அம்மாவின் அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 5,659 
 
 

பாலு எழுந்திருடா மணி என்னாகுதுன்னு பார்,

வழக்கமான அம்மாவின் சுப்ர பாத ஒலியுடன் எழுந்திருக்க வேண்டிய நேரம் காலை சரியாக 5.00 மணி 

இந்த 2025 காலத்தில் யார் வீட்டில் 5.00 மணிக்கு இப்படி எழுந்திருக்க சொல்லி தொல்லை கொடுப்பார்கள்? 

என் வீட்டில் மட்டுமே நடக்கும் காரணம், என் அம்மா ஒரு அரசு பள்ளியின் தலைமையாசிரியை. அவர் பணிபுரியும் பள்ளி என் வீட்டிலிருந்து 50 கிலோ மீட்டர்‌தூரம். 5 மணிக்கு எழுந்து குளித்து, பூஜை செய்து விட்டு, டிபன் , சமையல் செய்து விட்டு கிளம்ப 7.00 மணி ஆகி விடும். 

2 பஸ்களில் பயணம் செய்தால் தான் 9.00 மணிக்கு அவர்கள் பணிபுரியும் பள்ளியை அடைய முடியும்.‌ காலமான என் தந்தையும் ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றியவர்.

என் அம்மாவும் அப்பாவும் நேரத்தை கடை பிடித்து கடமையாற்றுவதில் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். நான் 5 வயதாக இருக்கும்போது என் தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவர்களுக்கு பிறந்த நான் அவர்களுக்கு நேர் எதிர். 

காரணம், 

நான் பணிபுரிவதோ IT software மேனேஜர் வேலை, எந்த நேரத்திலும் பணிபுரிய வேண்டும் என்ற வேலை. நேரம் காலம் என்ற ஒன்று இல்லாத வேலை. என் கம்பெனிக்கு வேண்டியது ஒரு நாளைக்கு என்னுடைய 10 மணி நேர உழைப்பு மட்டுமே. அதற்கேற்ப நல்ல ஊதியம், வசதி வாய்ப்புகள். ஒவ்வொரு நாளும் என் டார்கெட் முடித்து விட்டு நான் இரவு தூங்க ஆரம்பிப்பதே 12 மணிக்கோ அல்லது 1.00 மணிக்கோ தான்.  

எப்படி என்னால் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருக்க முடியும்?  

என்னதான் விளக்கமாக கூறினாலும் சரிடா இனிமேல் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் அந்த அன்பு 2 நாட்கள் கூட நிற்காது. அதற்கு காரணம் நானே தான் . அவர்களை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்து நானே டிபன் எடுத்து வைத்து சாப்பிட சோம்பேறித்தனம், எனவே பல நாட்களில் வீட்டில் டிபன் சாப்பிடுவதில்லை. அம்மா பள்ளியிலிருந்து வந்தவுடன் முதலில் கிச்சனுக்கு சென்று நான் டிபன் சாப்பிட்டேனா, மதியம் lunch எடுத்து சென்றேனா என்று பார்ப்பார்களாம். டிபன் சாப்பாடு அவர்கள் வைத்த அதே அளவில் இருந்தால், என்னிடம் எதுவும் கேட்கவும் மாட்டார்கள், கோபித்து கொள்ளவும் மாட்டார்கள். மீண்டும் மறு நாள் காலை 5 மணிக்கு எழுப்பி விடுவார்கள். காலையில் எழுந்து குளித்து பூஜை செய்து விட்டு அவர்களுடன் சேர்ந்து டிபன் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் . வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப் 2 கிலோ மீட்டர் தூரம்.. ஆட்டோ, கால் டாக்சி கிடைக்கும். ஆனால் அவர்கள் அதில் செல்ல விரும்பமாட்டார்கள். நான் தான் அவர்களை என் காரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். நான் எவ்வாறு driving செய்கிறேன் என்று மறைமுகமாக கவனிக்கவும் , தவிர நான் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு வேளையாவது அவருடன் சேர்ந்து டிபன் மட்டுமாவது சாப்பிட வேண்டும் என்ற என் மீதுள்ள பாசம். இவை எல்லாம் நான் அறிவேன். 

நான் என்ன செய்வது , என்னுடைய lunch மதியம் அலுவலகத்தில் , இரவு நான் வருவதற்கு 9, 10 மணி ஆகி விடும். அம்மா Sugar, BP patient. நேரத்திற்கு சாப்பிட்டு sugar tablet, BP tablet போட்டு கொள்ள வேண்டும் எனவே நான் வரும் வரை அவர்கள் சாப்பிடாமல் இருக்க கூடாது என்று என்னுடைய உத்திரவு. அதை அவர்கள் மீற மாட்டார்கள்.  

எனக்கு நல்ல சம்பளம், சொந்த வீடு, கார் இவ்வளவு வசதிகள் இருந்தும் அம்மாவிடம் அவர்களது வேலையை விட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று பல முறை கூறினாலும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

“ஆசிரியர் பணி அறப்பணி”  

அதனை என் ஒய்வு வயது வரை விட மாட்டேன் என்று கூறுவார்கள்.  

என்னுடைய 5 வயது முதல் இன்று 25 வயதாகும் என்னை ஒரு தாயும் தந்தையுமாக தனி ஆளாக நின்று கவனித்து, வளர்த்து, இந்த உயர்ந்த நிலைக்கு படிக்க வைத்த அவர்களின கஷ்டங்களுக்கும் அவரது அர்ப்பணிப்புகளுக்கும்,   

காலை 5.00 மணி சுப்ரபாதம்  பாடி என் தூக்கத்தை கலைத்து என்னை எழுப்புவது என்பது அவர்களது அன்பிற்கு முன்னால் என்னுடைய தூக்கமிழப்பு  வெறும் தூசு போன்றது. 

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்  தாழ்”

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *