விகிர்த்தனன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 8,792 
 
 

பள்ளிக் காலங்களிருந்து இருந்து சனிக்கிழமை எனக்கு மிகவும் பிடிக்கும். சனி மற்றும் ஞாயிறு ஏதோ ஒரு விளையாட்டு. நாள் முழுவதும் இருள் வரும் வரை. எவரும் தடுக்க மாட்டார்கள் அதிகமாக விளையாடுவது கிரிக்கட் மட்டும் தான்.

அலுவலகம் மிகவும் உற்சாகமாகவும் சுறுப்பாக இருந்தது. அனைவரும் சீருடையில் இல்லாமல் வித விதமான ஆடைகள் விதமான நிறங்களில் வந்திருந்தார்கள். எந்த வேலையும் இருக்காது முடிக்க பட்ட வேலை குறித்து விவாதம் அல்லது புதிதாக தொடங்கப்படும் புராஜக்ட் பற்றிய கலந்துரையாடல் மட்டுமே இருக்கும்.

சிந்து புது ஆடையில் வந்திருந்தாள். பிறந்த நாள் இல்லை. வேறு ஏதாவது விஷேசமா தெரியவில்லை. காலையில் அழைத்திருந்தாள் எடுக்கவில்லை. கண்டிப்பாக ஏதாவது கோயில் செல்வதற்கு தான் இருக்கும்.

அடர் பழுப்பிலும் வெண்மையிலும் புதிதாக பூத்த பட்டு ரோஜா போல் சேலையில் இருந்தாள். அவள் கண்களில் ஏதோ காந்தம் வைத்திருக்கிறாள். அதுதான் அவளிடம் என்னை நிறுத்தி வைத்திருக்கிறது. எப்போதும் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. வழக்கமாக வித்தியாசமாக தான் வருவாள்.

கோபமாக இருந்தாள். அவளே வந்து பேசுவாள் வரவில்லை. அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சிக்கல் வந்து விடும்.

ஹலோ

பதில் இல்லை

அருகில் சென்று அமர்ந்தேன்

என்ன வேலை

போய் வேலைய பாரு

சரி மேடம்.

மீட்டிங் ஆரம்பித்தது பல விவாதங்கள் நடந்தது. எப்போதும் பிரச்சனை என்று வரும்போது இறுதியாக சரி செய்வது தான் என்னுடைய வேலை.

இப்போது தான் இந்த புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன்.

கல்லுரி முடித்த நேரத்தில் ஆர்வத்தில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். பொருட்செலவு அதிகமாக எங்கள் பூர்விக வீட்டை வித்து நிலங்களை வித்து அந்த பணத்தில் முடிக்கும் நேரத்தில் நண்பர்கள் வேறு வழியில்லாமல் ஆளுக்கு ஒரு திசையில் சென்று விட்டார்கள் வேறு வேலைகளுக்கு. குடும்பங்களின் அழுத்தும் காரணமாக. ஒரு சிலர் எஞ்சினார்கள். அது எனக்கு ஆறுதல் தந்தது.

ஆனால் கொடுத்த பணத்தை யாரும் கேட்க வில்லை. மேலும் பணம் தேவைபடும் போது தான் என் நண்பன் சத்தீஷ் உறவினர் சத்திய நாராயணன் தொடர்பு கிடைத்தது. அவர் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கியிருந்தார் .

அவரிடம் அறிமுக படுத்தினான் ஒரு நிகழ்ச்சியில். வீட்டில் பேசலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். அடுத்த சத்திப்பு அவர் வீட்டில் நடந்தது. அவருடைய மகள் தான் சிந்து. அன்று தான் சிந்துவை பார்த்தேன் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாள்.

காபி கொடுத்தாள் தேவதை போல் இருந்தாள். பணம் படைத்தவர்கள் வீடிற்கு நான் சென்றது இல்லை.

சொர்க்கம் போல் இருந்தது.

அவளையே பார்த்து கொண்டிருந்தேன். நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றிலும் ஒரு எளிமை தெரிந்தது.

ஏதோ இசை வரிகள் இல்லாமல் ஒலித்து கொண்டு இருந்தது பாடல். அது எனக்கு பல பார்வைகளை கொடுத்தது. அடுத்த பிராஜக்ட் நாட்டும் கிடைத்தது.

அவள் சிரித்தாள் அவள் வீட்டை சுற்றி காட்டினாள். மிக பெரிய நூலகம் இருந்தது. பல நிறங்களில் புத்தகம் இருந்தது. அதில் இருக்கும் ஒரு புத்தகத்தையும் நான் பார்த்தது இல்லை.

என்ன ஜானர்ல படிப்பிங்க

செயற்கை நுண்ணறிவு

அவள் சிரித்தாள்

உடனே ஒரு புத்தகம் கொடுத்தாள்

The White Tiger

மனது சொன்னது படிக்க வேண்டும்

மீண்டும் சந்திப்போமா தெரியவில்லை ஆனால் படிக்க வேண்டும்

வண்டி ஆரன் சத்தம் கேட்டது.

போகும் போது சொன்னாள் எங்க அப்பா நல்லா பேசுவார். எங்க மாமா அலட்சிய படுத்துவார் பாத்துக்கோங்க

படிங்க பேசலாம்

பை என்று துள்ளி குதித்து ஓடினாள்

என் எல்லா பிரச்சனைகளும் திரிந்தது போல் இருந்தது.

அவளையே பார்த்து கொண்டு இருந்தேன்.

அப்போது நாராயணன் மற்று சிகாமணி வந்தனர்.

நாராயணன் Textile நிறுவனத்தை நடத்தி கொண்டிருந்தார். அதன் சங்கங்களிலும் பெரிய பொறுப்பில் இருந்தார். சிகாமணி சிந்துவின்

மாமா அவர் தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டியிருந்தார்.

நான் சங்கர் சத்தீஷ் நண்பன் என்று மீண்டும் அறிமுக படுத்தி கொண்டேன். அன்று சரியாக பேச முடியவில்லை. உங்க பிராஜ்க்ட் என்ன என்று கேட்டார். இந்த திட்டம் ஏற்கனவே விருந்து வாங்கியிருக்கிறது. இரண்டு வெளிநாடு நிறுவனத்தின் பார்வைக்கு உள்ளது.

உங்க பிராஜக்ட் பெரிசா இருக்கு என்றார் நாராயணன். பாதி முடிந்து விட்டது மீதி முடிக்க தான் பணம் தேவை. முடித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

என்ன நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க வேண்டும். எல்லாம் என் நண்பர்கள் தான்.

உங்க நிறுவனத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் இதை வைத்து அடுத்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்றேன்.

சிகாமணி எங்கள் நிறுவனத்திற்கு முழுமையாக விற்கும் பட்சத்தில் உங்களுக்கு பணம் தர தயார் என்றார்.

சார் இது என்னுடைய படைப்பு இது மக்களுக்கு வருமானம் தர கூடியது. ஒரு நிறுவனத்திடம் கொடுத்தால், தனி நபர் சொத்தாக மாறிவிடும்.

சாரி சார்.

உங்களுக்கு மிகவும் நன்றி

தாங்ஸ் சார்

நான் புறப்படுகிறேன்.

உடனே நாராயணன் தம்பி உட்காருங்க. உங்களுக்கு நல்லா ஞானம் இருக்கு இந்த துறையில். உங்கள் நிமிர்வு எனக்கு

புடிச்சிருக்கு. உங்களுக்கு பணம் தரோம் அதனால் எங்களுக்கு என்ன பயன்.

உங்களுக்கு கம்பெனி ஷர் கிடைக்கும் சார்.

ஓகே

தம்பி ரெம்பா சந்தோஷும்.

நாளைக்கு பணம் கிடைக்கும்.

இரண்டு மாதங்களில் திட்டம் முடிந்தது. நல்ல லாபம் கிடைத்தது. மக்கள் பயன்படுத்த தொடங்கினார்கள். என்னுடைய வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெற்றேன். நண்பர்களுக்கு ஷார்ஸ் கொடுத்தேன்.

சிந்துவை மறந்து போனேன். பெரிய புகழ் கிடைத்தது. இந்த சிறு வயதில் கிடைத்த பெரிய புகழ் மேலும் பெரிய பெரிய திட்டங்கள் பெரிய கனவுகள் கிடைத்தது. ஒரு நாள் காலை சிந்து கொடுத்த புத்தகத்தை பார்த்தவுடன் அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

அதை அவள் கொடுத்த அன்றே அவளுக்காக படித்து முடித்து விட்டேன். அவங்க அப்பாவையும் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்துட்டு ஓடினேன்.

அவர் வீட்டில் இருந்தார்.

நன்றி சார்

வாழ்த்துக்கள் ஷங்கர்

என்ன தேடுரீங்க சொல்லுங்க

உங்க பெண்ணு எங்க

அவள் டூர் போய் இருக்க

என்ன விசயம்

இந்த புத்தகத்த கொடுத்துடுங்க.

பல திட்டங்கள் பற்றி கூறினேன்.

மீண்டும் சந்திப்பதாக கூறிக் கொண்டு திரும்பினேன்.

பெரிய திட்டங்கள் வர தொடங்கின கடன்களும் பெருகின லாபம் பெருகின. நிறுவனம் நீல திமிங்கலம் போல் கடலை ஆட்சி செய்தது. சிலர் ஆச்சரிய பட்டார்கள் சிலர் பயந்தார்கள்.

எனக்கு பயம் இல்லை எதவும் என்னுடையது கிடையாது. தூசில் இருந்து ஆரம்பித்தது. புதிதாக ஒரு மாம்பழ தோட்டம் வாங்கியிருந்தேன் பண்ணை வீட்டுடன் வார இறுதியில்

வார இறுதியில் அங்கு இருப்பது மீண்டும் திரும்புவது .

மிக பெரிய வீடு.

மாலை தொடங்குவதற்கு முன் பண்ணை வீட்டிற்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தேன்.

அப்போது தான் கெஜா புயல் பற்றிய அறிவிப்பு வந்து கொண்டிருந்தது.

சிந்து தான் அழைத்தாள்.

நல்லா இருக்கீங்களா

I am fine

வாழ்த்துக்கள் உங்க நிறுவனத்தின் மென்பொருளுக்கு நல்ல மார்க்கட்

எங்களை நியாபகம் வச்சியிறீக்கிங்க

Thanks.

அப்பறம்.

நானே நேரா பார்க்கனும் இருந்தேன்

ஒரு முக்கியமான விசயம்

என்ன புக்கஸ் வேணுமா

இல்ல உங்க நூலகம் போல் பெரிய நூலகம் ஏற்படுத்தியிருக்கேன்.

அதனை உங்களுக்கு காட்டனும்

படிக்க ஆரம்பிச்சிடிங்க

ஷங்கர்னு கூப்பிடுங்க

சிந்து

என் பெயர் நியாபகம் இருக்கு

பரவாயில்லை

உங்கள இரண்டு விசயத்திற்கு பார்கனும் ஒன்னு நம்பலா பத்தி இரண்டு கம்பனி பத்தி

ஓகே

எப்போனு சொல்லுங்க பார்க்கலாம்.

நான் என் பண்ணை வீட்டிற்கு போறேன்.

If you don’t mind

நீங்களும் வரலாம்.

இல்ல

எங்க வீட்டிற்கு வாங்க பேசலாம்.

மழையா இருக்கு பார்த்து வாங்க

ஓகே

எப்படி புரிந்து கொண்டால் என் பிரச்சனையை தெரியவில்லை. சரியாக சாப்பிடும் நேரத்திற்கு சென்றேன்.

இந்த புயலால் என் ஊருக்கு சில பாதிப்புகள் வரலாம். எனக்கு தெரிந்த சில நிபுணர்களிடம் கேட்டேன். என்ன முன் எச்சரிக்கை செய்வது என்று.

முக்கியமாக தென்னைக்கு பாதிப்பு வரலாம் என்றனர். தென்னையின் தோகைகளை வெட்டினால் மரம் தப்பிக்கும் என்றனர்.

நான் ஊருக்கு அழைத்து பழனியிடம் செய்தியை கூறினேன். அவன் சிரித்தான். புயல் அடிக்கும் ஆனால் பாதிப்பு வராது என்றான். நம்ம தோப்பு மரங்களின் தோகையை உடனே வெட்ட சொல்லு. இதை பார்த்து மற்றவர்கள் வெட்டுவார்கள்.

நான் சிந்து வீட்டிற்கு ஏற்கனவே பழைய காருல போனேன். இப்போது புது காருல போகிறேன். அவள் பிறந்ததிலிருந்து செல்வத்தில் பழகியவள். நான் நடுத்தர வர்க்கம். எங்க அப்பா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இந்த பிஸ்னஸ் எல்லாம் தெரியாதவர். நான் இப்போது தான் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளேன்.

வாசலிலேயே வந்து வரவேற்றாள். அவள் வந்தவுடன் மழை ஆரம்பித்து விட்டது. குடையும் வந்தது. என்னை குடைக்குள் அழைத்து சென்றாள். முதலில் பார்த்தது போல் இல்லாமல் மிளிரும் அழகுடன் இருந்தாள். தினமும் அழகு கூடும் போல. ஆனால் அவள் பார்க்கும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அன்று இருந்த நிலைமையில் இன்று வந்தாலும் அதே போல் தான் பார்ப்பாள் போல.

இவளிடம் இந்த முதல் பாடத்தை தான் கற்று கொள்ள வேண்டும். நான் எல்லா மனிதர்களிடம் இருந்து தான் கற்று கொள்கிறேன்.

வீட்டில் வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை. இது எனக்கு நல்ல வாய்ப்பு அவளிடம் மனம்விட்டு பேசு.

இருவரும் சாப்பிட்டு கொண்டே சமிபத்தில் படித்த புத்தகங்கள் பற்றி அவள் பேசு தொடங்கினாள். நான் கேட்டு கொண்டு இருந்தேன்.

நானே பேசிட்டு இருக்கேன். நீங்க ஏதோ பேசணும் சொன்னிங்க.

இல்ல உங்களுக்கு என்னுடைய பண்ணை வீட்டையும் நூலகத்தையும் காட்டணும் என்று இருந்தேன்.

அப்படிய நாளைக்கே போகலாம்.

அது இல்ல இரண்டு விஷ்யங்கள் பேசனும் சொன்னீங்க அத சொல்லுங்க.

புதிய வாய்ப்புகள் வர தொடங்கி விட்டது. புதிய இன்வெஸ்டர்ஸ் கிடைத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் என்னுடைய நிறுவனத்தில் தொடங்க முடியுமா தெரிய வில்லை. எல்லா இயக்குனர்களும் தயக்கம் காட்டுகிறார்கள்.

எனக்கு மெதுவா நடக்க முடியவில்லை ஓடத்தான் பிடித்திருக்கிறது.

எப்படியும் என்னை சில நாட்களில் இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றி விடுவார்கள் போல. அதற்குள் நானே வெளியேறி விடலாம் என்று நினைக்கிறேன்.

நீங்க பெருசா வளர்ந்திட்டிங்க எங்க அப்பா சொல்லுவாரு. இந்த பையன் தூங்குவானா தெரியல. ராட்சஷன் போல எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறான். எல்லோரும் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவன் அடுத்து அடுத்து என்ன செய்வானோ தெரியவில்லை.

உங்களுக்கு என்ன தோன்றுதோ செய்ங்க. நாங்க எல்லாம் இருக்கோம் பார்த்துக் கொள்ளலாம்.

ரெம்ப தாங்ஸ்.

நம்மள பத்தி என்னமோ சொன்னீங்க.

என்ன விசயம்.

என்ன தப்பா எடுத்துக்காதீங்க.

உங்களா முதலில் பார்த்தது நீங்க என்ட்ட பேசுனது என்ன நடத்துன விதம் எல்லாம் எனக்கு பிடித்து விட்டது. அன்றே என் மூளைக்குள் வந்து நீங்க உட்கார்ந்துட்டிங்க.

யாரும் நம்ப மாட்டார்கள் சத்திஷ்க்கு மட்டும் தான் தெரியும். முதன் முதலில் உங்க வீட்டுக்கு வரும் போது எல்லாவற்றையும் உங்க அப்பாட்ட வித்துட்டு எல்லா கடனையும் அடைக்கும் எண்ணத்தில் தான் இருந்தேன்.

உங்களை பார்த்தவுடன் என்னுடைய எல்லா எண்ணங்களும் மாறிவிட்டது காணாமல் போன பொருள் கிடைத்தது போன்று.

நீங்க எனக்கு ரெம்ப முக்கியம்.

இந்த லவ் எல்லாம் எனக்கு தெரியாது. உங்கள கல்யாணம் செய்து கொண்டு உங்களுடன் பயணம் செய்ய வேண்டும்.

நல்லா பேச கத்துகிட்டிங்க.

உங்கள எங்க அப்பாவுக்கும் புடிக்கும்.

கல்யாணம் தானே பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *