கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2025
பார்வையிட்டோர்: 376 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கால், அரை, முக்கால்கண் – கோழித் தூக்கத்தின் செருகலிலிருந்து வெடுக்கென்று விழிப்பு வந்தது. பக்கத்தில் அவரைக் காணோம். கதவு ஒருக்களித்திருந்தது. கடியாரம் “கர்ர்’-தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு, ஒன்று அடித்தது. உபாதையோ என அதற்குரிய வேளை தாண்டி யும் ஆசாமி தென்படாதிருக்கவே, அவளைப் பீதி பிடித்துக் கொண்டது. வீடு சற்று ஒதுக்கம். அதில் அவர்கள் தனி. இதற்குத்தான் பயப்படுவது என்று இன்னும் நிர்ணயமாகாத புதுசு. 

எழுந்து வெளியே எட்டிப்பார்த்தாள். ஆபிஸ் அறையில் வெளிச்சம். இந்த நேரத்தில்-‘பக்’ ஆனால் அவள் சுபாவத்திலேயே கொஞ்சம் துணிச்சல்காரி. தவிர, வயதாகிக் கலியாணத்தின் விளைவு, சில பயங்கள் அறவே தெளிந்து விடுமோ? திட்டத்தை வரவழைத்துக்கொண்டு சுவரோரம் ஒட்டியவண்ணமே நகர்ந்து நகர்ந்து வெளிச்சத்தை நெருங்கி எட்டிப் பார்த்தாள். 

அவள் கணவன், மேஜை விளக்கொளியில் காகிதக் கட்டு களில் ஆழ்ந்திருந்தார். 

“யாரோ, ஏதோன்னு பயந்துட்டேன். உங்கள் உத்யோகத்துக்கு வேளை கிடையாதா?” 

குரல் கேட்டு நிமிர்ந்து, யாரென்று கண்டதும் எழுந்து நின்றார். 

‘”க்கீல், டாக்டர், சமையல்காரன் இவாளுக்கு வேளை போது ஏது?” புன்முறுவல். ‘நாளைக்கு ஒரு முக்கியமான கேஸ், கிரிமினல் கேஸ். ரெண்டொரு பாயிண்டுகளைச் சரி பார்த்துக்கறேன்.” 

அவள் உள்ளே வரவில்லை.வாசற்படியிலேயே நின்றார். தொடர்ந்து, அவளை மன்னிப்பு கேட்டுக்கொள்வதுபோல்: 

“நான் பிரதிவாதி கட்சி.” 

“நீங்கள் தான் கெட்டிக்காராமே! தோற்கப் பொறுக்க மாட்டேளாமே!” அந்த த்வனியை அவர் கண்டுகொள் ளாமல், பொறுமையாக, என்னதான் இருந்தாலும் பிரதி வாதி என்றாலே சளைச்ச கட்சிதானே! பலவீனத்தைப் பல மாக மாற்றிக்கொள்ளணும். எதிர்க்கட்சி வக்கீல் ஏற்கெனவே அடாவடிக்காரன். என் கட்சி பக்கமும் நியாயம் கொஞ்சம், வீக்.” 

“நியாயத்தில் அப்போ கொஞ்சம், நிறையன்னு இருக்கற நியாயமும் இருக்காக்கும். உண்டு இல்லேதான் எங்களுக்குத் தெரியும்.” 

அவருக்கு முகம் சட்டென்று மாறிற்று. 

“வக்கீலுக்கு நியாயம் பெரிசா? சட்டம் பெரிசா?” 

“ஐ ஆம் ஸாரி…” இன்னும் நின்று கொண்டுதானிருந்தாள்.  

இப்போது அவள் புன்னகை புரிந்தாள். “இந்த இங்கிலீஷ் இருக்கே, ‘ஐ ஆம் ஸாரி’ தாங்க் யூ’ ரெண்டையும் வெச்சுண்டு எனக்கு நிகரில்லேன் னு உலகத்தையே திக்விஜயம் பண்ணிடலாம், எத்தனையோ நியாயங்களை அமுக்கிவிடலாம். 

அவருக்கு முகம் இன்னமும் சுண்டிற்று. 

“ஐ ஆம் ஸாரி -” 

“அப்போ உங்கள் ‘ஸாரி’க்கு நான் “தாங்க் யூ சொல்லணும் இல்லையா?” 

“ஐ ஆம் ஸாரி-” 

அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். “ஆர்மோனியம் ரிப்பேர். சரி போகட்டும். மணி என்ன தெரியுமோன்னோ? தூக்கம், ஓய்வுன்னு கிடையாதா? மிச்சத்தை நாளைக்கு.” 

மனுஷனின் முகம் வேதனையில் தவித்தது. “இல்லை நான் இங்கேயே இருக்கேனே-” 

அவர்களிடையே மௌனம் இறங்கிற்று. தேங்கிற்று அவருடைய பின்னணியில், ஜன்னலுக்கு வெளியே, பா நிலவு கண்ணின் உறுத்தல் சிவப்புடன் உதயமாகிக் கொண்டி ருந்தது. சுற்றி மேகங்கள், பாறைகள், விரிசல்கள், உடைசல் கள் சிதறிக்கிடந்தன. 


கால், அரைக் கண் செருகலிலிருந்து வெடுக்கென்று விழிப்பு. 

பக்கத்தில் அவர் இல்லை. ஆனால் அவள் கை அவரைத் தேடவில்லை.கடியாரம் ‘கர்ர்” ரென்று கரைந்து நாலு அடித்தது. 

பூக்களில் சில நள்ளிரவில் பூக்கின்றன.சில,விடிவேளை. மற்றும் சில, மதியம். மேலும் சில மாலை நேரம்… 

எதன் மணம் அவளை எழுப்பியிருக்கும்? 

விழிப்பு வந்ததும் வராதுமாய், இத்தனை வருடங்கள் கழித்து, அந்த முதலிரவு நினைப்பு வருவானேன்? வியப்பா விருந்தது. நினைப்பைத் தொடக் காரணம் ஜன்னலுக்கு வெளியே நிலவின் தேசலாயிருக்குமா? 

அவர் இப்போ ஆபீஸ் அறையில் இருக்கலாம். 

அல்லது தனி அறையில் தூங்கிக்கொண்டு இருக்கலாம். அல்ல-கேஸ் நிமித்தம் வெளியூர் போயிருக்கலாம். 

வருவார், போவார். “எங்கே? என்ன? எப்போ திரும்பு வேள்?” போகப் போக அந்த ஆவல், கவலையெல்லாம் தணிந்து, எழாமலும் போய்விடுமோ என்னவோ? எனக்கு மாத்திரமா, எல்லாருக்குமே அப்படித்தானா? பெருமூச் செறிந்தாள். 

பூக்களில் சில நள்ளிரவில் பூக்கின்றன. சில விடிவேளை, 

நிலவின் தேசல் போல், புன்னகையின் தேசல் ஒளி தோன்றிய மிரட்சி, ஒளிந்துகொள்ள, கன்னங்களில் இடம் தேடிற்று. 

ஆர்மோனியம் பழுதல்ல. மாறாத ஏக்கத்தின் நோக் காடில் இதயத்தின் மோனத் தந்திகளின் அதிர்வு.

முகில்கள் பாறைகளின் பின் ஒதுங்குகின்றன. அல்லது படலங்கள் பாறைகளின் மீது கவிகின்றன. சில தவழ்கின்றன. சில தேங்குகின்றன. அது போலும், இந்த பூத்த மணங்கள் எங்கு தங்குகின்றன? பதுங்குகின்றன?நிர்ணயமாகச் சொல்ல முடியுமோ? 

மேகங்கள் புரியும் கவிதையை அவள் கன்யாகுமரியில் கண்டிருக்கிறாள். 

பழகப் பழகத்தானே தெரிகிறது. மனுஷன் அப்பட்டத் தங்கம். புண்ணியம், சுவாமி தரிசனம் என்கிற பேரில் யாரும் தேடும் இடமாற்றம், இடமாற்றத்தால் மனமாற்றம், மன மாற்றத்தில் பொழுது போக்குக்குத் தடையோ, குறையோ. செலவுகளுக்குக் கட்டுப்பாடு, பணத்துக்குத் தட்டுப்பாடு, “ஏன், எப்படி, எதற்கு?” கணக்குகள் அசதி மறதியாகக்கூட கேட்கணுமே! கிடையாது. கூடவரணுமா, சரி. தனியா போறயா சரி. எப்பவும் வாசம் நிறைந்த சம்பாஷணை, நல்ல எடுப்பான தோற்றம். வாசலில் இருவரும் சேர்ந்துபோனால், எல்லாரும் திரும்பிப் பார்க்கும் ஜோடிதான், ஆயினும்… 

எங்கேயோ, எப்பவோ கண்டு, கடல் கொந்தளித்து ஓய்ந்துபோன புயலின் பிச்சம், பெருமூச்சு. 


எழுந்து,பல் விளக்கியதும், தோட்டத்தை ஒருமுறை சுற்றிவரும் இந்தச் சடங்கு அலுத்ததேயில்லை.ன் காப்பிகூட பின்னர்தான். 

“குழந்தைகளா? உங்கள் இரவு எப்படிக் கழிந்தது?’ என்று விசாரிக்கிற மாதிரி. 

அல்லது 

பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை: 

‘அகோவாரும் பிள்ளாய் மதியூக மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா? மக்கள் ஆறில் ஒருபங்கு கப்பம் கட்டு கிறார்களா?’ என்கிற மாதிரி; என்று சொல்லலாமா? 

ஆனால், இங்கு கேஸ் உல்ட்டா. கப்பம் கட்டுவதெல்லாம் அரசுதான். 

இதைத் தோட்டமாகப் பார்ப்பதற்கே ஒரு சின்ன ஆஸ்தியே செலவாச்சு என்பதை இப்போ நினைக்கையிலேயே *சுருக்’கென்றது. பிறந்த இடத்தின் இல்லாக் குறையின் பிசிர், எவ்வளவு தேய்த்தாலும் பாத்திரத்தில் ஒட்டிக்கொண் டிருக்கும் பூண்டு நாற்றம்போல் எப்பவுமே முற்றிலுமே கழலாதாக்கும்! 

வந்தபோது பொட்டல்தான், 

வந்த முதல் வருடம் ஒரே காய்ச்சல். 

அடுத்து இரண்டு வருடங்கள் மழை. அது என்ன மாய மழையோ? ஒரு வாரம் ஒரே வெள்ளக் காடு. ஆசையோடு போட்டதெல்லாம் ஒன்று வெள்ளம் அடித்துக்கொண்டு போயிற்று. அல்லது அழுகி… பட்ட சிரமமெல்லாம் கடன். 

அந்த வெறுப்பில், போன வருடம் ஒன்றுமே போட வில்லை. 

அப்புறம் பொழுதும் போகாமல், அந்த நெஞ்சுப் புழுக்கத்தின் அனுபவ பயங்கரத்துக்கு, பயிர் செய்து பாழாய்ப் போனாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டது.

இந்தத் தடவை எட்டு லாரி மண் அடித்து, நிலமட்டத் தையே உசத்தி, விவசாய இலாகா வெளியீடுகள், நர்ஸரி விளம்பரங்கள், வானொலியில் பாடங்கள் வருவார் போவார் யோசனைகள் எல்லாவற்றையும் கலந்து விசேஷ எருக்கள், விதைகள் வரவழைத்து-அதோ ஆபீஸ் அறை ஜன்னலடியில் விறைத்து நிற்கும் இரண்டு க்ரோட்டன்ஸ் அக்கரைச் சரக்கு என்கிறான் நர்ஸரிக்காரன். வேண்டாம் வேண்டாம் என்க அவரும் கிணற்றுக்கு ஒரு எச்.பி. மோட் டாரும் வெச்சுட்டார். இப்போது தோட்டம் அவள் நெஞ்சு மனசுதான் மலர்ச்சியாக விளங்குகிறது. எல்லாத்துக்கும் காரணம்னு பெரியவா சும்மாவாச் சொன்னா? 

வரும்போதே-கண்கள் பனித்தன—ஆம், இதுகள் தான்  ன் குழந்தைகள், அவளை வரவேற்றன. இது ப்ரமையே அல்ல. நாளடைவில் உடலில் ஊறிப்போன உண்மை. வேளா வேளைக்கு அவள் கையாலேயே மொண்ட ஜலத்தை அவள் கையாலேயே வாங்கி அம்மாவை அடையாளம் கண்டு வாலையாட்டும். முகரும், கொண்டன. வேறு ப்ராணி நிறுவிய இடத்திலேயே அசைவதும் சிலிர்ப்பதுமன்றி இவை யை, தான் களால் வேறு என் இயலும்? பார் அந்த வெண்டையை, அதன் பக்கமாய் வருகையில், அதன் சக்திமீறி, எட்டித் தன்மேல் உராய்வதை! 

அடுக்கு தீபம்போல், அருநெல்லியின் நடுத்தண்டிலிருந்து விசிறும் கதிர்களும் கதிர்களில் தொடுத்த சரங்களாய்த் தொங்கும் இலைகளும் இன்று பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம் – 

-ஆனால் இந்தக் கறிவேப்பிலைக் கன்றை உருப்படி யாகப் பார்ப்பதற்குள் உன்பாடு என்பாடு ஆயிடுத்து கறிவேப் பிலையோ குழந்தையோ, குறைப் ப்ரசவம்போல் அஞ்சாறு தோற்றபின், மடிப்பிச்சை ஒருகன்று பக்கத்துப் பங்களாவில் வாங்கி வந்து பூந்தொட்டியில் பயிர் பண்ணி – அதென்ன நின்னால் குத்தம் உட்காந்தால் அபராதம் திரும்பினால் தண்டனை? இங்க்யுபேட்டர் சிசு தோற்றது. உனக்காச்சு எனக்காச்சுன்னு ஒரு வீம்பு, இப்போத்தான் தொட்டியி லிருந்து வேரோடு பறித்து, பூமியில் ப்ரதிஷ்டை பண்ணி மூணு நாளாறது. மண் மாற்றம் எப்படிப் பிடிக்கறதுன்னு போகப் போகத்தான் தெரியணும். டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்டுக்கு எழுதிக் கேட்கலாமா? யார் கண்ணிலும் எதன் கண்ணிலும் படாமல் – ஒரு மஞ்சள் கனகாம்பரத்துக்கும் த்திரி நாத்துக்குமிடையில், அவரைப் பந்தல் அடியில்… கூட்டில் இப்போத்தான் பொரித்த குஞ்சுபோல் சோனிக் குழந்தை அசிங்கமா ஆனால் வெகு அருமையா- 

என்ன பாடுபட்டு என்ன? இந்த மண்வளம் இவ்வளவு தான். இங்கு குற்றம் மண்மேலா, விதையிலா? 

ஸர்க்யூட் வாழையண்டை முடிந்தது. ஒரு கூட்டமாக ஐந்து ஆறு; ஒண்ணுகூட தார் போடவில்லை. அப்படியும் இலையை அடிக்கடி நறுக்குவதில்லை. ஆனால் அப்படி முழுக்கவும் சாதிக்க முடியாது. வேளையில்லா வேளையில், கட்சிக்காரன் விருந்தாளியாகத் தங்கிவிட்டால், நறுக்காமல் இருக்க முடிகிறதா? அப்புறம் அமாவாசை,  ஒரு திவசம் திங்கள் எல்லாம் அப்பிடியும் இப்பிடியும்தான். அதனால் அதற்காக ஒண்ணு கூடவா பூவைக்காது? 

‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில்’ 

ஊன்றி ஆறு ஏழு மாதங்கள் ஆனதும் கன்றுகள் பக்கத் தில் முளைத்துவிடும். வெட்டித்தள்ளாவிடில் தலை மரத்தின் பலத்தை அதுகள் வாங்கிக் கொண்டுவிடும் என்று தெரிந்தவர் கள் சொன்னால், வெட்ட மனம் வல்லையே! 

வீட்டைச் சுற்றி முள்வேலி, வாசலுக்கு இரும்புக் கதவு பேருக்குத்தான். லொட்டை. வீட்டுக்காரனுக்கு அதுபற்றி என்ன அக்கறை? அவள் தோட்டம், பயிர் பற்றி அவனுக்கு என்ன கவலை? காலி பண்ண நேர்ந்தால், இத்தினியும் அளிச் சுட்டா போப்போறாங்க! 

கேட்டின் ஒருபக்கம் பூவரசு மறுபக்கம் பொதிய மரம். அரசம் பூவின் மஞ்சள், காலை வெய்யிலில் பற்றிப் பளிச் சிட்டது. ஆட்டுக்காரக் கிழவன், துரடுபோட்டு இழுத்து இலைகளைக் கொத்துக் கொத்தாய்ப் பறித்துக் கீழே தள்ள, ஆடுகள், பத்துப் பதினைந்திருக்கும், அவசரமாக மேய்ந்து கொண்டிருந்தன. 

அவனைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவளுக்கு எரிச்சலாய் வந்தது. ஆனால் அவன் சட்டை செய்தால் தானே! அவன் பேத்தி அவளிடம் பத்துப் பாத்திரம் தேய்க் கிறாளாம். கூடவே அவனுக்கு மரத்தின்மேல் ஸ்வாதீனம் வந்துவிட்டது. மனுஷனுக்கு மனுஷன் துரோகம் ஆக்ரமிப்பு இல்லாமல், வாழ்க்கையே நடக்காதா? 

சின்னக்குட்டி. அவளுக்கு அஞ்சு வயசிலேயே, அவளு டைய தாய், குழந்தையை விட்டுவிட்டு யாருடனோ ஓடிவிட் டாளாம். நிஜம், பொய், யார் கண்டது? கிழவனுக்குப் பொய், தண்ணிபட்டபாடு. அவனும், அவன் சடைத்த தலையும், சிக்குத் தாடியும், கந்தல் ஆடையும்… அவனுடைய ஆடுகள் குளித்தாலும் அவன் மாட்டான் போலும், எப்பவும் முகத்தில் ஒரு கபடு. 

இன்று அவன் செல்வங்களிலிருந்து ஒரு புது வாடை கிளம்பி, வயிற்றைக் குமட்டிற்று. அவைகளினிடையே ஒரு புதுமுகம் கண்டாள். அதன் தனி வாட்டசாட்டமும், தோரணையும் அதைத் தனிப்பாய் எடுத்துக் காட்டிற்று. 

அவள் கவனம் போன வழி கண்டு, கிழவன், வாங்கினேன். “கடா வாங்கிட்டு முளிக்கிறேன்”. அவள் கண்களின் வினாவலுக்குத் தொடர்ந்து, “நொம்ப முரடு. இன்னிக் காலை என்னை முட்டித் தள்ளிடிச்சு, மல்லார விளுந்துட்டேன். மறுபடியும் காலைத் தூக்கிட்டுப் பாய வந்தது. அப் பிடியே உருண்டு எளுந்து ஓடினேனோ புளைச்சேன். இல்லே சொல்லாத இடத்துலே முட்டி, இந்த நேரத்துக்குக் குடிசை வாசல்லே தப்பட்டை காச்சிட்டிருப்பானுங்க.” 

கண்ணைச் சிமிட்டினான். 

அது அவளைப் பார்வையாகப் பார்த்தது. அந்த ஆண் அலட்சியம் அவளுக்கு அடிவயிறு பகீர் என்றது. தீர்த்துக் கொள்ளமுடியாத சீற்றத்தின் உரு. முறுக்கேறிய கொம்பு கள் பிச்சுவாப்போல் வளைந்து நுனி கூர்ந்து நீண்டன. கண் தழல், கங்குகள் திடீர் திடீர் சிந்திற்று. பூவரசுக் கிளையைத் தானே எட்ட ஒருமுறை முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு பின்னங்கால்களில் நின்றதும், உயரம் கிழவன் காதுக்குமேல் வந்தது. ஏதோ நுண்ணிய வாத்யம் வாசிப்பது போல் உதடுகள் நாஸுக்காக அசைந்தன. 

கீழேயிறங்கி ஒருமுறை கனைத்தது. அவள் அடிவயிறில் இடி உருண்டது. இது இந்தப் பக்கத்து ஜாதியில்லே. ஆளப் பிறந்ததுதான். 

“எனக்கு ஆடு குறைஞ்சிட்டு வருது. வயித்துக் கொடுமை – ரெண்டு வித்தேன். ரெண்டு காணாமே போச்சு. ஒண்ணு ஆக்கித் தின்னுட்டேன். அப்புறம் என்ன செய்ய நீயே சொல்லு” – மரியாதைகூட கிடையாது. பொலியா வாங்கிட்டேன். மறுபடியும் அந்த ஆபாசமான கண் சிமிட்டல், ஒரு அம்பது ரூவா முன் பணம் கொடேன் இதுமேலே பாக்கி நிக்கிது. சம்பளத்துலே மாதம் புடிச்சுக்கோ.” 

அவனை அறையலாமா என்று வந்தது. தொட்டால் கையில் கலம் பிசுக்கு ஒட்டிக்கும். பதிலே பேசாமல் திரும்பி விசுக்கென உள்ளே நடந்தாள். 

“இதென்னடாப்பா இம்மா கோவம் வருதே!'”அவன் குரலின் ஏளனம் அவளை இரக்கமற்றுத் துரத்திற்று. “ஒன் புள்ளையே என்ன கிணத்துலே தூக்கிப் போட்டுட்டேனா?” 


குருக்கள் மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார். லிங்கத்தின் மண்டைபோலவே விழித்துக்கொண்டு எழுந்த நெற்றியில் பட்டை பட்டையா விபூதி, செம்பருத்தி, நந்தியா வட்டை, காசித்தும்பை, பொன்னரளி, கதிர்ப்பச்சை… துணிந்த மூட்டத்தில் அணையப்போட்ட பால், படிப்படி யாக, மெதுவாகப் பொங்கியெழுவதுபோல், குடலை படிப் படியாக நிரம்பிக்கொண்டே வந்தது. 

அவளைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது. குடலை யிலிருந்து சட்டென எதையோ எடுத்து அவளிடம் கொடுத்தார். 

“கொடியிலேயே பழுத்து. தானே விழுந்திருக்கு, ரொம்ப விசேஷம்தான்.” 

பாகற்காய். 

“ஏன் குருக்களே. கோவிலுக்குத்தானேன்னு பறிச்சுக்க இடம்கொடுத்தால் இப்படித்தான் மொட்டையடிக்கிறதா? குடலை இன்னும் பெரிசா கிடைக்கல்லே?’ 

கேட்டுக்கொண்டே விடுவிடென நடந்து, குறுக்கே பப்பளபளவென வேலைக்காரி தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களை ஒரு உதைவிட்டுத் தள்ளி உள்ளே சென்று தடாலென்று கட்டிலில் குப்புற விழுந்தாள். பிறகு நேரம் போனதே தெரியவில்லை. 

உள்ளங்கையில் ஈரக் கசகசப்பு உணர்ந்து திறந்து பார்த்தால் பாகற்காய் சதையுரிந்து, நக்ஷத்ர மீனாய் நசுங்கிக் கிடந்தது. சதையின் உள்பக்கம் ஜெவ ஜெவவென்று ஒரே ரத்தச் சிவப்பு. அதில் ஒட்டிக்கொண்டிருந்த ஐந்தாறு விதைகள், பவழங்கள் உறங்கிக்கொண்டிருந்தன. அவை விழித்தெழுந்தால்… விழித்தெழுந்தால்… என்னவாகும்? 

அலைகள் மெதுவாக அடங்க ஆரம்பித்தன. அவர்மேல் னக்கு இவ்வளவு கோபம் வருவானேன்? மலர்கள் பறிக்கத் தானே இருக்கின்றன? இல்லை, செடியிலேயே பூத்து, வாடி வதங்கி, கருகி, விருதாவா கன்னி காக்கவா? 

மாலை, கையில் கம்பும் தும்புமாய், கிழவன் வந்தான். அவளுடன் பேசிக்கொண்டே அவன் கண்கள் சுற்றும் முற்றும் அலைந்தன. 

“..திமிறிட்டு ஓடிட்டுது. இந்தப் பக்கம் வந்துதா? நஸ்டத்துக்கானும் வித்துத் தொலைச்சுட வேண்டியதுதான். இதை நம்மால் சமாளிக்க ஆவாது” 

தன்னுள் ஒரு கரும் மகிழ்ச்சி பொங்குவதை உணர்ந் தாள். உடலே பூரித்தது. 

தேடிக்கொண்டே, தனக்குள் பேசிக்கொண்டே, கிழவன் தாடுவானத்தை நோக்கிச் சென்றான். 

வேணும் ராஸ்கல். அவனைக் கண்டாலே ஆகல்லே. 


இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை. 

அவர், கேஸ் நிமித்தம், மாலைதான், வெளியூர் புறப் பட்டுப் போனார். 

இந்த ஒதுக்கான வீட்டில் இரவில், தனியாக இருந்தும் பழகிப்போச்சு. 

அவளுக்கே சுபாவத்தில் துணிச்சல் கொஞ்சம் கூடத்தான். 

பேருக்குத் துணை, வேலைக்காரக் குட்டி ; அறை வாசலில், அவளுக்குக் கொடுத்திருக்கும் பாயில் பூனைக் குட்டிபோல் சுருண்டு உறங்குகிறது. குழந்தைதானே! 

கண்கள் எரிந்தன. அப்புறம் எப்போ கண் தானா அயர்ந்தபோது, அசட்டு பிசட்டு என்று ஏதோ கனா. 

ஒரு பிரம்மாண்டமான பாகற்காய் சுளை பிரிந்து சூர்யோதயமாக விரிந்தது.பவழங்கள் பொல பொலவென சூர்யனிலிருந்து உதிர்ந்து, விதை விழுந்த இடங்களில், வாழைக்கன்றுகள் முளைத்தன. இமை நேரத்தில் மரங் களாகி, இலைகளுக்குப் பதில், நடுத்தண்டிலிருந்து, முறுக் கேறிய பிச்சுவாக்கள், நீண்டு கூர்ந்த நுனிகள் — முளைத்தன. அவைகளிடையே தள்ளிய குலையில் தார் தாராக ஆட்டுத் தலைகள். அவளைப் பார்த்து, தனித்தனியாக, சேர்ந்து, கக்கடகடவெனச் சிரித்தன, கனைத்தன. அந்த சத்தத்தில் வெடுக்கென விழித்துக்கொண்டாள். ‘கும்மிருட்டு’. 

மலர்களில் சில நள்ளிரவில் பூக்… 

இல்லை, இல்லை; இந்தச் சமயம் அந்தப் பல்லவி ல்லை. குடலைக் குமட்டும் ஒரு வாடை. ஜன்னலிலிருந்து அலை மோதிற்று. மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது. செடிகளிடையே, அதுவும் அந்தக் கறிவேப்பிலைக் கன்று பக்கம் ஒரு சலசலப்பு. வாசல் கேட் பாப்ராஸ். 

பயம் தோன்றவில்லை. விறுவிறுவென உடல் பூரா ஒரு பயங்கர மகிழ்ச்சி, ஸகிக்க முடியாத மகிழ்ச்சி. இப்போ என்ன செய்யலாம்? சுற்று முற்றும் பார்த்தாள். ஆ, நினைவு வந்துவிட்டது. 

நேரே ஆபீஸ் அறைக்குச் சென்று, மூலையில் சார்த்தி யிருந்த தடியை எடுத்துக்கொண்டாள். 

கொண்டைப் பிடி. தடி நுனியில் இரும்புப் பூண். யமகனம். யாரோ கட்சிக்காரன் விட்டுவிட்டுப் போய் விட்டான். “என்ன செட்டியார்வாள், சமத்தியாயிருக்கே!” என்று பேச்சுவாக்கில் வேடிக்கையாகச் சொல்லப்போக, சொல்லச் சொல்ல வேண்டாப் பொருளை மூலையில் சார்த்திவிட்டுப் போய்விட்டான். அன்றிலிருந்து, சார்த்திய இடத்தில் சார்த்தியபடியே இருக்கிறது. எப்படியேனும் கேஸை ஜெயித்துக் கொடுத்தால் சரி. நியாயமா ஜயிக்கிறது? மூணு கால் முயலுக்கல்லவா காலம்! 

தோட்டத்தில் இறங்கினதும் சில்லென்று காற்று வீசிற்று. உடல் சிலிர்த்தது. குளிரால் அல்ல. கூடவே அந்த நெடி. உடம்பே, உடம்பைவிட்டுக் குதித்துவிடும்போல ஒரு புல்லரிப்புப் பரவசம். பாதங்கள் பூமியில் பரவவில்லை. இத்தனை நாளாய் இந்த நேரத்தின் ஸ்படிகத்துக்குக் காத்திருந்தாற் போன்ற ஒரு தவ உணர்ச்சி. அந்த நெடி ஸஹிக்க முடியவில்லை. அதுவே அந்த இருட்டில் பாதை குத்துத் தந்தது. இன்னும் நகர்ந்தால் மூர்ச்சை போட்டு விடும் அந்தத் திக்கில் தடியைத் தன் பலங்கொண்ட மட்டும் வீசியெறிந்தாள். 

ஒரு அலறல். அப்பா! அதுமாதிரி அவள் கேட்டதே வில்லை. மனிதக் குரல் தோற்றது. ஒரு பெரும் கனம் தரையில் விழும் சப்தம். மறுபடியும் அந்த அலறல். தோட்டமே அதிர்ந்தது. அவளுக்கு முழங்கால்களுக்குக் கீழ் விட்டன. அடி பலம் என்று அவள் நினைத்தே இருக்க மாட்டாள். அதுவும், இந்த மையிருட்டில் எப்பிடி குறி பிசகாமல்…? தன்னையுமறியாது, எதிர்க் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகையில், தடி தடுக்கி விழுந்தாள். எட்டும் தூரத்தில், குடை சாய்ந்த மோட்டார் சைக்கிள் பெரிசு, ஒரு உருவக் கோடு தரையில் புதைத்துக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அதைக் கீழே தள்ளிற்று. அலறல் அலறல்! அவளுக்கு அழுகை வந்துவிட்டது. நகர்ந்து, நகர்ந்து அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

“என் செல்லமே! என் கண்ணே! என் ராஜாவே!’ இன்னும் ஏதேதோ உளறல்கள், குழறல்கள், பிதற்றல்கள் தேம்பல்கள். 

அது அவளைத் திமிற முயன்றது. முடியவில்லை. சரியான அடி. இசைகேடான இடத்தில். 

“வேள்வியில் நான் ஏற்கெனவே ஆ ஹுதி, இப்போ நீ பலி!” 

அந்த வாக்கியம் தன்னை வரிசை அடுக்கிக்கொண்டு உள் பரவியதும் – அதன் அமைப்பு சற்று செயற்கைதான்” ஆனாலும், ஏதோ அந்த சமயத்துக்கு இத்தனை நாள் நெஞ்சக் குமுறலுக்கு, ஏதோ சற்று ஆறுதலாக இருந்த மாதிரி இருந்தது.

– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *