வீடும் அது சார்ந்த அறைகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 274 
 
 

என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’ இறந்துபோனது போல் ஒரு கனவு. கொழும்பில் உள்ள கல்கிசை பகுதியில் வைத்து நான்கு பேர் என்னை ஒரு கவச வாகனமொன்றில் பலவந்தமாக தூக்கி போட்டு, கறுத்த துணியில் என் விழிகள் இரண்டையும் இறுக்கமாக கட்டி, இருளினுடாக வாகன பயணம் தொடர்ந்த போதே, யாரோ முகத்திலும் முதுகிலும், வயிற்றின் அடி பாகத்திலும் மனித முஷ்டியின் வன்முறைகளை என் உடல் தாங்கிகொண்டு பலமற்றிருந்தது. வாகனம் பின் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. என்னை இழுத்து சென்து கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார்கள். அது பெரும் இருட்டான. ஒரு பெரிய வீட்டின் களஞ்சிய அறை போல் இருந்தது. ராணுவ அதிகாரி ஒருவனும் மற்றொரு ஒல்லியான ஆளும் இன்னும் நிறைய பேரும் அங்கே இருந்தார்கள். அனைவரும் அதிகாரிகள் போல் தோற்றமளித்தார்கள். சிங்கள பாஷையிலும், தமிழ் பாஷையிலும் அவர்களின் உரையாடலின் சப்தங்கள் என் காதுகளை வந்தடைந்தபடி இருந்தது. சில விசாரணைகள், எச்சரிகைகள், எரிச்சல்கள், ஏற்கனவே கொலை செய்யப்பட்டோரின் பெயர் பட்டியலை நினைவுப்படுத்தி கூறி என்னை ஒருவன் தன் கை துப்பாக்கியின் மூலமாக தலையில் வெடி வைத்தான், மண்டையிலிருந்து உயிர் அறுந்து “குபுகுபு”வென்று இரத்தம் நாளா திசையினும் இருந்து வெளியேறியது. எள் நினைவுகள் மரணத்தை நோக்கி இடறியது. உயிரின் பிரிவுகளுடன் மெதுவாக தரையை நோக்கி சரிகின்றேன்.

விடிந்த பின் ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கைகளை புரட்டினேன். தோழர் தராக்கி படுகொலை செய்யப்பட்ட செய்திகளை எல்லா பத்திரிகைகளும் எழுதியிருந்தது. இந்த நரகமான நாள் என் இருப்பை பெரும் கேள்வி குறியை நோக்கி நகர்தினானும் மனதின் உள் இழுப்பில் பெரும் வேதனை கசிந்தபடி இருந்தது.

வீடு அதன்பாட்டில் தன் அன்றாடங்களில் வழமையான சராசரிகளுடன் எவ்விதமான அக்கழையுமற்று இயங்கி கொண்டிருந்தது. என் காலை உணவின் மேல் ஈக்கள் மொய்த்திருந்தது.

நாட்டில் நிகழும் மனித படுகொலைக்காக, என் ஒரு வேலை காலை உணவை சாப்பிடாமல் விட்டால் எல்லாம் சரியாகி வழுமா? மனத்தின் கீறல்கள் மேலும் மேலெழுந்தபடி இருந்தது. அதன் பின்னும் உணவை பற்றிய அக்கறையற்றவனாய் என் காதலிக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.

“பத்திரிகையாளர் சிவராம் கொலை செய்யப்பட்டது என்னை ரொம்பவும் பாதிக்கிறது…. வாழ்க்கையை தொடர்வதில் பயம் ஏற்படுகின்றது….. இரண்டு வாரத்திற்கு முன்தான் அவருடைய போரியல் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை முதல் முதலில் படித்து யார் இந்த மனிதன்… – இத்தனை அற்புதமாக எழுதியிருக்கிராரே என்று வியந்தேன், இவர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து சிவராம் என்பவர் அந்த கட்டுரையை எழுதியவரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கத்தோடு மீண்டும் அந்த பழைய பத்திகையை தேடி பிடித்து படித்தேன். அந்த கட்டுரையில்”ஆயிரம் சொற்களை விட ஒரு படம் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம்’ என்று எழுதியிருக்கிறார். உனக்கு தெரியுமா அந்த கட்டுரை மட்டும்தான் அவருக்கும் எனக்குமான தொடர்பு. வேறெதுவும் இல்லை, அவரை நான் முன்ன பின்ன பார்த்தது கூட இல்லை. அவரது உருவம், அவர் எப்படி பேசுவார், எப்படி சிரிப்பார், எங்கே வசிக்கிறார், என்ற ஒரு தகவலும் எனக்கு தெரியாது….,”

ஆனால் அவரின் மரணம் என்னை வெகுவாக பாதிக்கின்றதே… கோபம் என்னையும் மீறு அனலாக எழுகின்றது. ஏன் இப்படி படுகொலைகளின் மூலமாக சுதந்திரத்தின் உயிரை ஒளித்து கட்டிவிட முடியுமா? உண்மைகளை வன்முறை அழிக்க தகுதிதான் உள்ளதா… சொல்…”

“மஹி! நீங்கள் இந்த ஊரை சென்னை போல நினைக்க வேண்டாம், சென்னையில் வேறு வகையான வன்முறை கொழும்பு நகரத்தில் பௌத்த சிங்கள பேரின பயங்கரவாதிகளின் வன்முறைகள்… சிங்கள பொது சனங்கள் நன்றாக பழக கூடியவர்கள்தான்…… ஆனால் பௌத்த பேரினவாத பிக்குகளும்… சிங்கள ஊடகங்களும், இனவாதம் பேசும் பயங்கரவாதிகளும் சிங்கள மக்களின் பொது புத்தியை திசை திருப்பி அவர்களின் மனத்தில் நஞ்சை வளர்க்கிறார்கள். இந்கே நடப்பது பௌத்த பேரினவாதிகளினதும் சிங்கள தீவிரவாதிகளினதும். கருத்தியியல் இயந்திரத்தை அழித்தோழித்தாலே பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்…… குறிப்பாக இன வாதத்தை கக்கும் சிங்கள் ஊடகங்களும் பொது புத்தியை கட்டமைக்கும் அரசு இயந்திர சில்லையும் உடைத்தெறிந்தால் பாதி துயரங்கள் தீர்ந்து விடும்….. என்ன மஹி… மௌனமாகிட்டீங்க……?”

தொலைபேசி உரையாடயில் அரசியல் போய் காதலின் மொழிகளும், இருவரும் மண வாழ்வில் இணைவது சம்பந்தமாகவும் பேசி விட்டு வைத்தேன். எழுதி முடிக்க முடியாத கடிடித்தின் தொடர்ச்சியை போல் சிவராமின் நினைவுகள்தான் அப்போதும் எனக்குள் எழுந்தபடி இருந்தது. இவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு, ஏன் இவருடைய படுகொலையை பற்றிய நினைவுகள் என்னை தாக்கியபடி இருக்கின்றது.

2

பெதுவாகவே பாண்டியிடம் என் பொது சமூகத்தை சார்ந்த நன்பர்கள் அவ்வளவாக பேசுவதில்லை, ஆனால் நான் மட்டும் பாண்டியோடு எனது எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருந்துள்ளேன். பாண்டி என்பது கூட அவனுடைய இயல் பெயர் கிடையாது. அவனுடைய இயல்பெயர் அம்பேத்கார். அந்த பெயரை யாரும் அவமதித்துவிட கூடாது என்பதற்காக பாண்டி என்ற மதுரை பிரதேசத்தின் சாதி அடையாளத்தை காலி பண்ணவே இந்த பெயரை புனைவாக வைத்துக் கொண்டதாக என்னிடம் ஒரு தடவை கிண்டலாக கூறியிருந்தான். அது நக்கலாக இருப்பதற்கான நியாயங்கள் எனக்கு அப்போது தோன்றவில்லை. ஏனென்றால் அப்போது மதுரையில் எனக்கு இருந்த நன்பர்கள் அனைவரும் சுய சாதி பிடிப்புகொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். அதனால் பாண்டி என்ற புனைவான மனிதனின் உண்மையை கண்டுணர முடியாமலேயே போய்விட்டது. பாண்டியுடனான பெயர் வைக்கும் அரசியபில் பின்னணியை சாதியின் கூர் முனையுடன் புரிந்துகொண்டேன். குப்பன், அப்பன், சின்னள், பொன்னன் என்ற வாய்க்கு வந்த ஊதாகினமான பெயர்களை சாதி இந்துக்கள்தான் காலம் காலமாக சூட்டியிருக்கிறர்கள். சுயமாக பெயரை வைத்துக் கொள்வதில் கூட ஒரு சமுகத்தின் முன் இன்னும் அதிகரம். கைகூடவில்லை.

பாண்டிக்கு எல்லோரையும் விட என் நட்பில் மேல் ஒருவிதமான ஈர்ப்பு இருந்ததை நன்கு உனர்ந்திருகின்றேன், நான் இலக்கையை சேர்ந்தவன் என்பதனால் என்னையும் ஈழத்தமிழர்களின் அடையாளத்துடன் அவன்என்னிடம் ஈடுபாடு காட்டினான். இயக்கங்கள் பற்றியும், திலிபனின் வீர மரணம் பற்றியும், அன்னை பூபதியின் மகத்தான உயிர் தியாகம் பற்றியும், என்னிடம் அடிக்கடி கேட்பான். எனக்கே அது குறித்து பால்யகால நினைவுகளில் இருக்கும் சில சம்பவங்கள் நினைவுக்கு வரும், அது கூட கிளிநொச்சியில் இருந்து இருபது கீழோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்கரையான் குளம் தமிழ் மகா வித்தியாலத்தில் 3ஆம் வகுப்பு படிக்கும் கால கட்டத்தில் இயக்கங்கள் தங்களுடமான பயற்சிக்களத்தை அமைத்து கள வேலைகளுக்காக பள்ளி கூடங்களில் சிறிய துண்டு பிரசுரங்கள், அரங்குகள், பயிற்ச்சி வகுப்புகள் என்று நடக்கும். அது நடந்து கொண்டிருந்த கலைகட்டத்தில் என் நினைவின் விபயரத்தை நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதல்ல.

பள்ளிக் கூடத்தில் நடந்த இயகங்களை பற்றிய என் மாமாவும், பாட்டியும் கேட்டு தெரிந்து கொள்வதோடு, சில எச்சரிகையுடனும், இனி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது, என்று கூறுவதோடு துண்டு பிரசுரங்களை அடுப்பில போட்டு எரிப்பதோடு சில நேங்களில் அடியும் விழும். ஆனாலும் யாழ்ப்பாண பாஷையில் உணா்ச்சியுடன் பேசும் அண்ணன்களின் மீது ஒரு ஈா்ப்பு எனக்கும் அந்த பாலிய வயதில் ஏற்பட்டது.

அதே காலகட்டத்தில்தான் சிங்கள ரானுவம் எங்கள் பகுதியில் வந்து முகாமிட்டு சில அராஜக நடவடிக்கையில் ஈடுபடுவதோடு கொலை, கொள்ளை நிகழ்வுகள் மரண பயந்து நோக்கி சூழல் இறுக்கமான பொழுதில், என்னையும் என் சகோதரிகளையும் அங்கிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு இடம் பெயர்த்தார்கள். மலையக பகுதிக்குள் இடம் பெயர்ந்ததோடு ஈழம் பற்றிய நினைவுகளும் தொடர்பை இழந்தது. என் சொந்த வாழ்வின் போக்கை அவனிடம் பகிர்ந்துகொள்வதோடு, அக்கால் கூட்டத்தில் என் வயதுக்கும் நிகழ்வுக்கும் தொடர்பை ஏட்படுத்த முடியாத- நிலைலை அவனிடம் சொல்வேன், அதற்கு அவன்,

“ஏன் உங்கள் வீட்டிலிருந்து ஒருவர் கூட தமிழர்களின் தேசிய பேராட்டத்தில் கலந்து கொள்ளாமல் போனீர்கள்…”

என்ற கேள்வியுடன் அன்றைய உரையாடல் ஒரு முடிவுக்கு வரும். நான் குற்றவுணர்வுடன்

“என் வீட்டில் நான் ஒரே பையன் அதனால் என்னை யாரும் இயக்கத்திற்கு அழைக்கவில்லை… ஆனாலும் எனக்கு விருப்பம்தான் என்ன செய்வது. குடும்பத்தை, அப்பா, அம்மாவை பார்ப்பதற்காக என் ஆசைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டேன் ….!”

“அப்பா அம்மாதான் இன்னைக்கும் உனக்கு அங்க இருந்து காசு அனுப்புறாங்க..

“சரி போ … ஏதோ நீ சிலோன்காரனா போயிட்ட அதனால் தப்பிச்ச… ஆமா இந்த சினமா பீல்டுலயாவது முன்னேற்றம் இருக்குமா…?”

பாண்டியின் கிண்டல் என்னை எரிச்சல் பட வைக்க வேண்டும் என்பதே. கோபத்துடன் என்னை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே மதுவை பற்றிய நினைவில் இருவரும் மிதப்போம். மதுவின் குடிபோதை இரவுகளில் பலமான உரையாடலின் சப்தம் அருகே இருக்கும் போதை பாண்டிகளை சண்டைக்கு வர வைக்கும். சாதி, பாரதிய ஜனதா, இந்தத்தவம், லகான தெரிதா, நீட்சே, பின்நவினத்துவம், வளர்மதி, அ.மார்க்ஸ் ஈரான் சினமா என்ற பாண்டியுடன் நான் சரிக்கு சமமாய் உரையாடி உரையாடி இறுதியில் பூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புரோட்டா கடையில் போய் மிகுதி கதையை இருவரும் தொடர்வோம், கூடவே நண்கர்களின் தொந்தரவுகள், எல்லாமுமாக இறுதியில் மதுரை மாநகர போலீஸ் ஜீப் வந்து விகாரிக்கும், குடியில் ஒருவரும் பேசாமல் இருந்தாலும், பாண்டி தைரியமாக சென்று போலீஸ் காரனிடம் பேசி விட்டு சிரித்துக் கொண்டே வருவான். போலீல பற்றிய பதற்றம் எல்லா: ஒரு நொடியில் கலையும். உணவை முந்திக் தொண்டு நண்பர்களின் ஒற்றை அறையில் அன்றிவை உறங்கி முடிப்போம்.

“தம்பி ஏண்டா இப்படி சாப்பாட்ட வீணாக்கிற…. வேண்டான்னு சொன்னா என்ன? காலை சாப்பாடு சாப்பிடனும் தம்பி இல்லாட்டி அல்சர் வந்திடும்…”

அம்மாவின் குரலில் உடைந்தன நிளைவுகள். சாப்பிடாமல் இருந்த தட்டை அம்மா எடுத்துக்கொண்டு போனார்கள். என் மனநிலைகளில் வரைப்படம் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை போல சிதறியபடி இருந்து.

தராக்க டி. சிவராமின் மரணம் மெதுவாக நினைவில் ரணத்தை ஏற்படுத்தியபடி திருந்தது. கோபத்தின் அனல் மேழெந்தபடி இருந்தது. கொழும்பு நகரத்தின் வரைப்படம் சிங்கள பேரின வாதிகளின் இரும்பு கரத்தில் அகப்பட்டதை போல் உள்ளுணர்வுகள் அச்சமாய் ஆனது, தமிழினத்திற்ரு இனி மீட்சியே இல்லையா ? லங்காதீப, லக்பிம், திவயின்ன என்ற சிங்கள இனவாத பத்திகைகளில் வெளியான தமிழாக்க கட்டுகைளை வீரகேசரியில் படித்த போது மனதில் பெரும் பயம் எழுந்தது. நம்மை சுற்றி எப்போறும் ஒரு சதி வலை பின்னப்படுவதாகவே எண்ணினேன். மனித வாழ்வு ஏன் நெருக்கடிக்குள்ளேயே இருக்கின்றது. நகரத்தின் இருப்பில் அச்சமும் பாதுகாப்பற்ற உணர்வும் பரவியபடி இருக்கின்றது.

பாண்டியின் முழு முயற்சியில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஈரான் திரைப்பட விழாவின் போது பாண்டியை மிகவும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தக்க தேர்ந்தது. நான் சென்னையில் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக கடினமான வாழ்வொன்றின் மூலமாக திரைப்பட பிம்பங்கள் சம்பந்தமாக ஊடாடிகொண்டிருந்த போது, இடையில் நகரத்தின் எச்சில் காயங்களுடன் என்னை என் அகத்தை நானை காப்பாற்றும் பொருட்டு மதுரை நகரத்திற்கு அவ்வப் போது சுய மருத்துவதற்காக போவதுன்டு. இப்போது மதுரையில் பாண்டியிடம் நிறைய மாற்றங்கள். ஜிப்பாவுக்கு மாறியிருந்த பாண்டியிடம் பீடி மட்டும் மாறாமல் இருந்தது. கள்ளக்காதலி என்று பொது சமூகத்தினால் கூறப்படும் என் நண்பனின் மறைமுகமான காதலியின் டூபாய் கணவன் கொண்டு வந்து தந்திருந்த 555 சிகரட்டை நண்பனிடமி ருந்து நான் வாங்கி ஊதிகொண்டிருந்த போது, பாண்டியிடம் நீட்டிய போது பான்டி தன்னுடைய தேசிய ஊது காரத்தை என்னிடம் காட்டி.

“ஆள் அடையாளம் வெளிதோற்றும் மாறினாலும் என் அகம் இன்னும் மாறவில்லை. ஏன் தெரியுமா என் அகம் நான் வாழ்ந்த சேரியில் சாதிய வடுவினால் உருவாக்கப்பட்டது… அது அத்தனை சீக்கரம் மாறிவிடுவதில்லை … சாதிய உளவியலை பொது சமூக மன நிலையிலிருந்து தகர்தெறிய பீடிதான் கைகொடுகின்றது. சிகரட்டின் பாசாங்கும் புகையினால் சாதிய மனம் கரைவதாச தோன்றவில்லை…. பீடியின் கடினமான நெடிதான் ஓரளவுக்கு சாத்தியம்……

தெரியுமா… புகைப்பவன் அனைவரும் தன்னம்பிக்கை இல்லதவன்கள்தான் மஹி…… நான் கூட அப்படிதான்….”

பாண்டியின் உருவத்தை போலவே அவனுடைய உள்ளத்தின் மொழியும் மாற்றமடைந்திருந்தது. அவன் கூறிய வற்றிலிருந்து சில வார்த்தைகளை தேடி அர்த்தங்களை கண் டறியும் முயற்சியில் என் மனம் ஈடுபடலாயிற்று. அன்றைய பாண்டியின் உருவம் – உள்ளடக்கம் இப்போது வரையும் புரியாத புதிராகதான் இருக்கின்றது. நன்பர்களின் மத்தியில் மாண்டியின் புதிய தோற்றம் பற்றியே பேசப்பட்டதிலிருந்து, பாண்டி தன் உள்ளத்தில் தோற்றம் பற்றிய சுய சந்தோசமடைந்தவனாக இருந்தான்.

THE KEY என்கிற இரான் திரைப்படம் EBRAHIM FOROVZEGN என்ற இயக்குனராய் இயக்கப்பட்டிருந்தது. THE KEY திரைப்படத்தை பார்த்த அனைவரும் இப்படியான தொரு சினமாவை

நாம் பார்த்தரில்லை என்று கூறி திரைப்பட விழா முடிவுற்ற மன துயரத்துடன் விடைபெற்றார்கள். பாண்டியின் முகத்தில் முகத்தில் அன்று கடுமையான இறுக்கம் சூழ்ந்திருந்தது. காரணம் புரியா விட்டாலும் உலக விழாக்களின் போது இப்படிதான் படங்கள் மனித உணர்வுகளை கடுமையாக தாக்கி விடும். படம் முடிந்து யாகும் பேச முடியாத தருணங்களுக்கு பின் நியை அர்த்தங்களும், மாற்றங்களும், நுண் அரசியலும் செயல்படுவதை அத்தனை விபரமாக கணிப்பிட முடியாது. சிறந்த திரைப்படங்கள் சிறந்த அனுபவததை தருவது மறுக்க முடியாது. முடிவுற்ற திரைப்பட விழாவுக்கு பின் அன்றும் உரையாடலின் நீண்ட இரவுகள் மதுவின் தீரத்துடன் கழிந்தது. குடி போஷையின் இரவுகளுக்கு முன் இல்லாத துயரம் திரைப்பட விழாவுக்கு பின் வரும்.

குடியில் குறிப்பிட முடியாத தொரு அக சூழல் நான் இரவுகள் உணர்ந்துள்ளேன்.. அனைவரும் பேசி முடித்து அமைதி அடைந்திருந்த அந்த தற்காலிக வளாகத்தின் இருப்பின் பின் நான் உறங்கி போக முடியாதவனாய், சதா பேச்சின் அதிர்வுகளை அறிவின் பெரும் உள்ளே எழும் மன நெருக்கடியுடன், தீர்க்க முடியாத உள் முரன்களின் –முன் எழுந்து வெளியே வந்தேன்,

இப்போது போதையின் நிழல் உருவங்கள் என்னில் விடுப்பட்டு இருந்தது. ஆனால் அதன் தடங்களின் அசைவுகள் இன்னும் உடலில் தேங்கியிருந்தது.

அந்த நடுநிசி இருளில் எனக்குள் அதிர்ச்சி இறங்கியது-

நீண்டிருந்த வெற்று வராந்தாவின் ஓரமாக போடப்பட்டிருந்த நீள் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து இருந்த பாண்டியின் தோற்றம், என்னை சற்றே நிலை குழைய வைத்தது. பாண்டியின் கறுத்த உரோமங்கள் அடர்ந்த வெற்றுடல் அந்த நடுநிசியை தாண்டிய இருட்டையே துவம்சம் செய்வதாக எனக்கு தோன்றியது.

ஆள் அருகே வருவதற்கான சமிஞ்சை தென்பட்டதும், அந்த நிர்வாண பதற்றமற்று எழுந்து நின்று என்னை நோக்கியது.

இப்போது பாண்டியின் கண்களில் அப்படி ஒரு தீர்க்கம். எழுந்து நிற்கும் அந்த உடலின் மொழிகள் புராதான மனிதனின் தோற்றத்தை என் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தியது. என் முகத்திலிருந்த வேள்விகளுடன் நான் அவன் முன் ஒரு விகையான குற்று நினைவுடனும், நிர்வாண மன நிலையுடனும் நின்றேன்…!

“என்ன மஹி! ஆச்சரியமாய் இருக்கின்றதா… புத்தர், ரமனர், J.K இன்னும் எத்தனையோ பேர்கள் நிர்வாணங்கள் பற்றி பேசியிருக்கிறார்கள்….. நிர்வாணத்தை மட்டுமே பேச்சளவில் பேசும் அஸ்வாமித்ரன் என்னிடம் கேட்டான், நீ போலி ஆன்மீகம் பேசுகின்றாய் ….. நான் நிர்வாணத்தை பற்றிய எல்லா உரையாடல்களையும் விட நிர்வாணமே மேல் என்று கூறிதான் இப்படி… அறையில் எல்லோகும் அதிர்வடைந்து விட்டார்கள். நிர்வாணம் மனிதனை அச்சுறுத்துகின்றது. அந்தளவுக்கு அனைவரிடமும் பாலியல் பற்றிய குற்றவுணர்வு நிர்வாணம் வேறு பாலியல் வேறு….. நான் என் தெருவில் நிர்வாணமாக திரியும் ஒரு பைத்தியக்காரனை பார்ப்பதுண்டு ஆனால் மஹி அவன் பைத்தியம் கிடையாது அவன் மட்டும்தான் மனித ஜீவியாக இந்த உலகத்தில் சுதந்திரமானவனாக தன்னிச்சையுடன் வாழ்கிறான்… ஆனால் நான் நீ இந்த உலகம் உட்பட எல்லாமே பைத்தியங்கள்தான்…. என் இந்த நிர்வாணத்தை கண்டு அறையை விட்டு வெளியேற்றி விட்டார்கள். …இனி வெளியேற வேண்டும்…. எல்லா மனிதனுக்கும் வெளியேறுதல் சுயத்தின் அடிப்படை.. ! மனிதனுக்கு அறைகள்தான் பிரச்சினை. உன் அறையை என் அறையை எப்போது காலி செய்வது”

“KEY படத்தில் வரும் சிறு குழந்தையின் தன் முனைப்பும், இறுதியில் விடுதலை பெறும் என்னை மிகவும் தாக்கியது..- நல்ல படம்… என்ன… “

“…….”

அன்று பாண்டியின் சுயத்தை பற்றிய குறிப்புகளின் மூலமாக ஆர்ந்துகொண்டேன். இனி பாண்டியை எது ஒன்றினாறும் அசைத்து விட முடியாது என்று. இனி பாண்டிக்கு யாருடைய உதவிகளும் தேவைப்படாது என்று புரந்தது. இனி பாண்டியிடம் காப்பாற்றுவதற்கு எதுவும் இல்லை என்று எனக்கு தோன்றியது. பாண்டியின் உடல் நிர்வாணம். என் விழி பிம்பங்களில் இன்னும் உறைந்து போயிருக்கின்றது. அதுதான் பாண்டியினுடனான என் இறுதி சந்திப்பு. யாருக்கும் தெரியாது யாருடைய சந்திப்பு இறுதி என்று. சந்திப்புகள் மட்டுமே அதை முடிவு செய்கின்றது.

தாய்நாடு போவதற்கான கடினமான முயற்சிகள் தோல்வியை தழுவியது, நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் படகில் ஏறி திருட்டுத்தனமாக எல்லையை கடக்க வேண்டிய சூழ்நிலையில் நான் மதுரைக்கு மீண்டும் வர வேண்டியதாகி, அங்கிருந்து இரவில் பயணமாகி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து இரவில் படகு பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த போது, இந்திய கடல் படைகள் நம்மை தாக்கி விசாரணைக்கு பின் அனைவரும் ஈழத்தமிழ் அகதிகள் என்ற அடையாளத்துக்கு பின் மீண்டும், மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். 14 நாட்களுக்கு பின் முதல் வாய்தாவுக்காக வெளியே வந்த போதுதான் தோழர் இளம் பரிதி மூலமாக நீதிமன்ற வாசலில் வைத்து அந்த துயர் மிருந்த செய்தியை கூறினார்கள். அது அதுதான்…..

‘ பாண்டி தூக்கு போட்டு செத்து போனதாகவும், இறுதி கடிதத்தில் நண்பர்கள் அனைவரையும் குறிப்பிட்டதாகவும் கூறினார். ‘நான் படகில் ஏறிய அன்றிரவே பாண்டியின் மரணம் முடிந்திருந்தது. நான் நட்பு கருதி வருத்தமடைவேன் என்றும். என் மரபை மீறிய பயணத்தின் போது சுயதைரியம் இழந்து விடுவேன் என்றும் பாண்டியின் மரணத்தை குறித்து கூற வில்லை என்றும் சொன்னார்கள்.

என்னால் அவர்களின் சொற்களை நம்பவே முடியவில்லை. இப்போது அந்த பாண்டியின் அழகிய முகமும், பெருத் அடர்ந்த கரிய மீசையும், தீர்க்கமான மூக்கும், கூடவே நிர்வாணமும் மற்றும் அவன் பேசிய பேச்சிகளும், நடந்தவை, அமர்ந்தவை, டீ அருந்தும் போதும், பீடியை குடிக்கும் போதும், மதுவை சுவைக்கும் போதும் அவன் பாவிக்கும் வெவ்வேறு உடல் அசைவுகள், தோற்றங்கள் பாவனைகள் என்று என் கண்களில் இப்போது கண்ணீரின் துளிகள் உடைந்து சிதறியது. பாண்டியின் உறுத்தும் நினைவுகளுடன் நாற்பது நாள் சிறைவாசம் முடிவடைந்து, மீண்டும் மிகுதி பயணத்தை நோக்கி என் வாழ்வை செலுத்தினேன். நிற்க முடியாது ஒடவே வேண்டும்.

அங்கே பாண்டியும் இங்கே சிவராமும் இப்போது ஒரே புள்ளியிலிருந்து என் ஞாபகங்களை நோக்கி கல்லெறிந்தபடி இருக்கிறார் கள்.

இறக்கி விடப்பட்ட பஸ்ஸிலிருந்து நான் நடந்துகொண்டிருந்தேன். இரவும். இருட்டும், தனிமையும் மனிதனை அச்சம் கொள்ள செய்வது எல்லா தேசங்களிலும் நிகழ்கின்றது. இந் நேரம் அவள் உறங்கியி ப்பாள், நேற்றிரவு வயித்து வலி வேறு அவளை சிதைத்தபடி இருந்தது. பெண்களின் பிரச்சினைகள் பெண்ணின் அந்தரங்க வெளியோடு சம்பந்தப்பட்டவைதான்.

நடத்துகொண்டிருந்த நான் இப்போது மெதுவாக என் சுவர்களிலிருந்து வெளியேறியபடி நடந்தது. நாய்களின் ஊளையிடும் சப்தம் சிறிய பூச்சிகளின் இரைச்சல். ஸ்தம்பித்து போயிருந்த ஒரு தருணத்தில் போலீஸ் ஜீப் என் அருகே வந்து நின்றது. வானத்தின் உறுமல் இரைச்சல் பீதியை கொண்டு வந்தது. நான் இடை மறித்தப்பட்டு என் எதிரே போலீஸ்காரர்களின் கெடுபிடி ..

என் எதிரே ஜீப்பிலிருந்தப்படி அதிகாரி கேட்டார்,

“மே வெலாவட்ட ஓயா கொய்த யன்னே…..”

கேள்விகள் தொடர்ந்தது. நான் என் வீடு அருகில் இருப்பதாகவும் கொழுப்பு நகரத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதாகவும் கூறினேன்.

அடையாள அட்டைக்கு பின் நான் தமிழன் என்பதை உறுதி செய்துவிட்டு போலீஸ் ஜிப்பில் ஏறும்படி கூறினார்கள். நான் ஏன் சந்தேக நபராக மாறுகின்றேன். நான் ஒரு சாதாரண மனிதன். எந்த விதமான இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. நான் வெறும் சிவிலியன் என்று அழுவதுபோல் பாவனை செய்து கூறினேன். அவர்கள் என்னை எந்த விதத்தில் சட்டை செய்யாமல் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

என் உடைகளை கலைக்க செய்து. நிர்வாணமாக்கினார்கள். உன்னுடனான தொடர்புகள்களை சொல், அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன? தாக்குதல் திட்டங்கள் என்ன? என் நினைவுகள் மங்கிபோக் தொடங்கியது.

இடையிடையே பாண்டியின் மரணம் – அவனின் நிர்வாணம் – தராக்கியின் கொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்டுக் கிடக்கும் உடலின் மௌன சாட்சியாக தராக்கியின் குழந்தையின் பிஞ்சு கதநலின் புகைப்பட பிரதிகள், சிங்கள ராணுவம், இருள், பூட்ஸ் கால்களில் மிதிப்படும் காயங்கள், அலறல், ஓலம், மற்றும் சாவுகளின் இரத்த நெடி என்று மனம் பிதற்றியது. காயத்தின் மீது ஒரு அதிகாரி பலமாக தன் கரத்தினால் ஊன்றி அடிக்கின்றான். என் குறியின் மேல் தன் கால்களினால் மதிக்கின்றான், மோசமான இன பெயர் கொண்ட வார்த்கைளினால் திட்டிவிட்டு மண்டையில் சுவரோடு மோதுகின்றான். நான் நிலை தருமாறி சுவரோடு சரிகின்றேன். இப்போது தராக்கியின் மரணங்கள் சிங்கள இன வன்முறைகள் என்று என் ஆழ்மணம் நினைவு பெரு வெளியில் சூழ்கின்றது. அப்படியே சகின்றேன்… சாவு துாறத்தில் சலனமாக தெரிகின்றது….

“மதி! டீ சாப்பிடுவோமா…! வா பசி மண்டையை போட்டு கொடையுது..”

தோழர் ஜீவா என் மரண பயங்களை அதாரமற்று அலையும். நிலைவுகளை இயல்புக்கு கொண்டு வந்தார். இப்போது பஸ் உணவு விடுதிக்கு முன் தரிக்கப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவ ராக’ தன் இருக்கைகளை காலி செய்து இறங்கி டீ, சிகரட், சிற்றுண்டி என்று நிலமை மாறியிருந்தது. இருக்கைகள் விட்டு இறங்கினே தலை பாறமாக வலியுடன் அழுத்தியது.

“அப்பாடா.. ஜீவா இப்போ டைம் என்ன…?”

“என்ன இடமிது…? நான் நல்லா தூங்க்கிட்டேன்…”

கேள்விகளுக்கான பதிலை அவரும் கூறவில்லை. நானும் எதிர்பார்க்காதவனாய் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். கதவுகள் மூடிக்கொள்ள இருளடைந்தது……!

– மதுரை பாண்டியின் நினைவுகளுக்கு. வீரகேசரி பவளவிழாவில் பரிசு பெற்ற சிறுகதை. 24.07. 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *