ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 120 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

9. சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்

“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?”

ஃபில்ச் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கு வந்தார். அவர் நிச்சயமாக மால்ஃபாயின் கத்தலால் கவரப்பட்டிருக்க வேண்டும். பின் அவர் நாரிஸ் பூனையைப் பார்த்ததும், தனது முகத்தில் பீதி தாண்டவமாடப் பின்னால் போய் விழுந்தார்.

“ஐயோ, என் பூனை! நாரிஸுக்கு என்னவாயிற்று?” என்று அவர் கூப்பாடு போட்டார்.

பிதுங்கிக் கொண்டிருந்த அவரது கண்கள் ஹாரியின்மேல் நிலைத்தன.

“நீ என் பூனையைக் கொலை செய்துவிட்டாய்! நீ அதைக் கொன்றுவிட்டாய். நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன். நான் உன்னைக் -”

“ஃபில்ச்!”

டம்பிள்டோர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஏராளமான ஆசிரியர்களும் வந்தனர். அடுத்த வினாடி, அவர் ஹாரியையும் ரானையும் ஹெர்மயனியையும் கடந்து சென்று தீப்பந்த விளக்குத் தாங்கியிலிருந்து அப்பூனையை விடுவித்தார்.

அவர் ஃபில்சைப் பார்த்து, “ஃபில்ச், என்னுடன் வாருங்கள்!” என்று கூறினார். “ஹாரி, ரான், ஹெர்மயனி, நீங்களும்தான்!” லாக்ஹார்ட் ஆவலுடன் முன்னால் வந்தார்.

“தலைமையாசிரியரே, என் அலுவலகம்தான் மிக அருகே இருக்கிறது. ஒரு மாடி மேலை போக வேண்டும், அவ்வளவுதான். அதை நீங்கள் தாராளமாக உபயோகி –

“நன்றி, லாக்ஹார்ட்,” என்று டம்பிள்டோர் கூறினார்.

அமைதியாக இருந்த கூட்டம் அவர்களுக்காகப் பிரிந்து வழிவிட்டது. முக்கியமானவராக உணர்ந்த லாக்ஹார்ட், டம்பிள்டோருக்குப் பின்னால் வேகமாகச் சென்றார். பேராசிரியர் மெக்கானகல்லும் ஸ்னேப்பும் அவரைத் தொடர்ந்தனர்.

இருளடைந்திருந்த லாக்ஹார்ட்டின் அலுவலகத்திற்குள் அவர்கள் நுழைந்தபோது, அந்த அறையின் சுவர்களில் திடீரென்று ஏகப்பட்ட ஷயங்கள் நிகழத் துவங்கின. சுவர்ப்படங்களில் இருந்த லாக்ஹார்ட்டுகள் தங்கள் தலைமுடி கன்னாபின்னாவென்று பறக்க தன் மேசையில் இருந்த மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டுப் பின்னால் ஓடி ஒளியத் தலைப்பட்டதை ஹாரி கண்டான். நிஜ லாக்ஹார்ட் நகர்ந்து கொண்டார். பளபளவென்றிருந்த மேசைமேல் டம்பிள்டோர் அந்தப் பூனையைக் கிடத்தி, அதை ஆராயத் துவங்கினார். ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் தங்களுக்குள் இறுக்கமான பார்வையைப் பரிமாறிக் கொண்டு, அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்ச வட்டத்திற்கு வெளியே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு கவனிக்கத் துவங்கினர்.

டம்பிள்டோரின் நீண்ட கோணல் மூக்கு, அப்பூனையின் தோலுக்கு மிக மிக அருகாமையில் இருந்தது. பிறை வடிவில் இருந்த தனது மூக்குக்கண்ணாடியின் வழியாக அவர் அதைப் பார்த்தார். அவரது நீண்ட விரல்கள் மென்மையாக அந்தப் பூனையின் உடலை நீட்டிக் கொண்டும் நீவிவிட்டுக் கொண்டும் இருந்தன. பேராசிரியர் மெக்கானகல் டம்பிள்டோரைப்போலவே அப்பூனையைத் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மிக அருகாமையில் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்னால், பரதி இருட்டில், புன்னகைக்காமல் இருக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தது போன்ற ஒரு வினோதமான முகபாவத்தோடு ஸ்னேப் நின்று கொண்டிருந்தார். அவர்கள் எல்லோருக்கும் பின்னால், லாக்ஹார்ட், எட்டிப் பார்த்துக் கொண்டும் கேட்காமலேயே அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் நின்று கொண்டிருந்தார்.

“இப்பூனையைக் கொன்றது கண்டிப்பாக ஒரு சாபமாகத்தான் இருக்க வேண்டும் – இது ‘உருவச்சிதைவுச் சித்திரவதை’ சாபம்போலத் தோன்றுகிறது. நான் இதைப் பல முறை பார்த்திருக்கிறேன். நான் அச்சமயத்தில் அங்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான்! இதற்கான எதிர்ச்சாபத்தை நான் நன்றாகவே அறிவேன். அது இப்பூனையைக் காப்பாற்றியிருக்கும் …” என்று லாக்ஹார்ட் கூறினார்.

ஃபில்ச்சின் வேதனையோடுகூடிய அழுகையும் தேம்பலும் லாக்ஹார்ட்டின் விமர்சனங்களுக்கு ஆங்காங்கே நிறுத்தற்குறி இடுவதுபோல அமைந்தன. ஃபில்ச் தன் பூனையை அக்கோலத்தில் பார்க்க விரும்பாததால், அருகிலிருந்த ஒரு நாற்காலியில் ‘தொம்’ என விழுந்து, தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டார். ஹாரிக்கு ஃபில்ச்சை அறவே பிடிக்காது என்றாலும், அச்சமயத்தில் அவர்மீது அவனால் பச்சாதாபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அக்கணத்தில் அவன் தன்மீதுதான் அதைவிட அதிகமாகப் பச்சாதாபம் கொண்டிருந்தான். டம்பிள்டோர் மட்டும் ஃபில்ச்சை நம்பியிருந்தாரெனில், இந்நேரத்திற்கு அவன் கண்டிப்பாகப் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டு இருப்பான்.

டம்பிள்டோர் இப்போது வினோதமான வார்த்தைகளைத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, தன் மந்திரக்கோலால் அப்பூனயைத் தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் எதுவும் நிகழவில்லை. அப்பூனை சமீபத்தில் பதப்படுத்தப்பட்ட ஓர் உடல்போலத் தொடர்ந்து காட்சியளித்தது.

“கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் ஆப்பிரிக்காவில் ஓகடாகு என்ற இடத்தில் நடைபெற்றது என் நினைவிற்கு வருகிறது,” என்று லாக்ஹார்ட் கூறினார். “பல தொடர்ச்சியான தாக்குதல்கள். முழு விபரமும் என் சுயசரிதையில் இருக்கிறது. அந்நகர மக்களுக்கு நான் மந்திரத் தாயத்துக்களைக் கொடுத்தேன். அது உடனடியாகப் பிரச்சனையைத் தீர்த்தது…”

அவர் பேசப் பேச, அந்த அறைச் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் இருந்த லாக்ஹார்ட் உருவங்களும் அதை ஆமோதிப்பதுபோலத் தமது தலைகளை அசைத்தன.

ஒருவழியாக டம்பிள்டோர் தன் தலையை நிமிர்த்தினார்.

“ஃபில்ச், உங்கள் பூனை இறக்கவில்லை,” என்று அவர் மென்மையாகக் கூறினார்.

தான் தடுத்து நிறுத்தியிருந்த கொலைகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த லாக்ஹார்ட், அதைப் பாதியிலேயே நிறுத்தினார்.

ஃபில்ச் தன் பூனையின் உடலின்மீது தன் கைகளை மேவியவாறு, “என்ன, நாரிஸ் இறக்கவில்லையா?” என்று கேட்டார். அவருக்கு மூச்சுத் திணறியது. “அப்படியானால் அது ஏன் இப்படி விறைப்பாகவும் உறைந்து போனது போலவும் இருக்கிறது?”

“உங்கள் பூனை கல்லாக்கப்பட்டுள்ளது,” என்று டம்பிள்டோர் கூறினார். (‘ஆ! நான் அப்படித்தான் நினைத்தேன்!’ என்று லாக்ஹார்ட் கூறினார்). ஆனால் எப்படி என்று என்னால் கூற முடியவில்லை”.

ஃபில்ச், உப்பிப் போயிருந்த தனது முகத்தை ஹாரியை நோக்கித் திருப்பியவாறு, “இவனைக் கேளுங்கள்!” என்று இரைந்தார். அவரது கண்ணீர் வழிந்து கண்களிலிருந்து தாரை தாரையாகக் கொண்டிருந்தது.

மாணவனாலும் “இதை எந்தவோர் இரண்டாம் வருட செய்திருக்க முடியாது,” என்று டம்பிள்டோர் உறுதியாகக் கூறினார். “இதைச் செய்வதற்கு உச்சகட்டத் தீய மந்திர சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.”

ஃபில்ச், வீங்கிப் போயிருந்த தனது முகம் சிவக்க, “இவன்தான் செய்தான், இவன்தான் செய்தான்,” என்று காரி உமிழ்ந்தார். “சுவரில் அவன் என்ன எழுதியிருந்தான் என்று நீங்கள்தான் பார்த்தீர்களே? என் அலுவலகத்தில் வைத்து . – அவன் நான். யாரென்று அவன் நான் யாரென்று கண்டுபிடித்துவிட்டான். நான் – நான் ஃபில்ச்சின் முகம் அஷ்டகோணலாகியது. “நான் ஒரு ‘ஸ்குயிப்’ என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது.”

சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களிலிருந்த லாக்ஹார்ட்டுகள் உட்பட, அங்கிருந்த அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததால் அசௌகரியமாக உணர்ந்த ஹாரி, “நான் நாரிஸ் பூனையை ஒருபோதும் தொட்டதுகூடக் கிடையாது,” என்று சத்தமாகக் கூறினான். “ஸ்குயிப்’ என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.”

“உளறாதே!” என்று ஃபில்ச் உறுமினார். “என்னுடைய குவிக்ஸ்பெல் கடிதத்தை அவன் பார்த்துவிட்டான்.”

“தலைமையாசிரியரே, நான் கொஞ்சம் பேசலாமா?” என்று இருட்டிலிருந்து ஸ்னேப் கேட்டார். அடுத்து வரவிருந்த செய்திகள் மோசமாகத்தான் இருக்கப் போகின்றன என்பதை ஹாரிக்கு தீவிரமடைந்தது. ஸ்னேப்பின் வாயிலிருந்து உதிரவிருந்த முத்துக்கள் எதுவும் தனக்கு நல்லது எதையும் செய்யப் போவதில்லை என்பதை அவன் உறுதியாக அறிந்திருந்தான்.

“ஹாரியும் அவனது நண்பர்களும் தவறான சமயத்தில் தவறான இடத்தில் இருந்திருக்கலாம்,” என்று ஸ்னேப் கூறினார். ஆனால் அதை அவரே நம்பவில்லை என்பதுபோல அவரது உதடுகளில் ஓர் இகழ்ச்சிப் புன்னகை நெளிந்து கொண்டிருந்தது. “ஆனால் இங்கு சந்தேகத்திற்கிடமான சில சூழல்கள் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் இரண்டு கேள்விகளுக்கு விடையளித்தாக வேண்டும். முதலாவது, அவர்கள் எதற்காக மாடித் தாழ்வாரத்திற்கு வர வேண்டும்? இரண்டாவதாக, அவர்கள் ஏன் ஹாலோவீன் தின விருந்தில் பங்கேற்கவில்லை?”

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் ஒருமித்தக் குரலில் இறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றிக் கூறினர். “அங்கு நூற்றுக்கணக்கான ஆவிகள் வந்திருந்தன. நாங்கள் அங்கு இருந்ததை அவை உறுதி செய்யும்”.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன் கரிய நிறக் கண்கள் மினுமினுக்க, ஸ்னேப், “அது சரி. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் ஏன் ஹாலோவீன் தின விருந்தில் கலந்து கொள்ளவில்லை?” என்று கேட்டார். “நீங்கள் அந்தத் தாழ்வாரத்திற்கு எதற்காகப் போக வேண்டும்?”

ரானும் ஹெர்மயனியும் ஹாரியை ஏறிட்டுப் பார்த்தனர்.

தனது இதயம் படபடக்க ஹாரி, “ஏனென்றால் – ஏனென்றால் -” என்று மென்று விழுங்கினான். தன்னைத் தவிர வேறு யாராலும் கேட்க முடியாத, உருவமற்ற ஒரு குரல்தான் தன்னை அங்கு இழுத்து வந்தது என்று கூறினால் யாரும் அதை நம்பப் போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. “ஏனென்றால் எங்களுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. நாங்கள் நேராகப் போய்ப் படுத்துத் தூங்கி விரும்பினோம்.”

வெளிறிப் போயிருந்த தனது முகத்தில் வெற்றிப் புன்னகை ஜொலிக்க, ஸ்னேப், “இரவு உணவு உண்ணாமலா?” என்று கேட்டார். “உயிருடன் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு உகந்த பொருட்களை ஆவிகள் தம்முடைய விருந்துகளில் பரிமாறும் என்று நான் கேள்விப்பட்டதில்லை.”

“எங்களுக்குப் பசி இருக்கவில்லை,” என்று ரான் சத்தமாகக் கூறினான். அவனது வயிறு கடகடவென்று ஒலி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

ஸ்னேப்பின் இகழ்ச்சிப் புன்முறுவல் இன்னும் அகலமானது.

“தலைமையாசிரியரே, ஹாரி பாட்டர் முழு உண்மையையும் கூறவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன்,” என்று ஸ்னேப் கூறினார். “அவன் முழுக் கதையையும் கூற முன்வரும்வரை, அவனுக்கு வழங்கப்பட்டு வரும் சில சலுகைகளை ரத்து செய்வது நல்லதென்று எனக்குத் தோன்றுகிறது. அவன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை அவனை கிரிஃபின்டார் குவிடிச் அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

“எதற்காக?” என்று பேராசிரியர் மெக்கானகல் தீவிரமான குரலில் வினவினார். “அவன் குவிடிச் விளையாடக்கூடாது என்று சொல்வதற்குத் தகுந்த முகாந்திரங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாரி தவறு ஏதும் இழைத்துள்ளதற்கு எந்தச் சான்றும் இல்லை.”

டம்பிள்டோர் ஹாரியைத் துளைத்துவிடுவதுபோலப் பார்த்தார். மின்னிக் கொண்டிருந்த அவரது நீல நிறக் கண்கள் தன்னை எக்ஸ்ரே எடுப்பதுபோல ஹாரி உணர்ந்தான்.

“நிரூபிக்கப்படும்வரை அவன் நிரபராதிதான்,” என்று டம்பிள்டோர் உறுதியாகக் கூறினார்.

ஸ்னேப் பெரும் சீற்றம் அடைந்திருந்ததுபோலக் காணப்பட்டார். ஃபில்ச்சும் அதே நிலையில்தான் இருந்தார்.

“என் பூனை கல்லாக்கப்பட்டுள்ளது,” என்று ஃபில்ச் கூப்பாடு போட்டார். “யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.”

“அப்பூனையை நாம் குணப்படுத்திவிடலாம்,” என்று டம்பிள்டோர் பொறுமையாகக் கூறினார். “சமீபத்தில் பேராசிரியர் ஸ்புரவுட் சில மன்ட்ரேக் நாற்றுக்களைத் தருவித்துள்ளார். அவை முழு அளவு வளர்ந்தவுடன், நான் அதிலிருந்து ஒரு மாயத் திரவத்தைத் தயாரித்து உங்கள் பூனையை உயிர்த்தெழ வைக்கிறேன்.”

“நான் அதைத் தயாரிக்கிறேன்,” என்று லாக்ஹார்ட் உள்ளே புகுந்தார். “நான் அதை நூற்றுக்கணக்கான முறை தயாரித்து இருக்கிறேன். பலத்தை மீட்டுத் தரும் மாயத் திரவத்தை மன்ட்ரேக் செடியிலிருந்து தூக்கத்தில்கூட என்னால் தயாரிக்க முடியும்”.

“மன்னிக்க வேண்டும்,” என்று குத்தலாக ஆரம்பித்த ஸ்னேப், “நான்தான் இப்பள்ளியின் மாயத்திரவ ஆசிரியர் என்று நினைத்திருந்தேன்!” என்று கூறினார்.

அங்கு ஒருசில கணங்கள் ஓர் அசெளகரியமான மௌனம் நிலவியது.

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரையும் பார்த்து, “நீங்கள் போகலாம்,” என்று டம்பிள்டோர் கூறினார்.

ஓடாமல் எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தனர் அடைந்ததும், அவர்கள் மூவரும், காலியாக இருந்த ஒரு லாக்ஹார்ட்டின் அலுவலகம் இருந்த தளத்திற்கு மேலே ஒரு மாடியை வகுப்பறைக்குள் நுழைந்து அதன் கதவைச் சத்தமில்லாமல் சாத்தினர். இருண்டு போய்க் கிடந்த தனது நண்பர்களின் முகங்களை ஹாரி தன் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான்.

“எனக்குக் கேட்டிருந்த குரலைப் பற்றி நான் அவர்களிடம் கூறியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“இல்லை,” என்று ரான் எவ்விதத் தயக்கமுமின்றிக் கூறினான். “ஆனால், மந்திரஜால உலகத்தில்கூட வேறு யாருக்கும் கேட்காத குரல் ஒருவனுக்கு மட்டும் கேட்பது நல்ல அறிகுறி அல்ல.”

ரானின் குரலில் இருந்த ஏதோ ஒன்று, “நீ என்னை நம்பவில்லையா?” என்று ஹாரியைக் கேட்க வைத்தது.

“நான் உன்னைக் கண்டிப்பாக நம்புகிறேன்,” என்று ரான் அவசர அவசரமாகக் கூறினான். “ஆனால் – அது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது என்பதை நீ ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்

“அது வினோதமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன்,” என்று ஹாரி கூறினான். “இந்த மொத்த விவகாரமே வினோதமாகத்தான் இருக்கிறது. அந்தச் சுவரில் ஏன் அப்படி எழுதப்பட்டிருந்தது? ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை திறக்கப்பட்டுவிட்டது! . . அதற்கு என்ன அர்த்தம்?”

“இது எனக்கு எதையோ நினைவுபடுத்துகிறது,” என்று ரான் மெதுவாகக் கூறினான். “ஹாக்வார்ட்ஸில் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை ஒன்று இருப்பதாக யாரோ ஒருவர் ஒரு முறை கூறியதாக ஞாபகம். அது ஒருவேளை என் அண்ணன் பில்லாக இருக்கலாம்”

“ஆமாம் ‘ஸ்குயிப்’ என்றால் என்ன இழவு?”

ரான் வாயை மூடிக் கொண்டு சிரித்தது ஹாரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“இதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை என்பது உண்மைதான் . ஆனால் இதில் ஃபில்ச் தொடர்பு கொண்டிருப்பதால் . . .” என்று ரான் இழுத்தான். “மந்திரஜாலக் குடும்பத்தில் பிறந்தும் மந்திரஜாலம் கைவரப் பெறாத ஒருவர்தான் ஸ்குயிப். இது மகுள்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் மந்திரவாதிகளுக்கு நேரெதிரானது என்று வைத்துக் கொள்ளேன். ஆனால் இந்த ஸ்குயிப்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். ஃபில்ச் குவிக்ஸ்பெல் பயிற்சி வகுப்பு மூலமாக மாயாஜாலம் கற்றுக் கொள்ள முயல்கிறார் என்றால், அவர் கண்டிப்பாக ஒரு ஸ்குயிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதுதான் பல விஷயங்கள் புரிபடுகின்றன. அதனால்தான் அவர் மாணவர்களாகிய நம்மை அவ்வளவு தூரம் வெறுக்கிறார்.” ரான் ஒரு திருப்தியான புன்னகையைத் தன் உதட்டில் பரவவிட்டான். “அதனால்தான் அவர் நம்மீது அவ்வளவு கடுப்பாக இருக்கிறார்.”

எங்கேயோ ஒரு கடிகாரம் ஒலித்தது.

“நடுநிசி,” என்று ஹாரி கூறினான். “ஸ்னேப் வந்து வேறு ஏதாவது ஒன்றில் நம்மை மாட்டிவிடுவதற்கு முன்பு நாம் படுக்கைக்குச் சென்றுவிடுவது நல்லது.”

பள்ளியில் அடுத்த சில நாட்களுக்கு, நாரிஸ் பூனைக்கு ஏற்பட்ட கதியைத் தவிர வேறு எதையும் எவரும் பேசவில்லை. தனது பூனையைத் தாக்கியவன் மீண்டும் அதே இடத்திற்கு வரக்கூடும் என்பதுபோல, ஃபில்ச் அதே இடத்தில் வளைய வந்து கொண்டிருந்ததால் அது தொடர்ந்து எல்லோருடைய மனங்களிலும் பசுமையாக இருந்து கொண்டிருந்தது. சுவரெழுத்துக்களை ஃபில்ச், அனைத்து மந்திரக் கறைகளையும் அடியோடு நீக்கக்கூடிய ஒரு பொடியைக் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்ததை ஹாரி பார்த்தான். ஆனால் அதனால் எந்தப் பயனும் இருக்கவில்லை. அந்த எழுத்துக்கள் அந்தக் கற்சுவரில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. குற்றம் நடந்த இடத்தில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்காதபோது, ஃபில்ச், தன் சிவந்த கண்களுடன் பதுங்கி நின்று கொண்டு, அப்பாவி தாழ்வாரங்களில் மாணவர்களின்மீது பாய்ந்து, ‘சத்தமாக மூச்சுவிட்டது’ மற்றும் ‘வெளிப்படையாக சந்தோஷமாகத் தெரிந்தது’ போன்ற ‘குற்றங்களை’ அவர்கள்மீது சுமத்தி, அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைத் தண்டனைகளை விதித்தார்.

நாரிஸ் பூனைக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து ஜின்னி மிகவும் கலங்கிப் போயிருந்தாள். ரானின் கூற்றுப்படி, அவளுக்குப் பூனை என்றால் மிகவும் பிடிக்கும்.

“ஆனால் உனக்கு நாரிஸ் பூனையைப் பற்றித் தெரியாது,” என்று ரான் அவளை ஊக்குவிக்கும் விதமாகக் கூறினான். “உண்மையைக் கூற வேண்டும் என்றால், அப்பூனை இல்லாமல் இருந்தாலே நன்றாக இருக்கும்.” ஜின்னியின் உதடுமூகள் நடுங்கின. “ஹாக்வார்ட்ஸில் இம்மாதிரிச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதில்லை.” ரான் அவளுக்கு தைரியம் கொடுக்கும் விதமாகப் பேசினான். “கண்மூடித் திறப்பதற்குள் அவர்கள் அந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துப் பள்ளியைவிட்டுத் துரத்திவிடுவார்கள். பள்ளியைவிட்டு வெளியே தூக்கியெறியப்படுவதற்கு முன்பு, அவன் ஃபில்ச்சையும் கல்லாக்கிவிட்டால் நன்றாக இருக்கும்!” ஜின்னியின் முகம் வெளிறிவிட்டதைப் பார்த்ததும் அவன் அவசர அவசரமாக, “நான் வேடிக்கைக்காக அப்படிச் சொன்னேன்,” என்று கூறினான்.

பூனைமீது மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதல், ஹெர்மயனின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. படிப்பில் வெகுநேரம் மூழ்கியிருப்பது ஹெர்மயனிக்கு வாடிக்கைதான் என்றாலும், அவள் இப்போதெல்லாம், அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவள் ஏன் இப்படி இருந்தாள் என்று ஹாரியும் ரானும் அவளிடம் கேட்டபோதும் அவர்களுக்கு அவள் சரியாக பதில் சொல்லவில்லை. அதற்கடுத்த புதன்கிழமைதான் அவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தனர்.

அன்றைய தினம், ஸ்னேப், மாணவர்களின் மேசைமேல் படிந்திருந்த குழாய்ப்புழுக்களைச் சுரண்டி எடுக்குமாறு ஹாரிக்கு உத்தரவிட்டிருந்ததால், மாயத் திரவ வகுப்பில் அவன் கூடுதலான நேரம் தங்கியிருக்க நேர்ந்தது. அந்த வேலையை முடித்துவிட்டு, பிறகு வேகவேகமாகத் தன் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, ரானை நூலகத்தில் சந்திப்பதற்காக ஹாரி மாடிக்குச் சென்றான். அப்போது, மூலிகையியல் வகுப்பில் தான் சந்தித்த, ஹஃபில்பஃப் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததை ஹாரி பார்த்தான். ஹாரி அவனிடம் ஹலோ சொல்வதற்கு வாயெடுத்தபோது, ஹாரியைக் கவனித்த ஜஸ்டின் திடீரென்று திரும்பி எதிர்த் திசையில் சென்றுவிட்டான்.

ஹாரி நூலகத்தினுள் நுழைந்தபோது, ரான் அதன் பின்பகுதியில் தன்னுடைய ‘மந்திரஜால வரலாறு’ வீட்டுப்பாடத்தை ஓர் அளவை நாடாவைக் கொண்டு அளந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். ‘மத்தியக் காலத்திய ஐரோப்பிய மந்திரவாதிகள் கழகத்’தைப் பற்றி மூன்றடி நீளமுள்ள கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டு வருமாறு பேராசிரியர் அவர்களைப் பணித்திருந்தார்.

“அடக் கடவுளே! இது எட்டு அங்குலம் குறைவாக இருக்கிறதே! என்று சீற்றத்துடன் கூறிக் கொண்டே, தான் எழுதிக் கொண்டிருந்த தோல் காகிதத்திலிருந்து ரான் தன் கையை எடுத்தான். அது பழையபடி ஒரு குழல்போலச் சுருண்டு கொண்டது. “ஹெர்மயனி நான்கு அடி ஏழு அங்குல நீளத்திற்கு எழுதியிருக்கிறாள். இவ்வளவுக்கும் அவள் இணுக்கி இணுக்கி எழுதுவாள்.”

ஹாரி தன்னுடைய வீட்டுப்பாடம் எழுதப்பட்டிருந்த தோல் காகிதத்தை விரித்து, ரானிடமிருந்து அளவை நாடாவை பிடுங்கியபடி, “ஆமாம், ஹெர்மயனி எங்கே?” என்று கேட்டான்.

ரான் நூலகத்தின் புத்தக அலமாரிகளை நோக்கிக் கையை நீட்டியவாறே, “அங்குதான் எங்கோ இருக்கிறாள்,” என்று கூறினான். “அவள் வேறு ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்தக் கிறிஸ்துமஸ் முடிவதற்குள் இந்த நூலகத்தில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் கரைத்துக் குடித்துவிட அவள் முயற்சிக்கிறாள் என்று நான் நினைக்கிறேன்.”

தன்னைப் பார்த்ததும் ஜஸ்டின் முகம் திருப்பிக் கொண்டு ஓடியதைப் பற்றி ஹாரி ரானிடம் கூறினான்.

தன் கட்டுரையைப் பெரிதாகக் காட்டிக் கொள்வதற்காக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த ரான், “அதைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய்? அவனுக்குக் கொஞ்சம் கிறுக்குப் பிடித்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்;” என்று ரான் கூறினான். “லாக்ஹார்ட் பெரிய ஆள் என்ற உளறல்கள் -“

புத்தக அலமாரிகளுக்கு இடையே இருந்து ஹெர்மயனி வெளிப்பட்டாள். அவள் கொஞ்சம் சிடுசிடுவென்று இருந்தாள். பின் ஒருவழியாக அவர்களிடம் பேசுவதற்கு அவள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதுபோலத் தோன்றியது.

ஹாரிக்கும் ரானுக்கும் அருகே வந்து உட்கார்ந்த ஹெர்மயனி, “ஹாக்வார்ட்ஸ்: ஒரு வரலாறு’ என்ற புத்தகத்தின் ஒரு பிரதிகூட இங்கு இல்லை,” என்று கூறினாள். “அதை எடுப்பதற்கு நான் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டுமாம். நான் என்னுடைய பிரதியை வீட்டில் விட்டுவிட்டு வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். லாக்ஹார்ட்டின் புத்தகங்களே நிறைய இருந்ததால் என்னால் அப்புத்தகத்தை என் டிரங்குப் பெட்டிக்குள் அடைக்க முடியவில்லை.”

“உனக்கு அது எதற்குத் தேவை?” என்று ஹாரி கேட்டான்.

“மற்றவர்கள் அதை எதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ, அதே காரணத்திற்காகத்தான்,” என்று ஹெர்மயனி கூறினாள். “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை பற்றிய பழங்கதைகளைப் படிப்பதற்காகத்தான் நான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.”

“என்ன சொன்னாய்?” என்று ஹாரி அவசர அவசரமாகக் கேட்டான்.

ஹெர்மயனி தன் உதடுகளைக் கடித்துக் கொண்டே, “எனக்கு அது குறித்து வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை,” என்று கூறினாள். “அக்கதையைப் பற்றி வேறு எந்தப் புத்தகத்திலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.”

ரான் பரிதவிப்புடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே, “ஹெர்மயனி, உன்னுடைய கட்டுரையைக் கொஞ்சம் கொடுக்க முடியுமா? நான் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன்,” என்று கேட்டான்.

திடீரென்று தீவிரமான ஹெர்மயனி, “முடியாது, நான் தர மாட்டேன்,” என்று கூறினாள். “அதை எழுதி முடிப்பதற்கு உனக்குப் பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.”

“இன்னும் இரண்டு அங்குலம்தான் பாக்கி இருக்கிறது . . .”

மணி அடித்ததும் ரானும் ஹெர்மயனியும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டே முன்னால் நடந்தனர்.

மந்திரஜால வரலாறு வகுப்புதான் இருப்பதிலேயே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர்களுக்கு அவ்வகுப்பை நடத்திய பேராசிரியர் பின்ஸ்தான் அவர்களுடைய ஒரே ஆவிப் பேராசிரியர். அந்த வகுப்பில் இதுவரை நடைபெற்றிருந்த ஒரே சுவாரசியமான சம்பவம், அப்பேராசிரியர் ஒருமுறை தன் வகுப்பிற்கு வாசல் வழியாக வராமல் கரும்பலகை வழியாக வந்ததுதான். வாடி வதங்கிச் சுருங்கிப் போய், பழமையாகத் தோன்றிய அவர், தான் இறந்து போயிருந்ததைக்கூடக் கவனித்திருக்க மாட்டார் என்று பலர் கருதினர். ஒருநாள், பாடம் எடுப்பதற்காக அவர் தன் வகுப்பிற்கு வந்தபோது, ஆசிரியர்களுக்கான அறையில் கணப்பு அடுப்பிற்கு அருகிலிருந்த தன் நாற்காலியில் தன்னுடைய உடலை விட்டுவிட்டு வந்துவிட்டார். பிறகு அதுவே அவருக்கு வழக்கமாகிவிட்டிருந்தது.

முன்பு எப்போதையும்போல இன்றும் வகுப்பு சுவாரசியமற்றே இருந்தது. பேராசிரியர் தன்னுடைய குறிப்புகளை வெளியே எடுத்து, வகுப்பில் இருந்த எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கும்வரை, வாக்கும் கிளீனரின் ரீங்காரத்தைப்போல, ஏற்ற இறக்கங்கள் இல்லாத ஒரு குரலில் படித்துக் கொண்டிருந்தார். அம்மாணவர்கள் எப்போதாவது திடுக்கிட்டு விழித்தெழுந்து ஏதாவது ஒரு பெயரையோ அல்லது ஒரு நாளையோ குறிப்பெடுத்துக் கொண்டு மறுபடியும் தூங்கினர். அவர் பேசத் துவங்கி அரை மணிநேரம் ஆகியிருந்தபோது, அந்த வகுப்பில் அதுவரை நடந்திராத காரியம் ஒன்று நடந்தது. ஹெர்மயனி தன் கையைத் தூக்கினாள்.

1289ம் வருடத்திய சர்வதேச மந்திரவாதிகள் பேரவைக் கூட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் பின்ஸ் பிரமிப்படைந்தார்.

“உன் பெயர்? -”

“ஹெர்மயனி, சார். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைப் பற்றி உங்களால் ஏதாவது கூற முடியுமா?” என்று ஒரு தெளிவான குரலில் அவள் கேட்டாள்.

திறந்த வாயுடன் சன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீன் தாமஸ், தூக்கிவாரிப் போட்டாற்போலத் தன் பகல் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்தான். லேவன்டர் பிரவுன் தனது கையில் சாய்ந்து கிடந்த தனது தலையை நிமிர்த்தினாள். நெவிலின் முழங்கை அவனது மேசையிலிருந்து நழுவியது.

பேராசிரியர் பின்ஸ் தனது கண்களைப் பல முறை படபடவென்று மூடித் திறந்தார்.

அவர் தன்னுடைய மூச்சிறைக்கும் உலர்ந்த குரலில், “நான் நடத்திக் கொண்டிருப்பது மந்திரஜால வரலாறு வகுப்பு,” என்று கூறினார். ஹெர்மயனி, நான் உண்மைத் தகவல்களை மட்டுமே கையாள்கிறேன், புனைக்கதைகளையோ அல்லது கற்பனாவாதங்களையோ அல்ல.” பிறகு, ஒரு சாக்பீஸ் துண்டு உடைக்கப்பட்டது போன்ற ஒரு சத்தத்தை எழுப்பித் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு, “அவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் சார்டீனிய மந்திரவாதிகள் அடங்கிய ஓர் உபகுழு-” என்று அவர் தன் சொற்பொழிவைத் தொடர்ந்தார்.

ஹெர்மயனியின் கை மீண்டும் மேலெழுந்தபோது அவர் திக்கித் திணறித் தன் பேச்சை நிறுத்தினார்.

“ஹெர்மயனி?”

“சார், புனைக்கதைகள் எப்போதுமே ஏதேனும் ஓர் உண்மைத் தகவலின் அடிப்படையில்தானே அமைகின்றன?”

பேராசிரியர் பின்ஸ் ஹெர்மயனியை இன்னும் கூடுதலான பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பேச்சை இதற்கு போயிருந்தவர்களும் சரி – இடைமறித்து இருந்திருக்க மாட்டார்கள் முன்பு ஒருவரும் – உயிரோடு இருந்தவர்களும் சரி, இறந்து என்று ஹாரி உறுதியாக நம்பினான்.

“சரி,” என்று பேராசிரியர் பின்ஸ் மெதுவாக இழுத்தார். *அப்படியும் விவாதிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.” தான் அதற்கு முன்பு ஒருபோதும் எந்தவொரு மாணாக்கரையும் சரியாகப் பார்த்திருக்கவில்லை என்பதுபோல அவர் ஹெர்மயனியைப் பார்த்தார். “ஆனால், நீ குறிப்பிடுகின்ற புனைக்கதை மிகவும் பரபரப்பான ஒன்று. அது பரிகசிக்கத்தக்க ஒன்றும்கூட . . .

இப்போது மொத்த வகுப்பும் பேராசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தன்னை நோக்கித் திரும்பியிருந்த அவர்கள் அனைவரையும் அவர் உற்சாகமின்றிப் பார்த்தார். இத்தகைய அசாதாரணமான ஈடுபாட்டைக் கண்டு அவர் அசந்து போயிருக்க வேண்டும் என்பதை ஹாரியால் பார்க்க முடிந்தது.

“சரி …” என்று அவர் மெதுவாகக் கூறினார். “என்ன கேட்டாய்? ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையா? .

“ஹாக்வார்ட்ஸ் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன். துல்லியமாக எந்தத் தேதியில் துவக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அதை அக்காலகட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய நான்கு மந்திரவாதிகளும் மந்திரவாதினிகளும் சேர்ந்து உருவாக்கினர். பள்ளியில் இருக்கும் நான்கு அணிகளும் அவர்களுடைய பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றன: கோட்ரிக் கிரிஃபின்டார், ஹெல்கா ஹஃபில்பஃப், ரோவீனா ரேவன்கிளா மற்றும் சலசார் ஸ்லிதரின். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் அக்காலகட்டத்தில் இக்கோட்டையை உருவாக்கினர். மந்திரஜாலங்களைக் கண்டு மகுள்கள் மிகவும் பயந்து போயிருந்ததால், அவர்கள் மந்திரவாதிகளையும் மந்திரவாதினிகளையும் மிக மோசமாக கண்களில் மண்ணைத் நடத்தி வந்தனர். மகுள்களின் தூவிவிட்டுத்தான் அந்த நான்கு பேரும் இக்கோட்டையைக் கட்டினர்.”

அவர் இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்திவிட்டு, வகுப்பு முழுவதும் தன் பார்வையை மேயவிட்டார். பிறகு தொடர்ந்து, “ஒருசில வருடங்களுக்கு இந்த நிறுவனர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். மந்திரஜாலங்களை வெளிப்படுத்திய இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை இக்கோட்டைக்குக் கூட்டி வந்து அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். பின் அந்த நால்வருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. ஸ்லிதரினுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பிளவு வெடித்தது. ஹாக்வார்ட்ஸூக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஸ்லிதரின் மட்டுமே மந்திரஜாலங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் விரும்பினார். மந்திரவாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொண்டவர்களை ஹாக்வார்ட்ஸில் சேர்த்துக் கொள்ள அவர் அவர் குறியாக இருந்தார். மகுள்களைப் பெற்றோராகக் விரும்பவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் அல்ல என்பது அவரது கருத்தாக இருந்தது. அதற்குப் பிறகு இது குறித்து ஸ்லிதரினுக்கும் கிரிஃபன்டாருக்கும் இடையே பயங்கர விவாதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்லிதரின் பள்ளியைவிட்டு விலகினார்,” என்றார்.

பேராசிரியர் பின்ஸ் மீண்டும் ஒருமுறை நிறுத்தினார். சுருங்கிப் போயிருந்த தோலுடன் மிக வயதான ஆமையைப்போலத் தோன்றிய அவர் தன் உதடுகளை மடித்துக் கொண்டார்.

“இது போன்ற தகவல்களை, நம்பத் தகுந்த வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன,” என்று அவர் கூறினார். “ஆனால் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை போன்ற ஜோடனைக் கதைகள், இப்படிப்பட்ட உண்மைத் தகவல்களை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளன. ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை ஒன்றை, ஸ்லிதரின், தன் சக நிறுவனர்களுக்குத் தெரியாமல் இக்கோட்டைக்குள் ரகசியமாகக் கட்டியிருந்தார் என்று அந்த ஜோடனைக் கதை போகிறது.

“தன்னுடைய உண்மையான வாரிசு இப்பள்ளிக்கு வந்து சேரும்வரை வேறு எவராலும் அதைத் திறக்க முடியாதபடி ஸ்லிதரின் அதை மூடிவிட்டார் என்றும் அப்புனைகதை கூறுகிறது. அந்த உண்மையான வாரிசால் மட்டுமே ரகசியங்கள் அடங்கிய அந்தப் பாதாள அறையைத் திறந்து, அதன் உள்ளே இருக்கும் படுபயங்கரக் கொடூரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மந்திரஜாலங்களைப் படிக்கத் தகுதியில்லாதவர்களை ஒழித்துக் கட்டி, இப்பள்ளியை மீண்டும் புடம்போடப்பட்டத் தங்கம்போல மாசுமருவற்றதாக ஆக்க முடியும் என்று அது கூறுகிறது.”

அவர் அக்கதையைக் கூறி முடித்ததும் அங்கு மயான அமைதி நிலவியது. ஆனால் அது வழக்கமாக அவரது வகுப்பில் அவர்கள் தூங்கி வழிந்ததால் ஏற்பட்ட அமைதி அல்ல. அவர் இன்னும் அதிகமாகக் கூறுவார் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அனைவரும் தொடர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த அறையில் ஓர் அசௌகரியமான சூழல் நிலவியது. பேராசிரியர் பின்ஸ் லேசாக எரிச்சலடைந்திருந்ததுபோலக் காணப்பட்டார்.

“ஆனால் இந்த ஒட்டுமொத்தக் கதையும் அபத்தத்திலும் மிக அபத்தம் என்பதில் சந்தேகமில்லை,” என்று அவர் கூறினார். ‘இப்பள்ளியில் இப்படிப்பட்ட ஓர் அறை இருந்ததற்கான ஆதாரங்களை, சிறப்பாகக் கற்றறிந்த பல மந்திரவாதிகளும் மந்திரவாதினிகளும் பல முறை சல்லடை போட்டுத் தேடித் தோற்றுப் போயுள்ளனர். அப்படிப்பட்டப் பாதாள அறை எதுவும் இங்கு கிடையாது. அப்பாவிகளைப் பயமுறுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஒரு கதைதான் அது.”

ஹெர்மயனியின் கை மீண்டும் உயர்ந்தது.

“சார், அந்தப் பாதாள அறையினுள் இருக்கும் படுபயங்கரக் கொடூரம் என்று நீங்கள் குறிப்பிட்டதற்கு என்ன அர்த்தம்?”

“அது ஸ்லிதரினின் உண்மையான வாரிசால் மட்டுமே கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒரு ராட்சஸ விலங்கு என்று நம்பப்படுகிறது,” என்று பேராசிரியர் உணர்ச்சியற்றக் ‘கிறீச்’ குரலில் கூறினார்.

பயம் நிரம்பி வழிந்த பார்வைகள் வகுப்பில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பேராசிரியர் பின்ஸ் தன்னுடைய குறிப்புகளைப் புரட்டியபடி, “அப்படிப்பட்ட எதுவும் கிடையாது என்று நான் உங்களுக்கு மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார். “பாதாள அறையும் கிடையாது, ராட்சஸ விலங்கும் கிடையாது.”

“சார், ஆனால்,” என்று சீமஸ் துவக்கினான். “அப்படிப்பட்ட ஓர் அறையை ஸ்லிதரினின் உண்மையான வாரிசால் மட்டுமே திறக்க முடியும் என்றால், இதுவரை அதை வேறு எவரும் கண்டுபிடிக்காமல் இருந்ததில் வியப்பில்லையே!”

அவர் கொதித்தெழுந்து, “அபத்தம்!” என்று கத்தினார். “ஹாக்வார்ட்டிஸில் வரிசையாகப் பதவி வகித்தப் பல தலைமையாசிரியர்களாலும் தலைமையாசிரியைகளாலுமே அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால்”

“சார், ஆனால்,” என்று துவக்கிய பார்வதி பாட்டீல், “அதைத் திறக்க ஒருவேளை தீய மந்திர சக்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்குமோ என்னவோ? -“

“பார்வதி! ஒரு மந்திரவாதி தீய மந்திர சக்திகளைப் பயன்படுத்தாமல் இருப்பதால் அவருக்கு அதைப் பற்றித் தெரியாது என்று முடிவு கட்டிவிடக்கூடாது,” என்று அவர் வெடித்தார். “நான் மீண்டும் கூறுகிறேன், பேராசிரியர் டம்பிள்டோர் போன்ற மந்திரவாதிகளால்கூட

ஆனால் அந்த நபர் ஸ்லிதரினுக்கு உறவாக இருக்க வேண்டுமல்லவா? அதனால் டம்பிள்டோரால் அதைக் கண்டுபிடிக்க முடியாததில் -” என்று டீன் தாமஸ் துவங்கினான். ஆனால் அக்கட்டத்தில் பேராசிரியர் தன் பொறுமையை முழுவதுமாக இழந்திருந்தார்.

“இதோடு போதும்!” என்று அவர் உறுதியான குரலில் கூறினார். அது ஒரு கட்டுக்கதை! அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது! பாதாள அறையை விட்டுத்தள்ளுங்கள் – ஸ்லிதரின், துடப்பங்களை வைப்பதற்கான ஒரு ரகசிய அறையைக் கட்டியிருப்பதற்கான ஆதாரம்கூட இல்லை. முட்டாள்தனமான ஒரு கதையை உங்களிடம் கூறியதற்காக என்னையே நான் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும். நாம் இப்போது வரலாற்றிற்குத் திரும்பலாம். உறுதியான, நம்பத் தகுந்த, நிரூபிக்கத்தக்க உண்மைகளைப் பற்றிப் பேசலாம்!”

ஐந்து நிமிடங்களுக்குள் மொத்த வகுப்பும் பழையபடி தனது மந்த நிலைக்குள் மூழ்கியது.

“சலசார் ஸ்லிதரின் ஒரு பழைய கிறுக்கன் என்று எப்போதுமே நான் சந்தேகப்பட்டு வந்திருந்தேன்,” என்று ரான் ஹாரியிடமும் ஹெர்மயனியிடமும் கூறினான். வகுப்பு முடிந்ததும், நிரம்பி வழிந்து கொண்டிருந்த தாழ்வாரங்களின் வழியாக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு, இரவு உணவிற்குப் போவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் அறைகளில் தங்கள் பைகளை வைப்பதற்காக விரைந்து கொண்டிருந்தனர். “ஆனால் இந்தத் தூய ரத்த விவகாரத்தைத் துவக்கி வைத்தது ஸ்லிதரின்தான் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. ஆயிரமாயிரம் கேல்லியன்களைக் கொட்டிக் கொடுத்தாலும் நான் ஸ்லிதரின் அணியில் இருக்க மாட்டேன். வகை பிரிக்கும் தொப்பி மட்டும் என்னை ஸ்லிதரின் அணியில் போட்டிருந்தால், நான் உடனேயே என் பெட்டிப் படுக்கையைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிப் போயிருப்பேன் …” என்று ரான் கூறினான்.

ஹெர்மயனி மட்டும் உணர்ச்சிபூர்வமாகத் தலையை ஆட்டினாள். ஆனால் ஹாரி எதையும் கூறவில்லை. அவனுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது.

வகை பிரிக்கும் தொப்பி முதலில் தன்னை ஸ்லிதரின் அணியில் போடலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பதை ஹாரி ரானிடமும் ஹெர்யனியிடமும் ஒருபோதும் கூறியிருக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு, வகை பிரிக்கும் தொப்பியை அவன் தன் தலையில் செருகிக் கொண்டதும் அது மெல்லிய குரலில் அவனது காதுக்குள் கூறியிருந்தது நேற்றுதான் நடந்ததுபோல அவனுக்குத் தெள்ளத் தெளிவாக நினைவில் இருந்தது.

“உன்னால் மிக மிகச் சிறந்தவனாக ஆக முடியும், தெரியுமா? எல்லாம் உன் தலையில் இருக்கிறது. நீ மகத்துவமான நிலையை அடைவதற்கு ஸ்லிதரின் அணியால் உனக்கு உதவ முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை”

தீய மந்திரவாதிகளை உருவாக்கித் தள்ளிக் கொண்டிருந்த ஸ்லிதரின் அணியின் ‘மகத்துவம்’ பற்றி ஹாரி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்ததால், அவன் பரிதவிப்புடன், “ஸ்லிதரின் வேண்டாம், ஸ்லிதரின் வேண்டாம்,” என்று தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு அந்தத் தொப்பி, “என்ன, ஸ்லிதரின் வேண்டாமா? அப்படியானால் சரி, நீ உறுதியாக இருந்தால் – நீ கிரிஃபின்டார் அணியில் இரு!” என்று கூறியது.

அவர்கள் கூட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, காலின் அவர்களைக் கடந்து சென்றான்.

“ஹலோ, ஹாரி!”

ஹாரியும் யோசிக்காமல் பதிலுக்கு, “ஹலோ, காலின்!” என்று கூறினான்.

“ஹாரி, ஹாரி – என் வகுப்பில் உள்ள ஒரு பையன், நீ -“

ஆனால் காலின் உருவத்தில் மிகவும் சிறியவனாக இருந்ததால், பேரரங்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்த மாணவ வெள்ளத்தில் அவன் அடித்துச் செல்லப்பட்டான். “ஹாரி, அப்புறம் சந்திக்கலாம்!” என்ற அவனது கீச்சுக் குரல் மட்டும் கேட்டது. அடுத்த நிமிடம் அவனைக் காணவில்லை.

“அவனது வகுப்பில் இருந்த பையன் உன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பான்,” என்று ஹெர்மயனி வியந்தாள்.

அதற்கு ஹாரி, “நான் ஸ்லிதரினின் வாரிசு என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறேன்,” என்றான். அவனது வயிறு மேலும் புரட்டிக் கொண்டு வந்தது. மதிய உணவு இடைவேளையின்போது ஜஸ்டின் தன்னைப் பார்த்துவிட்டுப் பேயைப் பார்த்ததுபோல ஓடியது அவனுக்குத் திடீரென்று நினைவிற்கு வந்தது.

“இங்குள்ள மக்கள் எதை வேண்டுமானாலும் நம்புவார்கள்,” என்று ரான் வெறுப்புடன் கூறினான்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அடுத்த மாடிப்படியை அவர்களால் பிரச்சனையின்றி ஏற முடிந்தது.

ரான் ஹெர்மயனியிடம், “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை ஒன்று உண்மையிலேயே இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

ஹெர்மயனி தனது நெற்றியைச் சுருக்கியவாறு, “எனக்குத் தெரியவில்லை,” என்று கூறினாள். “டம்பிள்டோரால் நாரிஸ் பூனையைக் குணப்படுத்த முடியவில்லை என்பதைப் பார்க்கும்போது, அப்பூனையைத் தாக்கியது ஒரு மனிதனாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது.”

அவள் பேசிக் கொண்டிருந்தபோது, எந்த இடத்தில் அந்தச் சம்பவம் நடைபெற்றதோ தாங்கள் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அவர்கள் அந்த இடத்தை மீண்டும் நிதானமாகப் பார்த்தனர். சம்பவம் நடந்த அன்று இரவில் அது எப்படி இருந்ததோ, அப்படியே இப்போதும் இருந்தது.

நாரிஸ் பூனை மட்டும் தீப்பந்தத் தாங்கியில் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. ‘ரகசியங்கள் அடங்கிய அறை திறக்கப்பட்டுவிட்டது’ என்ற வாசகத்திற்குக் கீழே ஒரு காலி நாற்காலி அங்கு சுவரோரமாக இருந்தது.

“அதில் உட்கார்ந்துதான் ஃபில்ச் தர்பார் பண்ணிக் கொண்டிருக்கிறார்;” என்று ரான் முணுமுணுத்தான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தாழ்வாரத்தில் ஆளரவமே இருக்கவில்லை.

“கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் ஓன்றும் கெட்டுப் போகாது” என்று கூறிய ஹாரி, தன் பையைக் கீழே போட்டுவிட்டு, ஏதாவது துப்புக் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தரையைத் துழாவத் துவங்கினான்.

“பிராண்டல் குறிகள்!” என்று அவன் கூறினான். “இதோ இங்கே! ஆ, இங்கேயும் ஒன்று!”

“இங்கே வந்து பாருங்கள்!” என்று ஹெர்மயனி திடீரென்று கத்தினாள். “இது வினோதமாக இருக்கிறது!”

ஹாரி தரையிலிருந்து எழுந்து, வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சுவருக்கு அருகே இருந்த சன்னலுக்கு விரைந்தான். ஹெர்மயனி சன்னலின் கண்ணாடிக் கதவின் மேற்பகுதியைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள். அதிலிருந்த ஒரு சிறு துவாரத்தின் வழியாக வெளியே செல்லப் பத்து இருபது சிலந்திப் பூச்சிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அங்கு வெள்ளி நிறத்தில் நீளமான நூல் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சிலந்திப் பூச்சிகள் வெளியே போகத் துடித்துக் கொண்டு அதில் ஏறிக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது.

“சிலந்திப் பூச்சிகள் எப்போதாவது இவ்வாறு நடந்து கொண்டுள்ளதை நீ பார்த்திருக்கிறாயா?” என்று ஹெர்மயனி வியப்புடன் கேட்டாள்.

“நான் பார்த்தது இல்லை. ரான், நீ எப்படி?” என்று ஹாரி கேட்டான்.

பின் அவன் தன் கழுத்தை வளைத்துப் பார்த்தான். ரான் அவர்களுக்கு வெகு பின்னால், அந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்ற தனது உள்ளுணர்வுடன் போராடிக் கொண்டிருந்தவன்போல நின்று கொண்டிருந்தான்.

“உனக்கு என்ன ஆயிற்று?” என்று ஹாரி கேட்டான்.

“எனக்கு – சிலந்திப் பூச்சிகளைக் – கண்டாலே – பிடிக்காது,” என்று ரான் இறுகிப் போயிருந்த ஒரு குரலில் கூறினான்.

ஹெர்மயனி ரானை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே, “ரான், என்ன புதிதாகக் கரடி விடுகிறாய்?” என்று கேட்டாள். “ஆனால் இதற்கு முன்பு நீ ஏகப்பட்ட முறை மாயத் திரவ வகுப்பில் சிலந்திகளைக் கையாண்டிருக்கிறாயே?”

“அவை செத்துப் போயிருந்தால் நான் பயப்பட மாட்டேன்,” என்று ரான் கூறினான். அவன் அந்த சன்னலைப் பார்ப்பதைத் தவிர்த்து மற்ற இடங்களில் தன் பார்வையை அலையவிட்டான். ‘அவை நகர்ந்து செல்லும் விதம் எனக்கு பிடிக்காது..”

ஹெர்மயனி நக்கலாகச் சிரித்தாள்.

“உனக்கு என்னைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறதா?” என்று ரான் கோபமாகக் கேட்டான். “உனக்கு அதற்கான காரணம் தெரிந்தாக வேண்டுமென்றால் கூறுகிறேன். எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, நான் ஃபிரெட்டின் பொம்மைத் துடப்பத்தை -த்துவிட்டதால், அவன் பதிலுக்கு என் கரடி பொம்மையை ஓர் அருவருப்பான பெரிய சிலந்திப் பூச்சியாக மாற்றிவிட்டான். நீ உன் கரடி பொம்மையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அதற்கு ஏகப்பட்டக் கால்கள் முளைத்தால், உனக்கும்கூட அவற்றைக் கண்டால் உதறல் எடுக்கத்தான் செய்யும். அதோடு -“

உடல் நடுங்கியவாறு அவன் அத்துடன் நிறுத்திக் கொண்டான். சிரிக்காமல் இருக்க ஹெர்மயனி பெரிதும் மெனக்கெட்டுக் கொண்டிருந்தாள். பேச்சைத் திசை திருப்பினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ஹாரி, “இந்த இடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக் கிடந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது எங்கிருந்து வந்திருக்கும்? இந்த இடம் பொதுவாகக் காய்ந்துதானே இருக்கும்?” என்று கேட்டான்.

தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ரான், ஃபில்ச்சின் நாற்காலியைக் கடந்து ஒருசில அடிகள் நடந்து சென்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இங்கிருந்துதான்,” என்று கூறினான். “இந்தக் கதவுகளுக்குப் பின்னால் இருந்துதான் தண்ணீர் வந்திருக்க வேண்டும்!”

அவன் அந்தக் கதவின் பித்தளைக் கைப்பிடியை நோக்கித் தன் கையைக் கொண்டு போனான். திடீரென்று அது தன்னைச் சுட்டுவிட்டதுபோல அவன் தன் கையை வெடுக்கென்று விலக்கிக் கொண்டான்.

“என்ன ஆயிற்று?” என்று ஹாரி கேட்டான்.

“நம்மால் அங்கு போக முடியாது,” என்று ரான் திட்டவட்டமாகக் கூறினான். “அது மாணவியரின் குளியலறை.”

ஹெர்மயனி அவர்களை நோக்கி வந்து கொண்டே, “வா, ரான், இங்கு யாரும் இருக்க மாட்டார்கள்,” என்று கூறினாள். “இது முனகல் மர்ட்டிலுடையது. வா! இங்கு என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.”

அங்கு மாட்டப்பட்டிருந்த ‘உபயோகத்தில் இல்லை’ என்ற பெரிய பலகையை அலட்சியம் செய்துவிட்டு அவள் உள்ளே நுழைந்தாள். ஹாரி இதுவரை அதைப் போன்ற மிகவும் அருவருப்பான, மனக்கிலேசத்தை ஏற்படுத்திய குளியலறையைப் பார்த்திருக்கவில்லை. உடைந்து போயிருந்த ஒரு பெரிய கண்ணாடிக்குக் கீழே, கற்களாலான பல கை கழுவும் தொட்டிகள் வரிசையாக இருந்தன. தரை ஈரமாக இருந்தது. மெழுகுவர்த்தித் எரிந்து கொண்டிருந்த தாங்கிகளில் மிகவும் அடியில் மெழுகுவர்த்திகளின் மெல்லிய ஒளியை அது பிரதிபலித்தது. அங்கிருந்த சிறு தடுப்புகளின் மரக் கதவுகள் பிராண்டப்பட்டும் செதில்செதிலாக உரிந்து போயும் இருந்தன. அதில் ஒரு கதவு அதன் கீலில் பாதி பிடுங்கப்பட்டிருந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஹெர்மயனி தன்னுடைய விரல்களைத் தனது உதடுகளின்மீது வைத்துக் கொண்டு, கடைசித் தடுப்பை நோக்கிச் சென்றாள். அவள் அதை அணுகியதும், “ஹலோ மாட்டில், நீ எப்படி இருக்கிறாய்” என்று கேட்டாள்.

ஹாரியும் ரானும் அங்கே போய் எட்டிப் பார்த்தனர். மாட்டில் ஆவி அங்கிருந்த தொட்டியின்மீது மிதந்து கொண்டிருந்தது. அது தன் கன்னத்தில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தது.

மாட்டில் ஹாரியையும் ரானையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தபடி, “இது மாணவியரின் குளியலறை.” என்று கூறியது “இவர்கள் மாணவியர் அல்லவே?”

“ஆமாம்,” என்று ஹெர்மயனி ஒப்புக் கொண்டாள். அவள் அந்த அழுக்கடைந்த பழைய கண்ணாடியையும் ஈரமாக இருந்த தரையையும் சுட்டிக்காட்டியபடி, “இந்த இடம் – ம்ம் – எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று காட்டுவதற்காக அவர்களை நான்தான் இங்கு கூட்டி வந்தேன்.”

“அது எதையாவது பார்த்ததா என்று அதனிடம் கேள்,” என்று ஹாரி ஹெர்மயனியின் காதில் கிசுகிசுத்தான்.

அவனை முறைத்துப் பார்த்த மர்ட்டில், “நீ என்ன முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது.

ஹாரி அவசர அவசரமாக, “ஒன்றுமில்லை,” என்று கூறினான். “நாங்கள் உன்னை என்ன கேட்க வந்தோம் என்றால் -”

“மக்கள் என் முதுகிற்குப் பின்னால் பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்,” என்று மர்ட்டில் கம்மலான குரலில் கூறியது. அதற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. “நான் இறந்து போயிருக்கலாம். ஆனால் எனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன.”

“மர்ட்டில், இங்கு யாரும் உனக்கு மனவருத்தம் ஏற்படுத்த முயலவில்லை. ஹாரி வந்து

“என்ன சொன்னாய்? இங்கு யாரும் எனக்கு மனவருத்தம் ஏற்படுத்த முயலவில்லையா? கேட்பதற்கு இது வேடிக்கையாக இருக்கிறது,” என்று மாட்டில் ஊளையிட்டது. “இந்த இடத்தில் என் வாழ்க்கை மிக அவலமாக இருக்கிறது. இப்போது என்னடாவென்றால், மக்கள் இங்கு வந்து என் இறப்பிற்குப் பிந்தைய வாழ்வையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!”

ஹெர்மயனி அவசரமாக, “சமீபத்தில் நீ இங்கு வித்தியாசமாக எதையாவது பார்த்தாயா?” என்று கேட்டாள். “ஏனென்றால், ஹாலோவீன் தினத்தன்று ஒரு பூனை இந்த அறைக்கு வெளியே தாக்கப்பட்டிருந்தது.”

“அன்றைய தினம் நீ இங்கு யாரையாவது பார்த்தாயா?” என்று ஹாரி கேட்டான்.

“அன்று நான் எதிலும் அவ்வளவாகக் கவனம் செலுத்தவில்லை,” என்று மாட்டில் ஆவி விட்டேத்தியாகக் கூறியது. “பீவ்ஸ் என்னை மிகவும் மனவருத்தம் கொள்ளச் செய்திருந்ததால் நான் நேராக இங்கு வந்து தற்கொலை செய்து கொள்ள முனைந்தேன். அப்புறம்தான் நினைவுக்கு வந்தது – நான் – நான்-“

“ஏற்கனவே இறந்து போய்விட்டாய் என்று,” என்று ரான் எடுத்துக் கொடுத்தான்.

மாட்டில் சோகமாகத் தேம்பியது. அது வானத்தில் எழும்பி அத்தொட்டிக்குள் குதித்தது. அதிலிருந்து தெறித்தத் தண்ணீரில் அவர்கள் மூவரும் தொப்பலாக நனைந்தனர். பின் அந்த ஆவியைக் காணவில்லை. அதன் அழுகையை வைத்து, அது அத்தொட்டியின் அடியில் இருக்கலாம் என்று அவர்கள் ஊகித்தனர்.

ஹாரியும் ரானும் வாயைப் பிளந்து கொண்டு நின்றனர். ஆனால் ஹெர்மயனி தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, “மாட்டிலைப் பொறுத்தவரை, இது கிட்டத்தட்ட மகிழ்ச்சியான விஷயம்தான். சரி, வா, நாம் இந்த இடத்தைக் காலி செய்யலாம்,” என்று கூறினாள்.

ஹாரி அந்த அறைக் கதவை முழுவதுமாக மூடிக்கூட இருக்க மாட்டான், சத்தமாகக் கேட்ட ஒரு குரல் அவர்கள் மூன்று பேரையும் தூக்கிவாரிப் போட வைத்தது.

“ரான்!”

மாடிப்படி அருகே, பெர்சி, முகத்தில் அதிர்ச்சி உறைந்திருக்க, ஆணியடித்தாற்போல நின்று கொண்டிருந்தான். அவனது மாணவ அணித்தலைவன் முத்திரை அவனது உடையின்மீது பளபளத்துக் கொண்டிருந்தது.

“அது மாணவியரின் குளியலறை,” என்று கூறிய அவனுக்கு மூச்சு வாங்கியது. “நீங்கள் அங்கு என்ன செய்து கொண்டு -”

“சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று ரான் தோள்களைக் குலுக்கினான். “ஏதாவது துப்புக் கிடைக்குமா என்று”.

பெர்சி கோபத்தில் துடித்தான். ஹாரிக்கு அது ரானின் அம்மா மோலியை ஞாபகப்படுத்தியது.

பெர்சி தன் கைகளை ஆட்டிக் கொண்டு, தன் நடையை விரைவுபடுத்தி, அச்சுறுத்தும் விதத்தில் அவர்களை நோக்கி வந்து கொண்டே, “முதலில் – இங்கிருந்து – ஓடிப் – போய் – விடுங்கள்!” என்று இரைந்தான். “நீங்கள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் மரமண்டைகளுக்குக் கொஞ்சமாவது புரிகிறதா? கீழே எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் மூவரும் மீண்டும் இங்கே வந்து . . ?”

ரான் பெர்சிக்கு அருகே சென்று அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு, “நாங்கள் ஏன் இங்கு வரக்கூடாது?” என்று கோபமாகக் கேட்டான். “இதோ பார், எங்களுடைய சுண்டுவிரல்கூட அந்தப் பூனையின்மீது படவில்லை.”

பதிலுக்குப் பெர்சியும், “ஜின்னியிடம் நானும் இதைத்தான் சொன்னேன். ஆனாலும் உன்னை இங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்று அவள் பயந்து போயிருக்கிறாள். அவள் இவ்வளவு மனம் கலங்கி நான் பார்த்ததில்லை. அழுதழுது அவளது மூஞ்சி உப்பிப் போய் இருக்கிறது. நீ அவளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது நல்லது. இச்சம்பவத்தால், முதல் வருட மாணவர்கள் எல்லோரும் அளவுக்கு அதிகமாக மனக்கிலேசம் அடைந்திருக்கிறார்கள்” என்றான்.

“உனக்கு ஜின்னிமேல் ஒன்றும் அக்கறை கிடையாது” என்று ரான் கத்தினான். இப்போது அவனது காதுகள் ஜிவ்வென்று சிவந்து போயிருந்தன. “நீ பள்ளித் தலைமை மாணவனாக ஆவதற்கு இருக்கும் வாய்ப்பை நான் கெடுத்துவிடுவேனோ என்று நீ பயப்படுகிறாய்.”

“கிரிஃபின்டார் அணியிலிருந்து ஐந்து புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும்,” என்று பெர்சி இறுக்கமான குரலில் கூறினான். “இது உனக்குச் சரியான பாடம் புகட்டும் என்று நான் நினைக்கிறேன்! துப்பறியும் ஜேம்ஸ்பான்ட் வேலையை நீ இதோடு நிறுத்திக் கொள்! இல்லையென்றால் நான் அம்மாவிற்குக் கடிதம் எழுதிவிடுவேன்.”

பெர்சி திரும்பி நடந்தான். அவனது பின் கழுத்து, ரானின் காதுகள் அளவுக்குச் சிவந்திருந்தது.

அன்றைய இரவு கிரிஃபின்டார் பொது அறையில், ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும், பெர்சி இருந்த இடத்திலிருந்து எவ்வளவு தள்ளி இருக்க முடியுமோ அவ்வளவு தள்ளி உட்கார்ந்து கொண்டனர். ரான் இன்னும் மிக மோசமான மனநிலையில் இருந்தான். வசிய வீட்டுப்பாடத்தில் அவன் தொடர்ந்து கறைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அந்தக் கறைகளைப் போக்குவதற்காக அவன் எட்டித் தன் மந்திரக்கோலை எடுக்க முனைந்தபோது, அது அவனது தோல் காகிதத்தைத் தீப்பற்ற வைத்துவிட்டது. தனது வீட்டுப்பாடத்தின் அளவுக்குப் புகைந்து கொண்டிருந்த ரான், தான் படித்துக் கொண்டிருந்த ‘அடிப்படை மாய மந்திரப் புத்தகம் (இரண்டாம் வருடம்)’ நூலை அறைந்து மூடினான்.

ஹாரிக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் ஹெர்மயனியும் ரானைத் தொடர்ந்து தன் புத்தகத்தை மூடினாள்.

“அது யாராக இருக்கும்?” என்று ஹெர்மயனி மெல்லிய குரலில் கேட்டாள். அவள் கேட்ட விதம், அவர்கள் ஏற்கனவே ஓர் உரையாடலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்ததுபோல இருந்தது. “ஸ்குயிப்களையும் மகுள்களுக்குப் பிறந்த மந்திரவாதிகளையும் ஹாக்வார்ட்ஸில் இருந்து துரத்தியடிக்க யார் விரும்புவார்கள்?”

“நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமா?” என்று ரான் போலி வியப்புடன் கேட்டான். “நமக்குத் தெரிந்தவரை ‘மகுள்களுக்குப் பிறந்தவர்கள் கழிசடைகள்’ என்று யார் நினைக்கிறார்கள் என்று யோசிக்கலாம்.”

அவன் ஹெர்மயனியைப் பார்த்தான். அவள் அவனது மனத்தில் இருந்ததை ஏற்றுக் கொள்ளாதவள்போல அவனைப் பார்த்தாள்.

“நீ மால்ஃபாயைப் பற்றிப் பேசுகிறாய் என்றால்”

“நான் அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்,” என்று ரான் கூறினான். “அவன் என்ன சொன்னான் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? ‘அடுத்து நீங்கள்தான் ஈன ரத்தப் பிறவிகளே! வஞ்சகம் பொங்கி வழியும் அவனது எலி மூஞ்சியைப் பார்த்தாலே தெரியவில்லையா, அவன்தான் இதைச் செய்திருப்பான் என்று!”

“மால்ஃபாய் – ஸ்லிதரினின் உண்மையான வாரிசு?” என்று ஹெர்மயனி இளக்காரமாகக் கேட்டாள்.

ஹாரியும் தனது புத்தகத்தை மூடிவிட்டு, “அவனது பரம்பரையைப் பார்,” என்று கூறினான். “அவர்கள் அனைவரும் ஸ்லிதரின் அணியில்தான் இருந்துள்ளனர். அவன் அது குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்து வருகிறான். அவர்கள் ஸ்லிதரினின் வாரிசுகளாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. அவனது அப்பாவிடம் போதுமான அளவு தீய மந்திர சக்தி குடி கொண்டுள்ளது.”

“ரகசியங்கள் அடங்கிய பாதாள அறைக்கான திறவுகோலை அவர்களுடைய குடும்பம் பல நூற்றாண்டுகளாக, அப்பாவிடமிருந்து பிள்ளைக்கு என்று, ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்து வந்திருக்கக்கூடும்.”

“அது சாத்தியம்தான்,” என்று ஹெர்மயனி அரைகுறை மனத்துடன் கூறினாள்.

“ஆனால் அதை எப்படி நிரூபிப்பது?” என்று ஹாரி கசப்புடன் கேட்டான்.

ஹெர்மயனி, பெர்சி இருந்த திசையை நோக்கித் தன் கண்களைப் படரவிட்டவாறே, தன் குரலை இன்னும் தாழ்த்திக் கொண்டு, “அதற்கு ஒரு வழி இருக்கிறது,” என்று மெதுவாகக் கூறினாள். “அது கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆபத்தானதும்கூட. மிகமிக ஆபத்தானது. நாம் குறைந்தபட்சம் ஐம்பது பள்ளி விதிமுறைகளையாவது மீற வேண்டியிருக்கும்!”

“ஒரு மாதகால அவகாசத்திற்குள் இது குறித்து எங்களிடம் நீ விவரிக்க விரும்பினால், அதை எங்களுக்குத் தெரியப்படுத்துவாயா?” என்று ரான் எரிச்சலுடன் கேட்டான்.

“சரி, சரி,” என்று ஹெர்மயனி வேண்டா வெறுப்பாகக் கூறினாள். “நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்லிதரினின் பொது அறைக்குள் புகுந்து, நாம்தான் கேட்கிறோம் என்பது வெளிப்பட்டுவிடாமல் ஒருசில கேள்விகளை அங்கு நாம் மால்ஃபாயிடம் கேட்க வேண்டும், அவ்வளவுதான்.”

“அது நடக்கவே நடக்காது,” என்று ஹாரி கூறினான். ரான் நகைத்தான்.

“அதுவொன்றும் முடியாத காரியமல்ல,” என்று ஹெர்மயனி தெரிவித்தாள். “அதற்கு நமக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் ‘பலகூட்டுச்சாறு மாயத் திரவம்’ மட்டும்தான்.”

“அது என்ன ‘பலகூட்டுச்சாறு மாயத் திரவம்’?” என்று ஹாரியும் ரானும் ஒருமித்தக் குரலில் கேட்டனர்.

“ஸ்னேப் தன்னுடைய வகுப்பில் ஒருசில வாரங்களுக்கு முன்பு இது குறித்து -”

“மாயத் திரவ வகுப்பில் ஸ்னேப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை என்று நீ நினைத்தாயா?” என்று ரான் முணுமுணுத்தான்.

“இது உன்னை வேறு ஒருவராக உருமாற்றிவிடும். அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! நாம் மூன்று பேரும் ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த மூன்று மாணவர்களாக மாறிக் கொள்ளலாம். அது நாம்தான் என்பது வேறு யாருக்கும் தெரியாது. மால்ஃபாய் எதை வேண்டுமானாலும் நம்மிடம் சொல்வான். நம்மால் மட்டும் அவன் பேசுவதைக் கேட்க முடிந்தால், அவன் இக்கணத்தில் ஸ்லிதரின் பொது அறையில் அதைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கக்கூடும், யார் கண்டது?

ரான் முகம் சுளித்தவாறே, “இந்தப் பலகூட்டுச்சாறு சமாச்சாரம். எனக்கென்னவோ கொஞ்சம் ஏடாகூடமாகத் தெரிகிறது” என்று கூறினான். “நாம் அந்த ஸ்லிதரின் மாணவர்களின் உருவத தோற்றத்திலிலேயே நிரந்தரமாகத் தங்கும்படி ஆகிவிட்டால்?”

ஹெர்மயனி பொறுமையிழந்து தன் கைகளை ஆட்டியபடியே “கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அத்திரவத்தின் வீரியம் தானாகவே குறைந்து முற்றிலுமாக விலகிவிடும்.” என்று கூறினாள். “ஆனால் இந்த மாயத் திரவத்தைத் தயாரிக்கும் முறையைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் சிரமமாக இருக்கிறது. அத்தயாரிப்பு முறை `அதிவீரிய மாயத் திரவம்’ என்ற புத்தகத்தில் இருந்ததாக ஸ்னேப் கூறினார். மட்டுப்படுத்தப்பட்ட நூலகப் பகுதிக்குள் கண்டிப்பாக அப்புத்தகம் இருந்தாக வேண்டும்.”

மட்டுப்படுத்தப்பட்ட நூலகப் பகுதியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, ஓர் ஆசிரியரிடமிருந்து அவரது கையெழுத்துடன்கூடிய ஒரு குறிப்புச் சீட்டை வாங்கி வருவதுதான்.

“நாம் அந்த மாயத் திரவத்தைத் தயாரிக்கப் போவதில்லை. என்றால், நமக்கு அப்புத்தகம் எதற்காகத் தேவை என்று எனக்குப் புரியவில்லை,” என்று ரான் கூறினான்.

“நமக்கு அக்கோட்பாட்டில் மிகுந்த ஈடுபாட்டு இருப்பதுபோல் நம்மால் காட்டிக் கொள்ள முடியுமெனில், நமக்கு அப்புத்தகம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது”.

“வீணாக அலையாதே! எந்தவோர் ஆசிரியரும் உன்னுடைய வலையில் விழப் போவதில்லை,” என்று ரான் கூறினான். “அவர்களுக்கு நிஜமாகவே எருமை மாட்டுத் தோல் இருந்தாலொழிய!”

10. போக்கிரி பிளட்ஜர்

பெரும் அசம்பாவிதத்தில் முடிந்த பிக்ஸி சம்பவ நிகழ்விற்குப் பிறகு, லாக்ஹார்ட் வேறு எந்த விலங்கையும் வகுப்பிற்குள் கொண்டுவரவில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது புத்தகங்களில் இருந்து மாணவர்களுக்குப் படித்துக் காட்டினார். சில சமயங்களில், அவற்றில் இடம்பெற்றிருந்த சுவையான சம்பவங்களை நடித்தும் காட்டினார். அப்படி நடித்துக் காட்டியபோது அவர் பெரும்பாலும் ஹாரியையே தன் உதவிக்கு அழைத்தார். அதனால் இதுவரை, பிதற்றல் வசியத்திற்கு ஆட்பட்டிருந்து பின்னர் லாக்ஹார்ட்டால் குணப்படுத்தப்பட்டிருந்த ஒரு டிரான்ஸ்சில்வேனியன் கிராமத்தானாகவும், ஜலதோஷம் பிடித்திருந்த ஒரு பனி அரக்கனாகவும், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைத் தவிர வேறு எதையும் உண்ண முடியாதபடி லாக்ஹார்ட்டால் சபிக்கப்பட்டிருந்த ஒரு ரத்தக்காட்டேரியாகவும் நடிப்பதற்கு ஹாரி கட்டாயப்படுத்தப்பட்டிருந்தான்.

அடுத்து நடைபெற்றத் ‘தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு’ வகுப்பில் ஹாரி மறுபடியும் வகுப்பிற்கு முன்னால் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டான். இம்முறை அவன் ஓர் ஓநாய்மனிதனாக நடிக்க வேண்டியிருந்தது. அன்று லாக்ஹார்ட்டை ஒரு நல்ல மனநிலையில் வைத்திருக்க வேண்டிய காரணம் மட்டும் அவனுக்கு இல்லாமல் இருந்திருந்தால், அவன் அப்படி நடிக்க மறுத்திருக்கக்கூடும்.

“ஹாரி, நன்றாகப் பெரிதாக ஊளையிடு – ஆம், அப்படித்தான் – – மாணவர்களே – பிறகு, நீங்கள் நம்பினால் நம்புங்கள், சபாஷ்! இப்படித்தான் நடந்தது – நான் அந்த ஓநாய்மனிதன்மீது மோதி இப்படித்தான் மோதி – அவனைத் தரையோடு தரையாகச் சாய்த்து – இப்படி ஒற்றைக் கையினால் – எழ விடாமல் பிடித்திருந்தேன் – என்னுடைய அடுத்தக் கையைக் கொண்டு, என் மந்திரக்கோலால் அவனுடைய தொண்டையை அழுத்தினேன் – பின் நான் என்னிடம் மீதமிருந்த அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி மிகவும் சிக்கலானமந்திரங்களில் ஒன்றான ‘ஹோமார்ஃபஸ்’ மந்திரத்தைப் பிரயோகித்தேன் – அவன் பரிதாபமாக முனகினான் இன்னொரு முறை ஊளையிடு – இன்னும் சத்தமாக. அப்படித்தான் – பிரமாதம்! – அவனுடைய தோல் முடியெல்லாம் அவன் மீண்டும் ஒரு சாதாரண மனிதனாக உருவெடுத்தான். மிக எளிதான, ஆனால் அதே சமயம் மிகவும் பலனளிக்கின்ற ஒரு மந்திரம் அது – மற்றுமொரு கிராமம், ஓநாய்மனிதனின் மாதாந்திரத் தாக்குதல்களில் இருந்து தங்களது கிராமத்தைக் காப்பாற்றிக் கொடுத்த ஒரு வெற்றிக் கதாநாயகனாக என்னை நினைவில் வைத்திருக்கும்.

மணி அடித்தது. லாக்ஹார்ட் உடனடியாக எழுந்து நின்றார்.

“வீட்டுப்பாடம்: வாகா-வாக ஓநாய்மனிதனை நான் முறியடித்தது பற்றி நீங்கள் ஒரு கவிதை எழுதி வர வேண்டும். மிகச் சிறந்த கவிதையைப் படைப்பவருக்கு நான் என் கையெழுத்திட்ட ‘மாயாஜாலமான நான்’ என்ற எனது புத்தகத்தின் பிரதி ஒன்றைப் பரிசாகக் கொடுப்பேன்.”

மொத்த வகுப்பும் கலைந்தது. ஹாரி அந்த அறையின் பின்பகுதிக்குச் சென்றான். அங்கு ரானும் ஹெர்மயனியும் காத்துக் கொண்டிருந்தனர்.

“தயாரா?” என்று ஹாரி முணுமுணுத்தான்.

“எல்லோரும் போகட்டும்!” என்று ஹெர்மயனி பதற்றத்துடன் கூறினாள். “சரி…”

அவள் தன் கையில் ஒரு துண்டுக் காகிதத்தை இறுகப் பிடித்தபடி லாக்ஹார்ட்டின் மேசையை அணுகினாள். ஹாரியும் ரானும் அவளுக்குப் பின்னால் சென்றனர்.

“பேராசிரியரே, வணக்கம்!” என்று ஹெர்மயனி திக்கித் திணறிக் கூறினாள். “நான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுக்க விரும்புகிறேன் – வெறுமனே மேலோட்டமாகப் படிப்பதற்காகத்தான்’ அவள் தன் கையில் வைத்திருந்த துண்டுக் காகிதத்தை அவரிடம் நீட்டினாள். அவளது கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. “ஆனால் இப்புத்தகம் நூலகத்தின் மட்டுப்படுத்தப்பட்டப் பகுதியில் இருக்கிறது. அதனால் அதை நூலகத்திலிருந்து கடன் வாங்குவதற்கு எனக்கு ஓர் ஆசிரியரின் கையெழுத்துத் தேவைப்படுகிறது – மெதுவாக வேலை செய்யும் விஷம் குறித்து நீங்கள் எழுதியுள்ள ‘கோரைப் பல் ராட்சஸப் பேய்க்குச் சாவு மணி அடித்தல்’ புத்தகத்தைப் புரிந்து கொள்ள இது எனக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்..”

லாக்ஹார்ட் அவளுடைய கையிலிருந்த துண்டுக் காகிதத்தை வாங்கிக் கொண்டு அவளைப் புன்னகைத்தவாறே, “என்ன சொன்னாய்? ‘கோரைப் பல் ராட்சஸப் பார்த்துப் பெரிதாகப் பேய்க்குச் சாவு மணி அடித்தல்’ புத்தகத்தைப் பற்றியா?” என்ற கேட்டார். “அதுதான் நான் எழுதியுள்ளதிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். அது உனக்குப் பிடித்திருந்ததா?”

“ஆமாம், மிகவும் பிடித்திருந்தது,” என்று ஹெர்மயனி ஆர்வமாகக் வைத்து நீங்கள் பிடித்த விதம் மிகவும் புத்திசாலித்தனமான”

“இவ்வருடத்தின் சிறந்த மாணவிக்கு ஒரு கூடுதல் உதவி செய்தால் யாரும் என்னை ஒன்றும் கேள்வி கேட்க மாட்டார்கள்,” என்று லாக்ஹார்ட் இதமாகக் கூறிவிட்டு, மிகப் பெரிய இறகுப் பேனா ஒன்றை வெளியே எடுத்தார். ரானின் முகத்தில் தென்பட்ட வெறுப்பான பாவத்தைத் தவறாகக் கணித்த லாக்ஹார்ட், “இந்த இறகுப் பேனா கனஜோராக இருக்கிறது, இல்லையா?” என்று கேட்டார். “இதை நான் பொதுவாக என் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்கு மட்டுமே உபயோகிக்கிறேன்.”

வளைந்து நெளிந்திருந்த தனது கையெழுத்தைப் பெரிதாக அந்தத் துண்டுக் காகிதத்தில் இட்டு லாக்ஹார்ட் அதை ஹெர்மயனியிடம் நீட்டினார்.

நடுங்கிக் கொண்டிருந்த தனது விரல்களால் ஹெர்மயனி அதை வாங்கி மடித்துத் தன் பையில் போட்டுக் கொண்டிருந்தபோது, அவர் ஹாரியிடம், “ஹாரி, இவ்வருடத்தின் முதல் குவிடிச் போட்டி நாளை நடைபெறுகிறது என்று நினைக்கிறேன், அப்படித்தானே? கிரிஃபின்டாருக்கும் ஸ்லிதரினுக்கும் இடையேயான போட்டி அது, இல்லையா? நீயொரு சிறந்த ஆட்டக்காரன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் ஒரு தேடுபவனாகத்தான் இருந்தேன். தேசியப் போட்டிகளில் விளையாட வருமாறு அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் தீய மந்திர சக்திகளை ஒழித்துக் கட்டுவதற்காக என் வாழ்க்கையை அர்பணித்துக் கொள்வதையே நான் விரும்பினேன். குவிடிச் விளையாட்டில் உனக்கு எப்போதாவது தனிப்பட்ட முறையில் பயிற்சி தேவைப்பட்டால் என்னை அணுகத் தயங்காதே! என்னைவிடத் திறமை குறைந்த ஆட்டக்காரர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் அதை நான் எப்போதுமே சந்தோஷமாகச் செய்வேன் . . .”

ஹாரி லேசாகச் செருமிக் கொண்டு, பின் ரானையும் ஹெர்மயனியையும் பின்தொடர்ந்து ஓடினான்.

அவர்கள் மூன்று பேரும் அந்தக் காகிதக் குறிப்பில் இருந்த அவருடைய கையெழுத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ஹாரி, “என்னால் நம்பவே முடியவில்லை,” என்று கூறினான், “நூலகத்தில் இருந்து நாம் எந்தப் புத்தகத்தை எடுக்க விரும்பினோம் என்பதை அவர் பார்க்கக்கூட இல்லை.”

“ஏனென்றால் அவர் ஒரு மடையன்,” என்று ரான் கூறினான். “நமக்கு அதைப் பற்றி என்ன கவலை? நமக்கு வேண்டியது கிடைத்துவிட்டது.”

அவர்கள் ஒட்டமும் நடையுமாக நூலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஹெர்மயனி, “அவர் ஒன்றும் மடையன் கிடையாது,” என்று வாதிட்டாள்.

“இவ்வருடத்தின் சிறந்த மாணவி நீதான் என்று அவர் உனக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும்போது, அவரைப் பற்றி நீ வேறு எப்படிப் பேசுவாய்?”

அமைதியாக இருந்த நூலகத்திற்குள் நுழைந்தவுடன் அவர்கள் தங்கள் குரல்களைத் தணித்துக் கொண்டனர்.

ஒல்லியான உருவத்தைக் கொண்டிருந்த நூலகரான மேடம் பின்ஸ் ஒரு முன்கோபி. அவரது தோற்றம், பட்டினி போடப்பட்டிருந்த ஒரு கழுகுபோல இருந்தது.

“அதிவீரிய மாயத் திரவம்?” அவர் சந்தேகத்துடன் அப்புத்தகத்தின் பெயரை மீண்டும் ஒருமுறை கூறிக் கொண்டே, ஹெர்மயனியின் கையில் இருந்த காகிதக் குறிப்பை வாங்கிக் கொள்ள முயன்றார். ஆனால் அதைக் கொடுக்க மனமில்லாமல், ஹெர்மயனி அதைத் தன் கையில் இறுகப் பற்றியிருந்தாள்.

ஹெர்மயனி உணர்ச்சிவசப்பட்டு, “நான் இதை வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

“அதை இப்படிக் கொடு,” என்று ரான் அதை அவளிடமிருந்து பிடுங்கி மேடம் பின்ஸின் கையில் திணித்தான். “ஹெர்மயனி, நாங்கள் லாக்ஹார்ட்டிடமிருந்து உனக்கு அவரது இன்னொரு கையெழுத்தை வாங்கித் தருகிறோம். எதுவொன்றும் கொஞ்ச நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தால், அதில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க அவர் தயங்க மாட்டார்.”

மேடம் பின்ஸ் அந்தக் காகிதக் குறிப்பை விளக்கு வெளிச்சத்திற்கு நேராக வைத்துப் பார்த்தார். அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அக்குறிப்பில் இடம்பெற்றிருந்தது போலிக் கையெழுத்து என்று நிரூபிக்க அவர் தீர்மானமாக இருந்ததுபோலத் தோன்றியது. ஆனால் அக்கையெழுத்து அவரது சோதனையில் வெற்றிகரமாகத் தேறியது. அவர் பல உயரமான புத்தக அலமாரிகளின் ஊடாக விறைப்பாக நடந்து சென்று, பல நிமிடங்களுக்குப் பிறகு, பூசனம் பிடித்திருந்ததுபோலத் தோன்றிய மிகப் பெரிய புத்தகம் ஒன்றுடன் வந்தார். ஹெர்மயனி அப்புத்தகத்தைக் கவனமாகத் தன் பையில் போட்டுக் கொண்டாள். அவர்கள் மூவரும் அதிக வேகமாக நடக்காமல் இருக்கவும், அதிகமான குற்றவுணர்வு தங்கள் முகங்களில் வெளிப்பட்டுவிடாமல் இருக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் முனகல் மர்ட்டிலின் குளியலறையில் தஞ்சம் புகுந்தனர். மூளை ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் எவரும் போகக்கூடிய கடைசி இடம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால், தங்களை அங்கு யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று விவாதித்து, ஹெர்மயனி, ரானின் ஆட்சேபனையை ஒதுக்கித் தள்ளினாள். முனகல் மர்ட்டில் தன்னுடைய தடுப்பறையில் சத்தமாக அழுது கொண்டிருந்தது. அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. மர்ட்டிலும் அவர்களைச் சட்டை செய்யவில்லை.

ஹெர்மயனி கவனமாக ‘அதிவீரிய மாயத் திரவம்’ புத்தகத்தைத் திறந்தாள். ஆங்காங்கே ஈரப்பதத்துடன் இருந்த அப்புத்தகத்தை நோக்கி அவர்கள் மூவரும் குனிந்தனர். அதை லேசாக நோட்டம் விட்டவுடனேயே, அது ஏன் நூலகத்தின் மட்டுப்படுத்தப்பட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒருசில மாயத் திரவங்களின் விளைவுகளை நினைத்தாலே குலை நடுங்கியது. அதைத் தவிர, அருவருக்கத்தக்கப் படங்கள் சிலவும் அதில் இடம்பெற்றிருந்தன. உடலின் உட்புறம் வெளியாகவும் வெளிப்புறம் உள்ளாகவும் மாற்றப்பட்டிருந்த ஒரு மனிதனின் படமும், ஒரு மந்திரவாதினியின் தலையிலிருந்து ஏகப்பட்டக் கைகள் முளைத்திருந்த ஒரு படமும் அவற்றில் அடங்கும்.

ஹெர்மயனி ‘பலகூட்டுச்சாறு மாயத் திரவம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்த பக்கத்தைப் புரட்டியதும், “இதோ, இங்கே இருக்கிறது,” என்று பரவசமாகக் கூறினாள். மற்றவர்களின் உருவங்களுக்கு மாறிக் கொண்டிருந்தவர்களின் படங்கள் அப்பக்கத்தை அலங்கரித்தன. உருவமாற்றச் செயல்முறை பாதி வழியில் இருக்கும்போது அவர்களது உருவங்கள் எவ்வாறு தோன்றுமோ, தெள்ளத்தெளிவாக அவை அப்படியே வரையப்பட்டிருந்தன. அவர்களது முகங்களில் தென்பட்டத் தீவிரமான வேதனை, அவற்றை வரைந்திருந்த ஓவியரின் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஹாரி தன் மனத்திற்குள் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

அவர்கள் அதன் செய்முறை விளக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஹெர்மயனி, “நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் சிக்கலான மாயத் திரவம் இதுதான்,” என்று தெரிவித்தாள். அதைத் தயாரிக்கத் தேவைப்பட்டப் பொருட்களின் பட்டியலின்மீது அவள் தன் விரலை ஓடவிட்டவாறு, “லேஸ் இறகுப் பூச்சிகள், அட்டைப் பூச்சிகள், ஃபிளக்ஸ்வீட் மூலிகை, மற்றும் முடிச்சுப் புற்கள்,” என்று முணுமுணுத்தாள். “இவை அனைத்தும் சுலபமாகக் கிடைக்கும். மாணவர்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ளக்கூடிய அலமாரிகளில் இவை இருக்கின்றன. நாமே போய் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஐய்யய்யோ! இரட்டைக் கொம்பு மிருகத்தின் கொம்புப் பொடி வேண்டுமாமே! அதற்கு நாம் எங்கே போவது? அடக் கருமமே! பூம்ஸ்லேங் பாம்புச் சட்டையின் பொடியும் தேவையாம் – இது கிடைப்பதும் சிரமம்தான். பிறகு, நாம் யாராக மாற இருக்கிறோமோ, அந்த நபருடைய உடலிலிருந்து ஏதேனும் ஒன்றும் தேவை.”

“ஹெர்மயனி, கொஞ்சம் பொறு,” என்று ரான் அவளை டைமறித்தான். “நீ என்ன சொன்னாய்? நாம் யாராக மாற இருக்கிறோமோ, அந்த நபருடைய உடலில் இருந்து ஏதேனும் ஒன்றா? கிராபின் கால்விரல் நகங்கள் அரைத்து ஊற்றப்பட்டிருக்கும் எந்தத் திரவத்தையும் நான் குடிக்க மாட்டேன்”.

அவன் கூறியது தனக்குக் கேட்கவே இல்லை என்பதுபோல ஹெர்மயனி தன் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“நாம் அதைப் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அதை நாம் கடைசியில்தான் சேர்க்க வேண்டும்”

ரான் வாயடைத்துப் போய் ஹாரியைப் பார்த்தான். ஆனால் ஹாரியின் கவலை வேறாக இருந்தது.

“ஹெர்மயனி, நாம் என்னவெல்லாம் திருட வேண்டியிருக்கும் என்பது உன் மண்டையில் உறைக்கிறதா? பூம்ஸ்லேங் பாம்புச் சட்டையின் பொடி கண்டிப்பாக மாணவர்களுக்கான அலமாரியிலிருந்து நமக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஸ்னேப்பின் தனிப்பட்டச் சேகரிப்பில் கை வைக்கப் போகிறோமா? இத்திட்டம் வேலை செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை”

ஹெர்மயனி அப்புத்தகத்தை ஓங்கி அறைந்து மூடினாள்.

“முதுகெலும்பே இல்லாததுபோல நீங்கள் இருவரும் நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் எனக்கொன்றும் பிரச்சனையில்லை,” என்று அவள் கூறினாள். அவளது கன்னத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் தோன்றின. அவளது கண்கள் வழக்கத்தைவிட அதிகப் பிரகாசமாக ஜொலித்தன. “விதிகளை மீறுவதில் எனக்கு மட்டும் அதிக ஆசையா என்ன! ஒரு மாயத் திரவத்தைக் காய்ச்சுவதைவிட, மகுள்களுக்குப் பிறந்தவர்களை அச்சுறுத்துவது மகாமோசம் என்று நான் நினைக்கிறேன். அது மால்ஃபாய்தானா என்று கண்டுபிடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நான் இப்போதே நேராகச் சென்று மேடம் பின்ஸிடம் இப்புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்”.

“விதிகளை மீற நீ எங்களை வற்புறுத்தும் நாள் ஒன்று வரும் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை,” என்று ரான் கூறினான். “சரி, நாம் இதில் இறங்கலாம். ஆனால் கால்விரல் நகங்கள் வேண்டாம், சரியா?”

சந்தோஷத்தை வெளிப்படுத்திய ஹெர்மயனி, புத்தகத்தை மீண்டும் திறந்து கொண்டிருந்தபோது, ஹாரி அவளிடம், “ஆமாம், இதைத் தயாரிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?” என்று கேட்டான்.

“ஃபிளக்ஸ்வீட் மூலிகை பௌர்ணமி அன்றுதான் பறிக்கப்பட வேண்டும் . . . லேஸ் இறகுப் பூச்சிகளை இருபத்தியோரு நாட்கள் காய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும்.. ம்ம்… நாம் இதற்குத் தேவையான எல்லா இடுபொருட்களையும் உடனடியாகச் சேகரித்தால் ஒரு மாதகாலம் ஆகும் என்று நினைக்கிறேன்.”

“என்ன, ஒரு மாதமா?” என்று ரான் கேட்டான். “அதற்குள், பள்ளியில் இருக்கின்ற, மகுள்களுக்குப் பிறந்த மாணவர்களில் பாதிப் பேர்மீது மால்ஃபாய் பாய்ந்திருப்பான்!” ஹெர்மயனியின் கண்கள் மீண்டும் சுருங்கின. “ஆனால் நம்மிடம் கைவசம் இருக்கும் மிகச் சிறந்த திட்டம் இதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் இதில் நாம் முழுமூச்சாக இறங்கலாம்.”

அவர்கள் அந்தக் குளியலறையைவிட்டு வெளியேறுவதற்காக, தாழ்வாரம் காலியாக இருந்ததா என்று ஹெர்மயனி சோதித்துக் கொண்டிருந்தபோது, ரான் ஹாரியிடம், “நாளைக்கு நடைபெறவிருக்கும் குவிடிச் போட்டியில் நீ மால்ஃபாயை அவனது மந்திரத் துடப்பத்திலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டால் விஷயம் சுலபமாக முடிந்துவிடும். நாம் இவ்வளவு சிக்கலான விவகாரத்தில் ஈடுபட வேண்டியிருக்காது,” என்று முணுமுணுத்தான்.

அந்த சனிக்கிழமையன்று ஹாரிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டிருந்தது. வரவிருந்த குவிடிச் போட்டியைப் பற்றி யோசித்தவாறே படுக்கையில் கொஞ்ச நேரம் அவன் புரண்டு கொண்டிருந்தான். அவன் பதற்றமாக இருந்தான். முக்கியமாக, தங்களுடைய அணி தோற்றுப் போனால் உட் என்ன சொல்வானோ என்ற பயமும், இருப்பதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மந்திரத் துடப்பங்களோடு விளையாடவிருந்த ஓர் அணியோடு மோத வேண்டியிருந்தது குறித்த நினைப்பும் அவனை வாட்டியெடுத்து அவனுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தின. ஸ்லிதரின் அணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவனிடம் மேலோங்கி இருந்தது. இப்படி உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு ஓர் அரை மணிநேரம் படுத்துக் கிடந்த பிறகு அவன் எழுந்து ஆடை மாற்றிக் கொண்டு, சீக்கிரமாகவே காலை உணவிற்குச் சென்றான். அங்கு போடப்பட்டிருந்த நீண்ட காலியான மேசையில் மொத்த கிரிஃபின்டார் அணியும் நெருக்கமாகவும் விறைப்பாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தது. அவர்கள் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

பதினோரு மணி நெருங்கியதும் மொத்தப் பள்ளியுமே குவிடிச் மைதானத்தை நோக்கிப் படையெடுத்தது. அன்று வானிலை புழுக்கமாக இருந்தது. இடி இடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடை மாற்றும் அறைக்குள் ஹாரி நுழைந்து கொண்டிருந்தபோது, ரானும் ஹெர்மயனியும் அவசரமாக அங்கு வந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். குழுவினர் அனைவரும் ரத்தச்சிவப்பு நிறத்தில் இருந்த கிரிஃபின்டார் சீருடைகளை அணிந்து கொண்டு, போட்டிக்கு முன்பாக உட் வழக்கமாக வழங்கிய உத்வேகப் பேச்சைக் கேட்பதற்காகத் தயாராயினர்.

“ஸ்லிதரின் அணியினரிடம் நம்மைவிட மேம்பட்ட மந்திரத் துடப்பங்கள் இருக்கின்றன,” என்று அவன் தன் பேச்சைத் துவக்கினான். “அதை மறுப்பதில் அர்த்தமில்லை. ஆனால் நம்மிடம் அவர்களைவிட மிகச் சிறந்த வீரர்கள் உள்ளனர். நாம் அவர்களைவிட அதிகமாகப் பயிற்சி எடுத்துள்ளோம். நாம் எல்லாத் தட்பவெப்ப நிலையிலும் விளையாடிப் பயிற்சி எடுத்துள்ளோம் (அதில் என்ன சந்தேகம்! ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஈர உடலுடன்தான் நான் திரிந்து கொண்டு இருக்கிறேன்!” என்று ஜார்ஜ் முணுமுணுத்தான்). ஸ்லிதரின் டத்தைக் காசு கொடுத்து வாங்கி அணியில் தன்னுடைய இடத்தைக் காசு கொடுத்து கொண்டுள்ள அந்தக் குட்டிச்சாத்தான் மால்ஃபாயைத் தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டதற்காக அவர்கள் தங்களையே நொந்து கொள்ளும்படி நாம் செய்ய வேண்டும்.”

உணர்ச்சி மிகுதியால் நெஞ்சு விம்மிப் புடைக்க, உட் ஹாரியை நோக்கித் திரும்பினான்.

“ஹாரி, இன்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போவது நீதான். ஒரு ‘தேடுபவனுக்கு’ப் பணக்கார அப்பாவைவிடக் கூடுதலாக வேறொன்றும் தேவை என்பதை அவர்களுக்கு நீ நிருபித்துக் காட்டு. மால்ஃபாய்க்கு முன்பாக எப்படியாவது ஸ்னிச்சை நீ கைப்பற்றிவிடு முடிந்தாலும் பரவாயில்லை! ஏனெனில், ஹாரி, இன்று நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்! இன்று நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்”

ஃபிரெட் ஹாரியை நோக்கிக் கண்ணடித்தவாறே, “பரவாயில்லை. இன்று நீ அவ்வளவாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை,” என்று கூறினான்.

அவர்கள் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் பெரும் சத்தம் அவர்களை வரவேற்றது. அச்சத்தத்தில் பெரும்பகுதி வாழ்த்தொலிகள்தான். ரேவன்கிளா அணியினரும் ஹஃபில்பஃப் அணியினரும் ஸ்தலிரின் அணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால் கூட்டத்தில் இருந்த ஸ்லிதரின் அணியினர் அவர்களை நோக்கி வெறுப்பை உமிழ்ந்த சீற்றொலிகளை எழுப்பினர். குவிடிச் ஆசிரியரான மேடம் ஹூச், ஒருவரோடொருவர் கைகுலுக்கிக் கொள்ளுமாறு உட் மற்றும் மார்க்கஸிடம் கூறியபோது அவர்கள் இருவரும் அவ்வாறே செய்தனர். ஆனால் அப்படிச் செய்தபோது அவர்கள் பரஸ்பரம் அடுத்தவரது கையைத் தேவைக்கு அதிகமாகவே பலமாக அழுத்தினர்.

“நான் விசில் அடித்ததும் விளையாட்டுத் துவங்கும்!” என்று மேடம் ஹூச் அறிவித்தார். “மூன்று இரண்டு ஒன்று..”

கூட்டத்தினரின் விண்ணைப் பிளந்த கரகோஷத்திற்கு இடையே, அந்தப் பதினான்கு ஆட்டக்காரர்களும், கனத்துப் போயிருந்த வானத்தை நோக்கி ஜிவ்வென்று பறந்தனர். அவர்கள் எல்லோரையும்விட மிக உயரத்தில் பறந்த ஹாரி, கண்களை இடுக்கிக் கொண்டு, ஸ்னிச்சைத் தேடிச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

மால்ஃபாய் அவனுக்குக் கீழே படுவேகமாகப் பறந்தபடி, “நெற்றிவடுத் தலையா, நீ இங்குதான் இருக்கிறாயா?” என்று சீண்டினான். அவன் தனது மந்திரத் துடப்பத்தின் வேகத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டதைப்போல அது இருந்தது.

அதற்கு பதிலளிக்க ஹாரிக்கு அவகாசமே இருக்கவில்லை. சரியாக அக்கணத்தில், ஒரு கனமான கருப்பு நிற பிளட்ஜர் அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. கடைசி நிமிடத்தில் அவன் அதைத் தவிர்த்தான். தன்னைக் கடந்து போன வேகத்தில், அது தனது தலைமுடியைக் கலைத்துச் சென்றதை அவனால் உணர முடிந்தது.

பிளட்ஜரை ஸ்தலிரின் அணியினரை நோக்கி அடிப்பதற்காகக் கையில் மட்டையுடன் அவனைக் கடந்து மின்னலென விரைந்து கொண்டிருந்த ஜார்ஜ், “ஹாரி, அது உனக்கு மிக அருகில் வந்துவிட்டது, ஜாக்கிரதை!” என்று கூறிவிட்டுப் பறந்தான். ஜார்ஜ் பிளட்ஜரை ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த அட்ரியன் பியூசியை நோக்கி பலமாக அடித்தான். ஆனால் அந்த பிளட்ஜர், நடுவானில் தன் போக்கை மாற்றிக் கொண்டு, மீண்டும் ஹாரியை நோக்கி வேகமாக வந்தது.

அதைத் தவிர்ப்பதற்காக ஹாரி வேகமாகக் கீழிறங்கினான். ஜார்ஜ் அதை மால்ஃபாயை நோக்கி அடித்தான். மீண்டும் அந்த பிளட்ஜர் ஒரு பூமராங்போல ஹாரியின் தலையைக் குறி வைத்து வந்தது.

ஹாரி தன் வேகத்தைச் சடாரென்று அதிகரித்து மைதானத்தின் மறுமுனைக்குப் பறந்தான். அந்த பிளட்ஜர் தனக்குப் பின்னால் ‘உஷ்’ என்ற சத்தத்துடன் வேகமாக வந்து கொண்டிருந்ததை அவனால் கேட்க முடிந்தது. இங்கே என்ன நடந்து கொண்டிருந்தது? பிளட்ஜர்கள் பொதுவாக ஒரே ஓர் ஆட்டக்காரரை மட்டும் சுற்றி வருவதில்லை. தம்மால் எவ்வளவு பேரை மந்திரத் துடப்பங்களில் இருந்து கீழே தள்ள முடியுமோ அவ்வளவு பேரைக் கீழே தள்ள முயல்வதுதான் பிளட்ஜர்களின் வேலை.

அடுத்த முனையில் ஃபிரெட் பிளட்ஜருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த பிளட்ஜரை பலமாக அடித்தான். அது திசை மாறிப் பறந்தது.

“அது ஓடிப் போய்விட்டது,” என்று ஃபிரெட் சந்தோஷமாக முழங்கினான். ஆனால் அவனது மகிழ்ச்சி ஒரு வினாடிகூட அந்த பிளட்ஜர் காந்த நீடிக்கவில்லை. சக்தியால் கவரப்பட்டதைப்போல ஹாரியை நோக்கி மறுபடியும் படுவேகமாக வந்தது. ஹாரி முழுவேகத்தில் அந்த இடத்திலிருந்து பறக்க வேண்டியதாகிவிட்டது.

அப்போது மழை பெய்யத் துவங்கியது. கனமான மழைத்துளிகள் தன் முகத்தில் விழுந்து தனது மூக்குக்கண்ணாடியின்மேல் பட்டு வேகமாகத் தெறித்ததை ஹாரி கண்டான். அன்றைய போட்டியின் வர்ணனையாளனான லீ ஜோர்டன், “ஸ்லிதரின் அணி அறுபது புள்ளிகளை எடுத்து முன்னணியில் இருக்கிறது. கிரிஃபின்டார் அணி புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை,” என்று போட்டியைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்ததைக் கேட்கும்வரை, போட்டியில் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பது பற்றி ஹாரிக்குத் துளிகூட யோசனை இருக்கவில்லை.

ஒருபுறம் ஸ்லிதரின் அணியினரின் மிகச் சிறப்பான மந்திரத் துடப்பங்கள் தங்கள் பங்கை ஆற்றிக் கொண்டிருக்க, கிறுக்குப் கட்டிக் கொண்டிருந்தது. இப்போது ஃபிரெட்டும் ஜார்ஜும் அவனுக்கு பிடித்திருந்த அந்த பிளட்ஜர் ஹாரியைக் கீழே தள்ளக் கங்கணம் கொண்டிருந்த அவர்களுடைய கைகளைத் தவிர வேறு எதையும் இருபுறங்களிலும் வந்து கொண்டிருந்ததால், அங்குமிங்கும் ஆடிக் அவனால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் ஸ்னிச் எங்கிருந்தது என்பதைப் பார்ப்பதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. பார்த்தால்தானே அதைப் பிடிப்பது பற்றிய கேள்வியே?

ஹாரியைத் தாக்குவதற்கு ஒரு புதிய உத்தியைக் கையாண்ட அந்த பிளட்ஜரை, ஃபிரெட், தன் பலம் கொண்ட மட்டும் அடித்துத் துரத்திவிட்டு, “யாரோ இந்தப் பிளட்ஜரில் ஏதோ தில்லுமுல்லு செய்து வைத்திருக்கின்றனர்,” என்று முனகினான்.

“நமக்கு ஓர் இடைவேளை தேவை,” என்று கூறிவிட்டு, ஜார்ஜ் அதை உட்டிடம் தெரிவிக்க முயன்றான். அதே சமயம், ஹாரியின் மூக்கை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த பிளட்ஜரையும் அவன் தடுத்து நிறுத்தினான்.

உட், ஜார்ஜின் சமிக்கையைப் புரிந்து கொண்டதுபோலத் தெரிந்தது. மேடம் ஹூச் தன் விசிலை எடுத்து ஊதினார். இன்னும் துரத்திக் கொண்டிருந்த சனியன் பிடித்த அந்த பிளட்ஜரிடம் இருந்து தப்பிக்க, ஹாரி, ஃபிரெட், ஜார்ஜ் ஆகிய மூவரும் மிக வேகமாகக் கீழே பாய்ந்தனர்.

கிரிஃபின்டார் அணியினர் அனைவரும் ஒன்றாகக் குழுமியதும், “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று உட் கேட்டான். அப்போது கூட்டத்தில் இருந்த ஸ்லிதரின் அணியினர் கரகோஷம் எழுப்பிக் கொண்டிருந்த சத்தம் அவர்களுக்குப் பின்னால் கேட்டது. ஸ்லிதரின் அணியினர் நம்மைத் துவைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஏய், ஃபிரெட்! ஜார்ஜ்! ஏஞ்சலினா கோல் போட முயன்றதை அந்த பிளட்ஜர் தடுத்து நிறுத்தியபோது நீங்கள் இருவரும் எங்கே இருந்தீர்கள்?”

“உட், நாங்கள் அவளுக்கு மேலே இருபதடி உயரத்தில் இருந்தோம். ஹாரியைக் கொல்ல முயன்று கொண்டிருந்த இன்னொரு பிளட்ஜரை நாங்கள் தடுத்துக் கொண்டிருந்தோம்,” என்று ஜார்ஜ் ஆவேசமாகக் கூறினான். “அந்த பிளட்ஜரை யாரோ என்னவோ செய்திருக்கிறார்கள். இவ்வளவு நேரமும் அது ஹாரியைவிட்டு விலகாமல் பிடிவாதமாக அவனையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. வேறு யாருடைய பக்கமும் அது போகவே இல்லை. ஸ்லிதரின் அணியினர் நிச்சயமாக அதில் ஏதோ குளறுபடி செய்திருக்க வேண்டும்.”

மேடம் ஹுச் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய தோளுக்குப் பின்னால் ஸ்லிதரின் அணியினர் தன்னைச் சுட்டிக்காட்டிப் பரிகாசம் செய்து கொண்டிருந்ததை ஹாரி கண்டான்.

மேடம் ஹூச் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்த ஹாரி ஃபிரெட்டையும் ஜார்ஜையும் பார்த்து, “நீங்கள் எப்போதும் என்னைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தால், ஸ்னிச் தானாகவே என் சட்டைப் பைக்குள் வந்து விழுந்தால்தான் உண்டு. நீங்கள் இரண்டு பேரும் நமது அணியின் பிற ஆட்டக்காரர்களோடு போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். அந்தப் பைத்தியக்கார பிளட்ஜரை நான் ஒற்றைக்கு ஒற்றைப் பார்த்துவிடுகிறேன்,” என்று கூறினான்.

“முட்டாள்தனமாகப் பேசாதே!” என்று ஃபிரெட் கூறினான். “அது உன் தலையைச் சீவிவிடும்.”

உட் ஹாரியையும் வீஸ்லீ சகோதரர்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உட், இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது,” என்று அலிசியா ஸ்பின்னெட் கோபமாகக் கூறினாள். ஹாரி அந்தச் சனியனைத் தனியாகச் சமாளிக்க நீ அனுமதிக்கக்கூடாது. உடனே ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வை.”

“இப்போது நாம் விளையாட்டை நிறுத்தினால், நாம் இப்போட்டியை இழக்க நேரிடும்,” என்று ஹாரி கூறினான். “ஒரு பைத்தியக்கார பிளட்ஜருக்குப் பயந்து நாம் ஸ்லிதரினிடம் தோற்றுப் போகக்கூடாது. உட், என்னைத் தனியாக விட்டுவிடுமாறு அவர்களிடம் சொல்!”

ஜார்ஜ் உட்டிடம் கோபமாக், “உட், இதற்கெல்லாம் நீதான் காரணம்,” என்று கூறினான். “உடை மாற்றும் அறையில் வைத்து ஹாரியிடம் நீ என்ன சொன்னாய்? ‘மால்ஃபாய்க்கு முன்பாக எப்படியாவது ஸ்னிச்சை நீ கைப்பற்றிவிடு. ஹாரி, அந்த முயற்சியில் இவ்வளவு சின்ன வயதில் உன் ஆயுள் முடிந்தாலும் பரவாயில்லை!? – என்னவோர் அபசகுனமான பேச்சு அது!”

மேடம் ஹூச் அவர்களை வந்தடைந்திருந்தார்.

அவர் உட்டிடம், “என்ன, விளையாட்டைத் துவக்கலாமா?” என்று கேட்டார்.

உட், ஹாரியின் முகத்தில் இருந்த உறுதியைப் பார்த்தான்.

பிறகு, “சரி,” என்று கூறினான். “ஃபிரெட்! ஜார்ஜ்! நீங்கள் இருவரும் ஹாரி கூறியதைக் கேட்டீர்கள், இல்லையா? அந்த பிளட்ஜரை அவன் தனியாகச் சமாளித்துக் கொள்ளட்டும். அவனைத் தனியாக விட்டுவிடுங்கள்!”

இப்போது மழையின் தீவிரம் அதிகரித்திருந்தது. மேடம் ஹூச்சின் விசில் சத்தம் கேட்ட உடனேயே, ஹாரி, தரையில் வேகமாக உதைத்து விர்ரென்று மேலே கிளம்பினான். கூடவே, அவனைத் துரத்தி வந்து கொண்டிருந்த பிளட்ஜரின் ‘விஷ்’ என்ற சத்தமும் அவனைத் தொடர்ந்தது. ஹாரி மேலும் உயரே உயரே பறந்து சென்றான். அவன் சுழன்றான், குட்டிக்கரணம் போட்டான், குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தான். அவனுக்குக் கொஞ்சம் தலை சுற்றியது. ஆனாலும் தன் கண்களை அகலத் திறந்தே வைத்திருந்தாள். அந்த பிளட்ஜர் அவனை முரட்டுத்தனமாகத் தாக்க வந்தபோது, அதைத் தவிர்ப்பதற்காக அவன் ஒரு பல்டி அடித்துத் தலைகீழாகப் பறந்து கொண்டிருந்தபோது, மழைநீர் அவனது மூக்குக்கண்ணாடியில் பட்டுத் தெறித்து அவனது மூக்கிற்குள் சென்றது. கீழே கூட்டத்தினர் சிரித்தது அவனுக்குக் கேட்டது. கீழே இருந்தவர்களுக்குத் தனது நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமானவையாகத் தெரிந்திருக்கும் என்பதை அவன் அறிந்துதான் இருந்தான். ஆனால் அந்த பிளட்ஜர் வெகு கனமாக இருந்ததால், அவனைப்போல அதனால் சடார் சடாரென்று திரும்ப முடியவில்லை. மைதானத்தின் ஓரமாக அவன் மேலும் கீழும் பறந்தபடி, கண்களை இடுக்கிக் கொண்டு வெள்ளி மழைத்துளிகளின் ஊடாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கோல்போஸ்டிற்கு அருகே அட்ரியன் பியூசி, உட்டைக் கடந்து போக முயற்சி செய்து கொண்டிருந்தான்.

தன் காதருகே கேட்ட ‘விஷ்’ என்ற சத்தம், மீண்டும் அந்த பிளட்ஜர் தன்னைத் தாக்குவதை மயிரிழையில் தவறவிட்டிருந்தது என்பதை ஹாரிக்கு அறிவித்தது. அவன் வலது பக்கமாகத் திரும்பி நேரெதிர்த் திசையில் பறந்தான்.

அந்த பிளட்ஜரைத் தவிர்ப்பதற்காக, நடுவானில், முட்டாள்தனமாகத் தோன்றிய குட்டிக்கரணம் ஒன்றை அவன் போட நேர்ந்தபோது, “என்ன ஹாரி, பாலே நடனத்திற்குப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று மால்ஃபாய் அவனை நக்கலாகக் கேட்டான். ஹாரி மீண்டும் வேறு திசையில் பறந்தான். அந்த பிளட்ஜரும் ஒருசில அடிகள் இடைவெளியில் அவனை விடாமல் துரத்தியது. பின் அவன் வெறுப்புடன் மால்ஃபாயைத் திரும்பிப் பார்த்தபோது, அது அவனது கண்களில் பட்டது. தங்க ஸ்னிச். அது மால்ஃபாயின் இடது காதுக்கு மேலே ஒருசில அங்குல உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. ஹாரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த மால்ஃபாய் அதைக் கவனித்திருக்கவில்லை.

தான் மால்ஃபாயை நோக்கிப் பாய்ந்தால் அவன் ஒருவேளை ஸ்னிச்சைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து போய், ஹாரி, சிறிது நேரம் வேதனையை அனுபவித்துக் கொண்டு நடுவானில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தான்.

டமால்!

அவன் ஒரு நொடி அதிகமாகத் தாமதித்திருந்ததால், கடைசியில் அந்த பிளட்ஜர் அவனைப் பதம் பார்த்துவிட்டிருந்தது. அந்த பிளட்ஜர் அவனது முழங்கையை பயங்கரமாகத் தாக்கியதில், தன் கை உடைந்துவிட்டிருந்ததை ஹாரி உணர்ந்தான். தனது கையில் ஏற்பட்டிருந்த தாள முடியாத வேதனையால் கொஞ்சம் நினைவிழந்த ஹாரி, மழையில் தொப்பலாக நனைந்திருந்த தனது மந்திரத் துடப்பத்திலிருந்து பக்கவாட்டில் வழுக்கிக் கொண்டிருந்தான், அவனது ஒரு கால் மூட்டு மந்திரத் துடப்பத்தைப் பற்றிக் கொண்டிருந்தது. செயலற்றுப் போயிருந்த அவனது வலது கை வெறுமனே பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. பிளட்ஜர் இரண்டாவது தாக்குதலுக்காக அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இம்முறை அது அவனது முகத்தைக் குறி வைத்து வந்தது. ஹாரி அதன் பாதையிலிருந்து சடாரென்று விலகினான். மறத்துப் போயிருந்த அவனது மூளையை ஒரே ஓர் எண்ணம்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது: மால்ஃபாயை நெருங்க வேண்டும் என்பதுதான் அது!

மழை மற்றும் வலியின் ஊடாக, ஹாரி, தனக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த, ஏளனம் பொங்கி வழிந்து கொண்டிருந்த மால்ஃபாயின் முகத்தை நோக்கிப் பாய்ந்தான். மால்ஃபாயின் கண்கள், ஹாரி தன்னைத் தாக்க வந்து கொண்டிருந்தான் என்ற பயத்தில் அகல விரிந்தன.

“இவன் தன் மனத்தில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்?” என்ற எண்ணத்துடன், மால்ஃபாய், மூச்சு வாங்கியபடி ஹாரியின் பாதையிலிருந்து வேகமாக விலகினான்.

ஹாரி நன்றாக இயங்கிக் கொண்டிருந்த தன்னுடைய அடுத்தக் கையை நீட்டி அதை எட்டிப் பிடித்தான். குளிராக இருந்த ஸ்னிச்சைத் தன் கைவிரல்கள் பற்றிக் கொண்டதை அவன் உணர்ந்தான். இப்போது அவன் தன்னுடைய மந்திரத் துடப்பத்தைத் தன் கால்களால் மட்டுமே பற்றியிருந்தான். அவன் படுவேகமாக நிலத்தை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தபோது கூட்டத்தினரிடம் இருந்து பெரும் சத்தம் எழுந்தது. ஹாரி தன் நினைவை இழக்காமல் இருப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்.

ஏதோ உடைந்து விழுந்தது போன்ற சத்தத்துடன், ஹாரி, சேறும் சகதியுமாக இருந்த தரையில் மோதித் தன்னுடைய மந்திரத் துடப்பத்திலிருந்து உருண்டான். அவனுடைய ஒரு கை வினோதமான கோணத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த வலியின் ஊடாக, எங்கோ தூரத்தில் கேட்பதுபோல, கூட்டத்தினரின் ஆரவாரக் கூச்சல்களும் விசில் சத்தங்களும் அவனுக்குக் கேட்டன. தன்னுடைய ஒழுங்கான கையில் இருந்த ஸ்னிச்சிலேயே அவனது முழுக் கவனமும் இருந்தது.

“ஆஹா! நாம் வென்றுவிட்டோம்!” என்று ஹாரி கூறினான்.

பின் அவன் மயங்கினான் .

அவன் கண்விழித்தபோது மழை அவனது முகத்தில் பெய்து கொண்டிருந்தது. அவன் இன்னும் மைதானத்தின் தரையில்தான் படுத்துக் கிடந்தான். யாரோ தனது முகத்திற்கு அருகே குனிந்திருந்ததை அவன் கண்டான். பளீரென்று இருந்த பற்களை அவன் பார்க்கான்.

“ஐயோ! நீங்களா?” என்று ஹாரி முனகினான்.

“அவன் என்ன பேசுகிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை; என்று லாக்ஹார்ட் தங்களைச் சுற்றிக் கூடியிருந்த கிரிஃபின்டார் கூட்டத்தினரைப் பார்த்துச் சத்தமாகக் கூறினார். ‘ஹாரி, கவலைப்படாதே! உன் கையை நான் சரி செய்துவிடுகிறேன்.”

“வேண்டாம்!” என்று ஹாரி அலறினான். “நன்றி! ஆனால் என் கை இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்”

அவன் எழுந்து உட்கார முயன்றான். ஆனால் வலி உயிர்போனது. தனக்கு அருகே தனக்கு மிகவும் பரிச்சயமான ‘கிளிக்’ ஒலி ஹாரிக்குக் கேட்டது.

“காலின்! இதுபோல ஒரு புகைப்படம் தேவையில்லை,” என்று அவன் சத்தமாகக் கூறினான்.

“பின்னால் படு,” என்று லாக்ஹார்ட் இதமாகக் கூறினார். “இது ஓர் எளிமையான மந்திரம். இதை நான் எண்ணற்ற முறை உபயோகித்திருக்கிறேன்.”

ஹாரி தன் பற்களைக் கடித்துக் கொண்டே, “என்னை ஏன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை?” என்று கேட்டான்.

“பேராசிரியரே, அவன் மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று உட் கூறினான். தனது அணியின் தேடுபவன் காயப்பட்டுக் கீழே விழுந்து கிடந்த நிலையிலும், உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்த உட்டால் தன்னுடைய சந்தோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவன் வாயெல்லாம் பல்லாக இருந்தான். “ஹாரி! அசத்திவிட்டாய்! அற்புதமான விளையாட்டு. நீ இதுவரை விளையாடியதிலேயே மிகப் பிரமாதமான விளையாட்டு இதுதான் என்று நான் சொல்வேன்!”

தன்னருகே தெரிந்த ஏகப்பட்டக் கால்களுக்கு ஊடாக, ஃபிரெட்டும் ஜார்ஜும் அந்தப் போக்கிரித்தனமான பிளட்ஜரைப் பெட்டியில் போட்டு அடைக்கப் போராடிக் கொண்டிருந்ததை ஹாரி பார்த்தான். அது இன்னும் திமிறிக் கொண்டிருந்தது.

லாக்ஹார்ட் தன்னுடைய பச்சை நிறச் சட்டையின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு, கூட்டத்தினரைப் பார்த்து, “கொஞ்சம் பின்னால் விலகுங்கள்!” என்று கட்டளையிட்டார்.

“வேண்டாம், விலகாதீர்கள்!” என்று ஹாரி பலவீனமான குரலில் முனகினான். ஆனால் அதற்குள் லாக்ஹார்ட் தன்னுடைய மந்திரக்கோலை வெளியே எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றி, அதை ஹாரியின் கைக்கு நேராக நீட்டினார்.

ஒரு வினோதமான, அசௌகரியமான உணர்ச்சி ஹாரியின் தோள்பட்டையில் துவங்கி, அவனது விரல்களின் நுனிவரை வந்தது. தனது கை தட்டையாக்கப்பட்டு இருந்ததுபோல அவன் உணர்ந்தான். என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பார்க்க அவனுக்குத் துணிவு இருக்கவில்லை. அவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு, அடிபட்டிருந்த கைக்கு மறுபுறமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஆனால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆவென்று தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டபோது, அவனது அடிமனத்தில் உறைந்திருந்த பயம் நிஜமானது. காலின் கண்மூடித்தனமாகப் புகைப்படம் மேல் புகைப்படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான். ஹாரியின் கை இப்போது வலிக்கவில்லை. ஆனால் அது ஒரு கை என்ற உணர்வே சுத்தமாக அவனுக்கு இருக்கவில்லை.

“ஓ!” என்று லாக்ஹார்ட் கத்தினார். “சில சமயங்களில் இப்படி ஆவதுண்டு, ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், எலும்புகள் இப்போது உடைந்த நிலையில் இல்லை. அதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஹாரி, இப்போது எப்படியாவது தட்டுத் தடுமாறி மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்துவிடு – ஆ. ரான், நீ இங்கேதான் இருக்கிறாயா? நீயும் ஹெர்மயனியும் அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறீர்களா? – மருத்துவமனையில் மேடம் பாம்ஃபிரே உன்னை -என்ன சொல்ல வந்தேன் என்றால் – அப்படி இப்படித் தட்டிச் சரி செய்துவிடுவார்.”

ஹாரி ஒருவழியாக எழுந்து நின்றதும், வினோதமாக, தான் தலைகீழாக இருந்ததுபோல உணர்ந்தான். ஒரு முறை ஆழமாக சுவாசித்துவிட்டு அவன் தனது வலப்பக்கத்தைப் பார்த்தான். அவன் அங்கு கண்ட காட்சி அவனை மீண்டும் கிட்டத்தட்ட மூர்ச்சையாக்கிவிட்டிருந்தது.

அவனது அங்கியின் முனையில் ஒரு பெரிய, தடிமனான, சதை நிறத்தில் இருந்த ரப்பர் கையுறை ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. அவன் தன் விரல்களை அசைக்க முயன்றான். ஆனால் ஒன்றும் நிகழவில்லை.

லாக்ஹார்ட், உடைந்து போயிருந்த ஹாரியின் எலும்புகளை ஒட்டியிருக்கவில்லை. மாறாக, அவர் அவற்றை அகற்றிவிட்டிருந்தார்.

மேடம் பாம்ஃபிரேக்கு கோபம் தலைக்கேறியிருந்தது.

அரை மணிநேரத்திற்கு முன்புவரை ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த ஒரு கையின் அவலமான மிச்சசொச்சத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே, அவர், “ஹாரி, நீ நேராக என்னிடம்தான் வந்திருக்க வேண்டும்,” என்று கர்ஜித்தார். “உடைந்த எலும்புகளை என்னால் ஒரு நொடியில் ஒட்டிவிட முடியும். ஆனால் அவற்றை மறுபடியும் வளர்க்க வேண்டும் என்றால்! –

“உங்களால் முடியும், இல்லையா?” என்று ஹாரி பரிதவிப்போடு கேட்டான்.

“கண்டிப்பாக என்னால் முடியும். ஆனால் அது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும்,” என்று அவர் மனச்சோர்வுடன் தெரிவித்தார். அவர் ஹாரியிடம் ஒரு பைஜாமாவைத் தூக்கி எறிந்து, “இன்று இரவு நீ இங்கு தங்க வேண்டியிருக்கும்,” என்று கூறினார்.

ஹெர்மயனி ஹாரியின் படுக்கையைச் சுற்றி இழுத்துவிடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு வெளியே சென்றவுடன், ரப்பர்போல இருந்த, அவனது எலும்பற்றக் கையை அந்தச் ஹாரி பைஜாமாவுக்கு மாறிக் கொள்ள ரான் உதவினான். சட்டையின் ஒரு கைக்குள் நுழைக்கச் சிறிது நேரம் பிடித்தது.

பிறகு, தொளதொளவென்று ஆடிக் கொண்டிருந்த ஹாரியின் கைவிரல்களை அதற்குள் திணித்தபடி, திரைச்சீலைக்கு வெளியே இருந்த ஹெர்மயனியிடம், ரான், “ஆமாம், இப்போது நீ எப்படி லாக்ஹார்ட்டிற்கு வக்காலத்து வாங்கப் போகிறாய்?” என்று கேட்டான். “ஹாரி தனது எலும்புகளைத் தனது கையிலிருந்து அகற்ற விரும்பியிருந்தால் அவனே அவரைக் கேட்டிருந்திருப்பான்!”

“யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம்,” என்று ஹெர்மயனி கூறினாள். “ஹாரி, இப்போது உன்னுடைய கை வலி சுத்தமாகக் காணாமல் போய்விட்டதா இல்லையா?”

“அது வலிக்கவில்லை என்பது உண்மைதான்,” என்று ஹாரி கூறினான். “ஆனால் அதே சமயம், அதனால் வேறு எந்தப் பிரயோஜனமும் இல்லை.”

ஹாரி தனது படுக்கையில் தாவி ஏறியபோது அவனது கை கன்னாபின்னாவென்று அசைந்தாடியது.

ஹெர்மயனியும் மேடம் பாம்ஃபிரேயும் திரைச்சீலையை விலக்கிவிட்டு உள்ளே வந்தனர். மேடம் பாம்ஃபிரேயின் கையில் ஒரு பெரிய பாட்டில் இருந்தது. அதில் ‘எலும்பு-விளைவிப்பி’ என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

“இன்று இரவு உனக்கு ஒரு படுபயங்கரமான இரவாக இருக்கப் போகிறது,” என்று கூறிக் கொண்டே, மேடம் பாம்ஃபிரே, பாட்டிலில் இருந்த, ஆவி பறந்து கொண்டிருந்த மாயத் திரவத்தை ஹாரியிடம் நீட்டினார். “எலும்பை மீண்டும் வளரச் செய்யும் சிகிச்சை மிகவும் கொடூரமானது.”

‘எலும்பு-விளைவிப்பி’யைக் குடிப்பது அதைவிட மோசமாக இருந்தது. அதை அவன் குடித்தபோது அது அவனது வாயையும் தாண்டையையும் எரித்தது. அவன் கடுமையாக இருமத் துவங்கினான். ஆபத்தான விளையாட்டுக்களைப் பற்றியும் திறமையற்ற ஆசிரியர்களைப் பற்றியும் பொரிந்து தள்ளியவாறே மேடம் பாம்ஃபிரே வெளியே சென்றார். ரானும் ஹெரிமயனியும் ஹாரி கொஞ்சம் தண்ணீர் குடிக்க உதவினர்.

“எது எப்படியோ, நாம் வெற்றி பெற்றுவிட்டோம்!” என்று ரான் கூறினான். அவனது வாயெல்லாம் பல்லாக இருந்தது. “ஹாரி, நீ எப்படித்தான் ஸ்னிச்சை அப்படிப் பிடித்தாயோ! அபாரம் ஹாரி, அபாரம்! அப்போது மால்ஃபாயின் முகம் போன போக்கை நீ பார்த்திருக்க வேண்டும். அவனது முகத்தில் கொலைவெறி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.”

ஹெர்மயனி தீவிரமான முகத்துடன், “அவன் அந்த பிளட்ஜரை எப்படி அதுபோல இயங்கச் செய்தான் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்,” என்றாள்.

தன்னுடைய தலையணையில் நன்றாகச் சாய்ந்து கொண்ட ஹாரி, “நாம் ‘பலகூட்டுச்சாறு மாயத் திரவத்’தைக் குடித்துவிட்டு அவனிடம் கேட்கப் போகும் கேள்விகளில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்,” என்றான். “அது இதைவிட ருசியாக இருந்தால் நன்றாக இருக்கும் . . .”

“அதில் ஸ்லிதரின் மாணவர்களின் உடற்துகள்கள் கலக்கப்பட்டிருக்கும்போதா? ஹா, ஹா! ஹாரி, உன்னுடைய நகைச்சுவையுணர்வை நான் பாராட்டுகிறேன்,” என்று ரான் கூறினான்.

அக்கணத்தில் மருத்துவமனையின் அந்தப் பிரிவு இருந்த அறையின் கதவு படாரென்று திறந்தது, நனைந்து போயும் காணப்பட்ட கிரிஃபின்டார் அணியின் மீதி அழுக்காகவும் உறுப்பினர்கள் உள்ளே படையெடுத்தனர்.

“நீ பறந்த விதத்தை என்னால் நம்பவே முடியவில்லை,” என்று ஜார்ஜ் கூறினான். “மார்க்கஸ் மால்ஃபாயைக் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஸ்னிச் மால்ஃபாயின் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதும் அதை அவன் கவனிக்கவில்லை என்று மார்க்கஸ் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். மால்ஃபாய் அதை அறவே விரும்பவில்லை.”

கேக்குகள், இனிப்புகள், பாட்டில் பாட்டிலாகப் பூசணிக்காய்ச் சாறு ஆகியவற்றை அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்தனர். ஹாரியின் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு, ஒரு பிரமாதமான கொண்டாட்டமாக மாறியிருந்திருக்கக்கூடிய ஒன்றை அவர்கள் துவக்கவும் மேடம் பாம்ஃபிரே புயலென உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவர் பெருங்குரலில், “இந்தப் பையனுக்கு ஓய்வு தேவை! அவன் முப்பத்து மூன்று எலும்புகளை மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டும்! எல்லோரும் வெளியே போய்விடுங்கள்! உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்!” என்று காட்டுக் கத்தல் கத்தினார்.

ஹாரி தனித்து விடப்பட்டான். தொளதொளவெனத் தொங்கிக் கிடந்த அவனது கையில் அதிகரித்துக் கொண்டிருந்த படுபயங்கர வலியிலிருந்து அவனது கவனத்தைத் திருப்ப அங்கு எதுவும் இருக்கவில்லை.

பல மணிநேரம் கழித்து ஹாரி திடுக்கிட்டுக் கண்விழித்தான். அவனைச் சுற்றிக் கும்மிருட்டாக இருந்தது. அவன் வலியில் முனகினான். தனது கையில் இப்போது ஏகப்பட்டக் கூரான மரத் துண்டுகள் குத்தப்பட்டிருந்தது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. ஒரு கணம், அந்த வலிதான் தன்னை எழுப்பியிருந்திருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் அந்த இருட்டில் யாரோ தனது நெற்றிக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்ததை அவன் பயங்கரத் திகிலுடன் உணர்ந்தான்.

“இங்கிருந்து ஓடிப் போ!” என்று ஹாரி உரத்தக் குரலில் கூறினான். பின்னர், “டாபி!” என்று கத்தினான்.

வீட்டு எல்ஃபான டாபியின் புறா முட்டைக் கண்கள் அந்த இருட்டிலும் ஹாரியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. நீளமாகவும் கூர்மையாகவும் இருந்த அதனுடைய மூக்கையொட்டி ஒரே ஒரு துளிக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

“ஹாரி பாட்டர் மறுபடியும் பள்ளிக்கு வந்துவிட்டார்,” என்று டாபி பரிதாபமாக முணுமுணுத்தது. “இங்கு வர வேண்டாம் என்று டாபி படித்துப் படித்துச் சொன்னதே! சார், நீங்கள் ஏன் டாபியின் கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை? ரயிலைத் தவறவிட்டப் பிறகு ஹாரி பாட்டர் ஏன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.?”

ஹாரி தன் தலையணைகளின்மீது சாய்ந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, டாபியின் கைகளில் இருந்த ஸ்பான்ஞ்சைத் தட்டிவிட்டான்.

“நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று ஹாரி கேட்டான். “ஆமாம், நான் ரயிலைத் தவறவிட்டது உனக்கு எப்படித் தெரியும்?”

டாபியின் உதடுகள் நடுங்கின. திடீரென்று ஹாரியை ஒரு பலத்த சந்தேகம் உலுக்கியது.

“இப்போதுதான் புரிகிறது! அதற்கு நீதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்!” என்று அவன் மெதுவாகக் கூறினான். “அந்தத் தடுப்புச் சுவரில் எங்களை நுழையவிடாமல் தடுத்தது நீதானா?”

டாபி தன் காதுகள் பறக்க, பலமாகத் தலையாட்டியபடி, “ஆமாம் சார், அது உண்மைதான்!” என்று கூறியது. “டாபி மறைந்திருந்து ஹாரியைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. பின் அந்தத் தடுப்புச் சுவரை மூடியது. பின்னர் அதற்காகத் தன் கையில் சூடு வைத்துக் கொண்டது.” கட்டுப் போடப்பட்டிருந்த தனது நீண்ட பத்து விரல்களை அது ஹாரியிடம் நீட்டிக் காட்டியது. “ஆனால் டாபி இதைச் சட்டை செய்யவில்லை சார் – ஏன் தெரியுமா? ஹாரி பாட்டர் பத்திரமாக இருக்கிறார் என்று அது நினைத்தது. ஆனால் ஹாரி பாட்டர் வேறு ஒரு வழியில் பள்ளிக்குப் போய்ச் சேர்ந்துவிடுவார் என்று டாபி கனவில்கூட நினைக்கவில்லை!”

அது தனது அவலட்சணமான தலையை ஆட்டியவாறு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது.

“ஹாரி பாட்டர் மீண்டும் பள்ளிக்கு வந்துவிட்டார் என்பது தெரிய வந்ததும் டாபி மிகவும் அதிர்ச்சி அடைந்ததில், அது தன்னுடைய எஜமானின் இரவு உணவைத் தீய்த்துவிட்டது. அதற்காக டாபிக்குக் கிடைத்தச் சவுக்கடி இருக்கிறதே”.

ஹாரி தன் தலையணைகளின்மீது நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான்.

“நீ பண்ணிய காரியத்தால் ரானும் நானும் பள்ளியைவிட்டே தூரத்தப்பட்டிருப்போம்,” என்று ஹாரி கோபமாகக் கூறினான். “என் எலும்புகள் வளர்வதற்குள் நீ இந்த இடத்தைக் காலி செய்துவிடு. இல்லையெனில் நான் உன் கழுத்தை நெறித்துவிடுவேன்.”

டாபி பலவீனமாகப் புன்னகைத்தது.

“சார், மரண எச்சரிக்கைகள் டாபிக்குப் புதிதில்லை. வீட்டில் டாபி அதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்கிறது.”

அது தான் அணிந்திருந்த அழுக்கான தலையணை உறை போன்ற உடையில் தன் மூக்கைச் சிந்தியது. அது இருந்த பரிதாபமான கோலத்தைப் பார்த்ததும் ஹாரியின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது.

“ஆமாம் டாபி, நீ ஏன் இந்த மாதிரி ஆடையை அணிந்திருக்கிறாய்?” என்று ஹாரி ஆர்வத்துடன் கேட்டான்.

டாபி தன்னுடைய தலையணை உறை ஆடையைச் சுட்டிக்காட்டி, “சார், இதையா கேட்கிறீர்கள்? சார், இது வீட்டு எல்ஃப்புகளின் அடிமைத்தளைக்கான அடையாளம். டாபிக்குத் தன்னுடைய எஜமானர்கள் தாங்களாகவே ஆடைகளை எடுத்துக் கொடுத்தால்தான் அதனால் விடுதலை அடைய முடியும். எனவே, டாபிக்கு ஒரு காலுறைகூட வாங்கிக் கொடுக்காமல் அதன் குடும்பத்தார் மிகவும் கவனமாக இருந்து வருகின்றனர். அப்படி அவர்கள் வாங்கிக் கொடுத்துவிட்டால் டாபி அவர்களுடைய வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேற அதற்குச் சுதந்திரம் கிடைத்துவிடும்,” என்று கூறியது.

வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த தனது கண்களைத் துடைத்தவாறு, டாபி திடீரென்று, “ஹாரி பாட்டர் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்! ஹாரி பாட்டர் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லத் தன்னுடைய பிளட்ஜர் போதும் என்று டாபி நினைத்திருந்தது –”

“என்ன சொன்னாய், உன்னுடைய பிளட்ஜரா?” ஹாரிக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. “உன் பிளட்ஜர் என்றால் என்ன அர்த்தம்? என்னைக் கொல்வதற்காக நீதான் அந்த பிளட்ஜரைத் தயாரித்திருந்தாயா?”

“சார், உங்களைக் கொல்வதற்காக நான் அப்படிச் செய்யவில்லை! டாபி ஒருபோதும் உங்களைக் கொல்ல முயற்சிக்காது,” என்று டாபி அதிர்ச்சியுடன் கூறியது. “டாபி ஹாரி பாட்டரின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறது! இங்கிருப்பதைவிட, படுகாயமடைந்த நிலையில் ஹாரி பாட்டரை வீட்டிற்கு அனுப்புவது சிறந்தது என்று டாபி நினைத்தது! ஹாரி பாட்டர் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அளவுக்குக் காயப்பட வேண்டும் என்றுதான் டாபி விரும்பியது!”

“ஓ! இவ்வளவுதானா. இல்லை இன்னும் ஏதாவது பாக்கி நான் என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று நீ இருக்கிறதா?” என்று ஹாரி கோபமாகக் கேட்டான். “படுகாயத்துடன் விரும்பியதற்கான காரணத்தை நீ என்னிடம் கூற மாட்டாய், அப்படித்தானே?”

“ஹாரி பாட்டருக்கு மட்டும் தெரிந்திருந்தால்,” என்று டாபி தேம்பியது. அதனுடைய கரடுமுரடான தலையணை உறை ஆடையில் மேலும் கண்ணீர்த் துளிகள் தெறித்தன. “கீழ்நிலையில் உள்ள. அடிமைத்தளை பூட்டப்பட்டுள்ள, மந்திரஜால உலகின் கசடுகளாகக் கருதப்படுகின்ற எங்களைப் போன்றவர்களுக்கு ஹாரி பாட்டர் என்றால் யார் என்பதை மட்டும் அவர் அறிந்திருந்தால்! சார், பெயர் சொல்லப்படக்கூடாதவன் தன் அதிகாரத்தின் உச்சகட்டத்தில் இருந்தபோது நிலைமை எப்படி இருந்தது என்பது டாபிக்கு நன்றாக நினைவிருக்கிறது! சார், வீட்டு எல்ஃப்புகளாகிய நாங்கள் ஒட்டுண்ணிகள்போல நடத்தப்பட்டோம்! இன்றும் டாபியின் நிலைமை அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது வாஸ்தவம்தான்!” என்று டாபி ஒப்புக் கொண்டுவிட்டு, தன் முகத்தைத் தன் தலையணை உறை ஆடையில் துடைத்தது. “ஆனால், பெயர் சொல்லப்படக் கூடாதவனை நீங்கள் வெற்றி கொண்டதற்குப் பிறகு, எங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்பட்டுள்ளது. ஹாரி பாட்டர் பிழைத்துக் கொண்டார், ஆனால் பெயர் சொல்லப்படக்கூடாதவனின் சக்தி மறைந்துவிட்டிருந்தது. சார், அது ஒரு புதிய உதயம்! தீய சகாப்தம் ஒருபோதும் முடிவுக்கு வராது என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்கு ஹாரி பாட்டர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார்! ஆனால் இப்போது ஹாக்வார்ட்ஸில் படுபயங்கரமான சம்பவங்கள் நிகழப் போகின்றன – அல்லது அவை ஏற்கனவே நிகழத் துவங்கி இருக்கலாம். கடந்தகாலத்தில் ஏற்கனவே நடந்துள்ள கொடூரமான சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை இங்கு அரங்கேற இருப்பதால் ஹாரி பாட்டர் இங்கே தொடர்ந்து தங்கியிருக்க டாபி அனுமதிக்காது. குறிப்பாக, ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை மறுபடியும் இப்போது திறக்கப்பட்டிருப்பதால் -”

டாபி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனது. அது ஹாரியின் படுக்கையின் அருகே இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து, அதைத் தன் தலையில் டமாலென்று பலமாக அடித்துவிட்டு அங்கிருந்து மறைந்தது. ஒரு நொடிக்குப் பிறகு அது மீண்டும் ஹாரியின் படுக்கைக்குத் தவழ்ந்து வந்தது. கண்கள் லேசாகச் செருகிய நிலையில், மோசமான டாபி, படுமோசமான டாபி,” என்று அது முணுமுணுத்தது.

அப்படியானால், ரகசியங்கள் அடங்கிய அறை என்று ஒன்று இருப்பது உண்மைதான்!” என்று ஹாரி கிசுகிசுத்தான். “நீ – நீ என்ன சொன்னாய்? ரகசியங்கள் அடங்கிய அறை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது என்றா சொன்னாய்? டாபி, அதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லு!”

டாபியின் கைகள் மீண்டும் அந்தத் தண்ணீர் ஜாடியை நோக்கி நகரத் துவங்கியதும், எலும்பும் தோலுமாக இருந்த அதன் மணிக்கட்டை ஹாரி பிடித்துக் கொண்டான். “நான் மகுள்களுக்குப் பிறந்தவனல்ல என்பது உனக்குத் தெரியும்தானே! பின் எப்படிப் பாதாள அறையிலிருந்து எனக்கு ஆபத்து வரும்?”

“சார், என்னிடமிருந்து இதற்கு மேல் எதையும் கேட்காதீர்கள். தயவு செய்து இந்த அப்பாவி டாபியை விட்டுவிடுங்கள்,” என்று அது திக்கித் திணறிக் கூறியது. இருட்டில் அதன் பெரிய கண்கள் இன்னும் பெரிதாகத் தோன்றின. “இந்த இடத்தில் படுபயங்கரமான செயல்கள் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளன. அதனால் அவை நடைபெறும் சமயத்தில் ஹாரி பாட்டர் இங்கு இருக்கக்கூடாது. ஹாரி பாட்டர், உங்கள் வீட்டிற்குப் போய்விடுங்கள்! தயவு செய்து வீட்டிற்குப் போய்விடுங்கள். சார், ஹாரி பாட்டர் இதில் தன் மூக்கை நுழைக்கக்கூடாது. அது மிக மிக ஆபத்தானது”

டாபி மீண்டும் தண்ணீர் ஜாடியை எடுத்துவிடாமல் இருக்க அதன் மணிக்கட்டை மேலும் இறுக்கமாகப் பிடித்தபடி, ஹாரி, “டாபி, யார் அது?” என்று கேட்டான். “யார் அதைத் திறந்தது? ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைக் கடந்த முறை திறந்தது யார்?”

“டாபியால் சொல்ல முடியாது! டாபியால் சொல்ல முடியாது! டாபி அதைச் சொல்லக்கூடாது!” என்று அந்த எல்ஃப் கீச்சிட்டது. “வீட்டிற்குப் போய்விடுங்கள்! ஹாரி பாட்டர், தயவு செய்து வீட்டிற்குப் போய்விடுங்கள்!”

“நான் எங்கேயும் போகப் போவதில்லை,” என்று ஹாரி அழுத்தந்திருத்தமாகக் கூறினான். “என்னுடைய நெருக்கமான நண்பர்களில் ஒருத்தி மகுள்களுக்குப் பிறந்தவள். ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை உண்மையிலேயே திறக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அவளது தலைதான் முதலில் உருளும்”

“ஹாரி பாட்டர் தன் நண்பர்களுக்காகத் தன் இன்னுயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார்!” என்று டாபி பரிதாபக் கிளர்ச்சியுடன் முனகியது. “என்னவோர் உயர்ந்த எண்ணம்! என்னவொரு பரந்த மனப்பான்மை! என்னவொரு தைரியம்! ஆனால் ஹாரி பாட்டர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர் இங்கு இருக்கக்கூடாது. ஹாரி பாட்டர் இங்கு இருக்க”

திடீரென்று டாபி உறைந்தது. அதன் வௌவால் காதுகள் நடுங்கின. ஹாரிக்கும் அது கேட்டது. வெளியே தாழ்வாரத்தில் யாரோ நடந்து வந்த காலடியோசையை அவன் செவிமடுத்தான்.

“டாபி இங்கிருந்து போய்விட வேண்டும்,” என்று டாபி பயத்துடன் கூறியது. பிறகு ஒரு பலத்தச் சத்தம் கேட்டது. திடீரென்று ஹாரி தன் கை வெறுமனே காற்றைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். பிறகு அவன் தன் படுக்கையில் தளர்வாகச் சாய்ந்தான். அந்தக் காலடியோசை அந்த அறையின் கதவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இருட்டில் அவன் அந்த அறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்தக் கணம், டம்பிள்டோர் தன் முதுகைக் காட்டியபடி பின்னோக்கி அங்கு வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நீண்ட கம்பளி அங்கியையும் இரவில் அணிவதற்கான தொப்பி ஒன்றையும் அணிந்திருந்தார். ஒரு சிலைபோலத் தோன்றிய ஒன்றின் ஒரு முனையை அவர் பிடித்திருந்தார். ஒரு வினாடிக்குப் பிறகு, பேராசிரியர் மெக்கானகல் அங்கு தோன்றினார். அவர் அதன்” கால்களைப் பிடித்திருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதை முக்கித் தக்கி அங்கிருந்த ஒரு படுக்கையில் தூக்கி வைத்தனர்.

“மேடம் பாம்ஃபிரேயை அழைத்து வாருங்கள் !” என்று டம்பிள்டோர் கிசுகிசுத்தார். உடனே பேராசிரியர் மெக்கானகல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார். ஹாரி தூங்குவதுபோல பாவனை செய்து கொண்டு அசையாமல் படுத்துக் கிடந்தான். பரபரப்புடன் பேசிக் கொண்ட கிசுகிசுப்புக் குரல்கள் அவனுக்குக் கேட்டன. பின் பேராசிரியர் மெக்கானகல் அங்கு வந்தார். அவருக்குப் பின்னால் மேடம் பாம்ஃபிரேயும் வந்தார். அவர் கம்பளியால் ஆன மேற்சட்டை ஒன்றைத் தன் இரவு ஆடையின்மீது அணிந்திருந்தார். யாரோ ஆழமாக மூச்சிழுத்துக் கொள்ளும் சத்தம் அவனுக்குக் கேட்டது.

மேடம் பாம்ஃபிரே, படுக்கையில் இருந்த அந்தச் சிலையை நோக்கிக் குனிந்தவாறே, “ஐயோ! என்ன ஆயிற்று?” என்று டம்பிள்டோரிடம் கிசுகிசுத்தார்.

“மற்றொரு தாக்குதல்,” என்று டம்பிள்டோர் கூறினார். “ படிக்கட்டு அருகே மெக்கானகல் அவனைக் கண்டுபிடித்தார்.”

“அவனுக்கு அருகே ஒரு கொத்துத் திராட்சை இருந்தது,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “அவன் ஹாரி பாட்டரைச் சந்திக்கத் திருட்டுத்தனமாக வந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.”

ஹாரிக்கு பயங்கரமாக வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. படுக்கையில் வைக்கப்பட்டிருந்த சிலையைப் பார்ப்பதற்காக அவன் மெதுவாகவும் கவனமாகவும் ஒருசில அங்குலங்கள் தன்னை உயர்த்திக் கொண்டான். அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிலையின் முகத்தில் சந்திர ஒளி படர்ந்திருந்தது.

அது காலின். அவனது கண்கள் விரியத் திறந்திருந்தன. அவனது கைகள் அவனுக்கு முன்னால் குத்திட்டு நின்றன. அவை கேமராவை இறுகப் பற்றியிருந்தன.

“கல்லாக்கப்பட்டுவிட்டானா?” என்று மேடம் பாம்ஃபிரே கிசுகிசுத்தார்.

“ஆமாம்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “ஆனால் எனக்கு யோசிக்கவே பயமாக இருக்கிறது… டம்பிள்டோர் மட்டும் சூடான சாக்லேட் பானத்தைப் பருகுவதற்காகக் கீழே போயிருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமோ, யார் கண்டது”.

அவர்கள் மூவரும் காலினை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின் டம்பிள்டோர் குனிந்து, விறைத்துப் போயிருந்த காலினின் கைகளில் இருந்த கேமராவைப் பிடுங்கினார்.

“தாக்க வந்த நபரை அவன் புகைப்படம் எடுத்திருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று பேராசிரியர் மெக்கானகல் ஆர்வமாகக் கேட்டார்.

டம்பிள்டோர் பதிலேதும் சொல்லவில்லை. அவர் அந்தக் கேமராவின் பின்பகுதியை இழுத்துப் பிடித்துத் திறந்தார்.

“அடக் கடவுளே!” என்று மேடம் பாம்ஃபிரே கூறினார்.

அந்தக் கேமராவிலிருந்து நீராவி பீய்ச்சி அடித்தது. மூன்று படுக்கைகள் தள்ளி இருந்த ஹாரி, பிளாஸ்டிக் கருகிய வாசனையை நுகர்ந்தான்.

“உருகிப் போய்விட்டது,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “ஒட்டுமொத்தமாக எல்லாமே உருகிப் போய்விட்டது . . .”

“பேராசிரியரே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று பேராசிரியர் மெக்கானகல் அவசரமாகக் கேட்டார்.

“அதாவது,” என்று டம்பிள்டோர் துவக்கினார். “ரகசியங்கள் உண்மையிலேயே அடங்கிய பாதாள அறை மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.”

மேடம் பாம்ஃபிரே தன் கையால் தன் வாயைப் பொத்திக் கொண்டார். பேராசிரியர் மெக்கானகல் டம்பிள்டோரைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆனால் . . . எப்படிப் பேராசிரியரே . . . யார்?”

டம்பிள்டோர் தனது கண்களைக் காலினின்மீது பதித்தவாறு, “யார் என்பது இங்கு கேள்வியல்ல, ‘எப்படி’ என்பதுதான் இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி,” என்று கூறினார்.

அரைகுறை இருட்டில் தெரிந்த பேராசிரியர் மெக்கானகல்லின் முகத்தை ஹாரி பார்த்தபோது, அதைப் பற்றி அவர் தன்னைவிட அதிகமாக ஒன்றும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது ஹாரிக்குத் தெளிவாகியது.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *