வேலை – ஒரு பக்க கதை






“காய்கறி கடைக்கெல்லம் போக மாட்டேன்னா போகமாட்டந்தான். மார்க்கெட்ல என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?”
இந்த வேலையெல்லாம் இனிமே எங்கிட்டே சொல்ற வேளையே வச்சுக்காதே. எத்தனை தடவை சொல்றது…ச்சே”
“அப்போ, சாப்பாட்டுக்கு ஊறுகாதான்”
“அதை அப்பாவுக்கு வை. நான் ஹோட்டல்லே சாப்பிடுறேன்”
“ம்..தலையெழுத்து. வீட்டைப் பார்த்துக்கோ….நான் போய் வர்றேன்!” தலையில் அடித்துக்கொண்டு தாய் கடைக்குப் புறப்பட்டாள்.
மகன் கல்லூரிப் படிப்பு முடித்lதும் கேட்டரிங் டிப்ளமா முடித்தான். ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைத்தது. அப்பாயின்மெண்ட ஆர்டரோடு வீட்டில் நுழைந்தான்.
மார்க்கெட்டிங் வேலை. அன்றாடம் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு அவனுடையது..!
– திசெம்பர் 2010