அமரத்துவம் (Immortality)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 1,590 
 
 

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன்;. லோநாதனின் தந்தை சிவநாதன்,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த இரு ஆண் குழந்தைகளில் மூத்தவன் லோகநாதன். பயோ கெமிஸ்டிரி துறையில் பட்டம் பெற்று உயிரி வேதியியலில் பல ஆய்வுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடத்தி வருபவன். அவனது திறமை அறிந்த அவனது புரோபெசர் வில்லியம், அவன் வருங்காலத்தில புதிய கண்டுபடிப்புகளை; செய்து மனித இனத்துக்குப் பேருதவி செய்வான் என்று சக பேராசிரியர்களிடம் அடிக்கடி சொல்லுவார். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வு கூடத்தில்; மரபபணு சிகிச்சை மூலம் மனிதனின் ஆயுள் காலத்தை நீடிக்க முடியமா என்பதில் ஆராய்ச்சி நடத்தி வந்தான் லோகநாதன். அவ் ஆராய்ச்சியில் அவன் முக்கிய சிரத்தை எடுதத்துக்கு காரணம், அவனது பெற்றோர்கள் குறைந்த வயதில் மரணித்ததே. அவனது பெற்றோரின்; பரம்பரையைச் சார்ந்தவர்கள், குறைந்த காலம் வாழ்ந்வர்கள்.. அதனால் அவனது பரம்பரையைச் சார்ந்தவர்களின் மரபணுக்கள் வெகு விரைவில் சிதைந்ததால் அவர்களின் ஆயுற் காலாங்கள் குறைவாக இருந்திருக்கலாம்; என்று லோகநாதனுக்கு புரொபெசர் வில்லியம் சொன்னதை அவன் அடிக்கடி நினவு படுத்திக்கொள்வான். தனக்கும் அவர்களைப் போல் ஆயுள்காலம் குறைவாக இருக்கலாமோ என்று அவன்றன் புரெபசரிடம் கேட்ட போது அதற்கு அவர், 

“லோகா, உன் ஆயுளைப் பற்றி இப்ப யோசிக்காதே. வெகு விரைவில் ஆயுளை நீடித்து, நுண்ணறிவு கூடிய டொல்பின்கனைப் போல் 150 டொல்பின்கனைப் போல் 150 வருடங்கள் மனிதன் வாழக்கூடிய வழியை நீ கண்டு பிடித்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார். 

லோகனாதனுக்கு ஆராய்ச்;சியில் துணையாக இருந்து, பின் துணைவியானவள் மேரி இசபெலா. அவளுடைய தந்தையும் வேதியியல் துறையில், லண்டன் பல் கலைக்கழகத்தில் பேராசிரியாரக இருந்து ரிட்டடையராகி, அறுபது வயதில் ஹார்ட் அட்டாக்கால் காலமானவர். அவரின் மனைவியும் இளமை வயதில் மார்பு புற்று நோயால் காலமானவள். பெற்றோர் இளம் வயதில் மரணித்தது மேரியை வேகுவாக பாதித்தது. லோகநாதனிதும், மேரியினதும பரம்பரையைச் சார்ந்தவர்கள் குறைந்த ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்ததால், மனிதனின் ஆயுளை அதிகரிக்க “ஜீன் திரபி” (புநநெ வுh நசயிh ல) எனும் மரபணு சிகிச்சை பற்றிய ஆராய்ச்சியே அவர்களின் இருவரினதும் குறிக்கோள். 

“லோகா, நீர் இந்தியாவைச சேர்ந்தபடியால் ஜாதகத்தின் மேல் அதிகம் நம்பிக்கை உள்ளவரா”? வில்லியம் கேட்டார் 

“ஏன் சேர் அப்படி கேட்கிறியள்”? 

“இல்லை, இங்கு கணித பேராசிரியராக இருக்கும் சுப்பிரமணியன் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் தன் சாதிக்குள் திருமணம் செய்ததாக எனக்குச் சொன்னார். அந்தப்பொருத்தத்தில் தாலிப் பொருத்தம், ஆயுள் போருத்தம், மனப் பொருத்தம், பிள்ளைப் பொருத்தம்; ஆகியவையை முக்கியமாக பார்த்து தன் பெற்றோர் தனக்குத் திருமணம் செய்து வைத்ததாக எனக்குச் சொன்னார். ஆதனால் தான் கேட்டேன்.” 

“இருக்கலாம் சேர். அப்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் கூட வெகு விரைவில் பிரிந்து இருக்கிறார்கள். இறந்தும் இருக்கிறார்கள். மேலைத் தேசங்களில் ஜாதம் பார்பதில்லையே, ஆனால் திருமணத்துக்கு முன் பிளட் டெஸ்ட் செய்வதாக கேள்வி”. 

“உண்மைதான் உலகில் ஆயுள் கூடிய மக்கள் வாழும் தேசங்களில் மொனொக்கோ (ஆழழெஉழ) முதலிடத்தில் இருக்கிறது. பல பில்லியனியர்கள் இத்தேசத்தில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்த ஆயள் கூடிய மக்கள் வாழும் நாடு ஜப்பான். ஆனால் ஆகஸ்ட் 1945 இல் அமெரிக்கா வீசிய அனுக்குண்டால் குறைந்த ஆயுளோடு போனவர்கள் பல்லாயிரக கணக்கான ஜப்பானியர்கள்;. ஆயுள் அதிகமுள்ள மக்களைக் கொண்ட மூன்றாவது நாடாக ஹொங்கொங்.” 

“கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற தேசங்களில் வாழும் மக்களின் சராசரி ஆயட்காலம், பல இடங்கள் கீழே உள்ளது இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுள் குறைவு. இதற்கு வறுமையம், பொருளாதாரமும் காரணமாக இருக்கலாம்”, லோகநாதன் சொன்னார். 

“மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆராயச்சி நல்லுது தான், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணம் தவிரக்க முடியாதது ஒன்று. உதாரணத்துக்குப் விபத்து, போர், பூகம்பம், சூறாவளி, சுனாமி, போன்றவையால் ஏற்படும் மரணம் தவிர்க்க முடியாதவை” புரொபெசர் சொன்னார். 

“எதற்காக வெகுவிரைவில் மனிதனுக்கு வயது அதகரிக்கும் போது, தோல்கள் சுருங்கி, நடக்கும் சக்தி இழந்து, பல வித நோய்கள் வந்து உறவு கொண்டாடுகிறது என்பதைப் பற்றியே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதிபுத்திசாலியான டொல்பினைப் பாருங்கள். அது சுமார் 150 முதல் 200 வயது வரை வாழ்கிறது. ஆமை, 400 வயது வரை வாழ்கிறது. ஏன் யானை கூட 90 வருடங்கள் வரை வாழ்கிறது. ஆனால் மற்றைய உயரினங்களை அடக்கி ஆட்சி செய்யும் மனிதன் மட்டும்; சராசரி 70 ஆண்டுகளே வாழ்கிறான்”, லோகநாதன் சொன்னார். 

“வயதாகும் போது நமது உடலில் உள்ள மரபணுக்களும் செல்களும் படிப்படியாக சிதைவதால் செயல் குறைந்து நோய்களை எதிர்க்கும் சக்தியை இழந்து விடுகிறது. அதனால் டயபடீஸ், கிட்னி வியாதி, அல்செய்மார். புற்ற நோய், இருதைய நோய் போன்றவை உடலில் சேர்ந்துவிடுகிறது. ஆனால் மரபணுக்களும்;, செல் எனபப்படும் கலங்கள்; வேகமாக சிதையாமல் இருக்க வழிவகைகள் உண்டு சேர். சிதைவை குறைத்தால் நோய்கள் வராமல் இருக்கமுடியும். அதனால் ஆயுளும் நீளலாம்.” மேரி கருத்து தெரிவித்தாள். 

“மேரி நீர் சொல்வதில் ஓரளவுக்கு உண்மையிருக்கிறது. ஆனால் செல்கள் சிதையாமல் இருக்கும் சிகிச்சையை வெகு இலகுவாக செய்யமுடியாது என நான் நினைக்கிறேன்” வில்லியம் சொன்னார்.. 

“சேர், செல்லின் வளர் சிதைவு பிரச்சனை உருவாக்கலாம். எமது செல்கள் கழிவுப்பொருட்களை சேகரிக்கிறது. இதனால் உயிரியல் செயல்முறைகள் சீரகுலைந்து போய்விடுகிறது.” லோகநாதன் சொன்னார். 

“லோகா. ஓன்றை நீர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, உடல் உறுப்புகள் மறு உருவாக்கம் பிரச்சினைகளை எதிர்கொண்டால் ஒவ்வொரு குரோமோசோமினில் இருக்கும் டெலிமெரஸ் எனும் மரபணுக்கள் கலங்கள் பிரியும்போது சுருங்கிக் கொண்டு போகிறது. இந்த சுருக்கத்தை தவிரக்காவிடில் செல்கள் செயல் இழந்து விடுகிறது. ஒரு கட்டத்தில செல்கள் இறுந்து விடுகின்றன. அதனால் பல்வேறு நோய்கள் உடலைப் பாதித்து மரணத்தைக் கொண்டுவரலாம். 

இதை நீங்கள் கவனத்தில் கொண்டு ஆராய்ச்சியை நடத்தவேண்டும்;” பேராசிரியர் வில்லியம், லோகனாதனுக்கும். மேரிக்கும் அறிவுரை வழங்கினார், 

“சேர் உதாரணமாக, ஒரு பொதுவான நீரிழிவுக்கு எடுக்கும் மெட்ஃபோர்மின் மருந்தை, பொறுத்தவரை, எலிகளில் செல்களின சிதைவு மெதுவாக நடக்கிறத. ஆதகால கூடிய காலம் வாழக் கூடியதாக இருக்கிறது. ஒரு (சுழரனெறழசஅ) என்றவட்டப்புழுவில் உள்ள உயிரணு வளர்ச்சிதை ஈடுபட்ட ஒரு மரபணு மாற்ற அதன் பெற்றோர்கள் விட நீண்ட ஆயுளேடு விவகுக்கும. இயற்கையானது எப்படியோ சில உயிரினங்கள் தமது ஆயுளை நீடிக்கும் வழியை கண்டுபிடிக்க உந்துகிறது. 

“லோகாஈ உமது உணரம் என்ன”? 

“ஏன் சேர் திடீரென்று என் உயரததை கேர்கிறர்கள்?” 

“காரணத்தோடு தான்”. 

“ஆறடி மூன்று அங்குலம் சேர்“. 

“உயரமானவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்றும,; செல்கள் சிதைவடைவது குறைவென்றும் எங்கையோ நான் வாசித்தது நினைவிருக்கிறது. அதனால்தான் கேட்டேன். நீங்கள் இருவரும் விடாமுயற்சியாக உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள். என் உதவி உங்களுக்கு எப்போதும் இருக்கும்”. 

கினி பன்றிகள் (Guinea Pig) மருத்துவ ஆராய்ச்சி பெரிதும் பயன்படுகின்றன? அவை ஆய்வுத் துறைகளில் பயனுள்ள பாலூட்டிகள். அவைக்கும், மனிதர்களுக்கும் பல உயிரியல் ஒற்றுமைகள் உண்டு. பல நூற்றாண்டுகளாக அவை பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன்.’கினி பன்றி ஒரு மனித சோதனை பொருள். கினிப் பன்றிகள், சுமார் 4 முதல் 8 வருடங்கள் வாழக்கூடியவை. வைட்டமின் சி, காசநோய் பாக்டீரியம், இரத்த ஏற்றம், சிறுநீரக நோய், இரத்த உறைதல் போன்ற நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்க பாவிக்கப்பட்டன. இக்காரணத்தால்; தங்களின் ஆராய்ச்சிக்கு கினி பன்றியை ஆரம்பத்தில் பாவித்தனர். 

லோகநாதனும் மேரியும் ஆரம்பத்தில்; கினி பன்றியில் செல் சிதைவைப் குறைக்கும் மருந்தைக் கண்டுபிடித்து, பரீட்சித்துப் பார்த்தார்கள். அவ் உயிரினத்தில் செல் சிதைவின் விகிதம் குறைந்ததை கண்டான்கள். ஆதன் காரணமாக கினி பன்றி; 15 வருடங்கள் வரை கூடிய காலம் வாழக்கூடியதாக இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு. லோகநாதனும், மேரியும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவைப்பற்றி பேராசிரியர் வில்லியத்துக்கு சொன்னபோது அதற்கு அவர்: 

“எனக்கு இப்போது வயது அறுபது. எனது தோல் சுருங்கத் தொடங்குவதைக் அவதானிக்;கிறேன். அடிக்கடி எனக்கு தடிமன், இருமல், உடம்புவலி போன்றவை வருகிறது. மறதியும் வருகிறது. வெகு தாரம் நடக்க முடியாமல் இருக்கிறது. வெகு காலம் நான் வாழ்வனோ தெரியாது, அதனால் நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு என்னைப் பயன் படுத்தினால் என்ன?” புரொபெசர் கேட்டார். 

“என்ன சேர் இப்படிச் புதுமையாக சொல்லுகிறீர்கள். நீங்கள் என்ன கினி பிக்கா (Guinea Pig)”? 

“அப்படிச் சொல்லவேண்டாம். உடலின் 25 வெவ்வேறு மனித உறுப்புககளை, மாற்று நன்கொடையாக கொடுக்க முடியும். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள், சிறு குடல் இரத்த நாளங்கள், எலும்புகள், இருதய வால்வுகள், மற்றும் தோல் இத்தானத்தில் ஆகியவை அடங்கும். அதேபோல் என் உடலை உங்கள் ஆராய்ச்சிக்கு பயன் படுத்த நான் ஒத்துக்கொவதால் மனித இனத்துக்கு சேவை செய்வதாக நான் கருதுகிறேன். ஊடலில் உள்ள மனித உறுப்புகள் தானம் செய்வதில்லையா? அதே போல் எனது முழு உடலையும் உங்கள் ஆராய்ச்சிக்கு நான் தானம் செய்வதாக எடுத்துக்கொள்ளுங்களேன். நான் இன்னும் பத்து வருடம் வாழ்வதாக இருந்தால், எனது ஆயள் காலம் 100 வருடங்களுக்கு மேல் நீடிக்கலாம் அல்லவா?. என்ன இருவரும் சொல்லுகிறீர்கள்”? புரொபெசர் வில்லியம் உறுதியோடு அவர்களைக் கேட்டார். 

லோகநாதனாலும், மேரியாலும் அவர் சொல்வதை நம்பமுடியவில்லை. அவரது வேண்டுகோளை நிராகரிக்கவும் முடியவில்லை. 

“சேர் எங்களுக்கு சில மாதங்கள் தாருங்கள் எங்கள் முடிவைச் சொல்ல. நாங்கள் தற்போது செய்யும் பரிசோதனைகள் நூறு விகிதம் வெற்றி என்று அறிந்த பின், நாங்கள் கலந்து ஆவோசித்து முடிவெடுத்து, உங்கள் உடலைப் பரிசோதனைக்கு பாவிக்க சம்மதமா இல்லையா என்று சொல்லுகிறோம்”, மேரி சொன்னாள். 

“சரி ஆறுமாதங்கள் தருகிறேன். நான் ரிட்டையராக இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கு. அதற்கு முன் உங்கள் முடிவை சொல்லவேண்டும்” என்றார் புரோபெசர் வில்லியம். 

நாட்கள் மாதங்களாயிற்று. புரொபெசர் சொன்ன ஆறு மாதங்ஙகள் முடிய இன்னும் இரு கிழமைகளே இருந்தன. தாங்கள் செய்த ஆயள் நீடிப்பு பரிசோதனைகள் வெற்றி என்பதைக் கண்ட லோகநாதனும் மேரியும், புரொபசரின் வேண்டுகோளுக்கு சம்மதிக்க அவர் வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினாரகள். அவர்களுக்கு புரொபசர் வில்லியத்தின் மகன் பீட்டர் சொன்ன செய்தி அவர்களை அதிரவைத்தது. 

“என்ன புரபெசர் வில்லியம் கார் அக்சிடென்டில் இறந்துவிட்h ரா?. எப்போது இது நடந்தது”? லோகநாதன் பீட்டரைக் கேட்டார். 

“ஆமாம் நேற்று அப்பா யூனிவர்சிட்டியாலை வீடு திரும்பும் போது ஹைவேயில் ஒரு லொரியோடு அவர் கார் மோதியதால் அவர் அந்த இடத்தலேயே இறந்திட்டார்” அழுதுகொண்டே மகன் பீட்டர் சொன்னார். 

லோகநாதன் மேரியைப் பார்த்தார். மேரி அதிரச்சியால் பேசாது நின்றாள். 

“பார்த்தாயா மேரி நாம் எவ்வளவு ஆராயச்சி செய்து ஆயுளை நீடிக்க மருந்து கண்டு பிடித்தாலும், எது எது எப்ப எப்ப நடக்க வேண்டுமோ, அது அது அப்ப அப்ப நடக்கும். அதை என்ன ஆராய்ச்சி செய்தும் யாராலும் நிறுத்த முடியாது” என்றார் லோகநாதன். 

– காலம் (அறிவியல் சிறுகதைத் தொகுப்பு), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com.

பொன் குலேந்திரன் பொன் குலேந்திரன் - Pon Kulendran - 12-June-2016 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்”…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *