வேலைக்காரி – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,203
அம்மா வர வர என்னால் வேலையே செய்ய முடியலே! வீட்டு வேலைக்கு யாராவது ஆள் கிடைத்தால் ஏற்பாடு செய்யேன்! நடுத்தர வயசில பாரு! ஏன்னா வீட்டுல வளர்ந்த பசங்க இருக்காங்க….என்றாள் கோமதி, ஊரிலிருந்து வந்த அம்மாவிடம்.
அம்மாவும், தன் கிராமத்துக்குப் போய், தூரத்து சொந்தத்தில், நடுத்தர வயதில் பார்வதியை ஏற்பாடு செய்து கொடுத்தாள்.
கோமதியால் இப்போது சிறிது ஓய்வெடுக்கமுடிந்தது.
பார்வதியும் கூடமாட ஒத்தைசையாக இருந்தாள். மகன்கள் கோபி, வசந்தையும் அக்கறையாக கவனித்துக் கொண்டாள்.
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
அன்று, நேரம் கிடைத்து சாவகாசமாக கோயிலுக்குச் சென்று திரும்பியவள், வீட்டுக்குள் பேச்சு சப்தம் கேட்டு அப்படியே நின்று கவனித்தாள்.
‘பார்வதி! காப்பி சூப்பரா இருக்கே! நான் இதுவரை இது மாதிரி ருசியா காப்பி குடித்ததே இல்லை’ என்று அனாவசியமாக அசடு வழிந்து கொண்டிருந்தார் – அவளது அருமைக் கணவர் –
வேலைக்காரியிடம்..!
– ராணி அசோக் (ஜனவரி 2012)