ஆதங்கம் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,149 
 
 

தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு.

மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது.

ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள்.

மெல்ல அருகில் வந்தவள், ‘எப்படியிருக்கீங்க?’ என்றாள் இயல்பாக.

ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு! நல்லாருக்கியா மீனா’ எனும்போது ஒரு பைக் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் ” ஏறுங்க’ என்றான் மீனாவைப் பார்த்து.

யாரது மீனா?

இதுவா! இவன்தான் என் செல்லப்பேரன். கொஞ்ச நேரம்கூட காலாற நடக்க விடமாட்டான். உடனே பைக் எடுத்துகிட்டு வந்திருவான். என் மேல் கொள்ளை பிரியம், வரட்டுமா! என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.

மீனாட்சி கொடுத்து வைத்தவள். நம் பேரன் ஒரு முறையாவது இப்படி வண்டியில் கூட்டிப் போயிருப்பானா? என்று மனதில் நினைத்துக்கொண்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தார் ரகுராமன்.

– ஜி.சசிகுமார் (ஜூலை 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *