அன்றன்றுள்ள ஆகாரம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 206
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இறைமக்கள் சிறைப்படுத்தப்பட்ட காலம், ஒரு பக்தியுள்ள பெண்மணி கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் சிறையிலடைக்கப்பட்டாள் – நீதிபதி அவளைப் பார்த்து. “உன் ஆண்டவர் இனி உனக்கு எப்படி உணவு கொடுப்பார் என்று பார்ப்போம்” என்றார் கர்வத்துடன்.
“கடவுளுக்குச் சித்தமானால் உம் வீட்டிலிருந்தே காப்பாற்றப்படுவேன்” என்றாள் அப்பெண்மணி.
இவளின் உறுதியான விசுவாசத்தைக் கண்ட நீதிபதியின் மனைவி தன் வீட்டிலிருந்தே அவளுக்கு உணவு அனுப்பிக்கொண்டிருந்தாள்.
கிறிஸ்தவ மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட அக் காலத்தில்தானே, ஒரு மனிதன் வைக்கோல் படப்பில் ஒளிந்து கொண்டான். ஒரு கோழி தினமும் அந்த இடத்தில் வந்து முட்டையிட்டுச் சென்றது.
“(ஆண்டவர்) தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு ஊட்டினார்.” (கத்) [1 சங்.110:5)
“அன்றன்று எங்களுக் எங்களுக்குத் வேண்டிய உணவை அன்றன்று எங்களுக்கு தந்தருளும்” (லூக்கா 11:3)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
