விபத்து
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது கோலாலம்பூக்குச் செல்லும் நெடுஞ்சாலை பள்ளி விடுமுறை என்பதால் சாலை நெடுகலும் அதிகமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அவற்றுள், ‘ ‘கோச்பஸ்ஸின்’ எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது பலர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் பயணம்மேற்கொண்டிருப்பதை அது பறைசாற்றிக்கொண்டிருந்தது. உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கவும் கோலாலம்பூரைச் சுற்றிப் பார்க்கவும் மனம் கிளர்ந்துகொண்டிருந்த எனக்கு – அந்தச் சாலைக் காட்சிகள் குறிப்பாகச் சாலை ஓரத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த இயற்கைக் காட்சிகள் என்னுள் பல இனிய நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. என் எண்ண ஓட்டங்களுக்கேற்ப நான் பயணம் செய்துகொண்டிருந்த’கோச் பஸ்ஸும்’ மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
“எனக்கு எப்போதுமே இந்தப் பஸ் பயணம் ஒத்தே வராது ஒழுங்காகச் சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது ஏன்னா, கழிவறை வசதி கிடையாதே! என் மனைவிதான் வற்புறுத்திப் பஸ்ஸூலே வரச் சொன்னாள். மலிவான பயணம்னு சொன்னாள் வேறு வழியில்லாமே வந்துட்டேன்.. .”
பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் அந்தப் பஸ் பயணத்தின்போது எனக்கு அறிமுகமானவர். பெயர் முத்துசாமி.
“ஆமாம் ! எனக்கும் பஸ் பயணம் பிடிக்காது ரயில் அல்லது விமானப் பயணம்தான் ஒத்து வரும் இப்போதான் மலிவு விமானக் கட்டணம் எல்லாம் வந்துடுச்சே என் பிள்ளைங்கதான் பஸ்ஸுலே போகலாம்னு சொன்னாங்க. வெளியே பார்த்துக்கிட்டே போறதுல அவங்களுக்கு ரொம்ப ஆசை… இன்னும் கொஞ்ச நேரத்துல போய்ச் சேர்ந்திடுவோம்… பாருங்க, காலையிலே ஏழரை மணிக்குப் பஸ் ஏறினோம்.. இப்போ மனி பத்தாகுது. மத்தியானம் இரண்டு மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சேர்ந்துடுவோம்”, என்று பதிலளித்தேன்
“ஆனால், ‘எக்ஸ்பிரஸ்’ ரயில்லே இன்னும் சீக்கரமா போலாமே !”, என்றார் நண்பர் பின் இருக்கையிலிருந்து சற்று முன்னுக்கு வந்தபடியே.
“போயிருக்கலாம். பரவாயில்லை அடுத்த முறை பார்க்கலாம்”, என்று பேச்சை நிறுத்த முயன்றேன். பயண ஆலுப்பு என்னை ஆட்கொள்னத் தொடங்கியது. அதோடு காலை வெயிலும் கடுமையாக ஐன்னல் வழியாக ஊடுருவத் தொடங்கியது. ஜன்னல் திரையை விரித்துலிட்டுக் கண்ணயர்வதற்காக _ இருக்கையில் சாய்ந்தேன். தொலைக்காட்சியில் ஆங்கிலத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் சற்று அதிகமாக இருந்ததால், பாதித் தூக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் என் மனைவி சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.
“அப்பா! இந்தப் படத்தை ஏற்கனவே நாமே பார்த்தாச்சு தானே”, எதையோ கண்டுபிடித்தாற்போல் முன் இருக்கையிலிருந்து துள்ளிக்குதித்து என்னிடம் சொன்னான் என் பத்து வயது மகன்.
“ஆமாம், அண்ணன் சொல்றது சரிதாம்பா. பாருங்க, இப்ப இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரப்போகுது”, தன் சார்புக்குச் சொல்லி வைத்தாள் என் எட்டு வயது மகள்.
“ஆமாம், இந்தப் படத்தைத் தியேட்டருல பார்த்தாச்சே.. பரவாயில்லை! இன்னொரு தடவை பாருங்க..”
தாங்கள் கண்டுபிடித்தது சரியே என்ற மன நிறைவோடு படத்தைத் தொடர்ந்து பார்க்கத் தொடங்கினர் பிள்ளைகள்.
என் கண்கள் மீண்டும் அரைத்தூக்கத்தில் மூழ்கின. விரைவில் அது முழுத் தூக்கமாக மாறியது. ‘கோச் பஸ்ஸில்’ சொகுசுத் தூக்கத்துக்குப் பிச்சையா கேட்க வேண்டும்?
தொலைக்காட்சியில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். வானில் மேகத்திரைகள் சூழ்ந்திருந்தமையால் பஸ்ஸின் ஜன்னல் திரைகளை மெல்ல அகற்றி ஓரத்தில் கட்டினேன். – இதமான பருவ நிலை. சுகமான பயணத்தை உணரத் தொடங்கியபோது, திடீரென்று என் கவனத்தை ஈர்த்தது மறுபுறத்துச் சாலைப் பகுதி என்ன ஆச்சரியம்! அங்கே வாகனங்கன் மிகக் குறைவாகவே காணப்பட்டன. ஏதோ ஒன்றிரண்டு மட்டுமே வேகமாகச் சென்றுகொண்டிருந்தன.
“இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே! சற்று முன் ஏராளமான கார்களைப் பார்த்தேனே!..” என் எண்ண ஓட்டங்களுக்கு விடை அளித்ததுபோல், பின்னாலிருந்த குரல்,
“ஏதோ நடந்திருக்குதுன்னு நெனக்கிறேன்!”, நண்பர் மனைவிதான் அது. –
“விபத்தாத்தான் இருக்கும் அல்லது ஏதாவது போலீஸ் சோதனையா இருக்கும்”
நிமிர்ந்து என் இருக்கையின் பின்புறத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு பேசினார் நண்பர்.
“ம்.. இருக்கலாம்.. இருக்கலாம்”
நண்பர் கூறியதை நான் ஆமோதித்தேன் என் பின்ளைகள் இருவரும் ஆர்வத்தோடு வெளியே எட்டிப்பார்க்கத்தொடங்கினர்
சற்று நேரத்தில் ஒரே கூட்டமாக இருந்தது போக்குவரத்துப் போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள், உதவியாளர்கள் எனப் பலர் கூடிவிட்டனர். சற்றுத் தூரத்தில், நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த கோச் பஸ்ஸைப் போன்ற ஒரு பஸ் சாலையில் கவிழ்ந்திருந்தது. சாலையின் இரு தடங்களும் போக்குவரத்துக்கு மூடப் பட்டிருந்தன. சிலர் சாலையோரத்தில் நின்றுகொண்டும் வேறு சிலர் அமர்ந்துகொண்டும் இருந்தனர். சிலருக்கு முதலுதலி சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கடுமையாகக் காயமடைந்த சிலரை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அங்குமிங்குமாகச் சாலையில் சிதறிக்கிடந்த பொருள்களைச் சிலர் அப்புறபடுத்திக் கொண்டிருந்தனர்
நாங்கன் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் சற்று மெதுவாகச் செல்லவே, அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆழப்பதியத் தொடங்கின.
“அப்பா, நம்ம பஸ்ஸூம் அந்தப் பஸ் மாதிரிதானே. அது ஏம்பா இப்படிக் கவிழ்ந்து கிடக்குது?”, என் மகன் விபத்தின் காரணத்தை அறிந்துகொள்ள விரும்பினான்.
“பஸ் டிரைவர் மிக வேகமாக ஓட்டியதால் பஸ் சறுக்கி இப்படிக் கவிழ்ந்திருக்கலாம்”.
“ஓ.. அதனாலேதான் நம்ம பஸ் இப்ப மெதுவாப் போகுதா?”
“ஆமாம்”, என்று மட்டும் தலை ஆட்டிவிட்டுப் பின்னால் இருந்த நண்பரை எட்டிப்பார்த்தேன். அவர் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பது தெரிந்ததும், “பேனா ஏதாவது இருக்குமா!”, எனக் கேட்டார். நான் என் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொடுத்தேன். அவர் உடனே ஒரு தாளை எடுத்து, விழுந்து கிடந்த அந்தக் கோச் பஸ்ஸின்எண்ணைக் குறித்துக்கொண்டார். மூன்று ஆங்கில எழுத்துக்குப் பிறகு இருந்த அந்த நான்கு எண்களையும் கவனத்தோடு குறித்துக் கொண்டார்.
“என்ன ‘கரைக்ட்டா’ குறிச்சிக்கிட்டீங்களா?”
நான் சற்றுக் கேலியாகத்தான் கேட்டேன்.
“ஓ… இதுலே எல்லாம் நான் ரொம்பக் கவனமாக இருப்பேன் எனக்கு எப்போதுமே நாலு நம்பருலே ராசியிருக்குது. போன வாரங்கூட எனக்கு ஒரு நம்பர் மிஸ்ஸாயிடுச்சு. இல்லாட்டிப் போனா மூணாவது பரிசு, மூவாயிரம் வெள்ளி கிடைச்சிருக்கும். அதற்கு முதல் வாரத்துல கூட ‘கன்சலேஷன்ல’ ஜந்நூறு வெள்ளி கிடைச்சுது. அதனால, இதுவும் படும்னு நெனக்கிறேன். நல்ல அழகான நம்பரு. நீங்களும் எழுதிக்கிறீங்களா?”, என்று என்னிடம் அந்தத் தாளை நீட்டினார். நான் வேண்டாம் என்று தலையசைத்ததும் அந்தக் காகிதத்தை மெல்ல மடித்துக் கவனமாகத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார்.
“இந்த மாதிரி விபத்து நடந்தா உடனே ஓடிப்போய் நம்பர எடுக்கிறதுதான் என் வழக்கம். ஏன்னா, இந்த மாதிரி நம்பருலேதான் நல்ல அதிர்ஷ்டம் இருக்குது. அதுவும் ரொம்ப மோசமான விபத்தா இருந்தா இன்னும் அதிர்ஷ்டம் கூடும்!”
அவர் முகத்தில் ஆர்வம் மின்னியது.
“அப்பா, அங்கே பாருங்கப்பா.. ரத்தம்.. பார்க்கப் பாவமா இருக்குப்பா..”
என் மகன் திடீரென்று கூச்சலிட்டான்.
“சரி சரி, சத்தம் போடாதே, ரவி”
என் மனைவி அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
என் மனம் கனக்கத்தொடங்கியது. நானும் இது போன்ற நிகழ்வுகளைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் என் கார் இன்னொரு காருடன் மோதியதும் நான் இறங்கி வந்து என் காரைச் சோதனை செய்துகொண்டிருந்தபோது, இடையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் என் காரின் எண்ணையும் என் கார் மீது மோதிய காரின் எண்ணையும் குறித்துக்கொண்டு சென்று விட்டான். நல்ல வேளையாக இரு கார்களுக்கும் சேதம் அவ்வளவாக இல்லை.
விபத்து நடந்தவுடன் விபத்துக்குள்ளானவர்களைக் காட்டிலும் விபத்துக்குள்ளான வாகனங்களின் எண்களை நோட்டமிடும் போக்கு எனக்கு விசித்திரமாகப்பட்டது. அதிர்ஷ்டத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்று நினைத்தபோது அதிர்ஷ்டத்துக்கே இது ஒரு சோதனையாக எனக்குப்பட்டது.
“இதைப் பத்து வெள்ளிக்கு வாங்கினால்.. இவ்வளவு கிடைக்கும், இருபது வெள்ளிக்கு வாங்கினால் இவ்வளவு கிடைக்கும்”, என்று பின்னாலிருந்த நண்பர் தன் மனைவியிடம் தாளில் கணக்குப்போட்டுக் காட்டிக்கொண்டிருந்தார்.
திடீரென்று நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் பேரிரைச்சலுடன் நின்றது. மீண்டும் விபத்து. சிறு விபத்துதான். இந்த முறை நாங்கள் பயணம் செய்த பஸ்ஸும் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்ஸும் மோதிக்கொண்டன. நண்பர் உடனே பஸ்ஸை விட்டு இறங்கி அடுத்த பஸ்ஸின் எண்ணைக் குறித்துக் கொள்ள ஓடினார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் வந்து, “பயப்படும்படி ஒண்ணுமில்லே. பஸ் முன் பக்கத்துல ஒரு விளக்கு உடைந்துவிட்டது; அவ்வளவுதான். டிரைவர்கள் ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்காங்க”, என்று கூறிக்கொண்டே பஸ்ஸில் ஏறிய நண்பர். பேனாவை என்னிடம் கொடுத்துவிட்டுத் தன் இருக்கையில் போய் அமர்ந்தார்.
“அப்பாடா, என்னடா ஒத்தையா இருக்குதேன்னு நினைச்சேன். நல்ல வேளையா இப்போ மூணு நம்பர் கிடைச்சிருக்சு உடனே சிங்கப்பூருக்கு ஃபோன் போட்டு, இந்த வாரத்துக்கு இந்த நம்பரை வாங்கச்சொல்லணும்”, என்று தன் மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தார்’ நண்பர்.
விபத்திலும் அதிர்ஷ்டத்தைத் தேடுகிறது மனம்.
– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.