வேலைக்காரி!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 11,447
என் தோழிக்கு மூணு வேளை சாப்பாடும், போட்டுக்கத் துணியும் கொடுத்தா வீட்டிலேயே தங்கி, கூப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகி இரவு பகல் எந்த நேரத்திலும் வேலை செய்ய ஒரு வேலைக்காரி தேடிக் கொண்டிருந்தாள்!
இந்தக் காலத்தில் நடக்கிற காரியமா இது? எனக்கு நம்பிக்கை இல்லை!
ஆனால் இந்த முறை அவள் வீட்டிற்குப் போன பொழுது தான் பார்த்தேன்! அவள் நினைச்சதை சாதித்து விட்டாள்!
அவள் வீட்டுச் சமையறையில் ஒரு வயசான அம்மா சமையல் வேலையில் தீவிரமாக ஈடு பட்டிருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது!
தோழி ரூமிற்குள் போனவுடன் சொன்னேன்
“நீ உண்மையிலேயே பெரிய சாமர்த்தியசாலி தாண்டி!….நினைச்சதை சாதிச்சிட்டே!.. வீட்டோடு சமையலுக்கு ஆளைப் பிடிச்சிட்டேயே!…”
“அதையேண்டி கேட்கிறே?….நானும் ரொம்ப யோசித்துப் பார்த்தேன்!….நம்ம கண்டிஷனுக்கு…. அதாவது சோத்துக்கும், துணிக்கும் வேலை செய்யக் கூடிய ஆள் ஒருத்திதான் இருப்பதாகப் பட்டது!…உடனே போய் கூட்டி வந்து விட்டேன்….”
“யாரடி அது?..ரொம்ப அதிசயமா இருக்கு?…”
“..எங்க மாமனார் காலமான பிறகு, கிராமத்து வீட்டிலே தனியா சமைச்சு சாப்பிட்டுட்டு கிடந்தாங்க எங்க மாமியார்……நான் இது வரை கண்டுக்கலே!….டவுனிலே வேலைக்காரி சம்பளம், அவங்க செய்யற வேலையை எல்லாம் பார்க்கும் பொழுது,…மாமியாரை கொண்டு வந்து வச்சிட்டா சிக்கனத்திற்கு சிக்கனம்…பாதுகாப்புக்கு பாதுகாப்பு என்று பட்டது!….உடனே புறப்பட்டுப் போய், ‘உங்க மகனுக்கு உங்க சமையலைச் சாப்பிட வேண்டுமென்று ரொம்ப ஆசையா இருக்குதாம்!’ என்று ஒரு பேச்சுக்குச் சொன்னேன்….உடனே பெருமையா பெட்டியைத் தூக்கிட்டுக் கூடவே வந்திட்டது!…” என்று சொல்லி விட்டு சிரித்தாள் என் தோழி.
அட அறிவுகெட்ட முட்டாள்களா!!!
பெரியவங்களுக்கு மொதலா மரியாதையை கொடுக்க பழகுங்க !!!!