அதிரடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 293 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிஞர் கவிமாறன் இறந்து போயிருந்தார். மோலீஸ் நாய்கள் சுற்றி சுற்றி ஓரு தெருக்கோடியில் நின்று விட்டன. இன்ஸ்பெக்டர் இளந்தேவன் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அந்த அறையை ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து கொண்டிருந்தார். 

“சார், ஆம்புலனஸ் வந்து விட்டது. பாடியை எடுத்து விடலாமா?” என்று கேட்ட சப்- இன்ஸ்பெக்டர்டம் “சரி” சொல்லி விட்டு தன்னுடைய தேடுதலை தொடர்ந்தார். 

ஹோட்டல் ரிஷப்சனில் கேட்ட பிறகு கவிஞர் நேற்று காலை ரூம் போட்டு விட்டு சாயங்காலம் தான் வந்திருக்கிறார். வேறு யாரும் வரவில்லை என்று தெளிவாகத் தெரிந்த பிறகு தான், தன்னுடைய விசாரணையை தொடங்க ஆரம்பித்திருந்தார். 

திரும்பிப் பார்த்த போது சோபாவின் அடியில் மல்லிகைப் பூவும், ஹேர்ப் பின்னும் கிடந்தன. எடுத்து வைத்துக் கொண்டு நேற்று தேடி வந்த பெண்ணை உடனடியாக கண்டு பிடித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு காவல் நிலையத்திற்கு கிளம்பினார். 

அந்தக் குட்டி நடிகை ஜெய மாலா முதலில் மறுத்தாலும் மல்லிகைப் பூ ஹேர்ப் பின் காட்டி அவள் ஹோட்டலுக்கு வந்ததைச் உறுதிபடுத்தி விடுவார்கள் என்று சொன்னதும் “நான் அங்கு போனது உண்மை, சார். `அவர் என்னை உபயோகித்துக் கொண்டு சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் வாங்கித் தருவதாக ஒப்புக் கொண்டார்” என்றாள். 

“சரி, நீ அங்கே போகும் போது எத்தனை மணி இருக்கும்?”

“எட்டு மணி, சார். அருகிலுள்ள தொழிற்சாலையில் சரியாக அப்போது சங்கு ஊதியது சார்” என்றாள். 

இளந்தேவனுக்கு திரும்பவும் குழப்பம் ஏற்பட்டது. கவிமாறன இறந்தது பத்திலிருந்து பதினோரு மணிக்குள் என்று போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கூறுகிறது. 

“நீ பொய் சொல்ல வில்லையே” 

“இல்லை, சார்”

இன்ஸ்பெக்டருக்கு கடைசியில் கவிமாறனின் உதவியாளன் மேகவண்ணன் மீது சந்தேகம் வலுத்தது. எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எப்படி அவனை கைது செய்வது என யோசித்துக் கொண்டே மேகவண்ணன் வீட்டிற்குள் நுழைந்தார். 

“என்ன சார், யார் கொன்னாங்க கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்க மேகவண்ணனை கூர்மையாக கவனித்த இன்ஸ்பெக்டர் அவன் சட்டையில் காலர் பட்டன் இல்லாமல் இருப்பதைக் கண்டு, அதிரடியாக “மிஸ்டர் மேகவண்ணன். நீங்கள் தான் நேற்று கொலைக் குற்றம் புரிந்தவர். உங்கள் சட்டை காலர் பட்டன் கவிமாறன் இறந்த அறையில் கிடைத்தது.” என்று சொல்லி விட்டு மேகவண்ணனின் அதிர்ச்சிகளை கூர்ந்து கவனித்தார். 

“இல்லை, சார். நான் கொலை செய்யவில்லை. எனக்குத் தெரியாது. இது எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று எனக்கு தெரியாது” என்றான மேகவண்ணன். 

கொஞ்சம் குழம்பிய இளந்தேவன “சரி, என்னோடு வாருங்கள். உங்களை ஸ்டேஷனில் வைத்து கவனிக்கிற மாதிரி கவனித்தால் உண்மையை கக்கி விடுவீர்கள்” என்றார். 

அதிர்ந்து போன மேகவண்ணன், “சார், இந்தக் சட்டையை நேற்று என தம்பி தான் போட்டிருந்தான்” என்ற போது அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. 

எந்த வித ஆதாரமும் இல்லாமல் “ஒத்துழைக்க சொல்லுங்கள். எப்படி, எதற்காக கவிமாறனை கொலை செய்ய அனுப்பினீரகள்” என்றார்.

“நான கொலை செய்ய அனுப்பவில்லை. அவன் தான் கவிஞர் கவிமாறனைக் கொன்று விட்டு வந்து, ‘நான் அவனைக் கொன்று விட்டேன். நான் மாய்ந்து மாய்ந்து எழுதும் கவிதைகளுக்கு எனக்கு எலும்பு துண்டு போல பணத்தை வீசி விட்டு தான் எழுதியது என்று மார்தட்டி கொண்டிருக்கிறான். இதிலே கவிஞர் பட்டம் வேறு’ என்று கத்திக் கொண்டிருந்தான். இப்போது எங்கே போனான் என்று தெரியவில்லை” என்றான். 

“உங்கள தம்பி தான் கொலை செய்ததா? அவரைப் பிடிக்க எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டு, திரைச் சீலை அசைவதைப் பார்த்து,  பாய்ந்து சென்று, ஒளிந்திருந்த மேகவண்ணனின் தம்பியைப் பிடித்து விலங்கிட்டு அழைத்துச் சென்றார். 

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *