ராஜாடி ராஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2025
பார்வையிட்டோர்: 230 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாங்க முடியாத வெயில். தாகமோ தொண்டையை அடைத்தது. தாகத்தைத் தணிப்பதற்காகத் தண்ணீரை நோக்கி நடந்தான் மாரி. கரையை விட்டு இரண்டடி எடுத்து வைத்ததும், அவன் மடியிலிருந்த நாலணா வெள்ளிப் பணம் அவனுக்கு முன்னோடித் தண்ணீரைத் தொட்டு நின்றது. அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த கூலி அது. 

கோழி கூவுவதற்கு முன்பே, மாரிமுத்துவிற்குக் கணக் கப் பிள்ளையிடமிருந்து ஆள் வந்தான். கணக்கப் பிள்ளை கூப்பிட்டனுப்பியதும், கஞ்சிகூடக் குடிக்காமல் மாரி களத் திற்குப் போனான். வேலை முடிந்ததும் மாரி தலையிலிருந்த துணியைத் தட்டிக் கட்கத்தில் வைத்தான். விபூதிப் பையை எடுத்து, காசுக்குத் துழாவினார்; கிடைக்கவில்லை. களைக் கையிலே கொட்டி, ஒரு நாலணாவை மாரிக்குக் கொடுத்தார்-இல்லை, மாரியை நோக்கி விட்டெறிந்தார். 

“சாமி” என்றான் மாரி 

“ஏண்டா, போதும் போடா!” 

“காசுக்கில்லைங்க சாமி! இன்னொரு நாலணாப் பணம் உங்க பையிலிருந்து கீழே மண்ணில் விழுந்துவிட்டது.” 

கணக்கப்பிள்ளை தன் காலடியைப் பார்த்தார். மாரி சொன்னது உண்மை. நாலணாவை எடுத்து விபூதிப் பையில் போட்டபடியே மாரி போவதற்கறிகுறியாகக் கையை அசை தார். கையில் இருக்கும் நாலணாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து மாரி குளத்தை நோக்கி நடந்தான். கணக்கப்பிள்ளைக்கும் மகிழ்ச்சிதான். அதை அவர் வெளிக்காட் டிக் கொள்ளவில்லை. “மாரி எவ்வளவு யோக்யமானவன்! நாலணாக் கொடுத்ததும் பரமதிருப்தியடைந்ததல்லாமல், கீழே விழுந்த நாலணாவைக் கைப்பற்றவும் நினைக்கவில்லை” வீட்டுக்குத் என்று எண்ணிக்கொண்டே கணக்கப்பிள்ளை திரும்பினார். 

கீழே விழுந்த பணத்தை மடியில் முடிந்துகொண்டு, மாரி தண்ணீரில் இறங்கினான். பாசியை விலக்கி, இரண்டு கை தண்ணீர் குடித்தான். இளநீர்கூடத் தோற்றுவிடும். ‘அப்பாடா’ என்று மூன்றாவது கைத் தண்ணீரைக் குடிக் உப்பு கும் பொழுதுதான், முகத்திலிருந்த வேர்வையின் நாற்றமும்,வைக்கோல் தூசுகளும் குமட்டலைஉண்டாக்கின. வாயைக் கொப் பளித்துக் கொண்டு, தலைமயிரை உதறி முடிந்து முகத்தைக் கழுவினான். பின்னாலிருந்து, ‘லொள், ‘லொள்’ என்ற சத்தம் கேட்டது. மாரி திரும்பிப் பார்த்தான். மரத்து நிழலில், அழகான நாய் வளைந்து படுத்திருந்தது. அது மாரியைப் பார்த்துக் குரைக்கவில்லை. ஏதோ அதற்கேற் பட்ட உற்சாகம்! மாரி கரைக்கு வந்ததும், நாய், விளை யாட்டில் சூழ்ந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. கண்களை யும் முகத்தையும் துடைத்துக் கொண்டு பார்த்தபொழுது நாயின் வாயில் ஏதோ வெண்மையான சாமான் காணப்பட்டது. ‘எலும்புத்துண்டு’ என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டு மாரி ஐந்தாறு அடி நடந்தான். ‘சே! எலும்புத் துண்டல்ல. எலும்புத் துண்டாயிருந்தால் மின்னுமா?” என்ற கேள்வி பிறந்ததும் மாரி மறுபடியும் திரும்பினான். இவனைக் கண்டதும் நாய் மற்றொரு மரத்திற்கு ஓடியது. மின்னுகிற சாமான் ஒருவேளை வெள்ளி டப்பி…’ – அதற்குமேல் மாரி எண்ணவில்லை. போதுமான காரணங்கள் அகப்பட்டதும், ஆராய்ச்சிகள் எதற்கு? நாயை எப்படி யும் பிடித்துவிடுவதென ஓடினான். 

நாய் வேலிச் சந்துகளிலெல்லாம் புகுந்து வெளிக் கிளம் பியது. மாரி விடுவதாயில்லை. அதைப் பின் தொடர்ந்தான். சருகு, புல், தரை, சுடுமணல், கல்,முள் ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஓடினான். நாயின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மாரியின் கோபமும் அதிகரித்தது. பக்கத்திலிருந்த கற்களைப் பொறுக்கிக் கொண்டு நாயைத் தொடர்ந்தான். நாய் சலிப் பதாகக் காணோம். நாலைந்து அம்புகளை ஏவினான் மாரி. கடைசியாக அதன் காலில் சரியான அடி விழுந்தது. நாய் சமாளிப்பதற்குள் மாரி கோட்டையை நெருங்கி விட்டான். ‘இனிமேல் பயனில்லை’ என்பதைக் கண்டு கொண்ட நாய், வாயிலிருந்ததைக் கீழே தள்ளிவிட்டு நொண்டிக் கொண்டே ஓடிவிட்டது. 

மாரி ஆவலோடு அதை எடுத்தான். ப்பூ! இவ்வளவு தானா! வெறும் தேங்காய்த் துண்டு. அதுதான் வெயிலில் மினுக்கியது. எவ்வளவு ஓட்டம், அலைச்சல், ஏமாற்றம்! ‘இந்தாலும் பாதக நாய்க்குத்தான் எவ்வளவு திமிர். மில்லை’ என்று அதிலிருந்து மண்ணைத் துடைத்தான். நாயின் பற்கள் பதிந்திருந்த இடத்தைக் கடித்துத் துப்பி னான். பொதுவாக அவனுக்குத் துப்ப மனமில்லை. நாய்ப் பற்கள் விஷம் என்பதால் அவன் பயந்தான். அந்தத் தேங் காய்த் துண்டில் அவ்வளவு சுவை இடந்தது. 

“சண்டாளப் பயலே! திருடியதல்லாமல் நாயின் காலை யும் ஒடித்துவிட்டாயே!” என்ற குரல் கிளம்பி மாரியைக் கதிகலங்க அடித்தது. மாரிக்கு அப்போதுதான் உணர்வு வந் தது. அவனுடைய ‘வெறிநாய்’க்குப் பக்கத்தில், குருக்கள் ஐயர் நின்று கொண்டி ந்தார் கண்களில் தீப்பொறி பறக்க. அக்ரகாரத்தின மத்தியில், குருக்கள் சாமி வீட்டிற்கே வந் ததை உணர்ந்தான.அந்தப்பகுதிகளுக்கு அவன் அதிகம் வந்த வெட்ட, தில்லை. எப்பொழுதாவது வீடுகட்ட, கிணறு வைக்கோல் போரடிக்க அவன் வருவது வழக்கம். அதுவும் அல்ல. கொல்லைப்புறத்தால் வருவான்; நடுத்தெருவில் பாழும் நாய் அவனை ஏமாற்றி இழுத்து வந்தது. தலைவிதி தான்! “இல்லை சாமி! பார்க்காம…” 

“என்னடா, களவாணிப் பயலே! பார்க்காமதான் அக் கிரகாரத்து வீதிக்குள் நுழைஞ்சி தேங்காய் திருடியதல்லாமல் காவல் காத்துக் கொண்டிருந்த நாயையும் காலொடித்து விட்டாயேடா, பாவி!” 

“எவ்வளவு திமிர் இருந்தா, சேரிப்பயல் அக்கிரகாரத் துக்குள் அடிபெடுத்து வைக்கும்?” என்று ஐயர் அடுக்கிக் கொண்டே போனார். 

“இல்லிங்க சாமி! நான் ஒண்ணும்…’-இடைமறித்துப் பேசுவதையே விரும்பாதவர் குருக்கள். குருக்களின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. 

“யாரடா அங்கே? டேய், பழனி! நீ போய் புளிய மிலாறை ஒடித்துக் கொண்டு, அம்பலக்கார அருணாசலத் தையும் அழைத்து வா’ என்று உத்தரவிட்டார். மாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. 

மாரி கீழே விழுந்து, “நான் வந்தது பிசகுங்க. ஆனால் திருடலை” என்று சொன்னான். 

“நேக்கு ஒண்ணும் தெரியாதடா! அம்பலக்காரன் அதோ வர்றான். அவனிடம் எல்லாத்தையும் ஒப்பிச்சுக்கோ” 

அம்பலக்காரன் எத்தகைய பரபரப்புமின்றி வந்தான். “நமஸ்காரம் சாமி’ என்று குருக்களைச் சேவித்து விட்டு மாரியிடம் சென்றான். தன் கையிலிருந்த புளியமிலாறி னால், “மரத்துக்குப் போ” என வழி காட்டினான். “நான் ஒண்ணும் செய்யலே சாமி’–அம்பலக்காரன் ஒன்றையும் காதில் வாங்கவில்லை. மரத்துடன் ஒதுக்கப்பட்டு, மாரியின் கைகள் மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டன. 

அப்பொழுதான் மாரிக்குத் தண்டனை என்ற நினைவு வந்தது. பாம்பு நெளிவதுபோலப் புளியமிலாறுகள் அம்பலக் காரனின் கையில் அசைந்தன. 

மரத்தில் கட்டப்பட்ட மாரி கதறத் தொடங்கினான். “இல்லிங்க, சாமி! நான் திருடலிங்க. நாய்தான் தூக்கி வந் தது. நாஞ் செய்யவே யில்லை… நாஞ் செய்யவே இல்லை..” 

“உங்க அடிமை! கும்பிடறேன் சாமி.” 

”சுளீர், சுளீர்.” 

”சாமி, ஐயோ, சாமி!” 

”சுளீர், சுளீர், சுளீர்!”-மின்னல் வேகத்தில் தாக் கின. மாரி உடம்பை நெளித்தான். கம்பளிப்பூச்சி நெளிவது போல் இருந்தது. 

“ஐயோ, சாமி!” 

அடித்த அடியிலிருந்து ஏற்பட்ட ஊமைக் காயங்களி லிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. 

“ஐயோ சாமி” என்று மனத்திற்குள்ளே சொற்கள், இருட்டறையில் உலாவும் வௌவால்கள்போல் சுழன்றன; பின் அடங்கின. ‘சுருக், சுருக்’ என்று தாக்கப்படுவதுபோன்ற உணர்ச்சி. ‘ஙொய்’ என்ற சத்தம். 

ஆம்! ‘ஙொய்’ என்ற சத்தம்; ‘சுருக், சுருக்’ கென்ற வலி. காற்று விட்டுவிட்டு அவன் முகத்தில் அடித்தது. மெது வாகக் க ன்ணைத் திறந்து பார்த்தான். அவனுடைய பெண் ஜாதி அஞ்சலை விசிறிக் கொண்டிருந்தாள். கொசுக்களும் ஈக்களும் அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அப்பா ! அசையவே முடியவில்லை. காது, உதடு, கைவிரல்கள் எல்லாம் கற்கள் தொங்குவன போன்று கனத்து இருந்தன. மாரி கண்ணைத் திருந்ததும், அஞ்சலை, காத்தாயி! நீ தான் காப்பாத்தணும்” என்று சொல்லிக் கொண்டே விசிறியை வைத்து விட்டு எழுந்தாள். அதே சமயம், அடுத்த வீட் டுச் சிவகாமி வந்து, “ஏண்டி அஞ்சலை! ஒம் புருசனுக்கு எப்படியிருக்கு?” என்று கேட்டாள். 

“இப்பத்தான் கண்ணை முழிச்சாரு. என்னமோ பொல்லாத வேளை.” 

“அஞ்சலை! உம் புருதன். குறுகளையய்யா வீட்டுக் கிட்ட ஏன் போனாறாம்?” 

“அதையேண்டி கேக்கறே! எப்பவுமில்லாமெ நேத் திக்குக் கணக்குப்பிள்ளே நாலணாக் குடுத்திருக்காரு. அதை எடுத்துக்கிட்டுப் போயி, கள்ளுத் தண்ணீ போட்டு, ஒண் ணுந் தெரியாம அங்கே மாட்டிக்கிட்டாரு.’ 

‘‘அதென்னடி! ஆச்சரியமாயிருக்கே…உம் புருசன்’ ஒருத் தர்தான் இங்கே குடிக்காம இருந்தாரு. என்னைக்குமில்லாம் ஏன் நேத்திக்குப் போய்க் குடிச்சாரு? அந்த ஆசாமிங்கதான் கொடுமைக்காரன்களாச்சே!”-இந்தப் பேச்சை மாரி கேட் டுக் கொண்டிருந்தான். பதில் பேச்சு வெளிவரவில்லை. 

இரண்டு மூன்று வாரத்திற்கெல்லாம் மாரி நல்ல நிலையை அடை ந் தான். உடம்பிலே பலமின்மையும் அசதி யும் இருந்தபோதிலும், நடமாடவும், வேலை செய்வதற் குத் தயாராகவும் இருந்தான். முன்பு வேலை செய்துவந்த பண்ணைக்குச் செனறான். பண்ணைக் காருவாரைக் கண்டு கீழே விழுந்து கும்பிட்டு நின்றான். 

“என்ன, மாரிமுத்து! இவ்வளவு தூரம்? உடம்பு சௌக் கியந்தானே? சொல்லியிருந்தால் நாமே உன் வீட்டுக்கு வந் திருப்போமே!” என்று காருவாரு பய பக்தியுடன் சொன் னார். மாரி திகைத்துப் போனான். மறுபடியும் மண்ணில் விழுந்து வணங்கிவிட்டு, கைகட்டி நின்றான். திடீரென்று காருவார் காரி உமிழ்ந்து, ‘சீ, கழுதை! அடக்க ஒடுக்கத் தைப் பார்! இங்கே பண்ணையில் ஒன்றுங் கொட்டிக் கிடக்க வில்லை. முதலியார் பண்ணையில் திருடர்களுக்கு வேலை கிடையாது. எனனெதிரே நிற்காதே! ஓடிப்போ. மறுபடியும் இந்தப் பக்கம் வந்தால் தோலை உரிச்சுடுவேன்.” 

மாரி நேரே குடிசைக்கு வந்தான். கதவோரத்தில் அஞ் சலை அழுது கொண்டிருந்தாள். சத்தம் கேட்டதும் மாரி யைத் திகிலுடன் பார்த்தாள். “வேலைக்குப் போகலை? கஞ்சியை நான் களத்து மேட்டுக்குக் கொண்டு வரேன்.’ 

“காருவாரு சீறி விழறாரு. பண்ணையில் வேலை கிடை யாதாம்! அது போகட்டும், நீயேன் இம்மா நாழி இங்கே உட்கார்ந்திருக்கே? வேலைக்குப் போகலை?” 

அஞ்சலை பதில் சொல்ல வாயெடுத்தாள். சொற்கள் ண்டையிலேயே சிதைந்தன. அவதியும் கோபமும் நிரம் பிய கண்கள் மன்றாடின. அவனுடைய முகம் புயலிலே சுழ லும் காற்றாடிபோல நிலையின்றி மாறியது. அஞ்சலை தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். அஞ் சலையின் வேலையும் போய்விட்டது. மாரி எதிர்பார்த்த தற்கு அதிகமாகவே அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான்.அவன் அஞ்சலையின் அருகிற்சென்று அவளைச் சமாதானப் படுத் தினான். அவளடைந்த சஞ்சலமோ சமாதானமடையக் கூடியதல்ல. பீறிட்டுவரும் ஊற்றுபோலத் தடைகளைத் தாண்டிக் கசிந்தது. மாரி மிகவும் கலக்கமடைந்தான். எனி அவன் னும் கண்ணீர் விடவில்லை. அந்தக் கட்டத்தை தாண்டிவிட்டான். 

பண்ணையிலிருந்து நீக்கப்பட்ட பின் மூன்று நாட்கள் மாரி வேலைக்காக அலைந்தான். முதல் நாள் அஞ்சலை, இருந்த அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சினாள். இரண் டாவது நாள் இரவு வெகு நேரமாகி அஞ்சலை எங்கேயோ நெல் குற்றி உமியும் தவிடும் கலந்த அரிசி கொண்டு வந் தாள். மூன்றாவது நாள் இருவரும் முழுப்பட்டினி. இந்த மூன்று நாட்களிலும் மாரி, வேலைக்காக அந்த ஊரில், தான் நடமாடக் கூடிய தெருக்களிலெல்லாம் சென்று பார்த் தான்.அவனைப் பார்த்ததும் எல்லோரும் “மாரியா! வேலை ஒன்றும் இல்லை” என்று வெகு சீக்கிரத்தில் சொன்னார்கள். இவன் மனுப்போடும் இடங்களிலெல்லாம் இவனைப் பற்றிய முடிவும் கருத்தும் தயாராகவே வைக்கப்பட்டிருந்தன. இவனை முன்பு பார்க்காதவர்கள், கேட்காதவர்கள்கூட இப்பொழுது அறிந்தோ, அறியாமலோ இவனைப் பற்றிப் பேசலாயினர். அவற்றில் சில மாரியின் காதிலும் விழுந்தன. 

“என்ன அக்கா! குழந்தையைத் தெருவில் விளையாட விட்டு உள்ளே இருக்கிறீர்கள்? அதுவும், நகையைப் போட்டு’’ 

“அதையேன் கேட்கிறாய்? நகையைக் கழற்றினால் குழந்தை அழுகிறது. ஐயாவும் என்னை அதட்டுகிறார். அவருக்கென்ன தெரிகிறது, நாம் படும் கஷ்டமும் திகிலும்?” 

“சரி, சரி! குழந்தையை உள்ளே அழைத்துக் கதவைச் சாத்திக் கொள். உலைக்கு அரிசி போடணும். நான் போகி றேன். காலம் கெட்டுக் கிடக்கு. ஜாக்கிரதை!” இவ்வாறு குமுதம் பக்கத்துவீட்டுக் கோமளத்தை அறிவுறுத்திவிட்டுச் சென்றாள். மாரி அந்த வீட்டைக் கடந்து செல்லும்பொழுது தானா இந்தப் பேச்சு நடைபெறவேண்டும்? 

மாலை மிகவும் கலக்கத்துடன் மறைந்தது. இருள் துன் பத்தைப் போலச் சூழ்ந்தது. தாங்க முடியாத சுமையைச் சுமப்பவன் போல மாரி நடந்தான். விளக்கேற்றப்பட்ட ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இருள் சற்று எட்டி நின்றது. விளக்கொளியில் மலர்ந்த மகிழ்ச்சி முகங்களைக் கண்டான். பேச்சு அவன் காதில் விழவில்லையேயொழிய, விளக்கு வெளி சத்தில் பேசுபவர்களின் முகத்தோற்றம் நன்றாகத் தெரிந் தது. நண்பர்களுடன் உரையாடல், குழந்தைகளுடன் விளை யாட்டு,விருந்தினருடன் பேச்சு- இவை அனைத்தும் விளக்கு வெளிச்சத்தில் மிளிர்ந்தன. தெருக்கோடியை அடைந்தான் மாரி. அங்கிருந்த சாவடியில் சீட்டுக் கச்சேரி நடைபெற்றது. கவலையற்ற கவலையுடன் சீட்டாட்டத்தில் அனைவரும் ஆழ்ந்திருந்தனர். விளக்கொளி அங்கும் களிப்புடன் பிரகாசித்தது! 

மாரி ஊரைவிட்டு அகன்று சேரிப்பக்கம் திரும்பினான். தன்னைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டது அவன்நினை விற்கு வந்தது. திடீரென்று ‘திருடன், திருடன்’ என்ற குரல் காதில் விழுந்தது. இருளில் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. இரண்டடி எடுத்து வைத்ததும், “திருடன், திரு டன், திருடன், திருடன்” என்ற குரல்கள் எழுந்தன. வேக மாக நடந்தான். இன்னும் அதிகமான குரல்கள் பலமாகக் கத்தின. மாரி ஓட ஆரம்பித்தான். நாலா பக்கத்திலிருந்தும் ஆயிரமாயிரம் குரல்கள் கேட்டன. மாரியின் நெஞ்சு பட படத்தது. கால்கள் நடுங்கின; கைகள் உதறல் கண்டன. சத்தம் போடுவதற்கு முயன்றான். நாக்கு ஒட்டிக் கொண் டது. விழுந்துவிடுவான் போல இருந்தது. கூக்குரல் அவனை அழுத்துவது போல நெருங்கியது. மாரியால் பொறுக்க முடியவில்லை. கைகளை இறுக்கிக் கொண்டு, பற்களைக் கடித்து நிமிர்ந்து நின்றான். திடீரென்று கூச்சல் அடங்கியது. மாரி சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு எத்தகைய பட படப்புமின்றி நடந்தான். அவ்வளவும் வெறும் மனப்பிராந்தி என்று அறிந்தான். 

மறுநாள் அஞ்சலை சேரிக்குத் திரும்பும்பொழுது நன் றாக இருட்டிவிட்டது. அவள் சேரிக்குள் நுழையும்போது சேரி அநேகமாக அடங்கிவிட்டது. அங்கொன்றும் இங்கொன் றுமாக நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தனவேயொழிய பேச்சின் ஆரவாரம் கேட்கவில்லை. குடிசையை அடைந்ததும் குடிசையிலிருந்து வெளிச்சம் வந்தது. மூங்கிற் கதவு திறக் கப்பட்டதும், அஞ்சலையின் முகத்தில் பட்ட வெளிச்சம் அவளின் ஆச்சரியத்தைக் காண்பித்தது. அடுப்பின் எதிரே மாரி உட்கார்ந்து கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தான். கஞ்சி கொதிக்கும் சத்தம் அஞ்சலைக்கு இன்னிசையாக இருந்தது. அஞ்சலை சுற்றுமுற்றும் பார்த்தாள். உரலுக்குப் பக்கத்தில் உமி கலந்த நெல், இரண்டு மூன்று கலம் இருந்தது. மாரி தான் குத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அஞ்சலை வருவதற்குள் கடைந்தெடுத்த அமுதைக் கொடுப்பதைப் போலக் கஞ்சியைக் காய்ச்சி வைக்க மாரி முயற்சித்தான். முடியும் நிலையில் அஞ்சலை வந்தாள். 

ஏழைகளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சூட்டிரும்பில் தெளிக் கப்பட்ட தண்ணீர்த் துளிபோலப் பார்த்துக் கொண்டிருக் கும் பொழுதே மறைந்துவிடும். காலையில் குடிக்கத் தண் ணீர் கொண்டு வர வாய்க்கால் பக்கம் அஞ்சலை சென்றாள் வேலைக்குப் போகும் சேரியினர் பேசிக் கொண்டது அவளுக் குத் திகைப்பைத் தந்தது. கையிலிருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்தது. 

“அண்ணே! நேத்திக்குப் பண்ணைக் கோட்டை சரிந்து கிடந்ததாமே?” 

“காருவாரே செய்திருப்பாரடா!” 

“அதென்னமோ, நேத்திக்குக் காருவாருதான் கூவிக் கொண்டிருந்தார்.” 

மண்குடம் சிதறிக் காலடியில் கிடந்தது. அவளுடைய வாழ்வுகூட ஒட்ட முடியாதபடி உடைந்தது. அப்பொழுது தான் வீட்டிற்கு நெல் வந்த விதம் அஞ்சலைக்குப் புலப் பட்டது. “பாவி! பரம சாதுபோல அடுப்பைக் காத்துக் கிடந்தானே! இந்தப் பழி, பாவங்களையெல்லாம் எப்படித் தான் செய்ய முடிகிறதோ! தேங்காய்த் துண்டைத் திருடிய தற்கே உடல் தோலை உரித்தவர்கள், நெல் திருடியதற்கு உயிரோடு புதைத்துவிடுவார்களே! என்ன செய்வது? அடி வாங்கின சுரணையை மறந்து மறுபடியும் ஏன் செய்ய வேண் டும்? தலைதூக்கி நடக்க முடியவில்லை. சேரியெல்லாம் சிரிக் கிறது! பட்டினி கிடந்து செத்தாலும் சாவது, இனிமேல் மாரி கொண்டு வருவதைத் தின்பதில்லை” என்று உருகி னாள் அஞ்சலை. அந்த எண்ணம் மாரி மீது இருந்த மதிப் பைச் சிதறடித்தது. 

வாய்க்காலிலிருந்து குடிசைக்குப் போன அஞ்சலை, அதற்கப்புறம் வெளிக்கிளம்பவில்லை. தன் ஆத்திரம் தீரும் வரை அழுதாள். பிறகு ஓய்ந்து அப்படியே கண்ணயர்ந் தாள். 

“அஞ்சலை! ஏன் அடுப்பு மூட்டவில்லை?” என்று கேட்டபடி மாரி குடிசைக்குள் நுழைந்தான். பதிலில்லை. கையிலிருந்த மூட்டையை வைத்துவிட்டு மாரி விளக்கேற்றி னான். அஞ்சலை மூலையில் படுத்திருப்பது தெரிந்தது. பக் கத்தில் வந்து, நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “உடம்பு சரியில்லையா? அஞ்சலை! அஞ்சலை!” என்று மாரி கேட்டும் அஞ்சலை ஒன்றுக்கும் வாய் திறக்கவில்லை. 

மாரி அடுப்பை மூட்டி, பானையில் தண்ணீரைப் போட் டான். அஞ்சலை அவனையே கவனித்துக் கொண்டிருந் தாள். மாரி, தான் கொண்டுவந்த மூட்டையின் மேலிருந்த வேட்டியைத் தளர்த்திக் கொண்டிருந்தான்.அதிலிருப்பதைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் அஞ்சலை மாரியின் பக் கத்தில்போய் நின்றாள். 

“அஞ்சலை! கஞ்சி ஏன் போடவில்லை?” 

“பசியில்லை.” 

”பசியில்லையா? சரி! இந்தா, இந்த வாழைப் பழத் தைச் சாப்பிடு!’ என்று கூறிக்கொண்டே மாரி மூட்டையை அவிழ்த்தான். வாழைப்பழக் குலை, பாதி பழுத்தும், பாதி காயாகவும் இருந்தது. பாம்பைக் கண்டு ஒதுங்குபவள்போல எட்டி விலகி, இதையெங்கே திருடினாய்?” என்று துடி துடிப்புடன் கேட்டாள் அஞ்சலை. 

மாரி வாழைப் பழத்தைக் கீழே வைத்துவிட்டு, அவ ளையே உற்றுப் பார்த்தான். அவனுடைய பார்வையில் ஆச் சரியம் குடி கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கேள்வியால் அவன் திகைப்படையவில்லை. “அஞ்சலை! உட்கார்!” என்றான் மாரி. அஞ்சலை உட்கார்ந்தாள். மாரி கதைசொல் பவன்போல, “ஏன் அப்படிக் கேட்கிறே?” என்றான். 

“எனக்கு எல்லாம் தெரியும். பண்ணையில் போய் நெல் திருடியதைப் பார்த்தாங்கன்னா உன் உயிரைத் தொலைச்சிடுவாங்க!” 

“கோட்டையிலிருந்து எடுத்தேன்.” 

“எடுத்தேன்! வெட்கமில்லை, திருட்டு வேலை செய்ய? பிராணனை விட்டுவிடலாம் போலிருக்கே எனக்கு!” 

“அப்படியெல்லாம் செய்துடாதே அஞ்சலை.” 

“இல்லை, மவராசாவுக்கு வாக்கப்பட்டு மவராணிப் பட்டத்தை அடையணும் என்கிறியா? என் தலைவிதி! உன்னை நம்பி வந்தேன்.’ 

“இப்போ ஏன் வருத்தப்படுறே?” 

“திரும்பித் திரும்பி அதையேக் கேக்கறியே, திருட்டுப் புத்தியே அப்படித்தான்!” 

“நான் என்ன செஞ்சேன்? பண்ணையிலே எனக்குக் கொடுக்க வேண்டிய நெல் கூலி பாக்கியிருந்தது. நான் கேட் டுப் பார்த்தேன். காருவாரு கொடுக்கவில்லை. கேட்காம் லேயே எடுத்து வந்தேன்.” 

“ரொம்ப நாயமான பேச்சு.” 

“நியாயமோ, அநியாயமோ, நாம்தான் அதையெல் லாம் கவனிக்கிறோம். காருவாரு அதைப் பார்த்தாரா? குருக்களுக்கு நியாயமென்னா என்னான்னே தெரியாது.அப் படியிருக்கும்போது நாம் மாத்திரம் நியாயம் பேசிப் பலன் என்ன? முதுகுத் தோல் உரிய வேண்டியதுதான்! நியாயம் பேசி நேற்றுக் கலத்துக்குப் போயிருந்தால், ஒன்று நெல்லில் லாமல் வீடு திரும்பி இருவரும் பட்டினி கிடந்திருப்போம். இல்லையென்றால் அவனுக்கெதிரே எடுத்து அடிபட்டு அங் கேயே உசிரை விட்டிருப்பேன்.” 

“அதற்காக ஒருவருக்கும் தெரியாம் திருடணுமா இந்தப் பழி, பாவத்தையெல்லாம் எங்கே போய்த் தொலைப்பது?’ 

“நேத்திக்கிக்கூட அப்படித்தான் நினைத்தேன். பழி பாவம் என்றெல்லாம் பட்டது. இராத்திரி அதை மாற்றிக் கொண்டேன். நெல்லை எடுக்கும்பொழுது கைகள் நடுங் கின; ஆனால் சாப்பிடும்பொழுது நாக்குக் கூசவில்லை. கஞ்சி காய்ச்சியபொழுது சந்தோஷமாயிருந்த உன் முகத் தைப் பார்த்ததும் பழி பாவமெல்லாம் பறந்து போச்சு.” 

“திருட்டு நெல் என்றால் நான் சாப்பிட்டிருக்க மாட் டேன். அதை விஷம் போலத் தள்ளியிருப்பேன்.” 

“பைத்யக்காரி! கோட்டை கட்டி வைக்கப்பட்ட நெல்லு முச்சூடும் நம்மிடமிருந்து புடுங்கப்பட்டது. ஊரிலே வாங்கிய தேங்காய்கள்தான் குருக்கள் வீட்டு வாசலிலே காய்கின்றன”. 

“அது போவுது… இந்த வாழைப் பழம் ஏது?” 

“அது போவுது என்று சொல்லாதே! ‘அது சரி’ என்று சொல்லு. இந்தப் பழத்தைத் தின்னு பார்! தித்திக்கிறதா இல்லையா என்று பின்பு சொல்லு.” 

“திருட்டுப் பேச்சு பேசிவிட்டு, அதை மறைத்துத் தித்திப்புப்பூச்சு ஏன் செய்யறே?” 

“அஞ்சலை! வாழைப்பழ சங்கதி பாக்கியிருக்கே! இந்த வாழைப்பழக்குலை குளத்துமேட்டு வாழைத் தோட்டத்திலிருந்து..” 

“அட, பாவி! நான் நினைச்சது சரியாப் போச்சுது! இதுவும் திருடா? அதுவும் பண்ணைத் தோட்டமாச்சே!” 

“எதற்கெடுத்தாலும், ‘திருடு,திருடு’ என்று கூவறியே, நான் தண்ணி இறைக்கிற வாழைத் தோட்டத்திலிருந்து தான் இதை எடுத்தேன். இதற்கு முன்னே குலை பழுப்பு கண்டதும் பண்ணையிலே கொண்டு போய்க் கொடுப்பேன். அதற்குப் பதிலாக அழுகிப் போன பழங்களை வெளியே தள்ளுவார்கள். அதை எடுத்து வந்து உனக்குக் கொடுப் பேன். அப்பொழுதெல்லாம் தண்ணி இறைச்சி மூச்சுத் திண றும் போதும்கூட பழத்தைத் திங்கணும்னு தோணுவதில்லை நாம்தான் பசியாத்த வாழைப்பழம் திங்கிறோம். பண்ணை யில் மாட்டுக்கும் நாய்க்கும் போடுறாங்க. வாழைப்பழம் அவர்கள் வீட்டில் அழுகுப் பொருள். நாய்கூடச் சமயத்தில் சீந்துவதில்லை. அழுகியதும் குப்பையுடன் வெளியே வந்து, நம்முடைய குடிசைக்கு வருகிறது.” 

“சரி! சரியான புத்தி மாறாட்டம்! பேச வேறே கத்துக்கிட்டே…” 

“குருக்களைய்யா என்னை அடிக்கிறதுக்கு முன்னே, எவ்வளவு அடக்க ஒடுக்கமாயிருப்பேன். கள்ளுத் தண்ணி போட்டு, கலகம் பேசினேன்னு ஒரு புகார்கூடக் கிடையாது. அடிபட்ட நாள்கூட, கணக்கப்பிள்ளையின் நாலணாவை எடுக்க எனக்கு மனம் வரலை. நாயின் வாயிலிருந்த துண்டு வெள்ளிபோல இருந்ததால், அதை நாயிடமிருந்து எடுக்க விரட்டினேன். அதுகூடத் தப்புதான். அப்ப இருந்த களைப்பும் பசியும் என்னமோ தூண்டியது. அதற்காக நான் பட்ட அடிகள் எவ்வளவு? அடிச்சவர்கள் உடம்பை மாத்திரம்அடிக்க வில்லை; என்னுடைய மனசு, புத்தி எல்லாத்தையும் புண் ணாக்கிவிட்டாங்க. உண்மையாகவே என் உசிரு போய்ப் புது உசிரு வந்திருக்கு. ‘நான் திருடலை’ என்று கண்ணீர் விட்டுக் கதறினேன். அவர்கள் கேட்டார்களா? நாயின் மீது பச்சாதாபப்பட்டார்களே தவிர என்னை யாராவது சமாதானப்படுத்தினார்களா? நாய் கடித்துப்போட்ட தேங் காய்த் துண்டு. அதைத் திருடிய குற்றம் என்மேல். நீகூட நம்பினாய். அடுத்த நாள் நீ பக்கத்து வீட்டுப் பொண்ணோடு பேசிக் கொண்டது எனக்குக் கேட்டது. குடித்துவிட்டுத் திருடியதாகப் பேசிக் கொண்டீங்க. அப்பொழுதே உங்களி டம் சொல்ல முயற்சித்தேன்; முடியவில்லை. நடமாடமுடிந்த பொழுதும் பலரிடம் சொன்னேன், ‘நான் திருடலை’ என்று. சிலர் தலையசைத்தார்கள். சிலர் என்னிடம் பரிதாபம் காட்டினார்கள். என் பேச்சு சிலருக்கு கோபத்தைக் கொடுத் தது. ஒருவராவது என்னை நம்பவில்லை. பிறகுதான், ‘நான் செய்ய வில்லை’ என்பதை நிரூபிப்பது முடியாது என்று கண் டேன். அதற்காகப் பழியை ஏற்றுக் கொள்ளவில்லை. யாரா வது, திருடன்’ என்று சொன்னால், நான் முறைத்துப் பார்ப்பேன்.பிறகு அதுகூட முடியவில்லை. திரும்பிப் பார்த்த இடங்களிலெல்லாம் ‘திருடன்’ என்ற குரலே வந்தது. எங்கு சென்றாலும், ‘திருடனுக்கு வேலை கிடையாது’ என்ற பேச்சு. அந்த நிலையில் உனக்கும் வேலை போய்விட்டதாகச் சொன்னாய். 

வேதனை அடைந்த மனசோடு வீட்டிற்கு வந்தால், அழும் அஞ்சலையையும், அவிந்த அடுப்பையும் பார்த்து மனசு முறிஞ்சு போச்சி. குழந்தை முதல் கிழவர் வரை திரு டனுக்காக என் பெயரைச் சொன்ன பொழுதெல்லாம் நான் மறைக்கக் கஷ்டப்பட்டாலும், மழையை லட்சியம் பண் ணாத எருமைபோல அலைந்தேன். அடிக்கடி நினைச்சுப் பார்ப்பேன். ‘நான் திருடவில்லை; ஆனாலும் திருட்டுப் பெயரும், திண்டாட்டமும். அதற்கடையாளம் உடம்பு முழு வதுமுள்ள தழும்புகள். களவு செய்யவில்லை; ஆனால் அதைவிட அதிகமாகத் திருடினால் கிடைக்கும் தண்டனையை விடப் பல மடங்கு அதிகமான தண்டனை அனுபவிச்சேன். வெளியே தலை நீட்டினால் பழியும் பேச்சும். ஆனால் வீட் டிலே பசியும் கண்ணீரும்! திருட்டுப் பட்டத்தை ஏற்றுக் கொண்டேன். இப்பொழுது என்னை முன்போலவே பழிப் பார்கள். ஆனா.. கொஞ்சம் பயத்தோடு! முன்பு பசித்துக் கிடந்தேன். இப்போது பசி நீங்கியது. நான் திருடனா? நான் ராஜாடி ராஜா! அகப்படாத வரையிலே ராஜா! அகப் பட்டுக் கொண்டா உதைப்பாங்க. அதுதான் எனக்கு முன்பே நடந்ததே, ஒரு பாவமும் அறியாதபோதே! இப்ப அடிச்சா…என்னாவாம்? 

“தா! என்னா இது! ஊருக்குத் திருடனா இருந்து கிட்டு, ‘நான்தாண்டி ராஜா’ன்னு உளற்ரே! இதைக் கேட்டு நான் ரொம்பச் சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறியா? எவனாச்சம், இந்த ‘ராஜா’ திருடறப்போ பார்த்துட்டால் லோ தெரியும், ராஜா பாடு!” 

“இந்த ராஜாபாடு மட்டுந்தானா? நெஜமாலம் ராஜா கூடத்தாண்டி சண்டையிலே தோத்துப் போனா இன்னொரு ராஜா கையிலே அடிபடுவான்!” 

– இரு பரம்பரைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *