங்கப்பூருக்குப் போய்ப் பணத்தைச் சம்பாதித்ததாலேயே அவருக்கு அந்தப் பெயர் கிடைத்தது.
அந்த ஊரின் ஒரே ஒரு சிங்கப்பூர் பென்சனியரான அவரிடம் நிறையப் பணமிருந்தும் பணக்கார மாப்பிளை அவருக்குக் கிடைக்காமல் விட்டது ஆச்சரியத்துக்குரியதுதான்.
பணக்காரச் சீமானான சுந்தரம் அவர்களுக்குப் பணக்கார மாப்பிள்ளை கிடைக்காமற் போனதற்குக் காரணமுமில்லாமலில்லை. அவரின் மகள் அதிகம் படித்ததே காரணம்.
மணி சுந்தரியைத் திருமணம் செய்துகொண்டு நாலு மாதங்களாக சுந்தரி வீட்டிலேயே தங்கி இருந்தான். சுந்தரி பணக்காரக் குடும்பத்திலே பிறந்ததால் மணிக்குப் பணத்தைப் பற்றிய அக்கறை அவ்வளவு இருக்கவில்லை.
மணி தினமும் கல்லூரிக்குப் போவான். கல்லூரியில் இருந்து வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டடிப்பான். மணி தினமும் சீட்டடிப்பதால் மணின் சம்பளப் பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு சீட்டடிப் பதிலேயே சென்றது.
ஒரு நாள்:-
“எடே மச்சான், மாமியார் வீட்டுச்சோறு பழகப் பழகப் புளிச்சுப் போகுமடா.”
“இம்… இம்… என்ரை மாமி அப்பிடியானவ இல்லை.”
“எல்லாற்றை மாமியாரும் முதலிலை உப்பிடித்தான் இருக்கிறவை. கொஞ்ச நாள் போன பிறகுதான்…!”
“பாப்பம் என்ன நடக்குதெண்டு.”
“அது நடக்குமுன்பே வழி கோலிப் போடவேணுமடா. ஏன்? உனக்குச் சொந்த வீடு இருக்குதுதானே? அந்த வீட்டிலைபோய் இருந்தாலென்ன?”
“என்ரை மனைவி…”
“உன்ரை மனைவிக்கு விருப்பமில்லையே? நீ பின்னை உன்ரை மனைவியின்ரை விருப்பத்துக்கே கட்டுப்பட்டு நடக்கப்போறாய்?”
“என்ன இருந்தாலும் அவளின்ரை அந்தஸ்துக்கு எங்கடை வீடு…”
“அந்தஸ்துக் கூடியவை ஏன் உன்னைக் கலியாணம் செய்தவை?”
“…”
“ஏனப்பா மௌனம் சாதிக்கிறாய்? பெற்ற தாய் தகப்பன்ரை வீட்டுக்குப் போகாமைப் பெண்சாதி வீட் டிலை இருந்தால் உன்ரை தாய் தகப்பன் என்ன நினைப்பினம். வாயை வயித்தைக் கட்டிக் கூழைக் கஞ்சியைக் குடிச்செல்லே அதுகள் உன்னைப் படிப்பிச்சதுகள் ”
“ஓமடாப்பா, நீ சொல்லுறது சரிதான் ; அப்பிடி யெண்டால் என்ன செய்யச் சொல்லுறாய்?”
“உடனே உன்ரை பெண்சாதியைக் கூட்டிக் கொண்டு உங்கண்டை வீட்டுக்குப் போ”
“அவள் வரமாட்டவெண்டால்…”
” புரிசன்ரை சொல்லைக் கேளாதவளை உனக்கேன்”
மணிக்கும் குணத்துக்குமிடையே பெரிய வாக்கு வாதம் நடந்தது. குணம் சொன்னது யாவும் சரியென மணி கருதினான். எப்படியும் தனது மனைவியைக் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென. நினைத்து ‘விறு விறு’ என்று வீட்டுக்குப் போனான்.
“என்ன இப்பதானாக்கும் சீட்டாட்டம் முடிந்தது. என்ரை அப்பா இரண்டாயிரம் ரூபா கட்டி உத்தியோ கம் எடுக்காவிட்டால் உப்பிடியெல்லாம் சோக்குப் பண்ணிக்கொண்டு திரிய முடியுமே?”
“உன்ரை கொப்பர் ஆருக்காக ரண்டாயிரம் ரூவா கட்டினவர். எனக்காகவே?”
“பின்னை ஆருக்காக”
“உனக்குக் கெதியிலை கலியாணம் செய்யவேனு மெண்டத்துக்காக வல்லவோ கட்டினவர்” என்றான் மணி.
மணிக்கும் சுந்தரிக்கும் இடையே நடந்த வாக்கு வாதம் பெரும் குழப்பத்தில் முடிந்தது.
மணி தன் நண்பர்கள் சொன்னது சரிதானென உணர்ந்தான். மனைவி வீட்டிலோ – மாமியார் வீட் டிலோ அதிக நாட்களாக இருந்து குடித்தனம் நடத்துவது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது.
உடனே, “சுந்தரி! இவ்வளவு காலமும் உங்களுடைய வீட்டிலை இருந்தது போதும். இனி எங்கண்டை வீட்டுக்குப் போவோம் வா”
“ஏன்?”
“இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்கண்டை வீட் டிலை இருந்தால் நீ என்னை மதிக்கமாட்டாய்.”
“யார் சொன்னது?”
“இப்ப நீ பேசியதிலிருந்து தெரிகிறது.”
“என்னத்தைப் பேசினனான் உங்கண்டை கொட்டிலுக்கு வந்து பட்டினி கிடக்கச் சொல்லுறியளே?”
“ஏன்? நான் உளைச்சுத் தரமாட்டேனா? எனக்குக் கை கால் இல்லையா ? இவ்வளவு காலமும் சாப்பிட்டது யாருடையது?”
“இவ்வளவு காலமும் என்ரை அப்பன் வீட்டுச் சாப்பாட்டைத்தான் சாப்பிட்டனான். உங்கண்டை உளைப்பு உங்களுக்கே போதாது.”
“என்ன! அவ்வளவுக்கு வந்துவிட்டாயா? இப்ப வாறியா? வரவில்லையா? ”
“வரமுடியாது?”
“முடியாதா?”
“முடியாது, முடியாது, முடியாது. என்றதும் மணிக்குக் கோபம் வந்துவிட்து. கண்கள் கோபத்தால் கொவ்வைப் பழம் போன்று சிவந்தன. சொண்டுகள் படபடவெனத் துடித்தன. கைகள் பதறின. ‘பளார்- பளார்’ என இரண்டு மூன்று முறை அவளது கன்னத் தில் அடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான் மணி.
மணி தன் சொந்த வீட்டுக்குப் போனதும் சுந்தரி யின் தகப்பன் சுந்தரம் எடுத்துக் கொடுத்த ஆசிரியர் வேலையை ‘இராஜினாமர்’ செய்துவிட்டுப் பிரபல பத்தி ரிகை ஒன்றிற்கு ஆசிரியரானான்.
***
சுந்தரிக்கு மணியிடம் கொள்ளை ஆசை. அவள் கொஞ்ச நேரமாகுதல் மணியைப் பிரிந்திருக்கமாட்டாள். மணிக்கும் சுந்தரிமேல் ஆசைதான்: அவனாலும் அவ ளைப் பிரிந்திருக்க முடியாதுதான். ஆனால் அவர்களைப் பிரித்தது – யாதோ?
மணியும் சுந்தரியும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. வெகுவிரைவில் வருவார். வந்து தன்னுடன் இருப்பார் என்றுதான் நினைத்து நினைத்து, பொறுத்திருந்தாள். மணி இதுவரை தன்னை எட்டியும்* பார்க்காதது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்த தோடு, அவளைச் சிந்திக்கவும், வைத்தது.
சுந்தீரி தான்செய்த தவறுகளை எல்லாம் உணர்ந் தாள். தன் கணவனை கண்டபடி ஏசியதால்தான் தன்னை மறந்துபோய் விட்டார் என்று கருதிய சுந்தரி, தன் கணவனுக்குத் தான் செய்த தவறுகளை எல்லாம் எடுத் துக்காட்டித் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி கடிதம் ஒன்று எழுதினாள்.
சுந்தரியின் கடிதம் மணிக்குக் கிடைத்தது. சுந்தரி யின் கடிதத்தைக் கண்டதும் மணிக்கு மகிழ்ச்சி வந்து விட்டது. சுந்தரி தான் செய்த தவறுகளையெல்லாம் உணர்ந்து திருந்தி விட்டாள். இனி அவளைக் கூட்டிக் கொண்டு வரவேண்டுமெனத் தீர்மானித்தான். தான் வந்து கூட்டிக்கொண்டு வருவதாகவும் அவளுக்குக் கடிதம் எழுதினான்.
மணி சென்ற கார் சுந்தரியின் வீட்டுப்படலையடி யில் நின்றது. மணி இறங்கிச் சுந்தரியின் வீட்டுக்குள் சென்றான். அவன் போகும்போதே “சுந்தரி! சுந்தரி!” என்று கூப்பிட்டுக்கொண்டே போனான். அவனைக் கண்டதும் ஓடோடி வந்த சுந்தரி அத்தான் என் அழைத்துக்கொண்டே கட்டித் தழுவினாள்.
இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த மணிக்குச் சுந்தரியின் தழுவல் இதமாகவும் உணர்ச்சியை ஊட்டு வதாகவும். இருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பார்கள். அதேபோலச் சுந்தரியின் அன்புத் தழுவல் மணியின் கடந்த கால நிகழ்ச்சிகளை மறக்கச், செய்துவிட்டது.
“சுந்தரி’ நேரமாச்சு வா போவோம். மாமா மாமி எங்கே?* என்றான் மணி.
“இதோ! வந்துவிட்டோம் தம்பி!” என்றுகூறிக் கொண்டே சுந்தரமும் கண்மணியும் வந்தனர்.
“‘மாமா’ நான் சுந்தரியைக் கூட்டிக் கொண்டு போகிறேன்.”
“ஓ தாராளமாகக் கூட்டிக்கொண்டு போ தம்பி. உங்களைக் காணாமல் இவ்வளவு காலமும் சுந்தரிபட்ட பாடு…”
“அப்ப பின்னை நீங்கள் குறை நினைக்கமாட்டியள் தானே.”
“எங்களுக்கென்ன குறை தம்பி. எங்கண்டை பிள்ளையை உங்களுக்குக் கட்டித் தந்து விட்டோம். இனி அது உங்களுக்குத் தான் சொந்தம். அதிலை நாங்கள் தலையிடுவது தப்பு.”
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“ஆமா தம்பி, உங்கண்டை குடும்பத்திலை நாங்கள் தலையிட்டதாலைதான் இப்படி நேர்ந்தது. எங்களை மன்னித்து விடுங்க….”
“உங்களை என்னத்துக்கு மன்னிக்கிறது, நாங்கள் போயிட்டு வாறம்.”
“சந்தோஷமாகப் போயிட்டு வாருங்க” என்று சொல்லித் சுந்தரமும் கண்மணியும் வழியனுப்பி வைத்தனர்.
மணியும் சுந்தரியும் கைகோர்த்தபடி சிரித்துக் கொண்டே காரில் ஏறினர். கார் மணியின் வீட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
– விவேகி (இதழ்)
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
