ரெயில் பயணம்
ராகேஷ் ஒரு பட்டதாரி, கோவையில் அவன்தந்தை டெபுடி கலெக்டராகபணிபுரிகிறார். கோவையில் தற்காலிக வேலை ப்பார்த்து வந்தான் ராகேஷ்.
நாளிதழ் மூலமாக வேலைக்கு மனுசெய்து வந்தான். அந்த சமயத்தில் அவனுடைய பயோடேட்டா ப்பார்த்து, கோவையில் உள்ள அலுவலகத்தில் நடந்து தேர்வாகி, ஆனால் சென்னையில் வேலை என்றகி சென்னைக்கு கிளம்பினான்.
ராகேஷ் படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு, பேச்சுப்பட்டி, கவிதை போன்றவைகளின் மூலமாக நிறைய சான்றிதழ் வைத்திருந்தான். சென்னைக்கு ப்போக அவன்தந்தை ஜபேதார் மருதமுத்து விடம் டிக்கட் வாங்கி வரச்சொன்னார்.
ரெயில் ஏறும் சமயத்தில் பார்த்தால் டிக்கெட் ராகேஷ் தந்தை பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது. பெயர் மாற்ற இயலாத காலம்அது.
கோவை எக்ஸ்பிரஸ் புறப்படும்நேரம், டி.டி.ஆரிடம் விஷயம் சொல்ல, சரி பார்க்கலாம் என்ற உடன் ராகேஷ் தந்தை அவனிடம் டிக்கெட் கட்டணம், அபராதம் தொகை கொடுத்து பிறகு வழியில் சாப்பிட ரூபாய் 2,00/மற்றும் புத்தகங்கள் வாங்கிபடிக்க ரூபாய்2,00/_ மொத்தம் ரூபாய்4,00/_கொடுத்த பிறகு கிளம்பினார்.
டி.டி.ஆர் செக் பண்ண வரும்போது ராகேஷ் கையில், சுஜாதா வின் லேட்டஸ்ட் புக் அதைப்பார்த்த டி.டி.ஆர் தம்பி இந்த புக் எனக்குபடிக்க கொடு என்றதும் அவனும் கொடுக்க, கண் சிமிட்டியபடியே சென்றார்.
பிறகு நீ என்ன விஷயமாக சென்னை போகிறாய் என்றதும், வேலை விஷயமாக என்றான் ராகேஷு. ராகேஷிடம் டிடிஆர் கேட்குமு போது ரெயில் அவினாசி அடுத்தாக திருப்பூர் நோக்கிப் பயணம்.
ராகேஷ் ரெயில் நின்ற ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் புத்தக ஸ்டால் சென்று புத்தகங்கள் வாங்கி வந்தான். இவனின் செய்கைகளை எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண் தன்னை அறிமுகம் கொண்டு தன் பெயர் ஷைலஜா என்றதும், இவன் எஸ்பிபி தங்கையா என்றதும் இருவரும் சிரிக்க, இவனும் தன்னைப்பற்றி விவரங்கள் தெரிவித்தான்.
பிறகு ரெயில் நின்ற ஒவ்வொரு ஸ்டேஷினிலும் வார மாத இதழ்கள் வாங்கினான் ராகேஷ். சேலத்தில் டிடிஆரைப்போய்ப்பார்க்க, அவர் இவனைப்பார்த்து, என்ன புக் வேணுமா என்றதும்,நானே வைத்துக்கொள்கிறேன், நீ அபராதம் கட்ட வேண்டாம் என்றதும் இவன் தன் இடத்தை அடைய, என்ன அபராதத்தைக்குப் பதிலாக சுஜாதா புக் என்றாள்.
பெரம்பூர் வந்ததும் வாங்கிய புக்ஸ் கணக்கு பார்த்ததில் அப்பாகொடுத்த பணம் காலியாகி விட்டது தெரிய வந்தது. நல்லவேளையாக டிபன் பணம் இருக்க, செண்டிரல் வந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படிசெல்ல ராகேஷ் மாம்பலம், ஷைலஜா அடையார் சென்றார்கள்.
மறுநாள் காலை அலுவலம் செல்ல, அங்கே அதே கம்பெனியில் ஷைலஜா பணிபுரிவதைப் பார்த்து ராகேஷ் ஆச்சரியப்பட, பின் பணியில் சேர்ந்தான், வேலையில் கவனம் செலுத்தினான். இரண்டு நாட்கள் கழித்து வந்த தந்தையிடம் நடந்த விவரம் தெரிவித்து, வாங்கிய புக்ஸு கொடுக்க, அவர் ஆபீஸ் வேலை முடித்து கோவை சென்றார். ராகேஷு அலுவலகத்தில் நன்கு பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றான். வாழ்வில் செட்டில்னான். வாழ்க சுஜாதா என்றான்.