ஸதாநந்த போதக சாமியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 197 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

தொந்திச் செட்டியின் அந்திய லீலை 

“மன நோய்க்கு மருந்துமுண்டோ?” என்று ஜனங்கள் பொதுவாகக் கூறுவதுண்டு. அதை நாம் ஆழ்ந்து கவனித்து ஆராய்ந்து பார்ப்போமானால், மனதைப் பற்றிய எல்லா நோய்களுக்கும் இது அவ்வளவாகப் பொருந்த வில்லை யென்பது விளங்கும். மனதைப் பீடிக்கக் கூடிய பிணிகள் பலவகையானவை. ஒருவன் தரித்திரப் பிணிக்கு ஆளாகி, பொருளீட்ட வகைபறியாது, வேதனையிற் பட்டு உழல்கிறான். அவனுக்கு எவ்வகையிலேனும் திடீரென்று பொருள் வருமானால், ஒரு நொடியில், அவனுடைய மனப் பிணி விலகிப்போகிறது; அவன் மகிழ்ச்சி யடைகிறான். ஒருவன் ஓர் அழகிய ஸ்திரீயைக் கண்டு விரகநோய் கொண்டு ஊண், துயில் முதலியவின்றி இரவு பகல் காமத்தீயினால் வெதுப்பப்பட்டு உருகித் தவித்து இளைத்து உருக்குலைந்து கிடந்து உழல்கிறான். அவனுக்கு அந்த ஸ்திரீயின் இணக்கம் ஏற்படுமானால், அவனுடைய உயிரைப் பருகிய காமப் பெரும் பேய் ஒரே நொடியில் ஓடிப்போகிறது. இதைக் கருதியே நமது தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனார், 

“இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு 
நோய் நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து” 

என்று திருவாய் மலர்ந்தருளினார். பெண்மக்களின் மருண்ட பார்வை ஆண்மக்களது மனதைக் கவர்ந்து, விரகதாபத்தைக் கிளப்பி விட்டு, எமனைப்போல அவர்களது யிரைப் பருகுகிறது. அவ்வாறு ஒருவனது மனதில் காமத்தீயைப் பற்றவைத்த ஒரு குறித்த ஸ்திரீயை அவன் அடையாவிடில், அந்தப் பிணியே அவனுக்குக் காலாந்தகனாக முடிகிறது. அந்த ஸ்திரீ தானும் அவன்மீது காதல் கொண் டிருப்பதாகவோ, அல்லது, அவனுடைய விருப்பத்திற்கு இணங்குவதாகவோ, தனது கண் சாடையால் ஒரு குறிப்புக் காட்டுவாளானால், அந்த ஒரு பார்வையே அமிர்த சஞ்சீவி போல் அவனுடைய உயிரை ஒரே நொடியில் மீட்கிறது. வேறு எதற்கும் தீராத அவனுடைய விரக வேதனைத் தீ இருந்த இடந்தெரியாமல் உடனே பறந்து போகிறது. அவன் இன்பசாகரத்தில் கிடந்து மிதக்க வாரம்பிக்கிறான். ஆகவே, “பெண்மக்களின் கண்களில் இரண்டு விதமான பார்வை கள் இருக்கின்றன; ஒன்று நோயை உண்டாக்கும் பார்வை ; இன்னொரு பார்வை அந்த நோயைத் தீர்க்கும் மருந்து என்றார் நமது பொய்யாமொழிப்புலவர். 

நாம் மேலே குறித்த தரித்திரக் கொடுமை, காம நோய் ஆகிய இரண்டும் மனப்பிணிகளே யானாலும், முக்கியமாக அவை தேக பாதைகளையே அடுத்து நிற்பவை. ஆகவே, மேற் படி தேகபாதைகள் தீருவதற்கான சாதனம் கிடைத்தவுடன், அம்மனப்பிணிகள் விலகிப் போகின்றன. 

. ஆகவே, நாம் இவைகளை விட்டு, மனதை மாத்திரம் பாதிக்கக் கூடிய ஒரு பிணியை எடுத்துக் கொள்வோம். ஒருவன் நம்மை அக்கிரமமாக தூஷிப்பதாக வைத்துச் கொள்ளுவோம். அது சம்பந்தமாக, 

“தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே 
நாவினாற் சுட்டவடு”  

என்கிறார் நம் திருவள்ளுவ நாயனார். ஒருவன் நம்மைத் தீயினால் சுட்டால், அந்தப் புண்ணும், அதனால் ஏற்பட்ட கோபமும் சீக்கிரத்தில் ஆறிப் போகின்றன. சில சந்தர்ப் பங்களில், அந்தப் புண் ஆறுவதற்கு சில தினங்கள் பிடித் தாலுங்கூட, மனதிலுண்டான ஆத்திரம், அதற்கு முன் பாகவே ஆறிப்போகிறது. ஆனால், ஒருவர் நம்மை வாயினால் சுட்ட வடுமாத்திரம் மனதை விட்டு ஒரு நாளும் மாறாது என்பது இதன் பொதுப்படையான கருத்து. ஆனால், இது எல்லோர் விஷயத்திலும் ஒரு தன்மையாய் இருப்பதில்லை. இவ்வித நோய்க்குக் காலப்போக்கு ஒருவித மருந்தென்று நாம் கூறலாம். ஒருவர் தூற்றுவது சிலருக்கு உறைக்கிறதே இல்லை; சிலர் அதை சொற்ப காலத்தில் மறந்து விடுகின்றனர்; வேறு சிலர் அதைத் தம் ஆயுள்காலம் முடிய வைத்துப் பாராட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஆயினும், அதைப் பற்றி ஆரம்பத்தில் உண்டான வீராவேசம் கடைசி வரையில் ஒரே நிலைமையில் இராமல் தணிந்துகொண்டே போகிறது. 

இதே போல, ஒருவரால் ஏற்படும் மானக்கேடு சிலரை அவ்வளவாக பாதிக்கிறதில்லை யானாலும், மானியும் பயந்த வராயுமிருக்கும் சிலருக்கு அது எமனாகவே முடிகிறது. நமது தொந்தி ரமணைய செட்டியாருடைய சுபாவம் மிக விசித்திர மானது. இரகஸியத்தில், அவருக்கு எவ்வளவு பண நஷ்ட மோ, தூஷணையோ, மானக்கேடோ, அடி உதைகளோ நேர்ந் தாலும், அவர் அவ்வளவாக வருந்தமாட்டார். தமது சுயஜாதி மனிதர்களுக் கெதிரில், ஏதேனும் சொற்ப மானக்கேடு நேர்ந்தால்கூட, அது அவரை மும்முரமாக பாதிக்கும்; அவரது முகம், தொட்டால் சுருங்கி இலைபோல, வாட்ட மடைந்து வீழ்ந்துவிடும். அந்த நினைவே அவருடைய மனதில் எப்போதும் இருந்து,அவரது கவனத்தை முற்றிலும்கவர்ந்து கொண்டிருக்கும். அவர் பிறரது முகத்தைப் பார்க்க வெட்கித் தமது முகத்தை வேறு பக்கத்தில் திருப்பிக் கொள்வார். அவ்வித சுபாவமுடைய ரமணைய செட்டியார் தம்மை, ரத்ன வேலும் தாசிப் பெண்ணும் சுத்த அசடனென்று கருதித் தந்திரமாய் ஏமாற்றிய செய்கையைக் கண்டு எவ்வளவு மன வேதனையும் கிலேசமும் அடைந்திருப்பா ரென்பது கூறாமலே விளங்கும்; அந்த அவமானம் ஆயிரம் வாள்களால் அறுப்பது போல, அவரது மனதை அறுத்ததாகையால், அவர் பெரிதும் ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்து குன்றிப்போய் சித்த ஸ்வா தீன மிழந்தவர்போ லாகிவிட்டார். 

அந்தச் செய்தி தமது ஜாதியினர்க் கெல்லாம் பரவிப் பானது போலவும், அவர்கள் தம்மைப் பார்த்துக் கை கொட்டி ஏளனம் செய்து இழிவு படுத்துவது போலவும், தம்மைப் பற்றிப் புரளி செய்வது போலவும் உணர்ந்திருந்த சமயத்தில், இரவு முழுதும் தம் வீட்டில் கற்கள் வந்து விழவே, அவருடைய நிலைமை முன்னிலும் பன்மடங்கு கேவல மாகிவிட்டது. அவற்றிற்கு சிகரம் வைத்ததுபோல, ஒவ்வொருநாட் காலையிலும் கழிப்புக் கழித்த வஸ்துக்களும், உடைபட்ட மலச் சட்டிகளும் காணப்பட்டது அவர் சகிக்கக் கூடிய வரம்பை மீறிய விபரீதமான மானக்கேடாகத் தோன்றியது. அவருடைய வீடிருந்த வீதிமுழுதிலும்,தன வந்தர்களான கோமுட்டிச் செட்டிமார்களே குடியிருந்தன ராதலால், தமது இரகஸியங்களும், தமக்கு நேரிட்ட மானக் கேடுகளும் எல்லோருங்கும் தெரிந்துபோயிருக்குமென்று அவர் கருதினாராதலால், அவர் தமது வீட்டை விட்டு வெளி யில் வரவோ, எவரையும் பார்க்கவோ விரும்பாமல், வேதன யிலாழ்ந்து வீட்டிற்குள்ளேயே படுத்திருந்தார். உண்மையிலேயே, அந்த வரலாறு முழுதும் எல்லோருக்கும் பரவிப் போயிற்று. பெரும்பாலும் கோமுட்டிச் செட்டிகள் எந்த விஷயத்திலும் மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ளும் சுபாவ முடையவர்கள். ”ஊரார் சங்கதி நமக்கெதற்கு” என்று மிக விரக்தியாகப் பேசி, பிறர் விஷயங்களில் தலையிட மன மில்லாதவர் போல நடிப்பரானாலும், ஒருவருக் கொருவர் கண் சிமிட்டி சமிக்ஞை காட்டிக்கொண்டு, இரகஸியங்களை யெல்லாம் அறிந்து மனதிற்குள் பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளுவர்; எந்த விஷயத்திலும் அகப்பட்டுக் கொள்ள மாட்டார்கள்; எந்தப் பொறுப்பையும் தம்மீ போட்டுக்கொள்ள மாட்டார்கள்; தங்களுக்கு இன்னார் சொன்னார்கள் என்று பிறரைக் காட்டியும் கொடுக்கமாட்டார் கள்; ஜவ்வாதில் மயிர் வாங்குவது போல நடந்து கொள் வார்கள். நோகாமல் அடிப்பதென்பது அவர்களுக்கே பெரும்பாலும் பொருந்தும். கோமுட்டி, கோவிலில் பால் வார்த்த கதை எல்லோருக்கும் தெரிந்ததொன் றாகை யால், அவர்களுள் பெரும்பாலோர் எதிலும் பொறுப்பை வகிக் காமல் தந்திரமாக எத்தும் சுபாவமுடையவர்க ளென்னும் அந்தக் கதையின் படிப்பினையை நாம் அதிகமாக விஸ்தரிப் பதனாவசியம். 

பிறருடைய காரியங்களை கவனிக்காதவர் போலவே இருந்து,கபடமாக எல்லாவிஷயங்களையும் தெரிந்துகொண்டு, பின் பக்கத்தில் குரங்குச் சேஷ்டை காட்டுவதில் நமது ரமணைய செட்டியார் முதல் தாம்பூலம் பெற்றவராதலால், தம் இனத்தார் எல்லோரும், தம்மைப்போலவே இருப்பார்க ளென்று அவர் யூகித்துத் தம் மனத்தையும், உடம்பையும் அலட்டித் தம்மை நரகவேதனையிலாழ்த்திக்கொண்டு எப்போதும் சயனத்திலேயே இருந்தார். வெளியுலகத்தில் ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துவிட்டு, அப்போதைக் கப் போது அவரிடம் வந்த அவருடைய பிரதம மந்திரியான ராம கிருஷ்ணன், வீதியிலிருந்த செட்டிமார்களும், அவர்களைச் சேர்ந்த மற்றவர்களும் தன்னை உற்று உற்றுப் பார்த்து, ஒரு வருக்கொருவர் புரளியாகக் கண்சிமிட்டிக் கொண்டதாக ஒவ்வொரு தடவையும் செட்டியாரிடம் தெரிவித்தானாதலால், அது கடுமையான நேர்வாள மாத்திரைபோல வேலை செய் யத் தொடங்கியது. அவருடைய மனவேதனையும், தேக அவஸ்தையும் சசிக்க இயலாதபடி உச்ச நிலையை அடைந்து விட்டன. அவர் திகில் கொண்டு குன்றி இளைத்து உரு மாறிப் போனார். எத்தனை நாளைய பட்டினிக்கும், வியாதிக் கும் தளர்வு கொடுக்காத அவருடைய இறுகிய தொந்தியும், பிரஷ்டபாக மலைகளும் முற்றிலும் தொய்வடைந்து உடம்பை விட்டு அதிக தூரம் பிரயாணம் போகத் தலைப்பட்டன. சாப்பாடு அவருக்கு வேப்பங்காய்போ லாகிவிட்டது; இரவில் அவர் இமைகளை மூடுவதே இல்லை. அவருடைய மனதோ கட்டுக்கடங்காமல் கொந்தளித்தபடி இருந்தது. 

ராமகிகிருஷ்ணன் அவரிடம் வந்தபோதெல்லாம் அவருக் குப் பல வகையான உபசரணைகள் செய்து அநுதாப மொழி கள் கூறி, அவரைத் தேற்ற முயலுவான். அவ்வாறு அவன் அவருடன் ஒரு நாள் சம்பாஷித்ததை நாம் கவனிப்போம் (அவர்கள் தம் தம் ஜாதி சம்பிரதாயத் தமிழில் சம்பாஷித்த னரானாலும், அதை நாம் சரியான தமிழ் நடையில் எழுதுகிறோம்.) 

ராமகிருஷ்ணன்:- என்ன போங்கள், நேற்றும் இன் றும் நான் இந்தப் பட்டணம் பூராவையும் சுற்றிப் பார்த்து விட்டேன். அந்தக் குறப்பயலும் என் கண்ணில் பட வில்லை; அந்தப் பட்டி முண்டையும் என் கண்ணில் படவில்லை, அவனுக்கு என்மேல் இருக்கும் ஆத்திரத்தில், என்னை அவன் அவசியம் அடித்தாலும் அடிப்பான். இருந்தாலும், நீங்களும் அம்மாளும் இருக்கும் கேவல நிலமையைப் பார்க்க, என் உயிர் போனாலும் போகிறதென்ற எண்ணம் உண்டாகி விட்டது. எப்பாடுபட்டாவது அவனைக் கண்டு பிடித்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாவது கெஞ்சிக் கூத்தாடி, அவன் செய்யும் காரியங்களை யெல்லாம் நிறுத்தும் படி கேட்டுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு என்னால் ஆனவரையில் முயற்சி செய்தேன். அவன் அவள் இரண்டு பேரும் எங்கேயோ போய்விட்டார்கள். 

செட்டியார்:- அவனுடைய வீட்டில் விசாரிக்கவில்லையா? எங்கிருந்தாலும் சாப்பாட்டுக்கு அவன் சாப்பாட்க்கு வீட்டிற்குத்தானே போகவேண்டும். 

ரா. கிருஷ்ணன் :- முதலில் நான் அவனுடைய வீட் டிற்குத்தான் போனேன். சில தினங்களாய் அவன் சாப்பாட் டிற்குக்கூட வீட்டிற்கு வரவில்லையாம்; திருக்கழுக் குன்றத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனானாம். 

செட்டியார்:- அவன் அங்கே போயிருக்கையில் இந்த ஊர் முழுதும் தேடினால், எங்கிருந்து அகப்படுவான். அந்தத் தேவடியாளையும் அழைத்துக்கொண்டு தமாஷாய் அங்கே போயிருப்பான். 

ரா. கிருஷ்ணன் :- அப்படியானால், இங்கே நடக்கும் அக்கிரமங்களை யெல்லாம் செய்வது அவனல்லவா? 

செட்டியார்:- வேறே ஆள்களை ஏவியிருப்பான். அவர்கள் செய்வார்கள். 

ரா. கிருஷ்ணன்:-அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான். எங்கேயாவது போகவேண்டுமானால், அவன் திருக்கழுக் குன்றத்துக்குப் போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டுப் போவது வழக்கமென்று என்னிடம் பல சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறான். அவனுடைய தகப்பன் பெரிய லுத்தன். அவன் பெரிய பணக்காரனாயிருந் தாலும் ஒரு தம்பிடிக்காக ஒன்பது நாள் மன்றாடுவான். அவனுடைய வீட்டில் எல்லாம் கணக்கு. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் சாப்பாட்டுக்காக இன் னின்னார் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டு மென்று அவன் கண்டிப்புச் செய்திருக்கிறான். அதன்படி கொடுக்கா விட்டால், வீட்டில் எவருக்கும் சோறு கிடைக்காது. அவரவ ருடைய மற்ற செலவுகளுக்கு அவரவர்களே தேடிக்கொள்ள வேண்டும். ரத்னவேல் இந்தத் தேவடியாளை வீட்டிற்குக் கொண்டுபோனால், அவளை அவனுடைய அப்பன் பிடித்துக் கொள்வான்; மகனை உதைத்து ஓட்டிவிடுவான். அதற்கு அவள் இணங்காவிட்டால், அவளுக்கு ஒரு வயிறுகூட சோறு போட மாட்டான்; அவளை உடனே வெளியில் துறத்திவிட்டு மறு வேலை பார்ப்பான். அதையெல்லாம் உத்தேசித்து ரத்னவேல் அவளை இந்த ஊரிலேயே எங்கேயோ எவருக்கும் தெரியாத படி மறைவாக வைத்துத் தானும் மறைந்துகொண் டிருக் கிறான். நான் வேறு சில மனிதரிடம் கேட்டுப் பார்த்ததில், கல்களைப் போடுவதும், பாவைகளை வைப்பதும், அவனே நேரில் செய்பவையல்ல வென்கிறார்கள். மந்திரவாதி யாரை யாவது அவன் ஏவி யிருக்கவேண்டு மென்றும், இவைகள் யக்ஷணி, குறளி முதலிய தூரத்தேவதைகள் செய்யும் வேலைகள் என்றும் சொல்லுகிறார்கள். 

செட்டியார் :- எனக்கு அதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. குறளியாவது, யக்ஷணியாவது, அதெல் லாம் சுத்தப் பைத்தியக்கார சங்கதி. உடுக்கடிக்கிற பூசாரி, விபூதி மந்திரிப்போர் முதலிய ஆஷாடபூதிகள் இந்த மாதிரி யெல்லாம் வேஷம் போட்டு மூட ஜனங்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் வழியே யன்றி வேறல்ல. துர்த்தேவதைகள் இருப்பதாக நினைப்பதே சுத்தத் தப்பு. அவை காற்றைப் போல் நம் கண்களுக்குத் தெரியாமல் அரூபியாயிருப்ப தாகவே வைத்துக்கொண்டாலும், அவை மனிதன் ஜெபிக்கும் மணிமந்திரத்திற்குப் பயந்து, இவனுக்கு அடிமையாய், இவன் சொல்வதுபோல் செய்யுமென்று நினைப்பது போன்ற அக்ஞான இருள் வேறு இல்லவே இல்லை. மனிதனுடைய ஹாம்,ஹீம்,ஹும், என்ற ஓசைகளைக் கண்டு துர்த் தேவதைகள் ஏன் பயப்படவேண்டு மென்பது தெரியவில்லை. ஒருவன் தங்களை அடிமைப் படுத்த இப்படி ஜெபம் செய் கிறான் என்பது அவைகளுக்குத் தெரியாதா? அப்போதே இவனுடைய செவிட்டில் பளீரென்று ஓர் அடிகொடுத்து இவனைக் கொல்ல அவைகளுக்கு அறிவிராதோ? 

ரா. கிருஷ்ணன் :- அநேகர் பேய் கொண்டு ஆடுகிறார்கள் ; பிதற்றுகிறார்கள் ; பூசாரிகள் வந்து உடுக்கடித் தால் தலையைச் சுழற்றிச் சுழற்றி ஆடுகிறார்கள். சில தினங் களில் பேய் ஓடிப்போகிறதே; அதெல்லாம் பொய்யா? 

செட்டியார்;-பேய், பிசாசு முதலியவை அநேகமாய் ஸ்திரீகளைத்தான் பிடிக்கின்றன. பிராம்மணர் முதலிய மேல் வகுப்பு ஸ்திரீகளை அவை பிடிக்கின்றனவா பார்த்தாயா? வெயிலில் தாறுமாறாய் அலைந்து கடுமையாக உழைப் பவரும், எண்ணெய் ஸ்நானம்,புஷ்டியான ஆகாரம் முதலிய சௌகரியங்கள் அற்றவருமான ஏழை ஸ்திரீகளே பேப் கொண்டு ஆடுகின்றனர். அவர்களுடைய இரத்தம் கொத படைந்து கெட்டுப்போகிறது; அது மூளையில் ஏறி சரியான படி வேலை செய்வதில்லை. அதனால், அவர்கள் சித்தஸ்வாதீன மற்று தாறுமாறாகப் பிதற்றத் தொடங்கு கிறார்கள். பூசாரிகள் இரண்டு வேளைகளிலும் வேப்பிலை போட்ட குளிர்ச்சியான நீரில் அவர்கள் ஸ்நானம் பண்ணச் செய்கிறார்கள்; அதனால் இரத்தத்தின் சூடு தணிந்து சுத்த மடைகிறது. அவர்களை உட்கார வைத்து, உடுக்கை தாளப் படி தட்டினால், அந்த அதிர்ச்சி செவிகளில் தாக்கித் தாக்கி நரம்புகளை அதேதாளகதியில் ஊக்கி விடுகின்றது; தலை தானா ஆட ஆரம்பிக்கிறது. அப்படி ஆட ஆட, அந்த உழைப் வினால் சுவாசம் அதிகப்பட்டு, நல்ல காற்று ஏராளமாய் உள்ளேபோய் இரத்தத்தை சுத்தப் படுத்தி, இரத்த ஓட் டத்தை ஒழுங்குப் படுத்தி தலைக்கு ஏற்றி விடுகிறது. இரத்தம் மூளைக்குள் பரவப் பரவ, அறிவு சிறுகச் சிறுகத் திரும்பு கிறது. அப்படியே தொடர்ச்சியாக சுமார் ஒரு மாதகாலம் செய்து, இரத்தத்தை சுத்தப்படுத்தி, அதன் ஓட்டத்தை ஒழுங்குப்படுத்திவிட்டால், பேய் போன இடம் தெரியா மல் பறந்து போகிறது. உடுக்கடித்துப் பேயோட்டுவது மிகத் திறமையான ஒரு வைத்திய சிகிச்சையேயன்றி,பேய், பிசாசு என்னும் துர்த்தேவதைகளுக்கு அங்கு வேலைே இல்லை. அவ்வித தேவதைகள் உலகில் இல்லவே இல்லை ; இருந்தாலும், அவை மனிதருக்கு அடங்கி நடவா. 

ரா. கிருஷ்ணன் :-சரி; எப்படியாவது வைத்துக்கொள்வோம். பைத்தியக்காரன் கிழிப்பது கோவணத்திகாகிறது. நீங்கள் சொல்வதைக் கேட்கவே, பூசாரிகளுக்கு உத்யோகம் போய்விடப் போகிறதே என்று நான் பயந்தேன். அவர்களுக்கு கண்ணியமான ஸ்தானமே கிடைத்தது; உடுக்கை சும்மா தட்டுவதை விட, எதாவது, காத்தாயி, வீராயி என்று ஏதோ தெய்வத்தின் பெயரைச் சொல்லித் தட்டுகிறான். நீங்கள் சொன்னதில், பேய் பிசாசுகளுக்கும், காத்தாயி வீராயிகளுக்கும் உத்தியோகம் போய்விட்டது. 

செட்டியார்:- நீர் ஒரு விஷயத்தை கவனித்துதில்லையா? 

ரா. கிருஷ்ணன்:-எதை ? 

செட்டியார்:- சில துருக்கர் வீட்டுத் திண்ணைகளில் உபாத்தியாயர் உட்கார்ந்து கொண்டு, குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும்போது, அக் குழந்தைகள் தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே படிக் கும். அது எதற்காகத் தெரியுமா? சிறிய குழந்தை களுக்கு இரத்த ஓட்டம் மிருதுவாக நடைபெறும். படிக்கும் போது மூளையில் இரத்த ஓட்டம் நன்றாக ஏற்படும்படி அதைச் செய்கிறார்கள். அப்படி ஆடாமல் ஒரே நிலையில் இருந்து படித்தால், குழந்தைகள் மிக சீக்கிரத்தில் அலுத்து சோர்வடைந்து போவது நிச்சயம். லையை ஆட்டிக் கொண்டே படித்தால், களைப்பின்றி எவ்வளவு நேர மானாலும் படிக்கலாம். இந்த ஏற்பாடும், பூசாரிகள் பேயோட்டும் ஏற்பாடும் இரண்டும் ஒரே கருத்தை அடக்கி யவை. 

ரா. கிருஷ்ணன் :-ஆம், வாஸ்தவந்தான். நான் கூட ஓரிடத்தில் அந்த மாதிரி பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். 

செட்டியார்:- பேய் பிசாசு ஓட்டுதல், பில்லி சூனி யம் வைத்தல் என்பவையெல்லாம் வெறும் தந்திரங்களே யன்றி மந்திரத்தினால் ஆகிறவையல்ல. நம் வீட்டில் நடக் கும் காரியங்களையெல்லாம் ஆள்களே நேரில் செய்கிறார்கள். 

ரா. கிருஷ்ணன்:-அப்படியானால், இதைப் பற்றி போலீஸாருக்குத் தெரிவித்து, ஜெவான்கள் வந்து காத்திருந்து ஆள்களைப் பிடிக்கும்படி செய்வோமே. 

செட்டியார்:- அதனால் வேறு ஏதாவது உபத்திரவம் உண்டாகுமோ என்னவோ; போலீஸ்காரர்கள் வந்திருந்து, ரத்னவேலுவின் ஆள்களைப் பிடிந்துக்கொண்டு போய் தண் டித்தால், அவனுடைய ஆத்திரம் அதிகப்படும். அவன் நமக்கு வேறு ஏதாவது கெடுதல் செய்ய முயற்சிப்பான். 

ரா. கிருஷ்ணன் :– நாம் பயந்துகொண்டு சும்மாயிருந் தாலும், இது நடந்துகொண்டேதான் போகும். போலீ ஸாரை நாம் வரவழைத்ததுபோல் காட்டிக்கொள்ள வேண்டாம். அவர்களே தெரிந்துகொண்டு வந்தார்கள் என்று நான் எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன். 

செட்டியார் :-சரி ; அப்படிச் செய்யும்-என்றார். 

உடனே ராமகிருஷ்ணன் புறப்பட்டு போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போய் ஸப்-இன்ஸ்பெக்டர் அகோரம் ஐயரைக் கண்டு சங்கதியை மிக விநயமாகத் தெரிவிக்க, அவர் வியப்போடு வாயைப் பிளந்து கொண்டு ஏற இறங்கப் பார்த்து. “செட்டி யாருக்குப் பகைவன் எவனாவது இருக்கிறானோ?” என்றார். 

ரா. கிருஷ்ணன்:-செட்டியார் ரத்னவேல் என்னும் ஒருவனை மோட்டார் ஓட்டி வேலையில் வைத்துக்கொண்டிருந்தார்; அவனுடைய நடத்தை சரியாயில்லை யென்று சில தினங்களுக்குமுன் அவனை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். அந்த ஆத்திரத்தை வைத்துக்கொண்டு, ஒரு வேளை, அவன் இப்படிச் செய்தாலும் செய்யலாம். 

அகோரம் ஐயர் :- என்ன ஐயா, இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறதென்னும் கதைபோ லிருக்கிறதே. வேலையி லிருந்து தள்ளிவிட்டால், அதனாலேயே அந்த வேலைக்காரன் இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொள்ளுவானா? அதைத் தவிர, வேறு அதிகப்படியான உள்மாமம் ஏதாவது இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் எவளாவது குச்சுக்காரி, தட்டுவாணி முதலியவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அங்கே தான், துஷ்டர்கள் கல்களை எறிவார்கள். ஏனென் றால், அவ்விபசாரிகள் சிலருக்கு இணங்கி, சிலருக்கு இணங்கா மல் இருப்பார்கள். அதனால் ஆத்திரமும் பொறாமையும் கொண்டு சிலர் கல்களை எறிவார்கள். செட்டியாருக்கு யௌவனப் பிராயமுடைய பெண்கள் இருக்கிறார்களா? 

ரா. கிருஷ்ணன்:- செட்டியாருக்கு இரண்டு குழந்தைகளே இருக்கிறார்கள் ; பெண்கள் இல்லை. 

அகோரம் ஐயர் :- செட்டியாருடைய சம்சாரத்துக்கு எவ்வளவு வயதிருக்கும்? 

ரா. கிருஷ்ணன்:-இருபத்தைந்து, முப்பது இருக்கலாம்.  

அகோரம் ஐயர் :- அந்த அம்மாளுடைய மாதிரி எப் படியோ? 

ரா.கிருஷ்ணன்:-நல்ல மாதிரியான அம்மாள்தான். 

அகோரம் ஐயர்:-செட்டியாருடைய மோட்டாரை எங்கே நிறுத்துகிறது வழக்கம்? 

ரா. கிருஷ்ணன்:-செட்டியாருடைய வீட்டின் முன் பக்கத்தில் ஒரு லாயம் இருக்கிறது; அதற்குள் நிறுத்துவது வழக்கம். 

அகோரம் ஐயர் :- செட்டியார் தம் வீட்டண்டை இல்லாத சமயங்களில் அந்த மோட்டார் ஒட்டி, அங்கே போவதுண்டா? 

ரா. கிருஷ்ணன் :-போவதுண்டு; ஆனால் வீட்டிற்குள் போகவேண்டிய அலுவல் அவனுக்கு எதுவுமில்லை. 

அகோரம் ஐயர் :-செட்டியார் தம் சம்சாரத்தை மொட்டாரில் வைத்து அழைத்துக் கொண்டு எங்கேயாவது போகிறதுண்டா? 

ரா. கிருஷ்ணன் :-இல்லை. 

அகோரம் ஐயர் :- அம்மாள் மாத்திரம் தனிமையில் மோட்டாரில் உட்கார்ந்து எங்கேயாவது போவதுண்டா? 

ரா. கிருஷ்ணன் :- அதுவுமில்லை. 

அகோரம் ஐயர் :-மோட்டார் ஒட்டி செட்டியாரம்மாளுடன் பேசுவதுண்டா? 

ரா. கிருஷ்ணன்:-அவன் அம்மாளுடன பேச வேண்டிப சந்தர்ப்பம் அதிகமாய் நேர்ந்திருக்காது. 

அகோரம் ஐயர் :- அந்த அம்மாளை அவன் பார்த்திருப்பானோ அதுவுமில்லையோ? 

ரா. கிருஷ்ணன்:- பார்த்திருப்பான். 

அகோரம் ஐயர் :- உமக்கும் அந்த ரத்னவேலுக்கும் சிநேகமா, விரோதமா? 

ரா. கிருஷ்ணன்:-இரண்டுமில்லை. சாதாரணமாக நடந்து கொள்ளுவோம். 

அகோரம் ஐயர் :-நீர் செட்டியார் வீட்டிற்குள் அதிகமாகப் போய்ப் பழகுவதுண்டா ? 

ரா. கிருஷ்ணன்:-உண்டு. 

அகோரம் ஐயர் :-செட்டியார் அந்த மோட்டார் ஒட்டி பை அவனுடைய நடத்தைப் பிசகிற்காகத் தள்ளினா ரென் றீரா? அவன் வேலையை விட்டுப்போன தினம் வரையில் அவனுக்குச் சேரவேண்டிய சம்பளத்தை செட்டியார் கொடுத்து விட்டாரா? 

ரா. கிருஷ்ணன்:- அவனை திடீரென்று நிறுத்திவிட் டார். அவனுக்கு சம்பளம் கொஞ்சம் சேரவேண்டியது செட்டியாரிடம் நிற்கிறது. அவன் வந்து கேட்டால் செட்டியார் கொடுத்து விடுவார். அவன் வரவில்லை. 

அகோரம் ஐயர் :- செட்டியார் அவனை திடீரென்று நிறுத்தவேண்டிய காரணமென்ன? 

ரா. கிருஷ்ணன்:- அவன் செய்யத் தகாத காரியம் எதையோ செய்தா னென்று அவர் நிறுத்தி விட்டாராம். 

அகோரம் ஐயர்:’நிறுத்தி விட்டாராம்’ என்றால், செட்டியார் நிறுத்தியபோது நீர் இல்லையா? 

ரா. கிருஷ்ணன் :- நான் இல்லை. 

அகோரம் ஐயர் :-‘ செய்யத் தகாத காரியம்’ என்கிறீரே; அது இன்ன தென்பதை எங்களுக்குத் தெரிவிக்கலாமல்லவா? 

ரா.கிருஷ்ணன் – உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாத விஷயம் எதுவுமில்லை. ஆனால் அவர்களுக்குள் நடந்த தகரார் இன்னதென்பது எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரி யாது. அவர் எனக்கு எஜமான்; நான் அவரிடம் அதிகமாய்த் தகவல்களைக் கேட்கவில்லை. 

அகோரம் ஐயர்:- இதற்கென்று புகார் சொல்லிக்கொள்ள வருகிறவர் இது சம்பந்தமான விவரங்களை யெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டு வரவேண்டாமா! நீர்போய் செட்டி யாரையே அனுப்பும். எங்களுடைய அரிய பொழுதை அநாவசியமான சச்சரவுகளில் செலவிட நாங்கள் தயார யில்லை. ரத்னவேல் இப்படியெல்லாம் செய்வதாக நீங்கள் சும்மா சொல்வது போதாது. அவன் இப்படிச் செய்ய வேண்டிய உள் கருத்தென்ன வென்பது நிச்சயமாகத் தெரி யாத வரையில், நாங்கள் கண்ட இடத்திற்கெல்லாம் ஓடிவர யலாது. நீர் போய் செட்டியாரையே வரச்சொல்லும். 

ரா.கிருஷ்ணன்:- இந்தப் பெரிய அவமானத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால், செட்டியாருடைய உடம்பு சரி யான நிலைமையில் இல்லை. அவர் படுக்கையை விட்டு எழுந்து வர முடியாத நிலைமையில் இருக்கிறார். அந்த வண்டியோட்டி யின் துர்நடத்தையைக் கண்டு அவர் கடற்கரையிலேயே அவனை விலக்கிவிட்டார். அந்த ஆத்திரத்தை வைத்துக் கொண்டு அவன் இப்படி யெல்லாம் செய்கிறா னென்று செட்டியார் சந்தேகிக்கிறார். அவனை செட்டியார் நீக்கியபின் நானும் அவனும் ஒரு தடவை சந்தித்தோம். அவனுடன் நான் பேசி, நடந்தது என்னவென்று கேட்டேன். செட்டியார் ஒரு தாசிப்பெண்ணை வைத்துக்கொண் டிருந்தார். தினம் மாலையில் செட்டியார் அந்தத் தேவடியாளுடன் மோட்டாரில் உட்கார்ந்து கடற்கரைக்குப் போவது வழக்கம். ரத்னவேல் முன்னாலிருந்து வண்டியை ஓட்டிக்கொண்டு போவான். ஒரு நாள் அப்படி மூன்று பேரும் போனார்களாம். கடற் கரையில் குறட்டோரமாக வண் நிறுத்தப்பட்டதாம். தாசிப்பெண் 

தனக்குத் தலைவலி யென்று சொல்லி விட்டு, வண்டியிலேயே இருந்தாளாம். செட்டியார் இறங்கி குறட்டில் உலாவினாராம். அப்போது தனிமையில் வண்டியி லிருந்த ரத்னவேலும் தாசிப்பெண்ணும் ஏதோ சம்சயமான காரியம் செய்தார்களென்று செட்டியார் சந்தேகங்கொண்டு இரண்டு பேரையும் தந்திரமாய் அங்கேயே இறக்கிவிட்டு தாமே வண்டியை ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாராம். இந்த வரலாற்றை அவன் என்னிடம் தெரி தான். 

அகோரம் ஐயர் :-ஒஹோ! அப்படிச் சொல்லும் கதையை. இதில் பெண்பிள்ளை சம்பந்தம் இருக்கவேண்டு மென்று எனக்கு அப்போது முதல் சம்சயம் உண்டாயிற்று. நான் அநியாயமாக செட்டியாருடைய சம்சாரத்தைப்பற்றி பலவிதமாக சந்தேகம் கொண்டேன். ரத்னவேலுக்கு செட்டியார் அம்மாள்மேல் கண்ணோட்டம் ஏற்பட்டிருக்கலா மென்றும், ஒருவேளை, அந்த அம்மாளுடைய கிருபா கடாக்ஷமும் அவனுக்கு உண்டாயிருக்கலாமென்றும், அதில் ஒருவேளை நீரும் சம்பந்தப்பட்டு, அவனுக்கு செட்டியார் தாம்பூலம் கொடுக்கச் செய்திருப்பீரென்றும் நான் நினைத் தேன். இப்போது நிஜம் விளங்கிவிட்டது. சரி; அந்த வண்டி யோட்டி, உண்மையிலேயே, அந்த தாசிப் பெண்ணினிடம் தவறாக நடந்துகொண் டிருப்பானா? அல்லது, செட்டியார் தவறான சம்சயத்தினால் அவர்களை விலக்கினாரா? 

ரா.கிருஷ்ணன் :– தான் தவறாக நடந்து கொள்ளவே இல்லையென்று அவன் ஆயிரம் சத்தியம் செய்கிறான். சுழல் காற்றடித்ததாம். அவளுடைய கண்களில் தூசி விழுந்ததாம். அவன் ஊதிவிட்டானாம். அதைக் கண்டு செட்டியார் தவறாக சந்தேகங் கொண்டாராம். இந்த மாதிரி அவன் என்னெ னன்னவோ சொல்லுகிறான். 

அகோரம் ஐயர் :- அதன் பிறகு அந்த தாசியை அவன் அழைத்துக் கொண்டுபோய் தன் வசத்தில் வைத்துக் கொண்டானாமோ? 

ரா; கிருஷ்ணன்:-அவள் தன்னுடைய தாய் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாளென்றும், அவன் அவளைக் கடற்கரை யிலேயே விட்டுவிட்டுப் போனதாகவும் சொன்னான். 

அகோரம் ஐயர் :- அவன் இப்போது எங்கே இருக் றான் தெரியுமா? 

ரா. கிருஷ்ணன் :-தெரியவில்லை. 

அகோரம் ஐயர் :- உங்கள் பிரியாது நிரம்பவும் சுவா ரஸ்யமாய் இருக்கிறது. செட்டியார் வீட்டில் எவனோ, கற்களை எறிந்து வேறு பல அக்கிரமங்களைச் செய்கிறா னென்கிறீர்; அவன் ரத்னவேலா யிருக்க வேண்டுமென் றீர்; ஆனால், அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியா தென்கிறீர். இந்தப் பட்டணம் முழுதிலும் இருக்கும் ஜெவான்கள் எல்லோரும் வந்து இரவு பகல் செட்டியார் விட்டண்டை யிருந்து ஆளைக் கண்டுபிடிக்க முயன்றால்கூட, இது சாத்தியமான வேலை என்று நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் எந்த உதவியையும் செய்ய முடியாது. நீங்களே பல ஆள்களைக் காவல் போட்டு, குற்றவாளிகளைக் கையும் மெய்யுமாகப் பிடித்து சாட்சிகளோடு கொண்டுவந்தால், நாங்கள் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு மேல்நடவடிக்கை நடத்துவோம். ஆனால், உங்களுக்காக நான் ஒரு காரியம் செய்கிறேன். இர வில் அந்தத் தெருவில் பெட்ரோல் வரும் ஜெவான்கள் அங்கு கொஞ்ச நோமிருந்து, இதை கவனிக்கச் செய்கிறேன். அவ்வளவே நான் செய்யக் கூடியது. நீர் போகலாம். என்றார். 

ராமகிருஷ்ணன், சரி; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். பிரயாசை கொடுத்ததற்கு மன்னிக்க வேண்டும். நமஸ்காரம் அண்ணா என் று கூறி வந்தனம் செய்து விட்டு வெளியில் வந்தான். 

வந்தவன் போலீஸ் ஸ்டேஷனை விட்டு சுமார் ஐம்பது கஜதூரம் போயிருப்பான். அவனுக்குப் பின்னால், “ஸாமீ, ஸாமீ, கொஞ்சம் நில்லுங்கோ” என்று யாரோ கூப்பிட்டதைக் கேட்டு ராமகிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். ஹெட் கான்ஸ்டேபில் ஒருவர் சந்தோஷப் புன்னகையால் மலர்ந்த முகத்தோடு வந்ததைக் கண்டு ராமகிருஷ்ணன் நின்றான். அந்தப் போலீஸ்காரருக்கு தாடி இருந்ததிலிருந்து,அவர் துருக்க ஜாதியார் என்பது தெரிந்தது. 

அவ்வாறு வந்த அமீர்ஹான் சாயப்புவைப் பார்த்து ராமகிருஷ்ணன், ” என்ன சங்கதி சாயப்பு?” என்றான். 

அமீர்ஹான்:- (புன்னகை செய்தபடி) எல்லாம் ஸந் தோஷ சங்கதி தானுங்கொ. நீங்கொ எதைப்பத்தியும் ஓசனை பண்ணவானாம். அதை நாம்ப சரிப்படுத்தறாங்கொ. 

ரா. கிருஷ்ணன்:- என்ன சாயப்பு, உங்கள் ஸப்-இன்ஸ் பெக்டர்தான் பிடி கொடுக்கவில்லையே. 

அமீர்ஹான் :-அவுரு ஒங்ககிட்ட அப்பிடித்தான் பேஸ்வாரு. போலீஸ்காரரு தாங்க செய்யப்போறத்தை மின்னாலெ சொல்லிடுவாங்களா. சொல்லிட்டா அது எ ராளிக்குத் தெரிஞ்சு போவாதா? இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ஐயரு இருக்கறாரே, ஆஹா, நல்ல ருஸ்தூம் இன்னாலும் இவருக்கே தவும்; ஆளை ஒரு பாக்கடிக்கற நேரத்துலே கண்டு புடிச்சிடுவாரு. இவுருக்கு சீக்கிரத்திலெ டிப்ட்டி கம்மிஷனர்வேலை ஆயிடுமின்னு எல்லாரும் சொல்லிக்கிறாங்க. ஆனா கொஞ்சம் பெரிய குடும்பஸ்தரு. ஊட்டுலெ கும்பல் தாஸ்தி. வர சம்பளம் பத்தல்லெ. அதனாலே, யாராச்சும் மறவா என்னாச்சும் குடுத்தா, கண்டும் காணாமையும் வாங்கி ஜேபீலே போட்டுக்குவாரு. ஆனா அந்த மனஸு இருக்குது பாருங்கொ. அது தங்கமின்னாலுந் தங்கத்தானுங் ங்கொ. ஒருத்தருக்கிட்ட கைநீட்டி ஒரு துரும்பை வாங்கினாக்கூட அதுக்காவ உசிரை உட்டுடுவாரு. எப்பிடியாச்சும் தன்னாலெ ஏண்ட சகாயத்தைப் பண்ணிப்புட்டுத்தான் குந்துவாரு. அப் பேர்ப்பட்ட நல்ல ஐயரு.ஒங்ககிட்ட அப்பிடிச் சொல்லி யனுப்பிச்சாரா ; ஒடனே என்னைக் கூப்பிட்டு,”அமீர்ஹான், நீதான் களுவுக்கேத்த கோமுட்டி. பொளுது விடியறத்துக் குள்ளற, ஜூலும் பண்ணற ஆளுங்களைப் புடிச்சாரணும் இன்னு காய்தாப் பண்ணிப்புட்டாரு. ஒங்கிளுக்கு இன்னமே கவலையே வாணாங்கோ. எல்லாத்துக்கும் நானாச்சு. 

ரா. கிருஷ்ணன்:- சரி ; சந்தோஷம். நான் செட்டியா ரிடம் சங்கதியைச் சொல்லி உங்களுக்கு ஏதாவது மரியாதை செய்ய ஏற்பாடு பண்ணுகிறேன். 

அமீர்ஹான் :- பிஸ்மில்லாஹ்; ஸந்தோஷமாச்சு. அப் பிடியே செய்யுங்கோ. அதிருக்கட்டும்; அந்த செட்டியாருக்கு என்ன யாபாரமுங்கொ? 

ரா. கிருஷ்ணன்:- பழ வியாபாரம், ஏன், உங்களுக்குப் பழம் ஏதாவது வேண்டுமா? 

அமீர்ஹான் :- பிஸ்மில்லாஹ்; நம்பிளுக்குப் பளம் ஒடம் புக்கு ஒத்துக்காதுங்க. ஆனா, நீங்க நல்ல பளமாக்குடுத்தா, பெரிய தொரைக்கிக் கொஞ்சம் அனுப்பலாம் ; ஸப்-இன்ஸ் பெக்டருக்குக் கொஞ்சம் குடுக்கலாம். இதுலெ, பெரிய தொரைகூட ஒங்கிளுக்கு அநுகூலம் பண்ணுவாங்கோ; பிஸ் மில்லாஹ். 

ரா. கிருஷ்ணன்:-சரி; என்னோடு வாரும்; பழம் தருகிறேன். 

என்று கூறி ஹெட்கான்ஸ்டேபிலை பழக்கிடங்கிற்கு அழைத்துப் போய் சுமார் 15 ரூபாய் பெறத்தக்க முதல்தர மல்கோவா முதலிய பழங்களை நான்கு கூடைகளில் வைத்து, நான்கு கூலியாள்களின் தலையில் வைத்து, ஆள்களின் கூலிக் காக ஒரு ரூபாய் பணத்தையும் ஹெட்கான்ஸ்டேபிலிடம் கொடுத்தனுப்பினான். 

போகுமுன் அமீர்ஹான், “ஸாமீ, வேறே யாராச்சும் போலீஸ்காரன் வந்து, பொய் சொல்லி ஒங்களை ஏமாத்தப் பாப்பான். ஸப்-இன்ஸ்பெக்டருக்கு நாம்ப ஒருத்தருதான் ஆந்திரியமானவங்கொ. மத்தவங்க கிட்ட நீங்கொ எந்த சங் கதியெயும் சொல்லவாணாங்கோ. சொன்னா, ஒங்க அலுவ லெல்லாம் கெட்டுப் போவும்” என்று கூறி, தரை வரையில் குனிந்து நிமிர்ந்து சலாம் வைத்துவிட்டு, பழக்கூடைகளோடு நேராகத் தமது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார். அவர் கூறிய வரலாறில் ஒரு சொல்கூட உண்மையே யல்ல. கள்ள னைக் குள்ளன் பாய்வது என்னும் நியாயப்படி நடந்த இடை டத் தட்டுக் கொள்ளையென்றே இதை நாம் மதிக்கவேண்டும். ராமகிருஷ்ணன் பழக்கடையிலிருந்து நேராக செட்டியா ருடைய வீட்டிற்குச் சென்று, போலீஸார் தமக்கு உதவி செய்வதாய் ஒப்புக்கொண்டிருக்கிறார்களென்று கூ றி அவருக்கு தைரிய முண்டாக்கினான். 

அன்றைய இரவில் கற்கள் வீழ்வதையும், மறுநாட் காலையில் மற்ற வஸ்துக்கள் வீட்டின் வாசலில் வைக்கப்படு வதையும் போலீஸார் தடுத்துவிடுவார்க ளென்று செட்டி யாரும், அவரதுமனையாளும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு சிறிது மனத்துணிவு ஏற்பட்டதாகையால் இரு வரும் சொற்ப ஆகாரம் உண்டு வழக்கப்படி தம் தம் சய னத்தை அடைந்தனர். 

மற்றைய நாட்களில் வீழ்ந்ததைவிட அன்று கற்கள் அதிகமாக வீழ்ந்தன. இரவு சரியாக 12 மணிக்கு அமீர்ஹா னும், இன்னொரு ஜெவானும் பெட்ரோல் வந்து, செட்டியா ருடைய வீட்டின் வெளிக்கதவைத் தட்டி, அதைத் திறக்கச் செய்து உள்ளே நுழைந்து வீடு முழுதும் சுற்றிப் பார்த்து, ஒரு மணி காலம் அங்கே தங்கி இருந்தனர். அப்போது கல் ஒன்றுகூட விழவில்லை. அப்போது அமீர்ஹான், எங்கே, ஒரு கல்லுகூட விளல்லியே, நீங்கொ சொம்மா காப்ரா பண்றாங்களே. நீங்கொ நிம்மதியாப் படுத்துத் தூங்குங்கோ.கல்லு உளல்லேன்னு நெனெச்சிக்கிங்கோ; அது உளாது” என்று தைரியமொழி கூறி, அவர்கள் பொய் சொன்னது போலவும், அவர்கள் சுத்த முட்டாள்கள் போல வும் காட்டிவிட்டு தமது சகாவோடு வெளியில் போய்ச் சேர்ந்தார். 

அதற்கு அரை நாழிகை காலத்திற்குப் பிறகு கற்கள் மழை பொழிவதுபோல விழத் தொடங்கின. மறுநாட் காலை யில் வழக்கப்படி எல்லா வரிசைகளும் வந்து சேர்ந்திருந்தன.  அமீர்ஹான் அன்று காலை எட்டு மணி சுமாருக்கு பழக்கடைக்குப் போய்,சூரத்தனமாகத் தமது முண்டாவில் தட்டி, கம்பீரமாக மீசையில் கை போட்டு, “நின்னு போச்சு ஸாமீ, என்னெ யாருன்னு பாத்தீங்க. நாம்ப நவாப் ஜடபுட ஐங் பகதூர் தர்பார்லே மந்திரி வேலை பாத்த வம்மிஷத்தைச் சேந்தவங்கொ. நம்பளெக் கண்டா ஓடாத பேய்கூட ஓடிப் போவும், ஸாமீ. நம்பளே நீங்கொ மறக்கக்கூடாது” என்றார்.

ராமகிருஷ்ணன்:-வழக்கப்படியே எல்லாம் விழுந்தன வாமே. 

அமீர்ஹான்:- (கோபத்தோடு) அவுங்க பொய்ச் சொல் றாங்கோ. நாம்பளும் எல்நூல்த்தி அஞ்சும் ராத்திரி பன் னண்டு மணி மொத ஒரு மணி வரையிலே செட்டியாரு ஊட்லெ இந்தாங்கொ. ஒரு கல்லுக்கூட உளல்லெ. அவுங்க நம்பளெ ஏமாத்தப் பாக்கறாங்கொ. அந்தப்பாச்சா நம்பகிட்ட பலிக்காது. நாணயமா நடந்துக்கினா, நாம்ப கொயந்தெப் புள்ளெ மாதிரி நடந்துக்குவோம். கொஞ்சம் தண்டாப் பண்ணா ஜுத்தியெக் களட்டி சரியா மரியாதெ பண்ணிப் புட்டுத்தான் உடுவோம் – என்று கூறி மிக ஆத்திரத்தோடு தமது கால் செருப்பைத் தொட்டுக் காட்டினார். அதைக் கண்ட ராமகிருஷ்ண னுக்கு அஸ்தியில் ஜூரம் காண தாடங்கியது.உடனே அவன் நயமாகப் பேசத் தொடங்கி, “சரி, அவர்கள் பொய் சொல்லி இருக்கலாம். அதை விட்டு விடுங்கள். நேற்று அனுப்பிய மாதிரி உங்களுக்குக் கொஞ்சம் பழங்கள் அனுப்பட்டுமா? 

அமீர்ஹான்:-(முகத்தை சுளித்துங்கொண்டு) நம்பி ளிக்கிப் பளம் வாணாம் ஸாமீ; நீங்கொ நேத்துச் சொன்ன மாதிரி ஏதாச்சும் மரியாதெ பண்ணா வாங்கிக்கறாங்கொ இல்லாமெப்போனா, ஒங்க மரியாதெ ஒங்களோடெ, நம்ப மரியாதெ நம்பளோடெ – என்றார். 

முதல் நாள் மாலையில் ராமகிருஷ்ணனும் செட்டியாரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், போலீஸார் சகாயம் செய் தால், அவர்களுக்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். சாயப்பு அதட்டியதைக் கண்டு பயந்த ராமகிருஷ்ணன் செட்டியாருக்குத் தான் ஏதேனும் சமாதானம் சொல்லிக்கொள்ளலாமென்று நினைத்து 50 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து மடித்து மறைவாக சாயப்புவின் கையில் சொருக, அவர் “பிஸ்மில்லாஹ்” என்று கடவுளை தியானம் செய்த படி அதைப் பிரித்துப் பார்த்து சந் தோஷ மடைந்து, “அச்சா, ஸந்தோஷமாச்சு. து நம்பி ளுக்குன்னு நெனெக்காதீங்க. இது ஸப்-இன்ஸ்பெக்டர் எஜ மாங் கிட்ட போய்ச் சேரணும் சரி; நம்பிளிக்கி நேர மாச்சி. இன்னைக்கி ராவுலெயும் வந்து பாக்கறாங்கொ. ஸலாம்; சரி; நேத்து நீங்க குடுத்த பளத்துலெ நம்ப புள்ளெ குட்டிங்களுக்கு ஒண்ணுகூட வல்லைங்கொ.மல்கோபா, தில் பஸங் எல்லாம் கொஞ்சம் தயவ்பண்ணுங்கொ” என்றார். 

ராமகிருஷ்ணன் அன்றைய தினமும் ஒரு கூடை பழங் களை ஆளின் தலையில் வைத்தனுப்பினான். சாயப்பு பழங்களையும் பணத்தையும் அபகரித்துக்கொண்டு நேராக வீடு போய்ச் சேர்ந்து, அன்றைக்குப் பெருத்த பண்டிகை கொண்டாடினார். 

அன்றைய தினம் இரவிலும் பன்னிரண்டு மணிக்கு அமீர்ஹானும் இன்னொருவனும் செட்டியார் வீட்டிற்கு வந்து ஒரு மணி காலம் தங்கி யிருந்தனர். அவர்கள் இருந்தவரை யில் அன்றும் கற்கள் விழவில்லை. மற்ற காலங்களில், முதல் நாளில் நடந்ததுபோலவே, மண்டகப்படி நிறை வேறியது. 

நான்கு தினங்கள் வரையில் நிலைமை அதே மாதிரி இருந்தது. அமீர்ஹான் தாம் எல்லாவற்றையும் அடியோடு நிறுத்திவிட்டதாகவே அழுத்தி அழுத்திச் சொல்லித் தமது சூரத்தனத்தை விளம்பரப்படுத்திக் கொண்டார். அவர் வந்த காலத்தைத் தவிர மற்ற வேளைகளில் வழக்கம்போலவே மரி யாதைகள் நிறைவேறின என்றுசிலர் கூறினரானாலும், சாயப்பு அதை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள்மேல் கோபங்கொண்டு அவர்களை அடிக்கத் தமது கால் செருப்பைக் கழற்றஆரம்பித் தார் . ஆகவே, எவரும் அவரை மறுத்துப் பேசத் துணியா மல், அவர் சொன்னதற்கெல்லாம், ஆமாமா, ஆமாமா என்று உடுக்குத் தட்டினர். 

சாயப்பு அவர்கள் சொன்னதையே ஆதாரமாக வைத் துக்கொண்டு மறுபடி தமக்கு சன்மான மளிக்கவேண்டு மென்று அடிகோலி ராமகிருஷ்ணனிடம் நிஷ்டூரமாகப் பேச லானார். அவன் அவரைப் பார்த்து, ”சாயப்பு, எங்களுக்கு நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும். இன்றிரவு நீங்கள் ரஜா வாங்கிக்கொண்டு உடுப்புகளில்லாமல் தனியாக மாலையிலேயே வந்து பொழுது விடிகிறவரையில் இருங்கள்; நாளைய காலையில் உங்களுக்கு அன்றையதினம் செய்ததுபோல மறுபடி மரி யாதை செய்தனுப்புகிறேன் என்றான். 

அமீர்ஹான் அதற்கு இணங்கி அதுபோலவே ரஜா பெற்றுக்கொண்டு, மாலையிலேயே தமது போஜனத்தை முடித்துக்கொண்டு போலீஸ் உடுப்பின்றி சாதாரண சாயப் புவாக செட்டியாருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்து, ன்னெக்கிப் பாருங்கொ. ஒரு கல்லுக்கூட உளுவாது, உளுந்திச்சின்னா,நாம்ப ஓங்கிளிக்கி குலாம் ஆயிப்போறாங்கொ. நீங்கொ படுத்து நிம்மதியா தூங்குங்கொ” என்று கூறி ஆடம்பரம் செய்ய, செட்டியார் முதலியோர் சிறிது தைரிய மும் மன அமைதியு மடைந்து படுத்துத் தூங்க ஆரம்பித்தனர். 

மணி சுமார் பத்தாயிற்று. மலைப்பிஞ்சுகள் வந்திறங்கத் தொடங்கின. தருக் கூத்தில் பிள்ளையார், கட்டியக் காரன் ராஜா, மந்திரி முதலிய வேஷங்கள் ஒன்றன் பின் னொன்றாக வருவதுபோல பெரும் பெரும் கற்கள் வந்து மேன்மாடத்திலும், முற்றத்திலும் தடார் தடாரென்று விழத் தொடங்கவே, எல்லோரும் திடுக்கிட்டு விழித்துக் கொண் டனர். செட்டியார், ராமகிருஷ்ணன் முதலியோர் அமீர் ஹான் சாயப்புவின் முகத்தைப் பார்க்கின்றனர். சாயப்பு டது கையைத் தமது தாடிக்குள் கொடுத்து, அதன் சிக்கை விலக்கிவிட்டபடி, “நீங்கொ காப்ராப் படவாணாம். போயிப் படுங்கொ. இத்தான் நல்லது. ஆளே இதோ பாக்கடிக்கற நேரத்துலெ நாம்ப புடிச்சுக் குடுக்கறாங்கொ” என்று மிகத் துடியாக மறுமொழி கூறிவிட்டு, மேன்மாடப் படிகளில் போய் எட்டி எட்டிப் பார்ப்பதும், கற்கள் வந்து விழுவதை கவனித்து, அவை எந்த திக்கிலிருந்து வருகின்றன வென் பதை யூகிக்க முயல்வதும், கீழே இறங்கிவந்து, செட்டியார் முதலியோரைப் பார்த்து பெருத்த சந்தோஷ சங்கதி கொண்டுவந்திருப்பவர்போலக் காட்டிக்கொண்டு, “இதோ ஆளு அம்பிட்டுக்கினாம் பாருங்கொ. இன்னம் அஞ்சு நிம்மி சத்துலே அவன் குடுமீலே கைபோட்டு இங்கே கொண்டா ந்து உட்றாங்கொ பாருங்கொ.” என்று கூறுவதுமாக நடிக்க, கற்கள் ஜெர்மன் குண்டுகள் போல பயங்கரமான ஓசையோடு வந்து வீழ்ந்தபடியே இருந்தன. கற்கள் முற்றத்திலும், மொட்டை மெத்தையிலுமே வீழ்ந்தமையால், உள்ளே இருந் தவர்மீது அவை படுமென்ற அச்ச முண்டாக வில்லை யானா லும், அவை எல்லோருடைய மனதிலும் பெருத்த திகிலையும், கலவரத்தையும் உண்டாக்கிக் கலகலக்க அடித்து, அவமானத்தினாலும், அச்சத்தினாலும் சதாகாலமும் கலங்கிச் சோர் வுற்று ஓய்ந்து கிடக்கும்படி செய்தன. 

கற்கள் ஓய்வின்றி விழுந்துகொண்டே இருக்க, அமீர் ஹான் சாயப்பு சமாதானம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனார். அவருடைய சவுடால் சொற்களாகிய கைச்சரக்கு முழுதும் தீர்ந்துபோய்விட்டது. ஆகவே, அதற்குமேல் அவருக்கு கோபமும், வீராவேசமும் உண்டாகத் தொடங் தின. கற்கள் வந்து வீழ்ந்த காலத்தில் எவரேனும் சாயப்பு வினுடைய முகத்தைப் பார்த்தால், உடனே அது தூபம் போட்டதுபோ லாய்விடும். அவர் தமது கண்களை பயங்கர மாக விழித்துக்கொண்டு துருக்கு பாஷையில் தாறுமாறாக வையத் தொடங்கி விடுவார். அவர் கற்களை எறிகிறவனை வைதாரா, அல்லது, செட்டியார் முதலியோர் தம்மை உபத் திரவப் படுத்துகிறதைப் பற்றி அவர்களை வைத்தாரா என் பதை நிச்சயிக்க இயலாது. அதைப் பற்றி அவரிடம் கேட்கவும் எவருக்கும் துணிவு ஏற்படவில்லை. கற்கள் வீழ்ந் ததைப் பார்க்கிலும், அமீர்ஹானுடைய வசைமொழிகளும், அவருடைய பயங்கரமான பார்வையும் அங்கிருந்தோர் லோரையும் அதிகமாக நடுக்குவித்தன. ஆகவே, அமீர் ஹான் தம்முடைய வீட்டை விட்டுப் போவது போது மென்ற எண்ணம் செட்டியார் முதலியோருக்கு உண்டாகி விட்டது. 

தம்மை அபாரமாய் அலட்டிக் கொண்டு அவர் அங்கு மிங்கும் போய்க் குறிப்புகள் பார்த்து முடிவில் ராமகிருஷ் ணனண்டை வந்து, ஸாமி, கல் போட்ற ஆளு இருக்கற ஊட் ை நாம்ப பாத்துட்டோம். நாம்ப காஞ்சூண்டு வெளியே போயி இதோ அஞ்சு நிம்மிஸத்துலெ ஆளெப் புடிச்சுக்கினு வாராங்கொ. தெருக் கதவெத் தாப்பாளு போட்டுக்குங்கொ என்று கூறினார். 

உடனே ராம கிருஷ்ணன் அவரோடு முன் பக்கத்திற்குப் போய் வாசற் கதவைத் திறந்துவிட, அவர், “நீங்கொ கதவைப் போட்டுக்கினு இப்பிடியே இருங்கோ; இதோ ஒரு சண நேரத்துலெ ஆ ளைக் கொண்டாராங்கோ என்று கூறியபடி வெளியில் போய்விட்டார். 

ராமகிருஷ்ணன் கதவை மூடித் தாளிட்டுவிட்டு நடைக் திண்ணையில் படுத்தான். படுத்தவன் தூங்காமல் விழித்துக் காண்டே இருக்கவேண்டு மென்று நினைத்து மனதை திடப்படுத்தி ஊக்கிக்கொண்டே இருந்தானானாலும், சுமார் அரை நாழிகை ஆவதற்குள், அவன் கடுமையான துயிலில் ஆழ்ந்து போனான். அமீர்ஹான் போனவர் போனவரே யானார். பொழுது விடிந்தவுடன் திடுக்கிட்டு விழித்துக் கொண்ட ராமகிருஷ்ணன் மிகுந்த திகில் கொண்டு தவிக்க லானான். தான் தூங்கின சமயத்தில் ஒருகால் அமீர்ஹான் சாயப்பு வந்து கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, கோபித்துக் கொண்டு போயிருப்பாரோ வென்றும், அவர் மறுபடி வந்து தன்னை எவ்விதம் திட்டுவாரோ என்றும் நினைத்து மனக்கலக்க மடைந்தவனாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வர வழக்கம்போல் எல்லா வஸ்துக்களும் ஆஜ ராய் வந்திருந்தன. 

அவன் தனது காலைக்கடமைகளை முடித்துக் கொண்டு மணிக் கணக்கின்படி பழக்கடைக்குப் போய் வியாபாரத்தை நடத்தி, சுமார் பதினோரு மணிக்குக் கடையை மூட உ தேசித்த சமயத்தில், “ஸலாம் ஸாமீ,” என்ற ஓசை உண்டா யிற்று. அந்தக் குரலோசை அவனுடைய மனதில் சு சுருக் கென்று தைத்தது. உடம்பு திடீரென்று தூக்கிப் போட்டது. அவன் உடனே நிமிர்ந்து பார்த்து, அமீர்ஹான் ஹெட்கான்ஸ் டேபில் உடையில் மிக முறுக்காக வந்து நின்றதைக் கண்டு பிரதி ஸலாம் வைத்தான். தான் கதவைத் திறக்கவில்லை யென்று சாயப்பு கோபங்கொண்டு தன் மீது புலி போலப் பாய்ந்து தனக்கு ஜூத்தி மரியாதை நடத்தி வைப்பாரோ என்ற பெருந்திகில் எழுந்து அவனுடைய முகத்தில் அசடு வழியச் செய்தது. அவருடைய வாயிலிருந்து எவ்விதமான சொல் வரப்போகிறதோ என்று மிக ஆவலோடு எதிர்பார்த்த படி, “வாருங்கள் சாயப்பு. இப்படி உட்காருங்கள் என்று மிக விநயமாகக் கூறி உபசரித்தான். உடனே அமீர்ஹான், “ஸாமீ, சங்கதி இன்னதூன்னு புரிஞ்சுப் போச்சு துங்க. நேத்து ராவுமுளுதும் நாம்ப தூங்கவே இல்லெ ஸாமீ. ஒங்க ளெப்பத்தி நாம்ப அலைஞ்ச அலைச்சலு அல்லாஹுத்தாலாவுக் குத்தான் தெரியணுங்கொ. நாம்ப திரியும் வராமெ ஊட்டுக் குப் போயிட்டதாக நெனெச்சிருப்பீங்கொ. நாம்ப மேலான வங்க வவுத்துலெ பொறந்தவங்கொ.நம்பிளுக்குபொய்யி கிய்யி சூதுவாது பேசத் தெரியாதுங்கொ. நாம்ப கண்டத்தெ எஜ மாங்கிட்ட வந்து சொல்லிப்புட்டுப் போவணும்னு வந்தாங் கொ” என்றார். 

அதைக் கேட்கவே ராமகிருஷ்ணனைப் பிடித்து உலுக் கிய திகிலாகிய பெரும்பேய் விலகியது. அவர் முதல்நா ளிரவில் செட்டியாருடைய வீட்டிலிருந்து போனவர் மறு படி வரவில்லையென்பது தெரியவே, அவனுக்கு ஒரு வித துணிவும் ஊக்கமும் பிறந்தன. அவன், “விடியற்காலையில் வழக்கம்போலவே எல்லா வஸ்துக்களும் வாசலில் வந்து விழுந்திருந்தன. அதையும் நீங்கள் நேரில் பார்த்திருந்தால் உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும்” என்றான். 

அமீர்ஹான் ஆத்திரத்தோடு, அதை யெல்லாம் நாம்ப பாக்கலேன்னு நெனெக்கிறீங்களா? அம்பிட்டு யூகம் இல்லா மலா இருவத்தேளு வருசமா நாம்ப இந்தப் போலீசிலெ இருந்து பளமுத்தின்னு கொட்டையும் போட்டாங்கொ. நாம்ப இந்த ஹேட்டுவேலையிலே நாலு கோரு வாங்கினவங்க ஸாமீ; என்னமோ இந்த சாயப்பு நம்ப கடைவாசல்லெ வந்து பளத்துக்காவத் தொண்ணாந்து நிக்கிறாங்கோன்னு எண்ணிக் காதிங்க; நாம்ப ஒரு பேஸ் சொல்லிப்புட்டா, அதெக் கடைசி வரையிலெ நெறைவேத்திட்டுத்தான் மத்த வேலெ செய்யற வங்க; நீங்களும் அதே மாதிரி ஒங்க சொல்லெ நெறவேத் தணும் ஸாமீ” என்றார். 

ராமகிருஷ்ணன், அவருடைய கருத்து இன்னதென் வதைத் தெரிந்துகொள்ள மாட்டாமல் விழிக்க, அதை சுல பத்தில் உணர்ந்து கொண்ட சாயப்பு, என்ன நீங்கொ நே துச் சொன்னதை இதுக்குள்ளற மறந்தூட்டீங்களா ? ஒரு ராவு ரஜா வாங்கிக்கினு, செட்டி வூட்டுலே வந்து இருந்தா, அதுக்கு ஏதோ மரியாதெ பண்ணறேன்னு ஸாமிச் சொன்னாங் களே. அதை மறந்து பூட்டீங்களா?” என்றார். 

ராமகிருஷ்ணன், “அதை நான் மறப்பேனா ! மறக்கவே இல்லை; அதை நான் அவசியம் நிறைவேற்றுகிறேன். நீங்கள் நேற்று இரவெல்லாம் அலைந்து நிஜத்தைத் தெரிந்துகொண் தாகச் சொன்னீர்களே; அந்த சங்கதியைச் சொல்ல வில் லையே” என்றான். அமீர்ஹான்,”என்னாங்கொ ஸாமீ, அதைச் சொல்லாமெப் போவேனா; நம்பிளிக்கி புத்தியில்லென்னுபாத் துக்கினீங்களா! நாம்ப உப்புப் போட்டுச் சோறுதிங்கல்லெ. ஒரு அப்பங்கிட்ட ஒரு காஸ் வாங்கினா அவனுக்கு நாம்ப ஏதாச்சும் ஸகாயம் பண்ண வாணாமா!” என்று கூறி, தணிவான குரலில் ராமகிருஷ்ணனுடைய காதண்டை போய்ப் பேசத்தொடங்கி, “ஸாமி, செட்டியாரு வூட்டுலே இந்த மாதிரி வேலை செய்யறது மனிஸரல்லாங்கொ. இதே மா திரி எத்தினியோஎடத்துலெ நடந்திருக்குது.அதெநாம்ப கண்ணாலெ பாத்திருக்காங்கொ. மனிசருக்குப் பக்கத்துலெ கல்லு வந் உளும். ஆனா, கல்லு மனிசருமேலே படாது. அதுனாலெ மனிசருக்குத் தொந்தரவே உண்டாவாது. இது ஜின் தேவதையோடெ கோளாறுங்கொ. வேறே எதுவுமில்லீங்க. அவஞ் சொன்னான், இவஞ் சொன்னான்னு கண்டவங்களெ யெல்லாம் கேக்க வாணாங்கொ. நாம்ப நம்ப குர்ஆன் சாக்கியாச் சொல்றாங்கொ. இது ஜின் தேவதை செய்யற வேலையே கண்டி வேறில்லீங்கோ. இது தமிழரு மந்தரத்துக் கெல்லாம் அசையாதுங்கொ. நம்ப பறச்சேறிக் கடை மசூதீலே நம்பளவங்க ஒரு பெரியவரு இருக்க றாங்கொ. அவுங்களே மக்கான் ஸாப்னு கூப்பிடுவாங்கொ. அவுருகிட்ட போனா, முடி கவுறு மந்திரிச்சு ஸமாதிலெ வச்சு பாத்யா ஓதிக் குடுப்பாங்கோ. அதெ செட்டியாரு, செட்டி யாரம்மா எல்லாரும் கையிலெ கட்டிக்கணும். கட்டிக்கினா அந்த ஜின் தேவதை ஒடனே இந்த ஊரைவுட்டே ஓடிப் போவும்; கல்லும் உளாது; வேறெ எதுவும் நடக்காது. நீங்கொ செட்டியாருக் கிட்டச் சொல்லி அவசியம் செய் யுங்கொ. என்ன நாம்ப சொன்னது தெரிஞ்சுதுங்களா?” என்றார். 

அதைக் கேட்ட ராமகிருஷ்ணன் மிகப் பாடுபட்டுத் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஐயா, சாயப்பு, நீங்கள் சொன்னபடி, ஏதோ ஒரு தேவதையின் கோளாறி னால்தான் இதுநடக்கிறதென்று நான் சந்தேகங்கொண்டேதா னிருந்தேன். அதையே நீங்களும் சொல்லுகிறீர்கள். நிரம்பவும் சந்தோஷ மாயிற்று. நம் இருவடைய மனதும் ஒத்துப் போய்விட்டது. ஆனால் இந்தச் செட்டியார் ஒரு பைத்தியக்கார மனிதர். அவர் தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று பிடிவாதம் பிடிக்கும் சுபாவமுடையவர்.  அவருக்கு பேய், பிசாசு, ஜின் தேவதை முதலியவை களில் நம்பிக்கையே கிடையாது. இதே மாதிரி நான் அவ ரிடம் சொன்னபோது அவர் என் சொல்லை அசட்டை செய்து, என்னைப் பைத்தியக்கார னாக்கிப் பேசியதன்றி மனிதர் நேரில் இருந்தே இவைகளை நடத்துகிறார்களென் பது நிச்சயமென்று சொல்லி, அதற்குமேல், என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். நீங்கள் இப்போது பிரஸ்தாபித்த ஜின்தேவதையைப்பற்றி நான் அவரிடம் பேசி னால், அவருக்கு என் மேல் கோபம்வரும். உங்களுக்கு இதற்கு முன் கொடுத்த 50 ரூபாய் தண்டமென்று சொல்லி என் னைத் திட்டுவார். இனிமேல் ஒன்றும் கொடுக்கவேண்டா மென்பார். பிறகு என்பாடு திண்டாட்டமாகிவிடும், என் கையில் ஒரு பைஸாகூட இல்லை. செட்டியாருடைய பணத்தை அவருடைய உத்தரவில்லாமல் நான் எடுத்துக் கொடுத்தால், அது திருட்டுக் குற்றமாக முடியும். செட்டியார் வம்புக்கார மனிதர்; என்னோடு விடாமல் உங்களையும் சந்தியில் இழுத்து விடுவார். நீங்கள் தயவுபண்ணி எனக்கு ஒரு சின்ன உதவி செய்யவேண்டும். அது உங்களுக்கு ஒரு பெரிய பிரயாசையல்ல. நீங்கள் செட்டியார் வீட்டிற்கு ஒரே ஒரு நடை ன் நடக்கவேண்டும். எனக்காக, நீங்கள் அதெப் பொருட் படுத்த மாட்டீர்களென்று நினைக்கிறேன்.” என்றான். 

அமீர்ஹான் வியப்பும் மலைப்பும் ஏமாற்றமும் அடைந்த முகத் தோற்றத்தோடு அவனை நோக்கி, “என்னா, சொல் லுங்கொ” என்று ஈனஸ்வரமாகக் கேட்டார். 

ராமகிருஷ்ணன், “வேறொன்று மில்லை. நீங்கள் நேராக செட்டியாரிடம் போங்கள், இரவு முழுதும் அலைந்து, பல ரிடம் விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லுங்கள். என்னவென்று அவர் கேட்பார். அந்த மோட்டார் ஓட்டி இவைகளைச் செய்யவில்லை யென்பது நிச் சயமாகத் தெரிந்து போய் விட்டதென்றும், அதே வீதியி லுள்ள சில செட்டியார்கள் இவருக்கு சொத்து அதிக மாகச் சேர்ந்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்டு இவரை ஒழித்துவிட வேண்டுமென்று கருதி இப்படிச் செய்கிறார்க ளென்றும், நாலா பக்கங்களிலுமுள்ள வீடுகளில் ஆள்கள் மறைந்திருந்து கற்களை எறிகிறார்களென் றும் சொல்லுங்கள். ‘நான் இறந்து போவதில் தெருவா ருக்கு என்ன அநுகூலம்’ என்று செட்டியார் கேட்பார். அவருடைய குழந்தைகள் இரண்டும் மைனரா யிருப்பதால், அவர் இறந்து போகுமுன் உயில் எழுதி வைப்பாராதலால், மைனர்களுடைய சொத்தைப் பாதுகாத்து, உயிலின் நிபந் தனைகளை நிறைவேற்றி வைக்கும்படி அந்த வீதியிலுள்ள முக்கியஸ்தர்களில் இரண்டு மூன்று பேரை செட்டியார் நிய மிப்பாராதலால், மைனர்களுடைய சொத்தைப் பலவகை களில் அபகரிக்கலாமென்ற திருட்டெண்ணத்தோடு, சிலர் கட்டுப்பாடாகத் தங்களுக்குள் ஏற்பாடு செய்துகொண்டு செட்டியார் இறந்துபோகும் வழியைச் செய்கிறார்கள் என்றும், அவரைக் கொல்ல, இதைத் தவிர வேறு பல ரகஸிய ஏற்பாடுகளையும் செய்துகொண் டிருக்கிறார்க ளென்றும், இதை நிறுத்துவது மிக பிரயாசையான காரியமென்றும் நீங் கள் செட்டியாரிடம் சொல்லுங்கள். இவ்வளவே நீங்கள் செய்யவேண்டிய வேலை. இந்த மாதிரி நீங்கள் செட்டியா ரிடம் சொல்லிவிட்டு உடனே நேரில் இங்கே வாருங்கள். நான் உங்களுக்குச் சொன்னபடி 50 ரூபாயோடு இன்னொரு ஐந்து ரூயாய் சேர்த்து 55 ரூபாயாக உடனே கொடுக்கிறேன் பழங்களும் தருகிறேன். நீங்கள் சந்தோஷமாக வீட்டிற்குப் போகலாம்” என்றான். 

அதைக் கேட்ட அமீர்ஹான் சந்தோஷமாகப் புன்னகை செய்து, ராமகிருஷ்ணனுடைய கைகளைப் ட்டித்துக் குலுக்கி, அச்சா பொம்மன். நாம்ப எத்தினியோ பாப்பா ரெப் பாத்திருக்காங்கொ நீங்கொ வயசிலே சின்னவங்களா இந்தாலும், ஒங்கிளிக்கி பாரி புத்தி இருக்குதுங்கொ. இதோ போயி நீங்க சொன்னாப்லெ செட்டியாருக்கிட்ட சொல்லிப்புட்டு அஞ்சு நிம்மிஸத்துலே வர்றாங்கோ. அது வரையிலே நீங்கொ எங்கெயும் போயிட வாணாங்கோ ” என்றார். 

ராமகிருஷ்ணன், “உங்களுக்கு சந்தேகமானால் நான் ரூபாயை எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு உங்க ளோடு கூடவே வந்து, பக்கத்து வீட்டுத் திண்ணையில் இருக் கிறேன். நீங்கள் செட்டியாரிடம் போய் சொல்லிவிட்டு நானிருக்கும் இடத்திற்கு வாருங்கள். நான் உடனே பண தைத் தருகிறேன். பழங்களை நாளையதினம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் ” என்றான். 

அமீர்ஹான் சந்தோஷத்தோடு அந்த ஏற்பாட்டிற்கு ணங்கினார். ராமகிருஷ்ணன் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு பழக்கிடங்கை மூடிப் பூட்டிவிட்டு அமீர்ஹானு டன் புறப்பட்டு செட்டியாருடைய வீட்டிற்கு வந்து சேர்ந் தான். வந்தவன் அண்டை வீட்டின் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அமீர்ஹானை செட்டியாருடைய வீட்டிற் குள் அனுப்பினான். 

செட்டியார் மேன்மாடத்தி லிருந்தாராதலால், அமீர் ஹான், “செட்டியார் ஐயா, செட்டியார் ஐயா” என்று உரக்க அழைத்துக்கொண்டு படிகளின் வழியாக மேலே ஏறிப் போன காலத்தில் ராமகிருஷ்ணன் விரைவாக செட்டியா ருடைய வீட்டின் அடிப்பாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த தனது தாயிடம் அவசரமாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு முன் பக்கம் வந்து, மெத்தைப் படிக்கட்டின் மேல் ஏறி மறைந்து நின்று, அமீர்ஹான் செட்டியாரிடம் என்ன சொன்னா னென்பதை கவனித்துக் கேட்கத் தொடங்கினான். 

அமீர்ஹான் செட்டியாரிடம் மிக ஆடம்பரமாகப் பேசி, தாமும், போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும், சுமார் ஐம்பது ஜெவான்களும் முதல் நாள் இரவு முழுதும் அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பீடிகை போட்டு, ராமகிருஷ்ணன் சொல்லிக் கொடுத்தபடி சங்கதிகளை, சிறிது தணிவான குரலில், கூறி செட்டியாருக்கு முதல்தரமான நேர்வாள மாத்திரையைக் கொடுத்துவிட்டுத் தாம்போவதாகக் கூறி ஸலாம் செய்துவிட்டுத் திரும்ப, அது வரையில் ஒளிந்திருந்து விஷயங்களை நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் விரல்களை ஊன்றி சிறிதும் ஓசையின்றி மிக விசையாகக் கீழே இறங்கி ஓட்டமாக ஓடி, அண்டைவீட்டுத் திண்ணையை யடைந்து, ஒன்றையு மறியா பரமஸாதுபோல வீற்றிருக்க, அடுத்த நிமிஷம் அமீர்ஹான் சந்தோஷத்தினால் மலர்ந்த முகத்தோடு அங்கே வந்து, அவ னுடைய விருப்பத்தின்படி தாம் காரியத்தை நிறைவேற்றி விட்டதாக முக அசைப்பு, கண் ஜாடை முதலியவற்றால் தெரிவிக்க, ராமகிருஷ்ணன் வாயைத் திறவாமல் 55 ரூபாய் நோட்டுகளை அவருடைய கையில் வைத்து, மிக நயமாகக் குனிந்து ஒரு ஸலாமும் செய்தான். 

அமீர்ஹான் மௌனம் சாதித்தபடி நோட்டுகளை எண்ணிப் பார்த்துத் தமது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு இரசுஸியமான குரலில், ‘பளத்துக்கு நாளைக் காலையிலெ வாறாங்கோ. பிஸ்மில்லாஹ். ஸாமீ, போய்வர் றாங்கோ. அலைக்கும் ஸலாம் ” என்று தழுதழுத்த குரலில் கூறி மிக வணக்கமாகக் குனிந்து தரையைத் தொட்டு நிமிர்ந்து ஸலாம் வைத்து அவ்விடத்தை விட்டு மெதுவாக ஈழுவிவிட்டார். 

உடனே ராமகிருஷ்ணன் அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டுத் தனது ஜாகைக்குப் போய்த் தனது ஸ்நானத்தை முடித்துக்கொண்டு செட்டியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். 

செட்டியாருடைய வீட்டில் கற்கள் விழத்தொடங்கிய நாள் முதல் நாச்சியாரம்மாளுடைய தேக நிலைமையும் மிகப் பரிதாபகரமா யிருந்ததாகையால், அம்மணியம்மாள் தனது சொந்த ஜாகைக்குப் போகாமல் அங்கேயே இருந்து விட் டாள். அந்த வீட்டிலேயே தனியான ஓர் அறையில் அவளும் ராமகிருஷ்ணனும் தமது போஜன காரியத்தை நடத்திக் கொண்டு எப்போதும் அங்கேயே இருந்து வந்தனர். 

செட்டியாரம்மாள் தனது இளங் குழந்தைகள் இரண் டையும் கவனிக்க இயலாதவளாய் சித்த ஸ்வாதீன மற்ற வள்போ லிருந்து வந்தாளாதலால், அம்மணியம்மாள் செட்டி யாரம்மாளுக்கும், அவளுடைய குழந்தைகளுக்கும் ஆக வேண்டிய சகலமான காரியங்களையும் நிமிஷக் கணக்கில் செய்து, சொந்தத் தாயினும் பன் மடங்கு அதிக அக்கரை யாகவும் கனிகரமாகவும் நடந்து, கண்ணை இமைகள் காப் யதுபோலப் பாதுகாத்து வந்தாளாதலால், அம்மணியம்மாள் எழுந்திரென்றால், செட்டியாரம்மாள் எழுந்திருப்பாள் உட்காரென்றால் உட்காருவாள்; எந்தக் காரியமானாலும், அம்மணியம்மாளுடைய யோசனையைக் கேட்டு அதன்படியே நடந்து கொள்வாள். 

செட்டியார் ஒரே படுக்கையாகப் படுத்துவிட்டதைக் காண, தன் புருஷர் இறந்துபோய் விடுவாரோ என்ற பெருத்த கவலையும், அதற்குமேல் தான் யாருடைய பாது காப்பில் இருக்கிறது என்கிற திகிலும் உண்டாகிவிட்டன. அந்த நிலைமையில், அமமணியம்மாளும், ராமகிருஷ்ணனும் பரம மித்திரர்களாய் அன்பே வடிவெடுத்ததுபோல் நடந்து கொண்டதைக் காண, தன் புருஷர் இறந்துபோனால்கூட, தான் தனது கடைசிக் காலம்வரையில் அம்மணியம்மாளை யும், ராமகிருஷ்ணனையும் விட்டுவிடக் கூடாது என்ற மன உறுதி ஏற்பட்டுக் கொண்டே வந்தது. அமீர்ஹான், செட்டி யாரிடம் செய்தி சொல்ல மேன்மாடத்திற்குப் போன காலத்தில் ராமகிருஷ்ணன் தன் தாயிடம் சில வார்த் தைகள் சொல்லிவிட்டுப் போனதாகக் குறித்தோமல்லவா. அவன் எதைப்பற்றி அவ்வாறு பேசினான் என்ற ஐயம் வாசகர்களுக்கு உண்டாவது சகஜமே. அவள் உடனே செட்டியாரம்மாளை அழைத்துக்கொண்டு, பின் பக்கத்துப் படி வழியாக மேலே ஏறி, அங்கு நடந்த சம்பாஷணையை செட்டியாரம்மாள் கேட்கும்படி செய்து அழைத்துக்கொண்டு வருமாறு கூறிவிட்டு அவன் சென்றான். அது போலவே அவர்கள் இருவரும் மேலே சென்று சம்பாஷணையின் கருத்தைத் தெரிந்துகொண்டு கீழே இறங்கி வந்தனர். 

அந்த வீதியி லிருந்த தமது சுயஜாதி மனிதர் தன் புரு ஷரைக் கொன்றுவிட்டு, தங்கள் சொத்து முழுதையும் அப கரித்துக்கொள்ள உத்தேசித்திருக்கிறார்கள் என்ற செய்தி நாச்சியாரம்மாளுக்குப் பெருத்த இடிபோலவே இருந்தது. அவளுடைய மனதும், உடம்பும் அடியோடு தளர்ந்து வீழ்ந்து போயின. அவள் நடைப்பிணம்போ லாய் அம்மணி யம்மாளுடைய கைக்குழந்தைபோல மாறிவிட்டாள். அம்மணி யம்மாள் தனது ஆக்லாதத்தை அடக்க மாட்டாதவளாய், நாச்சியாரம்மாளைப் பார்த்து, ‘சங்கதியைக் கேட்டீர்களா? “கிடந்ததெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை’ என்று பழமொழி சொல்லுவார்கள். அதுபோல, உங்கள் எஜமானர் ஆயிரம் பாடுபட்டு சொத்தைத் தேடு கிறது. அவரோடு பிணைப்பட்ட மனைவியாகிய நீங்கள் மலைபோல இருக்கிறீர்கள். ராம லக்ஷ்மணர்போல் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நீங்கள் மூன்று பேரும் வாயில் விரலை வைத்துக்கொண்டு போகிறது. ஊரிலிருக் கும் நடுவீதி நாராயணர்கள் உங்கள் சொத்தை யெல் லாம் குந்தினாப்போல் அடித்துக்கொண்டு போகிறதா! இது நல்ல நியாயமா யிருக்கிறது. அம்மா, நீங்கள் செட்டியா ரிடம் பேசுங்கள். அவருடைய உயிருக்கு ஹானி ஏற்படவே போகிறதில்லை. அவர் பயந்து உயில் எழுதிவைக்க எத்த னித்தால், சொந்த மனிதர் யாரையும் நிர்வாகஸ்தராக நிய மிக்க வேண்டாமென்று சொல்லுங்கள். அவர் யாரையும் நியமிக்காமல் செய்யுங்கள். நியமித்தால், பிறகு நீங்களும் குழந்தைகளும் அநியாயமாகப் பராரி ஆகிவிடுவீர்கள் ” என்று கூறி உருவேற்றிக்கொண்டே இருக்கத் தொடங்கி னாள். அமீர்ஹான் சொன்ன செய்தி உண்மையாயிருக்கலா மென்று செட்டியாரும் நம்பிவிட்டாராதலால், அவருக்கும் அபாரமான திகிலும், கலவரமும், கோபாவேசமும் உண்டாகி விட்டன. அந்த வீதியிலிருந்த சுயஜாதி மனிதர்கள் துராசை கொண்டு அப்படியும் செய்வார்களா என்ற வியப் பும், அத்தனை பேர்கள் சேர்ந்து தம்மைக் கொல்ல எத்தனிக் கையில் தாம் எப்படித் தப்புவது என்ற பீதியும் உண்டாகி விட்டனவாதலால், இரண்டு மூன்று தினங்களில் செட்டியா ரது நிலைமை சம்சயமானதாகி விட்டது. மேலும் சில தினங் களில் அவர் இறந்துவிடுவார் என்று பிறர் நினைப்பதற்குரிய குறிகள் ஏற்பட்டுப் போயின. 

ராமகிருஷ்ணன் அநேகமாய் எப்போதும் அவருக்குப் பக்கத்தில் இருந்து அவரைப் பாதுகாத்து வந்தானாயினும், அவன் இல்லாத சமயங்களில் நாச்சியாரம்மாள் மேன்மாடத் திற்குப் போய் அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் சொரிந்து அழுது புலம்பி, தங்கள் சுயஜாதி மனிதர்களுடைய சதியா லோசனையைப்பற்றிப் பிரஸ்தாபித்து அவர்கள் யாரையும் கிட்டச் சேர்க்க வேண்டாமென்று கூறிக் கெஞ்சி மன்றாடி விட்டு வந்து சேருவாள். 

அந்த நிலைமையில் கற்கள் வீழ்வது முதலிய தினப்படி மண்டகப்படி நடந்துகொண்டே போனதாகையால், செட்டி யார் அந்தப் பேரபாயத்திலிருந்து தப்ப வகையறியாதவ ராய்க் கிடந்து தத்தளித்தார். 

அந்த சமயத்தில் ராமகிருஷ்ணன் செட்டியாருக்குப் பக்கத்திலேயே சதாகாலமும் இருந்து, அவரைத் தூக்கி உட்காரவைப்பது, வாயில்கஞ்சியை வார்ப்பது,உடம்பை சுத்தி செய்து விடுவது, படுக்கைகளை மாற்றுவது, அவரைப் படுக்க வைப்பது முதலிய சகலமான காரியங்களையும் செய்து, அடிக் கடி அவரைப் பார்த்துக் கண்ணீர் விடுத்து, “ஐயோ,மலை போல இருந்த உடம்பு துரும்புபோ லாய்விட்டதே; பார்க்க, சகிக்க வில்லையே. உங்கள் ஜீவதசைக்குப் பிறகு எங்களை இவ்வளவு பட்சமாக யார் காப்பாற்றப் போகிறார்கள். எஜமானியம்மாளும் குழந்தைகளும் உங்க விட்டு எப்படித்தான் இருப்பார்களோ? சொந்தக்காரர்கள் எல்லோரும் இப்படி சதி செய்கிறார்களே! அவர்கள் சொத்து களை யெல்லாம் அபகரித்துக் கொண்டால்கூட, அக்கரை இல்லை. நானும் என் தாயாரும் வீடு வீடாய்ப் பிச்சை யெடுத்தா வது எஜமானியம்மாளையும் குழந்தைகளையும் நாங்கள் கடைசி வரையில் மானமாக வைத்துக் காப்பாற்றி விடுவோம். ஆனால், அவர்கள் உங்களை நினைத்து அழுதழுது உருகுவார்களே. அதற்கு நாங்கள் எவ்விதமான பரிகாரத்தைத் தேடுவோம்” என்று மிக உருக்கமாகக் கூற, செட்டியாரைப் பிடித் தணைத்துக்கொண்டு கண்ணீர் விடுத்துத் தேம்பித் தேம்பி அழுதான். 

அவனுடைய ஆழ்ந்த அன்பையும் மன உறுதியையும் கண்டு செட்டியாரும் கண்கலக்க மடைந்து தவித்தவராய், அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாமல் மௌனமாயிருந்தார். உடனே ராமகிருஷ்ணன், “எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது. அப்படி நாம் செய்தா லென்ன என்றான். 

செட்டியார், “என்ன யுக்தி?” என்றார். 

ராமகிருஷ்ணன், “நாம் இந்த வீட்டிலேயே இருக்கிற வரையில் இந்த அவகேடு நீங்கப்போகிறதில்லை. வேறே பேட் டையில் மறைவாக இருக்கும் ஒரு ட்டை வாடகைக்குப் பேசிக்கொண்டு இரகஸியமாய் இரவில் நாமெல்லோரும் அங்கே போய் விடுவோம். இங்கே போயியை மாத்திரம் வாசலில் இருக்கச் செய்து முன் கதவை அவன் எப்போதும் சும்மா சாத்தி வைத்திருக்கச் செய்வோம். நாம் உள்ளே இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கோண்டே இருக் கட்டும். நான் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு. வருகிறேன். அங்கே நீங்களெல்லோரும் எவ்வித அபாய மும் இன்றி யிருக்கலாம்” என்றான். 

அதைக் கேட்ட செட்டியார் சிறிது காலம் யோசனையி லாழ்ந்திருந்து, “அது சரிப்படாது. இங்கே வீட்டின் அடியில் இரும்புப் பெட்டியைப் புதைத்து அதில் சகலமான சொத்துகளையும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வளவு சுலபத்தில் நாம் எடுத்துக்கொண்டு போக முடியாது. துக் கொண்டு போனாலும் புது இடத்தில் இவ்வளவு பந்தோபஸ்து இராது. நாம் உயிரை விட்டாலும் ங்கேதான் விட வேண்டும்” என்றார். 

அதைக் கேட்ட ராமகிருஷ்ணன் முகவாட்ட மடைக் சிறிது சோர்ந்திருந்த பின், “அப்படியானால், நாம் இன் னொரு காரியமாவது செய்வோமே. உங்கள் உடம்பு இளை துத் துரும்புபோ லாகிவிட்டது. எனக்குத் தெரிந்த பிர பல டாக்டர் ஒருவர் ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் மங்களூர் பிராம்மணர்; வெள்ளைக்காரர் போல மீசை, தொப்பி முதலிய வைத்துக் கொண்டிருப்பார். ஆனால் வைத்தியம் செய்வதில் இப்போது ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவருக்கு நிகரானவர் வேறு எவரும் இல்லை. அவர் ஒரு பார்ஸீ லேடியைக் கல்யாணம் செய்துகொண் டிருக்கிறார். அவளும் டாக்டர் பரீட்சையில் தேறியவள். அவருக்குப் பகலெல்லாம் ஜெனரல் ஆஸ்பத்திரியில் வேலை சரியாயிருக் கும். மாலையில்தான் அவர் வெளியில் வைத்தியம் செய் வார்; அவரை அழைத்து வந்து உங்களுடைய உடம்பைக் காட்டி, ஏதாவது மருந்து கொடுக்கச் செய்வோம். பின் பலஹீனம் நீங்கும்படி மருந்து கொடுத்தால், நீங்கள் தேறிப்போவீர்கள். இதையாவது அவசியம் நீங்கள் செய்ய வேண்டும்.” என்றான். 

செட்டியார், “அதை வேண்டுமானால் செய்யலாம். இன்று மாலையில் வரச்சொல்லும் ” என்றார். ராமகிருஷ்ணன் உடனே எழுந்து வெளியில் போய் சுமார் ஒருமணி காலம் கழித்துத் திரும்பி வந்து, “நான் அவரைப் பார்த்து சங்கதி யைச் சொன்னேன். அவர் இன்று மாலை சரியாக ஏழுமணிக்கு வருவதாகச் சொன்னார்; அதற்கு முன் வந்து நினைப்பூட்டச் சொன்னார். அவரிடம் உள்ள ஒரு விசேஷ குணம் என்னவென்றால் அவருக்கு நல்ல கைராசி உண்டு. அவர் வெறும் ஜலத்தைக் கொடுத்தால் கூட, தீராத நோயெல்லாம் தீருகிறதாம். அதுவும் நோயாளி தக்க பெரிய மனிதராயிருந் தால், இராத்திரி முழுதும் நோயாளியின் பக்கத்திலேயே இருந்து, மணிக்கணக்கின்படி மருந்து கொடுத்து, ஆக வேண் டிய உபசரணைகளைச் செய்ய, தம்முடைய சம்சாரத்தை இரவு முழுதும் இருக்கச் செய்கிறார்; அதற்காகப் பணம் கேட்ப தில்லை. அந்தப் பெண் எப்படி இருக்கிறாள் தெரியுமோ. சுந்தர்வப் பெண் என்பது அவளுக்கே தகும். உடம்பு தந்தத்தில் கடைந்தெடுத்ததுபோலிருக்கிறது. வயது சுமார் பதினெட்டிருக்கும். அவள் சிரித்த முகத்தோடு நோயா ளிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து செய்யும் உபசரணையை நாம் இன்னதுதா னென்று சொல்லமுடியாது” என்றான். 

அந்த வரலாற்றைக் கேட்டு செட்டியார் மிகுந்த சந் தோஷ மடைந்தார். அன்று மாலை ஆறு மணிக்கு ராமகிருஷ்ணன் டாக்டரை அழைத்து வரப் புறப்பட்டான். புறப் வட்டவன் செட்டியாரை நோக்கி, “அவர் சின்ன மோட்டார் வண்டி வைத்திருக்கிறார். அதில் இரண்டு பேர்தான் உட்கார லாம். அவரும் அவருடைய மனைவியும் வருவார்கள். அவரு டைய வீடு இதோ பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறது. நான் நடந்து வரப்போகிறேன். ஆகையால் அவர்கள் எனக்கு முன் இங்கே வருவார்கள். வந்தால் மேலே அழைத்து வரும்படி போயி யிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். இரண்டு பேரையும் நாற்காலிகளில் உடகார வைத்து மரியாதையாக நடத்துங்கள். அவர் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் ” என்று கூறிவிட்டுச் சென்றான். 

சரியாய் ஏழு மணி ஆன சமயத்தில் காவற்காரன் டாக் டரையும் அவருடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு மேலேவந்து சோந்தான், டாக்டர் வெள்ளைக்காரர் போலவே காணப்பட்டார். அவருக்கு வயது இருபத்தைந்திற்குள் ளாகவே இருக்கும். தலையில் பார்ஸீ தொப்பி, ஸர்ஜ் கோட் நிஜார், பூட்ஸ் முதலிய அலங்காரங்களுடன் இருந்தார். அவ ருடைய முகத்தில் மேல் உதட்டின் நடுவில் மாத்திரம் இரு புறங்களிலும் வெட்டப்பட்ட புது நாகரிக மீசை காணப்பட் டது. அவர் கண்களில் ஸ்பிரிங் கண்ணாடி யணிந்திருந்தார் அவர் தம்முடைய யௌவன மனைவியின் வலது கையைத் தமது இடது கையில் கோத்துக்கொண்டிருந்தபடியே மேலே வந்தார். அவள் தத்ரூபம் வெள்ளைக்காரிபோல தொப்பி, ட்ஸ், மார்பில் தணிவாயிருந்த ஜாக்கெட், பார்ஸீ தாவணி, கழுத்தில் முத்துமாலை, மெல்லிய தங்கச் சங்கிலி முதலிய அலங்காரங்களுடன் காணப்பட்டாள். அவளும் தங்க விளிம் புள்ள கண்ணாடியை மூக்கில் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையாபரணங்கள் சொற்பமாகவே இருந்தனவானாலும், அவளுடைய இயற்கை வனப்பும், தளதளப்பும், யௌவனச் செழுமையும், அங்கங்களின் கணக்கான உருட்சி திரட்சியும், தந்த நிறமும், முகவசீகரமும், முத்துக்கள்போ லிருந்த பற்க ளின் அழகும் ஒன்று கூடி, காண்போர் மனதை ஒரே நொடியில் கவர்ந்து மயக்கத்தக்கவையா யிருந்தன. முக்கியமாய் அவளுடைய மார்பழகே காண்போர் உயிரைப் பருகத்தக்க சாதனமாய் அமைந்திருந்தது. மெருகு கொடுக்கப்பட்ட தங் தம்போ லிருந்த கழுத்தின் கீழ்ப்பாகம். ஸ்தன்னியம் வரை யில் நன்றாகத் திறந்துவிடப் பட்டிருந்ததாகையால், கீழ்ப் பாகத்தின் மேன்பாடு கண்கொள்ளாக் கவர்ச்சி வாய்ந்ததா யிருந்ததென்பது நிதரிசனமாக விளங்கியது. 

இயற்கையிலேயே ஸ்திரீசபல முடைய செட்டியார் தமது துர்ப்பலமான நிலைமையிலும் அந்தப் பெண்ணின் முகத்தையும், மார்பையும், மற்ற அங்கங்களையும் சரேலென்று இரண்டு மூன்று தடவை பார்த்த பிறகு டாக்டருக்கு உப சார மொழிகள் கூறி, இருவரும் உட்கார்ந்து கொள்ளும்படி இரண்டு நாற்காலிகளைக் காட்டினார். ஆனால் அவர்கள் உட் காரவுமில்லை; ; செட்டியாரை அவ்வளவாய் இலட்சியம் செய்ததாகக் காட்டிக் கொள்ளவு மில்லை. 

டாக்டர் உடனே தமது ரப்பர் குழாயை எடுத்து காது களில் மாட்டிக்கொண்டு, செட்டியாருடைய ஹிருதயத்தின் பரிசோதிக்கத் தொடங்கினார். அவ்வாறு சிறிது நேரம் நிலைமையைப் சோதித்த பின் அவர் செட்டியாருடைய கண் ணிமைகளைப் பார்த்தார்; நாவை நீட்டச்செய்து பார்த்தார். உடனே டாக்டருடைய முகம் சந்தோஷமற்றதாக மாறிப் போயிற்று. அவர் இங்கிலீஷிலும் கொச்சையான தமிழி லும் மணிப்பிரவாளமாகப் பேசினார். அவருடைய வாயிலிரு ந்து வார்த்தைகள் வருவதே மிக அரிதாயிருந்தது. முடிவாக அவர் செட்டியாரைப் பார்த்து, “சரி; நான் ராமகிருஷ்ணாவை என் ஜாகையில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன்; அவரிடம் மருந்து கொடுத்தனுப்புகிறேன்.” என்றார். 

செட்டியார், “இப்போது உடம்பின் நிலைமை எப்படி இருக்கிறது?” என்றார். டாக்டர், “இந்த நிலைமையில் இன்னம் 48 மணிக்குள் ஹிருதய ஓட்டம் நின்று போய் விடும். அதுவரையில் நான் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் நான் மருந்து கொடுத்துப் பார்க்கிறேன். அதில் பிழைத்தால், உண்டு. இல்லையானால், இல்லை தான். அதிருக்கட்டும். நீங்கள் உயில் ஏதாவது எழுத வேண்டு மானால் நாளைக்கு எழுதிவிடுங்கள். அதற்குமேல் உயிர் நில்லாது. என் மருந்தில், உயிர் திரும்பினால், உயிலை ரத்து செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டுத் தமது மனையாளுடன் வெளியில் போய்விட்டார். 

அதன்பிறகு அரைமணி காலம் கழிந்தது. ராமகிருஷ் ணன் மருந்து முதலிய உபகரணங்களோடு வந்து சேர்ந் தான். வந்தவன் செட்டியார் முற்றிலும் தளர்ந்து ஏக்கமாகப் படித்திருந்ததைக் கண்டு, முகவாட்டமும், கண்கலக்கமும் அடைந்து, “நல்ல வேளை நாம், இப்போதாவது டாக்டரை வரவழைத்தோம். இன்றும் நாளையும் நாம் பேசாமலிருந் தால், மறு நாள், இந்த வீடு விசனத்தில் ஆழ்ந்துபோகும். இதோ டாக்டர் சில உபகரணங்களை அனுப்பி இருக்கிறார். ப்பரினால் செய்த காதுமூடிகள் சிலவற்றைக் கொடுத்திருக் கிறார். நீங்களும் அம்மாளும் இவைகளைக் காதுகளில் சொரு கிக் கொண்டே இரவில் படுத்திருந்தால் கற்கள் விழும் ஓசை உங்களுக்குக் கேட்கவே கேட்காது. அந்த ஓசை தாக்கித் தாக்கியே, ஹிருதயம் பலஹீன மடைந்துபோ யிருக்கிற தாம். இவைகளைக் காதுகளில் போட்டுக்கொண்டே படுத் திருந்தால் ஓசையே கேட்காது. அதுவுமன்றி, உங்களுக்கு ஒரு மணிக்கு ஒரு தரம் மருந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். அதற்கு, இன்னம் அரை மணியில் அவருடைய மனைவியே வருவாள்; வந்து இரவு முழுதும் உங்களுக்குப் பக்கத்திலேயே இருப்பாள். காலையில் வீட் டின் வாசலில் வஸ்துக்கள் விழுவதை வேலைக்காரி உங்க ளிடம் சொல்லக் கூடாது. அதைப் பற்றி நீங்களும் உங்கள் மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது. இவ்வளவே, அவர் இப்போது சொன்னது” என்று கூறினான். 

அதைக்கேட்டு செட்டியார் சிறிதளவு திருப்தியடைந்தாரானாலும், தாம் இறந்து போகப் போகிறோம் என்ற எண்ணம் அவருடைய மனத்தைப் பெருத்த பேய் போலப் பீடித்துக் கொண்டது. மறு நாள் தாம் எப்படியும் ஓர் உயில் எழுதி அதை ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். என்ற நினைவு தலையெடுத்து நின்றது. அவர் ராமகிருஷ்ண னிடம் அதிகமாய்ப் பேசாமல் சோர்ந்து படுத்திருந்தார். அதற்குமுன் சொற்பமாய் இறங்கிய பால் கஞ்சியும் அன்று இறங்காமல் குமட்டலை உண்டாக்கியது. ஆகவே, அவர் சுத்த உபவாசமாகப் படுத்துவிட்டார். 

சரியாக ஒன்பது மணிக்கு டாக்டருடைய மனைவி, கையில் ஒரு சிறிய தோல் பெட்டியுடன், டக்டிக்கென்று நடந்து கொண்டு மேலே வந்து சேர்ந்தாள். 

அப்போது அங்கிருந்த ராமகிருஷ்ணன் அவளை வறவேற்க அவள் பேசாமடந்தைபோல் எவரோடும் பேசாமல், கொச் சைத்தமிழில் தந்திபாஷையில் பேசியபடி ரப்பர் மூடிகளை எடுத்து செட்டியாருடைய இரண்டு காதுகளிலும் பொருத்தி, தான் கொண்டுவந்திருந்த திராவகத்தில் அரை அவுன்ஸ் அளவு செட்டியாருக்குக் கொடுத்துக் குடிக்கச் செய்துவிட்டு, ஒரு நாற்காலியை இழுத்து செட்டியாருடைய படுக்கையண்டை போட்டு அதில் உட்கார்ந்து கொண்டாள். 

மிச்சமாயிந்த இரண்டு ரப்பர் மூடிகளை செட்டியார் அம் மாளுக்குக் கொடுத்துவிட்டுப் படுத்துக் கொள்ளும்படி அவள் ராமகிருஷ்ணனிடம் கூற, அவன் அவ்வாறே செய்தான். சிறிது நேரத்திற் கெல்லாம் செட்டியார் மயக்கத்தில் ஆழ்ந் போனார். ராமகிருஷ்ணன் கீழே சென்று ரப்பர் மூடிகளை செட்டியாரம்மாளுடைய காதுகளில் மாட்டி தன் தாயாருடன் படுக்கச்செய்து விட்டு, மேலே வந்து ஒரு பக்கத்தில் படுத் துக்கொண்டான். அன்றைய இரவிலும் கற்கள் வழக்கம் போல வீழ்ந்தனவானாலும், அவற்றின் ஓசை செட்டியா ரையோ, செட்டியாரம்மாளையே பாதிக்கவில்லை. மறுநாள் காலையில் தெருவில் வரிசைகள் வந்ததாக வேலைக்காரி அவர்க ளிடம் சொல்லவுமில்லை. பார்ஹீலேடி இரவு முழுதும் விழித் திருந்து மணிக்கணக்கின்படி செட்டியாருக்கு மருந்து கொடுத்து காலையில் புறப்பட்டுப் போய் விட்டாள். 

காலையில் விழித்துக் கொண்டெழுந்த செட்டியார் சிறிது முகத் தெளிவடைந்தவராகக் காணப் பட்டார். அவர் சரியாகத் தூங்கிப் பல தினங்க ளாகிவிட்டனவா லால், அன்றிரவு முழுதும் நன்றாகத் தூங்கி எழுந்தது. முகத்தின் விகாரக்களையை மாற்றியது. ஆனால், ஆகார மின்மையால், துர்ப்பலம் அதிகமாயிருந்தது. 

அன்றைய தினம் அவருக்கு ஆகாரம் கொடுக்கவந்த நாச்சியாரம்மாள் அவர் 48 மணிக்குமேல் உயிருடனிருக்க மாட்டரென்று டாக்டர் சொன்ன விஷயத்தைப் பற்றிப் பேசி அவரைக் கட்டிக்கொண் டழுது, “ஐயோ, நீங்கள் போனபின், நாங்கள் எப்படி இருப்போம். தெருவார் பணத்தைக் கொள்ளை யடிப்பதற்காக நம் குழந்தைகளைக் கொன்றாலும் கொன்று விடுவார்களே. உங்களுக்கு முன் என் பிராணனும் போய் விடுவது நிச்சயம். நீங்கள் இன்று உயில் எழுதி ரிஜிஸ்டர் செய்து விடுங்கள் நாம் இருவரும் நாளையதினம் இறந்து போய்விடப் போகி றோம். நம்முடைய ஐயரும், அவருடைய தாயாரும் குழந் தைகளை போஷிப்பதென்றும், அவர்கள் மேஜர் ஆகிறவரை யில் சொத்துக்களைக் காப்பாற்றி அவர்களிடம் ஒப்புவிக்கிற தன்றும் எழுதிவிடுங்கள்’ என்று தேம்பித் தேம்பி அழுது கூறிக் கெஞ்சி மன்றாடினாள். 

செட்டியார், “நீ பயப்படாதே. டாக்டர் கெட்டிக்காரர். நேற்றிரவில் அவர் செய்த சிகிச்சையில் என் உடம்பு கொஞ் சம் தெளிவடைந்திருக்கிறது. இன்னம் சில தினங்கள் இப்படியே செய்தால், என் உடம்பு தேறிப் போகும். நான் பழைய மாதிரி ஆய் விடுவேன். ஆனாலும், முன் ஜாக்கிரதைக்காக இன்று நான் உயில் எழுதி, சப்-ரிஜிஸ்டிராரை ங்கேயே வரவழைத்து அதை ரிஜிஸ்டர் செய்து வைக்கிறேன். குழந்தைகளுக்கு நீயே போஷகியாயிருக்கும் படி எழுதுகிறேன். ராமகிருஷ்ண ஐயரை மாத்திரம் அதில் சேர்க்கிறேன். அவர் நம்முடைய சொத்துக்களை வகித்து, உனக்கு உத்தரவாதியாக நடந்துகொண்டு பிள்ளைகள் மேஜர் ஆனவுடன் எல்லாப் பொறுப்பையும் அவர்களி டம் ஒப்புவிக்கும்படி நிபந்தனைகள் எழுதுகிறேன். அவர் ஒருவருடைய உதவியே உனக்குப் போதுமானது” என்றார். 

அதுபோலவே அன்றைய தினம் ஓர் உயில் தயாரிக் கப்பட்டது. அவருடைய சொத்துக்கள், சுமார் மூன்று லக்ஷம் ரூபாய் தேறியது. மைனர்கள் மேஜர்களாகும் வரை யில் நாச்சியாரம்மாள் போஷகியாய். இருந்து சொத்துகளை வைத்துக்கொண்டு நிர்வகிப்ப தென்றும்,ராமகிருஷ்ணன் அவளுக்கு உத்தரவாதியாயிருந்து சகலமானபொறுப்பையும் கவனிப்ப தென்றும், அவள் இறந்து போனால், ராமகிருஷ். ணனே முக்கிய போஷகனும் நிர்வாகஸ்தனுமாகிற தென் றும் கண்டு உயில் தயாரிக்கப்பட்டது. பிரத்தியேகக் கட்டணம் பெற்று ஸப்-ரிஜிஸ்டிரார் அங்கேயே வந்து அதை ரிஜிஸ்டர் செய்து விட்டுப் போக, உயில் இரும்புப் பெட்டிக்குப் போய்ச் சேர்ந்தது. 

அன்றைய பகலில் டாக்டர் சில மருந்துகளை அனுப்பி னாராதலால் அதை உட்கொண்டதில், செட்டியாருக்கு நல்ல பசி உண்டாயிற்று. அவர் சிறிதளவு சாதம் முதலிய வஸ் துக்களை உண்டார். 

அன்றைய தினம் இரவில், முதல் நாளிரவில் வந்தது போல, பார்ஹீலேடி வந்து சேர்ந்தாள். அன்று அவள் வாசனை ஸெண்டுகளைத் தடவிக்கொண்டு மிக வசீகரமான அலங்காரங்களோடு வந்திருந்தாள். வந்தவள் செட்டியாரைக் கூச்சமின்றித் தொட்டு, அவருடைய செவிகளில் ரப்பர் மூடிகளை வைத்துவிட்டு, மருந்தையும் வாயில் விடுத்து விழுங்கச் செய்து, அவருக்குப் பக்கமாகவே கட்டிலிற்கருகில் உட்கார்ந்து கொண்டாள். முதல்நா ளிரவில் படுத்துக் கொண்டது போல மற்றவர்களும் தம்தம் இடத்தில் சய னித்துக் கொண்டனர். அன்றையதினம் செட்டியார் நித்தி ரையில் ஆழவில்லை. அவர் புரண்டு புரண்டு படுத்து, அடிக் கடி பார்ஹீ லேடியைக் கபட்டுப் பார்வையாகப் பார்த்த படியே பொழுதைப் போக்கினார். அவள் தன் பையில் முதல் தரமான ஆரஞ்சு, சீமை இலந்தை, மல்கோவா முதலிய பழங்களைக் கொணர்ந்திருந்தாள். செட்டியாருக்கு மருந்து கொடுத்த பின்னர் அவைகளையும் கொடுக்கும்படி டாக்டர் உத்தரவு செய்திருப்பதாகக் கூறி பழங்களை உரித்து சிறுகச் சிறுக அவருடைய வாயில் போட்டபடி கட்டிலின் மேலேயே ஏறி அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண் டாள். அவர் வேதனைப் பட்டுப் புரண்டு புரண்டு படுத்த காலங்களில் அவள் அவருடைய கால்களைத் தூக்கித் தன மடிமீது வைத்துக்கொண்டு மிருதுவாகப் பிடித்து வருடி விடுவதும், அப்புறம் இப்புறம் சாய்வதுபோல அவருடைய டம்பின்மேல் தன் மார்பு உராயும்படி செய்வதுமாக வீற்றிருந்தாள். 

அன்றையதினம் செட்டியாருக்குக் கொடுக்கப்பட்ட மருந்து, தூக்கமுண்டாக்காமல் காமவிகாரத்தைக் கிளப்பி விடத் தக்க மருந்தாகையால், மணிக் கணக்கின்படி அதைக் குடிக்கக் குடிக்க, செட்டியாருடைய உடம்பு வெறி கொண்ட வனுடைய நிலைமையை அடைந்து விட்டது. அவளுடைய உடம்பில் பூசப்பட்டிருந்த வாசனை ஸெண்டுகளும் அவரு டைய மோகாவேசத்தைக் கிளப்பி விட்டபடி இருந்தன. அந்த நிலைமையில் அவள் தனது வசீகரமான அங்கங்கள் அவர்மீது உராயும்படி செய்து அவரை அணைத்தபடி உட் கார்ந்திருந்தது, அவரைப் பரவசப்படுத்தி அவருடைய சர் வாங்கமும் பாகாயுருகும்படி செய்தது; அதோடு அவள் மல்கோவா மாம்பழம், சீமை இலந்தை முதலியவற்றையும் உள்ளே செலுத்தியபடி இருந்தாள். 

அந்த நிலைமையில், இந்த உலகையே துறந்த ஒருயோகீசு வரரா யிருந்தால் கூட, அவருடைய மனம் சபலித்திருக்கு மென்பது நிச்சயம். அப்படி இருக்க, இயற்கையிலேயே சிற்றின்ப லீலா விநோதரான செட்டியார் என்ன செய்திருப் பார் என்பதை நாம் விவரிக்கவே வேண்டியதில்லை. 

அந்தப் பெண் இங்கிலீஷ் வார்த்தைகள் கலந்த கொச் சைத் தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி, சிறிதும் கிலே சம், நாணம், பயிர்ப்பு முதலியவின்றி கேவலம் ஒரு பரத்தை போலத் தமக்கருகில் உட்கார்ந்திருக்கவே, செட்டியார் தமது துர்ப்பலமான நிலைமையை அடியோடு மறந்து போனார். 

48 மணியில் தாம் இறந்து போவோமென்ற எண்ண மும் அவருக்கு ஒரு மூலையில் இருந்தது. ஆகவே, இறந்து போகுமுன், தாம் அந்த தெய்விக அழகுவாய்ந்த பார்ஸீ. லேடியின் சேர்க்கையைப் பெற்று இறந்தால், அது ஒரு திருப்தியென்று அவர் தமக்குள் கருதினார். அந்த சமயத் தில அவள் ஆயிரம் ரூபாய் கேட்பதாயிருந்தாலும் கொடுக் கத் தயாராயிருந்தார். ஆனால் தமது கருத்தை எப்படி அவ ளிடம் வெளியிடுவதென்றும், வெளியிட்டாலும் அவள் தமது துர்ப்பல நிலைமையில், அதற்கு இணங்குவாளோ வென்றும் அவர் எண்ணமிட்டு, ஊமையன் பாட விரும்புவது போல அவளுடைய முகத்தைப் பார்த்துப் பார்த்து அசட்டு விழி விழித்தார். அவள் மேன்மேலும் அவருடைய உடம்பு படபடப்பையும் ஆவேசத்தையும் அடைந்து கட்டுவிட்டு இள கிப் போகும்படியான காரியங்களைச் செய்தபடி வீற்றிருந் தாளேயன்றி, அவருடைய கருத்தை சிறிதும் அறிந்துகொள்ளாதவள் போலவும், தான் தனது வைத்தியக் கடமையையே செய்துகொண்டிருப்பவள் போலவும் நடித்தாள். 

அந்த இரவு முழுதும் இருவரும் விழித்து கொண்டிருந் தனர். செட்டியாருடைய உடம்பு தண்ணீராய் உருகி ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய மனக் கொந்தளிப்பு கட்டிலடங்காததாகவே இருந்தது. விடியற்காலம் வரையில் அவரை ஏமாற்றி அதீதமான கவர்ச்சியினாலேயே சித்திர வதை செய்து அவரை உயிரோடு கொன்று கொண்டிருந்த பார்ஸீ லேடி அவருடைய உடம்பில் திடீரென்று ஒருவித மாறுபாடு உண்டானதைக் கண்டு, மெதுவான கு குர லில் அவரை அழைக்கத் தொடங்கினாள். அவர் கிணற்றிலிருந்து பேசுகிறவர்போல், “என்ன ?” என்றார். அவள் அவரு டைய முகத்தண்டை தனது முகத்தைக் கொண்டுபோய், “நரன் யார் தெரிகிறதா? நான் உங்கள் தாசி தனக்குயில். எறும்புக் கடிக்கு மருந்து கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு வந்து நீங்கள் ஏமாற்றினாலும், நான் உங்களை மறக்கா மல் உங்கள் கடைசிக்காலம் வரையில் மருந்து கொடுத்தேன். நான் போய் வருகிறேன். சௌக்கியமாகத் தூங்குங்கள்” என்றாள். 

செட்டியார் திடுக்கிட்டு “ஆ!” என்று வியப்புக் கூச்ச லிட்டார். அதற்குமேல் பேச அவரால் இயலவில்லை. அவ ருடைய விழிகள் அசையாமல் ஒளி மழுங்கி அப்படியே நின்று போயின. அவள் அவருடைய உடம்பைப் பிடித்து அசைத்துப் பார்த்தாள். அது மரக்கட்டைபோல உணர் வற்றதாகத் தோன்றியது. அதுவே சமயமென்றுணர்ந்த போலிப் பார்ஸீ மடந்தை மெதுவாய் அவ்விடத்தை விட்டு எழுந்து கீழே போய் வாசற் கதவைத் திறந்துகொண்டு, தனக்காக ஆயத்தமாகக் காத்திருந்த மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு அந்தரத்யான மாகிவிட்டாள்.

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *