வயசு – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,976
ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..!
“இந்த வயசுலயா..?
இதையா…? நெவர்..?
ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க பார்த்த மானம் போகும்..”
“ஒரு வாட்டிதான்.. அப்ப உனக்கே ஆசைதானே..?
அது அப்போ, இது இப்ப. முடியாது..”
“டென்ஷனாகதே.. டேஸ்ட் பணணிப் பாரு,”
ஜானகி அலறினாள். “”வயது நாப்பது ஆகுகு.. ஹால்ல உட்கார்ந்து கேக்கறீங்களே…?
கிரி அதட்டினான்..
“ப்ச். எனக்கில்லா; உன் ஊர்ல இருக்கறப்ப உனக்கே பிடிச்சதுதான்”
ஜானகி, வேறு வழியின்றிச் சொன்னாள். “”ஹூம் … திருவாரூர்ல கல்யாணமானப்ப பிடிக்கும்னு சொன்னேன்; நாப்பது வயசானப்புறம் மாம்பலத்துல பஞ்சு மிட்டாய் வாங்கியாந்து சாப்பிடுன்றீங்களே… உங்களை.. என்றபடி ஆசையாய் பஞ்சு மிட்டாயை ருசித்தாள்..
கிரி மகிழ்ந்தான்.
– கிரிகா (அக்டோபர் 2011)